Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!


 

எல்லா(hello)...

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் உருவோட்டப்பட்ட Wave Rider வகுப்புக் கலங்கள் பற்றியே. இவ்வாணத்தில், இவை பற்றி நானறிந்த செய்திகளை எழுதி வைத்துள்ளேன்.

Tamil Tigers' Sea Tigers Gun Boats in a naval parade during the peace time.jpg

'2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 2 விதமான மொத்தம் 4 படகுகள் காணப்படுகின்றன.'

 இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் சுடுகலப் படகு (GB) என்னும் வகையினில் சேர்க்கப்பட்டன.

புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை. ஆகையாலத்தான் இவை யூதரின் டோறாக்களைப் (Super Dvora Mk-III. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் இதன் பெரும வேகம் 48.3 நோட்ஸ் ஆகும்) போல அதிவேகமாக கடலில் ஓடின. ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன.

கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC, Garmin & Ray Marine ஆகிய கதுவீகளை (RADAR) பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.)

இந்த வகுப்புப் படகுகளின் வகுப்புப்பெயரான "Wave Rider" என்பது இக்கலங்களின் மீகாமன் அறையின் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களை (கலப்பெயர்) சூட்டியிருந்தனர். அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய கடற்புலி போராளிகளின் பெயர்களாகும். இப்பெயர்கள் யாவும் அக்கலங்களின் கலக்கூட்டின் நடு அல்லது முன்பகுதியில் எழுதப்பட்டிருந்தன. அவ்வாறு சூட்டப்பட்ட பெயர்களில் என்னால் இயன்றளவை தேடிச் சேகரித்துள்ளேன். அவற்றை கடற்புலிகளால் பாவிக்கப்பட்ட வன் நெடுவிடர் மேவு (Hard-chine Planing) வகை கலகூட்டின் ஐந்து துணைவகைகளின் அடிப்படையில் பிரித்து கொடுத்துள்ளேன். மொத்தன் 27 கடற்கலங்களின் பெயர்கள் உள்ளன,

  • வன் நெடுவிடர் மேவுக் கலக்கூடு (Hard-Chine Planing Hull):-

    • உட்குழிந்த ஆழ்-V கலக்கூடு (Flared Deep V Hull):

      • பரந்தாமன், மாதவி, இசையரசி, உதயச்செல்வி, தேன்மொழி, மருதன், ஆதிமான்(ஒஸ்கார்), நெடுஞ்செழியன், இளநிலா, கடலரசன், றோசா Rosa

    • புறங்குவிந்த ஆழ் V கலக்கூடு (Flam Deep V Hull):

      • இந்துமதி, சுகி, அருணா, கேசவன், பாரதிதாசன், மதன்

    • கலப்பின கலக்கூடு (Hybrid Hull):

      • எரிமலை, வேங்கை, போர்க், வெண்ணிலா, பிரசாந்த், ராஜ்மோகன், சேரன், மயூரன்

    • உட்குழிந்த ஆழ் V கலக்கூடு (Flared Deep V Hull):

      • (கலப்பெயர் அறியில்லை)

    • புறங்குவிந்த மாற்றியமைக்கப்பட்ட V கலக்கூடு (Flam Modified V Hull):

      • வர்மன்

இந்த ஒவ்வொரு கலக்கூடுகளும் கூர் வடிவ அணியம் மற்றும் கரண்டி வடிவ அணியம் என்று இரு வகை அணியங்களைக் கொண்டிருந்தன.

