Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!
  • This documentary is solely made for an educational purpose only.

 

எல்லா(hello)...

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது படைத்துறை சீருடையில் புலிகளால் குத்தப்பட்ட பொறிகள் பற்றித்தாம்.

  • பொறி - இலச்சினை; விருது என்று அகராதிகள் பொருள் தருகிறது.

→கோண்மாக் குயின்ற சேண் விளங்கு தொடுபொறி (புறநா. 58,);

→வெல்பொறியு நாடுங் கொடுத் தளித்தான் (பு. வெ. 7, 2);

இச்சொல்லை நான் தற்காலத்திற்கு ஏற்ப insignia & ensign என்னும் படைத்துறை பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுவதாக கையாளப்போகிறேன். Insignia & Ensign என்றால் படைத்துறையில் வழங்கப்படும் விருதுகள், வில்லைகள்(badge), துண்டங்கள்(patch) முதலியன ஆகும்.

 


புலிகளால் பயன்படுத்தப்பட்ட படைத்துறைப் பொறிகள் இவைதாம்:

  • படைத்துறைப் பொறிகள் - Military insignia
    • படைத்துறை விருதுகள் - Military Awards
    • தோள் அலகு வில்லை - Shoulder Unit badge
    • தோள் மணை - Shoulder board
    • தொப்பி வில்லை - Cap badge
    • துண்டம் - Patch
    • இலச்சினை - Logo

 

1)படைத்துறை விருதுகள் - Military Awards

விடுதலைப் புலிகளால் 4 ஆம் ஈழப்போரில் மட்டுமே இவ்வாறான படைத்துறை விருதுகள் வழங்கப்பட்டன.

4.jpg

இடமிருந்து வலமாக…..

  • ஒளிஞாயிறு விருது - போரியலின் குறிப்பிட்ட துறையில் தனியாள் மிகையியல்பு(extraordinary) செயல்திறனிற்காக வழங்கப்படும் விருது.
    • சின்னம்: வட்ட வடிவ சூரியனின் நேர்ப்பார்வை
  • மறமாணி விருது - போரியலில் தனியாள் செயல்திறனிற்காகன விருது.
    • சின்னம்: ஈட்டியான்(ஈட்டி தாங்கிய வீரன்) யானையைப் பாய்ந்து குத்த அது பின்னால் சரிந்து வீழ்வது போன்ற தோற்றம்
  • மறவர் விருது - கரும்புலிகளுக்கும், குழுத் தாக்குதல்களில் செயல்திறனிற்காக வீரர்களுக்கும், மூன்று தாக்குதல்களில் பங்குகொண்ட வானோடிகளுக்கும் வழங்கப்படும் விருது.
    • சின்னம்: ஒரு தாய் கீழே அமர்ந்த நிலையில் வீரன் ஒருவனை இடது பக்கமாக திரும்பி ஏக்கதோடு பார்க்க, அவன் கையில் வாளுடன் வீராவேசமாக நிற்கின்றான்(கிட்டத்தட்ட பண்டார வன்னியன் கையில் வாளுடன் வீராவேசமாக நிற்பது போன்ற சிலையின் உருவம் தென்படுகிறது)

அடியில் இருப்பது……

  • நீலப்புலி விருது - 5 வான் தாக்குதல்களில் பங்குகொண்ட வானோடிகளுக்கு வழங்கப்படும் விருது.
    • சின்னம்: புலி இலச்சினைக்கு இரு பக்கமும் இரட்டைப்படை இறகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

 

 


2)தோள் அலகு வில்லை - Shoulder Unit badge

இவை எந்தக் காலத்தில் இருந்து விடுதலைப் புலிகளால் அணியத் தொடங்கப்பட்டது என்பது பற்றி அறிய முடியவில்லை!

