Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுக்கு மேல தமிழ்நாடு பக்கம் வந்திடாதீங்க.. சமந்தாவுக்கு எதிராக நெட்டிசன்ஸ்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மேல தமிழ்நாடு பக்கம் வந்திடாதீங்க.. சமந்தாவுக்கு எதிராக நெட்டிசன்ஸ்.!

family-man-21621656666596.jpg

சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாவதை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த வெப் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு எதிராக #ShameonYouSamantha ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் வரும் ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

அந்த தொடரில் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக சித்தரித்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.
வில்லி கதாபாத்திரத்தில்

சியான் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பிறகு மீண்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்த வெப் தொடரின் டிரைலரை பார்த்த தமிழர்கள் ராணுவ உடையில் இருக்கும் சமந்தாவை பார்த்த உடனே ஆத்திரம் அடைந்தனர்.

உணர்வு இல்லையா.?

நடிகை சமந்தா சென்னை பொண்ணு என்றும் பல்லாவாரத்தில் தான் வளர்ந்தேன் என்றும் பல இடங்களில் பூரிப்படைந்து பேசியுள்ளார். இந்நிலையில், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உருவாகி உள்ள ஒரு வெப் தொடரில் எப்படி நடிக்க சம்மதித்தீர்கள் என பலரும் சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எந்த அறிகுறியும் இல்லை

தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பிலேயே கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலும், அது தொடர்பாக எந்தவொரு பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், திட்டமிட்டபடி அந்த வெப் தொடர் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என்றே தெரிகிறது.

புரமோஷனும் பண்ணல

விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அந்த தொடர் குறித்த விளம்பரங்களையும் அமேசான் பிரைம் அதிகளவில் செய்யவில்லை. அப்படியே அதனை அமைதியாக ரிலீஸ் செய்து விட வேண்டும் என்கிற மனநிலையிலேயே உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஷேம் ஆன் யூ சமந்தா

இந்நிலையில், தமிழ் உணர்வாளர்கள் தற்போது #ShameonYouSamantha என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு நடிகை சமந்தாவிற்கு எதிரான ட்வீட்களை பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த வெப் தொடரை ரிலீஸ் செய்ய விடாமல் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எப்படி கதை அமைக்கப்பட்டு இருந்தாலும் அது வரலாற்று பிழையாகத் தான் இருக்கும். இந்த தொடரில் நடிகை சமந்தா நடிக்க சம்மதித்ததே தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இனத்தின் வரலாறு

'ஈழத்தின் வரலாறு..!

தமிழினத்தின் நெருப்பாறு..!

எரிமலை நெருப்பில் நீந்தி

ஈழம் காத்த ஈகியர் அவர்கள்..!

உங்கள் ஈன பலிக்கு - பழியாகாது

எங்கள் இனத்தின் வரலாறு..!'

என தமிழ் மக்கள் இந்த வெப் தொடரை தடை செய்யும் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

சமந்தா படம் பார்க்க மாட்டேன்

'இனி எவ்வளவு உச்ச நட்சத்திரமாக இருந்தாலும்,பிடித்த நடிகராக,இயக்குனராக இருந்தாலும்,நல்ல கதையாக இருந்தாலும் சமந்தா நடித்திருந்தால் அந்த படத்தை நான் பார்க்க போவதில்லை.என் வீட்டுத் தொலைக்காட்சியில் கூட இனி சமந்தாவின் திரைப்படங்களை காணப் போவதில்லை.' என ரசிகர்கள் கொதித்துள்ளனர்.

சாபக்கேடு

'நீ தமிழ் மகள் அல்ல தமிழ் நாட்டின் சாபக்கேடு..' என்றும் இனி தமிழ்நாட்டு பக்கம் வந்து விடாதே என்றும் ஏகப்பட்ட கடும் வசைகளை நடிகை சமந்தா மீது தமிழ் பற்றாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். முதல் வெப்சீரிஸில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த தொடர் தானே ஃபேமிலி மேன் என்கிற கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

https://tamil.filmibeat.com/news/shameonyousamantha-trending-in-twitter-083557.html

  • கருத்துக்கள உறவுகள்

நடிகையை நடிகையாக 
படத்தை படமாக பார்க்கும் கூட்டத்தை இந்தப்பக்கம் காணவில்லை.

விஜய்சேதுபதி முரளியின் படத்தை எதிர்த்தபோது 
தாம்தான் கதை எழுதி இயக்க இருந்தவர்கள்போல 
வந்து குத்தி முறிந்தார்கள்.

