Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நெட் நிறுவனர் ஜெயசந்திரன் கோபிநாத்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                  ஒரு காலத்தில் உள்நாட்டினரோ வெளிநாட்டினரோ காலை எழுந்தவுடன் தமிழ்நெட் பக்கத்தைப் பார்த்தால்த் தான் களலவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

                  அந்த தமிழ்நெட்இன் நிறுவனர் தான் மேலே உள்ள செவ்வியை வழங்கியிருந்தார்.
 
                  இதுவரைக்கும் வேறு ஒருவரையே தமிழ்நெட்இன் நிறுவனராக நினைத்திருந்தேன்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

                   இந்த செவ்வியை முழுமையாக பார்த்த போது இன்னும் பிரமையாக இருந்தது.
அண்மையில் சிவில் சமூகத்தினராலும் அரசியல்கட்சிகளாலும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள சாராம்சம் அதில் உள்ள ஓட்டைகள் அதை எப்படி செய்யலாம் என்று சகலரும் விளங்கக் கூடியவாறு தெளிவாக சொல்கிறார்.

                    நேரமிருக்கும் போது கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்.

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்!

http://sankathi24.com/sites/default/files/images/news/cover/Parani%20and%20Jeya.png

தமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்களின் வேதாந்தமாக நந்திக்கடல் கோட்பாடு கட்டவிழ்வது பற்றிய திடுக்கிடும் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

 

தமிழீழ தேசியத் தலைவரால் தேசத்தின் குரல் என்ற அதியுயர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியரும், தலைமைப் பேச்சுவார்த்தையாளருமாகிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை மிகக் கேவலமாக நிந்தித்து நந்திக்கடல் கோட்பாட்டின் பிதாமகன் என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் ஆங்கில இணையத்தளம் ஒன்றின் ஆசிரியரான ஜெயச்சந்திரன் கோபிநாத் என்பவர் 22.01.2015 அன்று கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

 

http://sankathi24.com/sites/default/files/inline-images/Jeya1_0.JPGஜெயச்சந்திரன் கோபிநாத்

 

ஜெயச்சந்திரன் கோபிநாத் அவர்களின் கட்டுரையில் இருந்த வரலாற்றுத் திரிபுகளையும், பொய்களையும் அம்பலப்படுத்தி அக்காலப் பகுதியில் வெளிவந்த ஈழமுரசு பத்திரிகையில் அதன் பத்தி எழுத்தாளரான கலாநிதி சேரமான் என்பவர் எதிர்வினைக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் ஈழமுரசின் குறித்த பத்தி எழுத்தாளரை கொலை செய்ய வேண்டும் என்ற தொனியில் (அகற்ற வேண்டும்) ஜெயச்சந்திரன் கோபிநாத் என்ற பரமார்த்த குருவின் பிரதம சீடரான பரணி கிருஸ்ணரஜனி என்பவர் தெரிவித்த கருத்துக்களைக் கொண்ட ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

http://sankathi24.com/sites/default/files/inline-images/93255984_154300762781041_4992153243917221888_o.jpgபரணி கிருஸ்ணரஜனி

 

இதே ஒலிப்பதிவில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைத் ‘துரோகி’ என்று குறித்த பரமார்த்த குருவின் பிரதம சீடரான பரணி கிருஸ்ணரஜனி என்பவர் வசைபாடியுள்ளார்.

 

கொடிய நோய் தன்னை வதைத்த பொழுதும் தமிழீழ தேச விடுதலைக்காக இருபத்தேழு ஆண்டுகள் அரும்பணியாற்றித் தமிழீழ தேசத்திற்கு அனைத்துலக அரங்கில் பெருமை சேர்த்தவர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்.

