Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – 2021ஆம் ஆண்டின் கருப்பொருளை அறிவித்தது ஐ.நா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – 2021ஆம் ஆண்டின் கருப்பொருளை அறிவித்தது ஐ.நா

 
unnamed.jpg
 12 Views

உலக சுற்றுச்சூழல் தினம், 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா தெரிவித்த கருத்தில், சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது.  எனவே தான் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக “மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது” என்பதை நிறுவியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=51543

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகரித்து வரும் இ-கழிவு..! - உலக சுற்றுச்சூழல் தினப் பகிர்வு #MyVikatan

Representational Image

Representational Image ( Pixabay )

இயற்கைக்கான ரிமோட் கன்ட்ரோல் மனிதனின் கைகளில் தான் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எவனொருவன் இயற்கையிலிருந்து

மிகக் குறைவாக நுகர்கிறானோ

அவனே போற்றத் தகுந்தவன்

-நம்மாழ்வார்


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினம் இயற்கை ஆர்வலர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலம் மாறும் வேகத்தை விட சூழலியலும் மிக வேகமாக மாறிவருகிறது.

இயற்கையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இயற்கையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அதன் மதிப்புகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்ல உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழல் நமக்கு அளித்த அனைத்தையும் மதிப்பதற்கும் அதனைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வதற்கும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அரசாங்கங்களும் சாதாரண குடிமக்களும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பதும், பள்ளி மாணவர்க்கு விழிப்புணர்வை ஏற்படுத்த போட்டிகளையும் நடத்தி வருகிறது.

Representational Image
 
Representational Image

#சுற்றுச்சூழல் தினம் தோன்றிய வரலாறு

1969ம் ஆண்டு மார்ச் மாதம் டென்மார்க்-கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இயற்கையியல் வரலாறு குறித்த கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது.

மாணவர் குழு ஒன்று நுழைந்து அங்கிருந்த கதவுகளை பூட்டி.. சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டிற்கு எதிராய் முழக்கம் எழுப்பினர். மாசடைந்திருந்த குளத்து நீரை கொண்டுவந்து அனைவரின் மீதும் தெளித்தனர். ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது.

1970களில் வட அட்லாண்டிக் பகுதியில் குடிமக்களின் போராட்டம், சூழலியல் இயக்கங்களின் தன்னெழுச்சி போன்றவை 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் புவிநாள் உறுதுமொழி நிகழ்வுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. இதற்கு கிடைத்த வரவேற்பு ஆகியவை சூழலியலாளர்களை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது.1970ம் ஆண்டு புவிநாள் நிகழ்வுக்குப் பின் டைம் இதழ் பேர்ரி காமனர் படத்தை அட்டையில் வெளியிட்டு சூழலியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து 1972 இல் பொதுச் சபை சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட முதல் பெரிய மாநாட்டை நடத்தியது. இதனை மனித சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு அல்லது ஸ்டாக்ஹோம் மாநாடு என அழைக்கப்பட்டது. அந்த ஆண்டு ஐ.நா சபை ஜூன் 5ம் நாளை உலக சுற்றுச்சூழல் தினமாய் அறிவித்து முதன்முதலில் 1974 இல் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது.

"ஒரே ஒரு பூமி" எனும் முழக்கத்தைச் செய்தது. காற்று மாசுபாடு, பிளாஸ்டிக் மாசுபாடு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், போன்ற நமது சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தளமாக WED உருவாக்கப்பட்டது நுகர்வு, கடல் மட்ட அதிகரிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு, தேசிய மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த WED உதவுவதற்காக அமைக்கப்பட்டது ஆகும்.


2021 ஆம் ஆண்டில், உலகளாவிய அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் ஜூன் 4-5 தேதிகளில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான நிகழ்வாக நடக்கிறது.இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.கடந்த ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினத்தை கொலம்பியா ஜெர்மனியுடன் இணைந்து பல்லுயிர் பாதுகாப்பை கருப்பொருளாய் கொண்டு நடத்தியது.

Representational Image
 
Representational Image

இந்த ஆண்டுக்கான நிகழ்வை பாகிஸ்தான் அரச ஏற்று நடத்துகிறது.

இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2021 இன் கருப்பொருள் “சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (Eco System Restoration) ஆகும்.

இந்த ஆண்டின் நிகழ்வு 2021-2030 சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பான ஐ.நா பத்தாண்டிற்கான திட்ட தொடக்கத்தை குறிக்கிறது. இதன் முடிவில் நிலையான அபிவிருத்தியுடன் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்கதாக காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளனர் . மரம் வளர்த்தல், நகரங்களை பசுமையாக்குதல், தோட்டங்களை உருவாக்குவதல் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்தல் ஆகியன இதில் அடங்கும்.

#பாகிஸ்தான் உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்துகிறது

2014ல் பாகிஸ்தான் அரசாங்கம் "பில்லியன் மரம் நடுதல்"திட்டம் மூலம் காடு வளர்ப்பைத் தொடங்கியது. சதுப்புநிலங்களை மீட்டெடுப்பது, வனப்பகுதியை அதிகரிப்பது மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் மரங்களை நடவு செய்வது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

சமீபத்தில், பாகிஸ்தான் பசுமை திட்டங்களை உருவாக்குவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை ஆதரிப்பதற்காக “சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நிதி” என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது.


உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு ஆண்டு அறிக்கை 2020 இல், 1999 முதல் 2018 வரை காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் இருந்தது. அந்த அறிக்கையின்படி, பாகிஸ்தான் 3.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார இழப்புகளைச் சந்தித்தது.காலநிலை மாற்றம் மற்றும் இமயமலையின் உருகும் பனிப்பாறைகள், மழை மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. 1999 முதல் 2018 வரை நாட்டில் இதுபோன்ற 150 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நிகழ்ந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Representational Image
 
Representational Image

#சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு என்பது சீரழிந்த அல்லது அழிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்து பாதுகாப்பதாகும். இதன் மூலம் பல்லுயிர் வளம், பசுமை இல்ல வாயுக்கள் கட்டுப்படுத்தலாம். அடுத்த 2030க்குள் 350மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலங்களை மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதன் மூலம் சூழலியலை மேம்படுத்தலாம். 13 லிருந்து 26 ஜிகா டன் பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்திலிருந்து அகற்றலாம். இதனால் காடுகள், விளைநிலங்கள், நகரங்கள், மற்றும் பெருங்கடல்கள் உட்பட அனைத்து வகையான சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீட்டெடுக்க முடியும்.

#இந்தியாவில்

1972ம் ஆண்டு ஜூன் மாதம் சுற்றுச்சூழல் குறித்து ஸ்டாக்ஹோமில் பேசிய இந்திராகாந்தி.."பணக்கார நாடுகள் தங்கள் அரசியல்,வர்த்தக கொள்கைத் திட்டங்களில் புதிய உள்ளீடுகளை அறிமுகம் செய்வதால் உருவாகும் சூழலியல் நெருக்கடிகள் ஏழை நாடுகளைப் பாரமாய் அழுத்துகின்றன. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அதிக மக்கள் தொகையைக் குற்றம் சாட்டுவது சிக்கலான பிரச்சனையை எளிமைப்படுத்துவதாகும்.மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் பெருமளவு இயற்கை வளங்களை நுகர்வதாமவும் குறிப்பிட்டார்" இன்றளவும் இந்த உரையின் சாரம்சம் தொடர்கிறது.

உலகிலுள்ள மொத்த இனங்களில் 9.13 சதவீத தாவர இனங்களும், 6.74 சதவீத விலங்கினங்களுமே இந்தியாவில் காணப்படுகின்றன.

வன அழிப்புகள் அதிகம் நிகழ்வதால் தட்ப வெப்பநிலை மாறியிருக்கிறது. விளைவாக கடும் வெப்பம், மேக வெடிப்பு, கடும் மழை போன்றவை நிகழ்கின்றன. இயற்கைக்கான ரிமோட் கன்ட்ரோல் மனிதனின் கைகளில் தான் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Representational Image
 
Representational Image

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆய்வில் இந்தியா 168வது இடத்தில் உள்ளது.காற்று மாசுபடிந்த 20 பெருநகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றன.

வாகனங்களின் புகையை கட்டுப்படுத்த மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகன தயாரிப்பும்,2030க்குள் மின்வாகனங்களுக்கான மாற்று ஏற்பாடும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மரம் நடுவிழாவை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நட்ட மரங்களை பாதுகாக்கும் விழாவையும் ஏற்படுத்த வேண்டும்.காற்றாலை, சூரிய மின்சார திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.நீராதாரங்களை பாதுகாத்தல் எதிர்காலத்தில் கடும் சவாலாக இருக்கும்.

மின்னணு கழிவுகள் சூழலியல் சீர்கேட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. 2020ம் ஆண்டில் கழிவாக கைபேசிகளின் எண்ணிக்கை 2007ல் இருந்ததை போல் 18மடங்கு அதிகம் என ஐநா சுற்றுச்சூழல் திட்டக்குழு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 40மில்லியன் டன்கள் வளர்ந்துவருவது வருத்தம் அளிப்பதாகும். இ-கழிவு சீர்கேட்டினை தடுக்க மறுசுழற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

"வளர்ச்சி இப்போது மற்றவை பிறகு" என உலக நாடுகள் எண்ணாமல் சுற்றுச்சூழல் தினத்தை வருடம் முழுக்க நினைவில் வைத்து கொண்டாடுவோம்.

"நாம் கண்ணால் பார்க்க முடிகிற ஒரு செடியை, ஒரு வண்ணத்துப்பூச்சியை தம் பேரக்குழந்தைகளுக்கு வெறும் புகைப்படத்தில் மட்டுமே காட்ட முடியும் என்றால், அதைவிட வலி தரும் விடயம் வேறு என்ன இருக்க முடியும்?" என்று ஆய்வாளர் கிறெய்க் ரெய்லர் கூறியது நினைவுக்கு வருகிறது.


-மணிகண்டபிரபு

 

https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-environmental-day

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.