Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய தமிழ் சினிமா

Featured Replies

அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே...

என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட சினிமா குப்பை செய்திகளால், யாழ்கள வண்ணத்திரைப்பகுதியை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி.

யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய தமிழ் சினிமாவை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய சினிமா செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம்.

இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்

'பிக் பீ'யை மிஞ்சிய ரஜினி

தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பி்ல் அமிதாப் பச்சனை விட ரஜினிக்கு அதிக செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவி்ன் பாட்ஷா ரஜினி, இந்திய சினிமாவின் சக்கரவர்த்தி அமிதாப் பச்சன் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அமிதாப்பை விட அதிக செல்வாக்குடன் ரஜினி திகழ்வது தெரிய வந்துள்ளது.

வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தி்ல கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான் கேள்வி.

மொத்தம் 360 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த கருத்துக் கணிப்பில் ரஜினிக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும், அமிதாப்புக்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் சோ ராமசாமி, ஸ்கிரீன் பத்திரிக்கை ஆசிரியர் பாவனா செளம்யா, அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற பிரமுகர் சஞ்சய் படோடியா ஆகியோர் இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டனர்.

விவாதத்தில் கலந்து கொண்டு சோ பேசுகையில்,ரஜினி அற்புதமான நடிகர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. எந்த கேரக்டர் கொடுத்தாலும நடிக்கக் கூடியவர் ரஜினி.

அவரது படங்களுக்கு உலக அளவில் சந்தை மதிப்பு உள்ளது. அவரது செல்வாக்கும் உள்ளூரைத் தாண்டி வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. அதேசமயம், அமிதாப் பச்சனின் செல்வாக்கையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றார்

-thatstamil-

  • தொடங்கியவர்

'பிரேக்' பானு

தாமிரபரணி மூலம் கிடைத்த அழகான அடித்தளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தமிழில் பல பட வாய்புகளை இழந்து, படிக்கப் போன பானு, இப்போது நடிப்புக்கு பிரேக் கொடுத்து விட்டு மறுபடியும் படிக்கப் போகிறாராம்.

மலையாளத்து வாச மல்லிகை பானு. பெரிய பொண்ணுங்களுக்கேற்ற உடல் வாகுடன் அழகு ரோஜாவாக இருந்த பானு, படித்ததென்னவோ பத்தாப்புதான்.

ஆனால் தனது மத்தாப்பூ சிரிப்பால் தமிழ் ரசிகர்களை தாமிரபரணி நதியாக தொட்டுச் சிலிர்க்க வைத்த பானுவைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால், அவற்றை வேண்டாம் என நிராகரித்து விட்டார் பானு. என்ன காரணம் என்று விசாரித்தால், பத்தாவது வகுப்பு பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்ததால்தான் நடிப்புக்கு பிரேக் கொடுத்தார் பானு என்று தெரிய வந்தது.

இப்போது பத்தாவது வகுப்பை பாஸ் செய்து விட்டாராம் பானு.இடையில் கிடைத்த விடுமுறையில் மலையாளத்தில் கோல் என்ற படத்தில் மட்டும் நடித்தார் பானு.

சரி படிப்புதான் முடிந்து விட்டதே, இனிமேல் நடிக்கலாமே என்று பானுவிடம் சிலர் ஓலை அனுப்பினார்களாம். ஆனால் மறுபடியும் நடிப்புக்கு பிரேக் கொடுத்து விட்டாராம் பானு.

அதாவது பிளஸ் ஒன் படிக்கப் போகிறாராம். அதனால் மறுபடியும் சில காலத்திற்கு நடிக்க மாட்டாராம். இருந்தாலும் ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்ட கங்காரு என்ற மலையாளப் படத்தில் மட்டும் நடிப்பாராம் பானு.

இப்படத்தில் ஜெயசூர்யா, பிருத்விராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ராஜ்பாபு இயக்குகிறார். இந்தப் படத்திற்குப் பின்னர் வேறு படங்களில் பானு புக் ஆகவில்லையாம்.

இதுதவிர தெலுங்கிலும் ஒரு படம் உள்ளதாம். அதையும் முடித்து விட்டு நடிப்பை சஸ்பெண்ட் செய்து விட்டு சவுண்டாக படிக்கப் போகிறாராம்.

சேச்சிமாரெல்லாம் ரொம்ப வெவரமாக்கும்!

-thatstamil-

  • தொடங்கியவர்

சதாவின் அடுத்த அத்தியாயம்

தமிழ், தெலுங்கை ஒரு 'கை' பார்த்து விட்ட 'திருப்தியுடன்' சதா மலையாளத்திற்குள் நுழைந்துள்ளார்.

தெலுங்கு மூலம் தமிழுக்கு வந்தவர் பெங்களூரு தந்து நாவல் கனி சதா. தெலுங்கில் சதா நடித்த முதல் படம் சித்ரம். தேஜா இயக்கினார். இப்படம் அவருக்கு பெரும் பெயரை வாங்கி்த் தரவே, ஜெயம் படத்தில் நடித்தார். இது தமிழிலும் ரீமேக் ஆனது.

ஜெயம், ஜெயித்த பின்னர் சதா, டிமாண்டுக்குரிய நாயகி ஆனார். ஆனால் அவர் போட்ட கண்டிஷன்களும், காட்டிய பந்தாக்களும், செய்த சில்மிஷங்களும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் இம்சிக்க, சதாவை சாதா நடிகையாக்கி விட்டது.

அந்நியனை ரொம்பவே நம்பியிருந்தார் சதா. ஆனால் அது சதாவை கைவிட்டு விட்டது. யாரும் சீண்டாததால் அப்செட் ஆகிப் போன சதா,தனது பழைய பந்தாக்களைக் குறைத்துக் கொண்டு, அமைதியாக வாய்ப்பு தேடினார்.

ஆனாலும் துரதிஷ்டம் முன்னால் துரத்தினால், துக்கம் பின்னால் துரத்தும் என்பது போல சதாவுக்கு எதுவுமே சாதகமாக இல்லாமல் போய் விட்டது. கடைசியாக அவர் நடித்து வெளியான,உன்னாலே உன்னாலே படமும் சதாவுக்கு கை கொடுக்கவில்லை.

சமீபத்தில், சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்தில் கிடைத்த வாய்ப்பும் சதாவை விட்டு துரதிர்ஷ்டவசமாக விலகிப் போனது. இப்படத்தை பிரபுதேவாதான் இயக்குகிறார். சிரஞ்சீவிதான் நாயகன்.

தமிழ், தெலுங்கில் இனி எதுவும் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட சதா, இப்போது மலையாளத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.

