Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

934869_487841251288220_205610226_n.jpg

'கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் தமிழீழத் தேசியத் தலைவரும்'

இது தமிழரின் வரலாற்றை எதிர்வு கூறும் ஒரு நூலாகும். 1960 ஆண்டில் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கோமாவில் இருந்த போது அவருடைய கனவில் 'காலமுனி' என்பவர் தோன்றி கூறிய எதிர்வுகூறல்களை எழுத்து வடிவில் புத்தமாக ஆக்கி 1970 ஆம் ஆண்டளவில் வெளியிட்டார். அவ்வாறு வெளிவந்த புத்தகமே 'தமிழன் கனவு' என்பதாகும்.

இனி இந்த புத்தகத்தில் என்னென்ன விடயங்கள் இருந்தது என்று பார்போம். கீழ்வரும் தகவல்கள் யாவும் எனது தந்தையார் என்னிடம் தெரிவித்தவை. எனது தந்தை இந்த புத்தகத்தை 10 தடவைக்கு மேல் வாசித்தவர். ஆனால் இந்த புத்தகம் கையில் இருந்த காலத்தில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளினை அது நடந்தேறிய பின்னரே அறிந்துகொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு இதில் உள்ள தகவல்கள் கமுக்கமான முறையில் எழுதப்பட்டிருந்தனவாம், ஆனால் எளிய தமிழில்!

எனது தந்தையாருக்கு இதில் இருந்த வரிகளில் ஓரிரண்டு மட்டுமே ஞாபகத்தில் இருக்கின்றன. ஒருசிலது தகவல்களாகவும் ஞாபகத்திலும் இருக்கிறது. ஆதலால் இப்புத்தகம் தொடர்பாக நானறிந்த அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

அந்த புத்தகத்தின் தொடக்கத்தில் "இறை/இறைவன் வாழ்த்து" என்று இருக்குமாம். பின்னர் காலமுனி சொன்னதென்று கூறி அதிலிருந்து எமது எதிர்வுகூறல்கள் தொடங்குமாம். அனைத்து தகவல்களும் செய்யுள் வடிவில் இருந்ததாம். ஆனால் அதில் சம்பவங்கள் ஏதும் நேரடியாக குறிப்பிடப்படவில்லையென்றும் மாறாக அனைத்தும் குறிப்புகளாகத்தான் அதில் குறிக்கப்பட்டிருந்ததாம். கிட்டத்தட்ட நோஸ்ரோடோமஸ் போல இருந்திருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். அதில் இருந்ததாவன,

தொடக்கத்தில் பெரிய கலவரங்கள் எல்லாம் தோன்றும் என்றும் 
பின்னர் பல இயக்கங்கள் அரசிற்கு எதிராக போராடத்தொடங்குமென்றும் 
அதில் ஒரே ஒரு இயக்கம் மட்டும் கடைசியில் தனித்து நின்று இறுதிவரை போராடுமென்றும்
(இயக்கத்தின் பெயர் எப்படி குறிக்கப்பட்டிருந்தது என்று தந்தையிடம் வினவிய போது அவருக்கு அது ஏதும் ஞாபகத்தில் இல்லை என்று கூறிவிட்டார்) 
நடுக்காலத்தில் ஒரு துரோகம் ஒன்று ஏற்படும் என்றும் 
அதிலிருந்து மீண்ட பின்னர் அந்த இயக்கம் மாபெரும் வெற்றிகள் குவிக்குமென்றும் 
பெருமளவு இடங்களை எல்லாம் அவர்கள் கைப்பற்றுவார்கள் என்றும்
முடிவாய் அமைதி உடன்படிக்கை எல்லாம் அந்த இயக்கத்துடன் ஏற்படுமென்றும் 

என்றும் தனது ஞாபகத்தில் தகவல்களாக உள்ளவற்றை கூறினார். பின்னர் கீழ்க்கண்ட அதில் இருந்த ஒரு சம்பவம் தொடர்பான மெய்யான வரிகளையும் என்னிடம் தெரிவித்தார். அவர் கூறிய வரிகளாவன,

"மட்டக்களப்பும் யாழ் மண்ணும் 
மரபில் வேறுபட்டதென்று
குட்டித் தலைவன் அங்கு குழப்புவான்"

மேற்கண்ட வரிகள் கருணாவையும் அவன் தூக்கிய 'பிரதேசவாதம்' என்ற பிணியையும் குறிப்பதை எம்மால் அறியக் கூடியதாக உள்ளது. பின்னர் கீழ்க்கண்டவற்றை என்னிடம் தகவல்களாக தெரிவித்தார். 

இந்தப் பிரிவிற்கு பின்னர் ஒரு பெரிய போர் மூளுமென்றும்
அதில் தமிழர் படை முப்படையும் கொண்டு போராடும் என்றும்
அந்தப் போரால் பெருமளவு மக்களும் அழிந்துபோவர் என்றும்

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். எமது மக்களின் அழிவானது அந்தப் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

போரால் மக்கள் பட்டினியாலும் வாடி மடிவர் என்றும்
இறந்த மக்களின் பிணங்கள் தெருத்தெருவாய்க் கிடக்குமென்றும்
அந்த பிணங்கள் ஒரு கட்டத்தில் மலை போன்ற குவியல்களாய் கிடக்குமென்றும்
அந்த குவியல்களின் முகட்டில் நாய் எறி நின்று அவற்றை தின்னும் என்றும்

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். பின்னர்,

கடைசி நேரத்திலும் துரோகி ஒருவன் உருவாகுவான் என்றும்
அந்தப் போரில் தமிழர் படை முற்றாய் மாண்டுபோகும் என்றும்

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். போருக்கு பின்னர் என்னவெல்லாம் நடக்குமென்றும் அதில் விலாவாரியாக இருந்ததென்றும் ஆனால் தனக்கு பெருமளவு ஞாபகத்தில் இல்லையென்றும் கூறினார். நினைவுள்ளவற்றை கூறும்படி கேட்டபோது கீழ்க்கண்டவற்றை தெரிவித்தார்.

