Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, பங்குனி 2006

இலங்கை ராணுவத்துடன் இணைந்து கிராமங்களைச் சுற்றிவளைத்த கருணா துணைராணுவக்குழு

கருணா துணை ராணுவக்குழு உட்பட இன்னும் இரு துணை ராணுவக் குழுக்களைச் சேர்ந்த 50 பேரும் குறைந்தது 150 இலங்கை ராணுவத்தினரும் இணைந்து வாழைச்சேனைப்பகுதியில் சில கிராமங்களைச் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர். காலை 5 மணியளவில் இலங்கை ராணுவத்தினரின் கவச வாகனங்களில் வந்திறங்கிய கருணா குழுவினர் மக்களை பேச்சியம்மன் கோயிலில் ஒன்றுகூடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்ததுடன், துணைராணுவக்குழு முக்கியஸ்த்தரும் கருணாவின் நெருங்கிய சகாவுமான மார்க்கன் புலிகளுக்கு உதவினால் கொல்லப்படுவீர்கள் என்று பகிரங்கமாக மக்களை எச்சரித்தார். கருணா துணை ராணுவக்குழுவுடன் ஈ என் டி எல் எப் குழுவின் நால்வரும் ஈ பி டீ பீ குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவரும் இந்தச் சுற்றிவளைப்பில் ராணுவத்தின் சார்பாகக் இந்த வெளிப்படையான துணைராணுவக்குழுக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட சுற்றிவளைப்பில் கலந்துகொண்டிருந்தனர்.


கனரக ஆயுதம் தரித்த இலங்கை ராணுவத்தினர் கண்ணன் கிராமம், விநாயகபுரம், கண்ணகிபுரம் பேத்தாளை, புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் ரோந்துவந்ததுடன், ராணுவத்துணைக்குழுவினால் பேச்சியம்மண் கோயிலில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்திற்கும் பாதுகாப்பளித்தனர். கிராமங்களில் சுற்றிவளைத்து அழைத்துவரப்பட்ட சுமார் 250 முதல் 300 வரையான மக்களிடம்  கருணா குழுவின் உறுப்பினர்களான பிரதீபன், ஜெயந்தன், அஜித், ரஞ்சித் ஆகியோர் பேசுகையில் புலிகளுடனான உறவினை மக்கள் கைவிடவேண்டும் அல்லது தாக்கப்படுவீர்கள் என்று பகிரங்கமாக மிரட்டும் தொணியில் பேசினர்.


ஜோன்சன் ஜெயகாந்தன் எனப்படும் பிரதீபன் எனும் துணைராணுவக்குழு உறுப்பினர் புலிகளின் அரசியல் போராளி குவேனி மீதான கொலை முயற்சியின்போது சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் ராணுவ புலநாய்வுத்துறையின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டவரென்பதும், மார்க்கனின் வலதுகையாக விளங்கும் இவரே ராணுவத்தினருக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. புலிகளின் போராளியாக முன்னர் இருந்து, வாழைச்சேனையில்  சிறுமியொருத்தியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக இயக்கத்திலிருந்து 1992 இல் விரட்டப்பட்ட பிரதீபன், கருணா புலிகளிடமிருந்து பிரிந்ததன் பின்னர் அவருடன் வந்து இணைந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கருணாவுக்கு மக்கள் முற்றான ஆதரவினை வழங்கவேண்டும் என்று எச்சரித்த பிரதீபன், அப்படி ஆதரவு தரத் தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் துணைராணுவக்குழுவின் அரசியல் போராளி என்று தன்னை அறிமுகம் செய்த பிரதீபன், தம்முடன் சேர்ந்து இன்னும் 300 துணை ராணுவக் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனது பேச்சினை முடிக்கும் போது தனக்கும் தனது சகபாடிகளுக்கு உடனடியாக 150 உணவுப் பொட்டலங்களை அக்கிராம மக்கள் தயாரித்துத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


கண்ணன் கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு துணை ராணுவக் குழு உறுப்பினரான கார்த்திகைத் தம்பி ஜெயசீலனும் கருணா குழுவின் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளித்ததுடன் புலிகளுடனான தொடர்புகளைப் பேணவேண்டாம் என்றும்  மக்களை எச்சரித்தார்.

கருணா துணைராணுவக்குழுவின் மற்றொரு முக்கியஸ்த்தரான ரஞ்சித் மாஸ்ட்டர் என்பவர், தமிழகத்தில் தான் கைதுசெய்யப்பட்டுக் காவலில் இருந்ததாகவும், கருணாவின் விசேட வேண்டுகோளின்பின்னர் தமிழக அரசு தன்னை விடுவித்து கருணாவுடன் சேர்ந்து வேலைசெய்ய அனுப்பிவைத்ததாகவும் குறிப்பிட்டார். "உங்களுக்கு எந்தவிதமான சந்தேகங்கள் இருந்தாலும் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள், அங்கே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

வாழைச்சேனைப் பகுதியில் தமது அலுவலகங்கள் நிறுவப்படப்போவதாகவும் கூறிய ரஞ்சித் மாஸ்ட்டர், தாமும் தமது உறுப்பினர்களும் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

இவர்களுடன் வாழைச்சேனை துறைமுக ராணுவ முகாமில் இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத் துறையினருடன் வேலை செய்யும் ஈ பீ டி பீ உறுப்பினர் சிவாவும் பிரச்சன்னமாகியிருந்தார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, சித்திரை 2006

திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் துணைராணுவக்குழுவினரால் படுகொலை

v_vigneswaran.jpg

 

திருகோணமலை உயர்பாதுகாப்பு வலயத்தில், பொலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில், மக்கள் வங்கி வாயிலில் வைத்து திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவரான வன்னியசிங்கம் விக்னேஸ்வரன்  துணைராணுவக்குழுவான கருணா குழு ஆயுததாரியினால் சுட்டுக் கொல்லப்பட்டார். மட்டக்களப்பில் 2004 நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்தவேளை பிள்ளையான் மற்றும் சிந்துஜன் ஆகிய ராணுவ புலநாய்வுத்துறையினால் இயக்கப்படும் துணை ராணுவக்குழு உறுப்பினர்களால் அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு தேசியப் பட்டியலின் மூலம் வரவிருந்த விக்னேஸ்வரனே இவ்வாறு அதே துணைராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். 

ராணுவ உயர் பாதுகாப்பு வலயமான திருகோணமலை துறைமுகப்பகுதியில், இரு ராணுவ காப்பரண்களுக்கு இடையில் அமைந்திருந்த வங்கியின் முகப்பிலேயே இவரை கருணா துணை ராணுவக் குழுவினர் படுகொலை செய்துள்ளனர். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை திருகோணமலை நகர பஸ்தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பாரிய புத்தர் சிலைக்கெதிரான போராட்டம் உடபட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்ததென்பதும் குறிப்பிடத் தக்கது.
இதற்கு முன்னரும் படுகொலை முயற்சியொன்று இவர் மீது 2005 இல் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டபோதும், அவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, சித்திரை 2006

கருணாவுடன் இணைந்து இலங்கை ராணுவம் புலிகளை வெற்றிகொள்ளும் - பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச

WikiLeaks: 'Gota Uses My Name To Threatening people' - Upset Karuna On  Gota's 'Prostitute' Editor Remarks - Colombo Telegraph

டெயிலி மிரர் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினருடன் கலந்துரையாடிய இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், இலங்கை ராணுவம் கருணாவுடன் இணைந்து புலிகளை இலகுவாக வெற்றிகொள்ளும் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு இவர் கூறுவதற்கு வெறும் இருவாரங்களுக்கு முன்னர் இதே கண்காணிப்புக் குழுவினருடனான சந்திப்பொன்றில், "கருணா குழு என்று எந்த துணைராணுவக்குழுவும் எம்மிடம் இல்லை" என்று பல குற்றச்சாட்டுக்களை மறுத்துப் பேசியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

கண்காணிப்புக் குழுவினருடன் மிகவும் காரசாரமான விவாதங்களில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வரும் கோத்தாபய, புலிகளை விடுதலைப் போராளிகள் என்று கண்காணிப்புக் குழுவின் தலைவர் விழித்ததனை மிகவும் கடுமையாகச் சாடியிருந்தார்.


இப்பத்திரிக்கைச் செய்தியின்படி கோத்தாபயவின் "எம்முடன் கருணா குழு என்று ஒன்றில்லை" என்ற பேச்சிற்கும் இன்றைய "கருணாவுடன் சேர்ந்து புலிகளை ராணுவம் அழிக்கும்" என்கிற பேச்சிற்குமான தனது கடுமையான கண்டனத்தை கண்காணிப்புக்குழு முன்வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

இதுபற்றிப் பத்திரிக்கையாளர் யுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் வினவியபோது, கோத்தாவின் பேச்சுத்தொடர்பாக கருத்துவெளியிட மறுத்ததோடு, புலிகளை தாம் ஒருபோது விடுதலைப் போராளிகளாக மேற்கோள் காட்டவில்லை என்றும் மறுதலித்தார்.