நாவல் என்று பெயரிடப்பட்ட படத்தில் சதா நாயகியாக நடிக்கிறார். ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் படத்தை இயக்குகிறார். ஜெயராம்தான் நாயகன்.

ஜெகதி, நெடுமுடி வேணு, சரிகா,இன்னொசன்ட் ஆகியோர் மற்ற கலைஞர்கள். அம்பாயி, ஜெயச்சந்திரன், பாலபாஸ்கர் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர்.

'நாவல்' சதாவின் திரையுலக வாழ்க்கையின் அடுத்த 'அத்தியாத்தை' சுபமாக ஆரம்பித்து வைக்குமா?

-thatstamil-

  • தொடங்கியவர்

தெனாவெட்டு பூனம்

மகாராஷ்டிர மரிக்கொழுந்து பூனம் பாஜ்வா, ஒரு வழியாக தமிழில் நிலையான இடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் தெனாவெட்டு படம் மூலம்.

தெலுங்குத் திரையுலகை தனது கவர்ச்சியாலும், மயக்கும் அழகாலும் ஆட்டிப் படைத்து வருபவர்தான் பூனம். பெயருக்கேற்ப படு மிருதுவாக இருக்கிறது, கண்ணை உறுத்தாத பூனத்தின் அழகும், கிளாமரும்.

டோலிவுட்டை கிறங்கடித்துக் கொண்டிருந்த பூனத்தின் அருமை பெருமைகளை அறிந்த கோலிவுட், தனது பார்வையை பூனத்தின் பக்கம் திருப்பியது.

பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூனத்தைப் போட முடிவாகியது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, பூனத்தை நீக்கி விட்டு காஜல் அகர்வாலை தனுஷுக்கு ஜோடியாக்கி விட்டனர்.

முதல் படமே இப்படி நாறிப் போனதால் கடுப்பாகிப் போன பூனம், கோலிவுட்டுக்குப் பேக்கப் சொல்லத் தயாரானார். ஆனால் அதற்குள் ஓடி வந்து விட்ட தெனாவெட்டு பட யூனிட், பூனத்திற்கு வாய்ப்பளித்து தமிழ் சினிமாவில் அவர் நுழைய அடிக்கல் நாட்டி விட்டது.

ஜீவாதான் இப்படத்தி்ன் நாயகன்.படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பூனமும் இதில் கலந்து கொண்டு ஆக்ட் கொடுத்தார்.

ஆந்திராவை அலைக்கழிக்கும் பூனம், தமிழிலும் புயலைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

-thatstamil-

  • தொடங்கியவர்

நித்யா தாஸுக்கு டும் டும்!

மனதோடு மழைக்காலம் நாயகி நித்யா தாஸுக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. சீக்கியரான பைலட்டுக்கும், நித்யாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளதாம்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் நித்யாவும் ஒருவர். ஆனால் மற்றவர்கள் எல்லாம் தேற்றிய அளவுக்கு நித்யா தேறவும் இல்லை, தேற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

மனதோடு மழைக்காலம் படத்தில் ஷாமுடன் இணைந்து நடித்தார் நித்யா. அத்தோடு சரி, அதன் பிறகு தமிழில் நித்யாவுக்கு வாய்ப்பே வரவில்லை.

இந்த நிலையில் நித்யாவுக்கு கல்யாணம் முடிவாகி விட்டது. ஞாயிற்றுக்கிழமை டும் டும் கொட்டப் போகிறது. இது ஒரு காதல் கல்யாணமாம்.

பஞ்சாப்பைச் சேர்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியான அரவிந்த் சிங் என்பவருடன் நித்யாவுக்கு கல்யாணம் நடைபெறுகிறது. குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை கல்யாணத்தை முடித்துக் கொண்டு, தாஜ் ரெசிடென்சி ஹோட்டலில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனராம்.

நெருங்கிய நண்பர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனராம்.

நித்யாவுக்கும், அரவிந்திக்கும் காதல் மலர்ந்தது நிலத்தில் அல்ல, வானில். அடிக்கடி விமானத்தில் பயணித்தபோது நித்யாவுக்கும், அரவிந்திக்கும் காதல் அரும்பியதாம். உடல் மட்டும் விமானத்துக்குள் இருக்க, உள்ளங்கள் இரண்டும் வெளியே வந்து வானில் வட்டமடித்து காதலை டெவலப் செய்துள்ளனர்.

முதலில் இரு வீட்டாரும் காதலை எதிர்த்துள்ளனர். ஆனால் பிறகு இவர்களின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்டு அங்கீகாரம் கொடுத்தனராம். இதையடுத்து காதல், 'டேக் ஆப்' ஆகி கல்யாணத்தில் 'லேண்ட்' ஆகியுள்ளது.

தனது மனம் கவர்ந்த மணாளன் குறித்து நித்யா கூறுகையில், அரவிந்த் ஒரு ஜென்டில்மேன். எனது விருப்பத்திற்கு எதிராக ஒருபோதும் நடக்க மாட்டார் என்று சர்டிபிகேட் தருகிறார்.

நலம் வாழ வாழ்த்துவோம்!

-thatstamil-

  • தொடங்கியவர்

ஸ்ரீகாந்த் வீட்டில் வலுக்கட்டாயமாய் 'குடியேறிய'

வந்தனா: போலீசில் இரு தரப்பும் புகார்

சென்னை: நிதி மோசடி சிக்கலில் மாட்டியுள்ள காதலி வந்தனாவின் குடும்பத்திடம் இருந்து ஸ்ரீகாந்த் விலக ஆரம்பித்துள்ள நிலையில், அவரது வீட்டில் குடியேற பெட்டி படுக்கையுடன் வந்திறங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வந்தனா.

தனக்கு கோவிலில் வைத்து ஸ்ரீகாந்த் தாலி கட்டிவிட்டதாகவும், தானும் அவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் வந்தனா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த மாடலான வந்தனாவை நடிகர் ஸ்ரீகாந்த் காதலித்து வந்தார். இரு குடும்பத்தாரின் சம்பந்தத்துடன் திருமணம் நடக்க இருந்தது.

இந் நிலையில் வந்தனா குடும்பத்தினர் வங்கிகளில் பல கோடி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன.

இதையடுத்து திருமணம் நின்று போனது. ஸ்ரீகாந்தும் வந்தனாவை விட்டு விலக ஆரம்பித்தார்.

ஆனால், காதலர்களாக இருந்தபோது ஸ்ரீகாந்தும் வந்தனாவும் உல்லாசமாக ஊர் சுற்றியுள்ளனர். அப்போது எடுத்த படங்களை எல்லாம் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.

