Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேளான் சட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சீமான் ஆர்ப்பாட்டம்

 

  • Replies 94
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
26-வது நாளாக எட்டிய விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவித்த டாக்டர்கள், நர்ஸ்கள் ; கோரிக்கைகளை தீர்க்க மத்திய அரசு தயார் என கடிதம்

26-வது நாளாக எட்டிய விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவித்த டாக்டர்கள், நர்ஸ்கள் ; கோரிக்கைகளை தீர்க்க மத்திய அரசு தயார் என கடிதம்
 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்கள் நலனுக்கு எதிரானவை என்று கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராடி வரும் விவசாயிகளின் 40 அமைப்புகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாய அமைப்புகளும், அதற்கு அழுத்தம் தரவே கூடாது, வேண்டுமானால் திருத்தங்கள் செய்யலாம் என மத்திய அரசும் தத்தமது நிலைப்பாடுகளில் உறுதியாக உள்ளனர்.

இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. வாட்டியெடுக்கும் குளிர்கூட விவசாயிகளை போராடுவதில் இருந்து தடுக்க முடியவில்லை.

விவசாயிகள் போராட்டம் இன்று 26 நாளாக நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாபை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டக் களத்திற்கு குவிந்துள்ளனர். 

இன்றிலிருந்து உண்ணாவிரத தொடர் சங்கிலி போராட்டத்தைத் தொடங்கவுள்ள விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யப்போவதாக அவர்கள் கூறினர்.

இதுவரை உடல்நலக்குறைவு, விபத்து மற்றும் கடும் குளிரால் இறந்துபோன 33 விவசாயிகளுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுபோன்ற உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதியவர்களுக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளிக்கவுள்ளதாகவும் மருத்துவர்களும், செவிலியர்களும் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் பஞ்சாபைச் சேர்ந்த டாட்டூ கலைஞர்களும் போராட்ட களத்திற்கு வந்து, அங்குள்ள விவசாயிகளுக்கு பஞ்சாப் வரைபடம் மற்றும் விவசாயம் சம்மந்தமான டாட்டூக்களை இலவசமாக வரைந்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி மணி அடிக்க சொன்னதைப் போன்று, இன்று அவர் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மணியோசை எழுப்புமாறு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்தீத் சிங் வேண்டுகோள் வைத்துள்ளார்.

வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற்றுவிட்டால், டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்றும், அன்று நாடு முழுவதும் மக்கள் மதிய உணவைத் தவிர்த்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ராகேஷ் திகேத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினருக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கத்தினர் தங்களின் குறைகள், கவலைகள், சந்தேகங்களைக் கூறினால், அடுத்தககட்டப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கான தேதியைக் குறிக்கலாம். இதற்கான பேச்சுவார்த்தையை டெல்லி விஞ்ஞான் பவனில் நடத்தலாம். 

விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லி போராட்ட களத்தில் 11 பேர் கொண்ட குழு, இந்த உண்ணாவிரதத்தை இருக்கப்போவதாகவும், அரியானாவிலிருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி சுங்கச்சாவடி வசூலை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், அரியானா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை 25-ந் தேதியில் இருந்து 27-ந் தேதிவரை விவசாயிகள் தடுத்து நிறுத்துவார்கள் என்று விவசாய தலைவர் ஜெகஜீத்சிங் டாலிவாலா தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர் ராம்பால் சிங் கூறுகையில்,

இந்த போராட்டம் தொடங்கி 3-4 மாதங்கள் ஆகிவிட்டன, முதலில் நாங்கள் இந்த போராட்டத்தை பஞ்சாபில் போராடினோம், இப்போது நாங்கள் டெல்லியில் போராடி வருகிறோம்.  விவசாய சட்டங்கள் திரும்பும் வரை நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம் என்றார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/21120346/Farmers-Protest-Doctors-nurses-from-Punjab-extend.vpf

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியில் 27 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியில் 27 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
 

புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி (சந்தைகள்) அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.


இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் 27-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் நாளாக நாளாக குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும், மாற்றுவழிகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், போக்குவரத்து நெரிசல்கள் தொடர்வதும் டெல்லி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எப்போது இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/22092528/Farmers-protest-continues-for-27th-day-amid-severe.vpf

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, text that says '62 வயது பெண் 210 கிலோ மீட்டர் ஜீப்பை ஓட்டி வந்து விவசாயிகள் போராட்டத்தில் போராடி வருகிறார்.. ਸਾਨ াক MD FB@SAGO JEEP என்னா கம்பீரம்.. என்னா தில்லு! 27 நாள் போராடியும் குறையாத அதே எழுச்சி. பின்வாங்குற பேச்சுக்கே இடமில்ல போல'

  • கருத்துக்கள உறவுகள்
அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - பிரதமர் மோடி

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்  - பிரதமர் மோடி
 

புதுடெல்லி

உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ்  சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

உழவர் கடன் அட்டை மூலம்   2.5 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

உழவர் கடன் அட்டை மூலம் ஆண்டுக்கு 4 சதவீதம்  என்கிற குறைந்த வட்டியில் கடன்பெறுவதை மற்ற விவசாயிகளுக்கு எடுத்துரையுங்கள்

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. இது நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் எந்த இடைத்தரகர்களுக்கும் பங்கு இல்லை. கமிஷனும் கொடுக்க தேவையில்லை. விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுகிறது.

80 சதவீத விவசாயிகளுக்கு குறைந்தளவு சொத்து உள்ளது. ஏழை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டதால், அவர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டனர். சிறு விவசாயிகளின் நலனுக்காக எனதுஅரசு சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. விவசாயிகளுக்கு,சிறந்த காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்தோம். 

 மத்திய அரசு திட்டங்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்காததால், அவற்றின் பயன்களை மேற்குவங்காள விவசாயிகள் அடைய முடியவில்லை.

மம்தா பானர்ஜியின் கொள்கைகள் வங்காளத்தை அழித்துவிட்டது.  விவசாயிகளுக்கு எதிரான மம்தாவின் நடவடிக்கைகள் என்னைப் புண்படுத்தியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை கைவிடப்படும் என்றும் விவசாயிகளிடம் எதிர்க்கட்சியினர் தவறான தகவலைப் பரப்புகின்றனர்.   சில போராட்டங்களுக்கு பின்அரசியல் காரணங்கள் உள்ளன. வேளாண் சட்டத்தை வைத்து சிலர் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்டு, நமது பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் அழிக்கின்றன.உங்கள் அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் .

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், விளம்பரத்திற்காக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். கேரளாவில் விவசாய பொருள் மார்க்கெட் குழு(ஏபிஎம்சி) இல்லை. அதனை ஏன் அம்மாநில அரசு கொண்டு வரவில்லை. சொந்த நலனுக்காக தான் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளன. எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. தவறாக வழிநடத்த உரிமையில்லை.

 விவசாயத்துறையை நாம் நவீனப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.  வேளாண்துறைச் சீர்திருத்தங்களால் விவசாயிகள் விளைபொருட்களை எங்கும் யாருக்கும் விற்க முடியும் என்பதால் நல்ல விலை கிடைக்கும். வேளாண் சட்டங்களால், ஒரு மண்டிகூட மூடப்படாது. இவ்வாறு அவர் பேசினார். முந்தைய அரசு விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை மறந்துவிட்டதாகவும், முந்தைய அரசின் கொள்கைகளால் ஏழைகள் மேலும் ஏழைகளானதாகவும் மோடி தெரிவித்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/25155236/PM-address-to-farmers-Don-t-play-with-farmers-future.vpf

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் புதனன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு  அழைப்பு | Athavan News

எதிர்வரும் புதனன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்று காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இருப்பினும் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விக்யான் பவனில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி குறித்த விடயம் தொடர்பாக பேசுவதற்கு 40 விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

http://athavannews.com/எதிர்வரும்-புதனன்று-பேச்/

  • கருத்துக்கள உறவுகள்

`விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை!’- பா.ஜ.க-விலிருந்து விலகிய முன்னாள் எம்.பி

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு வீரர்களில் சிலரும், தலைவர்கள் பலரும் தங்களின் விருதுகளை திருப்பியளித்துவருகின்றனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஹரீந்தர் சிங் கஹல்சா (73), கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த செப்டெம்பர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று நாடு முழுவதுமுள்ள பல்வேறு விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அதன் நீட்சியாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்பினர் வரலாறு காணாத வகையில் ஒன்று திரண்டு டெல்லியின் தேசிய நெடுச்சாலைகளில் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
 
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாக, மத்திய அரசு விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளிடம் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், தற்போது போராட்டம் தொடர்ந்துவருகிறது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு வீரர்களும், தலைவர்களில் பலரும் தங்களின் விருதுகளை திருப்பியளித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஹரீந்தர் சிங் ஹல்சா, ``மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயல்பட்டுவருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வீடுகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கடுமையான பனிக்கு இடையிலும் தங்களின் உரிமைகளுக்காக போராடிவருகின்றனர். இதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எவ்வித முயற்சியையும் அரசாங்கம் எடுக்காததை நான் மிகவும் கண்டிக்கிறேன்.