தமிழர் இந்தப் போரால் பெருமளவு சேதம் அடைந்திருப்பர் என்றும்
அதனால் பலர் சோர்வாய் இருப்பர் என்றும்
ஒரு கட்டத்தில் மாணவர் புரட்சி ஒன்று தோன்றும் என்றும்
(அதிலிருந்தது மாணவரா மக்களா என்று குழப்பமடைந்தார்)

அவர் கூறினார். பின்னர் அதில் இருந்த ஒரு தலைப்பையும் கூறி அதில் இருந்த  தகவலின் சுருக்கத்தையும் தெரிவித்தார்.

தலைப்பு: ஐநா சபை 
தகவல்: மாணவர்/மக்கள் புரட்சியிலால் ஐநா சபை தலையிடும் என்றும்

அவர் கூறினார். இறுதியாக ஒரு தலைப்பு இருந்ததாகவும் அதில் இருந்த வரிகள் தன் மனதில் ஆழப் பதிந்திருந்ததாகவும் அவர் கூறியதோடு அந்த தலைப்பு மற்றும் வரியினையும் என்னிடம் தெரிவித்தார்.

தலைப்பு: விழாக்கோலம் 
வரிகள் :-
"ஆண்டில் ஒரு நூறாய் -இல்லை
அதில் பாதி ஆகு முனமே
தமிழர்க்கு தனிநாடு உருவாகும்."

இதன் பொருள்: நூற்றாண்டிற்குள்ளோ அல்லது அதில் பாதி ஆகுமுன்னமோ தமிழர்க்கு தனி நாடு உருவாகும் 

இத்தோடு அந்த புத்தகம் முடிவுற்றதாக அவர் தெரிவித்தார். அந்த புத்தகம் சிறிய நல்ல கட்டுப் புத்தகம் என்று அதன் தோற்றத்தையும் கூறினார்.

இதன் பின்னர், இந்தப் புத்தகம் தொடர்பாய் நான் தேடி அலைந்த போது அந்தப் புதக்கத்தின் ஒரு சில வரிகள் என்க்கு கிடைத்தன. அவற்றையும் இங்கே பதிவிடுகிறேன். 

தகவல் கிடைத்த வலைத்தளம்: http://manaveelchi.blogspot.com/2014/02/blog-post.html

வரிகள்:

"அழகடா அழகுக் கோலம்
அவள் கோலம் அமுதின் கோலம் 
தழலிலே எடுத்த கட்டித் 
தங்கத்தின் புதிய கோலம் 
பழகவே வந்தாள் எதிரே 
பைந்தமிழ் கன்னிப் பாவை"

மேற்கண்ட வரிகள் யாவும்  சாதி, மத வேறுபாடுகளால் பிளவுபட்ட தமிழர் படையைச் சமாதானப் படுத்துவதற்காக தமிழ்த்தாய் வந்து அவர்கள் முன் தோன்றுவாளாம். அப்படித் தோன்றிய தமிழ்த்தாயின் தோற்றத்தை விரித்துரைத்த வரிகள் ஆகும். 

வரிகள்:

காட்டு மரங்களிலே கள்ளர்மரம், 
ஐயர்மரம், தோட்டிமரம் உண்டோடா?
நாட்டு மனிதரிலே வேற்றுமை காட்டுகின்றாய் 
நட்டமரம் உன்னைவிட மேலா? 
தேனின் மலர்களிலே செட்டிமலர், சேரிமலர், 
பூனூல் அணிந்த மலர் உண்டோடா?
ஈனப் பிறவிகளே இழிவுயர்வு பார்ப்பதுதான்
இறைவனுக்கு  நீங்கள் செய்யும் தொண்டோடா?

மேற்கண்ட வரிகள் யாவும் சாதி வெறியர்களை சாடி அப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் ஆகும்.

இந்நூலானது ஈழத்தமிழரின் எதிர்கால வரலாற்றில் என்னென்ன நடக்கும் என்பதை அப்படியே எழுத்து வடிவில் சித்தரித்த ஒரு புத்தகமாகும் என்பதை மேற்கண்ட தகவல்கள் மூலம் எம்மால் அறியக்கூடியதாக இருந்தது. இப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருந்ததோ அதில் ஒரு விதயம் கூட பிசகாமல் 2009 வரை நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் இப்புத்தகம் எழுதப்பட்ட வேளை 'தமிழீழம்' என்ற கோட்பாடோ இல்லை விடுதலைப்புலிகள் என்ற இயக்கமோகூட எழவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பது வியப்பளிக்கிறது.

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

-------------------------------------------------------------

  • வேண்டுகோள்: இந்தப் புத்தகம் யாரிடமேனும் இருந்தால் எனக்கும் ஒரு படி தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் ../\..

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்னி,

உங்களில் நிறை மரியாதை வைத்திருகிறேன். இதென்ன திடீரெண்டு கோமா-கால முனி என்று எங்கட நாதமுனி மாரி எழுதுறியள்?

காசி இப்பவும் உயிரோடதான் இருக்கார். மகள் இருவரையும் கருணாநிதி உதவியோட டாக்டர் ஆக்கி லண்டனுக்கு அனுப்பி போட்டு. அவரிட்ட கேட்டுப்பாக்கலாமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
53 minutes ago, goshan_che said:

நன்னி,

உங்களில் நிறை மரியாதை வைத்திருகிறேன். இதென்ன திடீரெண்டு கோமா-கால முனி என்று எங்கட நாதமுனி மாரி எழுதுறியள்?

காசி இப்பவும் உயிரோடதான் இருக்கார். மகள் இருவரையும் கருணாநிதி உதவியோட டாக்டர் ஆக்கி லண்டனுக்கு அனுப்பி போட்டு. அவரிட்ட கேட்டுப்பாக்கலாமே?

அண்ணா தங்கள் கருத்திற்கு நன்றி.

