Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை

 

 

தாயக மேம்பாடு
வருமானம் தரும் தொழிற்சாலைகளை மீள உருவாக்க வேண்டும் Development
எமது தாயகமானது, உள்ளூர்  உற்பத்தியிலும், பழமரக் கன்றுகள் உற்பத்தியிலும் மிகவும் தன்னிறைவு உடைய பகுதியாக நேற்றுக் காணப்பட்டது. பழ மரங்களில் இருந்து கிடைக்கும் எல்லா வகையான கனிகளும் பழ ரசங்களாக, நெல்லி ரசமாகப்  பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்பட்டன. 1990இல் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் ஊடாக பழரசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, குளிர் பானங்கள் காட்சிப் படுத்தப்பட்டன.

இலங்கையிலே மிகவும் சிறப்பு வாய்ந்த பழரசங்கள் யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. ரேஸ்ரி நிறுவனம், சுரபி நிறுவனம், வல்வெட்டி சோடா போன்ற பல உற்பத்திகள் சந்தைப் படுத்தப்பட்டன.  ஆனால் இன்று எல்லாம் கைவிடப்பட்ட நிலையில் கொக்கோகோலா,  ஃபன்டா போன்ற வெளிநாட்டு குளிர் பானங்கள் சந்தையில் காணப்படுகின்றன.

தொழிற்சாலைஎமது தாயகத்தில் உள்ள சில திராட்சை, Fashion Fruits போன்ற பழங்களைப் பயன்படுத்தி, நல்ல போசாக்கான பழச் சாற்றை உற்பத்தி செய்து, விற்பனை செய்யக் கூடிய தொழிற்சாலைகளை, முதலீடு உள்ளவர்கள் உரிய அனுமதியைப் பெற்றுத் தொழிற் சாலைகளை ஆரம்பித்தால், நமது மக்களுக்கு மிக அதிகமான வருமானம் கிடைக்கும்.  பொருளாதாரம் மிகவும் வலுவடையும்.

இன்று எல்லா வகையான கைத் தொழில் ஆலைகளும் பெரும்பான்மை சமுதாயத்தால் முதலீடு செய்யப்பட்டு ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப் பட்டாலும், எமது வளமும், திறமையும் சுரண்டப் படுகிறது.

மக்களுக்கான உண்மையான விலை கிடைக்காது  உள்ளது. எனவே வசதியுடைய மக்கள் தொழிற் சாலைகளை உருவாக்கவும் நியாயமான விலை மக்களுக்கு கிடைக்கவும் முன்வர வேண்டும் .

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் சாமானிய தொழிற் சாலைகள் யாவும் பெரும்பான்மை மக்களால் மட்டுமே மேற்கொள்ளப் படுகின்றது. எமது வளத்தில்  25 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளங்கள் யாவும் பயன்படுத்தப் படாமல் உள்ளது.

தாயகத்தின் கைத்தொழில் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தன்னிறைவான நிலையை உருவாக்கி சிறு தொழில் திட்டங்களை மேற்கொள்ள புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நிதி வசதி உடைய மக்கள் முன்வர வேண்டும். எல்லா வகையான அனுமதிகளை பெற்று பால் உட்பட்ட அனைத்து உற்பத்திகளையும் சந்தைப்படுத்த எமது மக்கள் முன்வர வேண்டும்.

இன்று உற்பத்தி செய்பவர்களுக்கு உரிய வருமானம் கிடைக்காமல், கொள்வனவு செய்து கைத்தொழில் பொருளாக மாற்றுபவர்கள் அதிக லாபத்தை தரும் நிலையே காணப் படுகின்றது.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், எமது மக்களும் கூட்டுறவு அடிப்படையில் பங்குதாரர்களாக மாற வேண்டும். பழங்கள் மரக்கறி வகைகள் மீன் போன்றவை சந்தைப் படுத்தி பதனிட்டு மேற்கொண்டால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்கும். இந்த நிலைமையை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும்.