"எம்மால் ராணுவத்திற்குச் சார்பாகவோ அல்லது புலிகளுக்குச் சார்பாகவோ கருத்து வெளியிட முடியாது, இருபக்கத்திலிருந்தும் வரும் தகவல்களைப் பரிமாறுகிறோமே தவிர. இதில் எமது நிலைப்பாட்டினை நாம் தெரிவிப்பதில்லை" என்றும் அவர் கூறினார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, கார்த்திகை  2006

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக் கொல்ல கருணாவுக்கு 50 மில்லியன்களை கோத்தாபய வழங்கினார் - பொலீஸ் விசாரணையாளர் தெரிவிப்பு

 

2016 இல் ஆரம்பிக்கப்பட்ட ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கின் பதிவொன்று.....

Gota Paid Karuna Faction 50 Million To Kill Raviraj - Colombo Telegraph

முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜைக் கொல்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கருணாவுக்கு 50 மில்லியன் ரூபாய்களை வழங்கினார் என்று முன்னாள் அரச புலநாய்வுத்துறையின் உத்தியோகஸ்த்தர் லியனராச்சி அபேரட்ன கொழும்பு மேலதிக நீதியரசர் திலின கமகேயிடம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கும்பொழுது, பாதுகாப்பு அமைச்சில் அதிகாரியாகவிருந்த வசந்த என்பவர் மூலமே இந்தப் பணம் கருணாவுக்கு வழங்கப்பட்டதென்றும் கூறினார். பிரதி பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்கவும் இந்தக் கொலைதொடர்பாக அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தார்.

வழக்குத் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில், இக்கொலைக்கான கண்ணால் கண்ட சாட்சியான அஞ்செலோ ரோய் என்பவரை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு அறிவுருத்தப்பட்டிருக்கிறது.

ரவிராஜ் கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் கருணா துணைராணுவக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகிந்த அரசின் கீழ் இயங்கும் கருணா குழுவே இக்கொலையில் ஈடுபட்டதாக கூட்டமைப்பு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தபோதிலும், அப்படியொரு குழு தம்முடன் இல்லையென்று அரசு மறுத்திருந்தது.

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி நாள் 20, சித்திரை 2006

கிழக்கில் துணைராணுவக்குழுவின் பிரச்சன்னத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த அவுஸ்த்திரேலிய எஸ் பி எஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி

sbs_kgroup_int_01.jpg

அவுஸ்த்திரேலிய விசேட ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் டேட்லயின் எனப்படும் பிரபல அரசியல் நிகழ்ச்சியில் மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கிவரும் கருணா துணை ராணுவக்குழு தொடர்பான விரிவான பதிவொன்றினை வெளியிட்டது. அதே காணொளியில், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி மகிந்தவின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஷவின் துணைராணுவக்குழுவின் பிரசன்னம் தொடர்பான முற்றான மறுதலிப்பினையும் அத்தொலைக்காட்சி வெளியிட்டது. இதே காலப்பகுதியில் கருணாவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை அழிப்போம் என்று இதே பாதுகாப்புச் செயலாளர் வெளிப்படையாகப் பேசியதையும் இப்பதிவு நினைவுகூர்ந்தது.

எஸ் பி எஸ் இன் செய்தியாளர் ஆரன் லெவிங் மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வெளிப்படையாக இயங்கிவரும் கருணா துணைராணுவக்குழுவின் முகாமிற்குச் சென்றிருந்தார். அங்கு சுமார் 30 ஆயுதம் தரித்த கருணா துணைராணுவக்குழுவினர் பயிற்சிகளில் ஈடுபடுவதை அவர் தனது ஒளிப்படத்தில் பதிவுசெய்தார். 

"அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளரோ அங்கே துணை ராணுவக்குழுவொன்று இயங்குவதையே நம்ப மறுக்கிறார். ஆனால், அவரது ராணுவ முகாமிற்கு மிக அருகிலேயே பாரிய பயிற்சிமுகாம் ஒன்றினை கருணா குழு எனப்படும் ராணுவப் புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் ஆயுதக்குழு நடத்திவருவதுடன், வெளிப்படையாகவே பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது".

sbs_kgroup_int_02.jpg

நான் அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இங்கே துணைராணுவக் குழுக்கள் செயற்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறினால், அக்குழுக்கள் எங்கே, எந்தப்பகுதியில், எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும், அதுபற்றி உங்களுக்கு அறியத் தந்தவர்கள் யாரென்பதையும் என்னிடம் கூறுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். ஏனென்றால், நாங்கள் இவ்வாறான எந்தக் குழுவும் எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவதை முற்றாகத் தடுத்து விட்டோம்" என்று என்னிடம் கூறினார்.

உங்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் துணைராணுவக்குழுக்கள் இயகுகின்றன என்பதை நம்புகிறீர்களா என்று நான் கேட்டபோது சினங்கொண்ட அவர், "இல்லை, நிச்சயமாக இல்லை, நிச்சயமாக " இல்லை என்று அடித்துக் கூறினார்.

நான் கருணா துணைராணுவக் குழுவினர்களை நான் நேரில்க் கண்டேனே என்று  கேட்டபோது நகைத்தவாறே அவர் பின்வருமாறு பதிலளித்தார்," புலிகள் கூட அப்படிச் செய்யலாம், உங்களை தங்களின் முகாமிற்கு அழைத்துச் சென்று கருணாவின் முகாம் என்றுகூட அவர்கள் காட்டலாம்" .

"இவர்கள் ராணுவப் புலநாய்வுத்துறையின் கீழ் இயங்குபவர்களா அல்லது கூலிப்படையா என்று தெரியவில்லை, ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரியவிடயமாக எனக்குப் படவில்லை. சில பிரபலங்களின் உதவியின்மூலம் அவர்களின் முகாமிற்கே என்னால் வெளிப்படையாகப் போகமுடிந்தது" என்று ஆரன் கூறினார்.

sbs_karunagroup_int_02.jpg

இந்த ஒளிப்படத்தில் துணைராணுவக்குழுவின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் என்று தன்னை அடையாலப்படுத்திக்கொண்ட பிரதீப் எனும் ஆயுததாரி, தமது குழு அரசியல், நிதி, ராணுவம் மற்றும் புலநாய்வுத்துறைகளைக் கொண்டிருப்பதாகவும், ஆனால் பெருமளவான உறுப்பினர்கள் ராணுவப்பிரிவிலேயே அங்கம் வகிப்பதாகவும் கூறினார். அவருடன் அக்காணொளியில் சுமார் 30 உறுப்பினர்கள் ஆர் பி ஜீ க்கள், ஏ கே 47 ரகத் துப்பாக்கிகள் சகிதம் அணிவகுத்து நிற்பது கட்டப்பட்டுகிறது.

வாகரை மற்றும் வெலிகந்தைப் பகுதிகளில் புலிகள் மீதான தாக்குதல்களை தாமே மேற்கொண்டுவருவதாக கூறிய பிரதீப், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினார்.

"என்னைப்பொறுத்தவரை இன்றுள்ள சமாதான நிலமைக்கு இந்த துணைராணுவக்குழு அல்லது கூலிப்படையின் பிரசன்னம் மிகவும் ஆபத்தானது, இப்பேச்சுவார்த்தைகளை குழப்பக்கூடிய மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. இவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நாசகார செயற்பாடுகள் ஏற்கனவே நலிவடைந்துபோயிருக்கும் சமாதானப் பேச்சுக்களை முற்றாக தடம்புரளவைக்கப் போகின்றன.  அரசாங்கமும் ராணுவம் என்னதான் சொன்னாலும், நாட்டில் வந்திறங்கிய சில மணிநேரங்களிலேயே கருணா துணை ராணுவக்குழுவின் பிரச்சன்னத்தையும், அரசுடனான அதன் நெருக்கத்தையும் என்னால் உடனடியாகவே புரிந்துகொள்ள முடிந்தது" என்றும் அவர் கூறினார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, சித்திரை 2006

அரச ராணுவப் புலநாய்வுத்துறையால் இயக்கப்படும் கருணா துணைராணுவக்குழுமுகாம் மீது தாக்குதல் - 18 கூலிகள் பலி!

மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையில் அமைந்திருக்கும் வெலிக்கந்தைப் பகுதியில் திபுலான, கசன்குளம் ஆகிய ஊர்களில் அமைந்திருந்த அரச ராணுவ புலநாய்வுத்துறையினரால் இயக்கப்படும் கருணா துணைராணுவக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது புலிகளின் விசேட படையணிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 18 கூலிப்படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். புலிகளின் தளபதி பானு தலைமையில் நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் கசன்குளம் துணைப்படை முகாம் முற்றாக அழித்து எரிக்கப்பட்டதுடன் பெருமளவு ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதலில் மேலும் 10 துணைப்படையினர் காயமடைந்ததோடு இன்னும் 5 பேர் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டனர். இவர்களால் கடத்திச்செல்லப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த வவுனியா வர்த்தகர் ஒருவரும் இதன்போது புலிகளால் விடுவிக்கப்பட்டார்.

