Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஐப்பசி 2010

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும்  ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த மறுக்கும் கிழக்கு மாகாண முதலைமைச்சர் பிள்ளையான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களாலும், முஸ்லீம்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் தமிழர்களின் நிலங்களைக் காப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும், ராணுவப் புலநாய்வுத்துறையால் இயக்கப்படும் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ச்சியாக மறுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் செல்வராசா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தொடர்ச்சியாக இதுபற்றி தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் முறைப்பாடுகளை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கும் பிள்ளையான், தமிழர்களது காணிகள் பறிபோவதை மெளனமாக அனுமதித்துக்கொண்டிருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.


தமிழருக்கெதிரான ஆட்கடத்தல்கள, கப்பம் கோருதல்கள், காணாமற்போதல்கள், படுகொலைகள என்று பாரிய வன்முறைகளை பிள்ளையானினதும் கருணாவினதும் கொலைக்குழுக்கள் தமிழ் மக்கள் மேல் ஏவியிருக்கும் நிலையில், தமிழர்களின் நிலம் இன்று சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், தமிழர்கள் எல்லாவிதத்திலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அரச சார்பற்ற சில தொண்டு நிறுவனங்களாலும், சில தன்னார்வ அமைப்புக்களின்  உதவியினாலும் அன்றி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியிருப்பது சாத்தியப்பட்டிருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

மிகக் கொடூரமான யுத்த அழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு வாழ் தமிழர்களுக்கான எந்த நிவாரணத்தையும் இந்த அரசாங்கம் இதுவரை வழங்க மறுத்துவருவதுடன், அவர்களிடம் மீதமாக எஞ்சியிருக்கும் நிலத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பது அநியாயம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=32799

வணக்கம், ரஞ்சித்...!

தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கின்றேன்!

எல்லாச் செய்திகளுமே...எமது காலத்தில் தான் நடந்திருப்பினும், தனித் தனியாக வாசித்த போது  அவற்றுக்கு உள்ளே இருந்த உட்  கருத்து தெளிவாகப் புரியவில்லை! இப்போது வாசிக்கும் போது நடந்த சம்பவங்கள் ஒரு கோவையாப் பொருந்தி வருகின்றன!

இந்த ஒரு காரணத்துக்காகவாவது நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்...!  தொடருங்கள்!

  • Like 1
  • Thanks 1
  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, புங்கையூரன் said:

வணக்கம், ரஞ்சித்...!

தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கின்றேன்!

எல்லாச் செய்திகளுமே...எமது காலத்தில் தான் நடந்திருப்பினும், தனித் தனியாக வாசித்த போது  அவற்றுக்கு உள்ளே இருந்த உட்  கருத்து தெளிவாகப் புரியவில்லை! இப்போது வாசிக்கும் போது நடந்த சம்பவங்கள் ஒரு கோவையாப் பொருந்தி வருகின்றன!

இந்த ஒரு காரணத்துக்காகவாவது நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்...!  தொடருங்கள்!

நன்றியண்ணா,

மறுபடியும் உங்களைக் கண்டதில சந்தோஷம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததுமுதல் இன்றுவரை எனக்கு ஊக்கம் தந்து எழுதத் தூண்டிய யாழ்க்கள உறவு மீராவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் ஆதரித்திருக்காவிட்டால் தொடர்ந்திருப்பேனோ என்றுகூட யோசித்திருக்கிறேன். 

நன்றி !

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, மார்கழி 2010

கிழக்குப் பல்கலைக்கழகக் கொலைகள்

2009 மாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வன்னியில் அகோரமாக இனக்கொலை நடந்துவரும் வேளையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பெண்கள் விடுதி மேற்பார்வையாளரும் வன்னியைச் சேர்ந்த இன்னும் இரு பல்கலைக் கழக மாணவிகளும் மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் கட்டளையின் கீழ் அவரது ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மட்டக்களப்புப் பத்திரிக்கையாளர்கள் இக்கொலையில் ஈடுபட்ட கருணா துணை ராணுவக் குழு உறுப்பினரை மேற்கோள்காட்டி தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை கருணா துணை ராணுவக் குழுவில் படுகொலைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட இனியபாரதி எனப்படும் ஆயுததாரியின் நெருங்கிய சகாவான பாண்டிருப்பினைப் பிறப்பிடமாகக்  கொண்ட 54 வயது நபர் சுருக்கிட்ட நிலையில் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகக் கல்முனைப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

கல்முனைப் பொலீஸ் நிலைய அதிகாரி சதாக் இதுபற்றிக் கூறுகையில் தூக்கிட்டுக் கொண்டவரின் பெயர் செல்லையா பிரேமதாசன் என்றும், இவர் மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட  ஆயுததாரி இனியபாரதியுடன் மிக நெருக்கமானவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை கிழக்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முன்னாள் துணை ராணுவக்குழு உறுப்பினர் கருணாவின் நேரடி கட்டளையின் பேரிலேயே வன்னியைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவிகள் உட்பட மேற்பார்வையாளரையும் தாம் கொன்றதாகக் கூறியிருக்கிறார். வன்னியில் நடந்துவந்த அகோரங்களுக்கு மத்தியில் கிழக்கில் கருணா மேற்கொண்ட படுகொலைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கை ராணுவத்திடமிருந்து கருணா துணைராணுவக் குழுவிற்கு வழங்கப்பட்ட "வன்னியைச் சேர்ந்தவர்களைக் கொல்லுங்கள்" என்னும் கட்டளைக்கு இணங்க கருணாவினால் வழிநடத்தப்பட்ட வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த துணைராணுவ ஆயுததாரி இப்பெண்கள் மூவரையும் கொன்றதாக அந்த முன்னாள் துணைப்படையுறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இதுபற்றித் தெரியவருவதாவது, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த மற்றும் கல்விகற்றுவந்த வன்னியையும், வடமாகாணத்தையும் சேர்ந்தவர்களைக் கொல்வதற்கான திட்டம் கருணாவினால் வாழைச்சேனையைச் சேர்ந்த ஆயுததாரி ஒருவரிடம் வழங்கப்பட்டது. இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையுடன் இயங்கும் இந்த ஆயுததாரி போலவே, இன்னும் வேறு ஆயுததாரிகள் கிழக்கில் வாழ்ந்துவந்த வன்னியைச் சார்ந்தவர்களைக் களையெடுக்கும் பணிக்கு கருணாவினால் அமர்த்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் கூறினார்.

சுதந்திரக் கட்சியில் கருணா இணைந்துகொண்டு, அவரது நெருங்கிய சகாக்கள் இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத்துறையுடன் நெருங்கிச் செயற்படத் தொடங்கிய காலத்திலேயே வன்னியைச் சேர்ந்த இரு மாணவிகள் உட்பட மூன்று பெண்கள்   கருணாவினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. ஆனால், கருணா குழு ஆயுததாரிகளின் இருப்பை மறைத்துவந்த அரசாங்கம் அவர்கள் தம்மிடமிருந்த ஆயுதங்களைக் கையளித்துவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துவிட்டதாகப் பிரச்சாரப்படுத்தி வந்தது நினைவிலிருக்கலாம்.


2009 ஆம் ஆண்டு மாசி மாதம் 23 ஆம் திகதி பல்கலைக் கழகத்தினுள் நுழைந்த கருணா கொலைக்குழு ஆயுததாரிகள் அங்கே பெண்கள் விடுதி மேற்பார்வையாளராக இருந்த சித்தாண்டியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய மாரிமுத்து பிரேமலதா என்பவரிடம் விடுதியில் இருக்கும் வன்னியைச் சேர்ந்த பெண்களை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த பிரேமலதா மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த கருணா கொலைக்குழுவினர் அவ்விடத்திலேயே அவரைக் கொன்றுபோட்டனர்.

இந்த கருணா கொலைக்குழு ஆயுததாரி, மருத்துவ அதிகாரிகளை மிரட்டி மரணத்திற்கான காரணம் தற்கொலை என்று அறிக்கை சமர்ப்பிக்கும்படி செய்ததாகவும், பெற்றோர் இறுதிவரை தமது மகள் கருணா குழுவினராலேயே கொல்லப்பட்டதாகக் கூறி, மருத்துவ அறிக்கையினை நிராகரித்துவிட்டதாகவும் அந்த முன்னாள் துணைராணுவக்குழு உறுப்பினர் கிழக்குப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கிழக்குப் பல்கலைக்கழகக் கொலைகள்.............

பல்கலைக்கழக பெண்கள் விடுதி மேற்பார்வையாளர் பிரேமலதா படுகொலை செய்யப்பட்டு சரியாக மூன்று நாட்களுக்குப் பின்னர், அதாவது மாசி மாதம் 26 ஆம் திகதி வன்னியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கலைப்பீட மாணவி நிருஷா தனபாலசிங்கம் இதே துணை ராணுவப் படையினரால் கொல்லப்பட்டார். அவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பல்கலைக் கழக நிர்வாகம் காட்ட முயன்றபோதும், அவர் கருணா குழுவினரால் விடுதி மேற்பார்வையாளர் கொல்லப்பட்டதைப் போன்றே கொல்லப்பட்டிருப்பதாக உடன் படித்த மாணவர்களும் பெற்றோர்களும் நம்புகின்றனர்.

