Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீவிரமாக்கப்படும் படைபல அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமாக்கப்படும் படைபல அதிகரிப்பு

-அருஸ் (வேல்ஸ்)-

இலங்கை ஒரு முழு அளவிலான போருக்குள் மூழ்கிப்போயுள்ள அதேசமயம் மக்களும் என்றும் இல்லாதவாறான துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்மக்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கில் நேரடியான போருக்குள் சிக்கிக்தவித்த மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு என தலைநகருக்கு வந்தபோதும் அவர்களை கூட்டமாக அள்ளிச் சென்று பலவந்தமாக வெளியேற்றியமை உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுன்னர் மற்றுமொரு ஆச்சரியமான செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த வருடத்தில் படையினருக்கு மேலும் 50,000 இராணுவ வீரர்களை சேர்க்க அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களுக்கான கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த முடிவை அறிவித்துள்ளார்.

ஏறத்தாழ 5 டிவிசன் படையினரின் எண்ணிக்கையைக் கொண்ட இந்த அதிகரிப்பானது தற்போது உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையின் 41 சதவீத அதிகரிப்பாகும். அதாவது 120,000 பேரைக் கொண்டுள்ள இலங்கை இராணுவம் 170,000 பேரைக் கொண்டதாக மாற்றம் பெறப்போகின்றது. நாடு தீவிர யுத்தத்திற்கு முகம் கொடுக்கப்போகின்றதோ என்ற கேள்வியை இந்த அறிவிப்பு எழுப்பியிருக்கிறது.

மூன்றாவது ஈழப்போரில் 9 படையணிகளை கொண்டிருந்த இலங்கை இராணுவம் நான்காவது ஈழப்போரில் 15 படையணிகளை கொண்டதாக மாற்றம் பெறப்போகின்றது. 40 சதவீததத்தால் அதிகரித்த பாதுகாப்புச் செலவு 41 சதவீதத்தால் அதிகரிக்கப் போவது இராணுவத்தின் ஆட்பலம் என்பன நாடு தீவிர யுத்தத்திற்கு முகம் கொடுக்கப்போகின்றதோ என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

எனினும் அரசின் இந்த படைபல அதிகரிப்பு போரில் எத்தகைய மாற்றத்தை உண்டு பண்ணும்? முன்னைய காலங்களில் இராணுவத்தின் படைபல அதிகரிப்புக்கள் எத்தகைய மாற்றங்களை உண்டு பண்ணியது என்பவற்றை ஆராய்ந்தால், அரசின் இந்த படைபல அதிகரிப்புக்களினதும் அதன் போர் உத்திகளினதும் சாத்தியப்பாடுகள் எத்தகையது என்பதை ஓரளவு அனுமானிக்க முடியும்.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர், 1940 களிலும் அதற்கு முன்னரும் அது ஒரு உத்தியோகபூர்வமான இராணுவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. 1940 களின் பிற்பகுதிவரை அது ஒரு சிறிய காலனித்துவ படைக்கட்டமைப்பையே (ஊழடழnயைட குழசஉந) கொண்டிருந்தது. அதாவது இலங்கையரை போர் வீரர்களாக அன்றைய பிரித்தானியா அரசு கருதவில்லை என்பதே அதன் பொருள்.

எனினும் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1949 ஆம் ஆண்டு றெஜிமென்ட் மற்றும் பற்றாலியன்களை கொண்ட சிறிய இராணுவம் அமைக்கப்பட்டதுடன் அதன் தளபதியாக லெப். கேணல் அன்ரன் முத்துக்குமாரவும் நியமிக்கப்பட்டார். எனினும் இந்தப் படையினரின் பிரதான இராணுவ ஆலோசகராக பிரித்தானியாவின் இராணுவ பிரிகேடியர் றொட்றிக் சின்கிளையர் (சுழனநசiஉம ளுinஉடயசை) என்பவரே பணியாற்றி வந்தார்.