அதனால், இதற்கு மேலும் இந்தக் கட்சியில் எனது பணியைத் தொடர விரும்பவில்லை” என்று கூறி பா.ஜ.க-விலிருந்து விலகியிருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிலிருந்த ஹரீந்தர் சிங் கஹல்சா பஞ்சாப்பிலுள்ள ஃபதேகர்க் சாஹிப் (Fatehgarh Sahib) தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார்.

ஹரீந்தர் சிங் ஹல்சா
 
ஹரீந்தர் சிங் ஹல்சா

இதேபோல், விவசாயிகள் மீதான மத்திய அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக்தன்திர்க் கட்சி (Rashtriya Loktantrik Party) பா.ஜ.க-வுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் ஹனுமன் பெனிவால், ``மத்திய அரசின் இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பாக, இதே போன்று அகாலிதளம் கட்சியும் விவயசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க-கூட்டணியிலிருந்து வெளியேறியது.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/farmers-protest-ex-mp-harinder-singh-khalsa-quits-bjp

  • கருத்துக்கள உறவுகள்
எனது தியாகம் வீணாகப் போகக்கூடாது“ - டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி தற்கொலை

“எனது தியாகம் வீணாகப் போகக்கூடாது“ -  டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி தற்கொலை
 
வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
 
பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக் கான விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஒரு மாதத்தை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தை விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. குறிப்பாக மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.
 
ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. எனவே இது தொடர்பாக வருகிற 4-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
 
இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
 
இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 38-வது நாளை எட்டியது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அவர்கள், டெல்லி எல்லைகளில் எந்த வித தொய்வும் இன்றி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
 
கடந்த சில நாட்களாக தலைநகரில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக புத்தாண்டு தினமான நேற்று 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்தவெப்பநிலை ஆகும்.
 
இந்த கடுமையான குளிரிலும் இரவு-பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனால் தங்கள் உடல்நலத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ள போதும் அவற்றை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதிலேயே உறுதியாக உள்ளனர்.
 
இந்நிலையில்,  இன்று காலை காசியாபாத்தில் உள்ள போராட்ட களத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென தற்கொலை  செய்துகொண்டார். அங்கு உள்ள நடமாடும் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனது தியாகம் வீணாகப் போகக்கூடாது என்றும் தன்னை எல்லையிலேயே புதைக்குமாறு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
விவசாயிகள் போராட்டதில் கலந்து கொண்டவர்களில் 40 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி: விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

will-hold-tractor-parade-towards-delhi-on-jan-26-if-demands-not-met-farmer-unions கோப்புப்படம்
 

புதுடெல்லி

எங்களின் கோரி்க்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் குடியரசுதினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு மரியாதை முடிந்தபின் விவசாயிகள் சார்பில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற பல்வேறு போராட்டங்கள் வாயிலாக விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 6 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. விளைநிலங்களில் வேளாண் கழிவுகளை எரித்தல், மின்கட்டண உயர்வு ஆகியவை பற்றி மட்டும் பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் வரும் 4-ம் தேதி அடுத்தக் கட்டப்பேச்சு நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியே நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

வரும் 26-ம் தேதி குடியரசுத் தினத்துக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1609582771756.jpg யோகேந்திர யாதவ்

இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால் சிங் இன்று நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் “ எங்களின் கோரிக்கைகளுக்கு வரும் 4-ம் தேதி நடக்கும் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று அணிவகுப்பு ஊர்வலம் முடிந்தபின், விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி டெல்லியை நோக்கி நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்

ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் நிருபர்களிடம் கூறுகையில் “ விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு கூறுவது முற்றிலும் பொய். இதுவரை ஏதும் எழுதி உறுதிதரப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை” எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குருராம் சிங் சோதனி கூறுகையில் “கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையில், 23 பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைத் தரமுடியுமா, அதை எம்எஸ்வி விலையில் வாங்க முடியுமா எனக் கேட்டோம். அதற்கு மத்தியஅரசு முடியாது எனத் தெரிவித்தனர். பின் எதற்காக நாட்டு மக்களுக்கு தவறான செய்தியை சொல்கிறீர்கள். இதுவரை 50 விவசாயிகள் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்

 

https://www.hindutamil.in/news/india/618248-will-hold-tractor-parade-towards-delhi-on-jan-26-if-demands-not-met-farmer-unions-1.html

  • கருத்துக்கள உறவுகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி,
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
 
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 39-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய 6-வது கட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகளுக்கு முடிவு காணப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
 
இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் முக்கியமாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.
 