ஆனால், இப்போது வந்தனாவுடன் பேசுவதையே ஸ்ரீகாந்த் நிறுத்திவிட்டார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் (13ம் தேதி) காலையில் பெட்டி படுக்கையுடன் ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு வந்திறங்கியுள்ளார் வந்தனா.

இதை எதிர்பாராத ஸ்ரீகாந்தின் பெற்றோர் வந்தனாவுடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளனர். அவரை வீட்டை விட்டு வெளியே போகுமாறு விரட்டியுள்ளனர்.

ஆனால், தானும் ஸ்ரீகாந்தும் உல்லசமாய் காதலர்களாய் சுற்றியபோது எடுத்த படங்களைக் காட்டிய வந்தனா பதிலுக்கு சண்டை போட்டார்.

எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் கோவிலில் வைத்து கல்யாணம் ஆகிவிட்டது. ஊர் அறிய மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என்று தான் இதுவரை காத்திருந்தேன். என்னையும் ஸ்ரீகாந்தையும் பிரிக்க முடியாது. நான் அவருடன் தான் வாழ்வேன் என்று வாக்குவாதம் செய்தார்.

இரு தரப்புக்கும் இடைேய சண்டை வலுக்கவே அதுவரை தன் அறையில் இருந்த ஸ்ரீகாந்த் வெளியில் வந்து வந்தனாவை சமாதானம் செய்து வெளியே போகுமாறு கூறியுள்ளார்.

ஆனால் வந்தனா போக மறுத்துவிட்டார். இதையடுத்து ஸ்ரீகாந்தின் ெபற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த் வீட்டுக்குச் சென்று வந்தனாவிடம் பேசினர். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி படங்களைக் காட்டினார்.

இந் நிலையில் ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு வெளியே போய்விட்டதாகத் தெரிகிறது. அவர் ஹைதராபாத்தில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே வந்தனாவிலன் தாயார் ஷாலினி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகளையும் ஸ்ரீகாந்தையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், இவ்வாறு சேர ஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் ஷாலின் கூறுகையில்,

ஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தனர். ஸ்ரீகாந்த் பலமுறை எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்போது வந்தனாவுடன் கணவன் போலத்தான் நடந்து ெகாண்டார்.

எங்களைப் பொறுத்தவரை ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடந்துவிட்டது. அவர்களைப் பிரிக்க முயற்சி நடக்கிறது என்றார்.

-thatstamil-

  • தொடங்கியவர்

'சைலன்ட்' சிம்பு

சிம்பு வர வர ரொம்ப நல்ல பிள்ளையாகி வருகிறாராம். எல்லாம் காதல் ஏற்பட்ட மோதல்களும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும்தான் காரணம் என்கிறார்கள்.

பொடி மட்டை வயதிலிருந்தே நடித்து வருபவர் சிம்பு. வளர்ந்து வாலிபனாகிய பின்னர் படு வேகமாக ஹீரோவாக உயர்ந்து, திறமையான இயக்குநராகவும் மாறி விட்டார் சிம்பு.

வல்லவன் படத்திற்குப் பிறகு சிம்புவின் ரேஞ்சே வேறு மாதிரியாகி இருக்கிறது. பெர்சனல் சைடிலும் சிம்புவிடம் நிறைய மாற்றம்.

முன்பெல்லாம் சிம்பு பட ஷூட்டிங் என்றாலே அவரது கலாய்ப்புகளுக்கும், கலகலப்புகளுக்கும், சீண்டல்களுக்கும் பஞ்சமே இருக்காது.

ஆனால் நயனதாரா மேட்டரில் சிக்கி மீண்ட பின்னர் சிம்புவிடம் நிறைய மாற்றம் தெரிகிறதாம். படப்பிடிப்பு தளங்களில் படு அமைதியாக காணப்படுகிறாராம் சிம்பு.

தேவையில்லாமல் ஹீரோயின்களிடம் பேசுவது, கலாய்ப்பது போன்றவற்றை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டாராம் சிம்பு. செட்டுக்கு முதல் முறையாக வரும்போது அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்கிறார். அத்தோடு சரி, பேக்கப் ஆகி வீடு திரும்பும் வரை தான் உண்டு, தன் வேலையுண்டு என்று மட்டுமே இருக்கிறாராம்.

காளை படப்பிடிப்பின்போது சைலன்ட்டான சிம்புவைப் பார்க்க முடிந்தது. ஹீரோயின் வேதிகாவிடம் ஷாட்டின்போது மட்டுமே ஜாலியாக பேசுகிறார். ஷாட் முடிந்தவுடன் கம்மென்று ஆகி விடுகிறார்.

தேனியில் முகாமிட்டுள்ள காளை டீம், படு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஷாட்டையும் திட்டமிட்டு சுட்டு வருகிறாராம் இயக்குநர் தருண் கோபி. சிம்பு சிறப்பாக ஒத்துழைப்பதாகவும், இதுவரை ஒரு பிரச்சினை கூட எழவில்லை என்றும் காளை யூனிட்டிலிருந்து செய்தி கசிந்துள்ளது.

காளையை மிகப் பெரிய வெற்றிப் படமாக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறாராம் சிம்பு. வல்லவனுக்குப் பிறகு நடந்த கசப்பான அனுபவங்களிலிருந்து மீள காளையின் வெற்றி அவசியம் என்று கடுமையாக உழைக்கிறாராம் சிம்பு.

-thatstamil-

  • தொடங்கியவர்

'கறக்கும்' கனிகா!

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட, நகைக் கடை திறப்பு, ஜவுளிக் கடை திறப்பு என குட்டி குட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்லாப் பெட்டியை நிரப்பி வருகிறாராம் கனிகா.

மதுரை தந்த முத்துப் பெண் கனிகா. பைவ் ஸ்டார் படம் மூலம் நடிகையான கனிகா, அந்தப் படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் அதன் பின்னர் கனிகா நிறையப் படங்களில் நடிக்கவில்லை.

மாறாக படிக்கப் போய் விட்டார். இடையில் கிடைத்த விடுமுறையில்தான் நடித்து வந்தார். வரலாறு படத்தில் அவரது வயது முதிர்ந்த கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து சில பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் மறுபடியும் படிப்பு குறுக்கிட்டதால் நடிக்கவில்லை கனிகா.

இப்போது சரத்குமார், மம்முட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் மலையாளப் படமான பழசிராஜாவில் மம்முட்டியின் ஜோடியாக, ராணி வேடத்தில் நடித்து வருகிறார் கனிகா.