இலங்கை இராணுவத்தை பொறுத்த வரையிலும் 1940 களிலும் 1950 களிலும் அது ஒரு சம்பிரதாயபூர்வமான இராணுவமாகவே (ஊநசநஅழnயைட யுசஅல) இருந்து வந்துள்ளது. 1953 இல் ஏற்பட்ட தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம், 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம், அதே ஆண்டு கொண்டுவரப்பட்ட வாகன இலக்கத்தகடு முறை என்பனவற்றை எதிர்த்த தமிழ்மக்களின் எழுச்சிகள் போன்றவற்றை தொடர்ந்து இராணுவத்தை பலப்படுத்தும் திட்டம் முடுக்கிவிடப்பட்டது. அன்றைய பாதுகாப்புச் செலவில் 61 சதவீதம் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

1958 இல் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து தமிழ் மக்களினால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் தோன்றலாம் எனவும், எனவே இராணுவம் நான்கு பிராந்தியங்களுக்கு பிரிக்கப்பட்டு பலப்படுத்துவது அவசியம் எனவும் அன்றைய தளபதி அன்ரன் முத்துக்குமாரவினால் பிரதமர் ஜோன் கொத்தலாவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு தமிழ் மக்களினால் ஏற்படும் நெருக்கடிகளை அடக்குவதற்கென 300 இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். 1962 வரை இலகு காலாட்படை (டுiபாவ ஐகெயவெசல), சிங்க றெஜிமென்ட் என இரு றெஜிமென்ட்களை கொண்டிருந்த இராணுவம் 1962 ஆம் ஆண்டு மேலும் பலப்படுத்தப்பட்டதுடன் மூன்றாவது றெஜிமென்டும் (புநஅரரெ றுயவஉh) உருவாக்கப்பட்டது.

1966 ஆம் ஆண்டு இராணுவம் 5,300 பேரைக் கொண்டதாக இருந்த போதும் அது கலகம் அடக்கும் படையினரின் செயற்பாட்டையே கொண்டிருந்தது. அதாவது ஒரு போரை எதிர்கொள்வதற்கான படையாக தோற்றம் பெற்றிருக்கவில்லை. தமிழ் மக்களின் எழுச்சிகள் மெல்ல மெல்ல தோற்றம் பெற இராணுவமும் படிப்படியாக பலப்படுத்தப்பட்டது.

ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை தொடர்ந்து 1970 களின் முற்பகுதியில் கவசப்பிரிவு உருவாக்கப்பட்டதுடன் 1975 ஆம் ஆண்டு இராணுவம் பிரிகேட் நிலைக்கு உயர்ந்தது. இக்காலப்பகுதியில்தான் விடுதலைப் புலிகளும் மெல்ல மெல்ல வளர்ச்சி அடையத் தொடங்கினார்கள்.

1968 இல் 5,300 பேரைக் கொண்டிருந்த இராணுவம் ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு 8,500 பேரைக் கொண்டதாக தோற்றம் பெற்றது. 1978 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் நெல்லியடியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து வடபோர் முனையில் படையினரின் கவனம் செறிவாகியது.

எனினும் 1983 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இராணுவத்தினரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னரே படையினர் மத்தியில் பல மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் இராணுவத்தை ஒரு போரை எதிர்கொள்ளும் நிலைக்கும் மாற்ற அரசு முயற்சி எடுத்திருந்தது.

1980 களின் முற்பகுதியில் படையணிகள் (னுiஎளைழைn) தரநிலைக்கு இராணுவம் தரமுயர்த்தப்பட்டதுடன், அதன் ஆட்தொகையும் சடுதியான அதிகரிப்புக்களைக் கண்டிருந்தது. உதாரணமாக 1982 இல் 11,000 படையினரை கொண்ட இராணுவம் 1985 களில் 16,000 வீரர்களைக் கொண்டதாக தோற்றம் பெற்றது. 1984 காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் இருந்த படையினர் அடிக்கடி புலிகளின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கத் தொடங்கினர். இந்த சமயத்தில்தான் விடுதலைப் புலிகளின் தலைப்பகுதியை சிதைத்துவிட்டால் போராட்டம் ஒடுங்கிப்போய்விடும் என அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்துமுதலி அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவுடன் இணைந்து திட்டம் ஒன்றை வகுத்தார். அதுவே 1987 ஆம் ஆண்டு போடப்பட்ட யாழ். குடாநாட்டை கைப்பற்றும் திட்டம்.