இக்கொலைகள் நடந்து ஒருமாதம் முடிவடைந்த நிலையில், அதாவது 22 ஆம் திகதி பங்குனி அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டில் கல்விபயின்று வந்த சுதர்சனா ரவீந்திரனின் சடலம் முற்றாகக் கருக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

 இப்படுகொலைகள் கருணா குழுவால் நடத்தப்பட்ட வேளையில் பல்கலைக் கழகம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்விசார் நிறுவனங்களிலும் கருணா குழு தமக்குச் சார்பானவர்களை நியமித்து அவற்றைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்ததுடன், வடமாகாண அதிகாரிகளை பணிநீக்கம் செய்தும், சிலரைப் படுகொலை செய்தும் வந்தது நினைவிலிருக்கலாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, கார்த்திகை 2010

பிள்ளையான் கொலைக்குழு முக்கிய ஆயுததாரி பொலீஸாரினால் கைது 

கிழக்கு மாகாண முதலமைச்சரும் கொலைக்குழுத் தலைவனுமான பிள்ளையானின் நெருங்கிய சகா  அஜித் என்பவரை பொலீஸார் வாழைச்சேனையில் இன்று கைதுசெய்துள்ளனர். பிள்ளையான் கொலைக்குழுவின் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினரான வடிவேல் ரவிச்சந்திரன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மோட்டார் வான் ஒன்றைத் திருடியதற்காக அஜித் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. வடிவேல் என்கின்ற பிள்ளையான் கொலைக்குழுவின் உள்ளூர் அரசியல்வாதி ஏற்கனவே கொள்ளையில் ஈடுபட்டு நுவரெலியப் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அஜித் எனும் ஆயுததாரி கருணாவும் பிள்ளையானும் இணைந்து கொலைக்குழுவாக இயங்கியபொழுது அவர்களுக்காக வாழைச்சேனைப் பகுதியில் கடத்தல்கள், கொள்ளைகள், கப்பத்திற்காக ஆட்களைக் கடத்துதல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டவர் என்றும், அப்பகுதி மக்களால் மிகவும் பயத்துடன் பார்க்கப்பட்டு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

 
இக்காலப் பகுதியில் அஜித், வடிவேல் மற்றும் ஜெயந்தன் ஆகிய பிள்ளையான் கருணா கொலைக்குழு முக்கியஸ்த்தர்கள் முஸ்லீம் ஒருவரின் வாகனத்தைக் கடத்தி தமது கொள்ளைச் சம்பவங்களுக்கும், பணத்திற்காக ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகளுக்கும் பாவித்துவந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

கடத்தப்பட்ட இந்த வாகனத்தை இன்னொரு முஸ்லீமுக்கு இவர்கள் விற்க முற்பட்டபோதே இதுபற்றித் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வாழைச்சேனை பிரதேசசபை உதவி தலைவர் ரவிச்சந்திரன் வடிவேலை பொலிஸார் கைதுசெய்தபோதே அஜித் எனும் ஆயுததாரிபற்றிய தகவல்களும் வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, மார்கழி 2010

சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளைச் செய்யும்படி கருணாவையும், டக்கிளஸையும் ஊக்குவித்த கோத்தாபய ராஜபக்ஷ - விக்கிலீக்ஸ் 

2007 , மே 18 ஆம் திகதி கொழும்பிலிருக்கும் அமெரிக்கத் தூதரகம் வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ராணுவத் தளபதிகளுக்குப் பாதுகாப்புச் செயலாளர் அனுப்பியுள்ள செய்தியில், "உங்களின் வேலைகளை அவர்களைக் கொண்டு செய்விக்கிறேன், இதனால் சர்வதேசத்தில் நமக்குப் பிரச்சினையில்லை, நீங்கள் அவர்களைத் தடுக்க வேண்டாம்" என்று கேட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

உங்களின் வேலை என்பதன் மூலம் கோத்தாபய குறிப்பிட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், பணத்திற்காக ஆட்களைக் கடத்துதல், ஆட்கடத்தல்கள் மற்றும் தமிழ்ப்பெண்களைக் கடத்திச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் கருணாவையும் டக்கிளஸையும் பாவிப்பது என்று பொருள்படும் என்று விக்கிலீக்ஸ் மேலும் கூறுகிறது. 

விக்கிலீக்ஸ் : ரொபேர்ட் பிளேக் , 18 மே 2007

"கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் பல்வேறுபட்ட வன்முறைகளைப் பாவித்து பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகிறார். முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பெண்களை கடத்திச்சென்று ராணுவத்தின் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பாலியல் அடிமைகளாகப் பாவிக்கிறார் . உதவியும், பாதுகாப்பும் இன்றித் தவிக்கும் இப்பெண்கள் கருணாவை எதிர்க்க முடியாமல், அடிமைகளாகச் செயற்படுவதாகத் தெரிகிறது".

"2006 ஆம் ஆண்டும் துணைராணுவக் குழுக்களால் அரங்கேற்றப்பட்ட அனைத்து வன்முறைகள், சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் அரச ராணுவத்தின் கரங்கள மறைந்திருப்பது தெரிகிறது".

"இலங்கை அரசாங்கம் பின்வரும் காரணங்களுக்காக கருணாவையும், டக்கிளஸையும் பாவிக்கிறது. 

1. இலங்கை ராணுவத்திற்கெதிரான மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை  இக்குழுக்களே பொறுப்பெற்றுக்கொள்கின்றன.
2. இலங்கை அரசாங்கங்கள் துணை ராணுவக் குழுக்களுக்கான நிதிவழங்களைத் தொடர்ச்சியாக வழங்கியே வந்திருக்கின்றன.
3. கருணா துணைராணுவக் குழுவே அனைத்து துணைப்படைகளிலும் மிகவும் கொடூரமானது.
4. கருணா குழு கடத்தல்களிலும் படுகொலைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
5. கருணா தனது கொலைக் கலாசாரத்தை யாழ்ப்பாணத்திற்கும் விஸ்த்தரித்திருக்கிறார்.
6. கப்பத்திற்காக ஆட்களைக் கடத்துவது, இலங்கை ராணுவத்திற்காக பாலியல் தொழிலில் தமிழ் அபலைப் பெண்களையும் சிறுமிகளையும் ஈடுபடுத்துவது போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் அரச ராணுவத்தின் துணையுடன் ஈடுபட்டு வருகிறார். 
7. கருணா தனது துணைராணுவப் படையில் சிறுவர்களைப் பலவந்தமாகச் சேர்த்து வருகிறார்.
8. முழுமையான வன்முறைகளை ஏவிவிடும் கருணாவுக்கு தனது கட்சியில் துணைத் தலைவர் பதவியினைக் கொடுத்ததன் மூலம் அரசாங்கம் அவருக்கு அரசியல் அந்தஸ்த்தினை வழங்கியிருக்கிறது".

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=33235

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, மார்கழி 2010.........

"துணை ராணுவக்குழுக்களான கருணா குழு மற்றும் ஈ பி டி பி ஆகியவை புலிகளுக்கெதிரான யுத்தத்தில் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன. புலிகளுக்கு ஆதரவானவர்களைக் கடத்துதல், அரச ராணுவத்திற்குச் சார்பாக சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபடுதல், அரச ராணுவத்தினர் மீதான மனிதவுரிமை மீறல்களை அரசாங்கம் தம்மீது சுமத்துவதை ஏதுவாக்குதல் ஆகிய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் இவர்களைப் பாவித்து வருகிறது".

"இந்த இரு துணை ராணுவக் குழுக்களுக்கும் தமக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென்று மறுத்துவரும் அரசும் ராணுவமும் தமது மனிதவுரிமை மீறல்களை தாம் மெருகூட்டியிருப்பதாகவும், கைதுசெய்தல் மற்றும் தடுத்துவைத்தல் தொடர்பான செயன்முறைகளை மேம்படுத்தும் பயிற்சிகளையும் தாம் ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறது. மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்கென்று தனிமனித விசாரணைக் கமிஷன் ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறது".


"ஆனால், சர்வதேசத்தில் இலங்கை அரசின் மேம்படுத்தல் நடவடிக்கைகள்  திருப்தியளித்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தமிழ்ப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது, சிறுவர்களை ராணுவத்தில் சேர்ப்பது, சிறுவர்களைக் கடத்துவது ஆகிய மனிதவுரிமை மீறல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன".
 
"மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கருணா மற்றும் டக்கிளஸின் துணை ராணுவக்குழுக்களுக்கான பண உதவியினை நிறுத்தியிருக்கிறது. அவர்கள் தமக்குத் தேவையான பணத்தினை கடத்தல்கள் மூலமும், கப்பம் கோருதல் மூலமும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அனுமதியளித்திருக்கிறது. துணை ராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு வெளிப்படையாக இருந்தபோதிலும் கூட, அரசாங்கம் இந்த நிலைமையினை சீர்செய்யும் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட விரும்பவில்லையென்பது தெரிகிறது". 

"எமது தூதரகத்தில் பணியாற்றுகின்ற பல ஊழியர்கள் அரசாங்கத்தின் இந்த புதிய நண்பர்களுடனான நெருங்கிய நட்புத் தொடர்பாக அதிர்ச்சியும், தமது பாதுகாப்பு பற்றிய அச்சமும் கொண்டிருக்கின்றனர்". 

