Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார்: இறால் பண்ணையால் மீனவர் குடும்பங்கள் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார்: இறால் பண்ணையால் மீனவர் குடும்பங்கள் பாதிப்பு

 
IMG-20210613-WA0008-1-2-696x368.jpg
 18 Views

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலுப்பக்கடவை பகுதியில் அமைக்கப்படுகின்ற இறால் பண்ணையால் அக்கிராமத்தில் கரையோர மீன்பிடியை நம்பி வாழும் 100ற்கும் மேற்பட்ட  குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

இதுதொடர்பாக இலுப்பக்கடவை மீனவ மக்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது,

IMG-20210613-WA0016-1.jpg

”நாங்கள் இலுப்பக்கடவை மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாது என்ற படியினால் எங்கள் குடும்பங்களில் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் கரையோர மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றோம்.

இங்கு இறால் பண்ணை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் கரையோர மீன்பிடியை நம்பி வாழும் எங்களுடைய மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.

அதுமட்டுமல்லாது முதலில் நண்டுப் பண்ணை அமைப்பதற்கு அனுமதி கொடுத்து இருந்தார்கள். இதனால்  மழை காலங்களில் அதில்  வரும் கழிவு நீர் வடிந்து கடலுக்கு செல்ல முடியாமல் அருகிலுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிக்கின்றது. இதனால் துர்நாற்றங்களும் நுளம்பு பெருக்கங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேலும் இங்கு அமைக்கப்படும் நண்டு இறால் பண்ணைகள், கடல் கொந்தளிப்பு மழை  வெள்ளப்பெருக்கு காலங்களில் எமது கிராமம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாவதற்கு  மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

IMG-20210613-WA0011-1.jpg

இந்த இறால் பண்ணைகளின் தொடர் நடவடிக்கைகளால் கடலில் கழிவு நீர் கலப்பதுப்பதுடன் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வது தடுக்கப்படுகின்றது.

இந்தக் கொரோனா காலத்தில் ஏழை மீனவர்கள் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், இறால் நண்டு பண்ணை உரிமையாளர்கள் அதிக இலாபங்களை சம்பாதித்து அவர்களுடைய குடும்பங்களோடு வசதியாக வாழ்கின்றனர்.

  IMG-20210613-WA0008-1-1.jpg

இங்கு சிறு கரையோர மீன்பிடி தொழிலாளர்களாக இருக்கும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் இறுதியில் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

இந்த நண்டு  இறால் பண்ணைகள் தடுத்து நிறுத்தப்பட்டால் இந்த கிராமத்தைச் சார்ந்த வறுமைக் கோட்டிற்கு  உட்பட்ட கரையோர மீன்பிடிக் குடும்பங்கள் அன்றாடம் உழைத்து நிம்மதியாக நீண்டகாலம் வாழ்வார்கள்”  என தெரிவிக்கின்றனர்.

 

 

https://www.ilakku.org/?p=52201

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே புத்தளத்தில் அஸ்ரப் இதனை ஆரம்பிச்சு.. அங்கு இறால் பண்ணைகளால் இலாபம் ஈட்டிய கூட்டம்.. பின்னர் அந்த இறால் பண்ணைகளில் நோய் ஆக்கிரமிப்பால்.. அதனைக் கைவிட்டு.. இன்று அவை வெறும் தரிசுகளாக உள்ளன.

இதே நிலையை மன்னாரிலும் இன்னும் வடக்கில் பல பிரதேசங்களிலும் ஏற்படுத்தப் போகிறார்கள்.

சிறந்த முன்னாலோசனை.. பகுப்பாய்வுகள்.. திட்டமிடல்கள்.. வளப் பயன்பாடு.. பராமரிப்பு.. பாதிப்பு இவை குறித்த ஆய்வுகள் இன்றி.. அரசியல் பின்புலத்தோடு.. குறுகிய கால இலாபமீட்டல் என்ற ஒரே நோக்கத்தில் தொடங்கப்படும்.. இந்தப் பண்ணைகளால்.. பாவம் பாவிக்கப்படுவது அப்பாவி உள்ளூர் மக்களே. அதுவும் பாரம்பரிய வழிகளில்.. இயற்கைக்கு அதிக பாதிப்பின்றிய வழிகளில் மீன்பிடித்து வாழும் மக்களே. 

இவர்களுக்காக குரல் எழுப்ப யாரும் இல்லை.!!! இவ் வளங்களை காக்கவும் யாரும் இல்லை. 

Shrimp farming has great potential to diversify and secure income in rural Sri Lanka, but production has significantly declined in recent years due to civil conflicts, some unsustainable practices and devastating outbreaks of disease.

https://www.researchgate.net/figure/Shrimp-farming-zones-of-the-Puttalam-district-Sri-Lanka-Shading-reflects-farm-density_fig1_46289130

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.