 

இதற்காகத் தமிழீழ தேசியத் தலைவரால் தேசத்தின் குரல் என்று மதிப்பளிக்கப்பட்ட அப்படிப்பட்ட ஒரு உன்னதமான மனிதனை நந்திக்கடல் சித்தாந்தம் பேசிக் கொள்ளும் பரணி கிருஸ்ணரஜனி என்ற சாதாரண நபர் துரோகி என விளித்திருப்பது தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இது இவ்விதம் இருக்க நந்திக்கடல் கோட்பாடு பற்றிக் குறித்த பரமார்த்த குருவின் பிரதம சீடர் இணைந்து வெளியிட்ட நூல் ஒன்றில், ‘இலங்கையில் இடம்பெற்ற போராட்டம் நெடுகிலும் அதில் சம்பந்தப்பட்டிருந்த இரு தரப்புக்களுமே மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனிதநேய சட்டத்திற்கும் மதிப்பளிக்கத் தவறியிருந்தன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது (பக்கங்கள் 272-273). அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனிதநேய சட்டத்திற்கும் மதிப்பளிக்கவில்லை என்று நந்திக்கடல் கோட்பாட்டின் வேதாந்திகள் என்று கூறிக்கொள்வோர் தமிழீழ விடுதலைப் புலிகளை மிக மோசமாகக் கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.

 

அது போதாதென்று, தனித்துவமான தேசிய இனமாக விளங்கும் தமிழீழ மக்களைத் ‘தமிழ் சிறுபான்மையினர்’ என்று குறித்த நூல் இழிவுபடுத்தியுள்ளது (பக்கம் 272). தனியரசு அமைக்கும் உரிமை அனைத்துலக சட்டங்களின் கீழ் தேசிய இனங்களுக்கு மட்டுமே உண்டு. அவ்வுரிமை சிறுபான்மையினருக்குக் கிடையாது. அப்படியிருக்கும் பொழுது தமிழீழ மக்களை சிறுபான்மையினர் என்று விளித்திருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் தனியரசு அமைக்கும் உரிமையை நந்திக்கடல் கோட்பாடு மறுதலிப்பது பட்டவர்த்தனமாகியுள்ளது.

 

http://sankathi24.com/sites/default/files/inline-images/5987e6d9-08e2-4e85-a1f5-63012be508c6.JPG

http://sankathi24.com/sites/default/files/inline-images/84eb3d07-4437-4103-8d95-f69ab7133817.JPG

 

நந்திக்கடல் வேதாந்தம் பேசும் வஞ்சகர்களின் புலித்தோல் கழன்று அவர்களின் நரித்தோற்றம் வெளிவந்திருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை கீழே இணைத்துள்ளோம். அத்தோடு குறித்த கும்பலின் பரமார்த்த குருவான ஜெயச்சந்திரன் கோபிநாத் என்பவர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை இழிவுபடுத்தி எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையாக ஈழமுரசில் 2015 தை மாத இறுதியில் கலாநிதி சேரமான் எழுதிய கட்டுரையையும் மீள்பிரசுரம் செய்கின்றோம்.

 

'தேசத்தின் குரல் மீதான வசைபாடலா? தேசியத் தலைவர் மீதான சேறுபூசலா? - கலாநிதி சேரமான்


மைத்திரிபால சிறீசேனவின் தலைமையிலான சிங்கள அரசாங்கத்தில் பங்காளியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்வதன் பின்னணியில் 2013ஆம் ஆண்டில் மங்கள சமரவீரவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கும் மத்தியில் சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடே அடிப்படையாக அமைந்தது என்ற தகவலை நோர்வேயில் இருந்து வெளிவரும் தமிழ்நெற் எனப்படும் ஆங்கில இணையம் வெளியிட்டுள்ளது.
 
 
ஆங்கில மொழியில் சிங்கள அரசு முன்னெடுத்து வந்த பரப்புரைகளை முறியடித்துத் தனியரசுக்கான தமிழீழ தேசத்தின் நியாயங்களை உலக ஊடகப் பரப்பில் முன்னிறுத்தும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தால் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தமிழ்நெற் இணையத்தளமாகும். அன்று தொட்டு 2009 மே 18 வரை இவ் இணையம் இயங்குவதற்கான நிதியுதவிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் வழங்கப்பட்டன.
 
 
தமிழீழ தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இயங்கிய அக்காலப்பகுதியில் சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட இனவழிப்பு யுத்தத்தால் அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய உண்மைத் தகவல்களையும், யுத்த கள நிலவரங்கள் பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அறிவித்தல்களையும் ஆங்கில மொழியில் வெளிக்கொணர்ந்த ஒரேயொரு தமிழ் ஊடகம் என்ற தனிப்பெருமை அன்று தமிழ்நெற் இணையத்தளத்திற்கு இருந்தது.
 