அமெரிக்க பிரஜையான கோத்தாபய பற்றி இச்செய்தி கூறும்போது, " கோத்தாபய கருணாவுக்கும் டக்ளசுக்கு தமிழ் வர்த்தகர்களிடமிருந்து தேவையானளவு பணத்தினைக் கப்பமாகப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கியிருக்கிறார். வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் தற்போது அதிகரித்துவரும் தமிழ் வர்த்தகர்களின் கடத்தல்கள், கப்பம் கோருதல்கள் மற்றும் படுகொலைகளின் பின்னால் கருணாவும் டக்கிளஸும், அவர்களின் பின்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் ஆசீரும் இருப்பது தெளிவாகிறது. கருணாவும் டக்கிளஸும் தமிழர்களாக இருந்தும்கூட அவர்களால் பணத்திற்காகக் கடத்தப்படுகின்ற, கொல்லப்படுகின்ற வர்த்தகர்கள் அனைவருமே தமிழர்கள் தான்" என்றும் கூறப்பட்டிருக்கிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, தை 2011

மட்டக்களப்பில் கருணா மற்றும் பிள்ளையான் துணை ராணுவக் கொலைக்குழுக்களுக்கெதிராக எதிர்ப்பினைத் தெரிவித்துவரும் மக்கள்

கிழக்கு மாகாண முதலமைச்சரும், ராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மற்றும் சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவரும் வடக்குக் கிழக்கில் ராணுவத்தின் வழிநடத்துதலில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் கருணாவுக்கெதிராகவும் மட்டக்களப்பில் மக்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்துள்ளனர்.

கடந்த செவ்வாயன்று இவ்வாறான எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்ட மக்கள் ஆரையம்பதி, மண்முனைப்பற்று  பிரதேசச் செயலாளர் மற்றும் கிராம சபை அதிகாரி ஆகியோரின்மேல் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்துக் குரல்கொடுத்தனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர், மக்கள் பிள்ளையானினதும், கருணாவினதும் வன்முறைகளை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்பதையே இப்போராட்டம் காட்டுவதாகக் கூறினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பிள்ளையான் கொலைக்குழுவின் முக்கியஸ்த்தருமான ப. பிரசாந்தன் என்னும் ஆயுததாரி மண்முனைப்பற்று பிரதேசச் செயலாளர் கே. தனபாலசிங்கம் என்பவரையும், கிராம சபை அலுவலர் சுரேஷ் என்பவரையும் இன்னும் அவருடன் பணியில் ஈடுபட்டு வரும் பல உள்ளூர் அதிகாரிகளையும் கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தனது அடிவருடிகளுடன் சேர்ந்து கடுமையாகத் தாக்கியிருந்தார்.

திரு தனபாலசிங்கம் தன்மீது பிரசாந்தனாலும் அவரது துணை ஆயுததாரிகளாலும் மேற்கொள்ள்ப்பட்ட மிலேச்ச்த்தனமான தாக்குதல்பற்றி வெளிப்படையாகவே புகாரளித்திருந்தார். 

மக்களின் போராட்டத்தினையடுத்து பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரி பிரசாந்தனும், அவரது துணைக்குழு ஆயுததாரிகளும் காத்தான்குடிப் பொலிசாரிடம் சரணடைய ஒத்துக்கொண்டுள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன.

ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சரும், கொலைக்குழுத் தலைவனுமான பிள்ளையானின் அழுத்தத்தின் பேரில் பிரசாந்தனை பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம், அவரது கூலிகள் 5 பேரை கண்துடைப்பிற்காக தொடர்ந்தும் மறித்து வைத்திருக்கிறது.

பிள்ளையான் கொலைக்குழுவிற்கெதிரான போராட்டம் ஒன்றினை சில மாதங்களுக்கு முன்னரும் வாழைச்சேனை மக்கள் முன்னெடுத்திருந்தார்கள் என்பது நினவிலிருக்கலாம். அப்பகுதியில் இயங்கிவந்த தனியார் கல்விச்சாலையான "சண் டியூசன்" நிலையத்தின் மீதான பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு எதிராக இது நடத்தப்பட்டிருந்தது.

கொழும்பின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவினர் இக்கொலைக் குழுக்களை தமிழர்களைத் தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்திருக்கவும், படுகொலைகளில் ஈடுபடவும் பயன்படுத்தி வருகின்றனர். இதேவேளை இக்குழுக்கள் தமது பயங்கரவாத அடக்குமுறைகளைப் பணம் சம்பாதிக்கும் வழியாகவும் பாவிக்கின்றனர் என்று மட்டக்களப்பு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, தை 2011

துணை ராணுவக் குழுத் தலைவன் கருணாவின் அரசியல் ஆடுகளமாக மாறிவரும் கிழக்குப் பல்கலைக் கழகம்

ராணுவத் துணைப்படையின் தலைவரும், சுதந்திரக் கட்சியின் துணைத்தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்குப் பல்கலைக் கழகத்தை தனது அரசியல் சித்துவிளையாட்டுக்களின் ஆடுகளமாகப் பாவித்துவருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் விசனம் தெரிவித்து வருகின்றன்ர். 

பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்திற்கும் கலைப்பீட மாணவர்களுக்கும் இடையே உருவான சர்ச்சை ஒன்றில் தனது துணைப்படையுறுப்பினர்கள் மற்றும்  பொலீஸாருடன் பல்கலைக்கழகத்தினுள் அழைப்பின்றி புகுந்த கருணா, தனது பிரித்தாளும் அரசியலை அங்கு முன்னெடுத்துவருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமது பரீட்சை முடிவுகள் 6 மாதங்கள் கடந்த நிலையிலும் நிர்வாகத்தினால் வெளியிடப்படாது இழுத்தடிக்கப்படுவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து வரும் மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளின்பொழுது, தன்னை பலவந்தமாக உள்ளே நுழைத்த கருணா தனது கபட அரசியல் நாடகத்தைப் பல்கலைக் கழகத்தினுள்ளும் புகுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

முதலாம் வருட, இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட பரீட்சைகளின் பெறுபேறுகளை 6 மாதங்கள் கடந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட மறுத்துவரும் நிலையில் மாணவர்கள் விரிவுரைகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வேளை, இப்பிரச்சினையில் உள்நுழைந்துள்ள துணை ராணுவக் கொலைக்குழுத் தலைவர் கருணா,  மாணவர் சம்மேளன உறுப்பினர்களை மிரட்டி வழிக்குக் கொண்டுவரும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், கருணாவின் அழுத்தத்தினை சட்டை செய்யாத மாணவர்கள் தமது போராட்டத்தில் தொடர்ந்ததையடுத்து, நிர்வாகம் பெறுபேறுகளை வெளியிட முன்வந்துள்ளதுடன், பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துவைத்து, விரிவுரைகளை வழமைபோல ஆரம்பித்திருக்கிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 01, மாசி 2011

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இனரீதியிலான ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் துணைராணுவக் கொலைக்குழுத் தலைவர்கள் கருணாவும் பிள்ளையானும் 

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அண்மையில் சிங்கள அதிகாரியொருவரை கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு உப பீடாதிபதிக்கும் மேலான அதிகாரம் கொண்ட ஒருவராக நியமித்திருக்கிறது. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றுவருவதாக சிங்கள அரசாங்கம் கூறும் "முறைகேடுகளைச்" சீர்செய்யவே சிங்கள அதிகாரியொருவர் நியமிக்கப்படுதல் அவசியமாகியதாக இதனை அது நியாயப்ப்டுத்தியிருக்கிறது. ஆனால், சிங்கள இனவாதத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்டு வரும் இன ஒடுக்கல் கொள்கையான " மகிந்த சிந்தனைய " எனும் திட்டமிட்ட இன ஒடுக்குமுறையின் ஒரு வடிவமே முற்றுமுழுதான தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்றிற்கு சர்வ வல்லமை பொறுந்திய சிங்களவர் ஒருவரை நியமித்திருப்பதன் நோக்கம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கருத்துத் தெரிவ்வித்திருக்கிறார்.


சிங்கள அதிகாரியின் நியமனத்திற்கு அரசுக்கு ஆதரவாக செயற்பட்ட துணைராணுவக் கொலைக்குழுக்களின் தலைவர்களான கருணா மற்றும் பிள்ளையான் போன்றோர் அரசின் இந்த இன ஒடுக்கல் கொள்கையினை நியாயப்ப்டுத்தியிருப்பதாகவும், இவர்களின் முழுதான சம்மதத்துடனேயே மகிந்த அரசாங்கம் கிழக்குப் பல்கலைக் கழகத்தினை சிங்கள் அதிகாரியொருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறர்.

தமிழர் தாயகத்தை இனவழிப்புப் போர் ஒன்றின் மூலம் முற்றாக ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் பேரினவாதம் மிகவும் திட்டமிட்ட வகையில்  தமிழர்களின்  கலாசார, கட்டுமாணச் சிதைவினை முன்னெடுத்துவருவது தெளிவாகிறது. இதேபோல், கிழக்கு மாகாணத்தில் கொலைக்குழுவின் அனுமதியோடு தமிழர்களின் நிலங்களைச் சிங்களவர்களுக்கு தாரைவார்த்துவரும் அரசாங்கம் தமிழர்களை, அவர்களின் சொந்த நிலத்திலேயே  ஏதிலிகளாக மாற்றிவருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.  

