Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகளமுனைக்குக் கட்டியம் கூறும் புலிகளின் முள்ளிக்குளத் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடகளமுனைக்குக் கட்டியம் கூறும்

புலிகளின் முள்ளிக்குளத் தாக்குதல் -ஜெயராஜ்-

வடக்கில் திறக்கப்படும் களமுனைகள் எத்தகைய கடுமையானவையாக இருக்கும் என்பதைக் கடந்த 2 ஆம் திகதி சனிக்கிழமை சிறிலங்காப் படைத்துறைத் தலைமை நன்கு விளங்கிக் கொண்டிருக்கும் என்றே நம்பலாம்.

சனிக்கிழமை இரவில் இருந்து அடுத்த நாள் பகல்வரை இடம்பெற்ற மோதலில் மன்னார் மாவட்டம் விளாத்திக்குளத்திலும், முள்ளிக்குளத்திலுமாகச் சிறிலங்கா இராணுவம் பல துருப்பினரை இழந்துள்ளதோடு, பவள் கவச வாகனம் உட்பட பல ஆயுதத்தளவாடங்களையும் புலிகளிடம் பறிகொடுத்திருந்தது. இதேவேளை வவுனியா மாவட்டம் பம்பைமடுவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆயுதக் களஞ்சியம், ஆட்லறிகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரம் உட்பட தொலைத் தொடர்பு சாதனங்களையும் இழந்தது.

இத்தாக்குதலின் போது உயிரிழந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையாயினும் இரு அதிகாரிகள் உட்பட 30 பேர் காணாமற் போனதாகவும், 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் வரையில் காயமடைந்ததாகவும் சிறிலங்காப் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டும் கொழும்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் இத்தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவினால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட 57 டிவிசன் படையணியின், 9 ஆவது கெமுனு வோச்சும், 4 ஆவது சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவுமே உள்ளாகியிருந்தன.

இப்படையணியானது (57 டிவிசன்) மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடுவதற்கென உருவாக்கப்பட்டதொன்றாகும். இதன் பொறுப்பதிகாரியாக பிரிகேடியர் சுமித் மானவடு நியமனம் செய்யப்பட்டார். சிறப்புப்படையணியாக உருவாக்கப்பட்ட இப்படையணியானது ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.

சிறிலங்காப் படைத்தரப்பு, காலத்திற்குக்காலம் புலிகளுடன் போரிடுவதற்கெனச் சிறப்புப் படையணிகளை உருவாக்குவதை வழமையானதொரு நடவடிக்கையாகவே கொண்டிருந்தது. எடுத்துக்காட்டாக மணலாற்றில் போரிடுவதற்காக உருவாக்கப்பட்ட 53 ஆவது டிவிசன், ஆனையிறவில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேறுவதற்காக உருவாக்கப்பட்ட 54 ஆவது டிவிசன், எடிபல இராணுவ நடவடிக்கைக்கென அதாவது, வவுனியா-மன்னார் வீதியைக் கைப்பற்றுவதற்கென உருவாக்கப்பட்ட 55 ஆவது டிவிசன், ஜயசிக்குறு நடவடிக்கையின்போது கிளிநொச்சி நோக்கி முன்னேறுவதற்கென உருவாக்கப் பட்ட 56 ஆவது டிவிசன் என்ற வரிசையில் தற்பொழுது மன்னார் மாவட்ட நடவடிக்கைக்கென குறிப்பாக, மடுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கென இராணுவத் தளபதியால் 57 ஆவது டிவிசன் உருவாக்கப்பட்டது.

இதிலுள்ள எதிர்மறையான விடயம் என்னவெனில், போரிடுவதற்கெனச் சிறிலங்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து டிவிசன்களும் விடுதலைப் புலிகளுடனான சமர்களில் தோல்வியையும், பாரிய இழப்புக்களையும் சந்தித்துள்ளமையாகும்.

எடுத்துக்காட்டாக, 53 ஆவது டிவிசன் துருப்புக்கள் பல களமுனைகளில் விடுதலைப் புலிகளிடம் பலமான அடிவாங்கியுள்ளதோடு பல நூறு துருப்புக்களையும் இழந்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால், சத்ஜெய - 1, ஜெயசிக்குறு (மன்னகுளம்) விடுதலைப் புலிகளின் ஆனையிறவுத்தளம் மீதான தாக்குதலின் போதும் தாளையடியுட்பட்ட ஆனையிறவின் வடக்கு-வடகிழக்குப் பகுதியிலும் இப்படையணி கடும் சேதத்திற்கு உள்ளானது.

இதேசமயம், புலிகளின் ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின்போது வன்னியில் நிலை கொண்டிருந்த 55 ஆம், 56 ஆம் படையணிகள் பாரிய இழப்புக்களைச் சந்தித்தன. இப் படையணிகளின் தலைமையகம் அமைந்திருந்த கனகராயன்குளத்தில் இருந்து இதன் தளபதிகள் (கட்டளை அதிகாரிகள்) தப்பியோடும் அளவிற்கு இப்படையணிகள் புலி களிடம் அடிவாங்கின.