  • உட்குழிந்த ஆழ் V கலக்கூடு (Flared Deep V Hull):

    • கூர் அணியப் படகு (Pointed bow boats)

  • புறங்குவிந்த ஆழ் V கலக்கூடு (Flam Deep V Hull):

    • கூர் அணியப் படகு (Pointed bow boats)

  • கலப்பின கலக்கூடு (Hybrid Hull):

    • கரண்டி அணியப் படகு (Spoon bow boats)

  • உட்குழிந்த ஆழ் V கலக்கூடு (Flared V Hull):

    • கரண்டி அணியப் படகு (Spoon bow boats)

  • புறங்குவிந்த மாற்றியமைக்கப்பட்ட V கலக்கூடு (Flam Modified V Hull):

    • கூர் அணியப் படகு (Pointed bow boats)

இவ்வகைக் கலங்கள் பெரியளவிலான தாக்குதல் கலங்கள் ஆகும். இவை யூதர் படகேறி விரையும் சிறீலங்காக் கடற்படையோடு பொருத கடற்புலிகளுக்கு பெரிதும் உற்ற துணையாய் இருந்தன. 

மேலும் கலத்தினைச் சுற்றிவர பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து முதன்மைச் சுடுகலன் வரையிலான இரும்புக் கம்பி வேலியின் உயரம் 3.4 அடி ஆகும். அதன் பிறகு பாதியாகக் குறைந்து 1.7 அடியாகக் குறைந்து சிறிது தூரம் வரை இருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்றாவது விதமான வேவ் ரைடரின் பக்கவோரத்தின் கம்பிவேலி அதன் அணியத்தின் நுனி வரை நீண்டுள்ளது.

இக்கலங்களில் கடற்புலிகளின் கொடியும் தமிழீழத் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும். இக்கலங்களின் உள்ளேயே, இவற்றிற்குத் தேவையான அனைத்து கூடுதல் கணைகளும்(ammunition) இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். சில படகுகளின் கலக்கூட்டில் கடற்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் அணியத்தின் ஆக முன்பகுதியின் மேற்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகினைக் கட்டி வைக்க(நங்கூரமிட) உதவுகிறது. அத்துடன் கலக்கூட்டின் ஆக முன்பகுதியின்(அணியத்தின் கீழ்ப்புறம்) கீழ்புறத்தில் ஒரு கட்டை உள்ளது. அது படகுகாவியில் இருந்து இப்படகினை கீழே இழுத்து இறக்க உதவுகிறது. இக்கலங்களின் கடையாரின் இரு பக்கவோரங்களின் தொடக்கத்தில்(கடையாரில் இருந்து) இரு கட்டைகள்(இடப்பக்க-1; வலப்பக்கம்-1) உள்ளன.

இக்கலங்களில் சிலவற்றின் மீகாமன் அறையின் வெளிப்புறத்தில் வளைவாக இரு கம்பிகள் சமாந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும். இக்கம்பிகள் பக்கவாட்டுச் சாளரத்திற்குச் சமாந்தராமக இருக்கும். இவற்றின் மேல் தொலைதொடர்பு வட்டு, கதுவீ போன்றன பொருத்தப்பட்டிக்கும். தேவைப்படின் கொடிக்கம்பங்களும் இதில் கட்டப்பட்டிருக்கும். (பட விளக்கத்திற்கு கரண்டி அணிய விதம் மூன்றில் உள்ள வெண்ணிலா என்னும் படகினைக் காண்க)

அடுத்து இவற்றின் கலக்குழு (crew) பற்றிப் பார்ப்போம்.

  • குழுவினர்: 12–15

    • முதன்மைச் சுடுகலனின் முதன்மைச் சூட்டாளர் - 1

      • கடையாரில் இன்னொரு கனவகை சுடுகலன் பூட்டப்பட்டிருப்பின் அதற்கும் ஒரு முதன்மைச் சூட்டாளர் அமர்த்தப்பட்டிருப்பார்.

