Jump to content

மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது.   

மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு. உலகெங்கும் உழைக்கும் மக்களின் ஒரே தினம், மே தினம் மட்டுமே என்ற உண்மை, எம்மில் பலருக்கு உறைப்பதில்லை.   

உலகளாவிய ரீதியில், உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரமே, மே தினமெனப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினமாகும். நீண்ட போராட்டங்களின் பின்னரே, உழைக்கும் மக்கள் தங்களைக் கொண்டாடுதற்கும் தங்கள் உரிமைகளுக்கான குரலை எழுப்புவதற்குமான தினமாக, இது அங்கிகரிக்கப்பட்டது.   

எனினும், பல நாடுகளில் மே தினம் என்பது, வெறும் சடங்காகவும் கேளிக்கைகளுக்கும் கோஷங்களுக்குமான நாளாகவும் மட்டுமே உள்ளது; இலங்கையும் இதற்கு விலக்கல்ல.   

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி, இம்முறை மே தினத்தை இரத்து செய்ய வேண்டும் என அரசாங்கம் கோரியிருக்கிறது. மே தினத்தை முன்னிட்டு, பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தாமலிருக்க அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.  

“ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய பல நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்த அரசாங்கம், மே தினத்தை மட்டும் நிறுத்தச் சொல்வது, அரசியல் நோக்கங்களுக்காகவேயன்றி, கொரோனா வைரஸ் பரவுகை காரணமாக அல்ல” என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையில் மே தினத்தை மையப்படுத்தி ஆடப்படும் அரசியல் ஆட்டங்களுக்கு, நீண்ட வரலாறு உண்டு.   

2007ஆம் ஆண்டு பௌத்த மத பண்டிகையான வெசாக் தினம், மே முதலாம் திகதி என்பதால், மே தினத்தை ஏப்ரல் 30 ஆம் திகதியே ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதனோடு இணைந்திருந்த இடதுசாரிக் கட்சிகளும் நினைவு கூர்ந்தன. 

ஜே.வி.பியும், மே 30 ஆம் திகதியே நினைவு கூர்ந்தது. மலையகப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் ஏப்பிரல் 29ஆம் திகதி கொண்டாடின. இதை அன்று முன்மொழிந்தது, ஜே.வி.பி என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, அவ்வாண்டு மே தினத்தைக் கொண்டாடாது, வெசாக் மத அனுட்டானங்களைச் செய்தது.  
இதே போன்று, 1965ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், மே முதலாம் திகதி கொழும்புக்கு வெளியே மே தினக் கூட்டங்களுக்குத் தடை விதித்தது. 

இதேபோலவே, 1969ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையைச் சாட்டாகக் காட்டி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், மே தினக் கூட்டங்களுக்கு மீண்டும் தடையை விதித்தது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் தடைகளை மீறி, அன்று மிகவும் பலமாக இருந்த புரட்சிகர கட்சியான இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, சண்முகதாசன் தலைமையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கூட்டங்களை நடத்தியது. 

1995ஆம் ஆண்டு, கொழும்பு நகரில் மே தின ஊர்வலங்களுக்கு ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் தடைவிதித்தது. 2006ஆம் ஆண்டு, மே தின ஊர்வலங்களுக்குத் தடை விதிக்காவிடினும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இவ்வாறு, மே தினத்தைக் கொண்டாடுவதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் இலங்கையின் ஆளும் கட்சிகளால் தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றையும் மீறி, மே தினத்தை உழைக்கும் மக்கள் கொண்டாடிய வண்ணமே உள்ளனர்.   

இலங்கையில் மே தினம் நீண்ட போராட்டங்களினூடாக வென்றெடுக்கப்பட்ட ஒன்றாகும். 1956ஆம் ஆண்டு, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் அரசாங்க காலத்திலேயே மே தினம் அங்கிகரிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினமாக்கப்பட்டது. 

இப்போது இலங்கையில் மே தினமானது, அரசியல் கட்சிகளின் பேச்சுகளுக்கான மேடையாகி உள்ளது. உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் ஓரங்கட்டப்பட்டு, அரசியல் தலைவர்களின் வெறும் உரைகளின் தினமாகியுள்ளது. அதனிலும் ஒருபடி மேலேசென்று, தொழிலாளர் உரிமைகளை மறுக்கின்ற கட்சிகளே, பெரும் செலவில் மே தினத்தைக் கொண்டாடுகின்றன.  

‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; உங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர, இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை. ஆனால், வெல்வதற்கோர் உலகம் உள்ளது’ என்று, 1848ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி, வெளியிடப்பட்ட கொம்யூனிஸ்ட் பிரகடனத்தில், மேற்படி அறைகூவலை கார்ள் மார்க்ஸூம் பிரெட்ரிக் ஏங்கல்ஸூம் விடுத்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து, உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் ‘பாரிஸ் கம்யூன் எழுச்சி’ 1871இல் இடம்பெற்றது. பிரான்ஸின் தொழிலாளி வர்க்கம், தனது பலத்தால் முதலாளி வர்க்கத்தைப் புறமுதுகிட வைத்து, ‘பாரிஸ் கம்யூன்’ ஆட்சியைத் தனது தலைமையில் எடுத்துக் கொண்டது. 