நான் ஏதும் தவறாக எழுதிவிட்டேனா?...  நான் எனது தந்தை மூலம் அறிந்தவற்றைத்தான் எழுதிவைத்திருக்கிறேன். எனது தந்தையார் வாசித்தது பொய்யன்று. இது ஒரு புத்தகம்.. இந்தப் புவியில் உண்மையிலேயே இருந்த புத்தகம்(இப்பொழுதும் யாரிடமேனும் இருக்கலாம்). எனது தந்தையார் வாசித்த புத்தகம்.. நான் சொன்னது நம்பவில்லையென்றால் நான் மேலே கொடுத்துள்ள கொழுவியில் இன்னொருவரும் இந்தப் புத்தகம் பற்றி எழுதியுள்ளர் பாருங்கள். (நான் இந்த புத்தகத்தை கண்ணால் கண்டதோ இல்லை தொட்டுணர்ந்ததோ இல்லை என்பதையும் பறைகிறேன்)

மேலும் எனக்கு காசி ஆனந்தனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. அதனால் அது பற்றி ஏதும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் இவர் இப்பொழுதும் தலைவர் வருவார்; புலிகள் மீண்டும் வருவர் என்று கூறி வருவது நகைப்பிற்கிடமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நன்னிச் சோழன் said:

முதலில் உங்களுக்கு வாழ்த்து. நீங்கள் செய்வது அற்புதமான வேலை. நான் உங்களின் பழைய பெயரில், உங்களுக்கே நன்னி சோழனை அறிமுகபடுத்தியதை நினைத்து சிரிக்கிறேன். 

நானாவது பரவாயில்லை, இன்னும் சிலர் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் நன்னி எப்படி எல்லாம் எழுதுகிறார் இவரை பாருங்கோவன் என்று உங்களை எள்ளியும் நகையாடினார்கள் 🤣.

அது கிடக்கட்டும். அந்த புத்தகத்தை பற்றி உங்கள் தந்தை கூறியது உண்மைதான். அப்படி ஒரு புத்தகம் 1979 இல் வெளி வந்ததாக நூலகம்.கொம் கூறுகிறது.

நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

நான் சொல்ல வந்தது, அந்த எழுதாளரின் பல புனைகதைகளில் ஒன்றாக இந்த காலமுனியும் இருக்கும் என்பதைதான்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 23/5/2021 at 16:28, goshan_che said:

தங்கள் வாழ்த்திற்கு நன்றி அண்ணா... ஏதோ வரலாற்றிற்கு என்னால் முடிந்தவை.

உங்களுக்கு 'Balakumar2' என்பவரை ஞாபகம் இருக்கிறதோ? 😜🤣

பேந்து அண்ணா... உங்களுக்கு அந்தப் புத்தகம் கிடைத்தால் கையோடு எனக்கும் ஒரு படி கொடுத்துவிடுங்கள்... வாசிக்க ஆவல்.😍

மேலும், இது அவருடைய புனைக் கதையாக இருக்குமென்று நான் எண்ணவில்லை. ஏனெனில் அதற்கான சூழ்நிலைகளே உருவாகா காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் யாவும் நடந்தேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 23/5/2021 at 16:28, goshan_che said:

நன்னி,

முதலில் உங்களுக்கு வாழ்த்து. நீங்கள் செய்வது அற்புதமான வேலை. நான் உங்களின் பழைய பெயரில், உங்களுக்கே நன்னி சோழனை அறிமுகபடுத்தியதை நினைத்து சிரிக்கிறேன். 

நானாவது பரவாயில்லை, இன்னும் சிலர் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் நன்னி எப்படி எல்லாம் எழுதுகிறார் இவரை பாருங்கோவன் என்று உங்களை எள்ளியும் நகையாடினார்கள் 🤣.

அது கிடக்கட்டும். அந்த புத்தகத்தை பற்றி உங்கள் தந்தை கூறியது உண்மைதான். அப்படி ஒரு புத்தகம் 1979 இல் வெளி வந்ததாக நூலகம்.கொம் கூறுகிறது.

நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

நான் சொல்ல வந்தது, அந்த எழுதாளரின் பல புனைகதைகளில் ஒன்றாக இந்த காலமுனியும் இருக்கும் என்பதைதான்🤣.

கோசான் அண்ணை... புத்தகத்தின் சில வரிகள் கிடைத்து விட்டது...

இதை எனக்கு கொடுத்தவர் 'பொன்வள்ளி' என்பவர். யாழ் களத்தின் ஒரு புதிய உறுப்பினர். 

(தனிநாடு கிடைத்தே தீரும்😍 என்று எழுதப்பட்டிருக்கிறது)

-------------------------

கேட்பீர் தமிழ் மக்காள்... விதிக்
கிழவி மிகக் கொடியாள்!
ஆட்சி தர மறுப்பாள்! உமை
அலைப்பாள்! துயர் கொடுப்பாள்!
நாட்கள் சில போனால் இவள்
நலிவாள்... உடல் மெலிவாள்!
மீட்சி வருமொரு நாள்.. அது
வரைக்கும் இவள் திருநாள்!

வையம் பெறும் இன்பம் ஒரு
வல்லோன் கொடை யாகும்!
தெய்வம் ஒரு நாளும் அட
தீங்கிழைப்ப தில்லை!
எய்தும் துய ரெல்லாம் விதி
இவளின் விளையாட்டே!
ஐயம் இதில் வேண்டாம்... இறை
ஆற்றல்தனை யுணர்வீர்!

ஆண்டிலொரு நூறா? இலை
அதிலே ஒரு பாதி
தாண்டு முனம் தமிழர்க்கொரு
தனிநா டுருவாகும்!

ஈண்டிதனை இறைவன் உமக்
கெடுத்தருளச் சொல்லி
வேண்டின தால் செப்புகிறேன்..
விடுக துய ரென்றான்!

காலமுனி உரைத்தான்! படை
மறவர் களிப் புற்றார்!
நீல நெடு வானம் வரை
பாய்ந்தார் நிலம் வீழ்ந்தார்!

நாலுதிசை யதிரக் கரம்
அடித்தார்! நகை வெடித்தார்!
கோல முகம் படைத்தார்! முனி
குளிர்ந்து மொழி தொடர்வான்...