 
அந்த வகையில் மங்கள சமரவீரவிற்கும், மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரனுக்கும் இடையில் 2013ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இரகசிய இணக்கப்பாடு பற்றிய தகவல்களை இன்றைய சூழமைவில் தமிழ்நெற் இணையத்தளம் வெளிக்கொணர்ந்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்றே.

ஆனால் அத்தோடு மட்டும் தமிழ்நெற் இணையம் நின்றிருந்தால் இக்கட்டுரையை நாம் எழுத வேண்டிய தேவை எழுந்திருக்காது.
 
 
மாறாக தகவல்களை வெளிக்கொணருதல் என்ற பணிக்கு அப்பால் சென்று மங்கள-சுமந்திரன் இணக்கப்பாடு பற்றிய அதே கட்டுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியரும், தலைமைப் பேச்சுவார்த்தையாளராக விளங்கியவருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையை தமிழ்நெற் இணையம் மேற்கொண்டிருப்பதுதான் நூதனமாக உள்ளது.
 
 
தமிழீழ மக்களின் விடுதலைக்காகத் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த ஒரு அரசியல் போராளி பாலா அண்ணை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிதாமகன் என்றும், மூத்த தலைமகன் என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர் பாலா அண்ணை. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் சரி, உலகத் தமிழர்களின் இதயங்களிலும் சரி தனக்கேயென தனித்துவமான இடத்தைப் பதித்திருப்பவர் பாலா அண்ணை. அந்த மாவீரனின் தேசியப் பணிக்கு மதிப்பளித்தே அவருக்கு தேசத்தின் குரல் என்ற அதியுயர் விருதைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.
 
 
தமிழீழ தேசிய விடுதலைக்காக வாழ்ந்து மடிந்த ஒவ்வொரு தமிழரையும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஏதோ ஒரு வழியில் கௌரவித்திருக்கின்றார். போராளிகளும், துணைப்படைப் போராளிகளும் மாவீரர்களாக இராணுவப் பட்டங்களுடனும் (பிரிகேடியர், கேணல், லெப்.கேணல். மேஜர், கப்டன், லெப்ரினன்ட், 2ஆம் லெப்ரினன்ட், வீரவேங்கை), தமிழ்த் தேசியத் உணர்வாளர்கள் நாட்டுப்பற்றாளர்களாகவும், மாமனிதர்களாகவும் தலைவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
 
ஆனால் இவர்களில் பாலா அண்ணையைத் தவிர எவருமே தேசத்தின் பெயரால் கௌரவிக்கப்படவில்லை. ஒரு தேசத்தின் தலைவரால் ஒரு அரசியல் போராளி தேசத்தின் குரலாக கௌரவிக்கப்படுவது என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. தென்னாசிய வரலாற்றில் தேசத்தின் குரல் என்ற பட்டம் முதன் முதலாக மகாத்மா காந்தி அவர்களுக்கே அளிக்கப்பட்டது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் தலைமையில் இந்திய தேசிய சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சமகாலத்தில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தவர் காந்தியடிகள். இந்திய தேசத்தின் தந்தையாகப் போற்றப்படும் காந்தியடிகளுக்கு அவரது மரணத்தின் பின் தேசத்தின் குரல் என்ற உயர் பட்டம் அளிக்கப்பட்டது.
 
 
அப்படிப்பட்ட ஒரு உயர் விருதையே பாலா அண்ணைக்கும் தமிழீழ தேசத்தின் தந்தையாக விளங்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழங்கினார். அதாவது தேசத்தின் தந்தையாக விளங்கும் தனக்கு மட்டுமே உரித்தான உயர் விருதை, தனது மதியுரைஞருக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வழங்கியது என்பது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாலா அண்ணை வகித்த கனதியான பாத்திரத்திற்கான சான்றாகவே கொள்ளப்பட வேண்டும்.
 