Attack on paramilitary camps

இரண்டு பி கே எல் எம் ஜி துப்பாக்கிகள், ஒரு ஆர் பி ஜி, ஒரு 81 மி மீ மோட்டார், ஆறு ஏகே எல் எம் ஜி, 16 தானியங்கித் துப்பாக்கிகள், இரு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு ராணுவ தொலைத்தொடர்புச்சாதனம் ஆகியனவும் புலிகளால் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.

Attack on paramilitary camps

தாக்கப்பட்ட மூன்று முகாம்களில் ஒன்று கண்டக்காடு ராணுவ முகாமிற்கு மிக அருகிலும், இரண்டாவது கசன்குளம் பொலீஸ்நிலையத்திற்கு அருகிலும், மூன்றாவது இவ்விரு ராணுவ முகாம்களுக்கு மத்தியிலும் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன.

Attack on paramilitary camps

ராணுவத்தால் சூழப்பட்ட இப்பகுதியில் அதிகாலை 12:30 மணிக்கு ஆரம்பித்த புலிகளின் நடவடிக்கை சுமார் ஒருமணிநேரத்தில் பூர்த்தியடைந்தது. புலிகளின் தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்பொழுது அருகிலிருந்த ராணுவமுகாம்களிலிருந்து புலிகள்மீது கடுமையான ஷெல்வீச்சினை ராணுவம் நடத்தியது.

Attack on paramilitary camps

மனிதநேயப் பணியாளர்களால் பயன்படுத்தப்பட்டு துணைப்படையினரால் கடத்தப்பட்ட இரு வாகனங்களும் புலிகளால் அம்முகாமில் அடையாலம் காணப்பட்டன. இவ்வாகனங்களிலிருந்து கடத்திச்செல்லப்பட்டு இதுவரை காணாமல்ப் போன 7 தமிழர் புனர்வாவுக் கழக உறுப்பினர்களின் கதிபற்றி இதுவரை எந்தச் செய்திகளும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Attack on paramilitary camps

தாக்குதலின் பின்னர் இம்முகாம்கள் அமைந்திருந்த பகுதிக்கு விரைந்த சிங்கள ராணுவம் காயப்பட்டுக் கிடந்த துணைப்படையினரை பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றது. அங்கிருந்து ராணுவ உலங்குவானூர்திகளில் துணைப்படையினர் கொழும்பு வைத்தியசாலையொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Attack on paramilitary camps
சுமார் 10 நாட்களுக்கு முன்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் துணைப்படையினர் பகிரங்கமாக முகாம் அமைத்து நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்கிற செய்தி அவுஸ்த்திரேலிய தொலைக்காட்சியொன்றில் வெளிவந்திருந்த வேளையில் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துணைப்படைமுகாம்கள் இல்லயென்று ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் மீண்டும் மீண்டும் கூறிவந்தநிலையில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றில், ராணுவ முகாம்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த துணைப்படைமுகாம்கள் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டிருப்பதானது அரசின் முகத்திரையினைக் கிழித்திருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, வைகாசி 2006

கருணா துணைப்படைக் குழுவினரை மீட்கவந்த சிங்கள ராணுவத்திற்கு இழப்பு

வெலிக்கந்தைப் பகுதியில் அமைந்திருந்த கருணா துணைப்படைக் குழு முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் படையணிகள் கூறிய தகவல்களின்படி முகாம் தாக்குதல்களின்பொழுது கருணா குழுவினரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ராணுவப்பிரிவொன்றும் இழப்புக்களை சந்தித்ததாகக் கூறியுள்ளனர்.

கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சடலங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தகவல்களின்படி கப்டன் தரத்திலுள்ள, குருநாகலை கல்வத்தைப் பகுதியைச் சேர்ந்த லொயிட் பர்ணாந்து மற்றும் உபுல், ஜெயக்கொடி, திசானாயக்க, அனுர ஆகியோர் அடங்கலாக ஐவர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ராணுவ அணியினைச் சேர்ந்த ஏனையோர் காயப்பட்ட இன்னும் நான்கு வீரர்களை இழுத்துக்கொண்டு ஓடியதைப் புலிகள் அவதானித்துள்ளனர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, வைகாசி 2006

கருணா துணைப்படைக் குழுவினருடன் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தொடர்பிருக்கிறது - அரச சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த கோஹோண தெரிவிப்பு

Expedite China FTA, avoid India FTA mistakes: Kohona - The Morning - Sri  Lanka News

துணைப்படை குழுவினருடன் சேர்ந்து இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத் தீவுப்பகுதிகள், குடாநாடு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் புரிந்துவரும் படுகொலைகள், கடத்தல்கள் தொடர்பாக அரசுமீது கடுமையான விமர்சனங்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசின் சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த கோஹோண அவர்கள் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளும், வீரர்களும் கருணா துணைப்படை மற்றும் ஈ பி டி பி குழுவினருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பது சாத்தியம் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.

அதிகரித்துவரும் பொதுமக்கள் மீதான படுகொலைகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் என்பவற்றை ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளே திட்டமிட்டு, நடத்திவருவதுடன், தமிழர்களை உளவியல் ரீதியான போர் ஒன்றிற்குள் தள்ளி நிரந்தர அச்சநிலையினை தோற்றுவித்திருக்கிறார்கள்.

இலங்கை அரசுக்கும் துணைப்படைக் குழுக்களுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென்று இதுவரை மறுத்துவந்த சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த, முதன்முறையாக ரொயிட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இக்குழுகளுக்கும் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.


"கடந்த 3 வருடகால சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் ராணுவத்தினருக்கும் புலிகளின் கருணா உட்பட ஏனைய சிலருக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், அவையே இன்றும் தொடர்கின்றன என்று நான் நினைக்கிறேன். கருணா மற்றும் அவரின் ஆட்களுடனான தொடர்பினை விட்டுவிடுங்கள் என்று எமது ராணுவ வீரர்களை அரசினால் கோருவது இயலாத விடயம். மனிதர்கள் நண்பர்களாக இருப்பதும், அவர்களின் நட்பு தொடர்வதும் இயற்கையானதே. சமாதான காலத்தில் இரு தரப்பு வீரர்களும் ஒருவரது வீட்டிற்கு மற்றையவர் சென்றுவருவதுகூட நடந்தன. ஆகவே, இது இயல்பானதுதான்" என்று கூறினார்". 

துணைப்படைக் குழுவிற்கும் அரச ராணுவத்திற்குமிடையிலான தொடர்புகளை ஒரு அரச அதிகாரி வெளிப்படையாகக் கூறுவது இதுவே முதன்முறையாகும்.

சமாதான ஒப்பந்தத்தின் சரத்து 1.8 இன் படி, அரச ராணுவம் தன்னுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களின் ஆயுதங்களைக் களையவேண்டும் என்கிற கடப்பாடு இருக்கும்பொழுது அரச ராணுவமே அவர்களுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும், முகாம்களையும், கூடவே பாதுகாப்பினையும் வழங்கிவருவதாக புலிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

துணைப்படைக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதாக அரசு ஒப்புக்கொண்டிருந்தபோதும்கூட, மூன்று மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே துணைப்படைக் குழுக்களின் மூலம் அரச ராணுவமும் புலநாய்வுத்துறையும் செய்துவரும் படுகொலைகள் தமிழர் தாயகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட அரச புலநாய்வுத்துறையினரின் துணைப்படையான கருணா குழுவின் நாசகார நடவடிக்கைகளைத் தொடர்ந்து வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் துணைப்படையினரின் வன்முறைகள் பரவியிருக்கின்றன.

வெலிக்கந்தைப் பகுதியில் துணைப்பட முகாம்கள் மீதான தாக்குதல்களில் ஒரு அதிகாரி உட்பட ஐந்து இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டது துணைப்படையினருக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பினை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.

அரசுடன் இணைந்து புலிகளுக்கு எதிராகச் செயற்படுவதென்று கருணா எடுத்த முடிவினையடுத்து புலிகளின் விசேட அணிகள் நடத்திய ராணுவ நடவடிக்கையில் கருணாவின் கிளர்ச்சி முழுமையாக அடக்கப்பட்டு விட்டாலும் கூட, அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் போராளிகள் மீதான தாக்குதல்களும், புலிகளின் ஆதரவாளர்கள், சாதாரண பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் கருணா துணைப்படையினரைக் கொண்டு அரச புலநாய்வுத்துறை நடத்தி வருகிறது.

கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான  சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இவ்வாறான  திட்டமிட்ட படுகொலைகள் தற்பொழுது சாதாரண பொதுமக்கள் மீதும் திரும்பியிருக்கின்றன.