இந்த வரலாறுகளை திரிக்கும் கூட்டமும் எதிரியும் இதோடு நிற்க போவதில்லை 
இன்னொரு வடிவமும் இன்னொரு சினிமாமும் வரத்தான் போகிறது 
நாம் சரியான எதிர்ப்பை காட்டாது போனால் 
அவர்கள் கடைவிரித்து வேலையை தொடங்கி விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

மருதர்,

விசயம் தெரியாதோ?

உங்கட சைட்ல முக்காவாசிக்கு மேல, “வைரமுத்துவை கவிஞராக பாருங்கோ, அரசியலாக்க வேண்டாம்” எண்டு அங்கால ஒரே கம்பு சுத்தல்🤣.

இதுல வைமு எழுதாட்டி தமிழ் ஐசியு வில போய் படுத்துவிடுமாம் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் ஒன்று - வி.சே படத்தை கைவிட வேண்டும் என்றுதான் அன்று பலர் வலியுறுத்தினர். அதை கேட்ட அணுகுமுறை, விசே தமிழரா இல்லையா என்ற நோக்கில் அலசியதுதான் பிரச்சனையானது.

மிக சிலரே முரளி படத்தை வி சே நடிப்பது சரி என்று எழுதினர்.

ஆனால் சமந்தா வி. சே அல்ல.

சென்னையில் பிறந்தாலும் தெலுங்கு மலையாள பெற்றோரின் மகள்.

நாகேஸ்வரராவ் குடும்ப மருமகள்.

வாழ்க்கையிலும் செட்டில் - இது ஓ டி டி படம். 

எதிர்பவர்கள் அவரவர் வீட்டு டிவியைத்தான் உடைக்க முடியும்.

இந்த எதிர்ப்பை எல்லாம் கனம் பண்ணாமல் ஆந்திராவில் அவர் ஜாலியாக இருப்பது போலத்தான் படுகிறது.

பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

எங்களுக்கு நடிப்பவரின் பூர்விகம் தேவையில்லை 
திரையில் எதை காட்ட முனைகிறார்கள்? எதை மறைக்க முனைகிறார்கள் 
என்பதுதான் எமக்கு தேவை. எங்கள் இனம் மீது ஒரு பரப்புரையை ஒரு சாரார் திட்டம் இட்டே 
செய்து வருகிறார்கள் இதோடு இது முடியப்போவதில்லை 

சீமான் தமிழரை தமிழரே ஆழவேண்டும் என்று சொன்னால் 
கர்நாடர் தெலுங்கரை கொல்ல சொல்கிறார் என்று பாசாங்கு செய்தால்தான் 
ஒரு இனவாத முலாம் பூசி வாதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
சீமான் எதையும் புதிதாக சொல்லவில்லை ... இந்தியாவை இந்தியரே ஆழவேண்டும் என்பது 
சட்டமாக அமுலில் இருக்கும் நாட்டில் இருந்து அதைத்தான் அவரும் சொல்கிறார்.

ஆனால் அவரை நாம் எதிர்க்க தொடங்கிவிட்டால் 
சேற்றுக்குள் அடி நிலம் மட்டும் இறங்கி கலக்கவேண்டும் அப்போதான் குட்டை 
ஒரு கலங்கிய நிலையில் இருக்கும். மிகுதியை செவ்வென செய்யமுடியும் 

இதை சமந்தா நடிக்காது போனால் இன்னொருத்தி நடித்துவிட்டு போகிறாள் 
எமது நோக்கம் இது ஒரு பொய் பரப்புரை என்பதை வெளி உலகிற்கு கொண்டுவருவதே 
புலிகள் பயங்கரவாதிகள் எனும் பரப்புரையைத்தான் நாம் எதிர்க்கிறோம் 
இது நாளை மறுதினம் அமேசானில் வெளியாகலாம். அதன் பாதிப்பு என்பது அவர்களுக்கு எதிர்பார்த்த 
வெற்றியை கொடுக்க கூடாது .....கொடுக்கவும் முடியாது 

இவ்வாறான புறம்போக்கு எண்ணத்தில் எப்படியும் பணம் வந்தால் சரி என்றுவிட்டு 
நான் பச்சை தமிழன் நீல தமிழன் என்பர்களுக்கும் ஒரு குட்டு குட்டி வைக்க வேண்டும் 
ராஜபக்ச + மலையாளிகளின் கூட்டுக்கு ஆடிய அசின் அதற்கான விலையை பெற்றுக்கொண்டார் 
விஜய்சேதுபதி கடைசிவரை பம்மி தனது உண்மை முகத்தை காட்டிக்கொண்டார் 
சமந்தாவும் இதற்கான விலையை பெற்றுக்கொள்ளுவார். 

