Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய கிரிக்கட் செய்திகள்

Featured Replies

அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே...

என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட கிரிக்கட் செய்திகளால் யாழ்கள விளையாட்டுத் திடலை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி.

யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய கிரிக்கட் செய்திகளை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய கிரிக்கட் செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம்.

இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்

புதிய பயிற்சியாளர் பேலீஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் டிரிவோர் பேலீஸ், நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்கவுள்ள இவர், இரண்டு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்.

உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி பதவி விலகுவதாக அறிவித்தார்.

இலங்கை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஐந்தாவது ஆஸ்திரேலியர் டிரிவோர் பேலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

-B.B.C-

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை விபரம் அறிவிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பின் பாகிஸ்தான் அணி நவம்பர் 2 ஆம் திகதி முதல் இந்தியா வந்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட்டில் பங்கேற்கிறது. இதற்கான இடங்கள், திகதி இந்திய கிரிக்கெட் சபை செயற்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

போட்டி அட்டவணை வருமாறு;

இந்தியா- அவுஸ்திரேலிய தொடர்

செப். 29 முதல் ஒரு நாள் போட்டி, பெங்களூர்

அக்.2 2-ஆவது ஒரு நாள் போட்டி, கொச்சி

அக்.5 3 -ஆவது ஒரு நாள் போட்டி, ஐதராபாத்

அக்.8 4 ஆவது ஒரு நாள் போட்டி, கவுகாத்தி

அக்.11 5 ஆவது ஒரு நாள் போட்டி, பரோடா

அக்.14 6 ஆவது ஒரு நாள் போட்டி, நாக்பூர்

அக்.17 7 ஆவது ஒரு நாள் போட்டி, மும்பை

இந்தியா- பாகிஸ்தான் தொடர்

நவ.2 பாகிஸ்தான் அணி வருகை

நவ.6 முதல் ஒரு நாள் போட்டி, பரிதாபாத்

நவ.9 2 ஆவது ஒரு நாள் போட்டி, மொகாலி

நவ.12 3 ஆவது ஒரு நாள் போட்டி, கான்பூர்

நவ.15 4 ஆவது ஒரு நாள் போட்டி, குவாலியர்

நவ.18 5 ஆவது ஒரு நாள் போட்டி, ஜெய்பூர்

நவ.22-26 முதலாவது டெஸ்ட், டெல்லி

நவ.30 - டிச.4 2 ஆவது டெஸ்ட், கொல்கத்தா

டிச.8 -12 3 ஆவது டெஸ்ட், பெங்களூர்.

-dinakkural-

  • தொடங்கியவர்

அணியிலிருந்து நீக்கம்-முனாப் படேல் டென்சன்

சென்னையில் எம்ஆர்எப் பவுண்டேஷனில் சிறப்பு பயிற்சி எடுத்து எனது திறமையை அடுத்த போட்டியில் நிச்சயம் நிரூபிப்பேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முனாப் படேல் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியினர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்ல இருக்கின்றனர். இந்த அணியில் முனாப் படேல் இடம் பெறவில்லை.

முனாப் படேல் முழுத் தகுதியுடன் இல்லாததால் அவரை தேர்ந்தெடுக்கவில்லை என தேர்வு குழு தலைவர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

இதனால் எரிச்சலான படேல் தனது சொந்த கிராமமான குஜராத்திலுள்ள பரூக் மாவட்டத்திலுள்ள இகாருக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து படேல் கூறுகையில், நான் முழு தகுதியுடன் இருந்தும் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. காரணம் என்னவென்று தெரியவில்லை.

சொந்த ஊரில் சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு, சென்னையிலுள்ள எம்ஆர்எப் பவுண்டேஷனின் சிறப்பு பயிற்சி எடுக்கவுள்ளேன். அடுத்த போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று எனது திறமையை நிச்சயம் நிரூபிப்பேன் என்றார்.

