Jump to content

தேசிய கீதமும் சைமன் காசிச் செட்டியின் நினைவும்.


Recommended Posts

தேசிய கீதமும்
சைமன் காசிச் செட்டியின் நினைவும்.
 
84490013_2665492250153699_26899658316930
 
தேசிய கீதம் தோன்றுவதற்கு முன்னரே,இலங்கையின் நீளத்தையும் சுற்றளவையும் அளந்து அறிவித்தவர் ஒரு தமிழர் என்ற நினைவை இந்நாட்களில் பதிவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'இலங்கையின் அட்ச தேசாந்திரத்தையும் நீள அகலத்தையும், சுற்றளவையும் முதன்முதலாக ஐரோப்பிய நில அளவையாள நிபுணர்கள் வியக்கும் வகையில் அளந்து கணித்து நிதானமாக அறிவித்த பெரியார் சைமன் காசிச்செட்டி என்னும் தமிழரே.
இன்றைக்கு உடனுக்குடன் வரும் சட்ட மாற்றங்களை அறிக்கைகளை வெளியிடும் அரசாங்க வர்த்தமானி (கசற்) வருவதற்கு முன்னோடி அவரே.
பிரித்தானிய அரசுக்கு முதலே, இலங்கை பற்றிய செய்திகளையும், எல்லாவிதமான தகவல்களையும் திரட்டி 'சிலோன் கசற்றியர்' என்று நூலாய் வெளியிட விரும்பினார்.
அப்போது இவர் புத்தளத்தில் மாவட்ட முதலியாராகப் பணி புரிந்து கொண்டிருந்தார்.
தமது அவவாவை அன்றைய தேசாதிபதி சேர் ரொபேட் வில்மட்டுக்கு விண்ணப்பிக்க, அவரும் பாராட்டி இவரை ஊக்குவித்து, குடியேற்ற நாட்டு மந்திரிக்கும் அறிவித்தார்.
செட்டியார் தயாரித்த நானாவித செய்தித் தொகுப்பான 'சிலோன் கசற்றியர்' 1834 இல் வெளிவந்தது.
இலங்கைப் பிரதம நீதியரசர் சேர் சார்ள்ஸ் மார்ஷல் பிரபு, பிரதம படைத்தலைவர் சேர் ஜோன் வில்சன் என்போர் அவரைப் பாராட்டி மகிழ்ச்சியுடன் வாழ்த்தி, மதிப்புரையும் வழங்கி 150 பவுண் அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்.
பின் நாட்களில் வந்த கசற் எனப்படும் வர்த்தமானிக்கு முன்னோடி இதுவேயாகும்.
செட்டியாரின் புகழ் இலண்டன் வரை பரவியது.
இலங்கை வாழ் தமிழன் இவ்வாறொன்றைப் படைத்தான் என்பது பிரமிப்புக்குரியதாயிற்று'.
-தகவல்கள்:
-o க. சி. குலரத்தினம்
செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்
-oகட்டுரை (தலையங்கம் நினைவில்லை) பேரா. கைலாசபதி.
இலங்கையில் எத்தனையோ மாவட்ட முதலிகள் அக்காலத்தில் பணியிலிருந்தும், நில அளவையாளர்களிருந்தும் முழு இலங்கைக்குமான வர்த்தமானி பற்றியும், முழு இலங்கைக்கான நில அளவை வரைபடத்தையும் உருவாக்கியவர் சைமன் காசிச் செட்டி என்ற தமிழரே.
ஒருகாலத்தில், போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் ஒருவர் பின் ஒருவராக ஆண்ட இலங்கைக் கரை நாடுகளின் பரப்பு 10,520 சதுர மைல் என்றும், நடுவில் மலைநாடு எனக் கண்டியரசன் ஆட்சிக்குட்பட்ட நிலம் 14,144 சதுர மைல் என்றும் நவீன அளவைக் கருவிகள் எவையுமின்றி அளந்தறிந்து கூறிய பெருமையும் இலங்கையர் என்று தனை நினைந்து இப்பணியை ஆற்றிய சைமன் காசிச் செட்டி என்ற தமிழருக்குரியதே.
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழில் பாடினால், தமிழ் ஈழம் தோன்றிவிடும் என்று சொல்பவர்களுக்கு
இந்த வரலாறுகள் தெரியுமோ தெரியாது.
அவர்களை அழைத்து, தமிழர் திருநாள் கொண்டாடும் எம் தமிழர்களாவது அன்னாருக்குச் சொல்வார்களாக.
நன்றி - வரதராஜன் மரியாம்பிள்ளை - நியூசிலாந்து
 
 • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • TKR ன் தாயகத்தில் இருந்தபடி புலத்தின் உறவுகளுக்கு அங்குள்ள யதார்த்த நிலமையினை உறைக்க சொல்லும் கருத்துக்களில் எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை. முஸ்லீம் சமூகம் ஆளும் வர்க்கத்துடன் ஒட்டியுறவாடியதால்  குப்பை மட்டுமே அள்ள  அங்குள்ள தமிழர்களை தள்ளிவிட பட்டார்கள் என்ற உங்கள் தகவல் ஒரு திரியில் பார்த்தேன்...  தாயகத்தில் குப்பை அள்ளும் தமிழர் பற்றியும் எழுதுகிறீர்கள், தாயகத்துக்கு குட் பாய் சொல்லிவிட்டு போன தமிழர்கள் பற்றியும் எழுதுகிறீர்கள், எழுத்திலும் உங்கள் பெயர் தனிதான்.  
  • அப்படியா எனக்கு தெரியாது.ஆனால் இது இயற்கையாக இருப்தால் ஆரோக்கியம் அதிகமாக இருக்கும். நன்றி சுவி
  • சுதந்திரமாய் வாழ நினைத்ததாலும், சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற ஒரேயொரு குற்றத்தினாலும்தான் எம் தலைமை எம்மைவிட்டு தொலைந்து போனது சுவியண்ணா.
  • கவிதை எழுதுறேன் என்ற பேரில எல்லா மதத்தையும் கழுவி ஊத்தினமாதிரி தெரியுது.. நீங்க மதம் அல்ல, மாதம்.. அதாவது ‘பிர’மாதம்.
  • சொல்லுங்கள் மாமா .........இங்க பார் மகள் எனக்கும் ஓர் பெண் பிள்ளை இருக்குறா நான் பெய்ய சொல்ல விரும்பல உண்மைய சொல்கிறன் நீ என்ற மகனுடன் கதைச்ச நீயா ? தயங்கியவள் இல்ல மாமா நான் கோல் எடுத்த நான் ஆனால் அவர் ஆன்சர் பண்ணல.  ம்ம் தெரியும் அவனுக்கு கல்யாணம் கட்டுற ஐடியா இல்ல. என்ற மனிசி சொன்னது எல்லாம் பொய் அவன் உன்ற வாழ்க்கைக்கு சரிவரமாட்டான். அவன் அந்த நாட்டு வாழ்க்கை வாழ்கிறான் உன் வாழ்வை கெடுத்துக்கொள்ளாதே நல்லா இரு மகள் உனக்கும் கையில் வேலை இருக்கிறது நல்ல பெடியனா பார்த்து கல்யாணம் கட்டு  என ஏக்கத்துடன் . சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.மாணிக்கவாசகர்  வரும் வழியில் தான் வெளிநாட்டு வாழ்கையில் தன் பிள்ளையைக்கூட ஒழுங்காக வளர்க்க முடியாத நாட்டில் வாழ்ந்து தொலைக்கிறோமே என் எண்ணியும். தனக்கும் ஓர் பெண் பிள்ளை இருப்பதை எண்ணியும். தன் காலில் உள்ள தடத்தையும் எத்தனை கண்டிப்பு எத்தனை அடி தன் தகப்பனின்ற வாங்கி நான் வளர்திருப்பேன். ஆனால் தற்போத்ய வாழ்வில் தங்கள் பேச்சைக்கூட கேட்காத பிள்ளையை வளர்த்த என்னிடம் எந்த பிழையும் இல்லை. நாடும் சட்டமும் நாகரிகமும் நம்மை நமது வாழ்வையும் தொலைத்து தொலைவில் கொண்டுபோய் விடுகிறது என எண்ணி வீடு செல்கிறார். அடுத்த நாள் கொழும்பு விமான நிலையம் வருகிறோம் ஐயர் என்ன சொல்கிறார்? ஐயர் கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்கிறார் ஓ அப்படியா மனிசி கோல் எடுக்கிறா அந்த பிள்ளையின் வீட்டுக்கு ஹலோ ரம்யாவா ஓம் சொல்லுங்க மாமி ஐயர் வந்து கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்லுறார் நான் இங்குள்ள ஐயரிட்ட காட்டியும் உங்களுக்கு கல்யாணம் வைக்கிற தேதிய‌ சொல்லுறன் சரியோ சரி மாமி கவனமாக போய்வாருங்கோ ஓம் நான் வைக்கிறன் . சரி  லண்டன் வந்த அவர்கள் மீண்டும் அவர்கள் வந்திறங்கியதை அறிவிக்க அழைப்ப்பு எடுக்கிறார் சாரதா. ரம்யாவின் போண் நிறுத்தப்பட்டு இருந்த்து . இஞ்சாருங்கோ போண் வேலை செய்யுதில்லை பரிமளத்த்க்கு எடுத்து பாரேன் என நான் சொல்ல. பரிமளம் அக்கா ரம்யா போண் வேலைசெய்யுதில்ல ஏன்? ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா . இஞ்சாருங்க அந்த பெட்டை கல்யாணம் வேணாம் என்று சொல்லுதாம், அவளுக்கு இங்கு வந்து வாழ கொடுத்து வைக்கல ஆரோ  என்னவோ சொல்லி இருக்காங்களாம். நீங்கள் ஏதும் சொன்ன நீங்களோ? நான் என்ன சொல்ல போறன் நான் சில இடங்களை பார்க்கல எண்டு இருக்கன் நீ வேற.... ஓ உங்களுக்கு இடம் பார்க்கிரதுதான் முக்கியம் போல? சரி  சரி விடு வேற யாரையெண்டாலும் பார்ப்போம் என மாணிக்கவாசகரும்... என் மனதிற்குள் நான் செய்தது நன்மையா , தீமையா, நல்லதா, கெட்டதா என என்மனம் ஆயிரம் கேள்விகள் கேட்டு உறுத்திக்கொண்டே இருக்கிறது உறுத்துகிறது நல்லது என நினைத்தால் நல்லது கெட்டது என நினைத்தால் கெட்டது நல்லதுதான் செய்திருக்கிறேன் என உறுதிகொள்கிறார். மகளை வீட்டுக்கு அழைக்க போணை எடுக்கிறார். அப்போது அடுத்த மெசேஞ் வருகிறது காணொளியாக அதை திறந்த போது அங்கு P2P பேரணி சுமந்திரனும் , சாணாக்கியரும் பேரணி நடத்துகிறார்கள்.  சாரதா அந்த குளிசைப்போத்தல எடுத்துவா  பிரசர் கூடுனமாதிரி இருக்கு என்று கூறி போணை ஓவ் செய்கிறார் மாணிக்கவாசகர்.  முற்றும்  கற்பனையும் உண்மையும் சேர்த்து       நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.