    • முதன்மைச் சுடுகலனின் உதவியாளர்மார் - 2/3

    • மின்னோடி பொறியியலாளர் & உதவியாளர் - 1+1

    • பக்கவாட்டில் உள்ள 4-6 சுடுகலன்களிற்குமான சூட்டாளர்மார் - 4-6

    • தொலைத்தொடர்பாளர் (படகு கட்டளை அதிகாரி) - 1

    • உந்துகணை சூட்டாளர் - 1

    • மீகாமன் - 1

இனி ஒவ்வொரு வகுப்பாக விரிவாகக் காண்போம்:-

  • குறிப்பு: நான் இங்கே கொடுத்திருக்கும் பல்வேறு படைக்கலன்களின்(munition) பெயர்கள் யாவும் கடற்புலிகளின் பல வேவ் ரைடர் வகைப் படகுகளின் படங்களில் நான் கண்டவற்றை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன். பட ஆதாரம் தேவைப்படுவோர் "கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images" என்ற என்னால் ஆக்கப்பட்ட படிம கப்பகத்தினுள் இருந்து எடுத்துக்கொள்ளவும். 

 


  • கூர் அணியம் கொண்ட சண்டைப்படகு -

இது கூர் அணியம் கொண்ட கலமாகும். இவ்விதக் கடற்கலங்கள் உட்குழிந்த ஆழ் V-வடிவ கலக்கூட்டினை உடையவை ஆகும். இவற்றில் ஒரு தெறுவேயம்[cannon (முதன்மை)] உட்பட மொத்தம் 6 - 7 சுடுகலன்கள் (சிலநேரங்களில் உதயச்செல்வி(8) தவிர) இருந்தன. இவற்றில் 3 விதம் உண்டு.

main-qimg-ee3f293531fcb2d70f6ebb66e34c6b27.jpg

'கலக்கூடு(hull)'

 

photo47.jpg

'மூன்று விதமான இவ்வகை சண்டைப் படகுகள் (வலது படிமம்) | இவற்றில் வலது படிமத்தில் உள்ள படகுகளில் இடது பக்கத்தில் இருக்கும் படகின் இடது பக்கவாட்டுப் பார்வையானது, இடது பக்கத்தில் தனியாக உள்ள படிமத்தில் காட்டப்பட்டுள்ளது'

  • நீளம் = 55'

  • அகலம் = 18'

  • வேகம் : 35–40 kts

  • தொலைத்தொடர்பு = EMCON, VHF

  • கதுவீ = வட்டு வடிவம்

  • கலவர் = 14/15

  • வெளியிணைப்பு மின்னோடி= 4/5 x 250 HP

  • புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது.

  • இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.

  • ஆய்தம் =

    • முதன்மை: 1x {ZPU-2/ ZU-23 (ஒற்றை & இரட்டை)/ 20mm GIMAT / 25mm ஓர்லிகோன்}

    • பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ M2/ W85/ T-85 ], 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG

    • கையடக்கம்(portable) -01 x RPG/Carl Gustav, AKS துமுக்கிகள்(rifle)

விதம் - 1

இது கல்லப்பட்டுள்ளது. அதாவது இதன் தளப்பகுதிக்கு மேலே ஒரு காப்பு அடுக்கு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அதன் தாழ்வானது, கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதனின் முழங்கால் வரையிலான உயரம் உடைய அளவிற்கு தளத்தின் மேற்பரப்பிலிருந்து இருக்கிறது. இந்த காப்பு அடுக்கானது முழு அணியத்திற்கும் பக்கவோரத்திற்கும்(gunwale) போடப்பட்டுள்ளது. கடைக்காலில் அதன் பக்கவோரத்திற்கு மட்டும் போடப்பட்டுள்ளது.. அணியத்தின் முன்பகுதியில், பிறை வடிவ, ஓர் சராசரி மனிதனின்(ஈழத் தமிழன்) இடுப்பளவு உயர தடுப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது அந்த காப்பு அடுக்கைக் காட்டிலும் உயரமானது ஆகும். இது முதன்மைத் தெறுவேயத்தை நோக்கி சுடப்படும் எதிரியின் சன்னத்தில் இருந்து ஓரளவிற்கு காப்பளிக்கிறது.