இதில் பெரும் படைபலம் கொண்டு விடுதலைப் புலிகளுடன் மோதுவது என்ற உத்தி பின்பற்றப்பட்டது. அதற்கேற்ப 1985 இல் 16,000 வீரர்களைக் கொண்டிருந்த இராணுவம் 1986 களில் 30,000 வீரர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. அதாவது ஏறத்தாழ 90 சதவீத அதிகரிப்பு. ஓப்பரேசன் லிபரேசன் என்ற படை நடவடிக்கைக்காக 5,000 படைவீரர்கள் வடமராட்சியில் களமிறக்கப்பட்டனர்.

எனினும் அரசின் இந்த சடுதியான படை அதிகரிப்பை ஈடுகட்டும் முகமாக கரும்புலிகள் என்ற போராயுதம் விடுதலைப் புலிகளால் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் துருப்புக்களை கொண்டு விடுதலைப் புலிகளுடன் மோதலில் இறங்கியது. முற்று முழுதாக கெரில்லாப் போர் முறைக்கு மாற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இந்தியப் படைகளுக்கு பெரும் சவாலாகினர்.

வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் செறிவாக்கப்பட்ட இந்தியப் படையினரால் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன் இந்தியப்படைகளும் வெளியேறத் தொடங்கின.

இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமாகியது. தமது படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பை முன்வைத்து தான் விடுதலைப் புலிகளுடனான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவோம் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர்கள், தளபதிகள், ஜனாதிபதி போன்றோர் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம்.

இரண்டாவது ஈழப்போரிலும் படையினர் பெருமளவு ஆளணி அதிகரிப்பை மேற்கொண்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட்டது. 1991 ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப்போர் ஆரம்பித்ததும் அது 70 ஆயிரமாக பெருகியது. இராணுவத்தினரின் இந்த அதிகரிப்புடன் விடுதலைப் புலிகளின் பின்தளப்பகுதியான மணலாறை கைப்பற்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு காலம் சென்ற லெப். ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ தலைமையில் மீண்டும் யாழ். குடாநாட்டை கைப்பற்றும் முயற்சிகள் திட்டமிடப்பட்டன. அதற்கு ஏதுவாக மீண்டும் படை அதிகரிப்பு கடுகதியில் மேற்கொள்ளப்பட்டது.

1993 ஆம் ஆண்டு படையினரின் எண்ணிக்கை 90 ஆயிரமாக உயர்ந்தது. அதாவது 3 வருட காலப்பகுதியில் படையினரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தால் உயர்ந்தது. எனினும் 3 டிவிசன் கட்டளைப் பீடங்களுக்குள் தான் அவை உள்ளடக்கப்பட்டிருந்தன. அதாவது இராணுவம் 3 டிவிசன் தலைமையகங்களுடன் பல பிரிகேட்டுகள், றெஜிமென்ட்டுகளை சுயாதீனமாக கொண்டிருந்தது.

படையினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் கட்டமைப்பிலோ அல்லது செயற்றிறனிலோ முன்னேற்றம் ஏற்படவில்லை. எனினும் கொப்பேகடுவவின் மரணத்துடன் யாழ். மீதான படை நடவடிக்கை பிற்போடப்பட்டது. பூநகரி படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் படை நடவடிக்கையை அடுத்து தமது தளங்களை பாதுகாக்க மேலதிக இராணுவத்தினர் தேவை என படைத்தரப்பு கருதியது.

1994 இல் 1 லட்சத்து 5 ஆயிரம் படையினரைக் கொண்டதாக இராணுவம் மாற்றம் பெற்றது. எனினும் பேரழிவுகளுடன் போர் தற்காலிகமாக 1994 இல் முடிவுக்கு வந்ததே தவிர எந்த நோக்கத்திற்காக படையினரின் இந்த அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதோ அவை எதிர்மறையாகிப் போனவை தான் மிச்சம்.

சந்திரிகா அரசும் இராணுவத்தீர்வு மீது நம்பிக்கை கொண்டது. படையினரை போருக்கு ஏற்றவாறான முழுமையான கட்டளைப் பீடங்களாக ஒழுங்குபடுத்துவதன் மூலமும், நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்வதன் மூலமும் போரை வென்றுவிடலாம் என அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயினால் திட்டங்கள் வரையப்பட்டன.

அதாவது படையினரை ஒரு சீரான கட்டமைப்புக்குள் கொண்டு வந்து முழுமையாக ஒழுங்குபடுத்துதல் (ழுசபயnணையவழையெட உhயபெநள) தான் அங்கு பிரதானமாக கருதப்பட்டது. அதனுடன் தரமான பயிற்சிகளுடன் இராணுவத்தை வலிமைப்படுத்தும் உத்திகளும் பின்பற்றப்பட்டன.

