Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புள்ள சுமந்திரனுக்கு விக்கி எழுதுவது…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள சுமந்திரனுக்கு விக்கி எழுதுவது…

December 19, 2020

Vick-Suma.jpg

அன்புள்ள சுமந்திரன் அறிவது,
எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும்.

அதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது.

எது எவ்வாறு இருப்பினும் உங்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரேயொரு திடமான செயற்பாடானது இதுவரை காலமும் தோல்வியைத் தழுவிய கூட்டத் தீர்மானம் போன்ற பிறிதொரு கூட்டத் தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவதாகும். அதுவும் இலங்கை அரசாங்கம் ஒற்றுமைக் கூட்டத் தீர்மானமானமாக முன்னர் கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கிய பின்னர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.

மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள்? உண்மையில் மேலும் காலக்கெடு அளித்தால் இன்றைய அரசாங்கமானது தமிழ், முஸ்லீம் சமூகங்களை இனி இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தீர்களா? அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்கள் முதல் வரைவில் மிகச் சரியாகப் பின்வருமாறு கூறியுள்ளீர்கள் –

‘தற்போது அவர்கள் குடியியல் பதவிகளுக்கு படையினரைத் தொடர்ந்து நியமித்து வருகின்றார்கள், தமிழ் மக்களின் காணிகளைக் கைப்பற்றி வருகின்றார்கள், தொல்லியல் மேலாண்மை என்ற பெயரில் கிழக்கிலங்கையில் காணிப் பங்கீட்டை நடாத்த பௌத்த மதவாளர்களை நியமித்துள்ளார்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரைக் கண்காணிக்கவும் பயமுறுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள். மேலும் முஸ்லீம் சமூகத்தவரின் மதம் சார்ந்த நல்லடக்கச் சடங்குகளைத் தடைபோட்டுத் தடுத்து வருகின்றார்கள்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மிக்க செல்வாக்குள்ள அங்கத்தவராக மாறிவரும் சீனாவானது 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ந் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அடங்கிய உலக ஸ்தாபனங்களில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கியும் பாதுகாப்பையும் வழங்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது’

இவ்வாறெல்லாம் நடக்கின்றன என்று கூறும் நீங்கள் எதற்காக இலங்கைக்கு மேலும் காலக்கெடு அளிக்க முன்வந்துள்ளீர்கள்?
நீங்களே உங்கள் பரிந்துரையொன்றில் காலக்கெடு அளிப்பதால் ஆவதொன்றில்லை என்ற கருத்தைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளீர்கள்.

‘தாமதமானது மேலும் நீடித்தால் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கமானது மேலும் வலுவடைந்து இலங்கையின் சிறுபான்மையினர் அனைவரையும் கீழடக்கும் காலம் விரைவில் வரவிருக்கின்றது என்ற பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் சட்ட ரீதியான ஏக்கத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள்.
இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டும் மேலும் காலக்கெடு இலங்கைக்கு வழங்க நீங்கள் முன்வருவது எனக்கு மலைப்பை ஏற்படுத்துகின்றது.

உங்கள் பரிந்துரையானது இனவழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திற்கு முன்னர் அளித்த சலுகைகளை சர்வதேச நாடுகள் மீண்டும் அளிக்க வேண்டும் என்ற தொனிப்படவே அமைந்துள்ளது. அதில் மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் இந்தக் கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீங்கள் முன்வைக்க முன்வந்துள்ளீர்கள். உங்கள் ஆவணத்தையும் பரிந்துரைகளையும் எவ்வாறு நாம் ஏற்க முடியும்? அவ்வாவணத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

ஐங்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் இருந்து தள்ளி நின்று அதற்கு எமது பகைமையை வெளிக்காட்டுவது சரியானதா என்ற கேள்வி உங்கள் மனதில் பூதாகாரமாக எழுந்துள்ளதை நான் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகள் நீதி மன்றத்திற்கோ இலங்கையைக் கொண்டு செல்ல தமிழர் தரப்பார் இதுவரையில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டுத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்றோ பேரவையைப் பகிஷ்கரியுங்கள் என்றோ நான் கூறவில்லை. 

நான் கூறுவது என்னவென்றால் பேரவையின் கூட்டுத்தீர்மானத்தை மேலும் பலப்படுத்த மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதேயாகும்.