அடுத்ததாக, ஆனையிறவுப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த 54 ஆவது டிவிசன் தற்பொழுது செயற்பட முடியாத அளவிற்கு புலிகளிடம் கிளிநொச்சியிலும், ஆனையிறவிலும் வாங்கிக் கட்டிக்கொண்டன. இத்தகையதொரு நிலையில், மன்னார் பிரதேசத்தின் நடவடிக்கைக்கென உருவாக்கப்பட்ட 57 ஆவது டிவிசனின் எதிர்காலம் குறித்து ஆராய வேண்டிய சூழ்நிலை ஒன்று உருவாகியிருப்பதாகக் கொழும்பு இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

57 ஆவது டிவிசன் துருப்புக்கள் கடந்த இரண்டாம் திகதிதான் முதற்தடவையாக அடிவாங்கியுள்ளதென்பதல்ல. கடந்த சில மாதங்களாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போதும் இப்படையணி புலிகளிடம் அடிவாங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக, மடுப் பிரதேசத்தைக் கைப்பற்றவெனக் கடந்த மார்ச் மாதத்தில் இப்படையணி மேற்கொண்ட நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் முறியடிக்கப்பட்டபோது இப்படையணி குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்தது.

57 ஆவது டிவிசன் துருப்புக்கள் இதுவரையில் முன்னைய டிவிசன் துருப்புக்கள் விடுதலைப் புலிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதுபோல் இன்னமும் வாங்கிக் கட்டிக்கொள்ளாது விடினும்கூட, அண்மைய நிகழ்வுகள் இரு பெரும் கேள்விகளை எழுப்புவதாகவுள்ளன.

01) வடக்கில் சிறிலங்கா இராணுவத்தால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தின் ஒரு பகுதியைத்தானும் கைப்பற்றித் தக்கவைத்துக்கொள்ள முடியுமா?

02) விடுதலைப் புலிகள் வலிந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் பட்சத்தில் இராணுவம் பேரிழப்பைச் சந்திப்பதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியுமா?

என்பவையே இவையாகும்.

கடந்த ஆண்டில் சிறிலங்கா இராணுவம் யுத்தத்தை முனைப்புப்படுத்தியதன் பின்னர், ஒக்ரோபரில் முகமாலை முன்னரங்க நிலைகள் ஊடாகப் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. இதன்போது முதற்கட்டமாகப் பளையையும், அடுத்த கட்டமாக ஆனையிறவையும் கைப்பற்றுவதே அதன் இலக்காகும்.

ஆனால், இந்நடவடிக்கையானது சிறிலங்கா இராணுவத்திற்குப் பெரும் உயிர் மற்றும் ஆயுத தளவாட இழப்பையும் ஏற்படுத்தியது. 75 இற்கும் மேற்பட்ட இராணுவச் சடலங்கள் விடுதலைப் புலிகளின் கைகளில் சிக்கிய அதேவேளை, பல டாங்கிகளையும், கவச வாகனங்களையும் அது இழக்க வேண்டியதாயிற்று.

விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பகுதிக்குள் ஊடுருவிய இரண்டு கொம்பனிகளுக்கு என்ன நடந்ததென்றே சிறிலங்காப் படைத்தரப்பினால் அறிய முடியாது போனது. இத்தோல்வியானது முகமாலை - நாகர்கோவில் களமுனையில் இராணுவத்தினரின் முயற்சிகளை இதுவரை முடக்கி வைத்துள்ளதெனலாம்.

வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியின் வட போரரங்கில் நிகழ்ந்த இச்சம்பவத்தை அடுத்து தெற்கில் மன்னார் மாவட்டத்தில் பல மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவத்தின் 57 ஆவது டிவிசன் துருப்புக்கள் மேற்கொண்டன. இவை முக்கியமாக மடுப் பிரதேசத்திலும், முள்ளிக்குளம், விளாத்திக்குளம் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பெரும்பாலும், காடு சூழ்ந்ததான இப்பகுதியில் இலகுவில் சில ஊடுருவல்களைச் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொள்ள முடிந்ததாயினும் மோதல் என்ற நிலை உருவாகியதும் சிறிலங்கா இராணுவம் இழப்புக்களுடன் பின்வாங்க வேண்டியதாகவே இருந்தது.

இதில் மடுவைக் கைப்பற்றுவதற்கென கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி இராணுவத்திற்குக் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தியதோடு, நடவடிக்கை தோல்வியிலும் முடிவுற்றமை இராணுவத்தரப்பிற்கும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாய் அமைந்தது.