ஆனால், எனக்கு ஒரு சிறு குறிப்பு ஒன்று கிடைத்துள்ளது. கீழ்க்கண்ட படிமமானது 1993- 1995  காலகட்டத்தில் எடுக்கப்பட்ட தவிபுவின் இசைக்குழுவினது நிழற்படமாகும் ஆகும். இதில் வரும் போராளிகளின் இடது பக்க புயத்தினை கவனிக்குக. இதில் இவர்கள் சிவப்பு நிற பின்புலத்தில் தவிபுவினது இலச்சினையினைக் கொண்ட வட்ட வடிவ வில்லையினை குத்தியிருக்கின்றனர்.  

இதை வைத்து பார்த்தால், அக்காலத்தில் இதுதான் புலிகளின் வில்லையாக இருந்திருக்கக்கூடுமோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இக்கால கட்டத்தில் தவிபுவினது படையணிகள் பெரும்பாலும் பெயர் சூட்டப்பட்டதாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில வேளைகளில் இந்த வில்லையானது இசைக்குழுவிற்கு மட்டுமானதாக இருந்திருக்கக்கூடும் என்றும் கொள்ளலாம்.

1990 - 1996 வரை விடுதலைப் புலிகள் வில்லைகள் அணிந்து செல்லும் படிமங்கள் கீழுள்ள ஒன்றினைஅத் தவிர வேறேதும் கிடைக்கப்பெறாமையால் அக்கால கட்டத்தில் எத்தகைய வில்லை அணியப்பட்டது என்பது பற்றி என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது. 

ddf.jpg

 

1996- 2009 வரை...

இவற்றை புலிகளின்

→ தரை படையணிகள் இடது புயத்தில் குத்தியிருந்தனர்.

-> சிறுத்தைப்படையினர் இடது புயத்தில் குத்தியிருந்தனர்.

→ வான்புலிகள், கடற்புலிகள் வலது புயத்தில் குத்தியிருந்தனர்.

->  கரும்புலிகள் காலத்திற்கேற்ப இடது வலது என்று மாற்றிக் குத்தியிருந்தனர்

இவ்வில்லைகளில் அந்தந்தப் படையணியின் இலச்சினைகள் பொறிக்கப்பட்டிருக்கும்.

தரை படையணி:

தரைப் படையணிகளின் வில்லைகள் பல்வேறு வடிவங்களில் இருந்தன.

main-qimg-82010fa0f24f3e977a152f7fe57ae8e7.jpg

main-qimg-625d9f8080c0df0aa435e4d70cf54a45.jpg

மாலதி படையணி:

Malathy Regiment - 2002 Oct 10 Tamileelam women uprising day celebration marchpast - ltte images.jpg

சிறுத்தைப்படையினர் :

சிறுத்தைப்படையின் வில்லை(badge) தலைகீழான ஐங்கோண வடிவில் இருந்தது.

main-qimg-f9038c12000fdfb4d202351c0aab9785.png

வான்புலிகள்:

main-qimg-c9ba48b04f86e6931ba4f9fd3df003cf.png

வான்புலிகள் வலது புயத்தில் குத்துவது மட்டுமல்லாமல் மார்பிலும் இரு வில்லைகளைக் குத்தியிருப்பர். அவை ஆவன:

இவர்களின் வானோடிகள் வலது பக்க மார்பில் வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லையினையும் இடது பக்கத்தில் வான்செலவு வில்லையினையும் (aviator badge) குத்தியிருப்பர்.

main-qimg-5d7d9de3c2eb98be70098099592c42a2.png

'வானோடி என்னும் வாசகம் கொண்ட வில்லை (வலது மார்பு)'

main-qimg-74442cecc626f4d3391ad2f3a81711e1.png

'வான்செலவு வில்லை(Aviation badge)-இடது மார்பு'

கரும்புலிகள் (பொது):

இவர்களில் தரைக்கரும்புலிகளின் ஒரு பிரிவினர் 1996 - 2006ஆம் ஆண்டு வரையில் தமது வலது புயத்திலும் மற்றைய பிரிவினர் இடது புயத்திலும் வில்லையினைக் குத்தியிருந்தனர்(படிமங்களை கீழே தொப்பியில் குத்தப்படுவனவற்றில் கண்டுகொள்க).