 
இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவரால் கௌரவிக்கப்பட்ட ஒரு மாவீரன் மீது தமிழ்நெற் இணையம் சேறு பூசியிருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதோடு, தமிழீழ தேசியத் தலைவரை மறைமுகமாக இழிவுபடுத்தும் கீழ்த்தரமான செய்கையாகவுமே கொள்ளப்பட வேண்டும்.
 
 
சரி, அப்படி என்னதான் பாலா அண்ணையைப் பற்றி தமிழ்நெற் இணையத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் எண்ணக்கூடும். தமிழ்நெற் இணையத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரையை அப்படியே முழுமையாகத் தமிழாக்கம் செய்து வரிக்கு வரி தருவது இப்பத்தியில் சாத்தியம் இல்லை. ஆனாலும் அக்கட்டுரையின் சாராம்சம் இதுதான்: எரிக் சுல்கைமும், மிலிந்த மொரகொடவும் இணைந்து தயாரித்த ‘ஒஸ்லோ பிரகடனத்தில்’ 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறீலங்கா அரசாங்கத்தின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் அன்ரன் பாலசிங்கமும் கையொப்பமிட்டனர். இப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட உள்ளக சுயநிர்ணய உரிமை, சம~;டித் தீர்வை ஆராய்தல் ஆகியவற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எதிர்த்தார். இதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பாத்திரத்தில் இருந்து பாலசிங்கம் இடைநிறுத்தப்பட்டார். இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான தீர்வு யோசனை தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டு, ‘ஒஸ்லோ பிரகடனத்தை’ போரும் சமாதானமும் என்ற தனது நூலில் பாலசிங்கம் நிராகரித்ததை அடுத்தே அவரை மீண்டும் 2006ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தமது தலைமைப் பேச்சுவார்த்தையாளராகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் நியமித்தது. அன்று பாலசிங்கம் தவறிழைத்த பொழுது அதனைத் திருத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு உறுதியான தலைமையும், உள்ளகப் பொறிமுறையும் இருந்தது. ஆனால் இன்று சம்பந்தன்-சுமந்திரன் போன்றவர்கள் தவறிழைக்கும் பொழுது அதனைத் தமிழ்ப் பொதுமக்களின் ஒன்றுபட்ட திரட்சியால்தான் திருத்த முடியும்.
 
 
இதுதான் தமிழ்நெற் இணையம் வெளியிட்டுள்ள கட்டுரையில் பாலா அண்ணை மீது சேறு பூசி எழுதப்பட்டுள்ள கருத்தின் சாராம்சமாகும்.
 
 
2010ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழீழத் தனியரசுக்கான பொது வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் தேசங்களில் நடைபெற்ற பொழுது தமிழ்த் தேசிய அமைப்புக்களால் செயற்பாட்டாளர்களுக்கான பட்டறைகள் நடாத்தப்பட்டன. இவ்வாறான பட்டறைகளில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்நெற் இணையத்தின் நிர்வாகியான ஜெயச்சந்திரன் என்பவர், ‘பாலா அண்ணை கொள்கையில் இருந்து சறுக்கி விட்டார். அதனைப் பின்னர் தலைவர் திருத்திக் கொண்டார்’ என்று கூறினார். இதற்கு அன்று தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் கடுமையான ஆட்சேபனை வெளியிட்டனர். ஆனாலும் இவ்வாறான நச்சுக் கருத்தைப் பரப்பும் நடவடிக்கைகளை தமிழ்நெற் ஜெயச்சந்திரன் கைவிடவில்லை. பாலா அண்ணை தொடர்பாக தமிழ்நெற் ஜெயச்சந்திரன் பரப்பிய நச்சுக்கருத்துக்கள் 2012ஆம் ஆண்டில் சில ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இளையோர் அமைப்பு இருகூறாகப் பிளவுபடுவதற்கும் வழிகோலியது.
 
 
இவ்வாறான பின்புலத்திலேயே பாலா அண்ணை மீது சேறு பூசும் கட்டுரையை தற்பொழுது தமிழ்நெற் இணையம் வெளியிட்டிருக்கின்றது.
 