கடந்த வருடத்திலிருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரச நிர்வாகச் சேவையின் இடங்களுக்குப் பெரும்பாலான சிங்களவர்களையே, துணைராணுவக் குழுக்களின் முற்றான சம்மதத்தோடு, கீழ்மட்ட ஊழியர்கள் முதல் அதிகார மட்டம்வரை அரசாங்கம் பணியில் அமர்த்தி வருகின்றது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மாசி 2011

மட்டக்களப்பில் மூன்று கிறீஸ்த்தவப் பாதிரியார்களைக் கடத்திச்சென்ற பிள்ளையான் கொலைக்குழு


மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த  மூன்று கிறீஸ்த்தவப் பாதிரியார்களை அரச ராணுவப் புல்நாய்வுத்துறையினருக்காக பிள்ளையான் கொலைக்குழு கடத்திச் சென்றிருப்பதாகத் தெரியவருகிறது.

கடத்திச்செல்லப்பட்ட பாதிரியார்களின் உறவினர்களின் முறைப்பாட்டின்படி பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரி ரமேஷ் இந்த மூவரையும் முதலமைச்சர் பிள்ளையான் உங்களைப் பார்க்கவிரும்புகிறார் என்று அழைத்துச் சென்றதாகவும், அதன்பின்னர் இம்மூவரும் காணாமல்ப் போயுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

பாதிதிரியார்களான கணேசமூர்த்தி, சிவகுமார் யோனாத் மற்றும் சிவாநந்தன் ஆகிய மூவருமே இவ்வாறு பிள்ளையான் கொலைக்குழுவினரால் கடத்தப்படுக் காணாமற்போயிருக்கிறார்கள். கடைசியாக இவர்களை மட்டக்களப்பு பழைய பொலீஸ் நிலையப் பகுதியில் ரமேஷ் எனும் ஆயுததாரியினால் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, இந்த மூவரும் பிள்ளையான் கொலைக்குழுவினராக் கடத்தப்பட்டு , விசாரிக்கப்பட்ட பின்னர் ராணுவ புலநாய்வுத்துறைக்குக் கையளிக்கப்பட்டு கொழும்பின் அச்சமூட்டும்  விசாரணைபிரிவான நான்காம் மாடிக்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துகொண்டிருக்கும் இப்பாதிரியார்களைக் கடத்திச்சென்ற துணைராணுவக் கொலைக்குழுவும், அரச ராணுவ புலநாய்வுத்துறையும் கடுமையான விசாரணைகளின் பின்னர் அவர்கள் மூவரையும் சில நாட்களின் பின் விடுதலை செய்திருக்கின்றன்ர். 

தாம் கைதுசெய்யப்பட்டதன் காரணம் பற்றியோ, நடைபெற்ற விசாரணைகள் பற்றியோ வெளியில் பேசினால் கொல்லப்படுவீர்கள் என்கிற எச்சரிக்கையோடு இவர்கள் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 19, சித்திரை 2011

மட்டக்களப்பில் கொள்ளைகளில் ஈடுபட்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு

கிழக்குமாகாண முதலமைச்சரும், ராணுவ புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கொலைக்குழுத் தலைவனுமான பிள்ளையானின் சகாக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ள்னர்.

இம்மாதம் 13 ஆம் திகதி ஆரையம்பதி மேற்கு கட்டுமாவடி 
 எனும் காத்தான்குடி பொலீஸ்பிரிவிற்குற்பட்ட பகுதி வீடொன்றில் புகுந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் குறைந்தது பதினைந்து லட்சம் பெறுமதியான நகைகளையும் பணத்தையும் ஆயுதமுனையில் திருடிச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கொள்ளை பற்றிப் புகார் அளித்தால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டப்பட்டதையடுத்து, மோகன் எனப்படும் இவ்வீட்டின் உரிமையாளர் இதுபற்றிப் பொலீஸில் முறையிடுவதைத் தவிர்த்துவிட்டார்.

4 மாதங்களுக்கு முன்னர் மோகனின் சகோதரியின் புலியடியில் அமைந்திருக்கும் வீட்டினுள் ஆயுதங்களுடன் புகுந்த இதே குழுவினர் அவர்களை அச்சுருத்தி சுமார் 50 லட்சம் பெறுமதியான நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றது நினைவிலிருக்கலாம்.

வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்லது ஆதரவாளர்களின் வீடுகளைக் குறிவைத்தே பிள்ளையான் தனது சகாக்களை ஏவிவிட்டுக் கொள்ளைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக பிரசாந்தன் எனப்படும் ஆயுததாரியை கொள்ளைகளுக்குப் பொறுப்பாக அமர்த்தியுள்ள பிள்ளையான், இவரைக்கொண்டே இக்கொள்ளைகள் கச்சிதமாக அரங்கேற்றிவருவதாகத் தெரிகிறது.


அண்மையில் ஆரையம்பதி, மண்முனைப் பகுகளில் பிரதேசச் செயலாளர், கிராம சபை உத்தியோகத்தர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதற்காக பிள்ளையானின் கொலைக்குழு ஆயுததாரி பிரசாந்தனும் அவரது அடிவருடிகளும் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டபோதும் பிள்ளையானின் அழுத்தத்தினால் விடுவிக்கப்பட்டது தெரிந்ததே. பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டுள்ள பிராசாந்தன் தற்போது கடத்தல்கள், கொள்ளைகள் போன்றவற்றில் தடைகளின்றி மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 24, சித்திரை 2011

கிழக்குப் பல்கலைக் கழகத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கள காவல்த்துறையின் சோதனைச் சாவடி தொடர்ந்தும் இருக்கும் - அமைச்சர் திசாநாயக்கா

கிழக்குப் பல்கலைக் கழகத்தினுள் அண்மையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்களப் பொலீஸ் சாவடி குறித்து மகிந்த அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திசாநாயக்கா கருத்துத் தெரிவிக்கையில் எக்காரணம் கொண்டும் இந்தச் சாவடி அகற்றப்படாதென்றும், தேவையானால் ராணுவத்தையோ, கடற்படையினரையோ அல்லது விசேட அதிரடிப்படையினரையோ நாம் இங்கே பாதுகாப்புக் கடமைகளில் அமர்த்துவோம் என்று கூறியிருக்கிறார்.


அண்மையில் பல்கலைக் கழகத்தினுள் அமைக்கப்பட்ட காவல்த்துறைச் சாவடியின் பின்னரே பல்கலைக் கழகத்தினுள் கொலைகள் உட்பட வன்முறைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டிய மாணவர்கள், இந்தச் சாவடி உடனடியாக அகற்றப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையினையடுத்தே சிங்கள அரசாங்கத்தின் அமைச்சரான திசாநாயக்கா இங்கு வருகை தந்திருந்தார். காவல்த்துறைச் சாவடியினை எக்காரணம் கொண்டும் அகற்றமுடியாது என்று சூளுரைத்த அமைச்சர், இங்கே கல்விகற்கும் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்காகவே காவல்த்துறை அங்கு நிலைவைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இவ்விஜயத்தின்போது ராணுவத்தால் இயக்கப்படுகின்ற துணை ராணுவக் குழுத் தலைவர் கருணா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும் பல்கலைக்கழக உப வேந்தர் பிரேம்குமார் ஆகியோருடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதேவேளை பல்கலைக்கழகத்தில் நிலவும் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இச்சாவடியினை முற்றாக அகற்றுவதா அல்லது பல்கலைக் கழகத்திற்கு வெளியே இடம் மாற்றுவதா என்பது பற்றி மாணவர்களுடன் பேசித் தீர்மானிப்போம் என்று மாணவர் சம்மேளன தலைவர் டி. கிரிஷாந்த் கூறினார்.

2009 ஆண்டு, வன்னி இனவழிப்பு யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்தவேளையில், புதிதாக அமைக்கப்பட்ட பொலீஸ் சாவடியூடாகவே கருணா தூனை ராணுவக் குழுவினர் பல்கலைக் கழகத்தினுள் நுழைந்து கருணாவின் கட்டளைப்படி வன்னியைச் சேர்ந்த இரு மாணவிகளையும், சித்தாண்டியைச் சேர்ந்த விடுதி மேற்பார்வையாளரான பெண்ணையும் படுகொலை செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கருத்துப்படி, கருணாவின் கட்டளையின் பேரிலேயே தற்போதுள்ள பல்கலைக் கழக நிர்வாகம் கல்வி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கருணவை இலங்கை அரசும் ராணுவமுமே இதுதொடர்பாக இயக்குவதாகவும் விசனம் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழகம் கருணாவின் பிரதேசவாத அரசியல் ஆடுகளாமாக மாற்றப்பட்டுவிட்டதென்று கல்விசார் நடவடிக்கைகளில் அக்கறைகொண்ட ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 11, வைகச்சி 2011

தொடரும் துணைராணுவக் கூலிகளின் உள்வீட்டுப் படுகொலைகள், ராணுவ துணைப்படைத்தலைவர் கருணாவின் ஒருங்கிணைப்பாளர் மட்டக்களப்பில் சுட்டுக்கொலை - பிள்ளையான் கொலைக்குழு கைவரிசை

உந்துருளியில் வந்த இரு பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் 38 வயதுடைய ராசமாணிக்கம் மதியழகன் எனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளரும், தூனைராணுவக்குழுத் தலைவர்  கருணாவின் உதவியாளருமானவர் கடந்த புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டார். கல்லடித்தெருவில் அமைந்திருக்கும் அவரது வீட்டிற்கருகிலேயே இக்கொலை சுமார் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றுள்ளது. மதியழகன் ஆரம்பத்தில் ஈ பி டி பி கொலைக்குழுவில் செயற்பட்டு வந்தார் என்றும் பின்னர் இக்குழுவிலிருந்து விலகி நேரடியாக ராணுவப் புலநாய்வுத்துறையின் கடத்தல்கள், கொலைகள் என்பவற்றில் செயற்பட்டுவந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட மதியழகன் மட்டக்கள்ப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோயில் ஆலய நிர்வாகச் சபைத் தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதேவேளை, இவரே மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிந்த ராஜபக்ஷ அரசின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவந்தார்.

