Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தலையில் துப்பாக்கியைவைத்து , சமரசம் செய்யுமாறு சொல்வதால் எதுவும் செய்ய முடியாது,எதுவும்நடக்காது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலையில் துப்பாக்கியைவைத்து , சமரசம் செய்யுமாறு சொல்வதால் எதுவும் செய்ய முடியாது,எதுவும்நடக்காது ” – வெளிவிவகார செயலாளர் அட்மிரல் .ஜயநாத் கொலம்பகே கூறுகிறார். மீரா ஸ்ரீநி வாசன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்இலங்கை தொடர்பான தீர்மானம் விரைவில் வாக்களிப்புக்கு விடப்படவுள்ளநிலையில்  இந்தியாவின் “சாதகமான ” ஆதரவைத் தேடும் இலங்கையின் வெளிவிவகார  அமைச்சின்  செயலாளர், “இந்தியா எங்களை கைவிட முடியாது” என்று கூறியுள்ளார்.

Jayanath-ColombageSecretary-to-the-Forei
“உங்கள் வெளியுறவுஅமைச்சர்  கூறியது போலஉலகம் ஒரு குடும்பம் என்றால்,  நாங்கள் உடனடி அடுத்த குடும்பம், இல்லையா” என்று அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே , பேரவையில் அண்மையில்  ஆற்றியஉரையில் இந்திய  வெளிவிவகார  அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  குறிப்பிட்டிருந்த  ‘வாசுதைவ குடும்பகம்’ என்ற  குறிப்பை மேற்கோள் காட்டி தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் கடற்படைத்  தளபதியான வெளியுறவு செயலாளர், ஜெனீவாவில் நடைபெற்று வரும் அமர்வில் ,இலங்கையின் வாய்ப்புகள், இந்திய -இலங்கை உறவுகள், கொழும்பின் பரந்துபட்ட வெளியுறவுக் கொள்கை தெரிவுகள்  மற்றும் “உள்ளிருந்து” நல்லிணக்கத்திற்கான உபாயம்  மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை   குறித்து  ‘இந்து’பத்திரிகையுடன் பேசியுள்ளார்.
ஜெனீவாவில் பிராந்தியத்தில் உள்ள நாடுகள்இலங்கைக்கு  ஆதரவை வழங்காவிடின்அது  “மிகவும் சங்கடமாக” இருக்கும் என்று கொலம்பகேகூறியுள்ளார். பேரவையின் . தற்போதைய  உறுப்பினர்களில் ஒருவரான இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை இலங்கையை ஆதரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார், ஏனெனில்  , “கோவிட் -19 உடன் போராடி வருகின்றன, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன”.என்ற ஒற்றுமைத்தன்மையை இந்நாடுகள்  கொண்டுள்ளன  எனவும் அவர்  கூ றி யுள்ளார்.

geneva1.jpg
“எங்கள் ஜனாதிபதியின் [கோத்தாபய ராஜபக்ச ] ஆதரவு  கோரும் முதல் கடிதம் இந்தியப் பிரதமருக்கானதாக  இருந்தது, இங்கு அவரின்   முதல் சந்திப்பு இந்திய உயர் ஸ்தானிகருடனா னதாகும். . ஏனென்றால், தெற்காசிய ஒற்றுமைதொடர்பாக நாங்கள் மிகவும் பிரக் ஞையுடன் உள்ளோம்  , “என்று அவர் மேலும் கூறியுள்ளார்அத்துடன் .:” இலங்கைக்கு எங்களுடன்  நட்பு றவு கொண்ட அயல்  நாடுகளின் ஆதரவு தேவை. நாங்கள் அசாதாரணமானஎதனையும்  கேட்கவில்லை, பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பதை   அடிப்படையாக கொண்ட (சாகர்) உங்களின்  அயலவர்  முதலில்என்ற   கொள்கையின் அடிப்படையில் சிலதை  கேட்கிறோம். ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் சீனா சம்பந்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கொழும்பு எடுத்த தொடர்ச்சியான முடிவுகளைத் தொடர்ந்து, இந்திய -இ லங்கை  இருதரப்பு உறவுகள் நெருக்கடிக்குள்ளான தருணத்தில்  அவரது வேண்டுகோள் வந்துள்ளது.