-thatstamil-

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட விரும்புவதாக கூறுகின்றார் லாரா

மீண்டும் கிரிக்கெட்டில் கால் பதிக்க லாரா விரும்புகிறார். இதனை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக இருந்த 38 வயதான பிரையன் லாரா 2 மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். முதலில் ஒரு நாள் போட்டியிலிருந்து மட்டும் விலக முடிவு செய்திருந்த அவர் கடைசி நேரத்தில் டெஸ்டில் இருந்தும் விலகினார். இதையடுத்து அணிக்கு புதிய கப்டனாக சர்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்டில் பல சாதனைக்குச் சொந்தக்காரரான லாராவால் கிரிக்கெட்டை மறக்க முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார். இதனை அவர் மறைமுகமாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். `நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று நினைக்கிறேன். 6 அல்லது 8 மாதங்கள் கிரிக்கெட் இல்லாமலிருந்தால் அதை மறந்து விடுவேன் போல் இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டை நான் இன்னும் இழக்க விரும்பவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் அணியிலிருந்தும் 63 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கிறதே என்ற ஒரு கேள்விக்கு பதிலளித்த லாரா `தனிப்பட்ட முறையில் முடிந்த வரை சிறப்பாக விளையாடியிருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், ஒரு அணியாக நன்றாக செயற்படவில்லை என்பது இன்னும் எனக்கு வருத்தமாகவும் , உறுத்தலாகவும் இருக்கிறது' என்றார்.

-thinakkural-

  • தொடங்கியவர்

சச்சினின் டெஸ்ட் சத சாதனையை முறியடிப்பேன் என்கிறார் பொண்டிங்

டெஸ்ட் போட்டியில் அதிக சதமடித்தவர் என்ற சாதனையில் டெண்டுல்கர் உள்ளார். 137டெஸ்டில் விளையாடியிருக்கும் அவர் 37 சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கவாஸ்கர், லாரா ஆகியோர் தலா 34 சதங்கள் அடித்துள்ளனர். இருவரும் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது லாரா மீண்டும் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கிபொண்டிங் 33 சதம் அடித்துள்ளார். டெண்டுல்கரின் 37 சதத்தை முறியடிப்பேன் என்று பொண்டிங் கூறியுள்ளார்.

பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

கடந்த தொடர்களில் அவர் இரண்டு மூன்று சதம் அடித்தார். இதனால், அவர் 37 ஆவது சதத்தில் உள்ளார். நான் 33 சதத்தில் இருக்கிறேன். ஆனால், என்னை விட அவர் அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறார். என்னை விட வயதானவர். நானும் நீண்ட காலம் விளையாடும் பட்சத்தில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பேன் அதற்கான நேரத்திற்கு காத்திருக்கிறேன்.

டெண்டுல்கர் சமீபத்தில் பங்களாதேஷ் தொடரில் ஓட்டங்கள் குவித்தார். ஆனால், வலுவான அணிக்கு எதிராக அவர் ஓட்டம் குவிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை டெண்டுல்கர் தொடர்ந்து ஆட வேண்டுமானால், தனது துடுப்பாட்டத்தில் முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

ஸ் ரீவோ ஓய்வு பெறும் கட்டத்தில் கூட சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சிறந்த வீரராகவே இருந்தார். டெண்டுல்கர் சிறந்த வீரர். ஆனால், விளையாட்டில் தொடர்ந்து சிறப்பாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 3 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சியானதாகும். 1999இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்ற கடுமையாக போராடினோம்.

தொடக்கத்திலேயே பல போட்டிகளில் தோற்றோம். 2003, கடந்த உலகக் கிண்ணத்தில் நல்ல முன்னேற்றமிருந்தது. ஆனால், அதேநேரத்தில் நாங்கள் நம்ப முடியாத வகையில் கிரிக்கெட் விளையாடி வருகிறோம் என்றார்.

33 வயதான பொண்டிங் 110 டெஸ்ட்டில் விளையாடியிருக்கிறார். அவருக்கும், டெண்டுல்கருக்கும் 27 டெஸ்ட் வித்தியாசம் உள்ளது. பொண்டிங்கின் டெஸ்ட் சராசரி 59. 29. டெண்டுல்கரின் சராசரி 55. 44 ஆகும்.

