Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 

தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது.

எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. எமது வீர வரலாற்றின் ஒவ்வொரு எழுச்சியின்போதும் அல்லது அவ்வரலாற்றின் வீழ்ச்சிகளின்பொழுதும் இந்தச் சாபம் விடாது எம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது. 

வரலாற்றில் தனது சொந்த இனத்தையே தனது நலன்களுக்காகவும், இச்சைகளுக்காகவும் காட்டிக்கொடுத்து, எதிரியுடன் சேர்ந்து நின்றே தனது இனத்தைக் கருவறுத்து, சொந்த இனம் அழிவதில் இன்புற்ற பல சாபங்களைத் தமிழினம் கண்டதுடன், இப்பிறப்புக்கள் பற்றிய சரியான பதிவினையும் எமது வரலாற்றில் பதிவுசெய்தே வந்திருக்கிறது. இவ்வாறு தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் சேர்ந்து செயற்பட்ட துரோகிகளின் வரலாறு சரித்திரத்தில் நிச்சயம் பதியப்படவேண்டும் என்பதுடன், இத்துரோகங்களால் எமதினம் பட்ட அவலங்கள் தொடர்ந்து பேசப்படுவதும் அவசியமாகிறது. 

அந்தவகையில், கடந்த 15 அல்லது 16 வருடங்களுக்கு முன்னர் தமிழினம் இவ்வாறான மிகப்பெரிய துரோகம் ஒன்றிற்கு முகம் கொடுத்தது. தனது இச்சைகளுக்காகவும், நலனுக்காகவும் மட்டுமே தனது இனத்தையும், அவ்வினத்தின் சுந்தந்திர விடுதலைப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்து, பலவீனமாக்கி, ஈற்றில் அப்போராட்டமும் லட்சக்கணக்கான மக்களும் அழிக்கப்பட தானும் நேரடியாகக் காரணமாகவிருந்த ஒருவனது துரோகம் பற்றிய எனது புரிதலையும், நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட விடயங்களையும் இங்கே பதிய நினைக்கிறேன். 

துரோகிகளை வரலாற்று நாயகர்களாகவும், உதாரண புருஷர்களாகவும் காட்ட முனையும் முனைப்புகள் வரலாற்றில் இத்துரோகிகளுக்கு வெள்ளையடித்து, அவர்களது துரோகத்தினை நியாயப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுவதால், இத்துரோகிகள் பற்றி நாம் தொடர்ந்து பேசுவதும், அந்தத் துரோகங்கள் பற்றித் தொடர்ந்து பதிவிடுவதும் அவசியமாகிறது. ஏனென்றால், இத்துரோகங்கள் மன்னிக்கப்படமுடியாத, மறக்கப்படமுடியாத, இனியொரு தடவை நடக்கக் கூடாத  வெறுக்கப்படவேண்டிய  நிகழ்வுகள் ஆகும். 

துரோகத்தின் நாள் 1 : 3 ஆம் திகதி மார்ச் மாதம், 2004

கேணல் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பேச்சாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகள் இல்லை. நாம் எமது தலைவரின் நேரடிக் கட்டளையின்கீழ்த்தான் இனிமேல் செயற்படுவோம் என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகள் இனிமேல் தலைவரின் நேரடிக் கட்டளைகளுக்கு மட்டுமே செவிசாய்ப்பதாகவும், இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இனிச் செயற்படப் போவதாகவும் கூறுகிறார்.

  • Like 8
  • Thanks 3
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாள் 2 : 4 ஆம் திகதி மார்ச் மாதம், 2004

மட்டக்களப்பு புலிகள் தமது நிலையினை மீள உறுதிப்படுத்துகிறார்கள்.

"நாம் எமது இலச்சியத்தினை நோக்கிப் பயணிப்போம். எமது தேசியத் தலைவரின் கட்டளையின் கீழும், எமது எமது தளபதி கருணாவின் வழிநடத்துதலின் கீழும் இனிச் செயற்படுவோம்" என்று கருணாவின் மூத்த தளபதிகளில் ஒருவர் கிழக்கு மாகாண புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவரும் உள்ளூர் இதழான தமிழ் அலையில் பேசுகிறார். "நாம் புலிகள் இயக்கத்திலிருந்து பிர்ந்துபோகும் முடிவினை இதுவரை எடுக்கவில்லை. ஆனால், நாம் பிரிந்து இயங்கினால் வரும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கிருக்கும் அச்சத்தையும், அமைதியின்மையினையும் நாம் அறிவோம்"  என்றும் அவர் மேலும் கூறினார். 
 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாள் 3 : 5 ஆம் திகதி மார்ச் மாதம், 2004

"உங்களின் கட்டளையின் கீழ் எங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்" - பிரபாகரனுக்கு கருணா பகிரங்கக் கடிதம்

நாங்கள் இயக்கத்திலிருந்து பிரிந்துபோகும் முடிவினை எடுக்கவில்லை, உங்களுக்கு எதிராகப் போராடும் எண்ணமும் எமக்கில்லை. மக்களின் அவலங்கள் குறித்து உங்களோடு பேசாமல் விடுவதன் மூலம் ஏற்படக்கூடிய வரலாற்றுத் தவற்றினை நான் விட விரும்பவில்லை. இங்கிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் நலன்களில் உண்மையாக உங்களுக்கு அக்கறையிருந்தால், எங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்" என்று தமிழ் அலை பத்திரிக்கையில் அவர் குறிப்பிடுகிறார்.

"புலிகள் இயக்கத்தின் ஏனைய நிர்வாக அமைப்புக்களுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கு எந்தவிதத்திலும் குறையாத நிர்வாகச் சுதந்திரத்தினை கிழக்கு மாகாணத்திற்குத் தரவேண்டும், இன்றைய இக்கட்டான நிலையில நான் தென் தமிழீழ மக்களுக்கான நலன்கள் பற்றியே கவனமெடுப்பேன், அவர்களுக்காகவே எனது உயிரையும் கொடுப்பேன், இதற்கு எவர் குறுக்கே வந்தாலும் நான் எதிர்ப்பேன்"  என்று கூறிய கருணா, "உங்களின் நேரடியான கட்டளைகளின் கீழ் நான் பயணிக்கத் தயார் ஆனால், வேறு எந்த பிரதி தலைமைகளுக்கோ தளபதிகளுக்கோ நான் அடிபணியப்போவதில்லை" என்றும் அவர் கூறுகிறார்.