சர்வதேச நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி எமது மக்களின் பொருளாதாரம் பல மடங்கு வளர்ச்சி அடைய துறைசார் நிபுணர்களும், நிதி வளம் உடைய மக்களும் முன்வந்து எல்லாத் துறைகளிலும் பொருளாதார வளர்ச்சி அடையக் கூடிய பல கைத் தொழில் திட்டங்களை மேற் கொள்ள முன்வர வேண்டும்.

Vanni techபொருளாதாரத் தடை இருந்த போது Vanni tech, TR Tec போன்ற நிறுவனங்கள் ஊடாக பல ஆயிரம் மாணவர்கள் தொழில் நுட்ப,  கணினி பயிற்சிகள் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமைகள் அன்று  காணப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் போன்றோர் நீண்ட கால திட்டங்களை இனம் கண்டு பல திட்டங்களை வகுத்து செயல்பட வழி காட்டியாக இருந்தனர்.  இவற்றைக் கட்டம் கட்டமாக செயல் படுத்த வேண்டும்.

இதனை செயல் வடிவில் கொண்டு வர நிதி மூலமே தடையாக இருந்தது.  எனவே எம் மக்களுக்காக  நிதி வளம் கொண்டவர்கள் உலக துறைசார் நிபுணர்கள் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான கைத் தொழில் திட்டங்களை முழுமையாக பயன்படுத்த முன்வர வேண்டும். ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவான நிலைமையை கொண்டு வர வேண்டும்.

உலகிலேயே நிலவளம், வனவளம், மீன்வளம், நீர்வளம், கைத் தொழில் வளம் போன்ற எமது  வளங்கள் அதிகம் பயன் படுத்தாமல் இருக்கும் இடங்களில் எமது தாயகம் முதன்மை இடத்தில் உள்ளது. இவ்வளங்களை முழுமையாக பயன் படுத்தினால் எமது மக்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

இன்று உற்பத்திப் பொருட்கள் விலை குறைவு. ஆனால் பொருட்களை சந்தைப் படுத்தும் போது விலை அதிகம். எனவே நாம் கைத் தொழில் திட்டங்களை நேரடியாக மேற் கொண்டால், இலாபம் எமது மக்களுக்கு நேரடியாகப் போய்ச் சேரும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை

எனவே வசதி படைத்தோர் முதலீட்டாளர்கள் சர்வதேச உள்ளூர் அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக திட்டங்களுக்கான உரிய அனுமதியை பெற்று நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும்.

எமது கடலில் கிடைக்கும் மீன்கள் வெளி நாடுகளில் ரின் மீன்களாகவும், பால் வளமானது   பால்மா பவுடர்களாகவும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி மேற் கொள்ளப் படுகின்றது.  எனவே எமது வளங்களை நாமே கைத் தொழில் திட்டமாக மாற்ற முன்வர வேண்டும்.

காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை

இரும்பை எடுத்துக் கொண்டால் அது ஆணியாக மாற்றப்படும் போது 10 மடங்கு விலை போகின்றது. இவ்வாறு ஒவ்வொரு பொருட்களும் சந்தைப்படுத்தும் போது எமது மக்களுக்கான வருமானம் 10 மடங்கு அதிகரிக்கச் செய்யும். 1950ஆம் ஆண்டு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என பத்துக்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உருவாக்கப்பட்டது.  அதன் பின் எந்த ஆலைகளும் உருவாக்கப் படவில்லை .

உலகிலேயே நிலவளம், வனவளம், மீன்வளம், நீர்வளம், கைத் தொழில் வளம் போன்ற எமது  வளங்கள் அதிகம் பயன் படுத்தாமல் இருக்கும் இடங்களில் எமது தாயகம் முதன்மை இடத்தில் உள்ளது. இவ்வளங்களை முழுமையாக பயன் படுத்தினால் எமது மக்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

எனவே எமது மக்கள் சொந்தக் காலில் வாழக் கூடிய தொழிற் சாலைகளை உருவாக்குவோம். 25இற்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய நிலையில் அதற்கான வளங்கள் எமது தாயகத்தில் காணப்படுகின்றன.  இன்று அந்த பயன்படுத்தப் படாமல் வீணாகின்றன.