பூத்த மரம் போல் விளங்கும்
புதிய தமிழ்க் குலமே!
காத்திருந்து கனி பறிப்பீர்...
அதுவரைக்கும் இமைகள்
சாத்தி உறங்காதீர்! படை
வரிசை சரி பார்ப்பீர்!

கூத்து வருமொரு நாள்.. உயிர்
கொடுத்து முடி கொள்வீர்!

போர் நாள் வரு முன்னே... இடை
நாளில் தமிழ் மண்ணில்
கூர் வாளிலும் கொடியோர் சிலர்
குடி கொன்றிடப் பார்ப்பார்!
சோர்வால் மனங் குலையா நிலை
கொண்டே செயல் புரிவீர்!
ஓர் நாள் வரும்... அந்நாள் தமிழ்
உய்யுந் திருநாளே!

சாதி யெனுந் தீமை... மதச்
சண்டை தலை தூக்கும்!
வீதி குடி ஊர்களென
வேற்றுமைக ளோங்கும்!
நீதி நெறி சொன்ன தமிழ்
நிலம் இழிவு தேடும்!
மோதி விதிக் கிழவி செயல்
வென்று முர சார்ப்பீர்!

பிச்சை யுண வொன்றே பெரி
தென்பான் வயிறுடையான்!
எச்சில் வரு மெனினுந் தமிழ்
இனத்தை விலை வைப்பான்!
நச்சு மகன் குடி கேடன்
நன்றியிலாப் பாவி..
உச்சி பிளந்திடுவீர்! இவன்
ஒழிந்தால் விடிவுண்டே!

தீனி முத லென்பான் வயி
றுடையான்! இவன் தோழன்
ஈன மகன் தன்ன லத்தான்
இனத்தை மதிப்பானா?
தா னுயர்வு பெறுவதெளில்
தாள் பிடித்து நிற்பான்!
மானம் விலை வைப்பான்! இவன்
மனைவியையும் விற்பான்!

இழிவுடையான் தன்னலத்தான்
எதுவரினும் அஞ்சான்!
அழிவு தமி ழினமடைய
அத்தனையுஞ் செய்வான்!
மொழியினிலு மழகு தமிழ்
மொழி மறந்த கொடியன்!
குழி நெருப்பில் இவனுடலகம்
கொடுத்து வெறி கொள்வீர்!

என்றுரைத்தான் காலமுனி
எனது முகம் பார்த்தான்...
நன்று கவிக் குழந்தாய்... ஒரு
நாடமைக்க எழுந்தாய்!
இன்றுவரை தமிழ்ப்புலவன்
ஏடெழுதிக் கெட்டான்!
உன்றனைப் போல களத்திலெவன்
உலவியவ னென்றான்!

ஏடு படைக் கின்ற குலம்
இனிய தமிழ் மொழிக்குக்
கேடு படைப்போ ரதிரக்
கிளர்ச்சி செயும் பொன்னாள்
நாடு படைக் கின்ற திரு
நாளென நான் மொழிவேன்
ஓடு படையோடு புறம்
உணர்ந்த மறத்தமிழா!

நாள் கனியும் நாள் கனிய
மனங்கனியும் நாட்டில்!
வாள் மறையும்! போர்க்கருவி
கொலை மறையும்! அன்பே
தோள் கொடுக்கும்! தமிழ்ச்சாதி
அறஞ் சுமந்து வெல்லும்
ஆள்பவராய்த் தமிழினத்தார்
ஆவது மெய் யறிமின்!

என மொழிந்து காலமுனி
இருகரமுந் தூக்கி
புனல் பொழிந்த தென இதழில்
புது முறுவல் சிந்தி
இனியபடி வாழ்த்தி வெளி
ஏற்றி வழி விட்டான்...
முனிவரனின் அடிதொழுது
முழங்கு படை பெயரும்....

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நன்னிச் சோழன் said:

கோசான் அண்ணை... புத்தகத்தின் சில வரிகள் கிடைத்து விட்டது...

இதை எனக்கு கொடுத்தவர் 'பொன்வள்ளி' என்பவர். யாழ் களத்தின் ஒரு புதிய உறுப்பினர். 

(தனிநாடு கிடைத்தே தீரும்😍 என்று எழுதப்பட்டிருக்கிறது)

நன்றி நன்னி🙏🏾

தனிப்பட்டு எனக்கு காசி ஆனந்தனில் விமர்சனப்பார்வை இருந்தாலும் அவரின் தமிழுக்கும் கவிநயத்துக்கும் நான் என்றும் ரசிகனே.

அவரின் வழமையான பாணியை விடுத்து இது மட்டு மண்ணில் பாடப்படும் காவியப்பாணியில் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, goshan_che said:

நன்றி நன்னி🙏🏾

தனிப்பட்டு எனக்கு காசி ஆனந்தனில் விமர்சனப்பார்வை இருந்தாலும் அவரின் தமிழுக்கும் கவிநயத்துக்கும் நான் என்றும் ரசிகனே.

அவரின் வழமையான பாணியை விடுத்து இது மட்டு மண்ணில் பாடப்படும் காவியப்பாணியில் இருக்கிறது.

எனக்கது வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை அண்ணா.. 
ஆனால் நீங்களும் தொடர்ந்து தேடுங்கள்.. எப்படியேனும் இந்தப் புத்தகதை முழுதாக எடுத்து விட வேண்டும்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நன்னிச் சோழன் said:

எனக்கது வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை அண்ணா.. 
ஆனால் நீங்களும் தொடர்ந்து தேடுங்கள்.. எப்படியேனும் இந்தப் புத்தகதை முழுதாக எடுத்து விட வேண்டும்.

நன்னி,

இந்த நொஸ்டடாம்ஸ் கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்தாள் எதையோ எழுதிவிட்டு போக, நடப்பதை வைத்து ஒவ்வொரு தடவை உலக நிகழ்வுகள் நடக்கும் போதும் அவர் அதைத்தான் சொன்னார் என சொல்வார்கள். அது போலவோ தெரியாது ஆனால் 79 இல் எழுதபட்ட இந்த கவிதை சிலதை ஆரூடம் போல கூறுவதாயும் படுகிறது.