"எமது பிரச்சினைகளை நாம் தீர்க்கமுயன்றுகொண்டிருக்கிறோம்" - மட்டக்களப்பு ராணுவத் தளபதி ரமேஷ்

கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பாக நாம் எமது தேசியத் தலைவருடன் விலாவாரியாக கலந்தாலோசித்திருக்கிறோம். இப்பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இப்பிரச்சினை தொடர்பான விபரங்களை எமது தலைவர் மிக விரைவில் தமிழ்மக்களுக்கும், உலகிற்கும் அறியத்தருவார்" என்று கருணாவின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகளின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பானவருமான கேணல் ரமேஷ் தெரிவித்தார்.

Edited by ரஞ்சித்
paragraph added
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாள் 4 : 6 ஆம் திகதி மார்ச் மாதம், 2004

புலிகளியக்கத்திலிருந்து கருணா அகற்றப்படுதல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்ட செய்தியில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தளபதியான கருணா இயக்கத்திலிருந்து நீக்கப்படுவதாகவும், அவர் இயக்கத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் அகற்றப்படுவதாகவும் அறிவிக்கின்றது. தமிழீழ தேசியத் தலைமை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு   ரமேஷ் அவர்களை விசேட தளபதியாகவும், ராம் அவர்களைத் தளபதியாகவும், பிரபா அவர்களைப் பிரதித் தளபதியாகவும், கெளசல்யன் அவர்களை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்த் துறைப்பொறுப்பாளராகவும் நியமித்திருப்பதாக அவர்களது விசேட செய்திக்குறிப்பு மேலும் சொல்கிறது.

"மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு புலிகளின் தளபதியாகவிருந்த கருணா என்பவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நச்சுச் சக்திகளினால் தூண்டப்பட்டு, தமிழினத்திற்கெதிராகவும், தமிழ்த் தேசிய தலைமைக்கெதிராகவும் மிகத் துரோகத்தனத்துடன் செயற்பட்டு, எமது தேசிய விடுதலை இயக்கத்தினைத் துண்டாட முனைந்திருக்கிறார். அவருக்குக் கீழ் செயற்பட்ட தளபதிகளும், பிரிவுத் தளபதிகளும் கருணாவின் இந்தத் துரோகத்தனத்தினை விமர்சிக்கமுடியாமலும், அவருடன் இருந்து அதனை எதிர்க்கமுடியாத நிலையிலும், அவருக்குக் கீழ் இனிமேல் செயற்படப்போவதில்லை எனும் முடிவினை எடுத்திருப்பதுடன், தமிழீழ தேசியத்தலைமையிடம் இதுபற்றி விளக்கமும் அளித்திருக்கின்றனர். இவற்றின் அடிப்படையில் கருணா இயக்கத்தின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும், பதவிகளிலிருந்து உடனடியாக அகற்றப்படுகிறார்" என்றும் அவ்வறிக்கை மேலும் சொல்கிறது.
 

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கருணாவின் துரோகத்தினால் பாதிப்பில்லை - தமிழ்ச்செல்வன்

புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் புலிகளியக்கம் சமாதான பேச்சுவார்த்தைகளிலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் தொடர்ந்தும் இதயசுத்தியுடன் செயற்படும் என்றும், துரோகம் இழைத்தவர்கள் தமது தவறினை உணரும் பட்சத்தில் தேசியத்தலைவர் நிச்சயமாக அவர்களுக்கு மன்னிப்பளிப்பார் என்றும் தெரிவித்தார். 

தமிழ்ச்செல்வனுடன் இந்த பேட்டியில் கலந்துகொண்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஷ் கருத்துக் கூறுகையில், "மட்டக்களப்பில் நடந்த பிரச்சினை தனி ஒருவரால் ஏற்படுத்தப்பட்டது. இயக்கத்திலிருந்து வெளியேற அவர் எடுத்த முடிவு அவரது சொந்த முடிவு. இதுபற்றி அவர் ஒருபோதும் தலைமைத்துவத்திடம் பேசியிருக்கவில்லை. தளபதிகளோ, போராளிகளோ கருணா எடுத்த முடிவினை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று தெரிவித்தார். 

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாள் 5 : 7 ஆம் திகதி மார்ச் மாதம், 2004

"நாம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை மிகுந்த அவதானத்துடன் கையாள்கிறோம்" - தளபதி ரமேஷ்

கருணாவின் பிரச்சினையினைத் தீர்க்கும் எமது நடவடிக்கைகளில் மக்களுகோ, போராளிகளுக்கோ இழப்புக்கள் ஏற்படாதுவண்ணம் இப்பிரச்சினையினைக் கையாளுமாறு எமது தேசியத் தலைவர் கேட்டிருக்கிறார். இதற்கான திட்டங்களை மிகுந்த அவதானத்துடன் நாம் தீட்டி வருகிறோம். இத்திடத்தின் பிரகாரம் நாம் நடவடிக்கைகளிலும் இறங்கிடிருக்கிறோம். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு சென்று எமது செயற்பாடுகளை வழமைபோல முன்னெடுக்கவிருக்கிறோம் என்று விசேட தளபதி ரமேஷ் தெரிவித்தார்

"கருணாவினது பிரச்சினை தனிப்பட்டது. கருணாவைத் தவிர மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களும் போராளிகளும் எமது தலைவருக்குப் பின்னாலேயே நிற்கிறார்கள். எந்தப் பிரச்சினையென்றாலும் தலைவருடன் பேசித் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். நாம் கருணாவிடம் அவரது பிரச்சினை தொடர்பாக தலைவருடன் பேசுமாறு பலமுறைக் கேட்டிருந்தோம். ஆனால், அவர் அவற்றை உதாசீனம் செய்ததோடு, எம்மையும் தலைவரிடம் இதுபற்றிப் போய் பேசவதையும் தடுத்துவிட்டார்".

"மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தமிழ்மக்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். எமது இலச்சியத்தினை அடையும் நோக்கில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். எமது போராட்டம் பிரதேசவாதம் பேசும் பிரிவினைவாதிகளால் தோற்கடிக்கப்படுவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்கள் எம்முடன் சகலவிதத்திலும் ஒத்துழைப்பு நல்கிவருகிறார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Edited by ரஞ்சித்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொல்பொட் எனும் சர்வாதிகாரக் கொலைகாரனுக்கு நிகரானவர் கருணா - கரிகாலன் தெரிவிப்பு

karikalan.jpg

"மக்கள்மேல் தொடர்ச்சியாக  வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பொறுப்பின்றி நடந்துகொள்வாராக இருந்தால், தமிழர்களின் வரலாற்றில் கருணா பொல்பொட் போன்ற சர்வாதிகாரியாகவே பார்க்கப்படுவார்" என்று மட்டக்களப்பிலிருந்து வன்னியை வந்தடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் கரிகாலன் தெரிவித்தார். 
மேலும், கிழக்கு மாகாணத்தின் புலிகளின் பல முக்கிய தளபதிகளும், பிரமுகர்களும் தலைமையுடன் கிழக்கில் நடந்த விடயங்களை விளக்கும் முகமாக வன்னியினை வந்தடைந்திருக்கிறார்கள். 