கனிகாவிடம் பட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கவில்லை. ஆனாலும் அம்மணியின் கல்லாப் பெட்டி மட்டும் படு வேகமாக நிரம்பி வருகிறதாம். என்னடா என்று பார்த்தால் நகைக் கடை திறப்பு, ஜவுளிக் கடை திறப்பு, காம்பியரிங் என்று குட்டி குட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்லாக் கட்டி வருகிறாராம்.

நல்ல கேரக்டர்கள் கிடைத்தால்தான் நடிப்பேன், சும்மா வந்து போகும் படங்கள் எனக்குத் தேவையில்லை என்கிறார் கனிகா. பழசிராஜா தனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் என்றும் நம்புகிறார் கனிகா.

இப்போது நடித்து வரும் படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் கூட, நல்ல கேரக்டர்கள் கிடைத்தால்தான் தொடர்ந்து நடிப்பேன் என்றும் பிடிவாதமாக கூறுகிறார் கனிகா.

-thatstamil-

எப்ப இருந்து இந்த சட்டம் வந்தது நான் இல்லை போல

சரி அப்ப என்னத்தை விவாததிற்கு எடுபோம் ரஜனி இந்த வயசில் நடிக்க வேண்டுமா இல்லையா இது தான் இன்றைய விவாதம் எல்லாரும் வந்து விவாதியுங்கோ

:P

அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே...

என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட சினிமா குப்பை செய்திகளால், யாழ்கள வண்ணத்திரைப்பகுதியை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி.

யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய தமிழ் சினிமாவை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய சினிமா செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம்.

இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும். உதாரணமாக

நிர்வாக அறிவுறுத்தல்: ஒரே விடயம் சார்ந்த வெவ்வேறு செய்திகளை ஒரே தலைப்பின் கீழ் இணையுங்கள். தனித் தனித்தலைப்புகளாக இடும்போது அது தொடர்பான விவாதங்களும் சிதறிப்போகின்றன.

எனது பரிந்துரை: நீங்கள் இணைக்கும் செய்தி சிவாஜி படம் சார்ந்ததும், இத்தலைப்பிற்கு தேவையற்றது மெனில் இங்கு இணைக்காது தனியே பிரத்தியேகமாக உள்ள சிவாஜி திரியில் சேர்க்கவும்.

நிர்வாக அறிவுறுத்தல்

இன்னும் நாம் சிறுபிள்ளைகள் அல்ல. "வெட்டி ஒட்டுவதற்கான" தளமில்லை யாழ் கருத்துக்களம். இது விவாதத்துக்கான களம். எனவே அதற்கேற்புடைய செயற்பாடுகளையே நாம் இங்கு எதிர்பார்க்கிறோம்.

ஏனுங்க அதே பகுதியில் எழுதப்பட்ட இதனை நீங்கள் படிக்கலீங்களா?? :lol::lol:

  • தொடங்கியவர்

நிர்வாக அறிவுறுத்தல்

இன்னும் நாம் சிறுபிள்ளைகள் அல்ல. "வெட்டி ஒட்டுவதற்கான" தளமில்லை யாழ் கருத்துக்களம். இது விவாதத்துக்கான களம். எனவே அதற்கேற்புடைய செயற்பாடுகளையே நாம் இங்கு எதிர்பார்க்கிறோம்.

ஏனுங்க அதே பகுதியில் எழுதப்பட்ட இதனை நீங்கள் படிக்கலீங்களா?? :icon_idea::lol:

மிச்சம் எனது சிக்னேச்சருடன் சேத்துப்புட்டன்...... :P

ஒருவேளை எனக்காகத்தான்..வலைஞரினால் கூறப்பட்டதோ :lol:

மிச்சம் எனது சிக்னேச்சருடன் சேத்துப்புட்டன்...... :P

ஒருவேளை எனக்காகத்தான்..வலைஞரினால் கூறப்பட்டதோ :icon_idea:

உது எல்லாம் எப்ப நடந்தது மாமா

:angry:

  • தொடங்கியவர்

ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம்;

திரிஷாவிடம் விசாரணை?

ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் தொடர்பாக இருவருக்கும் நெருங்கிய தோழிகளான நடிகை திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் தொடர்பாக இருவருக்கும் நெருங்கிய தோழிகளான நடிகை திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த் கட்டிய தாலியுடன், அவரது வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து கொண்டுள்ள வந்தனா, கடந்த 5 நாட்களாக வீட்டுக்குள் இருந்தபடியே போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

ஸ்ரீகாந்த்தான் எனது கணவர், அவர் என்னுடன் வந்து குடித்தனம் நடத்தும் வரை போராட்டத்தை விடப் போவதில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஸ்ரீகாந்த் வீட்டை விட்டுப் போகப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் வந்தனா.

ஆனால், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன், சட்டப்பூர்வமாக அவரிடமிருந்து பிரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகை திரிஷாவிடம் ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம் குறித்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். திரிஷாதான் தன்னை ஸ்ரீகாந்த்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று வந்தனா போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து திரிஷாவிடம் விசாரணை நடத்தினால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் குறித்து ஏதேனும் முக்கியத் தகவல் கிடைக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். திரிஷாவிடம் எப்போது விசாரணை நடத்தப்படும் என்று தெரியவில்லை. ஆனாலும் ஓரிரு நாட்களில் இந்த விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

ஸ்ரீகாந்த் மீது பதில் வழக்கு-வந்தனா

இதற்கிடையே, விவாகரத்து கோரி நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அதை எதிர்த்து வந்தனா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என்று வந்தனாவின் வழக்கறிஞர் ஜெயராணி கூறியுள்ளார்.

வந்தனாவுடன் தனக்கு திருமணம் ஆகி விட்டதை ஸ்ரீகாந்த் ஒத்துக் கொண்டுள்ளார். மேலும், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன், அவரிடமிருந்து பிரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த் வழக்கு தொடர்ந்தால் பதில் வழக்கு போடுவோம் என்று வந்தனா தரப்பு கூறியுள்ளது. இதுகுறித்து வந்தனாவின் வழக்கறிஞர் ஜெயராணி கூறுகையில், ஸ்ரீகாந்த் மீது வந்தனா மிகுந்த பிரியத்துடனும், பாசத்துடனும் இருக்கிறார். சேர்ந்து வாழ விரும்புகிறார்.

பல முறை ஸ்ரீகாந்த்தை சந்தித்து சமரசத்திற்கு முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. பிரிவதில்தான் அவர் மும்முரமாக இருக்கிறார். இதனால்தான் வேறு வழியில்லாமல், அவரது வீட்டிற்கு வந்தனா வர நேரிட்டது.

