Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சை உருக்கிய இஸ்லாமிய சிசுவின் உடல் தகனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 நிமிடங்களுக்கு முன்னர்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இந்த சம்பவத்தினால் மனமுடைந்த சிலர், கொழும்பு - பொரள்ளை மயானத்தின் இரும்பு வேலியில் வெள்ளை நிறத்திலான துணிகளை கட்டி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிராக பிரிட்டனில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கடைபிடிக்கின்றது.

மொஹமட் பாஹிம் மற்றும் பாஃதிமா ஷப்னா ஆகியோர், தமது இரண்டாவது சிசு கருவில் உருவான போது, மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம்,TWITTER / ALI ZAHIS MOULANA

தனது மகள் இந்த உலகில் கால்தடம் பதித்து, 6 வருடங்களின் பின்னர் தமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சிசுவின் கரு உருவாகியமையை இட்டு, அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எனினும், பாஃதிமா தனது மகனை பெற்றெடுத்து, இரு வாரங்களிலேயே, மகள் நோய்வாய்ப்படுகிறார்.

நோய்வாய்ப்பட்ட சிசுவை உடனடியாக கொழும்பு - பொரள்ளை ரிஜ்வே ஆரியா சிறுவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சிசு, உலகை பார்த்து, இரண்டு வாரங்களிலேயே சிசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

''குழந்தைக்கு சற்று சளி காணப்பட்டது. காய்ச்சல் இருக்கவில்லை. அதனால் 7ம் திகதி இரவு 10.30க்கு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்" என மொஹமட் பாஹிம் தெரிவிக்கின்றார்.

38 வயதான அவர், முச்சக்கரவண்டி சாரதியாக வேலை செய்கின்றார்.

''அழைத்து சென்ற போது குழந்தையை மருத்துவர்கள் பார்த்தார்கள். சிகிச்சைகளை வழங்கினார்கள். குழந்தைக்கு நியூமோனியா ஏற்பட்டுள்ளது. நாங்கள் பார்க்கின்றோம் என கூறினார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

ஷயிக் மகனுக்கு உடனடியாக சிகிச்சைகளை வழங்கி, மருத்துவர்கள் இயன்றவரை முயற்சித்ததற்காக அவரது தந்தை நன்றி கூறுகின்றார்.

''இரவு 12.30 அளவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அன்டிஜன் என்ற பரிசோதனை செய்தார்கள். பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு கொரோனா என பெறுபேறு வந்திருந்தது" என அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சிசுவின் தந்தை மற்றும் தாய் ஆகியோருக்கும் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது.

 

''அம்மாவிற்கு தொற்று ஏற்படவில்லை. அதேநேரம், எனக்கும் தொற்று ஏற்படவில்லை" என அவர் குறிப்பிட்டார்.

தலைநகரில் கொவிட் தொற்று அதிகரித்துள்ளமையினால், தான் வீட்டை விட்டு வெளியேறவில்லை என பாஹிம் தெரிவிக்கின்றார்.

''எம் இருவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்றால், குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கும்? நாங்கள் எங்கும் செல்லவில்லை" என அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், சிசுவுக்கு கொவிட் தொற்று காணப்படுகின்றமையினால், சிசுவை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு, பெற்றோரை வீட்டிற்கு செல்லுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

''குழந்தையுடன் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதிக்குமாறு தாய் அழுகையுடன் கூறினார். எனினும், மருத்துவமனையில் இருக்க வேண்டாம் என கூறிவிட்டார்கள். வீட்டிற்கு சென்று, வீட்டை விட்டு வெளியில் கூட வரவேண்டாம் என கூறினார்கள்"

அடுத்த நாள் (டிசம்பர் 08) பிற்பகல் 1.30 அளவில் தொலைபேசியூடாக அழைப்பை மேற்கொண்ட மருத்துவனை அதிகாரிகள், சிசுவிற்கு புதிய பரிசோதனையொன்றை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

''மாலை 5 மணியளவில் தொலைபேசியூடாக அழைத்து, குழந்தை 4 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக கூறினார்கள். எனினும், அது வரை எமக்கு எதுவும் கூறவில்லை"

மனிதர்களிடம் மலிந்து போன கனிவு

தனது குழந்தையை தகனம் செய்ய தான் அனுமதி வழங்காது நிராகரித்த போதிலும், தனது அனுமதியின்றி மருத்துவமனை அதிகாரிகள் அடுத்த நாள் குழந்தையின் உடலை தகனம் செய்துள்ளதாக தந்தை தெரிவிக்கின்றார்.

''குழந்தை மயானத்திற்குள் தகனம் செய்யும் போது, நான் வெளியில் நின்றுக்கொண்டிருந்தேன்"

''எனது குழந்தையை தகனம் செய்வதை நான் எப்படி பார்த்துக்கொண்டிருப்பேன் சார்" என தந்தை கேள்வி எழுப்புகின்றார்.