பேரவையில்  வாக்களிக்காமல் இந்தியாதவிர்த்துக்கொள்வதை   ஆதரவானதாக  இலங்கை கருத்தில் கொள்ளுமா என்பது குறித்து,கருத்து தெரிவித்த  வெளிவிவகாரச்  செயலாளர்,’ இங்கோ, அங்கோஇல்லாமல் ‘  வாக்களிப்பதைத் தவிர்த்துக்கொள்வதிலும் பார்க்க , “செயலூக்கமான” மற்றும் “ஆக்கபூர்வமான” உறுதிப்பாட்டை எதிர்பார்ப்பதாக  கூறினார்,எல்லாவற்றிற்கும் மேலாக,எதிர்க்கின்ற  தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக தென்பட்டது.: “ஏனெனில்பேரவையின் இரட்டைத் தனம்  மற்றும் பாசாங்குத்தனம் காரணமாகஉலகின்  தெற்கிலிருந்து ஒரு நாடு வாக்களிப் பில் வெற்றிபெறுவது  கடினம் … ,”என்று வளர் ச்சியடைந்தநாடுகளின்  உரிமைகள்  துஷ் பிரயோகம்  மற்றும்  பொலிஸ் கொடூ ரம் என்பனவற்றை  சுட்டிக்காட்டி  அவர் கூறியுள்ளார்.
தீர்மானத்தைத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் போன்ற தண்டனை நடவடிக்கைகள் அரசாங்கத்தை விட மக்களையே  அதிகம் பாதிக்கும் என்றும் . கொலம்பகே  கூறியுள்ளார்., . “யாரோ ஒருவர் நம் தலையில் துப்பாக்கியைக் காட்டி, சரி சமரசம் செய்யுங்கள் என்று சொல்வதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அது ஒருபோதும் நடக்காது. ” என்று நல்லிணக்க வழிமுறைகள் நாட்டிற்குள் உருவாக வேண்டும் என்றும்அவர்   வாதிட்டார்.    இன்னும் வழங்கப்படாத உள்நாட்டு திட்டங்கள் குறித்து பலமுறை சந்தேகங்களைசிறுபான்மையினர் வெளிப்படுத்தியுள்ளனர்என்றும்நாட்டினுள் வெளிப்படையான நம்பிக்கை பற்றாக்குறையை அரசாங்கம் எவ்வாறுதீர்த்துவைக்க முடியும்  என்று கேட்கப்பட்ட கேள்விக்கு  – 30 ஆண்டுகால யுத்தத்தில் சிதைந்த சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த  காலம்  எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வாக்கு
“கடுமையான மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழும் அபாயகரமான பாதை” பற்றிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை  உயர் ஸ்தானிகர் மிசேல்  ப ச்லெட்டின்இலங்கை பற்றிய  அறிக்கையிலிருந்துவரையப்படும்   தீர்மானத்தில் இந்தியா எவ்வாறு வாக்களிக்கும்  என்பது  பார்க்கபட  வேண்டியதாக இருந்துவருகிறது.. மைத்ரிபால சிறிசேன-ரனில் விக்கிரமசிங்க அரசாங்கம் 2015 தீர்மானத்திற்கு இணைஅனுசரணை  அளித்ததால், வாக்கெடுப்பு தேவைப்பட் டிருக்கவில்லை.
கடந்த வாரம் பேரவையில்  இலங்கை தொடர்பானகலந்துரையாடலில் ,இந்தியா,   ஜனவரி மாதம் கொழும்பில் ஜெய்சங்கரின் செய்தியை மீண்டும் வலியுறுத்தியதுடன், நல்லிணக்க செயல்முறை மற்றும்அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை  முழு மையாக அமுல்படுத்துதல்  உட்பட தமிழர்களின் “நியாயமான அபிலாஷைகளை” நிவர்த்தி செய்வதற்கு  தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு  இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. .ஆனால் இலங்கை வெளியுறவு செயலாளர் தற்போதுள்ள சட்டங்களிலி  ருந்தும் முழுமையாக  விலகுவதற்கு முன்னுரிமைகொடுக்கும்   விருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.. ஒரு புதிய, “மக்களை மையமாகக் கொண்ட” அரசியலமைப்பை இலங்கை கொண்டிருப்பதற்கான தருணமாக  இது உள்ளது. இது “முன்னேற” வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டுகிறது.ராஜபக்ச  அரசாங்கத்தில்உள்ள  சிலரின் தொடர்ச்சியான அழைப்புகள் மற்றும் அவை ஒழிக்கப்படுவதற்கான ஆதரவு தளத்தின் மத்தியில்.”மாகாண சபைகளை ஒழிப்பது சவாலாக இருக்கும், மாறாக அவற்றுக்கு வலுவூட்ட   நாங்கள் அவற்றுக்கு  அதிகாரம் அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை , வெளியுறவு செயலாளர் தற்போதுள்ள 13 வது திருத்தத்தை ஒரு தீர்வாக பார்க்கவில்லை. 13 ஆவது திருத்தம் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதையும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைமேம்படுத்துவதையும்  நோக்கமாகக் கொண்டது, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக  உள்ளவை  உட்பட மாகாணங்களுக்கான  அதிகாரப் பகிர்வே இலங்கையின் ஒரே சட்டமன்ற உத்தரவாதம் என்று  அவர் கூறினார்.