வடக்கு மாகாணசபையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்ந்த உள்ளூராட்சி மன்றங்கள் சிலவும் ஏற்கனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக கூட்டுத்தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அத்துடன் ஈழத்தமிழ்ச் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுடன் எனது கட்சியும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரிடம் சென்ற வருடமே மார்ச் மாதத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தக் கோரியுள்ளோம்.

ஆகவே இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினரிடமோ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினரிடமோ இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ ஐக்கிய நாடுகளினால் விசேடமாக நியமிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு ஆயத்திற்கோ பாரப்படுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் நாம் கேட்கலாம்.

அதே நேரத்தில் சமாந்திரமாக நாம் இலங்கையை சர்வதேச நீதி மன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்பான பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைச் சாத்தியமான செயற்பாடாகும். இவற்றைச் செய்ய முடியுமா முடியாதா என்று மயங்கி நிற்கக் கூடாது. எமது மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் இவற்றைச் செய்வது எமது கடமையும் கடப்பாடாகவும் அமைகின்றது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரிக்கை விடும் அதே நேரம் ஐக்கிய நாடுகள் விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அந்தப் பேரவையிடம் கோரிக்கை விடலாம். அதாவது இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஒரு ஆய்வாளரை நியமிக்கக் கோரலாம். 

அத்துடன் ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்ப்பாடுகளையும் ஆராயுமாறு கோரலாம்.
இவற்றை முழுமனதுடன் நடைமுறைப் படுத்த நீங்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இந்த அடிப்படையில் ஒரு கடிதத்தை வரைந்து தமிழ்க் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டு அதனைப் பாரப்படுத்தலாம். நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இவற்றைச் செய்ய ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

நாம் ஒன்று சேர்ந்து இந்த நடவடிக்கைகளை எடுப்போமாக! எனது கட்சி இதற்காக உங்களுக்கு முழு ஆதரவையும் நல்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி.

அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

பாராளுமன்ற உறுப்பினர்

 

https://globaltamilnews.net/2020/154581/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் ஜெனிவா யோசனைகளை நிராகரித்த சி.வி., கஜேந்திரகுமார்

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானமானது எவ்விதமாக அமைய வேண்டும் என்பது தொடர்பிலான யோசனைகளை உள்ளடக்கிய வரைபொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தயாரித்திருந்தார்.

அந்த வரைவுக்கு தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள மக்கள் ஆணைபெற்ற ஏனைய அரசியல் தரப்புக்களான தமிழ் மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் அங்கீகாரத்தினையும் பெறும் பொருட்டு அந்த வரைபினை கஜேந்திரகுமார் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் இணக்கப்பாட்டைப் பெறுவதற்காக கைளித்திருந்தார்.

அவர்கள் இணங்கும் பட்சத்தின் ஒட்டுமொத்த மக்கள் ஆணைபெற்ற தமிழ்த் தரப்பின் ஏகோபித்த முன்மொழிவாக அவ்வரைபினை ஐ.நா.மனித உரிமைகள் போவையிலும் மற்றும் இலங்கை தொடர்பான விவகாரங்களை கையாளவுள்ள பிரித்தானியா தலைமையிலான ஏனைய இணை அணுசரனை நாடுகளிடத்திலும கையளிப்பதே திட்டமாக இருந்தது.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுமந்திரனின் யோசனைகள் அடங்கிய வரைவினை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவருடைய முன்மொழிவானது, இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால நீட்டிப்பை வழங்குவதாக இருக்கின்றது என்றும் மிகப்பலவீனமானதொன்றாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே இலங்கை விவகாரத்தினை மேலும் கால விரயம் செய்து முடக்குவதாகவுமே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இருதரப்புக்களுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு கையொப்பமிட முடியுமாக இருந்தால் பரிந்துரைகளை செய்யுங்கள் என்று ஏற்கனவே சுமந்திரன் தன்னிடத்தில் கூறியுள்ள நிலையில் அவருடைய யோசனைகள் அடங்கிய வரைவை முழுமையாக மாற்றியமைக்கும் வகையிலேயே தமது பரிந்துரைகள் காணப்படும் என்பதால் அவ்விதமான முயற்சியொன்று பயனற்றதாகவே கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன், சுமந்திரனின் யோசனை வரைவு தொடர்பாக பதிலுரைத்துள்ளதுடன் தனது நிலைப்பாடுகள் சிலவற்றை உள்ளீர்க்குமாறும் கோரியுள்ளார்.