கடற்கரும்புலிகள் 2000 ஆம் ஆண்டுவரை கையில் ஏதும் குத்தியதில்லை. ஆனால் 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு நிழற்படத்தில் வலது கையில் தமது 'கடற்கரும்புலிகளின் முந்தைய சின்னத்தினைக்' குத்தியிருக்கின்றனர். அதன் பின்னரான காலத்தில் இவர்கள் தமது 'கடற்கரும்புலிகளின் பிந்தைய சின்னத்தினை' வலது கையில் குத்தத் தொடங்கி விட்டனர். அது எந்த ஆண்டு என்று என்னால் அறிய முடியவில்லை!

main-qimg-cd9348b983fee884797b268d5b81b397.jpg

'பிடிக்கப்பட்டது: 2000 ஆண்டு | வலது பக்கத்தில் இருந்து முதல் நான்கு வரிசையிலும் நிற்பது தரைக்கரும்புலிகள். ஏனையவற்றில் உள்ளவர்கள் கடற்கரும்புலிகள்'

main-qimg-d2f0ebaf5ee6cb6ce390146d72bcf954.png

'கடற்கரும்புலிகள் - 2002/2003'

90 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை மறைமுகக் கரும்புலிகள் தத்தம் புயத்தில் எதை குத்தி/பொறித்து அணிந்திருந்தனர் என்று தெரியவில்லை. ஆனால் 2000–2006 வரை தமது இரு புயத்திலும் வில்லையினைக் குத்தியிருந்தனர்.

main-qimg-7df5912f6b6df884616ac8f74aabac9d.png

'மறைமுகக் கரும்புலிகள்: 2005/2006'

இதன் பின்னர், கரும்புலிகளின் அனைத்துப் பிரிவினரும் 2006 ஆம் ஆண்டில் இருந்து இறுதிவரை தமது வலது புயத்தில்தான் வில்லைகளைக் குத்தியிருந்தனர். ஆனல் இடது புயத்திலும் 'ஒட்டுவதற்கான கறுப்பு நிற Valcro' இருந்தது.

main-qimg-3d35bf161f1fd3313651554fd5999a8b.jpg

கடற்புலிகள்:

கறுப்பு நிற வட்ட வடிவ எஃகால் ஆன வில்லையின் நடுவே கடற்புலிகள் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அச்சின்னம் தங்க நிறத்தில் இருந்தது.

main-qimg-a6b267e00e03dbde0fa8a4e4e5bb3895.jpg

→ ஆனால் புலிகளின் ஞாட்பை(Brigadier) தர வியவர்கள்(commander) யாரும் இவ்வாறான தோள் அலகு வில்லைகளை அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


3)தோள் மணை - Shoulder boards

இது பல பேர் அறியாததாகும். தோள் மணைகளை தவிபுவினர் 80களின் முற்பகுதியில் இருந்து 1996 ஆம் ஆண்டுவரை அணிந்திருந்தனர். ஆனால் அவ்வாறு அணிந்து இவர்கள் பொதுவெளியில் தோன்றியது இல்லை. வெறும் வீரச்சாவுப் படங்களில் மட்டுமே காணக் கிடைக்கிறது. அதற்குப் பின்னர் இதையணிந்த எந்தவொரு படங்களும் கிடைக்கப்பெறாமையால், அதன் பின்னர் இவர்கள் இவற்றினை அணியவில்லை என்னும் முடிவிற்கு நான் வருகிறேன்.

இந்த தோள் மணைகள் எனக்கு மிகவும் வியப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் புலிகளின் எந்தவொரு நிகழ்படங்களிலும் இதுபற்றிய செய்திகள் வந்ததுமில்லை; அணிந்து தோன்றியதுமில்லை. ஆனால் அவர்களின் நாளேடுகளினை ஆய்வுக்குட்படுத்தியபோது ஓரிரு நாளேடுகளில் இந்த செய்திகள் இடம்பெற்றிருந்தன. அதன் அடிப்படையில் மேலும் ஆய்வினை நான் தீவிரப்படுத்திய போது பல புதிய செய்திகள் அறிந்துகொண்டேன்.