ஸ்ரீகாந்த் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தால், நாங்களும் பதில் மனு தாக்கல் செய்வோம் என்றார் ஜெயராணி.

இதற்கிடையே, கல்யாணமாகி குறைந்தது 6 மாதங்கள் ஆனால்தான் விவகாரத்து கோர முடியும் என்று சட்ட விதி கூறுகிறதாம். எனவே ஸ்ரீகாந்த்துக்கு விவாகரத்து கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.

வந்தனாவிற்கு துரோகம் செய்யவில்லை-கீதா

ஸ்ரீகாந்த்தின் உறவுக்கார பெண் கீதா. ஸ்ரீகாந்த் அவரை அக்கா என்றுதான் அழைப்பார். இவர் பேச்சை கேட்டுதான் ஸ்ரீகாந்த் வீட்டில் திருமணத்தை நிறுத்திவிட்டனர் என வந்தனா கூறியுள்ளார். மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தால்தான் திருமணம் என கீதா கூறியதாக இன்னொரு குற்றசாட்டையும் கூறியுள்ளார் வந்தனா.

இக்குற்றசாட்டு குறித்து கீதாவிடம் விசாரிக்க போலீஸார் அவரை வடபழனி காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்தனர். காவல் நிலையத்தில் ஆஜரான கீதாவிடம் உதவி கமிஷ்னர் சேது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயலாபாய் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது கீதா கொடுத்த வாக்குமூலத்தில்,

என் சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி. கணவர் என்ஜினியராக உள்ளார். காகிநாடாவில் ஆர்டிஓவாக இருந்தேன். அலுவலகத்தில் ரூ.43 லட்சம் கையாடல் செய்ததாக போலீஸார் வழக்கு போட்டனர். பின்னர் அந்த வழக்கிலிருந்து விடுதலையானேன். தற்போது சென்னை எம்ஜிஆர் நகரில் இருக்கிறேன்.

ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு நான் சொந்தம் இல்லை. காகிநாடாவிலுள்ள குருஜி மூலம் அறிமுகமானார். ஸ்ரீகாந்த்தும் வந்தனாவும் 2 வருடமாக காதலித்து வந்தனர். வந்தனா இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதனால் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என என்னிடம் கெஞ்சினார். அதனால் நான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன்.

வந்தனாவின் ஜாதகத்தை குருஜியிடம் காட்டியபோது, இதில் தோஷம் இருக்கிறது. தோஷம் கழித்தால்தான் திருமணம் செய்ய முடியும் என்றார். அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என்றும் கூறினார். அதற்கு பணம் நான்தான் கொடுத்தேன். வந்தனாவின் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இன்னும் அந்த பணத்தை ஸ்ரீகாந்த் எனக்கு கொடுக்கவில்லை.

ஸ்ரீகாந்த் வந்தனாவை மனைவியாகவே நினைத்து வந்தார். அதை அனைவரும் அறியும்படி திருமணம் செய்ய வேண்டும் எனவும் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேறாமல் போனதற்கு நான் காரணம் கிடையாது. சிபிஐ வழக்கு வந்தனாவின் பெற்றோர் மீது இருந்ததால் ஸ்ரீகாந்த் பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

அவர்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அவர்களுடைய பதிவு திருமணத்தை நான் தான் செய்து வைத்தேன். இதனால் ஸ்ரீகாந்த் பெற்றோர் என்னுடன் பேசுவது கிடையாது. இப்போது ஸ்ரீகாந்தும் என்னுடன் பேசுவதில்லை. இருவரையும் சேர்த்து வைக்க நான் தயாராக உள்ளேன். நான் வந்தனாவிற்கு எந்தவிதமான துரோகமும் செய்யவில்லை என்று கூறினார்.

அவர் ஸ்ரீகாந்த்திற்கு கொடுத்த ரூ.5 லட்சத்திற்கான ஆவணங்களையும் போலீஸாரிடம் காட்டினார்.

  • தொடங்கியவர்

ஜெயலட்சுமி இல்ல.. ஷகீலா

பழனியப்பா கல்லூரியில் டீக்கடைக்காரப் பெண்ணாக கிளாமர் வேடத்தில் நடித்து வந்த சிவகாசி ஜெயலட்சுமி திடீரென அந்த ரோலிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அந்த ரோலில் ஷகீலா நடித்து வருகிறார்.

தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் பழனியப்பா கல்லூரி. தற்போது படப்பிடிப்பு தரங்கம்பாடி-திருக்கடையூர் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் அர்ஜூமான் என்ற புதுமுக ஹீேராயினும், பிரதீப் என்பவர் ஹீரோவாகவும் நடிக்கின்றனர். கலாபகாதலன் படத்தில் நடித்த அட்சயாவும் இதில் இருக்கிறார்.

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் தான் சூட்டிங் நடந்து கொண்டுள்ளது.

இதில் போலீஸ் புகழ் சிவகாசி ஜெயலட்சுமியும் அறிமுகமாகிறார்.

டீக்கடைக்காரப் பெண்ணாக நடிக்கும் ஜெயலட்சுமி கிளாமராகவும் நடித்து அசத்துவதாக அறிவிக்கப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட காட்சியை மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் டீக்கடை செட் போட்டு படமாக்கினர்.

இதற்காக ரூ. 50,000 செலவில் செட் போட்டுள்ளனர். முதல் நாள் படப்பிடிப்புக்கு வந்த ஜெயலட்சுமிக்கு திடீரென கழுத்து வலி ஏற்பட்டு விட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஹோட்டலுக்குத் திரும்பி விட்டார்.

இதையடுத்து அந்த ரோலில் தற்போது கவர்ச்சி திலகம் ஷகீலா புக் செய்யப்பட்டு அந்தக் காட்சியில் அவர் நடித்தார். அவருடன் அட்சயாவும் நடித்தார்.

ஷகீலா டீக்கடைக்காரப் பெண்ணாக கவர்ச்சியாக நடிப்பதை அறிந்து பெரும் கூட்டம் கூடி விட்டது. சிவகாசி ஜெயலெட்சுமி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாதது குறித்து அன்பாலயா பிரபாகரன் கூறுகையில்,

ஜெயலட்சுமி கழுத்து வலியால் பாதிக்கப்பட்டு 2நாள் படப்பிடிப்பை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் அதற்கு நேரம் மற்றும் அனுமதி இல்லாத காரணத்தால் மறுத்து விட்டேன். ஆனால் சிவகாசி ஜெயலட்சுமிக்கு படத்தில் வேறு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்துள்ளோம். அவர் அந்த கேரக்டரில் நடிப்பார் என்றார்.