“13 வது திருத்தத்தின் காரணமாக அந்த இரண்டு முக்கிய நோக்கங்களில் ஏதேனும் சாதிக்கப்பட்டுள்ளதா என்று  பார்ப்போம். இல்லை என்பதே பதிலாகும்.. 2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் இழுத்துச் செல்லப்பட்டது, மேலும் 1987 க்குப் பிறகு இன்னும் பல கொலைகள் நடந்தன. பின்னர்,உள்நாட்டுப் போர் 2009 இல் முடிந்தபின்னரும்  13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் கட்சிகள் தொடர்ந்துவலியுறுத்திவந்த நிலையிலும் கூட  மாகாண சபை அமைப்பு மூலம் அபிவிருத்தி நடைபெற முடியவில்லை, ”என்று . கொலம்பகே  கூறினார்,
மூத்த தமிழ் தலைவர் ஆர். சம்பந்தன் தவறாமல் கூறுவது போல், “பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத இலங்கைக்குள்” அதிக ளவு அதிகாரப் பகிர்வைத்  தமிழ் கட்சிகள்தேடுகின்ற போதிலும்,” தமிழ் ஈழம் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தாவிடினும் கூட ”அவர்களின் கோரிக்கைகள் பிரிவினைவாதத்தை நோக்கி சாய்வு தன்மைகொண்டவை என்ற  கருத்தை கொலம்பகே கொண்டிருக்கிறார்.
“நீங்கள் ஒருசமஷ்டி  அரசை விரும்புகிறீர்கள் என்று நீங்கள் கூறும்போது,அதிகளவு  அதிகாரபகிர்வை  விரும்புகிறீர்கள்  பொலிஸ் அதிகாரங்களை விரும்புகிறீர்கள், நில அதிகாரங்களை விரும்புகிறீர்கள், இல்லையா? எனவே, நீங்கள் கிட்டத்தட்ட ஒரு தனி அரசை  கேட்கிறீர்கள் என்று அர்த்தம், ”என்று அவர் கூறினார், 13 வது திருத்ததில்எதிர்நோக்கப்பட்ட   அதிகாரங்களை அவர்  குறிப்பிடுகிறார், ஆனால்மத்திய அரசு  இன்னும்பகிர்ந்து கொடுக்கவில்லை..
“1987 ஆம் ஆண்டில் நின்றுகொண்டிருந்த  அதே விட யத்தில் இந்தியா உண்மையில் நிற்கக்கூடாது  என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன் , ஏனென்றால் இயக்கவியல் மாறிவிட்டது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களைப் பற்றி இந்தியா கவலை கொண்டுள்ளது, ஏனெனில், இந்தியாவில் கணிசமான தமிழ் மக்கள் உள்ளனர், அதில் தவறில்லை. ”எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு பதற்றம்
ஜெனீவாவில் இந்தியாவின் வாக்குகளைப் பொருட்படுத்தாமல், முன்னோக்கிச் செல்லும்போது, இரு நாடுகளும்குறிப்பாக  வடபகுதி  தீவுகளில்  சீன எரிசக்தி திட்டம்  ; கொழும்புகிழக்குத்   துறைமுக முனையத்தை உருவாக்க இந்தியா மற்றும் ஜப்பானுடனான 2019 ஒப்பந்தத்தில் இருந்து விலகியமை , இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துக்கு  குத்தகைக்கு விடப்பட்ட. திருகோணமலை எண்ணெய் குதத்  தொகுதி
சர்ச்சையில் சிக்கியுள்ள ஒரு பரந்த வெளியில் பயணம்  செல்ல வேண்டியிருக்கும்,
உறவுகள் பாதிக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை,” என்று வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.மூலோபாய பாதுகாப்பு விட யங்களில், இலங்கை இன்னும் இந்தியாவுக்கே  “முன்னுரிமை” அளித்துள் ளதாவும் .அவர் அழுத்திஉரை த்துள் ளார்.