இவரின் கொலையினையடுத்து சிங்கள ராணுவமும் காவல்த்துறையும் இப்பகுதியினைச் சுற்றியுள்ள இடங்களில் தேடுதலினை மேற்கொண்டனர். இப்பகுதியிலிருந்து வெளியேறும் மற்றும் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. ஆனாலும், கொலையில் ஈடுபட்ட இருபிள்ளையான் கொலைப்படையினரையும் அவர்களால் கைதுசெய்ய முடியவில்லை.

ராணுவத்தின் ஏவல்ப்படைகளாக இம்மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு ஆகியவை தமக்கிடையேயான பகைமையினைத் தொடர்ந்தும் பேணிவருவதுடன், துணைராணுவக் குழுத் தலைவர் அரசின் செல்லப்பிள்ளையாக, மகிந்த அரசின்  உதவித்தலைவர் பதவியினை அலங்கரித்து வந்ததின்பின்னர் இவை படுகொலைகளாக வெளிப்படுகின்றன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 18, வைகாசி 2011

கிழக்கில் துணைராணுவக் குழுக்களிடையேயான மோதல்களை இலங்கை அரசாங்கமே ஊக்குவிக்கிறது

கிழக்கு மாகாண முதலமைச்சரும், கொலைக்குழுவொன்றினை நடத்திவருபவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வீட்டினை கொழும்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவொன்று சோதனையிட்டது. இச்சோதனை நடக்கும்பொழுது அவர் அங்கிருக்கவில்லையென்று தெரியவருகிறது. 

இச்சோதனையின் நோக்கம்பற்றித் தம்மக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லையென்று பிள்ளையானின் கொலைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். மகிந்த ராஜபக்ஷவின் ராணுவ இயந்திரத்தால் வழிநடத்தப்படும் இரு துணைராணுவக் குழுக்களான பிள்ளையான் மற்றும் கருணா குழுக்களின் உட்கொலைகளின் மையப்புள்ளியாக விளங்கும் வாவி வீதியில் அமைந்திருக்கும் பிள்ளையானின் அலுவலகமே இந்த திடீர் சோதனைக்கு உட்பட்டுள்ளது.

கிழக்கிலிருந்து வரும் தகவல்களின்படி இராணுவ புலநாய்வுத்துறையே இவ்விரு கொலைக்குழுக்களுக்குமிடையிலான பகைமையினை உருவாக்கி வளர்த்துவருவதாகத் தெரிகிறது.

பிள்ளையானின் ஆதரவாளர்கள் இத்திடீர் சோதனைபற்றிக் கூறுகையில் சோதனைகள் சாதாரண சட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டிருக்கவேண்டும், ஆனால் அரசின் அதிகாரத்திலுள்ள கருணாவின் விருப்பத்திற்கேற்ப ராணுவம் சோதனைகளில் ஈடுபடுவது தவறானது என்று கூறியிள்ளனர்.

தமிழர்கள் மீதான போரின்பொழுது ராஜபக்ஷ அரசு இவ்விரு குழுக்களுக்கும் ஆயுதங்களும், ஏனைய வசதிகளையும் வழங்கி தமிழரைக் கடத்திச் சென்று கொல்லுதல் முதல், கப்பம் கோருதல், பாலியல்த் தொழிலில் தமிழ்ப் பெண்களையும், சிறுமிகளையும் ஈடுபடுத்துதல் வரை பாரிய மனிதவுரிமை மீறல்களைப் புரிவதற்கு இவர்களைப் பாவித்தது.  இவ்விரு குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தப்போகிறோம் என்கிற போர்வையில் அரசாங்கம் செயற்படப்போவதாகக் காட்டிக்கொண்டது. ஆனால், இதே அரசாங்கம் 2008 மட்டக்களப்பு தேர்தல்களின் பொழுது இன்னொரு துணைப்படையான டக்கிளசின் கட்சிக்கெதிரான மோதல்களில் பிள்ளையான் கொலைக்குழுவிற்கு ஆயுதங்களும், அரச வாகனங்கள், வானூர்திகள் என்று பல்வேறான உதவிகளைச் செய்தது. 

வாழைச்சேனை ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டுவந்த ஈ பி டி பி ஆயுததாரியான காளியப்பன் ஞானசீலன் என்பவரை பிள்ளையான் கொலைக்குழு 2008 இல் கடத்திச்சென்று படுகொலை செய்திருந்தது. அதற்குப் பழிவாங்க ஆண்டான்குளம் செங்கலடியைச் சேர்ந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரி தேவதாஸ் சுரேஷ்குமாரை ஈ பி டி பி கொலைக்குழு கடத்திச்சென்று கொன்றுபோட்டது. ஈ பி டி பி அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்ட சுரேஷ்குமாரின் உடலை ராணுவமும், பிள்ளையான் கொலைப்படையும் தேடுதல் ஒன்றின்போது தோண்டியெடுத்திருந்தன. கிழக்கில் பிள்ளையானுக்கெதிராக டக்கிளசின் கட்சி மேலோங்குவதை விரும்பாத அரசாங்கம், டக்கிளசிற்கெதிரான பிள்ளையானின் நடவடிக்கைகளை ஊக்குவித்ததுடன், டக்கிளசின் கட்சிக்கான செயற்படும் வெளியையும் வெகுவாகக் குறைக்கத் தொடங்கியது.

ஆனால், இப்போது அரசால் வளர்க்கப்பட்ட பிள்ளையான் கொலைக்குழுவே அரசால் இலக்குவைக்கப்பட்டிருப்பதைத்தான் அண்மைய நிக்ழவுகள் காட்டுகின்றன. அண்மையில் கொல்லப்பட்ட மகிந்த மற்றும் கருணாவின் நெருங்கிய சகாவான ராசமாணிக்கம் மதியழகன் எனப்படும் ஆயுததாரியின் படுகொலையின் பிரதான சந்தேக நபரான பிள்ளையானின் சகா பிரதீப் மாஸ்ட்டர் எனப்படும் எட்வின் கிருஷ்ணராஜா ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருப்பது இதனையே காட்டுகிறது. பிள்ளையானின் கிழக்கு மாகாண அரசின் உறுப்பினரான ஆயுததாரி பிரதீப் மாஸ்ட்டர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலநாய்வுத்துறையினரால் கொழும்பிற்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மேலும், பிள்ளையானின் கொலைக்குழு முக்கியஸ்த்தரும், செங்கலடி செல்வம்  திரையரங்கு உரிமையாளர் மோகன் என்பவரது வீடும் ராணுவத்தால் சோதனையிடப்பட்டுள்ளது. 

மகிந்த மற்றும் கருணா ஆகியோரின் நெருங்கிய சகாவான, ஆயுததாரி மதியழகன் கொல்லப்பட்ட 72 மணித்தியாலங்களுக்குள் பிள்ளையான் கொலைக்குழு பிரமுகர்கள் ராணுவத்தாலும், கருணா கொலைக்குழுவாலும் இலக்குவைக்கப்பட்டு வருகின்றனர். களுவாஞ்சிக்குடியில் மதுபான நிலையம் ஒன்றினை நடத்திவரும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர் இளங்குமரன் என்பவரைக் கருணா கொலைக்குழு கடத்திச் சென்று சுட்டுக் கொன்றிருக்கிறது.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 08, ஆனி 2011

துணைராணுவக்குழுக்களால் சிங்களப் பகுதிகளில் தொழில் அடிமைகளாக விற்கப்படும் தமிழ்ச் சிறுவர்கள்

மட்டக்களப்பில் ராணுவத்தின் வழிகாட்டலில் இயங்கும் துணைராணுவக் குழுவொன்றினால் கடத்தப்படு பின்னர் தொழில் அடிமையாக சிங்களப் புதையல் தேடும் குழுவொன்றிற்கு தம்புள்ளைப் பகுதியில் விற்கப்பட்ட தனது 11 வயதுப் பேரனை தேடிவந்து, புதையல் தேடுபவர்களிடமிருந்து மீட்டுவந்த வயோதிபரை அந்தத் துணைராணுவக் குழு கொல்லப்போவதாக மிரட்டியுள்ளது. 

மட்டக்களப்பைச் சேர்ந்த வேல்முருகு சிவலிங்கம் என்பவரின் பேரனான அதிசயராஜா செளந்திரராஜா எனும் சிறுவனே இவ்வாறு துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு விற்கப்பட்டவர் ஆவார். தனது பேரன் புதையல் தேடும் குழுவொன்றினால் தம்புள்ளை பகுதியில் அடிமையாகப் பாவிக்கப்பட்டுவருவதை அறிந்துகொண்ட இந்த வயோதிபர், துணிச்சலாக புதையல் தோண்டும் குழுவினரைத் தேடிச்சென்று அவரை மீட்டுவந்திருக்கிறார்.