72 நாள்கள் மட்டுமே அந்த ஆட்சி நிலைத்திருந்தது. முதலாளித்துவ சக்திகள், அவ்வாட்சியை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தனர். ஆனால், இனிவரப் போகும் எழுச்சிகளுக்கான உந்துசக்தியாகவும் நம்பிக்கையாகவும் ‘பாரிஸ் கம்யூன்’ விளங்கியது.  

அதனைத் தொடர்ந்தே, அமெரிக்கத் தொழிலாளர்கள் 15 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கிய அமெரிக்க முதலாளிகளிடமிருந்து, எட்டு மணி நேர வேலைக்கான போராட்டத்தைத் தொடங்கினார்கள். அக்கோரிக்கையை முறியடிக்க, கொடிய அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

ஆனால், வீறுபெற்று எழுந்த அமெரிக்கத் தொழிலாளர்கள், வருடா வருடம் தமது கோரிக்கைக்கான போராட்டங்களை வலுப்படுத்தி, விரிவாக்கி வந்தனர். 1886இல் சிக்காகோ நகரில், இப்போராட்டத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ‘பூகம்பம்’ என வெடித்துக் கிளம்பினர். எட்டுமணி நேர வேலைக் கோரிக்கையை, அமெரிக்க முதலாளிகள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க முனைந்தார்கள். தொழிலாளர்களும் அவர்களது தலைவர்களும் சுடப்பட்டும் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர். 

ஆனால், அவர்களின் தியாகம் வீண்போகவில்லை. எட்டுமணி நேர வேலைக்கான போராட்டம், உலகம் முழுவதும் விரிவடைந்தது. எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கையை, அரசியல் கோரிக்கையாக முன்வைத்து, உலகத் தொழிலாளர்கள் மே முதலாம் திகதியை, போராட்ட நாளாக முன்னெடுக்க வேண்டும் என, 1889ஆம் ஆண்டில் ‘இரண்டாவது அகிலம்’ தீர்மானித்தது. இதுவே, இன்றுவரை நாம் கொண்டாடும் தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியாகும்.   

இன்று, 132 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும், சில நாடுகளில் இன்னும் மே தினம், விடுமுறையுடன் கூடிய தொழிலாளர் தினமாக்கப்படவில்லை. அமெரிக்காவில் மே தினம் அங்கிகரிக்கப்படவில்லை. 

இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தான் 1923இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில், தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார்.   

ஒவ்வொரு மே தினமும் வருகின்ற போது, மே தினம் யாருக்கானது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. 

இன்று பல நாடுகளில், மே தினம் அதன் உள்ளார்ந்த பொருளை இழந்துள்ளது. கட்சிகள் ஒரு சடங்காக இதைக் கொண்டாடுகின்றன. ஆனால் முன்னெப்போதும் இல்லாதளவு, உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிகளை இப்போது எதிர்நோக்குகிறார்கள். 

சரிவில் இருக்கின்ற உலகப் பொருளாதாரமும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் தொழிலாளர்களையே மோசமாகத் தாக்கியுள்ளது. தொழிலாளர் வேலை பறிக்கப்படல், உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலைகளை மூடுதல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளால் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். 

உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும், உழைக்கும் மக்கள் முன் நிற்கும் சவால்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் இழந்து போன உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் ஒன்றிரண்டு உரிமைகளைக் காப்பாற்றிக்கொள்ளவும் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. 

சேவைத் தொழிற்றுறை அதிகரித்துள்ள இலங்கை போன்ற நாடுகளில் தொழிற்சங்கமாவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. வலுவற்ற தொழிலாளர்கள் சட்டங்களை நாம் கொண்டிருக்கிறோம். குறைந்தபட்ச தொழிற்பாதுகாப்பு என்பது இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. எமது உரிமைகளுக்காக நாம் போராடப்போகிறோமா இல்லையா என்ற வினாவுக்கான பதில், மே தினம் யாருக்கு என்ற கேள்விக்கான விடையாகவும் அமையும்.   

இலங்கைச் சூழலில் இனம், மொழி, மதம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து, உழைக்கும் மக்கள் என்ற வகையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகப் பொதுத்தளத்தில் ஒன்றிணைந்து போராடுவதற்கான வாய்ப்பைத் தரும் மே தினமானது, மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கு வெவ்வேறு விதங்களில் மறுக்கப்படுவதைப் பரந்தநோக்கில் காணும் வாய்ப்பை, நமக்கு வழங்குகிறது. அதைப் பயன்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மே-தினம்-யாருக்கு-சடங்காதலும்-சங்கடங்களும்/91-270589

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.