Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

 
1-199-696x387.jpg
 73 Views

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர்.

29 ஆண்டிற்கும் மேலாகச் சிறைத்தண்டனை பெற்றுவரும் இவர்களை விடுவிக்க கோரி தமிழகம் முழுக்க தொடர்ச்சியான  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அதே நேரம் 2018 ஆம் ஆண்டு ‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம்‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

ஆனால் குறித்த 7 பேர் விடுதலையில் இது வரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் அவர்களின் சிறை வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறன்றது.

அண்மையில் பேரறிவாளன் விடுதலையை முன்வைத்து நடைபெற்ற பரப்புரையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இயக்குனர்கள் வெற்றிமாறன், பார்த்திபன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் விடுதலைக்கு ஆதரவாகப் கருத்து தெரிவித்திருந்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறது.

இந்நிலையில்,இந்நிலையில், எழுவர் விடுதலையை வலியுறுத்தி சம்பத் குமார் மற்றும் ஆன்டனி என்கிற இருவரும் சென்னை அம்பத்தூரில் உள்ள கல்யாணபுரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு கம்ம்யூனிஸ்ட் கட்சி (சி.பி), இடது தொழிற்சங்க மய்யம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி – அரண்செய்

 

https://www.ilakku.org/பேரறிவாளன்-உள்ளிட்ட-ஏழு/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு இதுவரை நடந்தது என்ன?-வழக்கறிஞர் பெ.தமயந்தி

 
WhatsApp-Image-2020-11-14-at-12.14.59-AM
 42 Views

* 1991 மே 21இல் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். 26 பேர் மீது சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

* 1998 ஜனவரி 28இல் பேரறிவாளன் உட்பட 26 பேருக்கும் சென்னை தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் அவர்களில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

* 1999 ஒக்டோபர் 17இல் 7 பேரின் கருணை மனுக்களை தமிழக ஆளுநர் நிராகரித்தார். பின்னர் நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

* 2000 ஏப்ரல் 28இல் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இந்த கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

WhatsApp-Image-2020-11-14-at-1.10.46-AM-

* 2011 ஓகஸ்ட் 26இல் 11 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கருணை மனுக்களை நிராகரித்தார்.

* 2011 ஓகஸ்ட் 30இல் ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* 2014 பெப்ரவரி 18இல் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

* 2014 பெப்ரவரி 19இல் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இம்முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு போனது மத்திய அரசு. இதையடுத்து 7 பேரை விடுதலை செய்யும் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து அரசியல் சாசன குழுவிற்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.

* 2015 ஜூலை 11இல் 7 பேர் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டது.

* 2015 டிச.2இல் 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது எனக் கூறியது உச்சநீதிமன்றம்.

* 2016 பெப்ரவரி 14இல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உள்துறை அமைச்சகமானது 7 பேர் குறித்த தகவல்களைக் கோரியது, தமிழக அரசின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு.

* 2016 மார்ச் 2இல் 7 பேர் விடுதலைக்காக மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் மத்திய அரசு மறுத்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது,

* 2018 ஏப்ரல் 16இல் 7 பேரையும் விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.

* 2018 ஓகஸ்ட் 11இல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போதும் 7 பேரையும் விடுதலை செய்ய மறுத்து வாதிட்டது மத்திய அரசு.

* 2018 செப்டம்பர் 6 இல் 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி வழக்கை முடித்து வைத்தது.

“ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு  30 ஆண்டுகள் ஆகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலந் தாழ்த்துவது என்பது மிகமோசமான மனித உரிமை மீறல்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 29 ஆண்டுகளுக்கு முன் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி இரவு சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது.

விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்ததை நம்பி  பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பி வைத்தனர்.

ஆனால், விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக அவர் பெயரை இணைத்து விட்டனர்.

தகுதியின் அடிப்படையில் பார்த்தாலும், மனிதநேய அடிப்படையில் பார்த்தாலும் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டியவர் ஆவார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்துப் பதிவு செய்ததன் மூலம் அவருக்கு தூக்குத் தண்டனை கிடைக்க தாம் காரணமாகி விட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டதுடன், அதை உச்ச நீதிமன்றத்தில் மனுவாகவே தாக்கல் செய்திருக்கிறார்.

இப்படியிருக்க, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய தமிழக ஆளுநர் எந்த மனிதநேயமும் இல்லாமல் அது குறித்த பரிந்துரையை கிடப்பில் போட்டு இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது என்பது மோசமான  மனித உரிமை மீறல் என்பதைத்தவிர வேறு என்ன..?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் அதை விட இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவ்வாறு அனுப்பி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன்மீது  ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால் அதற்கு அரசியல் காழ்ப்புணர்வைத் தவிர வேறு என்னவாக இருந்துவிட முடியும்…??!!

அமைச்சரவையின் பரிந்துரை மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த விஷயத்தில் ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் தொடர்ந்து 30ஆவது ஆண்டாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே இந்த 30 ஆண்டுகளில் வாழ்நாளின் பெரும்பகுதியை இழந்து விட்டனர். இனியாவது அவர்கள் தங்களின் வாழ்நாளை குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும்.