தோள் மணைகளைப் புலிகளின் அனைத்துப் பிரிவினரின் இருபாலரும் அணிந்திருந்தனர். இதை அவர்கள் அணிந்து ஏதேனும் நிகழ்வுகளின் போது பங்கேற்றனரா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் வீரச்சாவுப் படங்களில் மட்டுமே இவை காணக் கிடைக்கின்றன. எனக்கு நிறப்படங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் வேறொரு இடத்தில் கிடைத்த மற்றொரு விதமான படங்களை ஆழமான ஆய்வுக்குட்படுத்தியபோது,

  1. சிறுத்தைப்படை - Azure நிற தோள்மணை
    1. இதை இவர்களின் உயரதிகாரிகள் மட்டுமே அணிந்திருந்தனர்.
  2. தரைப்புலிகள் - சிவப்புத் தோள்மணை
  3. கடற்புலிகள் - சேர்ப்பன் நீல(Admiral blue) தோள்மணை
  4. கரும்புலிகள் - கறுப்புத் தோள்மணை

(சிவப்பு நிற தோள்மணையினை குட்டிசிறி மோட்டர் படையணியின் அதிகாரிகள் 1997இன் இறுதிகளில் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது )

இனை இக்கால கட்டத்தில் அணிந்திருந்ததாக தெரிந்துகொண்டேன்.

கிடைத்த படங்கள் பின் வருமாறு:

main-qimg-e57d646e967b4de8e3b1a4af8f9b1d1b.png

main-qimg-1778a98dc9816cecddf4a375cb6f4b6e.png

main-qimg-fd31d1b8092ef16aa13354c52f7d3632.png

main-qimg-b042f9075790022ff84f0766dd57cdf2.png

main-qimg-3b4d9a38311ed236ac89b2b1295c2fec.png

main-qimg-2601ea473edddacbf7b824ef22b7e565.png

main-qimg-17f72cebc0d731aedab1e5d67eed06f3.jpg

'சிறுத்தைப்படையின் அதிகாரிகள் மட்டுமே தோள்மணை அணிந்திருக்கின்றனர் என்பதை இப்படத்தின் மூலம் அறிக'

ஆக இப்படங்களில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்…

இத்தோள் மணைகளில் தாரகைகளும்(stars) புலிச்சின்னமும் குத்தப்பட்டிருக்கிறது. அத்தாரகைகளில்,

  • கேணல் தர அதிகாரிகளிற்கு பன்னிருமுக தாரகைகளும்
  • லெப்.கேணல் தர அதிகாரிகளிற்கு ஐம்முக தாரகைகளும்
  • கப்டன் மற்றும் அதற்கு இளநிலை தர அதிகாரிகளிற்கு எண்முக தாரகைகளும்

வழங்கப்பட்டிருக்கின்றன.

main-qimg-8d84489a639f8087d62799851dca9f0c.png

'விளக்கப்படப் புரவு: நன்னிச் சோழன் | அறியில்லை- Unknown'

 

 


4) தொப்பி வில்லை - Cap badge

ஓ.. இது கொஞ்சம் குழப்பமானது. இவ்வில்லைகள் காலத்திற்கேற்ப பல வடிவங்களில் இருந்துள்ளன.

  • புலிகளின் தலைவர்:

→80 களின் தொடக்கத்தில் புலிகளின் தலைவர் சிவப்பு நிற வைர வடிவ துண்டத்தில்(patch) புலிச்சின்னத்தினை வில்லையாகக் கொண்ட வரைகவி(Beret)-இனை அணிந்திருந்தார்.

main-qimg-4575813d5e8a4913091122271d2b772b.png

→ 80களின் பிற்பகுதியில் வெறும் புலிச்சின்னத்தினை வில்லையாகக் கொண்ட வரைகவி(Beret)-இனை அணிந்திருந்தார்.