எனவே நாம் சிந்திப்போம் எமது தாயக வளத்தை முழுமையாக பயன் படுத்துவோம். இதன் மூலம் ஒரு தன்னிறைவான வாழ்வை நம் மக்களுக்கு வழங்க முன்வாருங்கள் எமது மக்களே!

 

https://www.ilakku.org/homelanddevelopment-yesterday-today-tomorrow/

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணையும் பாழ்படுத்தாமல் மக்களுக்கும் பயனுள்ளதாக தொழிற்சாலைகள் அமைய வேண்டும்.

இத்தகைய தாயக மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஒரு அமைப்பு தாயகத்தில் இருந்து உருவாக / அமைய வேண்டும் (புலம்பெயர் தேசங்களில் இருந்து அல்ல). அது புலம்பெயர் நாடுகளில் இருந்து உரிய முறையில் பெறப்படும் நிதியை கொண்டு தாயகத்தில் இவ்வாறான செயல்திட்டங்களைக் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் சொல்லித்தான் புலம்ப வேண்டி இருக்கின்றது. 2009 இன் அங்கு உருவான / செயல்படுகின்ற அரசியல் கட்சிகள் எதுவும் இவ்வாறான விடயங்களைப் பற்றி சிந்திப்பதற்கு நேரத்தைக் கூட ஒதுக்க விரும்புவது இல்லை. வடக்கு மாகாண சபை இயங்கிக் கொண்டு இருந்த காலத்தில் மாகாண சபை அரசு ஒரு நிதியம் அமைக்க முயன்று அது சரிவாராமல் விட்டபின் மாற்று வழியில் சிந்திக்க கூட முனையவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

On 9/7/2021 at 22:19, நிழலி said:

இத்தகைய தாயக மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஒரு அமைப்பு தாயகத்தில் இருந்து உருவாக / அமைய வேண்டும் (புலம்பெயர் தேசங்களில் இருந்து அல்ல). அது புலம்பெயர் நாடுகளில் இருந்து உரிய முறையில் பெறப்படும் நிதியை கொண்டு தாயகத்தில் இவ்வாறான செயல்திட்டங்களைக் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் சொல்லித்தான் புலம்ப வேண்டி இருக்கின்றது

உண்மை மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைத்தான் கதைக்கவேண்டியுள்ளது. 

சில காலத்திற்கு(இரண்டு வருடங்களிற்கு முன்பு?) வடக்கில் உள்ள தொண்டு நிறுவனங்களை அழைத்து ஒன்றினைந்து செயற்படுவதற்கான வாயப்புகளை ஆராய கூட்டம் கூட்டப்பட்டு முடிவு ஒன்றும் எடுக்கப்படவில்லை என படித்த நினைவுள்ளது.. ஏதோவொரு விடயத்தில் பிழைத்துக்கொண்டுவிடுகிறது.. 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை

 
நீர் வளத்தைப் பாதுகாப்போம் தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை
 

– தாய்நாட்டின் நீர் வளத்தைப் பாதுகாப்போம்   

ஒரு மனிதன் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு மட்டுமல்லாது ஒரு நாடு வளமாக இருக்க வேண்டுமாயின் மிகவும் அவசியமானது நீர் வளமாகும். இன்று உள்ளது போல் அடுத்த நூற்றாண்டு காணப்பட மாட்டாது.  நீர் தேவைக்காக உலகமே ஏங்க வேண்டிய சூழல் கட்டாயம் நாளை ஏற்படலாம். இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டுமாயின், இன்றே இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தாயகத்தின் நீர் வளத்தைப் பாதுகாப்போம் கிளிநொச்சி மாவட்டம்