உண்மையான குற்றவாளிகளை புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடியாத இந்திய புலனாய்வுத் துறை, இந்த வழக்கில்  சில அரசியல் நிர்ப்பந்தங்களின் சூழ்ச்சிகளுக்கு அடிபணிந்து திட்டமிட்டு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற நபர்களையே ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளாக பொய்யான சாட்சிகளை கொண்டு நிரூபிக்க செய்தும் கூட இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதற்கு சாட்சியாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒப்புதல் வாக்குமூலம் அமைகிறது

WhatsApp-Image-2020-11-14-at-1.17.49-AM-

மேலும் குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில்,  தூக்குத் தண்டனை  விதிக்கப்பட்ட  சாந்தன், முருகன் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களாலும், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களாலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் இதுநாள் வரை நடந்துள்ளது.  குறிப்பாக தமிழகத்தில் நடந்த எழுவர் விடுதலைக்கான போராட்டங்களில் உச்சபட்சமாக தன் உயிரையே தீக்கங்குகளுக்கு தின்னக் கொடுத்து  செங்கொடி  மாய்த்துக் கொண்டார். மேலும் தமிழகத்தில் பெருத்திரளாக வழக்கறிஞர்கள் எல்லாம் பெரும் போராட்டங்களை, சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னையிலும் சேலத்திலும் பெண் வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டங்களை எல்லாம் முன்னெடுத்தனர்.  மேலும் பல்வேறு தமிழ் உணர்வாளர்களும், ஈழ ஆதரவாளர்களும், பல்வேறு புரட்சிகர முற்போக்கு சக்திகளும் கூட தமிழகம் முழுக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இத்தனை அழுத்தங்கள் தமிழகம் முழுக்க கொடுக்கப்பட்டாலும்கூட, சட்டத்தின்படியும், நியாயத்தின்படியும், மனிதநேய அடிப்படையிலும், தங்களது வாழ்நாளில் பாதியை சிறையிலேயே கழித்ததன் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் உடனடியாக  சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட  எழுவரின் விடுதலையை தமிழக ஆளுநர்  பரிசீலனை செய்து  எழுவரின் விடுதலையை உறுதிசெய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

 

https://www.ilakku.org/ராஜீவ்-காந்தி-கொலை-வழக்க-4/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் சிறையில் 12 நாட்களைக் கடந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன்

 
Tamil_News_12_5_2020_659633815288544.jpg
 2 Views

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.  4ஆம் திகதி அவர் சோர்வடைந்ததையடுத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

சிறை விதிகளை மீறி வெளிநாட்டிலுள்ள ஒருவரிடம் முருகன் வீடியோ அழைப்பில் பேசினார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தனது தாய், மகளுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கோரி கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.

உண்ணாவிரதத்தினால் சோர்வடைந்த முருகனுக்கு 04ஆம் திகதி குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும், வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்

 

https://www.ilakku.org/வேலூர்-சிறையில்-12-நாட்களை/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்

 
1-42.jpg
 12 Views

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 15-வது நாளாக  முருகன் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன்,  வேலுர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்,  சிறை விதிகளை மீறி  வீடியோ அழைப்பில் பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பொலிஸார்.

மேலும், முருகன் தனது மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் பேச தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து  முருகன் 15-வது நாளாக  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், முருகனுக்கு நேற்று முன்தினம் இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

மேலும், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு  சிறை நிர்வாகம் தரப்பில் இருந்து தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இரத்து செய்யப்பட்ட சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரி முருகன் தொடர்ந்து  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/உண்ணாவிரதத்தைக்-கைவிட-மற/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகின்றார் – அவரது வழக்கறிஞர்

 
Tamil_News_12_15_2020_802532374858857.jp
 18 Views

வேலூர் சிறையில் 23 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் மீது பொய் வழக்குப் போட்டு முருகனினதும், மனைவி நளினியினதும் விடுதலையைத் தடுக்க முயல்கின்றனர். அத்துடன் சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகின்றார் என்று முருகனின் வழக்கறிஞர்  புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 29 வருடங்களைக் கடந்தும் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் இருக்கும் முருகன் தனது தாயார் மற்றும் தனது மகளுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி இன்று (15) 23 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

அவரது உடல்நிலை தொடர்பாக சிறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதுடன், நேற்று மாலை வலுக்கட்டாயமாக அரிசிக் கஞ்சி வழங்கப்பட்டது.

நேற்று மாலை முருகனையும், பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியையும் சந்தித்துப் பேசுவதற்கு முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி சென்றிருந்தார். ஆனால் அவருக்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. இதனையடுத்து புகழேந்தி நிருபர்களை சந்தித்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், “தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சிறைத்துறை ஊழலை கேட்க முயன்றதால், முருகனின் மீது பொய்யான காரணத்தைக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்களது விடுதலையைத் தடுக்க முயல்கின்றனர். சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகின்றார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

https://www.ilakku.org/?p=37334

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.