→ 90 களின் தொடக்கத்தில் இவர் சேர்ப்பன் நீல நிற வரைகவியினை அணிந்திருந்தார். அதில் புலிச் சின்னம் குத்தியிருந்தார்.

→ 97 ஆண்டு இவர் அணிந்திருந்த தொப்பியில் வில்லை ஏதும் இல்லை.

→ 98- 2000ஆம் ஆண்டு வரை இவர் அணிந்திருந்த தொப்பியிலும் வில்லைகள் ஏதும் பொறிக்கப்படவில்லை.

→ 2000 ஆம் ஆண்டில் வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை பொறிக்கப்பட்ட சதுர வடிவ சிவப்பு நிற துண்டம் தைக்கப்பட்டிருந்தது.

→ அதன் பின்னரான காலத்தில் வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை முத்திரையிடப்பட்ட வட்ட வடிவ கறுப்பு நிற துண்டம் தைக்கப்பட்டிருந்தது.

→ ஆனால் 2001 - 2009 வரையான காலப்பகுதியில், அவர் வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை முத்திரையிடப்பட்ட கறுப்பு நிற சதுர வடிவ துண்டம் தைக்கப்பட்ட தொப்பியினையும் அணிந்திருந்தார்.

main-qimg-875a0bb5734a076bcd1b48c152f91ab9.jpg

'இடம் : 80களின் தொடக்கம் | வலம் : 80களின் பிற்பகுதி'

main-qimg-61a3e273fc104a272e326765736c42fc.jpg

'90 களின் தொடக்கத்தில்'

main-qimg-955341b9a28ccb010b2676d0bd308797.jpg

'இடம்: 97 ஆம் ஆண்டு | வலம்:98-2000 ஆம் ஆண்டு வரை'

இக்காலத்தில்(97- 2000) இவர் அணிந்திருந்த தொப்பியானது உலக நாடுகளின் படைத்துறையால் அணியப்படும் சுற்றுக்காவல் தொப்பியின் வடிவத்தினைக் கொண்ருந்தது.

main-qimg-410945885970c9df9a9c5a730f13af3c.jpg

'2000–2009 | படிமத்தை அண்மையாக்கிப்(zoom in) பார்க்கவும்'

— புலி வீரர்:

வீரர்கள் தொப்பியினில் அணிந்திருந்த துண்டங்கள், வில்லைகள், இலச்சினைகள் & சின்னங்கள் படையணிக்கேற்ப மாறுபட்டன.

இங்கு தொடக்க காலத்தில் இருந்து 2006 வரை மட்டுமே எழுதுகிறேன். ஏனெனில் 4-ஆம் ஈழப்போரில்(2006–2009) புலி வீரர் அனைவரும்(கரும்புலி உட்பட) சதுர வடிவ சிவப்பு நிற துண்டத்தில் வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை முத்திரையிடப்பட்ட தொப்பியினை பொதுவாக அணிந்தனர்.

சரி, இனி ஒவ்வொன்று பிரிவும் தத்தம் தொப்பியில் என்னென்ன பொறித்து/குத்தி இருந்தனர் என்று பார்ப்போம்.

  • கடற்கரும்புலிகள்:

90 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை கடற்கரும்புலிகள் தத்தம் வரைகவி(beret)-இல் 'கடற்புலிச் சின்னத்தினையே' வில்லையாக குத்தியிருந்தனர்.

2000 - 2006 வரை ஒரு சில கடற்கரும்புலிகள் 'கறுப்பு நிற சதுர வடிவ துண்டத்தில்(patch) கடற்கரும்புலி இலச்சினை' பொறிக்கப்பட்ட தொப்பியினையும் ஒரு சில கடற்கரும்புலிகள் 'கறுப்பு நிற சதுர வடிவ துண்டத்தில்(patch) கடற்புலி இலச்சினை' பொறிக்கப்பட்ட தொப்பியினையும் அணிந்திருந்தனர்.