வன்னியில் கருணாவின் எதேச்சாத்திகார முடிவினையும் நடவடிக்கைகளையும் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய கரிகாலன், கருணாவின் துரோகத்தின் பின்னால் வெளிச்சக்திகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதென்றும் கூறினார். 

"புலிகள் இயக்கத்திலிருந்து பிரியும் தனது துரோக எண்ணத்தினை அவர் தானாகவே டுத்துக்கொண்டார். இதுபற்றி அவர் கிழக்கின்  தளபதிகளிடமோ, அரசியல்த்துறையினரிடமோ கலந்தாலோசித்திருக்கவில்லை. தனது முடிவினை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கிழக்கின் தளபதிகளையும், முக்கியஸ்த்தர்களையும் பயமுறுத்திவருகிறார், ஆனால் அவரது எண்ணம் நிறைவேறப்போவதில்லை".

"இன்று கிழக்கில் எந்தத் தமிழரும் எமது தேசியத்தலைவரின் தலைமையினை நிராகரிக்கப்போவதில்லை. இதை நான் இங்கு உறுதிபடக் கூற விரும்புகிறேன். அண்மையில் கிழக்கில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் எமது தேசியத் தலைவரின் படத்தினைத் தாங்கி வந்ததோடு, புலிகளே தமிழர்கள், தமிழர்களே புலிகள் எனும் கோஷத்தினையும் மிகத் தெளிவாக முன்வைத்து தேசியத் த்லைமைக்கான தமது ஆதரவினையும், தாயக விடுதலைக்கான தமது உறுதியாத நிலைப்பாட்டினையும் எடுத்தியம்பியிருந்தார்கள்" என்றும் கூறினார்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் .....

துரோகி கருணாவின் ஆதரவாளர்கள் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

கருணா எனும் துரோகிக்கெதிரான ராணுவ நடவடிக்கையொன்றினை அவனுக்குக் கீழிருந்த தளபதிகளும் போராளிகளும் திட்டமிட்டு வருகையில், கருணாவின் ஆதரவாளர்கள் மட்டக்களப்பு நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருக்கிறார்கள். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய நிலை தொடர்பாக விளக்குவதற்கு அம்மாவட்டங்களின் முக்கிய தளபதி ஒருவர் வன்னியை வந்தடைந்தார்.

IMG_5229.jpg

ரமணன் மற்றும் ராம்

கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி வருவதான முடிவினை அவரின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமணன் எடுத்ததனால், கிழக்கினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கமுடியும் என்ற கருணாவின் கனவில் பாரிய இடிவிழுந்திருப்பதாக வன்னியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை கருணாவின் ஆதரவாளர்கள் வாழைச்சேனையில் தேசியத் தலைவரின் கொடும்பாவியினை எரித்ததுடன், கருணாவை விட்டு விலகிச் சென்ற ஏனைய தளபதிகளினது கொடும்பாவிகளை எரித்தனர். இவ்வாறான தமிழ்த் தேசியத் தலைமைக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்று திருக்கோவில் பிரதேசத்திலும் கருணாவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் அங்குள்ள நிலைமைபற்றிக் கருத்துக்கூறுகையில் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த கருணா ஆதரவாளர்கள் அங்கிருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கு அச்சுருத்தல் விடுத்ததாகவும், பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாகிவருவதாகவும், உயிருக்குப் பயந்து பெருமளவு வடமாகாண மாணவர்கள் பல்கலைக் கழகத்தினைவிட்டு தற்போது வெளியேறிவருவதாகவும் தெரிவித்தார். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் .....

karikalan_1.jpg

 

தனது துரோகத்தினையும், தனது தவறுகளையும் மறைக்கவே கருணா மிகவும் தவறான குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார்- கரிகாலன்

ஐ பி சி தமிழ்ச்சேவைக்கு வன்னியிலிருந்து கரிகாலன் வழங்கிய செவ்வியில் தனது துரோகத்தினையும், தான் விட்ட பல தவறுகளையும் மறைக்கவே கருணா மிகவும் தவறான , ஏற்கமுடியாத பொய்களை சர்வதேச செய்திநிறுவனங்களிடம் தெரிவித்து வருகிறார் என்று கூறினார். உலகத் தமிழரின் முன்னால் தனது முகத்திரை கிழிக்கப்பட்டு, துரோகியெனும் அடையாளம் சூட்டப்படுவதைத் தடுக்க இவ்வாறான பொய்களைக் கூறி வருகிறார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார்.


கரிகாலம் மேலும் கூறுகையில், கருணாவின் துரோகத்தினால் தம்மீது பூசப்பட்டிருக்கும் இழிச்சொல்லை மிகவிரைவில் துடைத்தழித்துவிட்டு கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்திற்கான தமது அசைக்கமுடியாத ஆதரவினை மீண்டும் நிரூபிப்பார்கள் என்றும் கூறினார்.

அவர் மேலும் பேசும்பொழுது, தற்போதுவரை கருணாவின் துரோகத்தினை மன்னித்து அவரது தவறுகளை மறந்து ஏற்றுக்கொள்ள தேசியத் தலைவர் தயாராகவே இருக்கிறார் என்றும் கூறினார்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் .....

தனது தவறுகளுக்காகவும், முறைகேடான நடத்தைகளுக்காகவும் தலைமையினால் இயக்கதிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று அஞ்சிய கருணா நேரடியாக தலைமையைச் சந்திப்பதைத் தவிர்த்தார் - தளபதி ரமேஷ்

karuna_1.jpg

ஐ பி சி செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில், தளபதி ரமேஷ் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியே இயங்குவதற்கான முடிவு கருணாவினாலேயே எடுக்கப்பட்டதென்றும், பல முக்கிய தளபதிகளும் பிரமுகர்களும் கூறிய அறிவுரைகளைக் கருணா ஏற்கமறுத்ததாகவும் அவர் கூறினார்.