 

தோல்வியடைந்த தனது கிளர்ச்சியினையடுத்து தனது சகபாடிகளுடன் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பியோடிய கருணாவை பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துச் சென்ற ராணுவம் பாதுகாப்பான வீடொன்றில் தங்கவைத்திருந்தது. இவ்வாறான கருணா குழுவின் பாதுகாப்பான வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் எட்டு துணைப்படையினரும், அவர்களை வழிநடத்திய ராணுவப் புலநாய்வுத்துறை அதிகாரியும் கொல்லப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

TamilNet: 20.11.02 'Col. Karuna's approach very positive' -Maj. Gen.  Kottegoda

கருணா சமாதான காலத்திலேயே ராணுவத்தின் புலநாய்வுத்துறைக்குப் பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் சாந்த கொட்டேகொடையுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாகவும் , அவர் லெப்டினட் ஜெனரலாகப் பதவியேற்றதன் பின்னரே கருணா துணைப்படையினரைக் கொண்டு தமிழர்கள் மீதான படுகொலைகளை அரசு தீவிரமாக நடத்தத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, வைகாசி 2006

திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்க முயன்ற கருணா துணைப்படைமீது தாக்குதல், மூவர் பலி, இருவர் கைது

22 Division in Trincomalee is 15 Years Old | Sri Lanka Army

திருகோணமலை மாவட்டத்தில் பட்டியடி ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டுவரும் கருணா துணைப்படைக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற வேளை புலிகளின் எதிர்த்தாகுதலில் சிக்கி மூன்று துணைப்படையினர் உயிரிழக்க இன்னும் இருவர் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருகின்றனர்.

புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இரு துணைப்படையினரை மீட்கவந்த ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே பல நிமிடங்கள் துப்பாக்கிச் சமர் நீடித்ததாகவும், முடிவில் கொல்லப்பட்ட கருணா துணைப்படையினரின் உடல்களை இழுத்துக்கொண்டு அப்பகுதியினை விட்டு ராணுவம் பின்வாங்கிச் சென்றதாகவும் புலிகளின் சம்பூர் பகுதி அரசியல் பணிமனை தெரிவித்திருக்கிறது.

புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்ட இரு கருணா துணைப்படையினரின் தகவல்களின்படி பட்டியடி முகாமில் பெருமளவு கருணா துணைப்படியினரை ராணுவம் பாதுகாத்து வருவதாகவும் தெரியவருகிறது.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஆனி 2006

மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியரைச் சுட்டுக்கொன்ற கருணா துணைப்படைக் குழு

Batticaloa has first coronavirus patient as island-wide numbers climb |  Tamil Guardian

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு ஊழியராகக் கடமை செய்துவந்த தமிழரை கடந்த செவ்வாய் மாலை 4 மணியளவில் வைத்தியசாலையில் வாயிலில் வைத்து உந்துருளியில் வந்த கருணா துணைப்படை சுட்டுக் கொன்றது.

ஆரையம்பதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவலிங்கம் ரஜனிகாந்த் எனும் பாதுகாப்பு ஊழியரே கருணா குழுவால் கொல்லப்பட்டவர் ஆவார். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையின் முன்னாலிருக்கும் தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு வைத்தியசாலை வாயிலுக்கு மீண்டும் அவர் வந்தபோதே உந்துருளியில் வந்த கருணா துணைப்படை உறுப்பினர் அருகில் வந்து சுட்டுக் கொன்றார்.

திபுலானை வெலிக்கந்தைப் பகுதியில், அமைந்திருந்த கருணா துணைப்படை முகாம்கள் மீதான புலிகளின் தாக்குதல்களில் காயப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது சகாக்களைப் பாதுகாக்குமாறும், இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் என்று இத்துணைப்படைக் குழு அச்சுருத்தியிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் இத்துணைப்படை உறுப்பினர்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதற்குப் பழிவாங்கலாகவே இந்த அப்பாவிப் பாதுகாப்பு ஊழியரை அரச புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கருணா துணைப்படைக் கொன்று வஞ்சம் தீர்த்திருக்கின்றது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, ஆனி 2006

மட்டக்களப்பில் 125 சிறார்களைக் கடத்திச் சென்ற கருணா குழு துணைப்படை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் முதல் கருணா துணைப்படையும் ராணுவமும் சேர்ந்து நடத்திவரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் குறைந்தது 125 சிறார்கள் கருணா குழுவினரால் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட பல சிறார்கள் கருணா குழுவினரிடம் கையளிக்கப்பட்டும், கருணா குழு வீடுகளுக்குள் நுழைந்தும் சிறுவர்களை அடித்து இழுத்துச் சென்றிருக்கிறது. வாழைச்சேனைப் பகுதியில் இருந்து 75 சிறார்களும், கிரான் பகுதியிலிருந்து 27 சிறார்களும், சந்திவெளியில் இருந்து 23 சிறார்களும் இவ்வாறு கருணா துணைப்படையினரால் பலவந்தமாகப் பயிற்சிக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

இவ்வாறு பலவந்தமாக கருணா குழ்வினரால் இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள் துணைப்படையில் இணைக்கப்படுவதற்காக மட்டக்களப்பு - பொலொன்னறுவை மாவட்ட எல்லையில் அமைந்திருக்கு அரச புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலில் இயங்கும் கருணா துணைப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 75 பேர் பேத்தாளை, விநாயகபுரம், கண்ணகிபுரம், பட்டியடிச்சேனை மற்றும் கல்குடா பகுதிகளிலிருந்தும் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

இப்பகுதிகளில் வாழ்ந்துவந்த பெருமளவு இளைஞர்கள் இச்சுற்றிவளைப்பு நடைபெறும் வேளையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பியோடி ஒளிந்துகொண்டதாகவும் ஊர்மக்களால் தெரிவிக்கப்படுகிறது. 

இப்பகுதிகளில் இலக்கத்தகடற்ற வெள்ளை நிற வான்களில் வலம் வந்த கருணா குழு உறுப்பினர்களால் 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்புவரை கல்விகற்கும் மாணவர்களே இலக்குவைத்துக் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

14 வயதிற்கும் 19 வயதிற்கு இடைப்பட்ட 18 சிறார்கள் செவ்வாய்க்கிழமை காலையில் பாம் கொலணி, மாங்கேணி ஆகிய பகுதிகளில் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

தமது பிள்ளைகள் கருணா குழுவினராலும் ராணுவத்தாலும் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டது குறித்து பெற்றோர்கள் வாழைச்சேனை பொலீஸில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

மாங்கேணி ராணுவ முகாமிலிருந்து செயற்பட்டுவரும் கருணா துணைப்படையினர், கிரிமிச்சை மற்றும் காயங்கேணிப் பகுதிகளுக்குள்ளால் பயணிக்கும் மக்களை அச்சுருத்தி விசாரிப்பதாகவும், ராணுவத்தினரின் உதவியுடன் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்து தமது முகாம்களுக்கு பயிற்சிக்கு இழுத்துச் செல்வதாகவும் மக்கள் விசனப்படுகின்றனர். 

கனர ஆயுதம் தரித்த கருணா துணைப்படையினரும் ராணுவமும் இப்பகுதியில் தொடர்ச்சியான அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாகவும், பிரதேசத்தில் அச்சநிலையொன்று உருவாகியிருப்பதாகவும், மக்கள் பாதுகாப்புத் தேடி அயலில் உள்ள காடுகளுக்குள் தஞ்சம் அடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, ஆனி 2006

கப்பம்கேட்டு முஸ்லீம் பொதுமக்களைக் கடத்திச்சென்ற கருணா துணை ராணுவக் குழு

thampalai.jpg

கடந்த சனிக்கிழமை காலை பொலொன்னறுவை மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் முஸ்லீம் கிராமமான தம்பளையில், பொலொன்னறுவை - சுங்கவில் வீதியில்,  பாற்பண்ணை வேலைக்குச் சென்றுகொண்டிருந்த 18 முஸ்லீம் பொதுமக்களில் 11 பேரை கருணா துணை ராணுவக்குழு கப்பம் கேட்டுக் கடத்திச் சென்றது. அருகிலுள்ள சின்னவில் காட்டுப்பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த முஸ்லீம்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய்களை கருணா குழு கப்பமாகக் கேட்டிருக்கிறதென்று அவர்களது உறவினர்கள் பொலீஸில் முறைப்பாடு தெரிவித்திருக்கிறார்கள். அக்கிராமத்தில் இருந்து மக்களிடம் திரட்டப்பட்ட ஒருலட்சம் ரூபய்களைக் கருணா குழுவிடம் அம்மக்கள் வழங்கிய பின்னர் ஐவரை விடுதலை செய்திருக்கும் துணை ராணுவக்குழு மீதிப்பேரை விடுதலை செய்வதற்கு மேலும் ஐந்து லட்சங்களைக் கேட்டிருக்கிறது.

விடுவிக்கப்பட்ட முஸ்லீம்களின் தகவலின் பிரகாரம் தம்மை ராணுவ உடையணிந்த 6 பேரும் சிவிலியன் உடையில் ஒருவருமாக ஏழுபேர் அடைத்துவைத்து காவலுக்கு நின்றதாகத் தெரிவித்தனர். முதலில் ஒரு தகப்பனையும் மகனையும் கப்பம் கேட்டு அனுப்பிய கருணா குழு மீதி 9 பேரையும் கப்பம் அறவிடப்பட்டபின்னரே விடுதலை செய்வோம் என்று பிடிவாதமாக இருந்துவருகிறது.