main-qimg-b89357dfe2be2c795b619681b9a38de1.jpg

'2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் '

main-qimg-12c66466028068e76b4311f9c13f4cdb.png

'2000 - 2006 வரை'

  • தரைக் கரும்புலிகள்:

90 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை தரைக்கரும்புலிகள் தத்தம் வரைகவி-இல் 'தரைக் கரும்புலிகளிற்கான வில்லையினைக்' குத்தியிருந்தனர். இதில் ஒன்று இறுலோசு முக்கோண(Reuleaux triangle) வடிவிலும் மற்றொன்று தலைகீழான ஐங்கோண வடிவிலும் இருந்தது. 2000 - 2006 வரை இவர்களும் கடற்கரும்புலிகளைப் போன்றே தரைக் கரும்புலிகளிற்கான இலச்சினையினை வில்லையில் முத்திரையிட்டு அதைக் தொப்பியினில் பிணையொட்டி கொண்டு ஒட்டியிருந்தனர்.

main-qimg-768148113709100a782e10af0b9a3e64.jpg

'1996-1998'

 

main-qimg-e5dfa2a36cb0c730119ec9e5c2bc02e2.png

'1998-2001

இதே காலத்தில் ஒரு சில தரைக்கரும்புலிகள் புலிச் சின்னைத்தினை வில்லையாக தங்களின் Baret-இல் பொறித்திருந்தனர்.

main-qimg-7669c29398dd556ac14873d9fb205149.png

main-qimg-fa009b177ad9d1d678d14890574beeec.png

'பெண் தரைக்கரும்புலிகள் | இவர்களின் சுற்றுக்காவல் தொப்பியில்(patrol cap) வில்லையினை ஒட்டுவதற்கு ஏற்ப கறுப்பு நிறத்தில் பிணையொட்டி(velcro) இருப்பதை கவனிக்குக'

 

main-qimg-d20606597d0d376ea04b6afedf275276.png

'தொப்பியில் வில்லை ஒட்டப்பட்டுள்ளதை கவனிக்குக| '2000 - 2006 வரை''

  • மறைமுகக் கரும்புலிகள்:

90 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை மறைமுகக் கரும்புலிகள் தத்தம் தொப்பியினில் எதை குத்தி/பொறித்து அணிந்திருந்தனர் என்று தெரியவில்லை. ஆனால் 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதியில் மறைமுகக் கரும்புலிகள் 'கறுப்பு நிற சதுர வடிவ' வில்லையில 'புலி இலச்சினை' பொறிக்கப்பட்ட தொப்பியினை(cap) அணிந்திருந்தனர்.

main-qimg-7df5912f6b6df884616ac8f74aabac9d

'மறைமுகக் கரும்புலிகள் - பெண்கள் பிரிவு'

  • தரைத் தாக்குதல் படையணிகள்:

இவை தொடக்கக் காலத்தில்(90s) புலிச் சின்னத்தினையே தங்களின் வரைகவிகளில் குத்தியிருந்தனர்.

main-qimg-20d0dc0c0cc291a2afcf5b83c321a24d.png

'யாழில் புலி வீரர் | அவர்தம் வரைகவியையும்(baret) அதிலிருக்கும் புலிச் சின்னத்தினையும் கவனிக்கவும்'

பிறகு கொஞ்சக் காலம் கழிந்ததிலிருந்து 2006 வரை தத்தம் படையணி இலச்சினையையே வில்லையாகக்(badge) கொண்டு அதனையே தத்தம் தொப்பிகளிலும்(cap) பொறித்திருந்தனர்.

photo28.jpg

 

கிட்டு பீரங்கிப்(தெறோச்சி) படையணி:

கிட்டு பீரங்கிப்(தெறோச்சி) படையணியின் வில்லை(badge) தலைகீழான ஐங்கோண வடிவில் இருந்தது.

main-qimg-85f7cd1e388ef7c8baf67da1af1b2dfd.png

 

தெந்தமிழீழ படையணிகள்:

கிழக்குப் படையணிகள் 2004 வரை எப்பொழுதும் வரைகவியினையே அணிந்திருப்பர் . அவற்றில் குத்தப்பட்டிருக்கும் வில்லையானது வட தமிழீழத்தில் தரிபெற்றிருந்த படையணிகளின் வில்லையில் இருந்து வேறுபட்டு வேறொரு வடிவில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இத்தென் தமிழீழ படையணிகளின் யாவற்றின் வில்லைகளும் ஒரே மாதிரியான வடிவிலே எப்பொழுதும் இருந்ததில்லை. படையணிக்குப் படையணி வேறுபடுகிறது. அவை பல்வேறு வடிவங்களில் இருந்தன. ஆனால் புயவில்லையும் தொப்பி வில்லையும் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்தது. .

main-qimg-f4308698d05890d3f3e53b4f7b9c0f8d.jpg

main-qimg-4d8eec30e453720965f0d5297390d277.jpg

'இடது புறத்தில் நிற்பவரது தொப்பி வில்லையின் வடிவத்தினை கவனிக்குக கவனிக்குக'

 

  • வான்புலிகள்:

இவர்கள் 2005 ஆண்டிற்குப் பின்னரான காலத்தில்தான் அதிகாரப்பூர்வமாக வெளிக்காட்டப்பட்டதால் இவர்களின் தொப்பிகளில்(cap) சதுர வடிவ சிவப்பு நிற வில்லையில் வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.

main-qimg-f416eb45314081b3d6189544e7d5e574.jpg

 

  • கடற்புலிகள்:

தரைத்தாக்குதல் போராளிகள் & கடற்கலவர்:-

→ இவர்கள் 2001 வரை தம் வரைகவி அணிந்து அதில் புலி இலச்சினையை குத்தியிருந்தனர்.

main-qimg-1778a98dc9816cecddf4a375cb6f4b6e.png

 

2001 பின்னர், இறுதிவரை, வழக்கமான தம் சுற்றுக்காவல் தொப்பியில்(Patrol Cap) கடற்புலிகளின் சின்னத்தை வில்லையாக வட்ட வடிவ துண்டத்தில் பொறித்திருந்தனர்.

main-qimg-bd60a165c220083ddb974710e9d3b1cc.jpg

'கனவகை ஆய்தங்கள் அல்லது பாரச்சவம் எனப்படும் Hevay weapons கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபடும் கடற்புலிளின் தரைத்தாக்குதல் போராளிகள் | இவர்கள் கடற்புலிளின் தரைத் தாக்குதல் சீருடை அணிந்துள்ளனர் '

  • கடற்கலவர்:-

→ கடற்கலவர் 2001-2006 வரை தம் கடற்கலவர் சதுரக்கவியில் (Sailors square rig) கடற்புலிகளின் சின்னத்தை வில்லையாகப் பொறித்திருந்தனர். அது வட்ட வடிவ துண்டத்தில், கடற்கலவர் சதுரக்கவியில் வாசகம் பொறிக்கும் கறுப்பு பட்டையின் மேல் விளிம்பில் கொஞ்சம் படக்கூடிய மாதிரி குத்தப்பட்டிருந்தது.

main-qimg-883dd32baa2c864c94f89ccc3e030c1f.jpg

'இவர்கள் அணிந்திருப்பது கடற்கலவர் சீருடை ஆகும்'

2005 மாவீரர் நாள் அணிநடையில்(march past) கடற்புலிகளின் கடற்கலவர் சதுரக்கவியில் கடற்புலிகளின் சின்னத்திற்கு மாற்றாக புலி இலச்சினை குத்தப்பட்டிருந்தது:-

main-qimg-8f6e975b972f3dcf0b738af6afe5190f.jpg

'படகொன்றில் அமர்ந்திருக்கும் ஆண் கலவர்கள் . இவரின் கடற்கலவர் சதுரக்கவியினை உற்று கவனிக்குக இவர்கள் அணிந்திருப்பது கடற்கலவர் சீருடை ஆகும்'