“இந்தியா ஒரு வலுவான  மற்றும் முதிர்ச்சியடைந்த நாடு, ஓரிரு  சம்பவங்களால்  பல நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட  உறவை மாற்ற அனுமதிப்பதற்கு  … அவை அவ்வளவு சிறியவை  அல்ல” என்று அவர் கூறினார், ஜனாதிபதி ராஜபக்ச  கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) திட்டத்தை இந்திய முதலீட்டின் மூலம், பார்ப்பதற்கு  ஆர்வமாக இருந்தபோதிலும்  “மக்கள் சக்தி வென்றுள்ளது ” என்று அவர் கூறினார், தொழிற்சங்கங்கள் மற்றும் குருமார்களடமிருந்தான   எதிர்ப்பைஅவர்  குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி ராஜபக்ச , தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்த போதிலும், “இணக்கப்பாட்டுக்கு ”  தயாராக இருந்தார் என்று . கொலம்பகே  குறிப்பிட்டார், அருகிலுள்ள மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) அபிவிருத்திக்காகஇந்திய முதலீட்டாளருக்கு 85% பங்குகளை  , அதே விதிமுறைகளில்வழங்குவதில் – கொழும்பு இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல்ஸ் லிமிடெட் டென , சீனாவின் அரசு நடத்தும் சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 85% பங்குகளைக் கொண்டுள்ளதுபோன்று .கிழக்கு கொள்கலன்  முனையம் ம் ஆனது ஓரளவுக்கு  பூர்த்தி செய்யப்பட்ட ஆழமானகப்பல்நிறுத்துமிடத்தை கொண்டுள்ளது. ,ஆனால்  அருகிலுள்ள முனையம்  ஒரு ஆழமற்ற கப்பல் நிறுத்துமிடத்தை  கொண்டுள்ளது, இது வணிக ரீதியாக மிகவும் சாத்தியமானதாக மாறும், பின்னர்மேற்கு முனையம்அதிக முதலீட்டில்  புதிதாக உருவாக்கப்பட வேண்டும், . “இந்த சலுகை வெவ்வேறு மட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் புது டி ல்லி,  வாய்மொழி மூல  உறுதிப்பாட்டை விட அதிகமாக எதிர்பார்க்கும் என்பது இயல்பானதே “.
“மற்றொரு சர்ச்சைக்குரிய அம்சமான “, திருகோணமலை எண்ணெய் குதத்தொகுதிகளை   , 2003 முதல் 35 ஆண்டு குத்தகைக்கு வைத்திருக்கும்  இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின்   துணை நிறுவனத்திடமிருந்து “மீட்கப்படும்” என்று அமைச்சரவை அந்தஸ் துள்ள அமைச்சர் ஒருவர் சமீபத்தில் கூறியமை  குறித்து , வெளியுறவு செயலாளர் இந்தியாவை “யதார்த்தபூர்வமான பார்வை யை”கொண்டிருக்குமாறு கேட்டுகொண்டார்.  . உலக மகாயுத்த கால  80 க்கும் மேற்பட்ட எரிபொருள் சேமிப்பு வசதிகள் 18 ஆண்டுகளாக  புனரமைக்க க்கப்படவில்லை என்பதால், அவை பயன்படுத்தப்படாமல் இருப்பது “வீணானது” என்று அவர் குறிப்பிட்டார். “உலகில் எண்ணெய் விலை வீழ்ச்சியின் போது, இந்த குதங்களை  புதுப்பிக்கலாம், எண்ணெயை சேமிக்க பயன்படுத்தலாம், இதனால் நாம் பணம் சம்பாதிக்க முடியும் … இவை தேசிய, மூலோபாய சொத்துக்கள், இல்லையா? [2003] ஒப்பந்தத்தின் எல்லைகளுக்கு அப்பால் நாம் சென்று, இப்போது கூட இந்த குதங்களை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். ” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின்கரையிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தில் மூன்று தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவ ஒரு சீன நிறுவனம் தெரிவு  செய்யப்பட்டுள்ளது இது குறித்து இந்தியாவும் சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி திட்டத்திற்கு மாற்றாக, இந்தியா 