 
தமிழ்நெற் இணையம் கூறுவது போன்று உண்மையில் கொள்கையில் இருந்து பாலா அண்ணை சறுக்கினாரா? அதன் பின்னர் இதுவிடயத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தலையிட்டு பாலா அண்ணையை தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பணியில் இருந்து இடைநிறுத்தினாரா?
 
 
இதற்கு 2002ஆம் ஆண்டு நோக்கி நாம் சற்று பின்செல்வது நல்லது.
 
 
2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் தமிழீழத்தை பாலா அண்ணை சென்றடைந்தார். அங்கு பாலா அண்ணை பிரசன்னமாகியிருக்க மூத்த தளபதிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தலைவர் குறிப்பிட்டார்: ‘நாங்கள் இப்பொழுது அரசியல் களத்தில் இராசதந்திர யுத்தம் ஒன்றை நடத்தப் போகின்றோம். அந்த யுத்தத்திற்கு பாலா அண்ணைதான் தளபதியாக இருப்பார்.’
 
 
அதனைத் தொடர்ந்து நுட்பமாக வகுக்கப்பட்ட மூலோபாயத்தின் அடிப்படையில் செப்ரம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கியது. அப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவிற்கு பாலா அண்ணை தலைமை தாங்கினார். ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை மூலோபாயம் பின்வருமாறு அமைந்திருந்தது:
 
 
(1) பேச்சுவார்த்தைகள் மூலம் போர்நிறுத்தச் சூழலை மேம்படுத்தித் தமிழீழ மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கண்டு, மக்களின் வாழ்வில் இயல்புநிலையைத் தோற்றுவிப்பது.
 
 
(2) தனது தேர்தல் பரப்புரைகளில் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்த இடைக்கால நிர்வாகத்தைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக் கொள்வது.
 
 
(3) அமைதி வழியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உள்ள பற்றுறுதியை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் உலக சமூகத்திற்கு எடுத்துக் காட்டுவது.
 
 
(4) அமைதி வழியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள இனவாதமும், அதனைத் தாங்கிப் பிடிக்கும் அரச இயந்திரமும் தடையாக நின்றால் அதனை அம்பலப்படுத்தி, சிறீலங்கா அரசை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்துவதும், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதும்.
 
 
(5) பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து மீண்டும் யுத்தம் வெடிக்கும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழ தாயகத்தை விடுவிப்பதற்கு ஏதுவான அனைத்துலக புறச்சூழலை தோற்றுவிப்பது.
 
 
அன்று சிங்கள தேசத்தின் அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் நிறைவேற்று அதிகாரத்தைக் காரணம் காட்டி இடைக்கால நிர்வாகத்தை வழங்குவதற்கு முதலாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பின்னடித்தது. அத்தோடு, இடைக்கால நிர்வாக ஒழுங்கிற்கு மாற்றீடாக உப குழுக்களை அமைக்கும் புதிய திட்டத்தையும் முன்வைத்தது. முதலில் அதனை ஏற்கத் தயங்கிய தமிழீழ தேசியத் தலைவர், பின்னர் அமைதிப் பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உள்ள பற்றுறுதியை அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் இடைக்கால நிர்வாக அமைப்பிற்குப் பதிலாக உப குழுக்களை நிறுவும் திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்தார்.

 
இருந்த பொழுதும் நிரந்தரத் தீர்வு தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் குறையவில்லை. அதாவது சமாதானத்தின் மீதான தமது பற்றுறுதியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிசெய்வதாயின் அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வெளியிட வேண்டும் என்பதே அன்று உலக நாடுகளின் கருத்தாக இருந்தது. இந்நிலையில் 2002ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை வெளியிடுவதற்கு தலைவர் அவர்கள் தீர்மானித்தார். அதன்படி பின்வருமாறு தனது உரையில் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்:
 
 
‘‘தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கத் தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை. உள்ளான (உள்ளக) சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது. சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத் திட்டத்தைச் சாதகமாகப் பரிசீலனை செய்வோம். ஆனால், அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளான சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டுப் பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால், நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.’’
 