சித்தாண்டி மகாவித்தியாலயத்தில் கல்விபயின்றுவந்த அதிசயராஜ் தூனைராணுவக் குழு ஆயுததாரி ராமச்சந்திரன் மரியராஜ் என்பவரால் கடந்தமாதம் கடத்தப்பட்டிருந்தார். இவரைக் கடத்திச்சென்ற துணைராணுவக் குழு தம்புள்ளைப் பகுதியில் புதையல் தேடும் சிங்களக் குழுவொன்றிற்கு அடிமையாக விற்றிருக்கிறது. 

தம்மால் விற்கப்பட்ட சிறுவனை அவரது பேரன் மீட்டுவந்ததையறிந்துகொண்ட துணைராணுவக்குழு அவரையும், மீட்கப்பட்ட சிறுவனையும் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளதாக அவரது குடும்பம் ஏறாவூர்ப் பொலீசிலும், இலங்கை மனிதவுரிமைச் சபையிலும் முறைப்பாடு செய்திருக்கிறது.

இதே  துணைராணுவக் குழுவால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய பகுதிகளில் பெருமளவு சிறுவர்கள் கடத்தப்பட்டு சிங்களப் பகுதிகளில் அடிமைகளாக விற்கப்பட்டுவருவதாக பல புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 13, ஆடி 2011

மட்டக்களப்பில் வர்த்தகர்களிடமிருந்து பணம் பறிக்கும் துணைராணுவக் குழுவும் இலங்கை ராணுவமும்


கிழக்கு மாகாண முதலமைச்சரும், அரச ராணுவத்தால் இயக்கப்படும் கொலைக்குழுவின் தலைவனுமாகிய பிள்ளையானின் சகாக்களும், ராணுவமும் மட்டக்களப்பு நகரின் தெற்குப்பகுதியான படுவான்கரையிலிருந்து நகருக்கு வரும் வர்த்தகர்களிடம் கப்பமாகப் பணம் பறிப்பில் ஈடுபட்டுவருவதாக வர்த்தகர்கள் முறையிட்டுள்ளனர். அத்துடன் படுவான்கரையிலிருந்து மட்டக்களப்பு நகரிற்கு வர்த்தகர்களால் கொண்டுவரப்படும் பல உற்பத்திப்பொருட்களை துணைராணுவக்குழுவும் இலங்கை ராணுவமும் பறித்துச் செல்வதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

படுவான்கரையினைச் சேர்ந்த வர்த்தகர்கள் தினமும் பழங்கள், கருவாடு மற்றும் மீன், மரக்கறிகள், விறகு போன்ற பொருட்களை மட்டக்களப்பு நகருக்குக் கொண்டுவருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் பொருட்கள் வழியெங்கும் இருக்கும் சோதனைச் சாவடிகளான, பட்டிருப்புப் பாலம், மண்முனைத்துறை, அம்பிலாந்துறை , செங்கலடிக் கறுத்தப் பாலம், கிரான் பாலம், சந்திவெளி களப்பு ஊடாக காவத்த முனை ஆகிய இடங்களில் விசேட அதிரடிப் படையினராலும் பிள்ளையான் துணை ராணுவக் குழுவினராலும் வழிமறிக்கப்பட்டு பெருமளவு உற்பத்திப் பொருட்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. 
 

இதேபோல, மட்டக்களப்பின் கரையோரங்களில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் சமூகங்களிடமிருந்து அப்பகுதியெங்கும் நிலகொண்டிருக்கும் ராணுவம் மீன்களைப் பறித்துச் செல்வதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தக்காரர்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் தாம் அகழ்ந்துவரும் மண்ணை பாரவூர்திகளில் நகரூடாக எடுத்துச் செல்லும் போது வீதியில் நிற்கும் பொலீஸார் வாகனத்தை மறித்தும் கப்பம் கேட்பதாகவும், மறுக்கும் பட்சத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டதற்காகத் தண்டப் பணம் செலுத்தும்படி நிர்ப்பந்திப்பதாகவும் கூறுகின்றனர்.


இதேபோல் சீமேந்துக் கற்களை உற்பத்தி செய்து டிராக்டர்களில் எடுத்துச் செல்பவர்கள் மற்றும் சாதாரண வாகனங்களில் பயணிப்பவர்கள் என்று பலரும் பொலீசாரினாலும், துணைராணுவக் குழுவினராலும் மறிக்கப்பட்டு கப்பம் அறவிடப்படுவதாகவும், மறுப்போர் மீது நீதிமன்ற வழக்குகள் பதியப்படும் என்று மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் அரச அனுமதியுடன், வருடந்தோறும் சரியான வரிகட்டி தாம் நடத்தும் வியாபாரத்திற்கு "பாதுகாப்புப் பணம்" என்கிற போர்வையில் பெருமளவு பண கிழக்குமாகாண முதலமைச்சரும் கொலைக்குழுத் தலைவனுமாகிய பிள்ளையானுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் , தமது வியாபாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக பிள்ளையான் கோரும் "பாதுகாப்புப் பணம்" கொடுக்கப்பட்டுவருவதாகவும் கூறும் இவர்கள், பிள்ளையான் தம்மை மூன்று மாதத்திற்கு ஒரு முறை தனது அலுவலகத்தில் இதுபற்றிக் கலந்துரையாட அழைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

மேலும், தனியார் வியாபார நிலையங்களும் பிள்ளையானுக்கு பாதுகாப்புப் பணமாக பெருமளவு பணத்தினை செலுத்தும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமது உயிருக்கும் சொத்துக்களுக்கும் பிள்ளையானின் சகாக்களாலும், ராணுவத்தாலும் ஆபத்து ஏற்படலாம் என்கிற அச்சத்தில் பெரும்பாலானோர் அவர்கள் கோரும் பணத்தினைச் செலுத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது.


 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 17, ஆடி 2011

கிரானில் நடந்த கூட்டத்தில் பிள்ளையானின் சகாவைத் தாக்கிய கருணா

ராணுவத்தால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழுத் தலைவரும், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற துணையமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிரானில் நடந்த கூட்டமொன்றில் இன்னொரு கொலைக்குழுவான பிள்ளையானின் சகா ஒருவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

கடந்த வெள்ளியன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கிரானில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சராக தன்னை ஆக்கிக்கொண்ட பிள்ளையானும், அவரது நெருங்கிய சகாவான "வர்த்தகர்" பிரபாவும் வருகை தந்திருந்தனர். இதே கூட்டத்திற்கு தனது சகபாடிகளுடனும், விசேட அதிரடிப்படையினருடனும் வருகைதந்த இன்னொரு துணைராணுவக் குழுத் தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணா அங்கிருந்த பிள்ளையானின் சகாவான பிரபா மீது சரமாரியாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறார். கூட்டத்திற்கு வந்திருந்த உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் முன்னிலையில் இக்குழுத் தலைவர்கள் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

கைகலப்பின் பின்னர் கூட்டம் கலைக்கப்பட்டிருக்கிறது, இதன்பின்னர் பிள்ளையான் கொலைக்குழுவால் அப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றில் மதுபோதையில் கூட்டத்திற்கு வருகைதந்த கருணா அங்கிருந்த "வர்த்தகர்" பிரபாவைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அதேவேளை இக்கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் தெரிவிக்கும்போது பிரபாவின் கடைக்கு கருணாவும் அவரது பரிவாரங்களும் அடிக்கடி சென்று வருவதாகவும், உணவும் மதுபானமும் அவர்களுக்கு இலவசமாகவே பிரபாவால் வழங்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். 

இது இவ்வாறிருக்க, பிள்ளையானினால் வழங்கப்பட்ட பல மாகாணசபைப் பதவிகளுக்கான நியமனங்களை கொழும்பு அரசாங்கம் நிராகரித்திருப்பதாகத் தெரிகிறது. பிள்ளையானினால் அனுப்பப்பட்ட நியமனங்களை நிராகரித்திருக்கும் அரசு, கருணாவின் உறவினர்களையும், நண்பர்களையும் இப்பதவிகளுக்கு நியமிக்கத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.


 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 05, ஆவணி 2011

மட்டக்களப்பில் மக்களிடம் கருணா பறிக்கும் கப்பத்தில் ராணுவத்திற்கும் பங்கு 

துணைராணுவக் குழுத் தலைவரும், அரசாங்கத்தில் பிரதியமைச்சராகவும் வலம்வரும் கருணாவின் உத்தரவின்பேரில் அவரது சகாக்கள் மட்டக்களப்பிலிருந்து படுவான்கரைக்கு தொழில்நிமித்தம் செல்லும் மக்களிடம் கப்பமாக பெருமளவு பணத்தினை அறவிட்டுவருவதாகவும், இப்பணத்தில் ராணுவத்திற்கும் ஒரு பங்கு செல்வதால் அவர்களும் இப்பணப்பறிப்பிற்கு உதவிவருவதாகவும் மட்டக்களப்பு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.

கால்நடை உரிமையாளர்கள் , வர்த்தகர்கள், கமச்செய்கையில் ஈடுபடும் "போடியார்கள்" எனப்படும் விவசாயிகள், படுவான்கரையிலிருந்து பாலினை மட்டக்களப்பிற்குக் கொண்டுவரச் செல்லும் வர்த்தகர்கள் என்று அனைவருமே கருணாவின் சகாக்களால் இலக்குவைக்கப்பட்டு பணம் பறிக்கப்படுகிறார்கள்.  