12 மில்லியன் டொ லர் மானியத்தையும் வழங்க முன்வந்திருந்தது.. இது ஒரு “மிகவும் தாராளமான சலுகை” என்று கூறிய , கொலம்பகே ,ஆசிய அபிவிருத்தி வங்கியின்  ஆதரவுடனா ன ஒரு திட்டத்திலிருந்து வெளியேறுவதுஇலங்கையின் சர்வதேச பிரதிமைக்கு நல்லதல்ல என்றுகூறிய அவர்  “எனவே, நாங்கள் ஒரு பிரச்சினையில் இருக்கிறோம், இந்த இழுபறி காரணமாக மக்கள் [போதுமான மின்சாரம் இல்லாமல்] தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள் என்ற உணர்வு எனக்கு உள்ளது.”எந் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின்  “சங்கடத்தை” முன்னிறுத்துவதன் மூலம் , வளர்ந்துவரும்  நாடொன்று  பொருளாதாரத்தையும்  தேவைகளையும்  அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும்   என்பதை அவர் கவநதிர்கொண்டுள்ளார்., ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இலங்கை போன்ற ஒரு நாடு அந்த முடிவை எடுக்க “சுதந்திரமில்லை”. “நாங்கள் ஒரு பொருளாதார முடிவை எடுப்பதற்கு முன்பு, இந்துசமுத்திரப்   பிராந்தியத்தில் உள்ள சக்திகளின் மூலோபாயக் கருத்தாய்வைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
பாரிய பலப்  போட்டி
“இப்போது, நாம் எங்கே கோட்டை வரைய வேண்டும்? சரி, இந்த கோட்டின்  வடக்கே நாடு ஏ என்றும்,  நாட்டின் தெற்கே நாடுஏ  பி சி  டி    ஆகவும் இருக்க வேண்டுமா? அதுதான் எங்களுக்கு வேண்டுமா? ” என்று அவர் கேட்டார்,அவர்  இந்தியாவையும் சீனாவையும் குறிப்பிடுகிறார். வடக்கு மற்றும் கிழக்கு நிர்மாணத்தில்பாரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களில் உதாரணமாக, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 50,000 வீடுகள்அமைப்பதில்  இந்தியா ஈடுபட்டுள்ள நிலையில், , அதிவேகப் பாதைகள் அம்பாந்தோட்டை  துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட திட்டங்களில் தெற்கில் பாரிய  வளர்ச்சியில் சீனா ஆதிக்கம் செலுத்தியது. . காலப்போக்கில், இந்தியா தெற்கிலும் பல திட்டங்களைத் தொடங்கியது, அதே நேரத்தில் சீனாவின் திட்டங்கள் வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கின.
சுமார் 65,000 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள ஒரு “சிறிய நாடான ” இலங்கை, நடுநிலையை எவ்வாறுபே ண  முடியும் என்பதைபார்க்கிறது., “  பலபந்தயத்திலிருந்து ” விலகி, அனைத்து நாடுகளுடனும் பொருளாதார நோக்கங்களுக்காக நட்பு உறவுகளைப் பேணுதல், இந்தியாவின் மூலோபாய பாதுகாப்பு கவலைகளை மனதில் வைத்திருத்தல்.என்பன  “இது எங்கள் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும், மேலும் இந்த காரணிகளை சமநிலைப்படுத்துவது தொடர்பாக  நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  அண்மையில்   கொழும்புக்கு விஜயம் செய்தமாய் தொடர்பாக , இலங்கை மற்றவர்களுக்கு எதிராக “ஒரு முகாமில்  அல்லது நாட்டுடன் சேர்வதற்கு  முயற்சிப்பதாக பார்க்கக்கூடாது என்று அவர் கூறினா ர்… “இது இருதரப்பு விஜயம். இந்தியப் பிரதமரையோ அல்லது வர விரும்பும் வேறு எந்தப் பிரதமரையோ வரவேற்பதில்  நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். ”என்றும் வெளிவிவகார செயலாளர்  தெரிவித்திருக்கிறார்.

Thinakkural.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.