1994 ஆம் ஆண்டு 3 படையணிகளை கொண்டிருந்த இராணுவத்தின் சுயாதீனமான பிரிகேட்டுகளை ஒன்றிணைத்து மேலும் 3 படையணிகள் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. இந்த படையணிகளில் முன்னர் சுயாதீன பிரிகேட்டாக இருந்த சிறப்புப் படையினரின் பிரிகேட்டுகள் ஒரு முழுமையான சிறப்புப் படையணியாக மாற்றம் பெற்றது.

அதுவே 53 ஆவது படையணியாகும். அதாவது மூன்றாவது ஈழப்போரில் படையினரின் எண்ணிக்கையில் பெருமளவில் மாற்றங்கள் இடம்பெறவில்லை. அதன் கட்டமைப்பிலும், கனரக ஆயுதங்களின் வலுவிலும் தான் அதிக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர் அரசு மேற்கொண்ட படைச்சேர்ப்புக்கள் எல்லாம் தப்பி ஓடுவோர், போரில் மரணமடைவோர் மற்றும் காயமடைவோர் போன்றவர்களினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கே பயன்பட்டன.

எனினும் உள்ள படையினரை மேலும் பிரித்து மேலதிக படையணிக் கட்டளைப் பீடங்கள் உருவாக்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டு இரு படையணிகளும் (54 ஆவது, 55 ஆவது படையணிகள்), 1997 ஆம் ஆண்டு மேலும் ஒரு படையணியும் (56 ஆவது படையணி) உருவாக்கப்பட்டது.

1999 களில் படையினர் 9 படையணிகளை கொண்டிருந்த போதும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 90 ஆயிரமாகவே இருந்தது. புதிய படையணிகள் உருவாக்கப்பட்டு, புதிய புதிய கட்டளைப் பீடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, தரமான பயிற்சிகள், முன்னணி மேற்குலக நாடுகளின் இராணுவ ஆலோசனைகள் என்பன வழங்கப்பட்ட போதும் மூன்றாம் ஈழப்போரில் இராணுவம் வெற்றிபெற முடியவில்லை. முல்லைத்தீவு, ஆனையிறவு என்பன இழக்கப்பட்டன. வரலாற்றில் மிகவும் நீண்டதும் பெரியதுமான படை நடவடிக்கை என கருதப்பட்ட 'ஜெயசுக்குறு" படை நடவடிக்கைக்காக 3 டிவிசன்களை களமிறக்கிய போதும் அது தோல்விகண்டது.

இலங்கைப் படையினரின் 53 ஆவது, 55 ஆவது என இரு முன்னணி படையணிகள் மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கை தோல்வியடைந்ததுடன் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் உருவாகியது.

இந்தப் போர் நிறுத்த காலப்பகுதியை இராணுவம் தனக்கு மூச்சுவிடும் காலமாக கருதி தன்னை மீண்டும் ஒழுங்குபடுத்த முற்பட்டிருந்தது. படையில் இருந்து தப்பி ஒடியவர்களுக்கு பொது மன்னிப்புக்கள் பல தடவைகள் வழங்கப்பட்டன. புதிதாக படையினரும் சேர்க்கப்பட்டனர்.

போர்நிறுத்த காலம் என்பதினாலும், அரசினால் அறிவிக்கப்பட்ட அதிகளவான ஊதியங்கள், சலுகைகளினாலும் கவரப்பட்டு தப்பி ஓடிய படையினரில் ஒரு தொகுதியினர் மீண்டும் இணைந்ததுடன், புதியவர்களும் அதிகம் இணைந்து கொண்டனர். இதன் மூலம் 2002 ஆம் ஆண்டு படையினரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

மோதல்கள் தீவிரம் அடைந்து நாலாம் கட்ட ஈழப்போரும் உருவாகியது. இந்த நிலையில் தான் தனது 9 படையணிகளில் உள்ள படையினரைப் பிரித்து 10 படையணிகளாக இராணுவம் ஒழுங்குபடுத்தியதுடன். உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியையும் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாக உருவாக்கியுள்ளது.