 
தலைவர் அவர்கள் முன்வைத்த பிரதேச சுயாட்சித் திட்டத்தை பரிசீலிக்கும் நிலைப்பாட்டிற்கு செயல்வடிவம் கொடுத்தே சமஸ்டித் தீர்வை ஆராய்வதற்கு ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் பாலா அண்ணை இணக்கம் தெரிவித்தார். இது பாலா அண்ணையால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட ஓர் முடிவன்று.
 
தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அரசியல் தத்துவார்த்த வடிவம் கொடுத்து 1979ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சித்தாந்த கோட்பாடுகளையும், தமிழீழ சுதந்திர சாசனம், திம்புக் கோட்பாடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத் திட்டம் (சோசலிசத் தமிழீழம்) ஆகியவற்றை எழுதியவர் என்ற வகையிலும், 1987ஆம் ஆண்டு தலைவர் அவர்கள் வெளியிட்ட சுதுமலைப் பிரகடனம் முதல் மகிந்த ராஜபக்சவிற்குத் தலைவர் அவர்கள் காலக்கெடு விதித்த 2005ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரை வரையான தலைவரின் கொள்கைப் பிரகடன உரைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் என்ற வகையிலும், பாலா அண்ணைக்கு தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும், அவரது உரைகளுக்கு வியாக்கியானம் அளிப்பதற்கும் முழு அதிகாரமும் தலைவரால் அளிக்கப்பட்டிருந்தது. இதனால்தான் 1999ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை இலண்டனில் நடைபெற்ற ஒவ்வொரு மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளுக்கு பாலா அண்ணை விளக்கம் அளித்து வந்தார்.
 
 
இங்கு நாம் ஒரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் சம~;டித் தீர்வை ஆராய்வதற்கு பாலா அண்ணை இணங்கினாரே தவிர, சமஸ்டித் தீர்வை ஏற்பதற்கு இணங்கவில்லை. அதாவது எவ்வாறு தனது மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரையில் பிரதேச சுயாட்சித் திட்டத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கான சமிக்ஞையை தமிழீழ தேசியத் தலைவர் வெளியிட்டாரோ, அதேபோன்றே சம~;டித் தீர்வை ஆராய்வதற்கு ஒஸ்லோவில் பாலா அண்ணை இணங்கினார். ஆனால் ஒரு யோசனையை ஆராய இணங்குவதற்கும், ஒரு யோசனையை ஏற்றுக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாத ‘ஆய்வாளர்கள்’ சிலர், ஏதோ தமிழீழ் தனியரசுக் கோரிக்கையைக் கைவிட்டு சம~;டித் தீர்வுக்கு பாலா அண்ணை இணங்கியது போன்று அன்று பிதற்றிக் கொண்டார்கள். இதைத்தான் இப்பொழுது பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நெற் இணையமும் செய்ய முற்படுகிறது.
 
தவிர ஒஸ்லோ இணக்கப்பாடு பற்றி ஏறத்தாள ஒரு வாரத்திற்குப் பின்னர் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற புலம்பெயர் மக்களைச் சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது கருத்துரைத்த பாலா அண்ணை, ‘நாங்கள் தமிழீழ தனியரசு கோரிப் போராடினோம். இப்பொழுது தமிழீழ சம~;டி அரசை ஆராய்ந்து பார்க்க இணங்கியிருக்கிறோம். அவ்வளவுதான்’ என்று மக்கள் மத்தியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி பின்னர் 2004ஆம் ஆண்டு தான் வெளியிட்ட போரும் சமாதானமும் நூலில் பாலா அண்ணை மேலும் விபரமாக எழுதியிருந்தார்.
 
 
அடுத்தது ‘ஒஸ்லோ பிரகடனத்தில்’ கையொப்பமிட்டதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பொறுப்பில் இருந்து பாலா அண்ணை நீக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 2006ஆம் ஆண்டிலேயே மீண்டும் அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார் என்று தமிழ்நெற் இணையம் கூறும் புதுக்கதை.

 
சமஸ்டித் தீர்வை ஆராயும் இணக்கப்பாடு 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் 06.01.2003 முதல் 09.01.2003 வரை தாய்லாந்திலும், 07.02.2003 முதல் 08.02.2003 வரை ஜேர்மனியிலும், 18.03.2003 முதல் 21.03.2003 வரை ஜப்பானிலும் நடைபெற்ற நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக பாலா அண்ணையே கலந்து கொண்டார்.

