Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை; முந்தைய இரண்டையும் விட இது ஆபத்தானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை; முந்தைய இரண்டையும் விட இது ஆபத்தானதா?

Mucormycosis

Mucormycosis ( AP Photo/Amit Sharma )

சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, கறுப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை பாதிப்புகள் இந்தியாவில் தீவிரமடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது மீண்டும் மஞ்சள் பூஞ்சை என்று மற்றுமொரு பூஞ்சை பாதிப்பு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. இந்த மஞ்சள் தொற்று, கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளைவிட மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள காசியாபாத்தில் மஞ்சள் பூஞ்சைக்குப் பாதிக்கப்பட்ட முதல் நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மஞ்சள் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நபர், இதற்கு முன்பே கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அந்த நோயாளி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மற்ற இரண்டு பூஞ்சைகளைவிட அதிகளவிலான பாதிப்புகளை நோயாளிகளின் உடலில் உண்டாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

India Covid 19 Outbreak
 
India Covid 19 Outbreak

கறுப்புப் பூஞ்சை இதற்கு முன்னரும் மனிதர்களிடையே தென்பட்டுள்ளது. மியூகோர் செப்டிகஸ் (mucor septicus), என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் மஞ்சள் பூஞ்சை மனிதர்களிடையே இதுவரை காணப்பட்டதில்லை. இதன் பாதிப்புகள் ஊர்வன உயிரினங்களிடையே (பாம்பு, பல்லி போன்ற உயிரினங்களிடையே) தான் இதுவரைக்கும் தென்பட்டது.

இதை, கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சையிலிருந்து வேறுபடுத்துவது, இது பரவக்கூடிய விதம்தான். கறுப்புப் பூஞ்சை முக அமைப்பை உருக்குலைப்பதிலிருந்து தொடங்குகிறது. ஆனால், மஞ்சள் பூஞ்சை உடலின் உட்புறத்தில் இருக்கும் உறுப்புகளின்மீது அதன் தாக்குதலைத் தொடுத்து, செயல்பாடுகளைக் குலைப்பதன் மூலம் தொடங்குகிறது. இதன் தாக்குதல் உடலின் உள்ளுக்குள் இருந்து தொடங்குவதால், இதன் பாதிப்புகளும் மற்ற இரண்டு பூஞ்சைகளைவிடவும் அதிகமாக இருக்கிறது. ஆகையால், இதனால் பாதிக்கப்படுவோர் முதல் நாளில் இருந்தே இதைக் கண்டறிந்து உடனடி சிகிச்சை எடுத்தாக வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

 

மற்ற பூஞ்சை பாதிப்புகளைப் போலவே, மஞ்சள் பூஞ்சையும் மாசடைந்த சுற்றுச்சூழலில் அதிகம் பரவியிருக்கும். பொதுவாக, அப்படிப்பட்ட சுற்றுச்சூழலில் வளரக்கூடிய பூசனங்களை ஒரு நோயாளி மோந்தால் அவருக்குப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மஞ்சள் பூஞ்சையைப் பொறுத்தவரை, காற்றிலிருக்கும் அதீத ஈரப்பதத்தின் வழியாகவும் பழைய, அழுகிய உணவுகளில் இருந்தும்கூட மக்களுக்குப் பரவக்கூடும். ஆகவே, சுகாதாரமற்ற பகுதிகளும் மாசடைந்த சூழலும் மஞ்சள் தொற்று பாதிப்புகள் முதன்மைக் காரணங்களாக அறியப்படுகின்றன.

மஞ்சள் பூஞ்சை மட்டுமன்றி, பொதுவாகவே பூஞ்சைத் தொற்றுகள் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாகவுள்ள மக்களை எளிதில் பாதிக்கலாம் என்று சொல்லப்பட்டாலும்கூட, கோவிட்-19 தொற்றுநோயைப் போல அவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது என்றும் சொல்லப்படுகிறது.