காலமுனி கதையை நான் நம்பவில்லை. காலம் பிந்தமுன் இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறலா? என்பதை யாராவது காசி ஆனந்தனிடம் கேட்டு வைக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
40 minutes ago, goshan_che said:

ஓம்மொம் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதில் சொல்லப்பட்டதில் கொஞ்சம் நடந்திருக்கிறது எண்டுறாங்கள்; இல்லையெண்டுறாங்கள்.. என்னமோ தெரியேலை.

Quote

//ஆனால் 79 இல் எழுதபட்ட இந்த கவிதை சிலதை ஆரூடம் போல கூறுவதாயும் படுகிறது.//

அண்ணே அது 79 இல்லை. 70 ஆம் ஆண்டு. எனது தந்தை கூறினவர் இது 1964-இல் எழுதப்பட்டு 1970இல் வெளியிடப்பட்டதாம். நீங்கள் சொல்வது போல இது ஆரூடம்தான்.. .ஆனால் பலதை சொல்கிறது. 

மற்றது நான் காலமுனி கதையை நம்புகிறேன்... 

Quote

//காலம் பிந்தமுன் இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறலா? என்பதை யாராவது காசி ஆனந்தனிடம் கேட்டு வைக்கலாம்.//

இதில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் நடந்திருப்பதாலும் நான் காலமுனியை நம்புவதாலும் 'இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறல்' என்ற கருத்தை நான் மறுக்கிறேன்😀. ஆனால் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை கண்டால் கண்டிப்பாக இதைக் கேட்பேன். கூடவே புத்தகத்தின் ஒரு படியையும் தருமாறு வேண்டுவேன்.😁😁
 
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நன்னிச் சோழன் said:

ஓம்மொம் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதில் சொல்லப்பட்டதில் கொஞ்சம் நடந்திருக்கிறது எண்டுறாங்கள்; இல்லையெண்டுறாங்கள்.. என்னமோ தெரியேலை.

அண்ணே அது 79 இல்லை. 70 ஆம் ஆண்டு. எனது தந்தை கூறினவர் இது 1964-இல் எழுதப்பட்டு 1970இல் வெளியிடப்பட்டதாம். நீங்கள் சொல்வது போல இது ஆரூடம்தான்.. .ஆனால் பலதை சொல்கிறது. 

மற்றது நான் காலமுனி கதையை நம்புகிறேன்... 

இதில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் நடந்திருப்பதாலும் நான் காலமுனியை நம்புவதாலும் 'இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறல்' என்ற கருத்தை நான் மறுக்கிறேன்😀. ஆனால் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை கண்டால் கண்டிப்பாக இதைக் கேட்பேன். கூடவே புத்தகத்தின் ஒரு படியையும் தருமாறு வேண்டுவேன்.😁😁
 
இங்கே எழுதும் உறவு ஒருவர் காசி ஆனந்தனின் தூரத்து சொந்தம் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கொரோனா 1ம் அலையில் அவரின் மகள் வெளியிட்ட வீடியோ வந்தது. பேஸ்புக்கில் தேடி பாருங்கள். அவர் மூலமும் தொடர்பை எடுக்கலாம்.

https://m.facebook.com/KasiAnandan/
 
இந்த பேஸ்புக் பக்கத்தில் 2ம் இணைப்பில் ஒரு நம்பர் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
51 minutes ago, goshan_che said:

இங்கே எழுதும் உறவு ஒருவர் காசி ஆனந்தனின் தூரத்து சொந்தம் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கொரோனா 1ம் அலையில் அவரின் மகள் வெளியிட்ட வீடியோ வந்தது. பேஸ்புக்கில் தேடி பாருங்கள். அவர் மூலமும் தொடர்பை எடுக்கலாம்.

https://m.facebook.com/KasiAnandan/
 
இந்த பேஸ்புக் பக்கத்தில் 2ம் இணைப்பில் ஒரு நம்பர் இருக்கிறது.

மிக்க நன்றி அண்ணா.. 
இப்போது இந்தியாவில் விடிகாலை...
நான் குறுஞ்செய்தி மட்டுமே இப்போது அனுப்பியுள்ளேன். விடிந்ததும் அழைப்பு ஏற்படுத்துகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இங்கே எழுதும் உறவு ஒருவர் காசி ஆனந்தனின் தூரத்து சொந்தம் என நினைக்கிறேன். பார்ப்போம்.

கொரோனா 1ம் அலையில் அவரின் மகள் வெளியிட்ட வீடியோ வந்தது. பேஸ்புக்கில் தேடி பாருங்கள். அவர் மூலமும் தொடர்பை எடுக்கலாம்.

https://m.facebook.com/KasiAnandan/
 
இந்த பேஸ்புக் பக்கத்தில் 2ம் இணைப்பில் ஒரு நம்பர் இருக்கிறது.

கோசான் இது உண்மையிலேயே அவருடைய முகநூல் தானா?

“தமிழீழம் எனும் நெறுப்பு” என எழுதியுள்ளதே???? 🤔🤔🤔

https://m.facebook.com/story.php?story_fbid=827624343918185&id=108580049248054&__tn__=%2As%2As-R

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

காலம் பிந்தமுன் இது அவரின் கற்பனை கலந்த எதிர்வுகூறலா? என்பதை யாராவது காசி ஆனந்தனிடம் கேட்டு வைக்கலாம்.

இல்லை. இது 1970 இல் அல்லது அதற்கு முதல் இருந்ததற்கான ஆதாரம். 

https://noolaham.net/project/734/73389/73389.pdf

6 hours ago, நன்னிச் சோழன் said:

நான் குறுஞ்செய்தி மட்டுமே இப்போது அனுப்பியுள்ளேன். விடிந்ததும் அழைப்பு ஏற்படுத்துகிறேன்

இப்பொது காசி ஆனந்தனை கேட்டு அறிவது சரியல்ல. அவரை சாராமல் தேடி காணப்பட விடயம்.

