Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இந்தியப் பிரதமர்.

Featured Replies

கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இந்தியப் பிரதமர்.

கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து ஆயுதமேந்திய பொலிஸாரினால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது, அவர்களின் உரிமைகளை மீறும் செயலென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களும் வாழ்கின்றார்கள், அவர்களும் அந்நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் இடம்பெற்ற ஜி-8 மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது நேற்று சனிக்கிழமை இதனைத் கூறினார்.

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து வெளிநாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடியதாகவும், சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களும் சுதந்திரமாகவும், சுயாதினமாகவும் வாழ்வதற்குரிய உரிமை உள்ளவர்கள், அவர்களை பலவந்தமாக கொழும்பில் இருந்து வெளியேற்றியது சட்டவிரோதமானது என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

இதனிடையே கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்துள்ள இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இதன் மூலம் தமிழ்ர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குவதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு, அந்த ஆயுதங்களைக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களையே அழிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்துவித்துள்ள நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழர்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவர்களை அழிப்பதாக தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால், எமது சகோதரர்களை நாம் இழக்க வேண்டியேற்படும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

-Sankathi-

எங்கடை இணையத் தளங்கள் தங்கடை பாட்டுக்குச் செய்தியை திரிச்சு மக்களை முட்டாள் ஆக்கினம். கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பான இந்தியப் பிரதமரின் கரிசனை பற்றிய செய்தி இதுதான். இங்கே எந்த இடத்திலும் கண்டனம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

PM concerned over eviction of Sri Lankan Tamils

Prime Minister Manmohan Singh Saturday expressed concern over the eviction of minority Sri Lankan Tamils from the capital Colombo and hoped 'better sense will prevail' in the troubled nation.

'On attempt to expel Tamils from Colombo, Sri Lanka, we shared our anxiety with important world leaders,' the prime minister said while returning from Germany where he attended the G8 Outreach Summit.

'Hope better sense will prevail. It involves human rights of citizens,' added the prime minister, referring to a pre-dawn raid by the armed police Thursday on the temporary lodgings of Tamils in Colombo and forcing them go return to the northern and eastern provinces.

'I heard that this move has been stayed by their Supreme Court. We share the concern.'

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா,இவ்வளவு காலம் எடுக்குது ஆக ஒரு கண்டன அறிக்கை விட.எல்லாரும் அறிக்கை விட்டு விட்டாங்கள். தாங்களும் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ஏனோ தானோ என அறிக்கையை விட்டுள்ளார்கள்.

அப்பாடா ஒருபடியாக எதையோ சொல்லிவிட்டார்கள். ஒன்றுமே செய்ய முடியாத நிலையில்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கரை எண்டு தான் சொல்லப்பட்டு இருக்கு பட் its too late anyway

  • தொடங்கியவர்

கொழும்பில் தமிழர் வெளியேற்றம்: இந்தியா கவலை.

கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து இந்தியா தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் நடைபெற்ற ஜீ-8 மாநாட்டில் கலந்துவிட்டு இந்தியா திரும்பிய இந்திய் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றிய அரசின் நடவடிக்கை தொடர்பாக கவலையடைந்த முக்கிய உலகத் தலைவர்களுடன் நாமும் எமது கவலையை பகிர்ந்து கொள்கின்றோம்.

குடிமக்கள் மனித உரிமைகளுடன் வாழ வழி ஏற்படுத்த வேண்டும். சிறீலங்கா அரசு தமிழ் மக்களை வெளியேற்றியது அதன் பின்னர் அதனை உச்ச நீதிமன்றம் அதனை தடுத்து நிறுத்தியது போன்றவற்றை நான் கேள்வியுற்றேன் என்றார் அவர்.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.