ஆமாம்பா.. எப்படியாவது நடிக்க வச்சுருங்கய்யா..

-thatstamil-

  • தொடங்கியவர்

ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரத்தில்

காவல்துறைக்கு வேலை இல்லை-கமிஷ்னர்

சென்னை: ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரத்தை சிவில் நீதிமன்றத்தை அணுகித்தான் தீர்வு காண முடியும். இதில் காவல்துறைக்கு எந்த வேலையும் இல்லை என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த் வீட்டில் அதிரடியாக குடியேறி கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் குதித்துள்ளார் வந்தனா. அவரை வீட்டை விட்டு வெளியேற்றக் கோரி போலீஸில் ஸ்ரீகாந்த் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நான் ஸ்ரீகாந்த்தின் மனைவி, எனக்கும் அவருக்கும் பதிவுத் திருமணம் நடந்து விட்டது. எனவே வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறி வருகிறார் வந்தனா. இதுதொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று லத்திகா சரண் கூறுகையில், ஸ்ரீகாந்த், வந்தனா இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விசாரணையிலும் அவ்வாறே தெரிய வந்துள்ளது.

எனவே இந்தப் பிரச்சினைக்கு சிவில் நீதிமன்றத்தை அணுகித்தான் அவர்கள் தீர்வு காண முடியும். இதில் காவல்துறை தலையிட முடியாது.

பிரஷாந்த் மீது கிரகலட்சுமி கொடுத்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சிவாஜி திரைப்படத்தின் காட்சிகளைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

சிவாஜி திரைப்படத்தின் காட்சிகளைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

Edited by Minor Kunju

  • தொடங்கியவர்

விபச்சாரம்- சிக்கினார் 'ஊர்வம்பு' டிவி நடிகை

டிவி நடிகை உதயஸ்ரீ உள்பட 3 பேரை வைத்து விபச்சாரம் செய்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திநகர் பேருந்து நிலையத்தில் நின்றபடி விபச்சாரத்திற்கு ஆட்களை கூப்பிட்டு வந்தது ஒரு கும்பல். இதையடுத்து உதவி கமிஷ்னர் சங்கரபாண்டியன் தலைமையில் போலீஸார் மாறுவேடத்தில் பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு இவர்களை அணுகிய விருதுநகரை சேர்ந்த புரோக்கர் பாலகிருஷ்ணன் என்பவர் தன்னிடம் பெண்கள், நடிகைகள், சிறுமிகள் இருப்பதாகக் கூறினார்.

மாறுவேட போலீசார் மண்டையை ஆட்டியதோடு அட்வான்ஸ் பணமும் தந்தனர். இதையடுத்து அவர்களை புழுதிவாக்கத்திலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார் பாலகிருஷ்ணன்.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனையில் இறங்கி சங்கரராஜன்(46), ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாத்(30), தாம்பரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி(37) ஆகிய புரோக்கர்களை கைது செய்தனர்.

மேலும் இந்தக் கும்பலின் பிடியில் சிக்கியிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த தீபிகா(15), மாதுரி(22) ஆகியோரை அங்கிருந்து மீட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளிவிட்டதாகவும், முன்பு ராமாபுரத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் கூறினர்.

இதனையடுத்து ராமாபுரம் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு டிவி நடிகை உதயஸ்ரீ இருந்தார். இவர் ராஜ் டிவியில் ஊர் வம்பு, சன் டிவியில் அரசி உள்ளிட்ட டிவி தொடர்களில் நடித்தவர்.

அவரிடம் விசாரித்தபோது, கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்தாலும் டிவி தொடரில் நடித்து சம்பாதிக்கும் வருமானம் போதவில்லை என்பதாலும் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

இதையடுத்து உதயஸ்ரீ, தீபிகா, மாதுரி ஆகியோர் மகளிர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். போலீஸாரால் கைது செய்யப்பட்ட 4 புரோக்கர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • தொடங்கியவர்

வந்தனாவுக்கு முன்ஜாமீன் தரக் கூடாது:

கோர்ட்டில் ஸ்ரீகாந்த் கோரிக்கை

சென்னை: வந்தனாவுக்கு முன்ஜாமீன் தரக் கூடாது என்று கோரி நடிகர் ஸ்ரீகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடப்பட்டது.

தங்களது வீட்டில் அத்துமீறி நுழைந்த வந்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீஸில் புகார் கொடுத்திருந்தார் ஸ்ரீகாந்த்தின் தந்தை. பின்னர் இந்தப் புகாரைப் பதிவு செய்து வந்தனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பாட்ஷா, வந்தனா மீதான புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து வந்தனா சார்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வந்தனாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.

ஸ்ரீகாந்த் ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவோடு, வந்தனா மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இரு மனுக்களையும் இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இரு தரப்பும் சமரசமாக போக வேண்டும், பிரச்சினை தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று இன்று பிற்பகலுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வந்தனா மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது அத்து மீறி வீட்டுக்குள் நுழைதல், மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இதையடுத்து வந்தனா குடி புகுந்துள்ள ஸ்ரீகாந்த் வீட்டு முன்பு பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் குவிந்தனர். பொதுமக்களும் திரளாக கூடியிருந்தனர். ஆனால் ஒரு போலீஸ் கூட வரவில்லை.

போலீஸ் தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில் கோர்ட் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குடும்பப் பிரச்சினை என்பதால் அவசரப்பட்டு நடவடிக்கையில் இறங்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

-thatstamil-

  • தொடங்கியவர்

அஜீத்தை இயக்கும் கங்கைஅமரன் மகன்

சென்னை 600028 என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த கங்கை அமரனின் புதல்வன் வெங்கட் பிரபுவுக்கு கோலிவுட்டில் ஏக மவுசாகியுள்ளது. இதன் எதிரொலியாக அடுத்து அஜீத் மற்றும் தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.

நடிகராக, பாடகராக அறியப்பட்டவர் வெங்கட் பிரபு. முதல் முறையாக அவர் சென்னை 600028 என்ற படத்தை இயக்கி அப்படத்தை வெற்றிப்படமாகவும் கொடுத்துள்ளார். இதனால் வெங்கட் பிரபுவுக்கு கோலிவுட்டில் புது மவுசு கிடைத்துள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் கூட ஆர்வப்படுகின்றனராம். தற்போது அஜீத் மற்றும் தனுஷை வைத்து இயக்கத் தயாராகி வருகிறார் வெங்கட் பிரபு.

இரு நடிகர்களும் இதுதொடர்பாக வெங்கட் பிரபுவுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துள்ளனராம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கப் போகும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.

