Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

128123963_3890661377632916_3499086261817682168_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=e60qjwiAKOoAX8fdRII&_nc_ht=scontent-frt3-2.xx&oh=ead7b7e25b6c12e2de3d11601b007494&oe=5FE94CE4

 128015235_3890661367632917_4843630545666338944_n.jpg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=EJxOohWsccIAX_j3LP0&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8833903c82142f036866d00f4b465a4b&oe=5FEB46BE

பல,  முகம் காட்டும்.. புட்டு.

புட்டிற்கு மற்றய எந்த உணவையும் விட சில விசேட தன்மையுண்டு. அரிசிமா புட்டு, கோதுமை மா புட்டு, புடிப் புட்டு, பால் புட்டு, குரக்கன் புட்டு, ஒடியல் புட்டு, இறால் புட்டு, மரவள்ளி மா புட்டு என்று காலை, மாலை உணவாக இடையில் சாப்பிடும் சிற்றுண்டியாக சாப்பாட்டிற்கு மேல் சாப்பிடும் இனிப்பு பண்டமாக சோற்றுடன் கலந்து சுவை சேர்க்கும் சேர்ந்தியங்கும் தோழனாக. இடையிடையே அரிதாக சாப்பிடும் உணவாக என்ற பல முகம் புட்டிற்கு உண்டு.

 
புட்டில் மாவையும் தேங்காய் பூவையும் காதலன் காதலி போல் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக கலந்த இடையிடையே இணைந்தும் தனித்துவம் காட்டும் இயல்புகள் கலந்தே இருக்கும்.
 
நீத்துப் பெட்டி, புட்டு குழல் என்று இயற்கை சார்ந்த பனை ஓலையும், மூங்கிலும் இணைந்து இசைத்திடும் இராகமாக ஆவி பறக்கும் சுவையே சுவைதான்.
 
நவீனங்கள் அலுமினியம் என்று இடையில் புகுந்தாலும் இந்த கற்பகத்தருவின் ஓலையும், புல்லாங் குழலாக ஒலி கொடுக்கும் மூங்கிலுமே புட்டிற்கு சுவையையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பவை.
 
இங்கு சுளகும், குட்டாளச் சட்டியும் (அரிகன் சட்டி) இந்த புட்டுக் குழைத்தலுக்குள் தமது கை வண்ணங்களை காட்டியே நிற்கும். சுவையிற்கு பெரிய துருவாலக துருவிய தேங்காய் சுவை சேர்த்தாலும் இடையிடையே தேங்காய் பாலும், சீனியும், சக்கரையும் நாம் இணைத்துக் கொள்வதும் உண்டு. இப்படியாக இவற்றின் ஒரு சமூகமாக தன்னை நிலை நிறுத்தி எம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட புட்டை சற்றுத்தான் பேசிப் பார்ப்போமே.....
எமக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள உறவுகள் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இந்தியாவின் வந்தேறுகுடிகள் என்று கருதப்படுவதில் ஏற்புடைமை இல்லை. அதற்காக நாம் இன்று இலங்கையில் இந்தியத் தமிழர் என்று அழைக்கப்படுவதில்லை அடையாளப்படுத்தப்படுவதில்லை.
நாம் ஈழத் தமிழராகவே அடையாளப்படுத்தப்படுகின்றோம்.
 
இன்னும் ஒரு படி மேலே போய் எமது தமிழர்களின் இந்திய... தென் இந்திய திராவிட மக்களின் அதில் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் மரபணுவை ஆய்வு செய்து போது ஆபிரிக்காவின் கறுப்பின மக்களின் அடியில் இருந்து வந்ததாக விஞ்ஞானம் நிறுவி நிற்கின்றது. அதற்காக நாம் திராவிடர்கள்.. தமிழர்கள்... இலங்கை தமிழர்களை ஆபிரிக்க கறுப்பர்கள் என்று யாரும் விழிப்பதில்லை.
மூலம் எங்கிருந்தாலும் அது அங்கிருந்து நழுவி வந்து வளர்ச்சியடைந்து அது ஒரு புதுப் பரிமாணத்தை எடுத்து தனக்கான புதிய அடையாளத்தை எடுப்பதே வளர்ச்சி.. கூர்ப்பு. இதன் அடிப்படையில் புட்டு மூங்கிலிற்குள் போட்டு பிலிபைன்ஸ் என்று ஆரம்ப புள்ளியை ஆராய்சி செய்து சொல்லி இருந்தாலும் இது கேரளத்தில் இருந்து இலங்கையிற்கு வந்தாக கூறினாலும் அது ஈழத்திற்கு வந்து தனக்குரிய அடையாளத்தை தனித் தன்மையை பெற்றிருக்கின்றது என்பதே உண்மை. எனவே அங்கிருந்ததான் இதனைப் பற்றி நான் பேசவிளைகின்றேன்.
 