25 ஆயிரம் படையினரை முன்நிறுத்தி கிழக்கை கைப்பற்ற முனைந்துள்ள அதேசமயம் வடக்கிலும் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதே அரசின் திட்டம் என்று கருதப்படுகிறது. அதற்காகவே மேலும் 50 ஆயிரம் படையினரை திரட்ட அரசு முடிவெடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஆனால் போர்நிறுத்த காலத்தைப் போன்று தற்போது படையில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதமுடியாது. ஏனெனில் நடந்துவரும் போரில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் மனங்களில் பெரும் உளவியல் தாக்கங்களை உண்டுபண்ணக் கூடியவை.

எனவேதான் அரசு கிழக்கின் இராணுவ வெற்றிகளை முன்நிறுத்தி படையினரின் சேர்ப்பை ஊக்குவிக்க முன்னின்றது. அதற்கான முடிவுத் திகதிகளையும் நீடித்து வருகின்றது. ஆனால் வடக்கில் ஏற்பட்ட மோதல்கள், விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் தாக்குதல், கடற்புலிகளின் தாக்குதல்கள் என்பன தென்பகுதி மக்களின் உணர்வுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கும். இந்த நிலையில் 50 ஆயிரம் படையினரை சேர்ப்பது சாத்தியமான ஒன்றாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமும் நடைபெறும் கெரில்லாத் தாக்குதல்கள், பீரங்கி மற்றும் மோட்டார்த் தாக்குதல்களினால் களத்தில் உள்ள படையினரும் களைப்படைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவற்றையும் தாண்டி ஏற்படப்போகும் படைபல அதிகரிப்புக்கு ஏற்ப விடுதலைப்புலிகளும் புதிய போர் உத்திகள், புதிய ஆயுதங்கள், புதிய களமுனைகள் என தமது களங்களை விரிவாக்கியே வருவார்கள். எனவே களமுனை என்பது காகிதத்தில் வரைவது போல இலகுவாக இருக்கப்போவதில்லை. எனவே உக்கிரமான போரின் போது 41 சதவீத படை அதிகரிப்பை ஏற்படுத்துவது சாத்தியமானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (17.06.07)

நன்றி -

http://www.tamilnaatham.com/articles/2007/jun/arush/17.htm

5000 பேரைச் சேர்பதற்கு முயன்று 1000 பேரைக் கூட சேர்த்தக்கொள்ள முடியாத நிலையிலிருக்கம் படைபல அதிகரிப்பு 50 000 என்ற நிலையை எட்டவது எப்போது. கட்டுரையாளர் ஒரு முக்கியமான காரணி ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலால் களைப்படைந்த நிலைக்குப் படையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்கின்றார். அது உண்மைநிலை. இந்தக் களைப்பைப் போக்க 50 000 பேர் முன்வருவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி பலமடைவது என்பது வேடிக்கையாக ரசித்து விட்டுப் போகின்ற ஒரு சம்பவமல்ல. இதனால் எம் போராட்டம் என்னும் காலம் தாழ்த்துவதற்கு இடமுண்டு. எதிரிக்கு பலமடைகின்றான் என்றால் அதற்கு இணையாக நாமும் பலமடைந்தே ஆக வேண்டும்.

ஆள்வளரீதியாக பலமடைவது 1ம் நிலை. அதைப் பெருக்கிக் கொள்ளும்பட்சத்தில் தான் எதிரியோடு சமாந்தரமாகப் போரிட முடியும். அது புலத்தில் உள்ளவர்களால் இயலாத ஒன்று. இல்லாவிட்டால் ஆயுதரீதியான உயர்வு அவசியம். அது இஸ்ரேல் போன்றதொரு நவீனத்துவ வளர்ச்pயாக இருக்க வேண்டும்.

இரண்டாவது வழிக்குத் தான் எம்மால் முடியக் கூடியது. ஆயதரீதியான பலம் என்பது போராளிகளின் இழப்பினைக் குறைப்பதற்கு வழி சமைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

படைபல வளர்ச்சி மூலம் மட்டும் சிங்களவர்களால் தமிழ்த் தேசியப் போராட்டத்தை நசுக்க முடியாது.. அதேபோல் படைபல வளர்ச்சியை மட்டும்கொண்டு தமிழர்களும் எல்லா உரிமைகளையும் அடைந்துவிட முடியாது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.