வைரமுத்துவை அரசியல் ஆக்குவதே அவர் மீது சேறு அடிக்கவே 
வைரமுத்து நல்லவரா கெட்டவரா? என்பது எனக்கும் உங்களுக்கும் தெரியாது 
அவருடைய தனிப்பட்ட ஒழுக்கம் பற்றி பேசுவத்துக்கு எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை 

அவர் ஒரு தமிழ் கவிஞர் என்பதால் அவர் மீது பூசப்படும் சேறு பற்றித்தான் 
விவாதிக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

இந்த படத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை நான் மறுக்கவில்லை.

ஆனால் இது முன்னைய எதிர்ப்புகள் போலன்றி அதிகம் பயனலிக்காமல் போகக்கூடும் என்பதே நான் சொல்ல வந்தது.

வைரமுத்து ஒரு தமிழ் கவி, தமிழன் என்பதால் அவருக்கு முட்டு கொடுப்பதில் எனக்கு ஒரு உடன்பாடும் இல்லை.

ஆனந்தசங்கரியும்தான் தமிழன். நாளைக்கு அவருக்கும் முட்டு கொடுப்போமா?

என்னை பொறுத்தவரை கருணாநிதிக்கு மிக நெருக்கமாக 2009 இல் இருந்த எவரும், குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பாவது கேட்காதவரை அவர்களை பற்றி நாம் ஒரு நிமிசம் கூட வீணடிக்கத்தேவையில்லை.

அவர் தமிழராய் இல்லை கடவுளாய் இருந்தாலும்.

கனிமொழி=திருமா=வைமு=கஸ்பர்

இதில் அனைவர் மீதான விமர்சனமும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

உங்கள் கருத்தை எதிர்க்க ஏதும் இல்லை 

ஆனால் சங்கரியை அடிக்கவேண்டிய தேவை எனக்கு இருக்கிறது 
அதேநேரம் ஒரு தமிழன் என்பதால் ஒரு சிங்களவன் சங்கரியை அடிக்கும்போது 
தடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது ... நான் சங்கரி என்ற தனிப்பட்ட மனிதனை 
காப்பற்ற முயலவில்லை ... சிங்களவனின் இனவாதத்தை எதிர்க்க வேண்டிய தேவை 
எனக்கு இருக்கிறது. 

நீங்கள் சொன்ன கூட்டத்தை காப்பற்றும் எண்ணம் ஏதும் எங்களுக்கு இல்லாது போனாலும் 
அவர்கள் தமிழர்கள் என்பதால் இலக்கு வைக்கப்படும்போது அந்த இனவாதத்தை கொஞ்சம் 
கவனித்து பார்க்க வேண்டிய தேவை நிர்ச்சயம் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

அதேநேரம் ஒரு தமிழன் என்பதால் ஒரு சிங்களவன் சங்கரியை அடிக்கும்போது 
தடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது .

மன்னிக்கவும் எனக்கு நிச்சயமாக இல்லை. அப்பாவி சிங்களவர் ஒருத்தருக்கா குரல் கொடுத்தாலும் சங்கரிக்கு ஒண்டு எண்டால் விடுப்பு மட்டுமே பார்ப்பேன்.

சங்கரி அடிவாங்குவாதல் தமிழ் ஒன்றும் தாழாது. 

3 minutes ago, Maruthankerny said:

அவர்கள் தமிழர்கள் என்பதால் இலக்கு வைக்கப்படும்போது அந்த இனவாதத்தை கொஞ்சம்

இவர்கள் திமுக அனுதாபிகள் என்பதால் தான் குறிவைக்க படுகிறாரகள்.

ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு எதிர் நடவைக்கையே இது.

இதில் நாங்கள் ஈழத்தமிழர் சும்மா தேவையில்லாமல், சம்பந்தமில்லாமல் புரண்டு அழுகிறோம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்டிக் உலகத்துக்கு கேடு தரும்னு சும்மாவா சொல்றோம்...... #ShameonYouSamantha

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

பிளாஸ்டிக் உலகத்துக்கு கேடு தரும்னு சும்மாவா சொல்றோம்...... #ShameonYouSamantha

மருதர்,

இது ஒன்றும் காஜு அண்ணியின் ஷதி இல்லையே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மருதர்,

இது ஒன்றும் காஜு அண்ணியின் ஷதி இல்லையே🤣.

ஆட்டை கடிச்சு ...
மாட்டை கடிச்சு 
கடைசியா அண்ணியிலேயே வாயை வைக்க பார்கிறீரங்களே?
இந்த லண்டன் காரங்களுக்கு எப்படித்தான் மனசுவதோ தெரியலை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.