அது தமிழ் மக்களின் ஒரு உணவாக அடையாளம் பெற்றிருக்கின்றது என்பதே உண்மை. தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளையை மாற்றான் பிள்ளை என்று நாம் விழிப்பது இல்லை அதன் வலியும் பலருக்கும் புரியும் இதனைப் போன்றதே இதவும். இது வேறு ஒரு இனத்தின் நாட்டின் உணவாக கூட இருக்கலாம் ஆனாலும் எமது வாழ்வின் உணர்வில் கலந்துவிட்ட உணவாகி நிற்கின்றது.
இதற்கான உரிமத்தை அதற்கான ஆரம்ப புள்ளியை வைத்து கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேணும் என்றால் அவர்களும் கொண்டாட்டும் ஏக போகம் கொண்டாடுவதில் எனக்கு எப்போது எதிலும் எடன்பாடு இல்லை. அந்த வகையில் புட்டு ஈழத் தமிழரின் ஒரு உணவாக நாம் கருதியே பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
அது ஈழத்திற்குள் வந்த பின்பு நான் மேலே கூறி பல்வேறு பரிணாமங்களை எடுத்து தன்னை செழுமைப்படுத்தி புதுப்புது வடிவங்களும்இ சுவையும்இ பெயரும் பெற்று இருக்கின்றது.
 
இது இடியப்பத்திற்கு இல்லாத ஒரு விசேட தன்மை. வேறு பல உணவிற்கு இல்லாத சிறப்பு. பல உணவகள் ஓரே ஒரு வடிவத்தை மட்டுமே எடுத்துள்ளன. புட்டு மாத்திரமே பல அவதாரங்களை எடுத்து எம்மிடையே கொலுவோச்சி நிற்கின்றது. ஆரோக்கியம் என்று பார்த்தால் சிறுதானிய மாக்களினால் ஆன உணவுப்பட்டங்கள் ஆரோக்கியமானவை அளவாக மாப் பொருளை உள்ளெடுத்தல் ஆரொக்கியமானது என்ற வரையிறையிற்குள் நாம் புட்டை உம் உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும்.
 
அரிசி மா புட்டு... சேரல் பச்சை அரிசி ஊறப் போட்டு கல்லுரைலில் இடித்து அந்த மாவை நீத்துப் பெட்டியில் வைத்து நீராவியில் அவித்து பின்பு சுழகில் போட்டு வெந்நீர் கலந்து குழைத்து தேங்காய்பூ கலந்து அவித்தல் என்பதற்கு நிகரான சுவையும் ஆரோக்கியமும் வேறு எந்த வகை புட்டு அவித்தலிலும் இல்லை. அவித்த புட்டை பனை ஓலைப் பெட்டியிற்குள் போட்டு வைக்க வேண்டும். நாம் பொதுவாக அவிக்கும் புட்டு என்பதினால் அதன் செய் முறையை இங்கு தந்தேன்.
 
கேரளத்தில் இடியப்பத்தை அதிகம் தேய்காய் பாலுடன் கலந்து உண்பர் தற்போது பாயா வைத்தும் சாப்பிடுகின்றனர். தமிழ் நாட்டில் அதிகம் இடியப்பம் இல்லையாகினும் கேரளத்தின் தாக்கமே அதிகம்.
 
வறுமையின் அடையாளமாக அரிசிப் புட்டும் சிவப்பு மிளகாய்ச் சம்பலுமாகிப் போன வரலாற்றை தனக்குள் கொண்டிருந்து இந்த புட்டு. வறுமையின் இல(ள)கு நிலையில் பொரியலுடன் புட்டு, முட்டைப் பொரியலுடன் புட்டு ஏன் இறைச்சி, மீன் வேறு மரக்கறிகளுடன் புட்டு என்று வசதிகளின் அடிப்படையில் மாற்றம் பெற்றிருக்கின்றது தற்போது.
 
முக்கனிகளுடன் இணைத்துச் சாப்பிடுதல் என்பதுவும் சீனி கலந்து சாப்பிடுதல் என்பதுவும் மற்றய எந்த சாப்பாட்டையும் விட புட்டி பெற்றிருக்கும் விசேட நிலமை. இது இடியப்பத்திற்கோ அல்லது தோசை இட்லிக்கோ பொருந்தாது. நான் இங்கு கறி இட்லிக்குள் போக விரும்வில்லை...?
இந்த இரண்டு 'P' இற்கும் இடையிலான போட்டியாக உருவகப்படுத்தினாலும் இந்தாலியரின் பீட்சா என்று உலகில் பொதுவாகப் பேசப்பட்டாலும் அது உலகெங்கும் பரவி தற்போது இருக்கின்றது. அதற்கு முதற்காரணம் இந்த அவசர உலகின் இலகுவில் எவ்விடத்திலும் இலாவகமாக ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு போய்கிட்டே இருக்கலாம் என்பதாலேயே அந்த நிலமை.
 