இரணைமடுக் குளம்

இன்று எமது தாயகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் பிரதானமாக உள்ள கிளிநொச்சி மாவட்டம் நீர் வளம் தொடர்பாக சில முக்கியமான விடயங்களை இங்கு விபரமாக எடுத்துக் கூற உள்ளேன். கிளிநொச்சி மாவட்டமானது 4 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளையும், 95 கிராம சேவையாளர்கள் பிரிவுகளையும், 354 கிராமங்களையும் கொண்ட ஒரு மாவட்டமாகும். இரணைமடுக் குளம் உட்பட்ட நான்கு பிரதான குளங்களையும்,  5 நடுத்தர குளங்களையும், 394 சிறிய நீர்ப்பாசனக் குளங்களையும் உடைய ஒரு விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட ஒரு பிரதேசமாக உள்ளது

 

கிளிநொச்சி மாவட்டம் 26247 ஹெக்டேர் பெரும் போகத்தையும், 1742 ஹெக்டேர்  சிறுபோகத்தையும் பயிரிடும் ஓர் பிரதேசமாகும். ஒரு லட்சத்து 28 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் விளைவைத் தரக்கூடிய ஒரு பிரதேசமாகும்.  இத்துடன் 10 வகையான பழ மரக்கன்றுகள் ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்பட்டு 11 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இன்று இவை முழுமையாகப் பயன்படுத்தப்படாமலும், பல குளங்கள் முழுமையாக புனரமைப்புச்  செய்யப்படாமலும் உள்ளன.

தாயகத்தின் நீர் வளத்தைப் பாதுகாப்போம்

 

2009இல் யுத்தத்தால் பாதிப்படைந்த கிளிநொச்சி மாவட்டம் கல்மடு குளம் முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு குளம் முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே தேவைப் பட்டது.  இன்று அரசு, சர்வதேச நிதி நிறுவனங்கள் பல மில்லியன் ரூபாய் நிதியை செலவு செய்ய முன்வந்த போதும், மூன்று வருடங்கள் தேவையாக உள்ளது.  இந்த நிலை மாற வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டம், பொருளாதாரத் தடைகள் அமுலில் இருந்தபோது, உடையார்கட்டு குளம் உடைப்பு எடுத்தபோதும், இரணைமடுக்குளம் உடைப்பு எடுத்த சமயங்களிலும் தேச நிர்மானிகளின் முயற்சியால் 6 மாதத்தில் புனரமைப்புச் செய்யப்பட்டது.  கல்மடு குளம் புனரமைப்பு செய்ய மூன்று வருடங்கள் தேவைப்பட்டதால் ஆயிரத்து 25 குடும்பங்கள் 3 ஆயிரத்து 450 ஏக்கரில் 3 வருடங்கள் பயிர் செய்ய முடியாமல் தவிக்க விடப்பட்டனர்.

இன்று கிளிநொச்சி மாவட்டம் ஒரு வருடத்தில் பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியும் குறைவான குளங்களே புனரமைப்பு செய்யப்படுகின்றன. இன்றைய நிலையில் 354 கிராமங்களில் உள்ள 60இற்கும் மேற்பட்ட குளங்கள் புனரமைப்புச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

தாயகத்தின் நீர் வளத்தைப் பாதுகாப்போம்

 

கிளிநொச்சி மாவட்டம் யாழ் தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் பன்முகப் படுத்தப்பட்ட வேலைத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே 50% நிதியை ஒதுக்கீடு செய்கிறார்கள். அதில் நான்கு குளங்கள், வாய்க்கால் வரப்பு விவசாய திட்டங்களுக்கு 10 சதவீத நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்கிறார்கள். எனவே சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்கள் ஒரு வருடத்தில் குறைந்தது 1000 மில்லியன் ரூபாய் நிதியை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும்.

மக்கள் அமைப்பு ஊடாக தமது பங்களிப்பை மேற்கொள்ள முன்  வாருங்கள் எங்கள் உறவுகளே….!