இன்று கிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலை கருணா எனும் தனிமனிதரால், தனது முறைகேடுகளை மறைப்பதற்காக  அவரால் ஆடப்படும் நாடகம் என்றும், இதற்காக அப்பாவிப் போராளிகளையும் கிழக்கு மக்களையும் அவர் பகடைக்காய்களாகப் பாவிக்கப் பின்னிற்கவில்லையென்றும் கூறினார். தனது இந்த முடிவுபற்றி மூத்த தளபதிகளிடனோ, கிழக்குவாழ் மக்களுடனோ கலந்தாலோசிக்காத கருணா, இறுதிவரை இப்பிரச்சனை குறித்து தலைவருடன் பேச மறுத்துவிட்டார் என்றும் கூறினார்.

தான்  உட்பட, ராம், பிரபா, கெளசல்யன், கரிகாலன், வாமன் ஆகிய பலர் கருணாவின் இந்த முடிவு தொடர்பாக அவருடன் பேசியதாகவும், தேசியத் தலைவருடன் இதுபற்றிப் பேசி நிலைமையினைச் சுமூகமாகத் தீர்த்துவைக்க தாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் கருணா தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். தமது அறிவுரைகளை விடாப்பிடியாக  ஏற்கமறுத்த கருணா, தலைமையிடமிருந்து வந்த அனைத்துக் கட்டளைகளையும் ஏற்கமறுத்ததுடன், தனது நடவடிக்கைகளுக்காக தான் இயக்கத்திலிருந்து அகற்றப்படலாம் என்று அவர் அச்சமுற்றிருந்தார் என்றும் கூறினார்.

"அவர் இப்போது தனது தவறுகளை மறைக்க தமிழர்களைப் பிரதேச ரீதியாகப் பிரிக்கும் உளரீதியான புரட்டுக்களையும், புனைவுகளையும் கொட்டிவருவதுடன் கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றும் முகமாக மிகவும் தவறாக, துரோகத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்".

"இவரது இந்தச் செயற்பாடுகள் அவரை இயக்கத்திலிருந்தும் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேற்றுவதைத் தவிர தலைமைக்கு வேறு எந்த முடிவினையும் விட்டுவைக்கவில்லை". 

"தனது தவறான நடவடிக்கைகளாலும், முறைகேடான நடத்தைகளினாலும் இயக்கத்திலிருந்து விரட்டப்படலாம் என்று அஞ்சிய கருணா தலைவரை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார். புலிகளியக்கத்தின் கட்டுக்கோப்பும், ஒழுக்கமும், தனிமனித ஒழுக்கமும் நீங்கள் அறியாததல்ல. நாம் இயக்கத்தில் இணையும்போதே இக்கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படிவோம் என்று உறுதியெடுத்துக்கொள்கிறோம். இந்த நிலையில் தலைமையின் கட்டளைகளை ஏற்கமறுப்பதும், தலைமைக்கெதிராகச் செயற்படுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத குற்றமாகும்". 

"கிழக்குமாகாணத் தமிழர்கள் போராட்டத்திற்கு அளப்பரிய பங்களிப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எமது தேசியத்தலைவர் மீது அளப்பரிய நம்பிக்கையினைக் கொண்டுள்ளார்கள். கிழக்குவாழ் மக்களும் பெருமளவு போராளிகளும் இச்சிக்கல் தொடர்பாகத் தலைவருடன் பேசி சுமூகமான தீர்வொன்றினைப் பெறவே விரும்பினார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி தலைவருடன் பேசி இப்பிரச்சினையினைச் சுமூகமாகத் தீர்க்கவே நாம் முயல்கிறோம்".

"தலைவர் எமக்கிட்ட கட்டளையின் பிரகாரம் கிழக்கின் மக்களுக்கோ அல்லது போராளிகளுக்கோ எதுவித தீங்கும் ஏற்படாது இச்சிக்கலைத் தீர்ப்போம். கருணா தன் பங்கிற்கு மிலேச்சத்தனமான பொய்களைக் கட்டவிழ்த்து விட்டாலும் இன்று மக்கள் அவரை விட்டு மிக விரைவாக வெளியேறிவருகிறார்கள்". 

"கருணா எனும் தனிமனிதரால் ஏற்படுத்தப்பட்ட இந்த துரோக நாடகத்தில் அப்பாவிகளோ போராளிகளோ பாதிக்கப்படாவண்ணம் அவருக்கான தண்டனையினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மிக அவ்தானமாகத் திட்டமிட்டு அதன் சில படிகளை இப்போது முன்னெடுத்துவருகிறோம்".

"கருணாவின் துரோக நாடகம்பற்றிய விளக்கத்தினை நாம் கிழக்கு மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். இன்று மக்கள் அவரின் உண்மையான முகத்தினைக் கண்டறிந்துவிட்டார்கள். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் கருணாதான் என்பதை ஏற்றுக்கொள்வதோடு, தேசியத் தலைவர்மீதான முழுநம்பிக்கையினையும் வெளிப்படுத்திவருகிறார்கள்". 


"கிழக்கு மகாணத்திற்கு சரியான பிரதிநித்துவம் தரப்படவில்லை என்று கருணா கூறுவது மிகப்பெரிய பொய். மத்திய குழுவில் முக்கிய அங்கத்தவரான அவர் தலைவருக்கு அடுத்த படியில் உள்ள ஒருவர். அதுமட்டுமல்லாமல் எமது நிர்வாகத்துறையின் தலைவராக இருப்பது புதியவன் எனப்படும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த ஒரு போராளியே. இவர்போன்ற பல கிழக்குமாகாணப் போராளிகள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். கருணா உண்மையிலேயே கிழக்கு மாகாணத்திற்கு சரியான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று எண்ணியிருந்தால் ஏன் அவர் இறுதிவரை தலைவருடன் இதுபற்றிக் கலந்துரையாடியிருக்கவில்லை?" 

"நாம் புலம்பெயர் தமிழருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எமது தலைவரின் கரத்தைப் பலப்படுத்த எமக்கு உற்றதுணையாக இருங்கள். கிழக்கு மாகாண மக்களை எம்முடன் இன்னும் அதிகமாக ஒருங்கிணைத்து எமது இயக்கத்தை நாம் பலப்படுத்துவோம். இந்தப் பிரச்சினையால் நாம் துவண்டுபோகாது எமது தாயகத்தை மீட்டெடுக்கும் உறுதியில் நிலைத்திருப்போம்". 

என்றும் அவர் மேலும் கூறினார். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி  ரகு  தொடருங்கள்

சிலருக்கு பலதும் மறந்துவிட்டது அல்லது  மறக்கடிக்கப்பார்க்கிறார்கள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 8, மார்ச் மாதம், 2004


மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயரும் அவரது குழுவும் புலிகளின் தலைவர்களைச் சந்திக்கிறார்கள்.

