Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியேற்றப்பட்டோரில் 185 பேரை மீள அழைத்து வர ஏற்பாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளியேற்றப்பட்டோரில் 185 பேரை மீள அழைத்து வர ஏற்பாடு.

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தமிழரில் 185 பேரை மீள கொழும்புக்கு கொண்டு வரும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு பலவந்தமாக நேற்று 500-க்கும் மேற்பட்டோர் கொண்டு செல்லப்பட்டனர். வவுனியாவில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள அவர்களில் மீள கொழும்பு திரும்பும் 185 பேரின் விவரங்கள் வவுனியா காமினி வித்தியாலயத்தில் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் அனைவரும் 5 பேரூந்துகளில் கொழும்புக்கு அழைத்து வரப்பட உள்ளனர் என்றும் அச்செய்திகள் கூறுகின்றன.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

வாற சனத்துக்குச் சங்கு தான்!

JOKE OF THE DAY

No forcible eviction of lodgers - Keheliya

Pramod de Silva and Irangika Range

KOTTE: Foreign Employment Promotion Minister Keheliya Rambukwella yesterday told Parliament that the Government provided transport facilities to 260 persons who voluntarily submitted themselves to be returned to their native places in the North-East.

He was responding to an allegation made by TNA MP R. Sampanthan that Tamils living in Colombo lodgings were sent back by force by the Government.

The Minister said during the past 3-4 weeks bombs went off in Colombo and suburbs and attempts were made to smuggle explosives into Colombo.”

This was why we had to take these measures”. He said it had been revealed that during the 10 years all plans to explode bombs in the city were hatched within these lodgings in the city.

Among those who were sent back include 63 women.

The decision to screen Tamil lodgers living in Colombo was taken in the larger interest of national security.

The Minister said there were over 20,000 Tamils who had taken up lodgings in Colombo. “But we have to secure the lives of 19 million people”.

He said in the context of detection of explosives headed for Colombo almost on a daily basis they had to consider some effective steps.

The Minister denied any form of harassment adding that all of them (lodgers) volunteered to go back to their native places.

“They have volunteered to go back and the Government has provided them with all transport facilities”

He said they were welcome to return and attend to their businesses at any time

இது என்ன சிங்கள தேசத்தின் விளையாட்டா? இது போன்ற விளையாட்டுக்களைத் தமிழர் தரப்பும் விளையாடும். ஆனால் வளர்ந்துள்ள போராட்ட வடிவிலும் இன்றைய நாகரிக உலகிலும் பங்கெடுத்துக் கொள்ள முடியாத இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. அது இப்போது இந்த சிங்கள தேசத்திற்கு விளங்கியிருக்கும். உலகின் ஒட்டு மொத்தக் கண்டனமும் (இந்தியாhவைத் தவிர ) இலங்கை மீது விழுந்துள்ளது. செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றது இந்தியா. முட்டாள்களுக்கு உதவுதலினால் ஏற்படும் விளைவு.

கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்ற உயர்நீதிமன்றம் தடை

இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவதற்கு இலங்கையின் உயர் நீதிமன்றம் வெள்ளிகிழமையன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது. உடனடியாக அமுலிற்குவரும் விதத்தில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

வியாழக்கிழமையன்று தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் முன்னறிவித்தலேதுமின்றி ஆயுதம் தாங்கிய பொலிசாரால் வெளியேற்றப்பட்டு, பஸ்களில் ஏற்றப்பட்டு வடக்கு கிழக்கில் அவரவர்களின் சொந்த இடங்களிற்கு பலவந்தமாக அனுப்பப்பட்டிருந்தார்கள்.

இந்த நடைமுறையானது இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான செயல் என்றும், மனிதாபிமானமற்ற மனித உரிமை மீறல் செயல் என்றும் குற்றஞ்சாட்டி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்ற அரச சார்பற்ற அமைப்பு வெள்ளிகிழமை இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினை விசாரித்த மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட மன்றம், இந்த இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

அத்துடன் எதிர்வரும் 22 ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரைக்கும், இலங்கை பொலிஸ் மா அதிபர், மற்றும் வெள்ளவத்தை, புறக்கோட்டை, பேலியகொட மற்றும் வத்தளை போன்ற பகுதிகளின் பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் இவ்வாறாக தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், இதுதொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை நிறைவேற்றக்கூடாது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தற்காலிக தடையுத்தரவு பிறப்பித்திருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிசார் இவ்வாறு பலவந்தமாக விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்களை வெளியேற்றிய செயலைக் கண்டித்து, அரசியல் கட்சிகள் சிலவும், மனித உரிமை அமைப்புக்களும் இணைந்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் வெள்ளிகிழமை நண்பகல் பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தியிருந்தனர்.