தாம் பொலிசாரிடம் முறையிட்டபோது, மிகுந்த அலட்சியத்துடன் அவர்கள் நடந்துகொள்வதாகவும், இதுவரை நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் எடுக்கத் தயங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லையோரச் சிங்களக் குடியேற்றக் கிராமமான புளஸ்த்திகம பகுதியில் , பொலீஸாரின் நிலைகளுக்கு மிக அண்மையிலேயே இக்கடத்தல்கள் இடம்பெற்றிருந்தபோதும், பொலீஸார் இக்கடத்தல்பற்றிய பூரண தகவல்களை அறிந்துள்ளபோதும் துணைக்குழுவினருக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்க தொடர்ச்சியாக மறுத்தே வருகின்றனர். கருணா துணைப்படையின் அடாவடித்தனம் மற்றும் பொலீஸாரின் இயலாமை ஆகியவற்றினையடுத்து அச்சத்தில் உறைந்துள்ள இக்கிராம மக்கள் தற்போது வேறுபகுதிகள் நோக்கி இடம்பெயர்ந்துவருவதாக தெரியவருகிறது. 

தம்பளை மற்றும் சின்னவில் ஆகிய இக்கிராமங்கள் மஹாவலி நீர்ப்பாசனத் திட்டம் , பிரிவு "பி" பகுதியில், பொலொன்னறுவை நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர்கள் வடகிழக்கில் அமைந்திருக்கின்றன.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, ஆனி 2006

கருணா துணைப்படை மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து நடத்திய தாக்குதல் புலிகளால் முறியடிப்பு

அம்பாறை மாவட்டம், பாவட்டை பகுதியில் அமைந்திருக்கும் புலிகளின் அரசியல்த்துறைப் பணியகம் மீது விசேட அதிரடிப்படையினரும், கருணா துணைப்படையினரும் இணைந்து நடத்திய தாக்குதலை புலிகள் முறியடித்ததாக அறிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் பற்றி யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு அறியத்தரப்பட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் ஜெயா அறிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாக்குதலுக்கென்று பாரவூர்திகளில் வந்திறங்கிய சுமார் 30 பேரடங்கிய கருணா கூலிப்படையினர் இன்னமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், விசேட அதிரடிப்படை முகாமிற்கு வெளியே நிற்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 

காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து புறப்பட்ட ராணுவ - கூட்டுப்படை அணி தாக்குதலை ஆரம்பித்தபோதும், 35 நிமிடங்கள் வரை நீடித்த புலிகளின் எதிர்த்தாக்குதலினையடுத்து மீளவும் முகாமிற்கே திரும்பியிருக்கிறது. இத்தாக்குதல் ஆரம்பித்தவேளை, புலிகளின் அம்பாறை அரசியல்த்துறை உடனடியாக வன்னியுடம் தொடர்புகொண்டு அறியத் தந்திருக்கிறது.

சுமார் 100 பேர் அடங்கிய ராணுவ - கூலிப்படை அணியே புலிகளின் பகுதிக்குள் ஊடுருவும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. தாக்குதல் ஆரம்பித்தவேளை, காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிலிருந்து புலிகளின் நிலைகள்மீது கடுமையான செல்வீச்சினையும் அதிரடிப்படை மேற்கொண்டது. 

கருணா கூலிப்படையின் உறுப்பினர்களான கோமாரியைச் சேர்ந்த பரணி, பெரியகல்லாற்றைச் சேர்ந்த "பிரதீபன்" என்றழைக்கப்படும் ஜோன்சன் ஜெயகாந்தன், திருக்கோயிலைச் சேர்ந்த சீலன் மற்றும் ஈ பி டி பி உறுப்பினர்கள், புதிதாக கருணா குழுவில் இணைந்துள்ள முஸ்லீம்கள் உட்பட பலர் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக ஜெயா மேலும் தெரிவித்தார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : 25 ஆனி 2006

ராஜபக்ஷ முன்வைக்கும் நேரடி ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவின் ஆயுதங்களைக் களைய அரசு தயார் - சண்டே லீடர் கட்டுரை

Ex-LTTEers to campaign for lasting solution within a united Sri Lanka |  Daily FT

கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல வார பத்திரிக்கையான சண்டே லீடரில் வந்திருக்கும் கட்டுரையின்படி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கையின் ஆசிரியரான வித்தியாதரனூடாக புலிகளுக்கு மகிந்த ராஜபக்ஷ ஒரு செய்தியினை அனுப்பியிருப்பதாகவும், அச்செய்தியின்படி தன்னால் முன்வைக்கப்படும், நோர்வேயின் மத்தியஸ்த்தத்தினை தவிர்த்து அரசும் புலிகளும் நேரடியாக ஈடுபடக்கூடிய சமாதான ஒப்பந்தத்தினை  ஏற்றுக்கொண்டு இருவாரங்களுக்கு வன்முறைகளை முழுமையாகக் கைவிட்டால் கருணா குழுவினரின் ஆயுதங்களைத் தான் களைந்துவிடத் தயாராக இருப்பதாக மகிந்த கூறியிருப்பதாகத் தெரியவருகிறது.

மகிந்தவுக்கும், ஆசிரியர் வித்தியாதரனுக்கும் இடையே நடத்தப்பட்ட இந்த பேரம்பேசல் பற்றி உதயன் அலுவலகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அத்துடன், மகிந்தவின் செய்தியை புலிகளுக்கு உதயன் தலைமைப்பீடம் தெரியப்படுத்திவிட்டதாகவும், அதற்குரிய பதிலினை புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் அது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. புலிகளின் பதில்பற்றிப் பேசமறுத்த உதயன் நிர்வாகம், அப்பதில் மகிந்தவிடம் திங்கள் காலை கையளிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.


"புலிகளும் இராணுவமும் இரண்டு வாரங்களுக்கு அனைத்து வன்முறைகளையும் கைவிட்டால், அவர்கள் புதிதாக பேச்சுவார்த்தைமுயற்சிகளைத் தொடங்கமுடிவதோடு, நம்பிக்கையினை மீளவும் கட்டியெழுப்பலாம், நாம் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இது உதவுவதோடு, தேவையற்ற மூன்றாம் தரப்பான நோர்வேயின் பிரசன்னத்தையும் இல்லாதொழிக்கலாம்" என்று மகிந்த வித்தியாதரனிடம் கூறியதாக சண்டே லீடர் தெரிவிக்கிறது.

"நாம் மிகவும் பலமான நிலையிலேயே இருக்கிறோம், எம்மால் புலிகளிடமிருந்து வரக்கூடிய எந்தச் சவாலையும் வெற்றிகொள்ளமுடியும், ஆனால் தேவையற்ற இரத்தம் சிந்துதலைத் தடுக்கவே நான் புலிகளுக்கு இந்த சந்தர்ப்பத்தினை அளிக்கிறேன்" என்று மகிந்த மேலும் கூறியதாக சண்டே லீடர் தெரிவிக்கிறது.

"புலிகள் அரச தரப்பிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை காலதாமதமின்றி உடனடியாக எமக்கு அறிவிக்கவேண்டும், அத்துடன் இரு வாரகாலத்திற்கு தமது அனைத்து வன்முறைகளையும் கைவிடவேண்டும்" என்றும் மகிந்த வித்தியாதரனிடம் கூறியதாகத் தெரியவருகிறது.

"கருணா குழுவினரின்  ஆயுதங்களை உடனடியாகக் களைந்து அவர்களை ரோட்டில் விடவேண்டும் என்று கேட்கவேண்டாம் என்று புலிகளிடம் சொல்லுங்கள், ஏனென்றால் நான் அபடி அவர்களை வீதியில் விட்டால் புலிகள் உடனேயே அவர்களைக் கொன்றுவிடுவார்கள்.முதல் இரு வாரகால யுத்த நிறுத்தத்தின் பின்னரே, நிலைமையினை ஆராய்ந்து  அவ்வாறானதொரு முடிவினை என்னால் எடுக்கவியலும். இந்த இருவார காலத்தில் கருணா குழுவும் புலிகள் மீதான தாக்குதல்களை நடத்ததாதவாறு என்னால் ஏற்பாடு செய்யமுடியும்" என்றும் வித்தியாதரனிடம் அவர் கூறியதாகத் தெரிகிறது.

"கணம் ஜனாதிபதி அவர்களே,  புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே அகப்பட்டு நசுக்கப்படுகிறீர்கள் என்று நீங்கள் கூறியதை நான் இங்கு வருமுன்னர் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் கூறினேன். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அன்டன் பாலசிங்கம், முப்படைகளின் தளபதியும் நீங்கள்தான், ராணுவமும் நீங்கள்தான், பாதுகாப்புச் செயலாளரின் சகோதரரும் நீங்கள்தான், அப்படியிருக்க, நீங்கள் எப்படி ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு நசுங்கிவிடமுடியும் என்று அவர் உங்களிடம் கேட்கச் சொன்னார்" என்று வித்தியாதரன் மகிந்தவிடம் கூறியதாகவும் சண்டே லீடர் கூறுகிறது.

திரு பாலசிங்கம் அவர்களுடன் இச்செய்திபற்றி தமிழ்நெட் இணையம் கேட்டபோது, அவரும் இதனை உறுதிப்படுத்தினார்.