-thinakkural-

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய அணியின் வெற்றியின் இரகசியம் என்ன என்று கூறுகிறார் அணித்தலைவர் பொண்டிங்

" ஒரு தொடருக்கு தயாராகும் போது இரண்டாவது இடத்திலிருக்கும் அணியாக நினைத்துக் கொள்வோம். இன்னும் சிறப்பாக செயல்பட்டு முன்னேற துடிப்பதே அவுஸ்திரேலியாவின் வெற்றியின் ரகசியம்" என்கிறார் கப்டன் ரிக்கி பொண்டிங்.

ஒரு நாள் போட்டிகளில் அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் அவுஸ்திரேலியாவின் கப்டன் ரிக்கி பொண்டிங். தற்போது பெங்களூர் வந்துள்ள அவர், எத்தனை வெற்றிகள் வந்தாலும் முழு மனநிறைவு பெறாததே அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்கிறார்.

இது குறித்து பொண்டிங் கூறியதாவது; ஒரு தொடருக்கான பயிற்சியின் போது, நாங்கள் இரண்டாவது இடத்திலிருக்கும் அணியாக நினைத்து கொள்வோம். இதுவரை சாதித்தது எதையும் பெரிதாக எண்ண மாட்டோம். அதனால் மகிழ்ச்சியடையவும் மாட்டோம். அனைத்து தொடர்களுக்கும் கடுமையாக முயற்சி செய்வோம்.

களத்தில் இறங்கும் போது எந்த இலக்கையும் நிர்ணயிக்க மாட்டோம். இலக்கு நிர்ணயித்தால் மிகப்பெரும் சாதனைகளை செய்ய முடியாது. எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்படுவோம். இந்திய அணி தற்போது கடும் நெருக்கடியில் விளையாடி வருகிறது. இதிலிருந்து மீண்டு வர அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் பார்த்த துடுப்பாட்ட வீரர்களில் சச்சின் தான் சிறந்த வீரர். நானும் அவரைப் போல் சிறந்த வீரராக வருவேன். இளம் வீரராக இருந்த போது எனக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதே போல் வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பந்துவீச்சாளராக இருப்பது மிகவும் எளிது. துடுப்பாட்டக்காரர் சிறிய தவறிழைத்தால் போதும் அவரை வீழ்த்திடலாம் என்றும் பொண்டிங் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஓட்டங்களுக்கும் பொண்டிங் ஒரு நாள் போட்டிகளில் எடுக்கும் ஒவ்வொரு ஓட்டங்களுக்கும், ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக தனியார் நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இத்தொகையை ஏழைச் சிறுவர்களின் படிப்பு செலவுக்கு வழங்கப்படும். இதையடுத்து இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்களை குவிக்கப் போவதாக பொண்டிங் தெரிவித்துள்ளார்.

-thinakkural-

பொன்டிங்கின் இரகசியம் தான் ஜம்முவின் இரகசியமும்

:P :icon_idea:

  • தொடங்கியவர்

தாழ்ந்தது தரம் வீழ்ந்தது அணி

* இதுதான் இன்றைய மேற்கிந்திய அணியின் நிலை

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் தோல்விப் பயணம் தொடர்கிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கிய முதல் இரண்டு (1975, 1979) முறை சாம்பியனாக வெற்றி நடை போட்ட மேற்கிந்திய அணி, தற்போது தரம் தாழ்ந்து திணறி வருகிறது.

ஒன்பதாவது உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில் நடத்திய மேற்கிந்திய அணியால், அரையிறுதிக்குக் கூட முன்னேற முடியவில்லை. இத்தொடருடன் உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர் லாராவும் தனது ஓய்வை அறிவித்து விட்டார்.

லாரா இல்லாத மேற்கிந்திய அணி, கத்துக்குட்டியை போல் காட்சியளிக்கிறது. இன்னும் 2 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் எனக் கூறிய லாரா, கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக முன்னதாகவே ஓய்வை அறிவித்து விட்டார். லாராவுக்கும் கிரிக்கெட் சபைக்குமிடையிலான மோதல் போக்கு, அணியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

லாராவுக்குப் பின் கப்டன் பொறுப்பேற்றுள்ள சர்வானுக்கு பெரியளவில் வீரர்களிடம் வரவேற்பில்லை. அணியை வழிநடத்தி செல்லும் அளவுக்கு அனுபவமும் அவரிடம் இல்லை. கப்டன் பொறுப்பேற்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் சுற்றுப்பயணத்திலேயே பலத்த காயத்துடன் நாடு திரும்பியுள்ளார் சர்வான். தவிர, துடுப்பாட்டத்தில் நடுவரிசை படுமோசமாகவுள்ளது. தொடக்க வீரர் கெய்ல், உலகக் கிண்ணத் தொடரிலிருந்து `போர்ம்' இழந்து தவித்து வருகிறார்.