http://www.bbc.co.uk/tamil/

தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளார் அதிபர்

இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் வியாழக்கிழமையன்று பலவந்தமாக ஆயுதம் தாங்கிய பொலிசாரினால் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக அதிகரித்துவரும், உள்ளூர் மற்றும் சர்வதேச அழுத்தங்களிற்கு, கண்டனங்களிற்கு மத்தியில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் அடிப்படை, அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மற்றும் இதனால் ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் குறித்து விளக்கம் தரும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இவ்வாறு தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள், சமயத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஜனாதிபதியின் கவனம் திரும்பியிருப்பதாகவும், இதன் பிரகாரம் இந்த விடயம் தொடர்பாக உடனடி விளக்கமளிக்கும் வகையிலான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கும்படியும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், இந்த செயல்பாட்டினை நடைமுறைப்படுத்தும்போது அரச அதிகாரிகள் அவர்களது அதிகாரத்தை மீறிச் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக விசாரணை செய்யும்படியும், அவ்வாறு யாராவது செயற்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான பரிகாரங்கள் குறித்தும், அவர்கள் மீது எடுக்கக்கூடிய ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் தரும்படியும் ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.bbc.co.uk/tamil/

இது யாருடைய செயல்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை யாப்பு பற்றியும், ஒற்றை ஆட்சிதொடர்பாகவும் அதிமாகத் தெரிந்துள்ள இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் மெளனம் உள்நோக்கமுடையதாகவே காணமுடியும்.

சிறிலங்காவின் மிலேச்சத்தனமான இந்த நடவடிக்கை தொடர்பான இந்தியாவின் மெளனம் கட்டாயமாகக் கேள்விகளையே எழுப்பும்?

- இவ்வகைத் திட்டத்தின் பின்னாலான ஆலோசனையில் இந்தியாவுக்கும் பங்குண்டா?

- தற்போது ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதாக திடுதிப்பாக ஈடின்டிஎல்எவ் இனர் மீளவும் தமிழ்ப்பிரதேசங்களுக்குள் நுழைவது யாருக்காக?

- இராணுவத் தற்காப்பு நிலைக்கான உயர் உபகரணங்கள் வழங்கி, கையைப்பிசகும் இந்தியா தமிழர்களை நாடுகடத்த மனிதாபிமானமாக(!) பேருந்துகளையும் வழங்கியுள்ளதாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யப்பானியர்,ஜகூசி அகாசி இலங்கையில் நிற்கும் போது இத்தனை கைங்கரியங்களும் நடை பெற்றது.ஒரு கண்டன அறிக்கை இது வரையில்லை.தவிர மட்டக்கிளப்புக்கு சென்று இராணுவத்தால் பிடிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்.இவர் உண்மையில் சமாதான தூதுவரா என்பதில் சந்தேகமுள்ளது. நிச்சயமாக உலக வல்லரசுகளின் திட்டத்தின் அடிப்படையில் தான் தமிழர்கள் வதைக்கப்படுகின்றார்கள்.இன்ன

இலங்கை யாப்பு பற்றியும், ஒற்றை ஆட்சிதொடர்பாகவும் அதிமாகத் தெரிந்துள்ள இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் மெளனம் உள்நோக்கமுடையதாகவே காணமுடியும்.

சிறிலங்காவின் மிலேச்சத்தனமான இந்த நடவடிக்கை தொடர்பான இந்தியாவின் மெளனம் கட்டாயமாகக் கேள்விகளையே எழுப்பும்?

- இவ்வகைத் திட்டத்தின் பின்னாலான ஆலோசனையில் இந்தியாவுக்கும் பங்குண்டா?

- தற்போது ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதாக திடுதிப்பாக ஈடின்டிஎல்எவ் இனர் மீளவும் தமிழ்ப்பிரதேசங்களுக்குள் நுழைவது யாருக்காக?

- இராணுவத் தற்காப்பு நிலைக்கான உயர் உபகரணங்கள் வழங்கி, கையைப்பிசகும் இந்தியா தமிழர்களை நாடுகடத்த மனிதாபிமானமாக(!) பேருந்துகளையும் வழங்கியுள்ளதாக்கும்.

அசோக் லேயிலண்டில்லதான் கூட்டிகொண்டு போனவங்கள் ஆனால் இந்தியாதான் கொடுத்ததா என தெரியாது :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.