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையை அதிகமாக நம்பியுள்ளனர். இதில் தங்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என கருதி வரும் அவர்கள், இதன் மூலம் தங்கள் காத்திருப்பு விரைவில் முடிவு பெறும் என எதிர்பார்த்து உள்ளனர்.
 
அதேநேரம் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். குறிப்பாக 6-ந் தேதி மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி மற்றும் அரியானாவில் வர்த்தக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள் அடைப்பு உள்பட பல நடவடிக்கைகளுக்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
மத்திய அரசு - விவசாய சங்கங்கள் இடையேயான 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

மத்திய அரசு - விவசாய சங்கங்கள் இடையேயான 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல், டெல்லி எல்லையில் பஞ்சாப் அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6- சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கடைசியாக கடந்த 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. 

எனினும் சட்டங்களை திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதிபட  தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசு இடையே 7-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  டெல்லி விஞ்ஞான் பவனில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/04142844/Centre-Holds-Talks-With-Farmer-On-Repeal-Of-Farm-Laws.vpf

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

 
1-25-696x392.jpg
 15 Views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு  நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்துள்ளது.

மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இந்திய தலைநகர் டெல்லியில் கடும் குளிர், கொட்டும் மழைக்கு மத்தியில் 40ஆம் நாளாக போராட்டத்தில்   ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள்.

இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு, இதுவரை 6 கட்டங்களாக தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இதுவரை நடந்த பேச்சுகளில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

இதையடுத்து, நேற்று மீண்டும் பேச்சு நடந்தது. இதில் குறைந்த பட்ச ஆதாரவிலை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பல்வேறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூட்டத்தில் பேசிய இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறியதாக பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் சட்டத்தின் அம்சங்களை விவாதிக்க நாங்கள் விரும்பியபோதும், அதை விவசாயிகள் ஏற்காததால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளன என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  குற்றம்சுமத்தியுள்ளார்.

இதையடுத்து மீ்ண்டும் வரும் 8-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

 

https://www.ilakku.org/?p=38548

  • கருத்துக்கள உறவுகள்
சீர்திருத்தத்துக்கு பின்னால் உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்’ - டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி வேண்டுகோள்

‘சீர்திருத்தத்துக்கு பின்னால் உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்’ - டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி வேண்டுகோள்
 
புதுடெல்லி, 
 
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
 
இந்த நிலையில் ஒரு சில விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய தோமர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
 
 
அப்போது அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. அதனால்தான் சட்டங்களை ஆதரித்து எங்களை சந்திக்க வரும் விவசாயிகளுடன் நாங்கள் பேசுகிறோம். அதைப்போல எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறோம்’ என்றார்.
 
நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் இந்த சட்டங்களை ஆதரிப்பதாக தெரிவித்த அவர், இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
 
வேளாண் சீர்திருத்தங்களுக்கு பின்னால் உள்ள உணர்வுகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உணர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இந்த விவகாரத்தில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். விவசாயிகள் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், இதற்காக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி

 

  • கருத்துக்கள உறவுகள்
நேற்று நடந்தது ஒத்திகைதான்; குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி: விவசாயிகள் அதிரடி

நேற்று நடந்தது ஒத்திகைதான்; குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி:  விவசாயிகள் அதிரடி
 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 44வது நாளாக நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எனவே இரு தரப்பினரும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.  இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் அணி திரண்டு நேற்று டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர்.  இதன்படி, டெல்லியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உள்பட டெல்லியின் நான்கு எல்லைகளில் இருந்தும் இந்த பேரணி நேற்று நடைபெற்றுது.