ஆனால், அவருக்குப் பதில் மாற்று வீரரை களமிறக்குமளவுக்கு, திறமையான தொடக்க வீரர்கள் கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தும் தொடர்ந்து சொதப்பி வருகிறார் கெய்ல். துடுப்பாட்டத்தில் சந்தர்போலும், பந்துவீச்சில் கொலிமோரும் ஆறுதலாக இருக்கிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய வீரர்களுக்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையே சுமுக உறவு இல்லை. சபைக்கு எதிராக செயல்பட்ட லாரா தூக்கி எறியப்பட்டார். புதிதாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் மூரின் செயற்பாடுகள் மீது வீரர்களுக்கு நம்பிக்கையில்லை. வீரர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டு, கிரிக்கெட் சபை அவுஸ்திரேலியாவின் டேவிட் மூரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

வோல்ஷ்,அம்புரோஸ் போன்ற உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர்களுடன் எதிரணிகளை மிரட்டிக்கொண்டிருந்த மேற்கிந்திய அணி, தற்போது சரியான பயிற்சி இல்லாமல் துவண்டு போயுள்ளது.

மீண்டும் லாரா?

அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சிலர், வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தவிர, டெஸ்ட் போட்டிகளில் லாரா மீண்டும் விளையாட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். அணியின் நலனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு லாராவை பலரும் அணுகியுள்ளனர். ஆனால் லாரா இன்னும் மௌனம் சாதித்து வருகிறார்.

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்

அத்தபத்து மீது என்ன நடவடிக்கை எடுப்பது? இலங்கை கிரிக்கெட் சபை விரைவில் கூடுகிறது

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து திடீரென விலகியதற்காக அத்தபத்து மீது கிரிக்கெட் சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் வரும் 25 ஆம் திகதி தொடங்குகிறது. இத்தொடருக்கான இலங்கை அணியில் அத்தபத்து தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அத்தபத்து அறிவித்தார். இவர் தற்போது இங்கிலாந்தில் கிளப் போட்டிகளில் ஆடிவருகிறார். இது குறித்து இலங்கைக் கிரிக்கெட் சபைச் செயலர் மதிவாணன் கூறுகையில்;

"ஒப்பந்தத்தை இவர் மீறியுள்ளாரா? என்பது குறித்து ஆராய்வோம். இவர் மீறியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தனது திறமையை நிரூபிக்க அவருக்கு இத்தொடர் சிறந்த வாய்ப்பு. அவர் விலகியது வருத்தமளிக்கிறது" என்றார்.

மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. எனினும் இவருக்குப் பதிலாக ஜெயசூரியா அணியில் இடம்பெற மாட்டார் என்பது உறுதி. அணி நிர்வாகம் இவருக்கு இத்தொடரில் ஓய்வளித்ததையடுத்து, தற்போது கவுன்டி போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அத்தபத்து 16 சதங்களுடன்' 5 ஆயிரத்து 330 ஓட்டங்கள் குவித்துள்ளார். 267 ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரத்து 529 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 11 சதங்களும் அடங்கும்.

குட்டி யார் அத்தபத்து என்றா???

  • தொடங்கியவர்

அந்த பந்தோ?? :unsure:

பந்தோ அப்ப வீரை இல்லையா???குட்டி தாங்கள் ஒட்டும் கருத்தில் ஒருத்தரும் விவாதம் செய்வதில்லையே என்னையும் உங்களையும் போன்ற அறிவாளிகளை தவிர ஏன்???