ஆனால், மே மாதம் 23 ஆம் திகதி சமயத் தலைவர்களுடனான சந்திப்பில் தமிழ்ச்செல்வன் கூறும்போது, சிறிலங்கா அரசாங்கத்துடனான எந்தவிதத் தொடர்பாடல்களும் நோர்வேயின் மூன்றாம்தரப்பு மத்தியஸ்த்துடனேயே முன்னெடுக்கப்படும் என்கிற புலிகளின் நிலைப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : 7 ஆடி 2006

மேலும் 35 சிறுவர்களைக் கடத்திச் சென்ற கருணா துணைப்படைக் குழு

தீவுச்சேனை, கறுப்பாளை, சொறிவில் மற்றும் சேவன்பட்டி ஆகிய பகுதிகளிருந்து குறைந்தது 35 சிறுவர்களை ராணுவ புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கருணா துணைப்படை கடந்த வியாழக்கிழமை கடத்திச் சென்றது. இப்பகுதி கிராம சேவக அதிகாரி இக்கடத்தல்கள் பற்றித் தெரிவிக்கும்போது தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதை வெளியே சொன்னால் கொல்லப்படுவீர்கள் என்று கருணா குழுவினரால் அச்சுருத்தப்பட்டுள்ள நிலையில் இப்பெற்றோர்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார். 

கடந்த மாதமும் வாழைச்சேனை, கிரான், பேத்தாளை, விநாயகபுரம், கண்ணகிபுரம், பட்டியடிச்சேனை மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளிலிருந்து குறைந்தது 125 சிறுவர்களை கருணா துணைப்படையும் ராணுவமும் பலவந்தமாக இழுத்துச் சென்றது பலருக்கு நினைவிருக்கலாம். 

கொழும்பிலிருக்கும் யுனிசெப் அமைப்பின் அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கருணா துணைப்படையினராலும் அரச இராணுவத்தாலும் கடத்தப்பட்டுவரும் சிறார்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, ஆடி 2006

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கிளேமோருடன் காத்திருந்த கருணா துணைப்படை உறுப்பினர் கைது

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி கிளேமோர் தாக்குதல் ஒன்றிற்காக காத்திருந்த இலங்கை ராணுவத்தின் கூலியும் கருணா துணைப்படை உறுப்பினருமான புதூர் கதிரவெளியைச் சேர்ந்த ஜெயா என்பவரை புலிகள் கடந்த சனியன்று காலை கைதுசெய்தனர். அவர் கைதுசெய்யப்படும்பொழுது அவரிடமிருந்த கிளேமோர் குண்டு, ஒரு தொகுதி வயர்கள் மற்றும் வெடிக்கவைக்கும் டெட்டனேட்டர் என்பனவும் புலிகளல் பறிமுதல் செய்யப்பட்டன. 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட துணைப்படை உறுப்பினரை விசாரித்தபோது தானும் இன்னும் சில உறுப்பினர்களும் கருணா துணைப்படை முக்கியஸ்த்தரான "பண்டார" எனும் சிங்களப் பெயர் கொண்டு இலங்கை இராணுவத்தால் செல்லமாக அழைக்கப்படும் ரியசீலன் என்பவரால் புலிகளின் முக்கியஸ்த்தர்களை இலக்குவைத்துக் கொல்வதற்காக ஈச்சிலம்பற்றுப் பகுதிக்குள் ஊடுருவும்படி அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறினார். 

மேலும் மூன்று இளைஞர்களை கடத்திச்சென்றது கருணா துணைப்படை

இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கருணா துணைப்படை வெள்ளியியன்று இரவு வாழைச்சேனை பேத்தாளை பகுதியில் மூன்று இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளது. பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட தருணங்களில் பெற்றோர் இக்குழுவினரால் கொலைமிரட்டலுக்கு உள்ளானதையடுத்து, இவ்விளைஞர்களின் பெற்றோர் செய்வதறியாது அச்சத்தில் உறைந்திருப்பதாக அக்கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர். 

Edited by ரஞ்சித்
பந்தி சேர்க்கப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, ஆடி 2006

புலிகளால் கைதுசெய்யப்பட்ட கருணா துணைப்படை உறுப்பினரை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னால் வெளிப்படுத்திய  புலிகள்

"என்னை கருணா குழு உறுப்பினர்களும் இராணுவத்தினரில் 50 பேரும் மகிந்தபுர இராணுவ முகாமிலிருந்து அழைத்துவந்து புலிகளின் ஈச்சிலம்பற்றுப் பகுதிக்குள் ஊடுருவுமாறு பணித்தனர். என்னிடம்  ஒரு கிளேமோர் குண்டும், கைய்யெறிகுண்டொன்றும், வயர்களும், டெட்டனேட்டர்களும், சில பற்றைகளையும் அவர்கள் கொடுத்தனுப்பினார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவும் புலிகளின் வாகனம் ஒன்றினைக் குறிவைத்து தாக்குதல் நடத்துமாறு என்னை அவர்கள் பணித்தார்கள். நான் கிளேமொர்ர் குண்டினை மரமொன்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியால் வந்த புலிகள் என்னைக் கைதுசெய்தார்கள்" என்று அத்துணைப்படை உறுப்பினர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் தெரிவித்தார். இதன்போது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனும் பிரசன்னமாகியிருந்தார்.

11_07_06_karuna_group_01.jpg

அவர் மேலும் தெரிவிக்கும்போது, " நான் கடந்த 2 ஆம் திகதி வாழைச்சேனைப் பகுதியில் வேலைக்குச் செல்லும்பொழுது கருணா குழு என்னைக் கடத்திக்கொண்டு சென்றது. பின்னர் இராணுவ பவள் கவசவாகனமொன்றில் என்னை ஏற்றி மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த கருணா குழுவினர் என்னைத் தொடர்ச்சியாகப் பயமுறுத்திக் கொண்டேயிருந்தனர். நான் அவர்களுடன் இணைந்துகொள்ளாவிடில் என்னைக் கொல்லப்போவதாக மிரட்டினர். பின்னர் என்னை திருகோணமலை பிளான்டின் பொயின்ட் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கருணா குழுவில் இணையுமாறு ரியசீலன் என்பவரும் ஈ என் டி எல் எப் குழுவின் சுனில் என்பவரும் தொடர்ச்சியாக என்னைச் சித்திரவதை செய்துவந்தனர். அதன்பிறகு என்னை கல்லாறு ராணுவ முகாமிற்கும் பின்னர் மகிந்தபுர ராணுவமுகாமுக்கும் மாற்றினர்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

11_07_06_karuna_group_03.jpg

தான் கைதுசெய்யப்பட்ட நிகழ்வுபற்றி அவர் விபரிக்கையில், "கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு, என்னையும் இன்னும் சில உறுப்பினர்களையும் ரியசீலன், சுனில் ஆகியோரும் குறைந்தது 50 இலங்கை ராணுவத்தினரும் புலிகளின் ஈச்சிலம்பற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். கிளேமோர் குண்டு, வயர்கள், டெட்டனேட்டட்கள், கிர்னேட்டுக்கள் ஆகியவற்றை என்னிடம் கொடுத்த அவர்கள் புலிகளின் முக்கியஸ்த்தர் ஒருவரின் வாகனத்தை இலக்குவைத்துத் தாக்கிவிட்டு மீண்டும் மகிந்தபுர ராணுவ முகாமிற்கு திரும்பிவரும்படி கூறினர். என்னை அங்கே இறக்கிவிட்ட அவர்கள், சில மீட்டர்கள் பின்வாங்கிச் சென்று யுத்தசூனியப் பிரதேசத்தில் நிலையெடுத்துப் பதுங்கியிருந்தனர். மறுநாள் காலை 9 மணிக்கு அங்கே வந்த புலிகள் நான் கிளேமோர் குண்டினை தயார்ப்படுத்த முன்னமே என்னைக் கைதுசெய்துவிட்டனர்" என்று அவர் கூறினார்.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30 ஆவணி 2006

கருணா துணைப்படை மற்றும் இராணுவத்தால் வெட்டிக்கொல்லப்பட்ட மீனவர் - வாழைச்சேனையில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டம், கண்ணகிபுரம், கோராவில் வீதியைச் சேர்ந்த மீனவரான 27 வயது நிரம்பியவரும் இரு பிள்ளைகளின் தந்தையுமான பெரியதம்பி வேலுப்பிள்ளை எனும் குடும்பஸ்த்தர் செவ்வாயன்று இரவு கருணா துணைப்படையினராலும், பாதுகாப்பிற்கு வந்த இராணுவத்தாலும் குரூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கல்மடு "50 வீடுகள்" கிராமத்தில் வாழ்ந்துவந்த இவரை கருணா துணைப்படையினர் கடத்தமுயன்றவேளையில் அவர்களிடமிருந்து தப்பியோடி அருகிலிருந்த வீடொன்றில் பதுங்கியிருந்தார். தப்பியோடுபோது காலில் துப்பாக்கிச் சூடுபட்டுக் காயமடைந்த அவரை மீண்டும் தேடிக் கண்டுபிடித்த துணைப்படையினர் அவர் மறைந்திருந்த வீட்டிலிருந்து வெளியே இழுத்துவந்தனர். நடக்கப்போகும் அசம்பாவிதத்தை உணர்ந்துகொண்ட அப்பகுதி மக்கள் அவரைக் கொல்லவேண்டாம், இங்கே சிறுபிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுக் கெஞ்சியபொழுதும் அவர்மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த துணைப்படையினரும் ராணுவமும், மக்கள் பார்த்திருக்க அவரது தலையை வாட்களாலும் கோடரிகளாலும்  கொய்தெடுத்தனர். 