இன்றும் மக்களின் தேவை குறைந்த நிலப்பரப்பில் அதிஉயர் விளைச்சலைப் பெறும் போசாக்கற்ற உணவை உற்பத்தி செய்யாது, அதிக நிலப்பரப்பில் போசாக்கான உணவு உற்பத்தியை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். இயற்கைப் பசளைகளையும், இயற்கை கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி, தரமான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இதற்கு குளங்கள், வாய்க்கால்கள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். உள்ளூர் உற்பத்தி அதிகரிப்பதுடன் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தேவைக்கு குளங்களில் நீர் வற்றாது இருந்தால் ஒவ்வொரு வீடுகளிலும் நிலத்தடி நீர் வற்றாது இருக்கும்.

தாயகத்தின் நீர் வளத்தைப் பாதுகாப்போம்எனவே சூழல் மாசுபடாமல் இருக்க கொடை யாளிகள் எல்லோரும் குளங்கள் புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எமது தாயகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் குளங்கள் ஆற்றுப் படுகைகள் காணப் படுகின்றது. கிளிநொச்சி மாவட்டம் மட்டும் 7 ஆற்றுப் படுகைகள் ஊடாகவே பெரிய குளங்களுக்கான நீர் வந்து அடைகின்றது. எனவே குளங்கள் மட்டும் புனரமைப்புச்  செய்யப் படாமல், ஆற்றுப் படுகைகளும் தூர்வாரப் பட வேண்டும்.

நேற்று குளம் புனரமைப்புக்கு 90 சதவீதமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்று 10%  கூட கொடுக்கப்படவில்லை. இது நாளை எமது தாயக மேம்பாட்டையே கேள்விக்குறியாக்கி விடும்.

குளங்களில் 12 மாதங்களும் தண்ணீர் இருந்தால் மட்டுமே கால்நடைகள் மட்டுமல்லாது மனித உயிர்களும் வாழ முடியும். குளத்தில் நீர் இல்லாது போனால், கிணற்றில் நீர் இல்லாமல் போய்விடும். விவசாயம் செய்ய முடியாது. எனவே 60% குளம் புனரமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இன்று மொத்த நிதியில் 10 சதவீதம் கூட குளம் புனரமைப்புக்கு ஒதுக்கப் படவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். நேற்று குளம் புனரமைப்புக்கு 90 சதவீதமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்று 10%  கூட கொடுக்கப் படவில்லை.

இது நாளை எமது தாயக மேம்பாட்டையே கேள்விக்குறியாக்கி விடும். எனவே நாம் எல்லோரும் சிந்திப்போம். செயல்படுவோம். எமது தாயகம் தன்னிறைவு அடைய வேண்டுமாயின், மனித வாழ்க்கைக்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு குளம் புனரமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம். குளத்துக்கு ஒதுக்கிய நிதியில் எந்தவிதமான ஊழல் பாகுபாடு காட்டாது அதனை 100%  சரியாக பயன்படுத்த எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

 

சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகள் அனைவரும் மிகவும் முக்கிய கவனம் எடுத்து, தமது தாயகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் உள்ள சகல குளங்கள், ஆற்றுப்படுகைகள் புனரமைப்பு மற்றும் விவசாய திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வது போன்ற திட்டங்களுக்கு அனைத்து  முயற்சிகளிலும் ஈடுபட்டு, தமது தாயகம் தன்னிறைவான சூழல் பாதுகாப்பான வளமான நாடாக மாற எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம் .பத்து லட்சம் ரூபாய் நிதியில் ஒரு சிறு குளம் புனரமைப்பு செய்ய முடியும். எனவே மக்கள் அமைப்பு ஊடாக தமது பங்களிப்பை மேற்கொள்ள முன்  வாருங்கள் எங்கள் உறவுகளே….!

https://www.ilakku.org/development-yesterday-today-tomorrow/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.