Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரட்ணசிறீயின் மன்னிப்பால் கண்ணீர் விட்ட அமைச்சர் டிலான் பெரேரா.

Featured Replies

ரட்ணசிறீயின் மன்னிப்பால் கண்ணீர் விட்ட அமைச்சர் டிலான் பெரேரா.

தமிழர்களை வெளியேற்றியமைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மன்னிப்பு கேட்டமையை தான் கண்ணீருடன் வாசித்ததாக சிறிலங்கா நீதித்துறை அமைச்சர் டிலன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்மைய மனித உரிமை மீறல்கள், பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் படுகொலை ஆகியவற்றுக்காக தாங்கள் மன்னிப்பு கேட்டமையை கண்ணீருடன் வாசித்தேன். அத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தைப் பாதிப்பதால் நாம் தான் முழுமையான பொறுப்பேற்க வேண்டும்.

இந்த நாட்டின் அனைத்து மக்களுக்காகவும்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டபிள்.யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க நிறுவினார். ஏகாதிபத்திய - முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. இந்த நாட்டின் எந்த ஒரு பகுதி மக்களும் மோசமாக நடத்தப்பட்டால்- அவர்களின் மனித உரிமை மீறப்பட்டால் நாம் கவலை கொள்வோம். நமது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை தங்கள் மன்னிப்பின் மூலம் நீங்கள் புதுப்பித்திருப்பதோடு நமது அரசாங்கத்துக்கு தார்மீக ரீதியான ஒரு கனபரிமாணத்தையும் ஏற்படுத்திவிட்டீர்கள் என்று அதில் கூறியுள்ளார்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

பிரதமர் வருத்தம் தெரிவித்ததை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: ஜெயராஜ்.

கொழும்பு லொட்ஜ்களில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக அரச அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி அச்சம்பவத்திற்கு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அரசாங்கத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்ததை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றஞ்சுமத்தி அவர்களை மனதளவில் பாதிப்படையச்செய்ய இடமளிக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளுக்கு 150 கோடி ரூபாவை வழங்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின்

தலைவர் ரணில் விக்கிரம சிங்க, முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி,டிரான் அலஸ் ஆகியோர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். என்று கூறிய அவர், அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து புலிகள் பணத்தை பெற்றுக்கொண்டனரா என்பதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரியப்படுத்த வேண்டும் என்றும் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

இந்நாட்டு மக்களுக்கு எங்கும் எப்பொழுதும் வாழ்வதற்கான உரிமை உண்டு. எனினும் பாதுகாப்புப் படையினர் அச்சத்துடன் வாழவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர் என்பதனால் கொழும்பு லொட்ஜ்களில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு அரச அதிகாரிகள் விட்ட தவறு காரணமாகவே இடம்பெற்றுள்ளது என்று கூறி வருத்தம் தெரிவித்தமை நூற்றுக்கு நூறு வீதம் தவறானதாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 150 கோடி ரூபா வழங்கியதன் மூலமே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டனர் என்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியராச்சி, டிலான் அல்விஸ் ஆகியோர் கூறுவது தொடர்பாக இந்நாட்டு மக்களுக்கு பிரபாகரனே தெளிவுபடுத்தவேண்டும்.

புலிகள் கூறுவதில் நூறுவீதம் பொய் இல்லை

விடுதலைப்புலிகள் கூறுகின்ற சில விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்கள் சொல்வதில் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை இருப்பதாகவும் அல்லது நூறு வீதம் பொய் இருப்பதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணம் வழங்கினாரா இல்லையா என்பதை பிரபாகரன் தயவு செய்து தெரியப்படுத்தவேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணம் வழங்கினார் என்ற வாய்ப்பேச்சுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க முடியாது.அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகளை நிரூபிக்க முடியுமாயின் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டதாக புலிகள் தெரிவித்தால் உடனடியாகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

வாய்மூலமான உறுதிமொழி பிரதமருக்கு தெரியாது

லொட்ஜ்களில் இருந்து தமிழர்கள் விருப்பத்தின் பேரிலா செல்கின்றனர் என்று லொட்ஜ்களில் வைத்து வாய்மூலமும் வவுனியாவில் வைத்து இறக்கப்பட்டதன் பின்னர் எழுத்து மூலமும் கேட்டுள்ளனர். இதில் எழுத்துமூலமாக வழங்கப்பட்ட தகவல் மட்டுமே பிரதமருக்கு தெரிந்துள்ளது. அதன் மூலமே மேற்படி சம்பவத்திற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

-Tamilwin-

ஒருத்தர் மன்னிப்புகேட்டதை வரவேற்கிறார், மற்றவர் அனுமதிக்க முடியாது எண்ண்டுற்றார். என்னப்பா நடக்குது அரசாங்கத்துக்குள்ளை...??? நல்லா குளம்பிப்போய் இருக்கிறார்கள், அவைக்குள்ளை ஒற்ற்றுமை இல்லை எண்டதும் நண்றாக விளங்குது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான்படைத் தம்பிமார்களே இவங்க இரண்டு பேரிட தலையிலையும் குண்டுபோட்டால்தான் திருந்துவாங்கள். வேற எதுவும் சரிவராது.

  • கருத்துக்கள உறவுகள்

ரட்ணசிறியின் வெறும் அறிக்கைக்குக் கண்ணீர் விட்ட டிலான் பெரோவிற்கு தமிழ் மக்களின் இரத்தங்கள் சிங்கள இராணுவத்தால் கொட்டப்படுகின்றபோது ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லையா? அதையும் விட அன்று காலைக்கடன் கூடச் செய்யவிடாமல் சுமார் 8 மணி நேரமான பிராயணத்திற்கு உற்படுத்தி அவஸ்தைக்குள் தமிழ் மக்களை அலைய விட்ட போது கூட எவ்வித வருத்தமும் வரவில்லையா? உங்களைப் போன்றவர்களுக்கு 4 நாள் கழிப்பறை போகாமல் தடுத்தால் தான் தெரியும் அதன் கஸ்டம்.

z_p37-Dilan.jpg

டிலான் பெரேரோ, சுதந்திர கூட்டமைப்பில் உள்ள சில யதார்த்தமான அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் போருக்கு எதிரான முன்னனியில் உள்ள (தற்போது காணகிடைப்பதில்லை) ஒரே ஒரு சுதந்திர கட்சி உறுப்பினர். இவர் யதார்த்த பூர்வமாக சில வேளைகளில் தெரிவிக்கும் பல கருத்துகளால் மகிந்தவால் ஓரங்கட்டப்பட்டவர்! (சந்திரிகா காலத்தில் அமைச்சராகவும் தற்போது பிரதி அமைச்சராகவும் உள்ளார்)

Edited by சாணக்கியன்

இரத்தினசிரியின் மன்னிப்பே அரசின் நிலைப்பாடு என்கிறார் அமைச்சரவை பேச்சாளர் ஊடக அமைச்சர் பிரியதர்சன யாப்பா

No matter what Jeyaraj says Govt's stand is the PM's stand

Minister of Media and Cabinet Spokesperson Anura Priyadharshana Yapa says the government has no other stand except for the one declared by the prime minister that the government regrets the forcible eviction of Tamil lodges from Colombo.

The minister made this statement answering a question raised by a journalist during this morning?s cabinet briefing.

The journalist questioned the minister what the government's stand is since the prime minister and the chief government whip are stating two different views.

The minister of media stressed that the government regrets the move to evict Tamils and that is the final.

- LEN

முதலிலில் தங்கள் குழப்பங்களுக்கு முடிவை தேடட்டும் பிறகு நாட்டு குழப்பத்தை தீர்க அலையட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.