9 hours ago, goshan_che said:

காலமுனி கதையை நான் நம்பவில்லை.

12 hours ago, goshan_che said:

நான் சொல்ல வந்தது, அந்த எழுதாளரின் பல புனைகதைகளில் ஒன்றாக இந்த காலமுனியும் இருக்கும் என்பதைதான்

ஆனாலும், இப்படியாக கற்பனையில் கூட அப்போது (1965 - 1970) அவரால் எழுதி இருக்க முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கோசான் இது உண்மையிலேயே அவருடைய முகநூல் தானா?

“தமிழீழம் எனும் நெறுப்பு” என எழுதியுள்ளதே???? 🤔🤔🤔

https://m.facebook.com/story.php?story_fbid=827624343918185&id=108580049248054&__tn__=%2As%2As-R

நானும் நினைத்தேன் மீரா. அவரினது இல்லை என்றே நினைக்கிறேன் ஆனால் அதில் புத்தகம் வாங்க ஒரு நம்பர் கொடுக்கபட்டுள்ளது. அது அவருடையதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kadancha said:

இல்லை. இது 1970 இல் அல்லது அதற்கு முதல் இருந்ததற்கான ஆதாரம். 

https://noolaham.net/project/734/73389/73389.pdf

இப்பொது காசி ஆனந்தனை கேட்டு அறிவது சரியல்ல. அவரை சாராமல் தேடி காணப்பட விடயம்.

ஆனாலும், இப்படியாக கற்பனையில் கூட அப்போது (1965 - 1970) அவரால் எழுதி இருக்க முடியாது.  

சதி கோட்பாடுகளில் எனக்கு நாட்டம் இல்லை. அதே போல் கன்னி மேரி, முகமதுவுக்கு அல்லாவின் குரல் கேட்டது இவற்றிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால் இங்கே வான் புலிகள், பிள்ளையான், கருணா, தலதா மாளிகை என பலவிடயங்கள் பூடகமாக சொல்லபடுகிறது. அல்லது நாம் அவற்றை இப்படி வாசிக்க தலைப்படுகிறோம்.

நீங்கள் சொல்வது போல 64 இல் எழுதி 70களில் அச்சேறியுள்ளது. 

தெய்வங்கள், கட்டுக்கள் எல்லாம் மட்டுமண்ணில் உள்ள விசயங்கள்தான் -ஆகவே இந்த காலமுனி பற்றி அவரிடம் கேட்பதுதான் பொருத்தமானது.

அவருக்கு கோமாவில் இருக்கும் போது இப்படி ஒரு அனுபவம் நிகழ்ந்ததா என்பது அவரை தவிர வேறு யார் உறுதிப்படுத்த முடியும்?

Near death experience போல் ஒரு அனுபவமாக இருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன்:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூல் பதிப்பிற்கான தகவலும் இருக்கிறது. 

http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_3296.html

தமிழன் கனவு; கா.சி. ஆனந்தன் (1968) ரகுநாதன் பதிப்பகம் 303, காலி வீதி, கொழும்பு_-3, ரூ.2_-00

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, Kadancha said:

அண்ணை, இது நான் ஏற்கனவே கண்ட தகவல். என்ர அப்பரிட்ட கொடுத்த போது அவர் மறுத்து விட்டார். இப்படி எந்த தகவல்களும் அதில் இடம்பெற வில்லை யென்றும் கூறினார்.

ஆனால் இதில் உள்ள அந்த இறைவாழ்த்து, கால முனிவன் குடில் ஆகிய தலைப்புகள் மட்டும் தனக்கு அதில் கண்ட நல்ல ஞாபகம் இருப்பதாக தெரிவித்தார்.

Edited by நன்னிச் சோழன்

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சில காலங்களுக்கு முன்னர் இந்தப் புத்தகத்தை எனது குடும்பத்தினர் காசி ஆனந்தன் அவர்களிடம் சிலர் மூலம் கேட்டுப்பார்த்தனர். அதற்கு அவர் இப்புத்தகத்தை தானும் தேடித்திரிவதாகவும் கிடைத்தால் தனக்கும் ஒருபடி தரும்படி கேட்டவரிடம் கூறி அனுப்பினார்!

==================================

காலமுனியின் புத்தகத்தில் ஒரு பெரும் மக்கள்/மாணவர் புரட்சி வெடிக்கும் என்று இருக்கிறது... இதுவோ அது?

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

சில காலங்களுக்கு முன்னர் இந்தப் புத்தகத்தை எனது குடும்பத்தினர் காசி ஆனந்தன் அவர்களிடம் சிலர் மூலம் கேட்டுப்பார்த்தனர். அதற்கு அவர் இப்புத்தகத்தை தானும் தேடித்திரிவதாகவும் கிடைத்தால் தனக்கும் ஒருபடி தரும்படி கேட்டவரிடம் கூறி அனுப்பினார்!

==================================

காலமுனியின் புத்தகத்தில் ஒரு பெரும் மக்கள்/மாணவர் புரட்சி வெடிக்கும் என்று இருக்கிறது... இதுவோ அது?

நீங்களும் காலமுனியை விடுறதா இல்லை😆👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
30 minutes ago, goshan_che said:

நீங்களும் காலமுனியை விடுறதா இல்லை😆👍

ஒரு ஆசை, அப்படியே நடக்கதோ என்டு😆😆

  • 2 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு கவிஞனின் தீர்க்கதரிசனம் - கவிதை

இலக்கியத்தின் இனியதோர் ஊடகம்.

கவிஞன் -

main-qimg-81fd1bbaebb430b875bb4198be0356a9

காலத்தின் குரலாய் நின்று பேசுபவன்.

கடந்த காலத்தைப்பற்றிய தேடலும், நிகழ்காலத்தின் மீதான தெளிவுப்பார்வையும், எதிர்காலத்தைக்குறித்த தீர்க்கதரிசனமும் ஒரு சுவிஞனுக்கு இருக்கவேண்டியது அவசியமாகிறது.