தற்போது தனுஷ் நடித்து வரும் பொல்லாதவன், யாரடி நீ மோகினி ஆகிய இரு படங்களையும் முடித்து பிரபு படத்துக்கு வருகிறார்.

அதேபோல பில்லா படத்தை முடித்து விட்டு வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜீத்.

இந்த இரட்டை வாய்ப்பு குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, உடனடியாக படம் செய்யும் அவசரம் இல்லை. இரு நடிகர்களும் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். எனது முதல் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் அவர்களை இயக்குவது குறித்த திட்டம் இன்னும் இறுதியாகவில்லை. முடிந்ததும் உங்களுக்குத்தான் முதலில் தகவல் சொல்வேன் என்றார் தனக்கே உரிய புன்னகையுடன்.

வெல்லுங்க வெங்கட்

  • தொடங்கியவர்

பிடிவாத 'சிம்ரனம்மா'! நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று படு பிடிவாதமாக இருக்கிறார் முன்னாள் கனவுக் கன்னியும், 2 வயதுக் குழந்தைக்குத் தாயுமான சிம்ரன். தமிழ் சினிமாவின் கிளாமர் ராணியாக கொஞ்ச காலம் கொஞ்சியவர் சிம்ரன். கமல் முதல் 'பாய்ஸ்' மணிகண்டன் வரை பலருடனும் நடித்து ரசிகர்களைப் பரசவப்படுத்தினார். மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது திடீரென கமலுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் டஹால் என ஜஹா வாங்கிய சிம்ரன், 2 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லாமல், கொள்ளாமல் சினிமாவை விட்டு விலகினார். மனதுக்குப் பிடித்த தீபக் பாஹாவை கல்யாணம் செய்து கொண்டு அப்படியே அவரது குழந்தைக்கும் தாயானார். ஆச்சு, சிம்ரனுக்கு கல்யாணமாகி, அவருக்குக் குழந்தை பிறந்து 2 ஆண்டுகளாகி விட்டது. குழந்தை பிறந்த பிறகு கொஞ்ச காலம் வீட்டோடு இருந்த சிம்ரனுக்கு சினிமா ஆசை துளிர் விடவே, உடலை டிரிம் ஆக்கிக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தார் சிங்காரச் சென்னைக்கு. நடிக்க ரெடி என்று அவர் அனவுன்ஸ் செய்தும், சீண்டுவார் யாரும் இல்லை. அடடே என்று கலங்கிப் போன அவர் அவ்வப்போது சென்னைக்கு வருவதும், வாய்ப்பு தேடுவதுமாக இருக்கிறார். இருந்தாலும் இதுவரை யாரும் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இருந்தாலும் மனம் உடையாத சிம்ரன், தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பை தேடிக் கொண்டுதான் உள்ளார். நேற்று திடீரென சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிம்ரன். விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்தவர் கிடைத்த கேப்பில் செய்தியாளர்களிடம் அளவளாவினார். எப்படி இருக்கீங்க, என்ன சொல்றீங்க என்று சிம்ரனிடம் கேட்டபோது, மீண்டும் தமிழ் சினிமாவில், எனக்குரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது (ஆனா ரசிகர்களுக்கு இல்லையேம்மா!). நான் பார்த்திபனுடன் இணைந்து நடிக்கப் போவதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை. வாய்ப்பை பறிக்க வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை. எனக்கான சரியான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க நான் தயாராகத்தான் உள்ளேன். தமிழ் சினிமாவும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் என்னை ஒதுக்கி விட்டார்கள் என்று கூற முடியாது. இப்போது வரை தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுடன் எனக்கு நல்லுறவு இருந்து கொண்டுதான் உள்ளது. இப்போது தமிழில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். அது மட்டுமே நான் கையில் வைத்துள்ள படம் என்றார். வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டபோது, இல்லை என்றார் சிம்ரன். ரொம்ப சம்பளம் கேட்கிறீர்களாமே என்று கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. எனக்கு தயாரிப்பாளர்களின் சிரமம் தெரியும் என்று பொத்தாம் பொதுவாக கூறினார் சிம்ரன். நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் சிம்ரனை மீண்டும் ஹீரோயினாக அரங்கேற்ற யார் வரப் போகிறார்களோ?

சத்யராஜின் 'காவல்' சாதனை

நடிப்பில் சத்யராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு ஹீரோவாக, காவல்துறை அதிகாரியாக ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து புதிய சாதனை படைத்துள்ளாராம் சத்யராஜ். விஜயகாந்த்தான் காவல்துறை அதிகாரி வேடங்களில் அதிகம் நடித்தவர் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் சத்யராஜுக்குத்தான் அந்த சாதனை கிடைத்துள்ளது. இதுவரை அவர் 12க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளாராம். கடமை கண்ணியம் கட்டுப்பாடு முதல் பெருமாள்சாமி ஐ.பி.எஸ் படம் வரை சத்யராஜ் பல விதமான காவல்துறை அதிகாரி வேடங்களில் அசத்தியுள்ளார். தற்போது சிவலிங்கம் ஐ.பி.எஸ் என்று புதிய படத்தில் கலக்கல் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யராஜின் தோழரான ராஜ்கபூர் இயக்கவுள்ளார். இப்படத்தில் சத்யராஜுடன் ஜோடி போடுவது சொர்ணமால்யாவாம். இருவரும் இணையும் முதல் படமும் இதுவே. ஜெயேந்திரர் சர்ச்சையில் சிக்கிய பின்னர் சொர்ணமால்யா மீது ஒரு மாதிரியான அபிப்ராயம் பரவி விட்டது. அதிலிருந்து மீள அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும். மொழி படம் மூலம் தான் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபித்தார் சொர்ணமால்யா. இப்போது அவரைத் தேடி நிறையப் படங்கள் வருகிறதாம். அப்படி வந்த வாய்ப்புதான் சிவலிங்கம் ஐ.பி.எஸ். முதல் முறையாக பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்தப் படத்தின் மூலம் பின்னி எடுக்க காத்துள்ளாராம் சொர்ணமால்யா. வால்டர் வெற்றிவேல் மாதிரி சிவலிங்கமும் விறைப்பாக இருப்பாரா?

-thatstamil-

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்

கமலுக்காக மட்டும்... ஜெயப்ரதா

கமலுக்காக, அவரின் நட்புக்காக மட்டுமே தசாவதாரம் படத்தில் நடித்து வருவதாக கூறும் ஜெயப்ரதரா, தொடர்ந்து தமிழில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.