மேலும் விக்னேஸ்வரன் சுமந்திரனுக்கு அனுப்பிய பதிலில், உங்கள்(சுமந்திரன்) பரிந்துரையானது இனவழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திற்கு முன்னர் அளித்த சலுகைகளை சர்வதேச நாடுகள் மீண்டும் அளிக்க வேண்டும் என்ற தொனிப்படவே அமைந்துள்ளது. அதில் மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் இந்தக் கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நீங்கள் முன்வைக்க முன்வந்துள்ளீர்கள். உங்கள் ஆவணத்தையும் பரிந்துரைகளையும் எவ்வாறு நாம் ஏற்க முடியும்? அவ்வாவணத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்பபடுத்துமாறு மனித உரிமைகள் பேரவையை கோரும் அதேவேளை இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றை ஆராய்வதற்கும் கண்காணிப்பதற்கும் இலங்கைக்கான ஐ.நா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் பொறுப்புக்கூறல் மற்றும்

போர்க்குற்ற செயற்பாடுகளுக்கு அனுசரணை செய்யும்வகையில் சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றை நிறுவுமாறும் மனித உரிமைகள் பேரவையை கோருவதுமே இன்றைய சூழ்நிலையில் பொருத்தமானது என்றும் விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ளர்.

தனது மேற்படி முன்மொழிவுகள் அடிப்படையில் ஒரு கடிதத்தை தயாரித்து மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கும் நடவடிக்கையை முழுமனதுடன் மேற்கொள்ளுமாறும் அதற்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் சுமந்திரனுக்கு கூறியுள்ளார்
 

 

https://www.virakesari.lk/article/96883

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே இலங்கை விவகாரத்தினை மேலும் கால விரயம் செய்து முடக்குவதாகவுமே அமையும்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

 அரசின் கைப்பாவை, மற்றைய தமிழ்  தலைவர்கள் ஏதும் முயற்சி பண்ணி  தனது எஜமானை குற்றவாளிக்கூண்டில் ஏறறாமல் பாதுகாக்கவே முந்திக்கொண்டு "உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை நீங்கள் தயார் செய்யுங்கள்” என்று அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.என்று ஒரு கதையை உருவாக்கிக்கொண்டு தனக்கு கீழே மற்றவர்களை இணைய அழைப்பதன் மூலம் மற்றவர்களின் செயற்பாடுகளை தடுத்து எஜமானை காப்பாற்ற துடிக்கிறார். இந்தச் சகுனி வீட்டை விட்டு வெளியேறும்வரை வீடு உருப்படாது. விக்கினேஸ்வரனுக்கு விளக்கம் குறைவு என்று வியாக்கியானம் செய்து கொண்டு வருவார். அதுக்கு சம்பந்தரும் தலையாட்டும். தான் தமிழருக்கு நல்லது செய்வதுபோல் ஜாடை காட்ட, பாராளுமன்றத்தில் அரசுக்கெதிராக ஒரு விளாசு விளாசுவார். அவனும் கேட்டுவிட்டு ஒரு குறும்புச் சிரிப்புடன் இருப்பான். நாங்களும் சுமந்திரனுக்கு கோபம் வந்திட்டுது, ஜெனீவாவில சிங்களவன் துலைஞ்சான் என்று பெருமை பேசுவோம்.  சொன்னதை நிறைவேற்றுவதில் உறுதியாய் இருப்பவர் இந்தச் சுமந்திரன். ஒவ்வொரு முறையும் புதிய பிரேரணையை உருவாக்கி அதை நிறைவேற்ற கால அவகாசம் கொடுக்க யாரையும் கேட்காமல் பறப்பார் ஜெனீவாவுக்கும் அமெரிக்காவுக்கும்.   தமிழரின் பிரச்னையை சொல்வதற்கு மட்டும் அங்கிருப்பவர்கள் பாத்துக்கொள்வார்கள் என்று நழுவுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஒற்றுமையாக ஒரு நிலைப்பாட்டுக்கு வர முன் சிங்களம் முழுமையாக விழுங்கி ஏப்பம் விட்டு விடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.