:P :unsure: :P

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கிரிக்கெட்-வங்கதேச அணியை வீழ்த்தியது இலங்கை அணி

வெற்றி நாயகன் முரளிதரன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் 234 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதல் ஆட்டத்தில் 89 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டத்தில் 254 ஓட்டங்களையும் வங்காளதேச அணி எடுத்தது. இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 577 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் சார்பில் அதன் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இந்தப் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். வங்காளதேச அணிக்கு எதிராக இலங்கை பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி இதுதான்.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ண் அவர்களின் சாதனையை சமன் செய்ய முத்தையா முரளிதரனுக்கு இன்னமும் 25 விக்கெடுகள் மட்டுமே தேவை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இது வரை முரளிதரன் 683 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

:angry: :angry: முரளிதரன் விழுத்தினா தான் என்ன விழுதாட்டி தான் என்ன........... :angry: :angry:

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே லோட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் இங்கிலாந்து அணி 79 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஓட்ட விரங்கள் கீழே..

47773620ux7.jpg

98633957yy2.jpg

bvbrj8.jpg

Ian Bell சிறப்பாக துடுப்பாடி 56 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

-Cricinfo-

Edited by யாழ்வினோ

மேற்கிந்திய தீவுகள் அணி எனி பழைய நிலைமைக்கு வாறது என்றா முடியாத காரியம்.........அத்துடன் லாராவின் ஓய்வும் மேற்கிந்திய அணியை பின்னுக்கு இட்டு செல்லும் என்றே கூறலாம்...........

:unsure:

  • 2 weeks later...

71195411ap5.png

Marcus Trescothick

செப்ரம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள Twenty 20 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து துடுப்பாட்டச் சங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சிறந்த ஆட்டக்கரருமான Marcus Trescothick இன் பெயர் சேர்க்கப்பட்டள்ளது.

nonameec5.jpg

www.cricinfo.com

Edited by யாழ்வினோ

வினோ அண்ணா கிரிக்கட் சேய்தி ஒரே சலிப்பு தட்டுது ஏதாவது புதுசா ஒன்றும் இல்லையோ........ :P :huh: :P

வினோ அண்ணா கிரிக்கட் சேய்தி ஒரே சலிப்பு தட்டுது ஏதாவது புதுசா ஒன்றும் இல்லையோ........ :P :huh: :P

செப்ரம்பர் மாதம் வரைக்கும் கிரிக்கட் செய்திகள் கொஞ்சம் சலிப்பாக தான் இருக்கும் கொஞ்சம் பொறுத்திருங்கள் Twenty 20 ஆரம்பிக்கும் வரைக்கும். :lol:

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜெஃப் லாசன் நியமனம்

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளாரான ஜெஃப் லாசன் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை ஆஸ்திரேலியாவின் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பயிற்சியாளராக இருந்து, கடந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது மர்மான முறையில் மரணமடைந்த பாப் உல்மரின் மரணம் தொடர்பில் இருந்த சர்ச்சை விலகியதையடுத்தே தான் இந்தப் பொறுப்பை ஏற்பதாகவும் ஜெஃப் லாசன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணிக்கு கடந்த 11 ஆண்டுகளில் 8 பயிற்சியாளர்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர் என்றும், குறிப்பாக பந்துவீசும் அனைத்துத் துறைகளிலும் அவர்களிடம் பெரும் திறமை உள்ளது என்றும் ஜெஃப் லாசன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர்களிடம் இருக்கும் திறமையை ஒருங்கிணைத்து அவர்கள் சீரான வகையில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற வழிசெய்வதுதான் தனது முதல் கடமையாக இருக்கும் எனவும் ஜெஃப் லாசன் கூறுகிறார்.

--B.B.C-

இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான முதலாவது ரெஸ்ற் கிறிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் 76 ஓவர்களில் 252 ஓட்டங்களை பெற்று இரண்டு விக்கெற்றுக்களை மாத்திரம் இழந்த நிலையில் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

cricketdc4.jpg

இன்றைய நாள் ஆட்டம் முடியும் போது ஓட்ட விபரம்.

nonamegt6.jpg

-Cricinfo-

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் போட்டிகளில் சச்சின் 15,000 ரன்கள்!

சனி, 30 ஜூன் 2007( 15:03 ஈஸ்T )

Wஎப்டுனிஅ

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 15,000 ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் நகரில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நாள் போட்டியில் அரை சதத்தை எட்டியபோது, ஒரு நாள் போட்டிகளில் 15,000 ரன்களையும் சச்சின் எட்டிவிட்டார்.