துணைப்படையினரும் ராணுவமும் வீதியில் அவரது உடலை வீசிவிட்டுச் சென்றபின்னர் அங்கே வந்த பொலிஸார் அவரது உடலை வாழைச்சேனை வைத்தியசாலைக்குப் பிரதேசப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை துணைப்படையினரோ ராணுவமோ இதுவரை வெளியிடவில்லை. கட்டாய ராணுவப் பயிற்சிக்கு வரமறுத்ததாலேயே இவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்றும், பயிற்சிக்கு வரமறுப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்படியே இவ்வாறு இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30 ஆவணி 2006

கடத்தப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் பொலொன்னறுவையில் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

அம்பாறை மாவட்டத்திலிருந்து கருணா துணைப்படையினரால கடத்திச் செல்லப்பட்ட பெருமளவு சிறுவர்களும் இளைஞர்களும் பொலொன்னறுவையில்  கட்டாய ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று யுனிசெப் பிரதிநிதிகளைச் சந்தித்த புலிகள் முறையிட்டிருக்கின்றனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் பலர் இலக்கத்தகடற்ற வெள்ளை வான்களில் வலம்வரும் ராணுவ துணைப்படைக் குழுக்களால் கடத்தப்பட்டிருப்பதாகவும் இந்த முகாம்களுக்கு விஜயம் செய்வதன்மூலம் இச்சிறாரின் கதிபற்றி அறிந்துகொள்ளுமாறும் புலிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அம்பாறை மாவட்டம், பாவட்டை பகுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் யுனிசெப் பிரதிநிதிகளைச் சந்தித்த புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் ஜெயா அம்பாறை மாவட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெறும் கடத்தல்கள் பற்றி முறையிட்டார். இதற்குப் பதிலளித்த யுனிசெப்பின் டி புருட் தம்மிடம் இவ்வாறான 32 கடத்தல்கள் பற்றி முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும், புலிகளும் தம்மிடம் இருக்கும் 18 வயதிற்குக் கீழான போராளிகளை விடுவிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார்.

ஜெயா அவர்கள் மேலும் இக்கடத்தல்கள் பற்றித் தெரிவிக்கும்போது, கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோரின் கூற்றுப்படி வெள்ளைநிற இலக்கத்தகடற்ற வான்களில் வந்த தம்மை கருணா குழு என்று அடையாளப்படுத்திக்கொண்ட ஆயுததாரிகள் ராணுவம் பாதுகாப்பிற்கு நிற்க பெற்றோரிடமிருந்து அச்சிறார்களை இழுத்துச் சென்றதாக கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, இளைஞர்களின் விருப்பிற்கு மாறாக கடத்தப்பட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலானோர் பொலொன்னறுவை மாவட்டம் தீவுச்சேனைப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

திருக்கோயில் அதிரடிப்படையினர் அப்பகுதி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மீது கொடுத்துவரும் துன்புருத்தல்கள்பற்றி ஜெயா விவரித்தபோது, இதுபற்றி தமது தலைமைக் காரியாலயத்திற்கு அறியத்தருவதாக டி புருட் கூறினார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25 ஆவணி 2006

பதின்ம வயது இளைஞரை கட்டாயப்படுத்தி தற்கொலைத் தாக்குதலுக்கு அனுப்பிய கருணா துணைப்படை

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் அவர்களின் கூற்றுப்படி, அரச ராணுவத்தினால் வழிநடத்தப்படும் கருணா துணைப்படையினர் கட்டாயப்பயிற்சிக்கு கடத்திவந்த 19 வயது இளைஞரை வெடிமருந்து கட்டப்பட்ட உந்துருளியில் புலிகளின் முன்னரங்குகள் நோக்கி அனுப்பி தூரவிருந்து இயக்கும் கருவிமூலம் வெடிக்கவைத்துக் கொன்றனர் என்று கூறியுள்ளார். தமது தற்கொலைத் தாக்குதலில் 5 புலிகள் பலியானதாக கருணா துணைப்படை உரிமைகோரியிருந்தபொழுதும், தமது முன்னரங்கிலிருந்து குறைந்தது 80 மீட்டர்கள் தொலைவில் அந்த இளைஞர் வரும்பொழுதே கருணா குழுவினர் குண்டை வெடிக்க வைத்ததனால் தமக்குச் சேதம் எதுவும் ஏற்படவில்லையென்பதை உறுதிப்படுத்திய தயாமோகன் அப்பாவி இளைஞரைக் கட்டாயப்படுத்தி கருணா குழு கொன்றதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

திமிலைதீவு சந்தை வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்பாவி இளைஞரான சத்தியசீலன் தர்ஷன் சில தினங்களுக்கு முன்னரே கருணா குழுவினரால் கடத்தப்பட்டிருந்ததாகவும், அவரையே வவுனதீவு முன்னரங்கு நோக்கி கருணா குழு கட்டாயப்படுத்தி அனுப்பிக் கொன்றுபோட்டதாகவும் தெரியவருகிறது.

தர்ஷனின் உடலைக் கையளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் அதேவேளை, அண்மையில் முச்சக்கரவண்டியொன்றில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு புலிகளின் முன்னரங்கு நோக்கி வந்தவேளை குண்டுவெடித்து இரு துணைப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம். 


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25 ஆவணி 2006

கருணா துணைப்படையினர் சிறுவர்களைக் கடத்திச் சென்று பயிற்சியளிக்கின்றனர், அவர்களுடனான அரசின் தொடர்பு கவலையளிக்கிறது - மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை

கடந்த வியாழக்கிழமை மனிதவுரிமைக் காப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் கருணா குழுவின் சிறுவர் கடத்தல்களில் அரச ராணுவமும் சேர்ந்து ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறது. 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை கருணா குழு கடத்திச் செல்வதும், அக்குழுவிற்கு அரச ராணுவம் கடத்தல்களில் உதவிவருவதும் தமக்கு பாரிய கவலையாக உருவெடுத்துள்ளதாக அவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்தார்.

"கருணா குழுவிற்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு மிகத் தெளிவாக இப்போது புரிகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அரச ராணுவத்தின் அனுசரணையின்றி கருணா குழுவினரால் சிறுவர்களைக் கடத்த முடிவதென்பது சந்தேகத்திற்குரியது. சிறுவர்களைக் கட்டாயமாக ராணுவப் பயிற்சிக்குக் கடத்திச் செல்லும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேரவிரும்புவதுபோலத் தெரிகிறது. உலகில் மிகவும் மோசமான மனிதவுரிமைகளில் ஈடுபடும் பர்மிய ராணுவத்துடன் ஒப்பிடக்கூடியளவிற்கு இலங்கை ராணுவம் செயற்பட விரும்புவதுபோலத் தெரிகிறது. சிறார்களை ராணுவப் பயிற்சிக்கு கட்டாயமாகக் கடத்திச் செல்லும் செயற்பாடுகளில்  இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருவதுபற்றி அரசு தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய தருணம் இது" என்று கொழும்பிற்கு விஜயம் செய்தபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் மிக மோசமான வன்முறைகள் அரச ராணுவத்தினராலும், துணைப்படையினராலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில் பல நூற்றுக்கணக்கான சிறார்களும் இளைஞர்களும் கருணா துணைப்படையினராலும், அரச ராணுவத்தாலும் ராணுவப் பயிற்சிக்குக் கடத்தப்பட்டு வருகின்றனர்.

கருணா துணைப்படையினரின் முகாம்களில் இருந்து தப்பிவந்த சில இளைஞர்களின் தகவல்களின்படி பெருமளவு சிறார்களும் இளைஞர்களும் அரச ராணுவத்தால் தமிழர்களுக்கும், புலிகளுக்கும் எதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு பயிற்றப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது.