இதற்கு அப்பால் இதனுடன் கலக்கப்படும் புளிப்புத் தன்மையுடைய தக்காளிச்சாறு(tomato sauce) அடிப்படையிலான புளிப்பும் இயல்பில் ருசியை ஏற்படுத்தும் வெண்ணை என்று நாம் அழைக்கும் சீஸ் கொடுக்கும் சுவையுமே முக்கிய காரணங்கள்.
பீட்சா ஆறினால் விராட்டி புட்டு ஆறினாலும் ஆட்டம் காணாது விரும்பி சாப்பிடும் அமிர்த சுவை கொண்டது உணவு என்பதே இங்குள்ள சிறப்பு .
சிறப்பாக எமது தாயகத்து உணவுகளுக்கு உரிய சிறப்பு ஆக்கி ஆற வைத்து அடுத்த வேளை சூடாக்காமலும் சாப்பிடும் போதும் சுவை மாறாமல் இருக்கும் என்ற உணவுத் தயாரிப்பு முறை. ஆனால் மேற்கத்திய உணவுகள் அடுத்த மணித்தியாலயம் என்பது நொது நோதுத்துப் போய் சுவையில்லாப் பண்டம் ஆகி குப்பையிலே போகும் உப்பில்லாப் பண்டம் போல் ஆகிவிடும் என்பதை நாம் இங்கு சீர்தூக்கி பார்க்க வேண்டும். நான் இங்கு பழமையை பேசவில்லை பழமையிற்குள் இருக்கும் சிறப்பை பேசவிளைகின்றேன்.
 
இதனை யாழ்ப்பாண காவல்துறை அதிகாரியிடம் பீட்சா சுட்டு நாளைக்கு வைத்து சாப்பிட முடியுமா...? புட்டு அவிச்சு ஆறிய பின்பும் சுவையாக சாப்பிட முடியும்... இதில் உள்ள வகை வகையான புட்டுகளை பற்றி பேசி இருக்க வேண்டும்.
 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது தமிழர்களின் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு என்று உலகின் பல்வேறு சமூகத்தினரிடமும் ஏற்புடையதாக்கும் உணவு எது...? இதற்கான அடையாளம் இருக்கின்றதா...? அப்படி இருந்தால் அதனை நாம் வேற்று இனத்தவர்களும் விரும்பிச் சாப்பிடும் வகையில் முன்னிறுத்தி அடையாளப்படுத்தியுள்ளோமா...? அப்படி அடையாளப்படுத்தி அவர்களால் ஏற்புடையதாக்கிய உணவுகளை 'அழகு"படுத்தி பரிமாறும் முறமைகளை நாம் கொணடிருக்கின்றோமா...? என்பதை நான் இங்கு வினாவாக முன்வைக்கின்றேன்.
இதுதான் இன்று பேசப்பட வேண்டிய விடயம் மாறாக பீட்சாவா புட்டா என்பது அல்ல.
மாறாக பழம் பெருமை மட்டும் பேசி நாம் இருப்பது போதுமானதா...? சரியானதா...? எமது அடையாளத்தை பாரம்பரியத்தை பண்பாட்டை எடுத்து நிறுத்த போதுமானதா...? என்ற கேள்வி எம்மிடம் உள்ளது.
 
எமது ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை அடையாளப்படுத்தி இதற்குள் இருக்கு ஊட்டச் சத்துகள் அதனை எவ்வாறு முறைப்படி ஆக்குவது... உண்பது.. எவ்வாறு போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு அறியப்பட்டு ஆவணப்படுதப்பட்டு அங்கீகாரத்தை பெற வேண்டும் அதனை அறிமுகப்படுத்தி சர்வ தேச சமூகத்திடம் ஏற்புடமையை உருவாக்க வேண்டும்.
 
