Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அன்னை பூபதி’க்கு அஞ்சலி செலுத்தினால் கைது செய்வோம்; மகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘அன்னை பூபதி’க்கு அஞ்சலி செலுத்தினால் கைது செய்வோம்; மகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

 

‘அன்னை பூபதி’யின் நினைவு தினத்தினை, அவரது சமாதிக்கு சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வர் சாந்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

‘நாவலடியில் உள்ள எங்களது அன்னையின் சமாதியில் நாங்கள் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக நினைவேந்தல் அனுஷ்டித்து வருகின்றோம். ஆனால் இன்று எங்களது குடும்பத்தினை அங்கு சென்று நினைவேந்தல் அனுஷ்டிக்க வேண்டாம் எனவும் மீறி அனுஷ்டித்தால் கைது செய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரை புதைத்துள்ள இடத்தில் அனுஷ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது மிகவும் கவலைக்குரியது. இது அரசியல்சார்ந்த செயற்பாடு அல்ல அன்னை பூபதி எனது தாயார். எனது தாயாரின் இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எந்தவித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர்துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்த போராட்டத்தினையும் நடாத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்திய படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

 

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்கள் குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம். இவ்வாறான நிலையில் எங்களை குறித்த நினைவினை செய்ய வேண்டாம் என தெரிவிப்பது கவலைக்குரியது.

இன்று உலகம் எங்கும் எங்கள் தாயாருக்கு நினைவு தினம் நடத்தப்பட்டுவரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடாத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.’ – என தெரிவித்தார். (150)

Short English reference about this news:-

Annai Poopathi’s daughter Shanthi says that, Kattankudy police have warned that if we go to ‘Annai Poopathi’s memorial Square and observe his memorial day, will be arrested and jailed under the Prevention of Terrorism Act.

Also, Shanthi says that, Remembering my mother was not an act of terrorism. She died fighting against the Indian Army through the Mother Front organization. she did not fight carrying weapon.
 

https://newuthayan.com/அன்னை-பூபதிக்கு-அஞ்சலி-ச/

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “நாவலடியில் உள்ள நினைவிடத்தில் எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அனுஷ்டித்து வருகின்றோம்.

இந்நிலையில், அன்னையின் நினைவிடத்துக்குச் சென்று அனுஷ்டித்தால் கைதுசெய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரைப் புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது கவலைக்குரியதாகும். இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் என்பதுடன் அவரது இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எவ்வித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர் துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்தப் போராட்டத்தினையும் நடத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களது குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம்.

உலகம் எங்கும் இன்று அன்னைக்கு நினைவு தினம் நடத்தப்பட்டுவரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://pagetamil.com/2021/04/18/தாயாரை-நினைவுகூர்ந்தால்/

IMG_20210418_174832-960x694.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் – சிவஞானம் சிறீதரன்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அன்னை பூபதியின் வரலாற்று தடங்கள் வித்தியாசமானது. உறுதியான பெண்மணியாக உலகத்தில் வாழ்கிற பெண்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அறவழியில் தன் மக்களுக்காக மண்ணுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த தியாகியாக அன்னை பூபதி மிளிர்கிறார்.

அவ்வாறான தாயின் நினைவு நாளைக்கூட நாம் கொண்டாட முடியாதவர்களாக நாம் நசுக்கப்பட்டு இருக்கிறோம். அவர் ஒரு பயங்கரவாதி அல்ல அவர் ஆயுதம் ஏந்தவில்லை துப்பாக்கி ஏந்தி யாரையும் சுடவில்லை யாரையும் சுடவேண்டும் என்று கூட கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாமே அமைதியையும் மனிதாபிமானத்தினையும் மட்டுமே கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.

அதற்காகவே 30 நாட்கள் ஆகாரமின்றி தன்னுயிரை ஈகம் செய்தவரைக்கூட நினைவுகூர முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் நெருக்கடிகளுக்கும் வன்முறைகளுக்கும் முகம் தமிழர்களாக நாம் கொடுக்கிறோம்.அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை தமிழர்கள் நடாத்தினார்கள்.

அந்த அறப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர் திலீபன் ஆவார் அவருக்கு பின்னர் அன்னை பூபதி இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தே போராடினார் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/அமைதி-மற்றும்-மனிதாபிமான/

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஏன் நாடாளுமன்றில் உறுப்பினராக இருக்கிறார்கள்....? அனைவரும் ஒன்றாக வெளியேறி எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாமே.??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.