இத்தகையதொரு நிலையில், முள்ளிக்குளம், விளாத்திக்குளம் பகுதியில் முன்னகர்திருந்த இராணுவத்தின் மீது கடந்த இரண்டாம் திகதி தாக்குதலை நடாத்தி விடுதலைப் புலிகள் சேதத்தை விளைவித்ததோடு இராணுவத்தை விரட்டியடித்தமையும், ஆட்லறித்தளத்தின் மீது துல்லியமான தாக்குதலை நடத்திச் சேதத்தை ஏற்படுத்தியமையும் சிறிலங்கா இராணுவத்திற்குத் தனது வரையறைகளை உணர்த்தப்போதுமானதாகும்.

அடுத்ததாக, வடக்கில் விடுதலைப் புலிகள் வலிந்து தாக்குதல் ஒன்றிற்குத் தயாராகும் பட்சத்தில் சிறிலங்கா இராணுவத்தால் அதனைத் தடுத்து நிறுத்த முடியுமா? என்பதும், தமது காட்டுப்பாட்டில் தற்பொழுதுள்ள பிரதேசங்களைத் தொடர்ந்தும் தக்கவைக்க முடியுமா? என்பதும் கேள்விக்குரியவையே.

ஏனெனில், கடந்த இரண்டாம் திகதி விடுதலைப் புலிகள் தாக்குதல்களை ஆரம்பிப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பாகச் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததோடு, விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகவும், இது அன்றோ அன்றி சில தினங்களுக்குள்ளோ நடக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார்.

அது மட்டுமன்றி, விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொள்ளும் பட்சத்தில் எவ்வாறு எதிர்கொள்வதெனவும் அறிவுறுத்தல்களையும் அவர் விடுத்திருந்தார். ஆனால், அவர் கொழும்பு திரும்பிச் சில மணி நேரத்திற்குள் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்திப் படையினருக்குப் பெரும் சேதத்தை விளைவித்தனர்.

அதிலும் குறிப்பாக, இராணுவம் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது சிதறி ஓடவேண்டியதாகியது. மீட்பிற்கென அனுப்பப்பட்ட பவள் கவச வாகனத்தையும் புலிகளிடம் பறிகொடுக்க வேண்டியதாகியது. இழப்புக்களை மூடிமறைப்பதற்காக இராணுவச் சடலங்களை இராணுவம் கையேற்காதுவிட்டது. சுருக்கமாகக் கூறின் காணாமற்போனோர் பட்டியலில் இறந்தோரை இணைத்துக்கொண்டது.

இத்தகையதொரு நிலையில், சிறிலங்கா இராணுவத் தலைமையோ அன்றி ஆட்சியாளர்களோ விடுதலைப் புலிகளைப் பற்றித் தவறான மதிப்பீடுக்கு வருவார்களேயானால், சிறிலங்காப் படைத்துறை பாரிய இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வருவது தவிர்க்கப்பட முடியாததொன்றாகவே இருக்கும்.

கிழக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள், அங்குள்ள பௌதிக, அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழ்நிலை காரணமாக இராணுவத் தரப்பு பல அனுகூலங்களை அனுபவிப்பதோடு, சில முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே விடுதலைப் புலிகளின் பலம் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டதென்பதும், யுத்தம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என்பதுமான அறிவிப்பாகும்.

தமிழ் மக்களும் சரி, விடுதலைப் புலிகளும் சரி கடந்த மூன்று தசாப்தகாலமாக சிறிலங்காவின் பல இராணுவத் தளபதிகளையும், அரசியல் தலைவர்களையும், இராணுவப் பேச்சாளர்களையும் கண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே யுத்தத்தின் வெற்றி பற்றியே பேசிவந்துள்ளனர்.

ஆனால், இவர்களில் எவரும் தமது பதவிக்காலமோ அன்றி ஆட்சிக்காலமோ முடிவுறும் நிலையில் யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களாகவோ, கௌரவமாக வழி அனுப்பி வைக்கப்பட்டவர்களாகவோ இல்லை. அனைவரும் தோல்வியுடனும் மனச்சுமையுடனுமே சென்றுள்ளனர்.

இந்த வகையிலேயே, தற்பொழுதுள்ள ஆட்சியாளரும், இராணுவத் தளபதியும் தமது பதவிக் காலத்தைவிட்டுச் செல்ல வேண்டியதாகவே இருக்கும் என்பதை முகமாலையும், முள்ளிக்குளமும் உணர்த்துவதற்குப் போதுமானவையாக இருக்கும்.

நன்றி: ஈழநாதம் (13.06.07)

நன்றி -http://www.tamilnaatham.com/articles/2007/jun/jeyaraj/14.htm

இதுமுடிவல்ல ஆரம்பமே...........

திருமலையில் சிறிலங்கா கடற்படையுடன் அல் ஜசிரா தொலைக்காட்சி நிருபரின் படமாக்கல்:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.