387 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், 41 சதங்களுடனும், 79 அரை சதங்களுடனும் இவ்வளவு ரன்களைக் குவித்து மேலும் ஒரு உலக சாதனையை உருவாக்கியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் இன்னிங்ஸ் சராசரி 44.10 ரன்களாகும்.

http://tamil.webdunia.com/sports/cricket/n...070629044_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ட்ராஸ் 96, இங்கிலாந்து 218/2

வியாழன், 19 ஜூலை 2007( 21:12 ஈஸ்T )

Wஎப்டுனிஅ

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 96 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, மைக்கேல் வானுடன் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 142 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை 218 ரன்களுக்கு உயர்த்தியுள்ளார்!

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களை எடுத்துள்ளது.

அபாரமாக ஆடிய ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 186 பந்துகளில் 14 பெளண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனில் கும்ளேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மைக்கேல் வான் 166 பந்துகளில் 10 பெளண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றார்.

மறுமுனையில் கெவின் பீட்டர்சன் ஆடவந்துள்ளார்.

------

இங்கிலாந்து 169/1 (48 ஓவர்கள்)

இங்கிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் அலாஸ்டர் குக் விக்கெட்டை மட்டுமே இழந்து 169 ரன்களை எடுத்துள்ளது!

பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலாஸ்டர் குக், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நல்ல துவக்கத்தைத் தந்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 14.4 ஓவர்களிலேயே 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாஸ்டர் குக் ஆட்டமிழந்தார்.

அலாஸ்டர் குக் விக்கெட்டை செளரவ் கங்கூலி வீழ்த்தினார். கங்கூலியின் பந்தை தடுத்தாட முயன்று எல்.பி.டபிள்யூ. ஆகி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் குக். அடுத்து ஆடவந்த வானுடன் இணை சேர்ந்து அணியின் எண்ணிக்கை 48வது ஓவரின் முடிவில் 169 ரன்களுக்கு உயர்த்தினார் ஸ்ட்ராஸ்.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 141 பந்துகளை எதிர்கொண்டு 11 பெளண்டரிகளுடன் 67 ரன்களும், அணித் தலைவர் மைக்கேல் வான் 114 பந்துகளில் 8 பெளண்டரிகளுடன் 48 ரன்களும் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

http://tamil.webdunia.com/sports/cricket/n...070719023_1.htm

ஸ்ட்ராஸ் 96, இங்கிலாந்து 218/2

வியாழன், 19 ஜூலை 2007( 21:12 ஈஸ்T )

Wஎப்டுனிஅ

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 96 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, மைக்கேல் வானுடன் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 142 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை 218 ரன்களுக்கு உயர்த்தியுள்ளார்!

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களை எடுத்துள்ளது.

அபாரமாக ஆடிய ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 186 பந்துகளில் 14 பெளண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனில் கும்ளேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மைக்கேல் வான் 166 பந்துகளில் 10 பெளண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றார்.

மறுமுனையில் கெவின் பீட்டர்சன் ஆடவந்துள்ளார்.

------

இங்கிலாந்து 169/1 (48 ஓவர்கள்)

இங்கிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் அலாஸ்டர் குக் விக்கெட்டை மட்டுமே இழந்து 169 ரன்களை எடுத்துள்ளது!

பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலாஸ்டர் குக், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நல்ல துவக்கத்தைத் தந்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 14.4 ஓவர்களிலேயே 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாஸ்டர் குக் ஆட்டமிழந்தார்.

அலாஸ்டர் குக் விக்கெட்டை செளரவ் கங்கூலி வீழ்த்தினார். கங்கூலியின் பந்தை தடுத்தாட முயன்று எல்.பி.டபிள்யூ. ஆகி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் குக். அடுத்து ஆடவந்த வானுடன் இணை சேர்ந்து அணியின் எண்ணிக்கை 48வது ஓவரின் முடிவில் 169 ரன்களுக்கு உயர்த்தினார் ஸ்ட்ராஸ்.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 141 பந்துகளை எதிர்கொண்டு 11 பெளண்டரிகளுடன் 67 ரன்களும், அணித் தலைவர் மைக்கேல் வான் 114 பந்துகளில் 8 பெளண்டரிகளுடன் 48 ரன்களும் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.