Bishop_1.jpg

மட்டு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் மட்டக்களப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான தமிழ்ச்செல்வன், சிறப்புத்தளபதி ரமேஷ் மற்றும் கரிகாலன் ஆகியோரை வன்னியில் சந்தித்தார்கள்.

 

கிழக்கிலிருந்து வருகைதந்திருந்த இக்குழுவிற்கு கருணாவை இயக்கத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை ஏற்பட்டதற்கான காரணங்களை தமிழ்ச்செல்வனும் கிழக்கின் தளபதிகளும் எடுத்துரைத்தனர்.

அவர்கள் மேலும் இதுபற்றிக் கூறுகையில் தனது முறைகேடுகளையும், இச்சைகளையும் மறைப்பதற்காக கருணா மக்களையும் போராட்டத்தினையும் காட்டிக்கொடுத்து, பிரதேசவாதம் எனும் நச்சுவிதையினை தமிழ்ச் சமூகத்தினுள் விதைக்கமுற்படுவதாகவும் கூறினர்.

Bishop_3.jpg

தொடர்ந்தும் கருத்துக்கூறிய அவர்கள், கருணாவுக்கெதிரான நடவடிக்கைகள் கிழக்கின் பொதுமக்களோ, போராளிகளோ எவ்விதத்திலும் பாதிப்படையாவண்ணம் மிக அவதானத்னத்துடன் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

புலிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த ஆயர் தலைமையிலான குழு, இப்பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வேண்டிக்கொண்டது.
 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 8, மார்ச் மாதம், 2004


என்னை வீட்டுக்காவலில் புலிகள் வைத்திருப்பதாக கருணா கூறிவருவது முழுப்பொய் - திருகோணமலைத் தளபதி பதுமன்

pathuman_press_2.jpg


அஷோஷியேட்டட் பிரஸ் எனும் செய்திச் சேவைக்குப் பேட்டியளித்த திருகோணமலை மாவட்டத் தளபதி கேணல் பதுமன், தன்னை புலிகள் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக துரோகி கருணா கூறிவருவது பொய்யான தகவல் என்றும், நகைப்புக்கிடமானதென்றும் கூறினார். 

அவர் கிளிநொச்சியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபொழுது பி பி சி செய்திச்சேவைக்கு கருணா கூறிய பொய்களை முற்றாக நிராகரித்தார். 

இப்பேட்டியின்போது பதுமனுடன், தமிழ்ச்செல்வன், கரிகாலன், ரமேஷ், ராம், கெளசல்யன் ஆகியோரும் உடனிருந்தனர்.

pathuman_press_1.jpg

கருணாவின் துரோக நாடகம்பற்றிக் கருத்துக்கூறிய கிழக்கின் தளபதிகள் கிழக்கில் இருக்கும் போராளிகளை  நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் தமிழ்த்தேசிய தலைமைக்கும் , தாயகவிடுதலைப் போராட்டத்திற்கு துணையாக இருப்பார்கள் என்றும் உறுதியளித்தனர். 


"எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தனிப்பட்ட துரோகியின் செயல் தமிழ்ச் சமூகத்தினை பிரிக்கவோ, தேசியத்தின் குறிக்கோளினை உடைக்கவோ அனுமதியளிக்கப்போவதில்லை"  என்றும் அவர்கள் உறுதிபடக் கூறினர்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 9, மார்ச் மாதம், 2004


கருணா ஆதரவாளர்களால் மட்டக்களப்பில் விநியோகிக்கப்படவிருந்த தினக்குரல் பத்திரிக்கைகள் பறிமுதல்

Karuna: The Tragedy of a Rebel(Part IV)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பில் விநியோகிக்கப்படவென அனுப்பிவைக்கப்பட்ட பிரபல தமிழ் நாளிதழான தினக்குரலின் 3000 பிரதிகள் வாழைச்சேனை, வந்தாறுமூலை ஆகிய பகுதிகளில் கருணா குழு ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக எடுத்துசேல்லப்படு எரிக்கப்பட்டதாக அப்பத்திரிக்கையின் விநியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

தினக்குரல் நாளிதழ் ஒரே நேரத்தில் கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. 

மட்டக்களப்பிலிருந்து வந்த தகவல்களின்படி வாழைச்சேனைப் பகுதியில் பஸ்ஸில் ஏறிய கருணா ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிக்கைகளை விட்டு விட்டு தினக்குரல் பத்திரிக்கைகளை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அப்பத்திரிக்கைகளைக் கொண்டுவந்தவர்களை எச்சரித்த கருணாகுழு, இனிமேல் இப்பத்திரிக்கைகள் மட்டக்களப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுருத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

சுதந்திர ஊடக சம்மேளனத்திடம் இச்சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்னும் சில ஜனநாயக அமைப்புக்களும் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றனர்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 11, மார்ச் 2004

புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையில் நோர்வே தலையிடப்போவதில்லை - எரிக் சொஹெயிம்

solheim_meeting_1.jpg

கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனைச் சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளரிடம் பேசிய சமாதானத் தூதுவர் சொல்ஹெயிம், புலிகளின் உள்வீட்டு விவகாரத்தில் நோர்வே தலையிடாது என்று கூறினார். "பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பிணக்கில் நாம் தலையிடாது இருந்தது போன்றே, புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையிலான பிரச்சினையிலும் நாம் தலையிட விரும்பவில்லை. முதலாவது விடயம் தெற்கின் உள்வீட்டுப் பிரச்சினைபோல, இரண்டாவது விடயம் வடகிழக்கின் உள்வீட்டுப் பிரச்சினை" என்று அவர் கூறினார்.

தமிழ்ச்செல்வனையும், தளபதி ரமேஷ், கரிகாலன், கெளசல்யன் ஆகியோரையும் சந்தித்துப் பேசிய சொல்ஹெயிம், " நாம் மூன்று விடயங்கள் பற்றிப் பேசினோம். முதலாவது கருணா பிரச்சினை, இரண்டாவது வடக்குக் கிழக்கு மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான சர்வதேச உதவி, மூன்றாவது தேர்தல்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

நீங்கள் கருணாவைச் சந்திப்பீர்களா என்று கேட்டபோது, "அவர்களின் உள்வீட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என்று சொல்ஹெயிம் கூறினார்.