 
இதனைத் தொடர்ந்து வோசிங்டன் உதவி வழங்கு மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பொழுது சமாதானப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தும் முடிவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் என்ற வகையில் 21.04.2003 அன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுத்து மூலம் பாலா அண்ணையே அறிவித்தார். இதன் பின்னர் 11.05.2003 அன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வன்னியில் இருந்து பாலா அண்ணை இலண்டன் திரும்பிய பின்னர் 17.05.2003 அன்று அப்போதைய நோர்வீஜிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் விதார் கெல்கிசன் அவர்களால் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இடைக்கால நிர்வாகத்திற்கான இரண்டு பக்க வரைவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு 23.05.2003 அன்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் என்ற வகையில் அத்திட்டத்தை நிராகரித்து பாலா அண்ணையே இலண்டனில் இருந்து பதில் கடிதம் அனுப்பினார்.
 
இதேபோன்று 28.05.2003 அன்று ரணில் விக்கிரமசிங்கவால் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்ட பொழுது அதனை நிராகரித்து பாலா அண்ணையே பதில் கடிதம் எழுதினார். அதில் பின்வருமாறு பாலா அண்ணை குறிப்பிட்டிருந்தார்:
 
 
‘‘உங்களது யோசனைகளை ஆழமாகப் பரிசீலனை செய்து பார்த்த போது எமக்கு ஒரு புறம் ஏமாற்றமும் மறுபுறம் ஆச்சரியமும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைமை தெரிவித்த யோசனைக்கு அமைவாக ஒரு இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் திட்டத்தை நீங்கள் முன்வைக்கவில்லை. மாறாக, மிகவும் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்களைக் கொண்டதாக, அபிவிருத்தி சம்பந்தப்பட்ட அமைப்பையே நீங்கள் சிபாரிசு செய்துள்ளீர்கள். அதிலும் விடுதலைப் புலிகளுக்கான பங்கு தெளிவாக நிர்ணயிக்கப்படவில்லை. வேண்டுமென்றே, அவ்விடயம் தெளிவற்றதாக விடப்பட்டிருக்கிறது. நாங்கள் கோரியதும், நீங்கள் கொடுத்ததும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட யோசனைத் திட்டங்களாகும். அபிவிருத்தி சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பை முன்மொழிந்ததன் மூலம் நாம் கோரிய இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நீங்கள் நிராகரித்து விட்டதாகவே நாம் கருதுவோம். உங்களது அரசியலமைப்புக்குள் தஞ்சம் எடுத்துள்ள நீங்கள், தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால ஒழுங்கைத்தானும் வழங்குவதற்கு மறுக்கின்றீர்கள். நாட்டின் சட்டம், ஒழுங்கிற்கு அமையவே உங்களது அரசாங்கம் செயற்பட முடியுமென நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். பழிவாங்கத் துடிக்கும் ஜனாதிபதியின் பகைமை ஒரு புறமும், நெகிழ்த்த முடியாத இறுக்கமான அரசியல் யாப்பு மறுபுறமுமாக, இரண்டுக்கும் நடுவில் சிக்குண்டு தொங்கும் வலுவிழந்த உங்களது அரசாங்கத்தின் நிலைமையை நாம் நன்கறிவோம். அரசியல் அமைப்பே உறுதி தளர்ந்து ஆட்டம் காணும் நிலையில் இருக்கும் போது, உங்களது நிர்வாகமும் அதிகாரமற்றதாக இயலாத நிலையில் இருக்கும் போது, தமிழரின் இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வோ அன்றி நிரந்தரத் தீர்வோ காண்பது முடியாத காரியம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அரசியலமைப்பு முட்டுக் கட்டைகளைக் காரணமாகக் காட்டி உங்களது அரசாங்கம் எதையுமே செய்ய முடியாதென முடங்கிப் போனால் துன்பங்களைச் சுமந்து நிற்கும் எமது மக்கள் எவ்வளவு காலத்திற்குப் பொறுமை காப்பது? எமது மக்களுக்கு உரித்தான அரசியல் உரிமைகளை மறுப்பதில் சிங்கள ஆளும் வர்க்கங்கள் ஒன்றோடு ஒன்று பொருதி, வெறித்தனமாகப் போராடி வந்த வேளை, எமது மக்கள் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகப் பொறுத்திருக்கவில்லையா?’’
 