தென்னகத்தின் முன்னாள் கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ஜெயப்ரதா. அவருக்கும் ஸ்ரீதேவிக்கும்தான் அந்தக் காலத்தில் போட்டா போட்டியாக இருந்தது.

ஸ்ரீதேவியுடன் தெனனிந்திய மொழிகளில் மோதி வந்த ஜெயப்ரதா, அவர் இந்திக்குப் போனபோது இவரும் பின்னாலேயே போய் அங்கும் மோதினார்.

இப்போது முழு நேர அரசியல்வாதியாகி விட்ட ஜெயப்ரதா, சமாஜ்வாடிக் கட்சியின் எம்.பியாகவும் உள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த ஜெயப்ரதா ஒரு நிகழ்ச்சியில் கமல், ரஜினியுடன் இணைந்து கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின்போது நினைத்தாலே இனிக்கும் படத்தில் மூன்று பேரும் சேர்ந்து நடித்த இனிய நாட்களை நினைவுபடுத்திப் பேசிக் கொண்டார்களாம். நிகழ்ச்சி முடிந்த போனபோது, தனது தசாவதாரம் படத்தில் ஒரு ரோலில் நடிக்க வேண்டும் என்று ஜெயப்ரதாவிடம் அன்புக் கட்டளை இட்டார் கமல்.

கமல் சொன்னால் தட்ட முடியுமா, உடனே ஓ.கே. சொல்லி விட்டார் ஜெயப்ரதா. இப்போது தசாவதாரம் படத்தில் அவரும் ஒரு அங்கம். ஜெயப்ரதா மீண்டும் நடிக்க வந்த தகவலைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்களும் அவரை அணுகி தங்களது படத்திலும் நடிக்க வேண்டும் என்று அணத்த ஆரம்பித்துள்ளனராம்.

ஆனால் ஒரு வாய்ப்பையும் ஏற்கவில்லையாம் ஜெயப்ரதா. கமல் எனது நெருங்கிய நண்பர். அவர் கேட்டதால் நடித்தேன். அவருடன் நடிப்பதில் எனக்குப் பெருமை. மற்றபடி மறுபடியும் தீவிரமாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்கிறார் ஜெயப்ரதா.

நாம, கொடுத்த வச்சது அவ்வளவுதான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தமிழ்ச்சினிமா என்ற தலைப்பில் இணைக்க வேண்டிய பல்வேறு விடையங்களுண்டு என்பதே எனது தாழ்மையான கருத்து. தற்போது சிறந்த பல படைப்புகளைத் தமிழ்பேசும் உலகு கண்டு மகிழ்வுறுகிறது. இதில் "வெயில்" என்ற படமும் ஒன்று.

படைப்பைப் பற்றிய தெளைவைப் பெறப் படைப்பாளியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதன் படைப்பாளியான இயக்குநர் வசந்தபாலன் அவர்களின் நேல்காணலை சலனம் இணையத்தில் படித்தேன். இதனை நன்றியுடன் இணைக்கறேன்.

வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்ததாக வரவேற்பைப் பெற்ற இந்த 'வெயில்" 60வது கான்ஸ் திரைப்படவிழாவில்(2007) கலந்து கொண்டது.

(தமிழ்த்திரையின் தலைநிமிர்த் தடப்பதிவாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற படம் வெயில்(2006). வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்ததாக வரவேற்பைப் பெற்ற இந்த 'வெயில்" 60வது கான்ஸ் திரைப்படவிழாவில்(2007) கலந்து கொண்டது. இதன் இயக்குநர் வசந்தபாலன் ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கியவர். இயக்குநர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். இன்று தமிழ்த் திரை உலகின் கவனயீர்பபைப் பெற்றுள்ள இளம் இயக்குநர்களில் இவரும் ஒருவர். இத்தகைய இளையோரிடமிருந்து காத்திரமான படைப்புகளை தமிழ்த் திரை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்னையில், சலனம் இணையத்திற்காக பத்திரிகையாளர் அகிலனுடன் மனம் திறக்கிறார் வசந்தபாலன்.)

- நான் சினிமாவை இரண்டு வகையாகத்தான் பார்க்கிறேன். சுவாரசியமான சினிமா, சுவாரசியம் அற்ற சினிமா.

- என்னுடைய முதலாவது படம் தோல்வி. தோல்வியுற்ற மனிதனை இந்த சமூகம் எப்போதும் நிராகரிக்கும். அதுபோலவே என்னையும் நிராகரித்தார்கள் - ஒதுக்கினார்கள். அவர்களுக்கெல்லாம் இப்போது என் நன்றி. அது தான் வெயில் படத்தினுடைய உயிரோட்டமாக இருந்தது.

- நான் ஒரு இலக்கியக்காரன் இலக்கியம் குறிப்பாக நவீன இலக்கியத்தின் பரிச்சயம் கொண்ட ஆள்.... அதன் காரணமாகத் தான் என்னுடைய படங்களின் படிமங்களின் காட்சிப்படுத்தல் சாத்தியமானது.

- உலகப் பார்வையாளர்கள் குறிப்பாக கேன்ஸ் அமைப்பினர் இந்தப்படத்தை தேர்வு செய்தமைக்கான காரணமும் கூட குழந்தைகளின் உணர்வுகளைக் குறித்து இந்தப்படம் பேசுவதாக இருக்கிறது! நானும் இந்தப்படத்தில் முக்கியமான படிமமாக கருதுவது அதைத்தான். குழந்தைகளின் மனதில் சின்னவயசில் ஏற்படுகிற காயம் அவர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதைத்தான் இந்தப்படம் பேசுகிறது.

- குலத்தை காத்தவன் குலசாமி. இப்படி குடும்பத்திற்கு சந்தர்ப்பவசத்தால் ஏதாவது செய்தவன் மதிப்பிற்குரியவனாக ஆகும் போது அவனுக்குப் பிறகு நான்காவது தலைமுறை ஐந்தாவது தலைமுறை அவனை தங்களுடைய குலசாமியாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது தான் தெற்கத்திய மனிதர்களுடைய வாழ்க்கை.

நேர்காணல்: இயக்குநர் வசந்தபாலன்

சந்திப்பு: அகிலன்

http://www.salanam.com/index.php?option=co...6&Itemid=48

மக்களே யாராவது எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே எனத்தொடங்கும் பாடல் எந்த திரைப்படத்தில் இடம்பெற்றது என சொல்வீர்களா.................................

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களே யாராவது எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே எனத்தொடங்கும் பாடல் எந்த திரைப்படத்தில் இடம்பெற்றது என சொல்வீர்களா.................................

நன்றி

ஜூலி கணபதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.