 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 13, மார்ச் 2004

தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா கையாடினார், தண்டனைக்குப் பயந்தே இயக்கத்திலிருந்து பிரியும் நிலைப்பாட்டினை எடுத்தார் - கரிகாலன்

karikalan_11.jpg

கிழக்குமாகாண அரசியல்த்துறைப் பிரமுகரும், கருணாவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கியிருந்த கரிகாலன் வன்னியிலிருந்து அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தினார் என்றும், இந்த நிதிமுறைகேடுகள் பற்றி தலைவர் அறிந்தபோது, அதுபற்றிப் பேசுவதற்கு வன்னிக்குக் கருணாவை அழைத்தபோது தனக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்றஞ்சிய கருணா தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே தாந்தோன்றித்தனமாக பிரிந்துசெல்லும் முடிவினை எடுத்தார் என்று தெரிவித்தார்.

கரிகாலன் மேலும் கூறுகையில் தனது ராணுவ செயற்பாட்டினால் தமிழ்மக்கள் மத்தியிலும், தலைவரின் மனதிலும் இடம்பிடித்த கருணா, சிறிது சிறிதாக தனது சொந்த நலன்கள்பற்றியும், தனது ஆசைகள் பற்றியும் அதிகம் அக்கறை காட்டத்தொடங்கினார். இயக்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக இயக்கத்தின் நிதியினை தனது சொந்த விருப்புகளுக்காகக் கருணா கையாடியபோது தேசியத் தலைமையுடன் நேரடியாக மோதும் நிலைக்கு அவர் வந்தார். கருணா தலைவரினால் பெரிதும் நம்பப்பட்டார் என்றும், அவரை மிக உயரிய ஸ்த்தானத்தில் தலைவர் வைத்திருந்தார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார்.

"மிக அண்மைய நாட்களிலேயே கருணா தேசியத் தலைமை கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிப்பதாகப் பேசி வந்தார். இயக்கத்திற்கு எதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட ஆரம்பித்த போதே அவர் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போகிறார் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்".

" எங்களை பயிற்சிக்காக அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, கிழக்கின் கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்களைக் கருணா செய்யத் தொடங்கினார். நிதித்துறை, உணவுத்துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகளை தன்னிடம் எடுத்துக்கொண்ட கருணா, தனக்கு விசுவாசமானவர்களை முக்கிய ராணுவப் பொறுப்புக்களில் அமர்த்திக்கொண்டார்". 

"இந்தக் காலகட்டத்தில் கருணா பெருமளவு நிதியினைக் கையாடுவதை போராளியொருவர் அறிந்துகொண்டார். தனது நிதிக்கையாடல்பற்றி அறிந்துகொண்ட போராளியை கருணா கொல்லமுயன்றபோது, அப்போராளி சமயோசிதமாகத் தப்பி வன்னியை வந்தடைந்து கருணாவின் அனைத்து நிதிக் கையாடல்களையும் தேசியத் தலைமையிடம் அறியத் தந்தார். கருணாவின் நிதிக்கையாடல்கள் பற்றித் தெரிந்துகொண்ட அவரது பிரத்தியேக வாகனச் சாரதியும் ஒரு வாரத்திலேயே அவரால் கொல்லப்பட்டார். தனது சாரதி காய்ச்சலால் இறந்துவிட்டதாகக் கருணா கூறியபோதும், அவர் கருணாவினால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதை தளபதிகள் அறிந்துகொண்டார்கள். தனது நிதிக்கையாடல்கள்பற்றி தமிழ்மக்கள் அறிந்துகொண்டபோது கருணா வெட்கித்துப்போனார். ".

"கருணாவின் நிதிக்கையாடல்கள், கொலைகள் பற்றி தேசியத் தலைவர் அறிந்துகொண்டபோது, இதுபற்றிப் பேசுவதற்காக அவரை வன்னிக்கு அழைத்தார். தனது முறைகேடுகளுக்காகவும், கொலைகளுக்காகவும் தான் தண்டிக்கப்படலாம் என்று அஞ்சிய கருணா, வன்னிக்குச் செல்ல மறுத்ததோடு, தன் சார்பாக ஒரு பிரதிநிதியை வன்னிக்கு அனுப்பிவைத்தார்".

"இதே காலத்தில் தனது மனைவியையும் பிள்ளைகளையும் மலேசியாவிற்கு அனுப்பிவைத்த கருணா, இந்தவிடயம் தலைவரின் அனுமதியுடனேயே நடைபெற்றதாக மற்றைய தளபதிகளை நம்பவைத்தார். ஆனால், இந்த வழியனுப்பலின் பின்புலத்தில் கருணா மிகவும் திட்டமிட்ட வகையிலேயே தனது பிரிந்துசேலும் துரோகத்தனத்தை நடத்திக்கொண்டிருந்தார் என்பது இப்போது தெளிவாகிறது".

"கிழக்கு மாகாண மக்களுக்கிருந்த ஒரே கேள்வியென்னவென்றால், தலைவருக்கு மிக நெருங்கிய தளபதியாகவிருந்த கருணாவினால், அவர் இன்று கூறும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரை ஏன் நேரடியாக தலைவருடன் பேசமுடியாமற்போனது என்பதுதான்". 

karuna2.jpg

"தனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயற்படக் காத்திருந்த சக்திகளுடன் அவர் நெருங்கிப் பழகத் தொடங்கினார். கருணாவின் தொடர்பின் மூலம் இயக்கத்தில், கருணாவின் கீழிருந்த ராணுவப் பலம்பற்றியும் ஏனைய  விடயங்கள் பற்றியும், இயக்கத்தில் கருணாவின் பங்குபற்றியும் இச்சக்திகள் அறிந்துகொண்டன. கருணாவின் சுயநலத்தையும், அவரது இச்சைகளையும் மூலதனமாகக் கொண்டு, இயக்கத்திலிருந்து இவரைப் பிரித்தெடுக்கும் கைங்கரியத்தில் இச்சக்திகள் இறங்கின". 

"பெருமளவு போராளிகளையும் ஆயுதங்களையும் பராமரிப்பதற்கு பெருமளவு பணமும் வளங்களும் தேவை. ஆகவே கருணா தலைமைக்கெதிராக களம் இறங்குவதற்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கக் காத்திருக்கும் சக்திகளின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. கிழக்கில் கருணாவோடு ராணுவம் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம். கிழக்கு மாகாணத்தில் கருணாவின் ஆதரவாளர்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு சிறிதுநேரத்திலேயே நகர்த்திச் செல்வதற்கு இலங்கை ராணுவம் உதவிவருகிறது" என்றும் அவர் தொடர்ந்து விவரித்தார். 

.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 15, மார்ச் 2004

கருணா குழுவினரிடையே பிளவு

தமிழீழத் தேசியத் தலைவருக்கெதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து செய்தி வெளியிட்ட கருணாவினால் மட்டக்களப்பிலிருந்து இயக்கப்படும் இணையத்தளம் ஒன்று ம் ஒன்று தனது செயலுக்காக பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதன் பின்னர் திடீரென்று இயங்காமல்ப் போனது.  பலமணிநேர இடைநிறுத்தத்திற்குப் பினர் தற்போது அது மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.