இதனை முன்னிட்டு, வன்முறை சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  இதேபோன்று, முக்கிய பகுதியான சிங்கு எல்லையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.  விவசாயிகளின் டிராக்டர் பேரணியை முன்னிட்டு அரியானாவில் உள்ள குண்ட்லி-மனேசர்-பல்வால் சுங்க சாவடி பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அரியானாவில் விவசாயிகள் பல்வால் பகுதி வரை டிராக்டர் பேரணி செல்ல முதலில் முடிவு செய்திருந்தனர்.  பின்னர் இதில் மாற்றம் செய்து, நொய்டா வரை டிராக்டரில் பேரணியாக சென்று விட்டு காஜிப்பூருக்கு திரும்புவது என்று முடிவு செய்தனர்.

பேரணியை கண்காணிக்க போலீசார் போதிய அளவில் குவிக்கப்பட்டனர்.  பேரணியை வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று காசியாபாத் மாவட்டத்திற்கான கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (நகரம்) சைலேந்திர குமார் சிங் கூறினார்.

இதன்பின்பு டிராக்டர் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  இதனை தொடர்ந்து பாரதீய கிசான் யூனியனை சேர்ந்த ராகேஷ் திகாய்த் கூறும்பொழுது, வருகிற 26ந்தேதி குடியரசு தின அணிவகுப்பில் நாங்களும் பேரணி நடத்துவோம்.  ஒருபுறம் பீரங்கிகள் அணிவகுக்கும்.  மறுபுறம் நாங்கள் டிராக்டர்களில் அணிவகுத்து செல்வோம் என கூறினார்.

விவசாய தலைவர்களில் ஒருவரான ராஜ்வீர் சிங் கூறும்பொழுது, டிராக்டர் பேரணி மிக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.  நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்ல.  இதனை அரசு கவனித்திருக்கும்.  இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட பின் விவசாயி சிம்ரன்ஜீத் என்பவர் கூறும்பொழுது, நடந்து முடிந்த பேரணி ஒத்திகைதான்.  குடியரசு தினத்தில் கொண்டாட்டத்துடன் பெரிய அளவில் பேரணி இருக்கும் என கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/08081355/What-happened-yesterday-was-a-rehearsal-Large-scale.vpf

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி

விவசாயிகள் போராட்டம்:  டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி
 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை 11-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைப்பதாக கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.  ஆனால், கடந்த 7-ந் தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அதுபோல், விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுக்களும் இன்று விசாரிக்கப்படுகின்றன. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் கோர்ட்டு தலையிடாது என்றும் கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில், இன்றைய விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு எடுக்கப்போகும் நிலைப்பாடு, கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.  இவற்றின் மீது நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.  என்ன பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எங்களுக்கு தெரியவில்லை? இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சிலர் தற்கொலை செய்துள்ளனர்.  வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.  என்ன நடந்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என கடிந்து கொண்டுள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/11124524/Farmers-Struggle-What-is-going-on-in-Delhi-Question.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் 50வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் 50வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்
 

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் நடைபெற்றது.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம், அதே நேரத்தில் 15-ந் தேதி மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 50வது நாளாக விவசாயிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடயே  காஞ்சிபுரம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகிப் பண்டிகை கொண்டாடினர்,

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூரில் வேளாண் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/13083928/The-peasant-struggle-reached-its-50th-day.vpf

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்! - சாலையில் தடுப்புச்சுவர், ஆணிகளுடன் டெல்லி காவல்துறை

ஆணிகளைக்கொண்டு தடுப்புச் சுவர்

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மூன்று எல்லைகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுவருகின்றனர். அதோடு சாலைகளில் சிமென்ட் கொண்டும், ஆணிகளைப் பதித்தும் தடுப்புச்சுவர் அமைத்துவருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரசுடன் நடத்தப்பட்ட 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளும்ம் தோல்வியடைந்திருக்கும் நிலையில், `குடியரசுத் தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஊடுருவிய சிலர் கலவரத்தை ஏற்படுத்தினர்’ என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காயம்பட்ட காவலர்கள் சிலரும், `தங்களைத் தாக்கியது விவசாயிகள் அல்ல’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கலவரத்தில் 400-க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்தனர்.