இவ்வாறான பணப் பறிப்பிற்காக  கருணாவால் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவனான சிவப்பிரகாசம் சுப்ரமணியம் என்பவன் தரவைப் பகுதி முகாம் ஒன்றில் இருந்து இயங்கிவருவதாகவும், இராணுவப் புலநாய்வுத்துறையினரிடம் இவனுக்கிருக்கும் நெருக்கத்தினைப் பாவித்து இவன் பணப்பறிப்பில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் வசித்துவரும் முன்னாள்ப் புலிகளையும் அவர்களது குடும்பங்களையும் தொடர்ந்து அச்சுருத்திவரும் இவன், இப்பகுதி மக்களுக்குப் பெரும் தொல்லையாக மாறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மணியம் என்றழைக்கப்படும் இவன் கருணாவின் நெருங்கிய சகாவென்றும் சித்தாண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


குடும்பிமலை, அழியாஓடை, மியான்குளம் ஆகிய பகுதிகளுக்கு தமது உறவுகளைச் சந்திக்கவரும் மக்களை மணியமும் அவனது சகபாடிகளும் தமது முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பான முறைப்பாடுகளை காவல்த்துறை எடுக்க மறுத்தே வருகிறது.  மக்களிடமிருந்து பறிக்கப்படும் பணத்தில் ஒருபகுதியினை காவல்த்துறையும் பெற்றுவருவதால் இம்முறைப்பாடுகளை அவர்கள் கண்டுகொள்வதில்லையென்று மக்கள் தெரிவிக்கின்றனர். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 10, புரட்டாதி 2011

காணமலாக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் - உறவுகளிடம் அரச அதிகாரிகள் வற்புறுத்தல்

மட்டக்களப்பில் கருணா துணை ராணுவக் குழுவாலும், பிள்ளையான் கொலைக்குழுவாலும், அரச ராணுவ புலநாய்வுத்துறையாலும் கடத்தப்பட்டு இதுவரை காணாமலாக்கப்பட்டிருக்கும் மக்களை இறந்துவிட்டதாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அரச அதிகாரிகள் வற்புறுத்திவருவதாக பாதிக்கப்பட்ட உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழர் மீதான இனவழிப்புப் போரின்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கானோர் கருணா, பிள்ளையான் மற்றும் அரச ராணுவப் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு காணாமலாக்கப்பட்ட அனைவரும் தற்போது இறந்துவிட்டார்கள் என்று பிரகடனம் செய்து, அவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையில் மட்டக்களப்புப் பிரதேசச் செயலகம் இறங்கியிருக்கிறது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டுவரை இதுவரையில் குறைந்தது 300 பேர் காணாமல்ப் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடுகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். 

காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக செயலாற்றிவரும் மட்டக்களப்புத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா சுமார் 138 பேர்கள் தொடர்பாகச் செயற்பட்டு வருகிறார்.

கருணா, பிள்ளையான் ஆகிய துணை ராணுவக் குழுக்களாலும், ராணுவத்தாலும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்கப் பாராளுமன்றம் அனுமதியளித்திருக்கிறது. 

தற்போது வடக்கிலும் கிழக்கிலும் காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று ஏற்றுக்கொள்ளும் ப்ட்சத்தில் மரண சான்றிதாகளை அரசு வழங்க ஆரம்பித்திருக்கிறது. 

ஆனால், இவ்வாறு துணைராணுவக் குழுக்களாலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும்  கடத்தப்பட்டுக் காணமலாக்கப்பட்ட பலரின் உறவுகள் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை ஏற்க மறுத்துவருவதுடன், தமது உறவுகள் கடத்தப்பட்டபோது பொலீஸிலும், அதிகாரிகளிடமும் வழங்கப்பட்ட முறைப்பாடுகள் பற்றி இதுவரை எதுவித நடவடிக்கையினையும் எடுக்காததுபற்றி விசனப்பட்டிருப்பதுடன், இதுதொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் கேட்டுவருகின்றனர்.

கடத்தப்பட்ட தமது உறவுகள் இன்னமும் ஏதோவொரு ராணுவ முகாமிலோ அல்லது சிறையிலோ தடுத்துவைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்துவருகிறார்கள்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனின் அமர்வில் கலந்துகொண்ட பலர் தமது உறவுகள் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையாவது சொல்லச் சொல்லுங்கள் என்றுதான் கேட்டிருந்தார்கள். இதில் பலர் இந்த அமர்வின் இறுதியறிக்கை வரும்வரை நம்பிக்கையுடன் காத்திருப்பதாகத் தெரியவருகிறது.


பாதிக்கப்பட்ட உறவுகளில் பலர், காணமலாக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கையில் துரிதப்படும் அரசு, கொமிஷனின் அறிக்கை வரும்வரையாவது காத்திருந்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி: நாள் 8, ஐப்பசி 2011

கருணாவின் உதவியுடன் மட்டக்களப்பில் அழிக்கப்பட்டுவரும் மூலிகைக் காடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்குப் பிரதேசச் செயலகத்திற்கு உட்பட்ட கோரளங்கேணி முதல் பாலையடித் தோனை வரையான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் மூலிகைக் காட்டுப் பகுதி நகர்ப்புற அபிவிருத்தி எனும்பெயரில் கருணாவின் துணையுடன் அரசால் அழிக்கப்பட்டுவருவதாக அப்பிரதேச மக்களும், மூலிகைகளைப் பாவித்து வைத்தியத்தில் ஈடுபட்டுவரும் வைத்தியர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

அரிய மூலிகை வகைகளான காக்கணம், மருங்கை, கருவா, பிலாலி, பிலாசா போன்ற பாம்புக்கடி, நாய்க்கடி வைத்தியங்களுக்குப் பாவிக்கப்பட்டுவரும் மரங்களும் இவ்வாறு அழிக்கப்பட்டுவரும் காட்டுப்பகுதிக்குள் இருக்கின்றன என்று ஆயுர்வேத வைத்தியர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

இந்தக் காடழிப்புப்பற்றி பிரதேசச் செயலாளருக்கோ அல்லது கிராமசேவக அதிகாரிகளுக்கோ எதுவித அறிவித்தலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தகது.

தமிழரின் தாயகத்தை சிங்களமயமாக்கும் அரசாங்கத்தின் இன்னொரு சதியே இந்தக் காடழிப்பும், நகர்ப்புற அபிவிருத்தியும் என்று கூறுகின்ற மட்டக்களப்பு சமூக நல ஆர்வலர்கள், கொடிய இனவழிப்பு யுத்தத்தாலும், இயற்கை அழிவுகளாலும் தமது இருப்பிடங்களைவிட்டுத் துரத்தப்பட்ட தமிழ் மக்கள் இன்றுவரை தற்காலிக முகாம்களிலும், பிறர் வீடுகளிலும் தங்கிவரும் நிலையில், உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்திசெய்கிறோம் என்கிற பெயரில் அரசு தமிழரின் நிலத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது என்றும் விசனம் தெர்வித்தனர். மேலும், அரசாங்கத்தின் உல்லாசப் பயணத்துறையினை அபிவிருத்தி செய்யும் இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கும் பரவுமிடத்து தமிழர்கள் தமது தாயகத்தை ஒரு கட்டத்தில் நிரந்தரமாகவே இழக்கும் நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இப்பகுதிகளில் அரச வேலைகளில் இருக்கும் தமிழர்கள், தமது திணைக்களங்கள் ஊடாக நடக்கும் இந்த திட்டமிட்ட அரச மயப்படுத்தப்பட்ட தமிழரின் நில அபகரிப்பிற்கு எதிராகக் குரல் உயர்த்தினால் தமது வேலைகள் பறிபோகலாம் அல்லது வேறிடங்களுக்கு தாம் மாற்றப்படலாம் என்கிற அச்சத்தில் இதுபற்றிப் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

இதேவேளை பாசிக்குடா பகுதியில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் "மாலு மாலு" எனும் உல்லாச விடுதியில் வேலை செய்வதற்கென்று நூற்றுக்கணக்கான தென்பகுதிச் சிங்களவர்கள் இப்பகுதியில் வந்து குடியேறியுள்ளனர். இந்த உயர்தர உல்லாச விடுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது. மேலும் இந்த நட்சத்திர விடுதியில் கருணா குழுவின் உதவியோடு விபச்சாரம் உட்பட பல கலாசார சீரழிவுகளையும் சிங்கள அரசு நடத்திவருவதாகவும், இதில் கருணாவினால் பல தமிழ்ப்பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறான இன்னும் இரு நட்சத்திர விடுதிகள் கும்புறுமூலை ராணுவ முகாமிற்கு அருகிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த இரு நட்சத்திர விடுதிகளில் ஒன்று துணைராணுவக் குழு தலைவரும், அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்திக்குச் சொந்தமானது என்பதுடன் மற்றையது கருணாவின் சகோதரிக்குச் சொந்தமானதாகும்.

இதேவேளை கருணாவின் சகோதரி அரச வேலை எடுத்துத் தருவதாகக் கூறி அப்பிரதேச இளைஞர்களிடம் பெருந்தொகைப் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் என்றும், இதுவரை பணம்கொடுத்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் தெரியவருகிறது.