 கருணாவிற்கு ஆதரவானவர்கள் இதுபற்றிப் பேசும்போது, வெளியிலிருந்து செயற்படும் சிலரால் தமது இணையத்தளம் தாக்கப்பட்டிருக்கிறதென்றும், தற்போது மீண்டும் அது இயங்குவதாகவும் கூறியிருந்தனர். 

ஆனால், அமெரிக்காவிலிருந்து இயக்கப்படும் பாடுமீன் எனும் இவ்விணையத்தளத்தினைத் தொடர்புகொண்டபொழுது, இத்தளம் எவராலும் தாக்கப்படவில்லையென்று, இத்தளத்தினை இயக்குபவர்களே தமது தேவைக்காக இடைநிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். 

கருணாவினால் நடத்தப்பட்ட பாடுமீன் இணையத்தளத்தில் கருணாவை விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரையின் சில வரிகள் இதோ,

"எமது பார்வையாளர்களிடம் பாடுமீன் இணையத்தளம் மன்னிப்புக் கேட்கிறது".

"தாயகத்தினை மீட்கும் கனவில் மரணித்துக் கல்லறைகளில் தூங்கிக்கொண்டிருக்கும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் மனதிற்கொண்டு, கடந்த சில தினங்களாக எமது அன்பிற்குறிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கெதிராகவும், எமது தேசிஒய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகவும் செய்திவெளியிட்டுவந்தமைக்காக எனது வாசகர்களாகிய உங்களிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கோருகிறேன். 

"துரோகி கருணா தமிழ்த்தாயின் குரல்வளையினை நசுக்க பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறான். தனது செயற்பாடுகளுக்கு ஆதரவாக என்னை எழுதுமாறு கொடுமைப்படுத்தி வருகிறான். இதனை எழுதும்பொழுது அடக்கமுடியாக் கண்ணீருடனும், இக்கடிதத்தினை வாசகர்களாகிய உங்களுக்கு எடுத்துச் செல்லும்வரையாவது எனது உயிர் என்னிடம் இருக்கவேண்டும் என்ற வேட்கையுடனும் இதனை எழுதுகிறேன்".

"தற்போது நடைபெற்றுவரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை கருணா தனது துரோக நாடகத்தினை அரங்கேற்றப் பாவித்துவருகிறான். ஆனால், அவனது துரோகத்தினை முறியடிக்க எமது தேசியத் தலைமை துரிதமாகச் செயற்படும் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. கருணாவின் துரோகத்தினை இந்த மண் ஒருபோதும் மன்னிக்காது".


 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/11/2020 at 04:11, ரஞ்சித் said:

துரோகத்தின் நாள் 1 : 3 ஆம் திகதி மார்ச் மாதம், 2004

என்னய்யா ரகுநாதன் அண்ண இந்த திகதிக்கு முன்ன நடந்தது எல்லாம் எந்த லிஸ்டில இருக்கு அதற்க்கு என்ன பெயரோ?? உள்வீட்டு விவகாரமா என்ன‌

கோபிக்காதீங்கோ சும்மா கேட்டன் 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 16, மார்ச் 2004

பாராளுமன்ற பதவியினை நோக்கிச் செல்லும் கருணா துணை ராணுவக்குழு

கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் புதிதாகத் தெரிவாகும் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்று கருணாவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கருணாவின் நெருங்கிய சகாவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தி கருத்துத் தெரிவிக்கும்போது, கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகும் ஒரு உறுப்பினருக்கு அமைச்சர்பதவியொன்றைத் தர புதிய அரசு விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கருணா குழு பாராளுமன்றப் பதவிகளை இலக்குவைத்து சந்திரிக்கா குமாரதுங்கவுடனும், மக்கள் விடுதலை முன்னணியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறியிருக்கிறது.

" தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்துத் தேர்தல் மேடைகளில்  பேசக்கூடாதென்னும் எமது நிபந்தனையினை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.மட்டக்களப்பின் அபிவிருத்திபற்றி மட்டுமே கவனமெடுக்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டார்கள். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கருணா குழுவுக்கும் கிழக்கு மாகாணத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து புதிய அரசாங்கத்தில் பதவிவகிக்க கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்கான சட்ட வேலைப்பாடுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கருணா எம்மிடம் தெரிவித்தார்".  


"மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்பதே எமது ஒரே குறிக்கோள் என்று இக்கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு உறுப்பினர் தெரிவித்தார்".

கொழும்பிலிருந்து வெளியாகும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவான பத்திரிக்கை ஒன்று தனது ஆசிரியர்த் தலையங்கத்தில், " சரணடைந்த எமது போலீஸாரில் 600 பேரைக் கொன்று அரந்தலாவையில் எமது துறவிகளைக் கொலைசெய்து. பள்ளிவாசல்களில் தொழுகையிலீடுபட்ட முஸ்லீம்களை நூற்றுக்கணக்கில் வெட்டிக் கொன்று, சிறுவர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்த ஒரு கொலைகாரனான கருணாவுடன் அரசியல் பேரம்பேசலில் சுதந்திரக் கட்சியோ, மக்கள் விடுதலை முன்னணியோ ஈடுபடுவது சரியானதா?" என்று கேள்வி கேட்டிருந்தது. , 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

நன்றி  ரகு  தொடருங்கள்

சிலருக்கு பலதும் மறந்துவிட்டது அல்லது  மறக்கடிக்கப்பார்க்கிறார்கள்

பழையதை கிளறி ஒன்றும் ஆகப்போவதில்லை நடப்பவற்றை நமக்கு சாதமாக பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்ல பார்க்கவேண்டும் இல்லையேன் நம்மை விட எதிரி முந்தி செல்வான் வென்றும் செல்வான் .நாம் சைக்கிளில் செல்கிறோம் நம்முடன் வந்தவன் தள்ளிவிட என்னை தள்ளிவிட்டுவிட்டான் என  அந்த இடத்தில் நின்று புலம்புவதில் அர்த்தம் இல்லை அவனை முந்த வேண்டும் அதை செய்யுங்கள் நீங்களும் அந்த இடத்தில் நின்று கொண்டு என்னை தள்ளிவிட்டான் தள்ளி  விழுத்தி விட்டான் என சொல்லி கொண்டே நிற்கிறது போல இருக்கு 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 17, மார்ச் 2004

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் தினக்குரல் பத்திரிக்கைக்குத் தடைவிதித்த கருணா குழு

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினக்குரல் நாளிதழை விநியோகிப்பதற்கு முற்றான தடையினை கருணா குழு விதித்திருக்கிறது. மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த இப்பத்திரிகைக் அலுவலகத்திற்குச் சென்ற கருணா குழு ஆயுத தாரிகள், அங்கிருந்த மேலாளரை அச்சுருத்தியதோடு, இனிமேல் பத்திரிக்கை விநியோகிக்கப்பட்டால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது..