இம்மூன்றும் இணைந்திருந்தமையால்தான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சுவிஞனாக பாரதி போற் றப் படுகிறான். இனிவரும் நூற்றாண்டுகளிலும் சுளி தைகளுடாக பாரதி வாழ்ந்து கொண்டுதானிருப்பான்

தமிழர்களாகிய எமது போராட்ட வரலாற்றின் இலக் கியப்பதிவுகளில் கவிஞர் காசிஆனந்தன் அவர்களுடைய கவிதைகள் முக்கியமானதோர் இடத்தினைப் பெற் றுள்ளது எனலாம்.

அறுபதுகளில் தமிழர் போராட்ட எழுச்சியைத் தூண் டும் விதமாக இவர் எழுதிய கவிதைகளில் எதிர்காலத் தைப் பற்றிய நோக்கு காணப்படுவதை எவரும் மறுக்க முடியாது.

அந்தக்காலந்தொட்டே தமிழ்மக்கள் மீதான சிங்கள அர சின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் முடுக்கி விடப்பட்டு வந்தபோதிலும், அந்தக்காலத்திலிருந் தமிழ் அரசியல் அமைப்புக்களோ சாதாரண பொது மக்களோ ஆயுதப் போராட்டம்தான் இதற்கொரு வழியென்று சிந்தித்துப் பார்க்கவில்லை.

தமிழன் சுயகெளரவத்துடன் வாழ்வதற்கு தனிநாடு ஒன்றுதான் முடிவு என்பதனையும் அதனை அடைவ தற்கு ஆயுதப்போராட்டமே வழி என்பதனையும், அறுபதுகளில் எழுதப்பட்ட காசியின் கவிதைகள் கூர் மையுடன் கூறுகின்றன. தமிழருக்கென்று தனிப்படை யொன்று உருவாக வேண்டுமென்ற கவிஞரின் கனவுகள் அப்போதே கவிதைகளாகி விட்டன.

அத்துடன்-

அந்தப்படை எவ்வாறான வீரத்தையும், உறுதியினையும் கொண்டதாகவிருக்கும் என்ற அந்தக்கனவுகள் இன்று சுண்முன்னே நிதர்சனமாகி வருகின்றன.

1968 ம் ஆண்டு நூலுருவான 'தமிழன்கனவு' கவிதை களை இன்று படித்துப்பார்க்கும்போது வியப்பாக இருக் கின்றது. அந்தக்கவிதைகள் சிலவற்றினை இன்று மீட்டுப் பார்ப்பது சுகமான சுவையானதோர் அனுபவமாகவிருக்கும்.

எட்டுத்திசையும் தமிழ்ச்சாதி

எருமைச்சாதி போலாகி

கெட்டுக்கிடந்த நிலைகண்டு

கேடு தொலைக்கப் புறப்பட்டேன்

வீசுகுண்டால் எறிந்தாலும்

வெட்டி உடலம் பிளந்தாலும்

ஆசைக்கொருநாள் போராடி,

ஆவி துறக்கப்புறப்பட்டேன்.

தமிழனின் அவல நிலைகண்டு அவருக்குள் எழுந்த போர்க்குணத்தினை இவ்வரிகள் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன.

காலமுனிவனின் கூற்றாக சுவிஞர் சொல்லும் இன் னொரு பாடலில் திடமானதொரு நம்பிக்கை இதழ் விரிக்கிறது.

ஆண்டிலொரு நூறோ? இலை

அதிலே ஒருபாதி

தாண்டு முனம் தமிழர்க்கொரு

தனிநாடுருவாகும்

ஈண்டிதனை இறைவனுமக்

கொடுத்தருளச் சொல்லி

வேண்டினதால் செப்புகிறேன்

விடுக துயரென்றான்.

.

பூத்தமரம்போல் விளங்கும்

புதிய தமிழ்க்குலமே

காத்திருந்து கனிபறிப்பீர்

அதுவரைக்கும் இமைகள்

சாத்தி உறங்காதீர்! படை

வரிசை சரிபார்ப்பீர்

கூத்துவருமொருநாள் ....உயிர்

கொடுத்து முடிகொள்வீர்.

போராட்டப்பாதையில் தமிழ்ப்படை இடையிடையே எதிர்கொள்ளும் இடையூறுகளையும் கற்பனை செய்து அப்போதே கவிஞர் வேதனைப்பட்டிருக்கிறார்.

மட்டக்களப்பும் யாழ்நகர் மண்ணும்

மரபில் வேறுபட்டவையென்றொரு

குட்டித்தலைவன் குழப்புவானங்கே

குன்றஞ்சூழ்ந்த மலைநாட்டானை

திட்டுவானொரு சிறுமகன் ...

மன்னார் திருமலையெனச் செந்தமிழ்க்கூட்டம்

இருந்தகளத்தில் எரிந்தது நெஞ்சே!

பிரிவினைவாதங்களால் ஏற்படும் குழப்பங்களை எண்ணி கவிஞர் ஆதங்கப்படுகிறார்.

ஓங்கி வளர்ந்தமரம் - காற்றில்

உடைந்து விழுந்தது போல்

ஆங்கு தமிழ்மறவர் - நூறாய்

ஆனார் நொடியினிலே ......

முரண்பாடுகள் தீர்கிறது. படைமீண்டும் ஒன்றுசேர் கிறது. கவிஞர் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கிறார்.

தேனைமறந்து கள்ளுண்டு

கிடந்தவர் திருந்தி எழுந்தாரங்கே

பூனை நாயெனத்தமிழன்

இழிவுற்ற புன்மையினி இல்லையென்று

வானை இடித்ததோர் சங்கம்

ஒருவன் வல்லவனங்கே உரைசெய்வான்.

சொந்த இனத்தவனாலேயே காட்டிக் கொடுக்கப்படும் சம்பவங்களையும், எதிரியின் தாள்பிடித்து அடிமைச் சுகங்களில் மூழ்கிக்கிடக்கும் தன்மைகளையும் கவிஞர் சாடுகிறார்.

தீனி முதலென்பான் வயி

றுடையோன்! இவன்தோழன்

ஈனமகன் தன்னலத்தான்

இனத்தை மதிப்பானோ?