இப்பகுதியில் இருக்கும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை "கருணாவின் நிதியம்" எனும் அமைப்பில் கட்டாயப்படுத்தி இணைத்துவரும் கருணா அரசாங்கத்தில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி பணத்தினை அறவிட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, ஐப்பசி 2011

மட்டக்களப்பில் 40,000 ஏக்கர்களை சிங்களக் குடியேற்றமாகமாற்றும் அரசு - பிள்ளையான், கருணா துணைராணுவக் குழுக்கள் அமைதியாக ஆமோதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் அமைந்திருக்கின்ற நல்ல விளைச்சல் நிலங்களான கோரளைப்பற்று வடக்கு, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, செங்கலடி, ஏறவூர்ப்பற்று தெற்கு மற்றும் பட்டிப்பளை ஆகிய இடங்களில் தமிழரின் நிலங்களில் குறைந்தது 40,000 ஏக்கர்களைச் சிங்கள விவசாயிகளுக்காக அரசு தன்வசப்படுத்தியிருக்கிறது. மாவட்ட அரசின் அனுமதியின்றியும், மாகாணசபையின் அனுசரணையின்றியும், சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழரின் நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் தெரிவித்திருக்கிறார். கிழக்கு மாகாணசபை முதல்வர் பிள்ளையான் இந்தக் குடியேற்றம் குறித்து எதுவித நடவடிக்கையினையும் எடுக்காததால் இதுதொடர்பாக தான் அவருக்கு சட்டரீதியான முறைப்பாட்டினை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் ஒரு பிரதியொன்று துணைராணுவக் குழுத்தலைவரும் அரச பிரதியமைச்சருமான கருணாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சிவநேசதுரை சந்திரகாந்தனும், விநாயகமூர்த்தி முரளிதரனும் அரச ராணுவத்தால் இயக்கப்படும் இரு கொலைக்குழுக்களின் தலைவர்கள் என்பதும், அரச அதிகாரத்தில் இரு மட்டங்களில் இருக்கும் இவர்கள் சிங்கள அரசின் பிரதிநிதிகளாகவே செயற்பட்டுவருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

தான் பிள்ளையானிடம் இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர் இதுபற்றி அக்கறைகொள்ளாது இருப்பதாகவும், எல்லையோரத் தமிழ்க் கிராமங்கள் சிறிது சிறிதாக திட்டமிட்ட சிங்கள மயமாக்கலுக்குள் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருப்பதை இவர்கள் இருவரும் மெளனமாக ஆமோதித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, கார்த்திகை 2011

பிரபல துணைராணுவக் குழு கொலையாளியும், கருணாவின் சகாவுமான ஆயுததாரி இனியபாரதிக்கு தேசத்தின் கெளரவம் எனும் பட்டம் வழங்கிக் கெளரவித்த ஜனாதிபதி

DESAMANYA TMVP InIYAPARATHIக்கான பட முடிவுகள்

மகிந்த ராஜபக்ஷவின் இனவாத அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க்குற்றவாளியென்று பிரகடனப்படுத்தப்பட்டவனும், பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோயில், விநாயகபுரம் ஆகிய இடங்களில் பலநூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் படுகொலைகளைப் புரிந்தவனும், கருணாவின் மிக நெருங்கிய சகாவுமான இனியபாரதி எனப்படும் ஆயுததாரிக்கு "தேசமான்ய" என்றழைக்கப்படும் தேசத்தின் கெளரவம் எனும் விருதினை வழங்கிக் கெளரவித்திருக்கிறது.

INIYAPARATHIக்கான பட முடிவுகள்

இனியபாரதி எனும் இந்த  ஆயுததாரி கருணா குழுவெனும் துணைராணுவக் குழுவின் மிக முக்கியமானவன் என்பதும், கருணாவின் மிக நெருங்கிய சகாவென்பதும், மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்டத்திற்கான கட்சி ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வருபவன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மகிந்த ராஜபக்ஷவின் 66 ஆவது பிறந்த தினத்தினையொட்டி, இம்மாதம் 18 ஆம் திகதி இனியபாரதி எனும் துணைராணுவக் குழுக் கொலையாளிக்கு அம்பாறைமாவட்டம் திருக்கோயிலில் நடந்த நிகழ்வொன்றில் இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. கிழக்கில் மகிந்தவுக்காக இயங்கும் அமைப்பொன்று இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்ததுடன், திருக்கோயில் பொலீஸ் நிலைய அதிகாரியும் இந்நிகழ்வில் மகிந்த சார்பாகப் பங்கேற்றிருந்தார்.

http://2.bp.blogspot.com/-hiPrziFhrrM/U5hMM08fpFI/AAAAAAAA8BM/RY3x-0DkuwI/s1600/unnamed+(3).jpg

கடந்த பங்குனி மாதம் 26 அம் திகதி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் கொமிஷனிடம் அம்பாறை மாவட்டத்தில் காணாமல்ப்போன தமது உறவுகள் பற்றி முறையிட்டவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமது உறவுகளைக் கடத்திச்சென்றதுமுதல் படுகொலை செய்ததுவரை அனைத்துமே இனியபாரதியின் தலைமையின் கீழ்த்தான் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்திருந்தனர். கணவன்மார்கள், மனைவிமார்கள் பிள்ளைகள் என்று பலநூற்றுக்கணக்கானோர் கருணாவின் வழிநடத்துதலில் இனியபாரதியினால் கடத்தப்பட்டு, சித்திரவதைகளின்பின்னர் படுகொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்கள், உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் ஆகிய அனைத்திலுமே இனியபாரதி வாக்குமோசடி, கொலைமிரட்டல், வாக்காளர்களை அச்சுருத்தியது, தேர்தல் அதிகாரிகளை மிரட்டியது, வேட்பாளர்களைப் படுகொலை செய்தது போன்ற பல தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்முனைப்பகுதியில் இனியபாரதியால் நடத்தப்பட்ட நாசகார நடவடிக்கை ஒன்றிற்காக அந்நீதிமன்றம் அவனுக்கு 10 ஆண்டுகாலம் சிறைத்தண்டை விதித்திருந்தது நினவிருக்கலாம்.

தற்போது இந்த கருணா கொலைக்குழு ஆயுததாரி கொழும்பில் தனியார் பாடசாலையொன்றில் சட்டத்துறையில் பயின்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

பிற்குறிப்பு : 2019 ஆம் அண்டு மன்னாரில் கேரளாக் கஞ்சா எனும் போதவஸ்த்தின் 160 கிலோவை தனது சொகுசு வண்டியில் கடத்திவந்தவேளை இவனும் இவனது சகாக்கள் இருவரும் பொலீஸாரினால் கைதுசெய்யப்படனர், இவன் அப்போது கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்தவன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

625.0.560.320.310.730.053.800.670.160.90.jpg625.0.560.320.310.730.053.800.670.160.90.jpg625.0.560.320.310.730.053.800.670.160.90.jpg

Edited by ரஞ்சித்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, மார்கழி, 2011

மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கியமான எல்லைக் கிராமங்களில் ஒன்று சிங்கள மயமாகிறது - உபயம் கருணா

பதுளை - செங்கலடி ஏ 5 நெடுஞ்சாலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் முக்கிய தமிழ்க் கிராமம் ஒன்று சிங்கள மயமாகிறது. மங்கள ஆறு எனும் தூய தமிழ்க் கிராமத்திலிருந்து சுமார் 2500 ஏக்கர்கள் கொண்ட பகுதி பிரித்தெடுக்கப்பட்டு சிங்கள வர்த்தகர் ஒருவருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்று படுவான்கரை மக்கள் தெரிவிக்கின்றனர்.


மீள்குடியேற்றப் பிரதியமைச்சராக இருக்கும் துணைராணுவக் குழுத் தலைவர் கருணாவின் தலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குழு இப்பகுதியில் அண்மையில் நில அளவையில் ஈடுபட்டதுடன், எல்லைகளையும் நிர்ணயம் செய்திருக்கின்றனர். கடந்த ஒருவாரமாக இந்த நில அளவை, எல்லை நிர்ணய வேலைகள் நடந்துவருகின்றன.

தமிழர்களின் முக்கிய நிலப்பரப்பான "மங்கள ஆறு" எனும் இக்கிராமத்திற்கு ஆக்கிரமிப்புச் சிங்கள ராணுவ "மங்கள கம" எனும் சிங்களப் பெயரினைச் சூட்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் படுவான்கரை இருந்த பொழுது புலிகளின் முன்னணித் தாக்குதல் பிரிவான ஜெயந்தன் படையணி இக்கிராமத்தில் தனது தளங்களை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இன்று இந்நிலம் சிங்களவர்களால் தமிழ்த் துரோகிகள் துணையுடன் ஆக்கிரமிக்கப்படுவது கண்டு அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிழக்கின் தமிழர்களின் இன்னொரு கிராமமான பட்டிப்பளைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தெவுலாளக்குளம் எனும் கிராமம் சிங்களவர்களால் அரச துணையோடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த மேய்ச்சல் நிலமான இப்பகுதியிலிருந்து போரினால் தமிழர்கள் விரட்டப்பட்ட நிலையில், இப்பகுதியில் சிங்களவர்களை அரசு துணைராணுவக்குழுவினரின் உதவியோடு குடியேற்றி வருகிறது.

இப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடும் தமிழர்களை அடித்துத் துன்புறுத்தியும் கால்நடைகளைச் சுட்டுக்கொன்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சிங்களவர்கள் பலமுறை தமிழர்களின் மாடுகளை களவாடிச் செல்வதாகவும் கால்நடை வளர்ப்பவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34674


 

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.