அத்துடன், இப்பரிக்கையினை கிழக்கில் விநியோகிக்க உதவிவரும் நிறுவனங்களுக்கும் இக்குழுவினால் கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டன. 

சில தினங்களுக்கு முன்னால் மட்டக்களப்பின் பல இடங்களிலும் கருணா குழுவினரால் கைய்யகப்படுத்தப்பட்ட தினக்குரல் மற்றும் வீரகேசரி நாளிதழ்கள் மக்கள் முன் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன என்பது நினைவுகூறத் தக்கது.
 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பழையதை கிளறி ஒன்றும் ஆகப்போவதில்லை நடப்பவற்றை நமக்கு சாதமாக பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்ல பார்க்கவேண்டும் இல்லையேன் நம்மை விட எதிரி முந்தி செல்வான் வென்றும் செல்வான் .நாம் சைக்கிளில் செல்கிறோம் நம்முடன் வந்தவன் தள்ளிவிட என்னை தள்ளிவிட்டுவிட்டான் என  அந்த இடத்தில் நின்று புலம்புவதில் அர்த்தம் இல்லை அவனை முந்த வேண்டும் அதை செய்யுங்கள் நீங்களும் அந்த இடத்தில் நின்று கொண்டு என்னை தள்ளிவிட்டான் தள்ளி  விழுத்தி விட்டான் என சொல்லி கொண்டே நிற்கிறது போல இருக்கு 

பழையதை  கிளறுவதில் எனக்கும் உடன்பாடில்லை

ஆனால் தலைமை  தாங்கப்போறவர்கள் பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கணும்

உண்மையான  குதிரைகளிலேயே தமிழர்கள்  பயணிக்கணும்

பொய்க்குதிரைகள் என்றால் இனி  தமிழினம் தாங்காது???

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

பழையதை  கிளறுவதில் எனக்கும் உடன்பாடில்லை

ஆனால் தலைமை  தாங்கப்போறவர்கள் பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கணும்

உண்மையான  குதிரைகளிலேயே தமிழர்கள்  பயணிக்கணும்

பொய்க்குதிரைகள் என்றால் இனி  தமிழினம் தாங்காது???

 

குதிரை ஓட்டப்பந்தயத்தில் இருக்கும் கோடுகளில் தான் நிற்க வேண்டும்  வெளியில் இருந்து அந்த குதிரைதான் வெல்லும் இந்த குதிரைதான் வெல்லும் என்று சொல்வது போல் அல்ல‌

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

குதிரை ஓட்டப்பந்தயத்தில் இருக்கும் கோடுகளில் தான் நிற்க வேண்டும்  வெளியில் இருந்து அந்த குதிரைதான் வெல்லும் இந்த குதிரைதான் வெல்லும் என்று சொல்வது போல் அல்ல‌

 

தலைமை தாங்குவது  பற்றியே  குறிப்பிட்டேன்

குதிரைப்போட்டி  பற்றியல்ல

நீங்கள்  சொல்வது  போல்  போட்டியாயினும்

குதிரைகளின் பலம்  பலவீனம்  எல்லோரும்  அறிந்திருக்கணும்

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பழையதை கிளறி ஒன்றும் ஆகப்போவதில்லை நடப்பவற்றை நமக்கு சாதமாக பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்ல பார்க்கவேண்டும் இல்லையேன் நம்மை விட எதிரி முந்தி செல்வான் வென்றும் செல்வான்

பழையவற்றில் இருந்து பாடங்களைப் படிக்காதவரை அவற்றை நினைவூட்டத்தான் வேண்டும். 

கடந்த 16 வருடங்களில் தமிழ் மக்களுக்குக் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு தீர்வைப் பெறவோ, பொருளாதர முன்னேற்றத்தை உருவாக்கவோ, அல்லது அவலவாழ்வில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவோ ஒரு உருப்படியான திட்டத்தையேனும் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். ஆனால் இவைகளை வைத்து கட்சி அரசியல் செய்து தங்களை வளப்படுத்திக்கொள்வார்கள்.

தமிழ்த்தேசியத்திற்கு எதிர்நிலையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் அபிவிருத்தி அரசியலில் இலாபம் அடைவதும் சிங்கள அரசும், சிங்கள முதலாளிகளும், சிங்கள படையினரும்தான். தமிழர்களுக்கு தலையில் தொடர்ந்தும் மிளகாய் அரைக்கப்படும்.

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

 

தலைமை தாங்குவது  பற்றியே  குறிப்பிட்டேன்

குதிரைப்போட்டி  பற்றியல்ல

நீங்கள்  சொல்வது  போல்  போட்டியாயினும்

குதிரைகளின் பலம்  பலவீனம்  எல்லோரும்  அறிந்திருக்கணும்

அதற்காக பலமிலா  ஓடாத குதிரைகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது 

9 hours ago, கிருபன் said:

பழையவற்றில் இருந்து பாடங்களைப் படிக்காதவரை அவற்றை நினைவூட்டத்தான் வேண்டும். 

கடந்த 16 வருடங்களில் தமிழ் மக்களுக்குக் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு தீர்வைப் பெறவோ, பொருளாதர முன்னேற்றத்தை உருவாக்கவோ, அல்லது அவலவாழ்வில் இருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவோ ஒரு உருப்படியான திட்டத்தையேனும் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். ஆனால் இவைகளை வைத்து கட்சி அரசியல் செய்து தங்களை வளப்படுத்திக்கொள்வார்கள்.

தமிழ்த்தேசியத்திற்கு எதிர்நிலையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் அபிவிருத்தி அரசியலில் இலாபம் அடைவதும் சிங்கள அரசும், சிங்கள முதலாளிகளும், சிங்கள படையினரும்தான். தமிழர்களுக்கு தலையில் தொடர்ந்தும் மிளகாய் அரைக்கப்படும்.

ஏன் தமிழ் அரசியல் வாதிகள் இலாபமடையவில்லையா. சிங்களவர்களுக்கு சமனாக பயனடைகிறார்கள் தமிழ் அரசியல் வாதிகள்




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.