தானுயர்வு பெறுவதெனில்

தாள்பிடித்து நிற்பான்

மானம் விலைவைப்பான்! இவன்

மனைவியையும் விற்பான்.

.

நச்சு மகன் குடிகேடன்

நன்றியிலாப்பாவி

உச்சி பிளந்திடுவீர்!

இவன் ஒழிந்தால் விடிவுண்டே!

காட்டிக்கொடுக்கும் கயவர்கள் மீது கடுமையான கோபக்கனலை எறிகிறார் கவிஞர்.

தமிழருக்கென தனியானதோர் படை உருவாகி அது எதிரிகளுக்கெதிராக உக்கிரமான போரை நடாத்தும் என சராசரி மனிதர்கள் எவரும் அறுபதுகளில் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். வானிலிருந்து மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதல்களை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டிவருமென்பதை அப்போது எவரும் எண்ணிப் பார்த்திருக்க முடியுமா? ஆயுதப் போராட்டம் தோன்றி எண்பத்து நான்காம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே விமானத் தாக்குதல் ஒன்றைக் கண்டோம். இப்போது விமானத் தாக்குதலே எதிரியின் பிரதானத் தாக்குதலாக அமைந்துவிட்டது.

அட! கவிஞர் அதனை அறுபதுகளிலேயே கற்பனை செய்து விட்டார் தெரியுமா! அது மட்டுமல்ல, தாக்கும் விமானத்தைத் திருப்பித் தாக்கும் வலிமையினை தமிழ்படைபெறும் என்பதனையும் அவர் அப்போதே பாடிவைத்துவிட்டார்.

பறவையின் நிரையென

வானிடை எழுந்தன

பகைவரின் ஊர்திகளே!

சிறகுகள் துகள்பட

அவைமிசை பறந்தன

தமிழர் கருவிகளே!

எவ்வளவு நிதர்சனமாகிவிட்ட கற்பனை...!

காசி அவர்கள் வித்தியாசமானதோர் சுவிஞன். தமிழைப்பற்றியும், தமிழரின் தன்மானப் போராட்டம் பற்றியுமே அவர் பாடியிருக்கிறார்.

கனவு விமானம் செய்து, காதற்பெண்களுடன் காற்றிலே பவனிவரும் கவிதை வரிகளை மட்டும் அதிகமாக வரையும் கவிஞர்களிடமிருந்து இவர் வேறு படுகிறார்.

இவரின்காதல் தமிழ்க்கன்னியைச் சுற்றியே படர்ந்து வந்துள்ளது.

தெள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே

செம்மை கொலுவிருக்கும் -ஒளி

கொள்ளும் இதழில் மலர் நகையொன்று

குழைந்து குழைந்திருக்கும்! உயிர்

அள்ளும் விழிகள் இரண்டிலுமாயிரம்

ஆற்றல் நிறைந்திருக்கும் - இவள்

உள்ளமிருக்கும் இடத்திலே

காதலும் ஒளிந்து மறைந்திருக்கும்

தமிழ்ப்படையின் அமைப்பையும் அழகையும் ஆனந்தமாக கற்பனை செய்து கவிஞர் மகிழ்ந்திருக்கிறார்.

சித்திரச்சோலை புறத்தினில் வானிடை

சிறகை அடித்தொலி செய்தே

கத்திப்பறந்த பறவை அணியென

காற்றில் பறக்குது தானை!

புத்தொளி வீசும் விழிகளைப்பாடவோ

மூச்சுப்புயலை எழுதவோ

தத்து நடைத்தமிழ் தானைநடையினை

பாடத்தகுமோ தமிழரே!

தமிழ்மறப்படையின் மூலமாக இறுதியில் தனிநாடு உருவாகும். அந்நாடு எல்லா விதங்களிலும் சுதந்திரம் பெற்றதாகவே அமையும் என்பதையும் கவிஞர் சொல்ல மறக்கவில்லை.

நீள்நெடு மாளிகை வீடுகள் நிறைந்தன

குடிசைகள் நீங்கினவே!

நாளெல்லாம் வாடிய ஏழையர் முகம்

நகைத்தன நகைத்தனவே!

ஆண்டவர் அடிமையர் உள்ளவர் அற்றவர்

ஆகிய பேதங்கள் தூள்பட விடுதலை வந்தது! விண்மிசை

பறவைகள் துள்ளுதடா!

அறுபதுகளில் கவிஞர் கண்ட கனவுகளின் பல கட்டங்கள் இன்று நிதர்சனமாகி வருகின்றன. அவரின் கனவின் இறுதிக் கட்டமும் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதனையும் அவர் கண்கூடாக கண்டு மகிழ வேண்டுமென. மாமனிதர் விருது பெற் றிருக்கும் அவரை வாழ்த்துவோம்.

இன்னொரு நிலவில் சந்திப்போம்.

சாளரம் | ஆகஸ்ட் 1991 | பக்கம் 14- 16

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

//தேனைமறந்து கள்ளுண்டு

கிடந்தவர் திருந்தி எழுந்தாரங்கே

பூனை நாயெனத்தமிழன்

இழிவுற்ற புன்மையினி இல்லையென்று

வானை இடித்ததோர் சங்கம்

ஒருவன் வல்லவனங்கே உரைசெய்வான்.//

பாருங்கோ, நாம் குடி போதைக்கு அடிமையாவோம் என்றும் அதிலிருந்து மீளுவோம் என்று எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. மட்டுமின்றி, ஒரு சங்கம் தோன்றி அதன் (தலைவனாக்கும்) எமக்கு வழிசொல்வானென்றும் இருக்கிறது.

மேற்கண்ட கட்டுரையினை எழுதியதே புலிகள் தான்!!!!!!!

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழன் கனவு நூல் கிடைத்தது...

எமது இனத்தில் எதிர்காலத்தை அப்படியே கூறும் நூல்.... முற்றாக வாசித்தேன்... எழுதியிருப்பது விளங்குகிறது, ஆனால் விளங்கவில்லை.

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.