 
இதனைத் தொடர்ந்து 01.06.2003 அன்று இடைக்கால நிர்வாகம் பற்றி ரணில் விக்கிரமசிங்க எழுதிய பிறிதொரு கடிதத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் என்ற வகையில் 04.06.2003 அன்று மீண்டும் பாலா அண்ணையே பதிலளித்திருந்தார்.

 
இதன் பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பாலா அண்ணை ஓய்வெடுத்துக் கொண்ட பொழுது, இடைக்கால நிர்வாக அதிகார சபைக்கான திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் தமிழீழ தேசியத் தலைவர் ஒப்படைத்தார். ஆனாலும் அப்பொழுதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக பாலா அண்ணையே விளங்கினார்.

   
எனவே ‘ஒஸ்லோ பிரகடனம்’ வெளிவந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பொறுப்பில் இருந்து பாலா அண்ணை இடைநிறுத்தப்பட்டார் என்று தமிழ்நெற் அவிழ்த்து விட்டிருக்கும் கதை உண்மைக்குப் புறம்பான ஒன்று. அதாவது ஒஸ்லோ இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட 02.12.2002 இற்குப் பின்னர் ஏறத்தாள ஆறு மாதங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக பல பணிகளை பாலா அண்ணை புரிந்துள்ளார். அத்தோடு 2003ஆம் ஆண்டின் இறுதியில் இலண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் தமிழீழ தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரைக்கு பாலா அண்ணையே விளக்கவுரை ஆற்றியதோடு, 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தி விட்டு சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக பாலா அண்ணையே விளங்கினார்.
 
 
இதற்காக 07.05.2004 அன்று வன்னிக்குப் பயணம் செய்த பாலா அண்ணை, 11.05.2004 அன்று தமிழீழ தேசியத் தலைவருக்கும், அன்றைய நோர்வீஜிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீற்றர்சன் அவர்களுக்கும் மத்தியில் நடைபெற்ற சந்திப்பில் தலைவரோடு உடனிருந்தார்.
 
 
இந்த உண்மைகளை எல்லாம் மூடிமறைத்து, உண்மைக்குப் புறம்பான புரளியை இப்பொழுது தமிழ்நெற் கிளப்பியுள்ளது.
 
 
இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். ஒஸ்லோ இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர் சம~;டித் தீர்வு பற்றி ஆராய்வதற்காகத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் அரசியல் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இருபத்தொரு பேரைக் கொண்ட இக்குழுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகளும், புலம்பெயர் தேசங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 30.03.2003 அன்று வன்னியில் இருந்து புறப்பட்ட இக்குழு, நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு சம~;டி, நல்லாட்சி ஆகிய விடயங்கள் பற்றி ஆராய்ந்தது.
 
 
இவையெல்லாம் வரலாற்றில் பதிவாகிய விடயங்கள். இவற்றையெல்லாம் மூடிமறைத்து முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செய்கையாக தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையை இப்பொழுது தமிழ்நெற் இணையம் செய்துள்ளது. 2009 மே 18இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையில் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் நிதியுதவியில் இணங்கிய தமிழ்நெற் இணையம், அப்பொழுது பாலா அண்ணை மீது வசைபாடவில்லை. அதற்கான துணிவும் அன்று தமிழ்நெற் இணையத்திற்கு இருந்ததில்லை.
 
 
ஆனால் இப்பொழுது, அதுவும் கேட்பதற்கு எவரும் இல்லை என்ற துணிவில், உண்மைகளை திரிவுபடுத்தி பாலா அண்ணைக்கு துரோகப் பட்டம் கட்டித் தமிழ்நெற் இணையம் வசைபாடியிருப்பதானது தமிழீழ தேசியத் தலைவர் மீதான சேறு பூசலாகவே கொள்ளப்பட வேண்டும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.