தடுப்புச் சுவர்
 
தடுப்புச் சுவர் ANI

நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் போராட்டத்தை விவசாயிகள் மேலும் தீவிரப்படுத்த முடிவுசெய்திருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் டெல்லியின் மூன்று எல்லைகளிலும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அதிக அளவில் விவசாயிகள் குவிந்துவருகிறார்கள். போராட்டத்தை முடித்துவைத்து, விவசாயிகளைக் கலைத்துவிட வேண்டும் என்பதில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

குடியரசு தினத்தன்று நடைபெற்றது போன்ற மற்றொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறையினர் உறுதியாக இருக்கின்றனர். அதற்காகப் பலகட்ட முன்னேற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, தடுப்புகளைக் கொண்டு பலத்த பாதுகாப்புகளை ஏற்படுத்திவருகின்றனர்.

ஆணிகளைக் கொண்டு தடுப்புச் சுவர்
 
ஆணிகளைக் கொண்டு தடுப்புச் சுவர் ANI

அதுமட்டுமல்லாமல், சிமென்ட் கொண்டு சாலைகளில் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்திவருகின்றனர். இந்தச் சுவர்கள் எளிதில் உடைக்க முடியாத வண்ணம் கூடுதல் கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தடுப்புகளுக்குப் பின்பகுதிகளில் சாலைகளில் ஆணிகளைக்கொண்டு வாகனங்கள் எதுவும் செல்லாத வண்ணமும் தடுப்புகளைக் காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடுவதாலும், போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் டெல்லியின் எல்லையில் பதற்றம் தொடர்கிறது!

 

https://www.vikatan.com/government-and-politics/politics/concrete-barricade-and-barrier-wall-with-nails-made-on-the-delhi-border

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விவசாயிகள் போராட்டம் 120 நாட்களை எட்டியது; நாளை நாடு தழுவிய முழு அடைப்பு

Bharat-Band-960x540-1-696x392.jpg
 21 Views

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 120வது நாளை எட்டியுள்ளது. இதனையொட்டி நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு  விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்றுடன் 120வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் 4 மாதங்களை நிறைவு செய்துள்ளதைத் தொடர்ந்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக  சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சங்கத் தலைவர் தர்ஷன் பால் வெளியிட்ட அறிக்கையில், “நாடு தழுவிய அளவில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். காலை  6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில், பேருந்துகள், ரயில்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் என அனைத்து இயக்கமும் நிறுத்த வேண்டும். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு  அளித்து நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.ilakku.org/?p=45460

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்- பஞ்சாபில் கடைகள் அடைப்பு

விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்- பஞ்சாபில் கடைகள் அடைப்பு

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 
டெல்லி புறநகரில் சுழற்சி முறையில் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் இன்று 121-வது நாளை எட்டியது. இந்தநிலையில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரும் கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் முழு அடைப்பு போராட்டத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. மற்ற மாநிலங்களில் முழு அடைப்பு நடத்தி போக்குவரத்தை தடை செய்வோம் என்று விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும் சம்குக்தா கிஷான் மோர்ச்சா என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

விவசாயிகள் அறிவித்தபடி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை 12 மணி நேரத்திற்கு முழு அடைப்பு போராட்டம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதன்காரணமாக பஞ்சாப், அரியானா உள்பட சில வட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக காணப்பட்டது. குறிப்பாக பஞ்சாபில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அரியானா, ராஜஸ்தானிலும் பல பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

பஞ்சாபில் ரெயில், பஸ் உள்பட வாகன போக்குவரத்து அனைத்தும் தடுக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி வட மாநிலங்களில் போக்குவரத்தில் எந்த இடையூறும் இல்லை.

டெல்லி புறநகரில் காசிப்பூர், திக்கிரி, சிங்கு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏற்கனவே முற்றுகையிட்டு இருந்தனர். இன்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களுக்கு வாகன போக்குவரத்தில் இடையூறு காணப்பட்டது.

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

பஞ்சாப், அரியானாவில் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தடுப்புகளை ஏற்படுத்தி மறியல் செய்தனர். பதிண்தா, லுதியானா, அமிர்தசரஸ், பாட்டியாலா, மொகாலி, ரோதக், ஜார்ஜர் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் மிக கடுமையாக காணப்பட்டது.

ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் விவசாயிகள் அனுமதி கொடுத்தனர். அம்பாலா-டெல்லி இடையே பல இடங்களில் விவசாயிகள் மறியல் செய்தனர்.

சில இடங்களில் ரெயில் நிலையங்களிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளுக்கும், மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே இதுவரை 11 தடவை சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதன் காரணமாக விவசாயிகள் போராட்டம் காலவரையின்றி நீடித்தபடி உள்ளது.

 

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/03/26123654/2471968/Tamil-News-Farmers-Full-Bandh-against-farm-bills.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.