தென் அமெரிக்கர்கள் அதிகம் சாப்பிடும் ஒரு வகை சோத்து குழையலை மென்மையான ரொட்டியிற்குள் வைத்து உருட்டி உலகெங்கும் ஏற்புடையதான உணவாக்கியது போல் சோயா சாற்றை(soy sauce) கலந்து செய்யும் எல்லாவகை உணவுகளையும் சைனீஸ் உணவு என்று எற்புடமை ஏற்படுத்தியதையும், ஓரளவிற்கேனும் புரியாணி என்று உணவை சமைத்து இந்தியா?வின் உணவு என்று ஏற்புடமை ஆக்கியதையும் கூடவே சமோசா இன்று மேற்குலக சிறறுண்டி மேசையில் சங்கோஜம் இன்றி உண்ண வைத்த செயற்பாட்டையும் நாமும் எமது பாரம்பரிய உணவுகள் மூலம் செய்ய வேண்டும்.
 
நான் வரலாற்று ஆய்வாளனோ உணவு பற்றிய பாண்டித்தியம் பெற்றவனோ அல்ல.
வெறும் யாழ் இந்து மாணவ விடுதியில் அவிச்சமாவை பாயில் கொட்டி ஒருவர் மாவில் தண்ணி தெளிக்க மற்றவர் பெரிய தட்டகப்பையினால் கிழறி பின்பு புட்டு என்று சொல்லும் அந்த மாவை அண்டா ஒன்றிற்குள் அள்ளிப் போட்டு ஆவியில் அவிச்சு இறக்கி தேங்காய் பூவை அதன் மேலே தூவிய சாப்பாட்டை சாப்பிட்டு வளர்ந்தவன்.
 
வறுத்த கோதுமை மா புட்டை மொக்கன் கடையில் ஆணம் விட்டு சாப்பிட்டு ஹொட்டலில் சாப்பட்டதாக உவகை கண்டவன் எனது அனுபவம் அவ்வளவே
 
பௌதிகப் பாடத்தில் சில பக்கங்களை கணிதத்துடன் இணைத்து படித்தவன். சில தாள்களில் கணணி என்று படிக்க முற்பட்டவன் அவ்வளவே என் பட்டப்படிப்பு பட்டறிவு பலரை போலவே எனக்கும் உண்டு.
 
வரலாற்றிலும் சமையிலிலும் பல வல்லுனர்கள் எம்மடையே உள்ளனர் அவர்கள் இதற்கான ஆய்வுகள் முறமைகளை தயார் செய்து சர்வதேச சமூகத்திடம் எமது உணவிற்கான ஏற்புடமையினை அறிமுகப்படுத்தட்டும் ஏற்புடமையை பெறட்டும்.
இதற்கான ஆதரவுக் கரங்களை கொடுப்பவர்களில் நானும் ஒருவனாக இருந்துவிட்டுப் போகின்றேன்.
 
பலரையும் போல் எப்படி இலங்கை காவல் துறை அதிகாரி ஒருவர் இப்படிச் சொல்ல முடியும் என்று மீசையை முறுக்கவும் இல்லை 'புட்டா" 'பிட்டா" என்று தமிழ் இலக்கணம் பற்றியும் பேச விரும்பவும் இல்லை.
இதற்கு அப்பால் புட்டை வைத்து திருக்குறளும், திருவெண்பாவும் பேச விளைவில்லை.
எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் எமது புராணங்களில் புட்டுக்கு மண் சுமந்த செம்மனச்செல்லிவியின் கதையில் இடம் பிடித்தது இந்த புட்டுத்தான் அதுவும் குழல் புட்டுதான் தேங்காய பூ போட்ட புட்டுத்தான். அந்த வகையிலும் புட்டு 'உயர்ந்து" தான் நிற்கின்றது என்று கூறி பிரம்படி வாங்கவும் நான் தயார்....?
 
இவற்றிற்கு அப்பால் இலங்கையில் புட்டிற்கு இன்னும் ஒரு விசேடம் உண்டு. இலங்கை வாழ் சிறுபான்மை மக்களாகிய தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் இடையேயான உறவை இந்த (குழல்) புட்டுடன் ஒப்பிடும் ஒரு வரலாற்று ஒன்றுமையை நாம் எம் வாழ்வியலுடன் இணைத்துப் பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை.
 
நாம்... சிறுபான்மை மக்கள்... புட்டுக்கள்தான் அவ்வாறு வாழ்ந்தால்தான் நாம் வாழ்வோம் அன்றேல் வீழ்வோம் என்ற சகோதரத்துவத்தை இவ்விடத்தில் கூறி இந்த புட்டுப் புதினத்தை முடிக்கின்றேன்

Logan Subramaniam

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் மகத்துவத்தை புட்டுப் புட்டு வைத்ததற்கு நன்றி......!

இடியப்பம் காச்சல் காரருக்கு விசேஷமானது, உழைப்பாளிகளுக்கு புட்டுதான் கொங்கிரீட் போன்றது. நிலைத்து நின்று பசி தங்கும் .....!  😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.