கொவிட் 19 தொற்றினால் இதுவரை கேள்வியுள்ள மிகவும் துக்ககரமான கதை இதுவென பிரபல ஊடகவியலாளர் ரேகா நிலுக்ஷி ஹேரத் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

'இது தந்தையொருவரின் வேதனை. உலகம் ஏன் இவ்வளவு நியாயமற்று செயற்படுகின்றது. மனிதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்கள்? என ரேகா நிலுக்ஷி ஹேரத் கேள்வி எழுப்புகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் எதிர்ப்பு

மருத்துவமனை அதிகாரிகளின் கருத்தை அடுத்து, உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் எதிர்ப்பலைகள் எழ ஆரம்பித்துள்ளன.

இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டவர்களில் பிரதி அமைச்சர் உள்ளிட்ட பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்கள் ஜனாஸாக்களை தகனம் செய்யும் வகையில் எட்டப்பட்டுள்ள கொடூரமான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்;கும் வகையில் பொரள்ளை மயானத்தில் வெள்ளை நிற துணிகளை கட்டி, அமைதியான போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மனித உரிமை செயற்பாட்டாளரான மரி டி சில்வாவும், வெள்ளை நிற துணியை கட்டி, அந்த போராட்டத்தில் இணைந்துக்கொண்டுள்ளார்.

''இந்த மோசமான கொவிட் தொற்று காலப் பகுதியில் நாம் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். அதேபோன்று நாம் கருணையாகவும் இருக்க வேண்டும்" என வெள்ளை துணி போராட்டத்தின் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்துரைத்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

டிசம்பர் மாதம் 13ம் தேதி பெருந்திரளானோர் வெள்ளை துணிகளை கட்டி, தமது எதிர்ப்புக்களை வெளியிட்ட போதிலும், டிசம்பர் 14ம் தேதி அந்த துணிகள் காணாமல் போயிருந்தன.

இந்த நிலையில், நாடு பூராகவும் உள்ள மக்கள் தமது வீடுகளின் முற்றத்தில் வெள்ளை நிற துணிகளை கட்டி தமது எதிர்ப்புக்களை வெளியிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஷயிர் மௌலானா தெரிவிக்கின்றார்.

உடலை பெற வராத பெற்றோர்

இதேவேளை, பெற்றோர் உடலை பொறுப்பேற்பதை நிராகரித்ததாக மருத்துமனை அதிகாரிகளின் குரல் பதிவுடனான காணொளியொன்றை பதிவேற்றம் செய்து, ஊடகவியலாளர் வஜிர சுமேத இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், மருத்துவமனை அதிகாரிகள் போலியான கருத்துக்களை வெளியிடுவதாக சிசுவின் தந்தை மொஹமட் பாஹிம் தெரிவிக்கின்றார்.

''மருத்துவமனைக்கு நான் சென்றவுடன், கையெழுத்து போடுமாறு கூறினார்கள். குழந்தையை தருவதற்காக ஏன் கையெழுத்து போட வேண்டும்" என தான் வினவியதாக அவர் கூறுகிறார்.

''குழந்தையை தர முடியாது. குழந்தைக்கு கொரோனா. உடலை தகனம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அப்போது என்னிடம் கூறினார்கள்."

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

''அம்மா குழந்தையை பார்க்கவில்லை. குழந்தைக்கு கொரோனா இல்லை. ரிப்போர்ட்டை கேட்டேன், தர முடியாது என கூறினார்கள்" என தந்தை தெரிவித்தார்.

இறுதியான குழந்தைக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதற்காக தான் நவலோக்க மருத்துவமனையை நட முயற்சித்த போது, வேறு மருத்துவமனைகளிலிருந்து எவரையும் அழைத்து வர முடியாது என மருத்துவர்கள் கூறியதாக தந்தை தெரிவிக்கின்றார்.

கெ

''கையெழுத்திடுமாறே மருத்துவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்கள். குழந்தையை தருவதாக இருந்தால் மாத்திரம், கையெழுத்திடுவேன் என நான் கூறினேன். யார் கையெழுத்திட்டார்கள் என தெரியாது. நான் கையெழுத்திடவில்லை"

''214 சடலங்கள் மருத்துவமனையில் இருக்கும் போது, ஏன் குழந்தையை மாத்திரம் தகனம் செய்கின்றீர்கள் என கேட்டேன். அதற்கு சரியான பதில் வழங்கவில்லை"

இந்த விடயம் தொடர்பில் பிபிசி செய்தி சேவை, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வினவியது

''ஒரு மோசமான செயற்பாடு என்பதுபார்க்கும் போது தெரிகின்றது. அது தந்தையொருவரின் வலி. எனினும், உடலை பொறுப்பேற்க முடியாது என கூறியதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்" என அமைச்சரவை பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

''என்ன நடந்தது என்பது குறித்து நாம் ஆராய வேண்டும். விசாரணை நடத்த வேண்டும். மருத்துவமனை என கூறும் போது ஒரு திட்டம் காணப்படுகின்றது. அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு விடயத்தை மறைக்க முடியுமா?" என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உறவினர்களின் எதிர்ப்பை மீறி, இதுவரை 107 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமிய தலைமைகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் (16) வரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத்தின் பதில்

முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பிலான பதிலை பெற்றுக்கொள்வதற்காக கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி மற்றும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன ஆகியோரை தொடர்புக் கொள்ள பல நாட்கள் முயற்சித்தபோதிலும், அவர்களை தொடர்புக்கொள்ள முடியவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள போதிலும், அதற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கோவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய, நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறட்சியான நிலப்பரப்பை கொண்ட பகுதிகளை தெரிவு செய்வது குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினையை அரசாங்கம் உணர்கின்ற போதிலும், கோவிட் தொற்றுக்கு மத்தியில் சிங்களம், பௌத்த மக்களும் அதே அளவிலான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகின்றார்.

''ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு நடைமுறைகள் காணப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் விருப்பமில்லாத வேலைகளையும் சில சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டியுள்ளது. பொதுமக்களின் நலனுக்காக இதனை செய்ய வேண்டியுள்ளது" என அவர் கூறுகின்றார்.

'இந்த விடயம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர்கள் குழுவே, தீர்மானத்தை எட்டுமே தவிர, அரசாங்கம் இறுதித் தீரமானத்தை எட்டாது என அவர் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய, மாத்தீவிடம் முன்வைத்த கோரிக்கை

இலங்கையில் கோவிட் தொற்று தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தமது நாட்டில் அடக்கம் செய்வது தொடர்பில் மாலத்தீவு கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி இப்ரைஹிம் சோலி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாலத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் தனது டுவிட்டர் தளத்தில் கடந்த 14ம் தேதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6

Twitter பதிவின் முடிவு, 6

இந்த தீர்மானத்திற்கு முஸ்லிம் சமூகத்திடமிருந்து மாத்திரமன்றி, எதிர்க்கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்புக்கள் வலுப் பெற ஆரம்பித்துள்ளன.

முஸ்லிம் மக்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாத்திரமன்றி, அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என ஊடகவியலாளர் முன்ஷா முஷ்டாக் தெரிவிக்கின்றார்.

அதனால் தமது உறவு இனத்தை, இலங்கையில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இலங்கையர்களின் மரண வீட்டிற்கு உதவிகளை வழங்குமாறு வேறு நாடுகளிடம் கோருவது, வெட்கப்பட வேண்டிய விடயம் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார்.

தாம் பிறந்து, வளர்த்த நாட்டில், தமது நம்பிக்கைக்கு அமைய இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கு இலங்கையர்களுக்கு உரிமை உள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 7

Twitter பதிவின் முடிவு, 7

இனவாத செயற்பாடு இது

இனவாத நிகழ்ச்சி நிரலொன்றை பின்பற்றி வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் உபத் தலைவர் ஹில்மி அஹமட் தெரிவிக்கின்றார்.

குழந்தையின் உடலை பெற்றோருக்கு காணப்பிக்காது, தகனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயத்திற்கு எவ்வாறு பதிலளிப்பது என்று தனக்கு தெரிவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம் இளைஞர்கள், எதிரான கொள்கைகளுக்கு திசை திருப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் நடவடிக்கை இனவாதத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடு என தெரிவிக்கப்படும் கருத்தை, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நிராகரித்துள்ளார்.

''தாய் ஒருவர் குழந்தையை அவ்வாறு விட்டுவிட்டு செல்ல முடியுமா?"

தனது குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமையை, மொஹமட் பாஹிமினால் இன்றும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

''குழந்தையை மயானத்திற்கு எடுத்துச் செல்வதாக கேள்வியுற்றவுடன், நான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லவில்லை" என அவர் கூறினார்.

Abdul Hameed Mohamed Rafaidin (South) with his children, who died last May

பட மூலாதாரம்,TWITTER

 
படக்குறிப்பு,

பிள்ளைகளுடன் கடந்த மே மாதம் உயிரிழந்த அப்துல் ஹமீது

''மருத்துவர்கள் கூறுவது தவறானது. 8ம் தேதி குழந்தையை அழைத்து வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் 7ம் தேதி இரவு 10.30க்கு குழந்தையை அழைத்து சென்றோம். தாமதமாகி குழந்தையை அழைத்துசெல்லவில்லை. அம்மாவை போக சொல்லவில்லை என கூறுகின்றனர். தாய் ஒருவர் அவ்வாறு குழந்தையை விட்டு விட்டு செல்வாரா?. பணிப்பாளர் டொக்டர் விஜேசூரிய பொய் சொல்லுகிறார். மருத்துவமனை பணிப்பாளரின் எண்ணத்தை மாத்திரமே பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது" என அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

''எனது குழந்தைக்கு நேர்ந்த இந்த துர்ப்பாக்கிய நிலைமை, வேறு எந்தவொரு குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. 'இவ்வாறான துக்கம் வேறு எவருக்கும் வரக்கூடாது" என்கிறார் பாதிக்கப்பட்ட தந்தை.

கொரோனா வைரஸ்: நெஞ்சை உருக்கிய இஸ்லாமிய சிசுவின் உடல் தகனம் - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.