முன்னர் , ஒருநாள் நடைபெற்ற கலவர் படைத்தகையின்(parade) போது, அங்கிருந்த கடற்கலவர் அதிகாரியின் சதுரக்கவியில் வேறுபாடான ஓர் வில்லை பொறிக்கப்பட்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. அது புலி இலச்சினை பொறிக்கப்பட்டதாக இருந்தது. அந்த அதிகாரியின் கடற்கலவர் சதுரக்கவியில் சுண்டு(bill) இருந்தது. அதே நேரம் கலவர்களின் கடற்கலவர் சதுரக்கவி பட்டையின் முன்பக்கத்தில் இருந்த தட்டில் தத்தம் கலத்தின் பெயரினைப் பொறித்திருந்தனர்.

main-qimg-fc8dc619b6019fa276ff825ac9bb2d06.jpg

main-qimg-a1d534e2f61c8a04be3ff58ffbf87205.jpg

 

  • நான்காம் ஈழப்போரில் தைக்கப்பட்டிருந்த தொப்பி வில்லை(cap badge)

நான்காம் ஈழப்போரில்(2006 - 2009-05) தமிழீழ நாற்படையின் இருபாலருக்கும் இவ்வில்லைதான் அவர்தம் தொப்பிகளில் தைக்கப்பட்டிருந்தது.

main-qimg-2950e0ab66ade17639ea97467774d1de.jpg

'நான் மேற்சுட்டிய வில்லைதான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் கட்டளையாளர் லெப்.கேணல் வீரமைந்தன் அவர்களின் தொப்பியில் உள்ள வில்லையாகும்'

  • சிறுத்தைப்படை:

விலக்காக இவர்களின் முப்பிரிவினரும்(கடற்சிறுத்தை, காட்டுச்சிறுத்தை, தரைச்சிறுத்தை) இறுதிவரை தலைகீழ் ஐங்கோண வடிவ வில்லையினை குத்தியிருந்தனர். அவ்வில்லையின் முக்கோணமானது கூராக இல்லாமல் வளைந்து இருந்தது.

main-qimg-f9038c12000fdfb4d202351c0aab9785.png

  • ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணி

இவர்களின் தொப்பியானது புலிகளின் ஏனைய படைகளின் தொப்பிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் அதில் இருந்த வில்லையும் வேறுபட்டிருந்தது. ஆம், அவர்கள் அணிந்திருந்தது செண்டாட்ட(baseball) தொப்பியாகும். அதில் சிறுத்தையொன்று இடது புறம் நோக்கி பாய்வது போல வில்லையொன்று தைக்கப்பட்டிருக்கும். நன்கு விதப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய தற்குறிப்புப்படத்தில் உள்ள பாயும் புலி போன்றதுதான் அங்குள்ளது ஆகும்.

main-qimg-23486a72c0a407b626dd1380a2f181ac.jpg

'கடற்புலிகளின் இள பேரரையர்(Lt. Col.) மங்களேஸ் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்றிவைக்க அதற்கு ஒஸ்கார் சிறப்புத் துணைப்படை அணியினர் கொடிவணக்கம் செலுத்துகின்றனர்'

→ ஆனால் புலிகளின் அதியரையர்(Brigadier) தர கட்டளையாளர்கள் அனைவரும் புலிகளின் பொது இலச்சினையான புலி இலச்சினையினையையே தத்தம் தொப்பியில் இருந்த வில்லையில் பொறித்திருந்தனர்.

 


இவைதான் ஒட்டுமொத்தமாக தவிபுவால் குத்தப்பட்ட/பொறிக்கப்பட்ட படைத்துறைப் பொறிகளாகும். கட்டுரையினை இறுதிவரை வாசித்தமைக்கு மிக்க நன்றி. _/\_


 

உசாத்துணை:

  • சொந்தமாக எழுதியது
  • செ.சொ.பே.மு.

படிமப்புரவு

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ விடுதலைப்புலிகளால் சீருடையில் குத்தப்பட்ட படைத்துறைப் பொறிகள் (Military Insignia & Ensign) - ஆவணம்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.