மிக அண்மையில் ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின்படி விஷ்ணு ஆலயத்தில் விளையாடிக்கொண்டிருந்த 15 இளைஞர்களை வெள்ளைநிற வான்களில் வந்த கருணா குழு கடத்திச் சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற இக்கடத்தலில் ஆயுதம் தரித்த கருணா துணைப்படையினர் இளைஞர்களை இழுத்துவந்து வான்களில் ஏற்றும்போது ராணுவம் கருணா குழுவினருக்கு பாதுகாப்பு வழங்கியதாகத் தெரியவந்திருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி நாள் 5, ஆவணி, 2006

சுடரொளி, தினக்குரல் பத்திரிக்கைகளை விற்றதற்காக கருணா குழுவால் மட்டுநகரில் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட வியாபார நிலையம்

06_08_06_batti_01.JPG

மட்டக்களப்பு நகரில், அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கிவந்த பத்திரிக்கை விற்பனை நிலையம் ஒன்றினை கருணா துணைப்படையினர் கடந்த சனிக்கிழமை தீயிட்டுக் கொளுத்தினர். முருகேசு அன்ட் சன்ஸ் என்ற பெயரினை உடைய வடபகுதித் தமிழருக்குச் சொந்தமான இவ்வியாபார நிலையம் கருணா துணைப்படையினரால் கொளுத்தப்பட்டிருக்கிறது. மட்டுநகர் சென்ட்ரல் வீதியில் , விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து சுமார் 75 மீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த இந்நிலையம் சில நாட்களுக்கு முன்னர் புலிகளை ஆதரிக்கும் பத்திரிக்கைகளை விற்கவேண்டாம் என்று கருணா துணைப்படையினரால் எச்சரிக்கப்பட்டு வந்ததென்றும், ஆனால் தமது கட்டளையினையும் மீறி தொடர்ச்சியாக தினக்குரல் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிக்கைகளை இந்த வியாபார நிலையம் விநியோகித்து வந்ததினால் கருணா துணைப்படையினர் இந்த நிலையத்தினை முற்றாகக் கொளுத்தியிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
.

06_08_06_batti_02.JPG

கொழும்பில் பிசுரமாகும் தமிழ் நாளிதழ்கள் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் சுரேணா ட்ரவெல்ஸ் என்றழைக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் மூலம் மட்டக்களப்பினை வந்தடைந்தன. இந்த மக்கள் பயணச் சேவையினைத் தொடர்ச்சியாக மிரட்டிவந்த கருணா துணைப்படை , முருகேசு அன்ட் சன்ஸ் நிறுவனத்திற்கான பத்திரிக்கைகளை தருவிக்கவேண்டாம் என்றும் மிரட்டியிருந்தனர். 

வடபகுதியினைச் சேர்ந்தவர்களால், புலிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் பத்திரிக்கைகள் என்று இப்பத்திரிக்கைகளை விமர்சித்த கருணா துணைப்படை இந்த வியாபார நிலையத்தினைக் கொளுத்தியிருக்கிறது. தீயினால் ஏற்படுத்தப்பட்ட நட்டம் குறைந்தது நான்கு லட்சமாவது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அருகில் இருந்த சில வியாபார நிலைய உரிமையாளர்கள் தீயினை அணைக்க முற்பட்டபோதும்கூட, அவர்களால் அது முற்றாக எரிந்து நாசமாவதைத் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி நாள் 7, ஆவணி, 2006

மட்டக்களப்பில் இரு வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்திய கருணா துணைப்படை

கடந்த திங்கட்கிழமை காலை 6:30 மணியளவில் மட்டக்களப்பு - களுவங்கேணியி வீதியில் அமைந்திருந்த இரு தனியார் வீடுகள் இராணுவ புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கூலிப்படையான கருணா துணைப்படையினரால் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொளுத்தப்பட்ட இரு வீடுகளில் ஒன்று கருணா குழுவில் இணைந்து பின்னர் கருணா குழு துணைப்படையின் பல படுகொலைகளில் தொடர்புடைய இனியபாரதி உட்பட இன்னும் ஐவரைக் கொன்றுவிட்டு புலிகளிடம் வந்து சரணடைந்த ஞானதீபன் எனும் உறுப்பினரின் சகோதரியான மயில்வாகனம் ஆறுமுகம் என்பவரின் வீடு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மற்றைய வீடு நான்கு பள்ளிச் சிறார்கள் வாழ்ந்துவந்த வீடென்றும், புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று கருணா துணைப்படையினரால் கருதப்பட்டதனால், அவர்களது வீடும் எரிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

வெள்ளைநிற வான்களிலும், உந்துருளிகளிலும் இவ்வீடுகளுக்கு வந்த கருணா துணைப்படையினர் இவ்விடுகளின் மேல் எரிரசாயனங்களை வீசித் தீமூட்டியதாகத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், ஞானதீபனுடன் கருணா குழுவிலிருந்து தப்பிவந்த புகழ்வேந்தனின் இரு சகோதரிகளை கருணா துணைப்படையினர் கொன்றிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, ஆவணி, 2006

வாழைச்சேனைப்பகுதியில் இரு சிவிலியன்களைக் கொன்ற கருணா துணைப்படை 

கடந்த திங்கள் மாலை மீராவோடைப்பகுதியில் கருணா துணைப்படையினரால கடத்தப்பட்ட இரு தமிழ் இளைஞர்களில் ஒருவரான கந்தசாமி கோவிந்தராஜா துணைப்படையினரால் சித்திரவதையின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடல் மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதியில் மட்டக்களப்பு நகரிலிருந்து 27 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் கோலாவடி பகுதியில் வீதியோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இவருடன் சேர்த்துக் கடத்தப்பட்ட மயில்வாகனம் சசி எனும் இளைஞரின் கதிபற்றித் தெரியவில்லையென்றாலும்கூட, இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை சீனித்தம்பி சங்கர் என்றழைக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞர் ஒருவரையும் கருணா துணைப்படையினர் இன்று கொன்றிருக்கின்றனர். அவரது சகோதரியின் கணவரான தாண்டவம்  செல்வராஜாவும் இப்படுகொலை நடவடிக்கையில் கடுமையான காயங்களுக்கு உட்பட்டிருகிறார்.

திங்கள் இரவு வந்தாறுமூலையில் இடம்பெற்ற இந்தப் படுகொலை பற்றி மேலும் தெரியவருவதாவது. வந்தாறுமூலை, ஆலையடி வீதியில் அமைந்துள்ள இவர்களின் வீட்டிற்குச் சென்று, அவரைப் பெயர் சொல்லி அழைத்த கருணா துணைப்படையினர், அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்மீது சரமாரியாகச் சுட்டதாகவும், துப்பாக்கிச் சத்தம் கேட்டு வாயிலுக்கு வந்த அவரது சகோதரியின் கணவர் மீதும் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

சங்கர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மயிலவெட்டுவான் பகுதியில் பண்ணை ஒன்றில் வேலை பார்த்துவந்த ஒரு விவசாயத் தொழிலாளி என்பது குறிப்பிடத் தக்கது. சங்கரின் சகோதரர் ஒருவர் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கவே சங்கரைத் தாம் கொன்றதாகவும் கருணா துணைப்படை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது.

தாக்குதலின் பின்னர் சங்கரின் வீட்டிற்கு வந்த பொலிஸார் வீட்ட்னுள் கருணா குழுவினரால் எறியப்பட்டு, வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றைக் கண்டெடுத்தனர். 


 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, புரட்டாதி, 2006

கருணா , ஈ பி டி பி துணைப்படைகளால் 3 இளைஞர்கள் கொலை

இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் துணைப்படைகளான கருணா குழு மற்றும் ஈ பி டி பி குழுவினரால் வாழைச்சேனைப்பகுதியில் மூன்று அப்பாவி இளைஞர்கள் கடந்த ஞாயிறு சுட்டுக்கொல்லப்பட்டனர். வாழைச்சேனை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் அமைந்திருக்கு சிங்கள ராணுவ முகாமிலிருந்து இயங்கிவரும் இத்துணைப்படைக் குகுழுக்களைச் சார்ந்தவர்கள் இரவு 7 மணிக்கும் 9:30 மணிக்கும் இடையில் இக்கொலைகளைப் புரிந்துள்ளனர்.


வாழைச்சேனை - கல்க்குடா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட துணைப்படை ஆயுததாரிகள் தாம் கைதுசெய்து இழுத்துவந்த மூன்று இளைஞர்களை அவர்களின் வீடுகளுக்கருகில், வீதியோரங்களில் இருத்திவைத்து மக்கள் பார்த்திருக்கத் தலையில் சுட்டுக் கொன்றனர்.

பட்டியடிச்சேனையில் வசித்துவந்த 22 வயதுடைய முடிதிருத்தும் கடை உரிமையாளரான தியாகராஜா செந்தூரன் என்பவரை அவரது வீட்டிலிருந்து இழுத்துவந்து வீதியின் முன்னால் வைத்து 7 மணிக்குச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படையினர் கர்ப்பமுற்றிருந்த அவரது மனைவியையும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றனர். 

பின்னர் கருங்காலிச்சோலை, நாகதம்பிரான் வீதியில் வசித்துவந்த, ஒரு பிள்ளையின் தந்தையான, 26 வயதுடையசண்முகநாதன் நாகேந்திரன் என்பவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றனர்.


 பின்னர், பேய்த்தாழை , விஷ்ணு கோயில் வீதியில் வசித்துவந்த, வாகனேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயதுடைய கந்தையா கருணாகரன் என்பவரை வீதியில் சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றனர்.

கந்தையா கருணாகரனின் உடல் மட்டக்களப்பு வைத்தியசாலை சவ அறையிலும் மற்றைய இருவரதும் உடல்கள் வாழைச்சேனை வைத்தியசாலை சவ அறையிலும் வைக்கப்பட்டுள்ளன. 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.