Patient/ Representation Image
 
Patient/ Representation Image AP Photo / Jae C. Hong

இதுகுறித்துப் பேசிய தொற்றுநோய் மருத்துவரான சுந்தர் ராமன், ``மஞ்சள் பூஞ்சை பற்றிய விவரங்கள் போதுமான அளவுக்கு இன்னும் நமக்குத் தெரியவில்லை. மேலும், உடலில் மிகவும் குறைந்த நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு இது எளிதில் பாதிக்கக்கூடும். மேலும், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருப்போருக்கும் இது பாதிக்கக்கூடும். மேலும், மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே நாம் இருப்பதால் இன்னும் முழுமையான விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. இதுவரை கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதுவேதான், இதற்கும் அளிக்கப்படுகிறது" என்று கூறினார்.

மேலும், கோவிட் தொற்றுக்கு ஆளாகி, குணமடைந்தவர்களிடையே, அல்லது குணமடைந்து கொண்டிருப்பவர்களுக்கு இடையே, அதிகம் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு ஆளாகி, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவி பெற்றவர்களுக்கும் ஸ்டீராய்டு அதிகம் பயன்படுத்தியவர்களுக்கும் இது அதிகமாக பாதிப்பது தெரியவந்துள்ளது. ஒரு சிறிய கீறல், வெட்டு, தீக்காயம் ஆகியவற்றின் மூலமாக சருமத்தில் இருந்து உடலுக்குள் இது பரவக்கூடும்.

 

அதோடு, அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகளவிலான நேரத்தைச் செலவிட்டவர்களுக்கு, சமீபத்தில் உடல் உறுப்பு மாற்றம் செய்துகொண்டவர்களுக்கு, வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளோருக்கு, ஸ்டீராய்டு மற்றும் வெளிப்புற ஆன்டிபாக்டீரியல் மருந்துகளைப் பயன்படுத்துவோருக்கு, கிட்னி கோளாறு இருப்போருக்கு இந்தப் பூஞ்சை பாதிப்பு ஏற்படலாம் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு (Centres of Disease Control and Prevention, CDC) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்
 
கொரோனா வைரஸ்

இதன் அறிகுறிகள்

  • செரிமான குறைபாடுகள்

  • உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றங்களின் வேகம் மிகவும் குறைந்துவிடும். அதன் விளைவாக, திடீர் எடை குறைவு போன்றவை நிகழலாம்.

  • பசி இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு

  • உடல் சோர்வு, அசதி

  • காயங்கள் ஆறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்

  • சீழ் வடிதல், திசுக்கள் அழுகுதல் போன்றவை பூஞ்சை பாதிப்பு மிகவும் தீவிரமடையும்போது ஏற்படும்.

 

இந்தப் பூஞ்சை பாதிப்பு ஏன் மற்ற இரண்டையும் விட ஆபத்தானதாகக் கருதப்படுகிறது?

இதுவரை நாம் பார்த்துள்ளவற்றை வைத்துப் பார்க்கையில், வெள்ளை மற்றும் கறுப்புப் பூஞ்சைகளைப் போல் இல்லாமல், மஞ்சள் பூஞ்சை உடலின் உள்ளுறுப்புகளிலும் பாதிப்புகளை உண்டாக்குகிறது. ஆகவே, இது அதிகச் சேதங்களை உடலில் உண்டாக்குகிறது. அதனாலேயே, மக்கள் இதனால் பாதிக்கப்படுவது தெரியவந்தவுடனேயே இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தொடங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Mucormycosis Testing
 
Mucormycosis Testing AP Photo / Mahesh Kumar A

இதுகுறித்த விவரங்கள் நமக்கு இதுவரை முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், இது ஏற்படுத்தக்கூடிய சேதங்கள் அதிகம் என்பதால், ஆரம்பத்திலிருந்தே இதற்குரிய தற்காப்பு நடவடிக்கைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகிப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகள், குணமடையும்போது இது எளிதில் பாதிக்கிறது. மேலும், இது பரவக் காரணம் சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் என்பதால், கோவிட் நோயாளிகள் மிகுந்த அக்கறையோடு கவனிக்கப்பட வேண்டும். மேலும், ஆக்ஸிஜன் விநியோகத்தைப் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு, அந்த ஆக்ஸிஜன் முழுமையாக ஃபில்டர் செய்து, எந்த மாசுபாடும் இன்றி வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் கொடுப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

https://www.vikatan.com/health/healthy/after-black-white-fungus-now-yellow-fungus-found-in-patients-things-you-should-know

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.