main-qimg-ed95d07f420bb4758bf2996a25258239.jpg

இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் அணியக் கட்டை மற்றும் சுடுகலத் தண்டு எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. இது போன்ற படகுகளிற்கு கட்டையானது நடுவில் இல்லாமல் அவற்றின் அணியத்தின் இருபுறத்திலும் இருக்கிறது. மேலும் இவற்றில் வலது பக்கவாட்டிற்கு 2 சுடுகலனும், இடது பக்கவாட்டிற்கு மூன்றும் சுடுகலனும் (எல்லாவற்றையும் போல் முதன்மைச் சுடுகலனாய் ஒன்றும்) என மொத்தம் 6 சுடுகலன்கள் உள்ளன.

photo28.jpg

main-qimg-f19ef11c7106066d93c89c72dcf12eb9.jpg

'தளப்பகுதிக்கு காப்பு அடுக்கு போடப்பட்டுள்ளதையும் அணியத்தில் தடுப்பு கட்டமைப்பு(structure) உள்ளதையும் நோக்குக'

விதம் - 2:

இதுவும் விதம்-1 போன்றே இருந்தாலும் காப்பு அடுக்கு அடிப்படையில் மட்டும் வேறுபடுகிறது. இது கல்லப்படவில்லை. இதற்கு, காப்பு அடுக்கு முன்னர் போடப்பட்டு பேந்து கழற்றப்பட்டுள்ளது. அதற்கான அடையாளங்களும் இதன் தளப்பகுதில் தெரிகிறது. மாறாக தளத்தின் மேற்பரப்பில் இருந்து அரையடி உயரத்திற்கு பக்காவோரத்தில் (gunwale) உள்ள கம்பியின் அடியில் தகரம் போடப்பட்டுள்ளது. இதற்கு காப்பு அடுக்கு போடப்படாதலால் முன்பக்க தடுப்பும் இல்லை. இதன் நீளம் விதம் ஒன்றினது போலத்தான் உள்ளது. மேலும் அணியத்திற்கு வரும் பக்கவோர கம்பியின் உயரம் 0.8 அடியாக உள்ளது.

main-qimg-df1d5449b56c1581f4f78f6dc15e7f82.jpg

main-qimg-2f97e70db1337a50a204e6ce5b8a655b.jpg

'இவ்விதக் கலங்களின் முன்னிருந்து நோக்கும் காட்சி'

இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் சுடுகலத் தண்டு அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பெயர் 'உதயச்செல்வி' ஆகும். இது நீல வரி அணிந்த பெண் போராளிகளைக் கொண்டிருந்தது. இதில் 8 சுடுகலன்கள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் முன்னிற்கும்(ZPU-2) பின்னிற்கும் (ஓர்லிகோன் 20மி.மீ) தலா ஒரு முதன்மைத் தானியங்கி தெறுவேயம்(Autocannon) பூட்டப்பட்டிருந்தது. வலது பக்க நடுவில் மட்டும் ஒற்றைக் குழல் கைக்குண்டு செலுத்தி(40 mm) இருந்தது. இடது பக்க நடுவில் 7.62mm GPMG ஓர் பூட்டப்பட்டிருந்தது. ஏனைய நான்கு மூலைக்கும் இரண்டு 12.5மிமீ உம் இரண்டு PK GPMG உம் பூட்டப்பட்டிருந்தது. மேலும் இதன் கடைக்காலின் பக்கவோரத்திற்கு(gunwale) இரும்புக் கம்பிவேலி போடப்படவில்லை.

main-qimg-6fca6a11e6e63efce47837b261a4daa9.jpg

இவை சில நேரத்தில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகளையும் கொண்டிருக்கும். இவை வேகத் தாக்குதலிற்கு பூட்டப்பட்டு கொண்டு செல்லப்படும்.

main-qimg-1c3cfc23302d35a946414b051a1e5cea.png

'மாதவியில் ஐந்து பொறிகள்(250Hp) பூட்டப்பட்டிருப்பதைக் காண்க'

விதம் - 3:

  • கலப்பெயர்: றோசா Rosa 

இதனுடைய கலப்பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனது கலக்கூட்டில் மேற்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.

இதுவும் விதம்-2 போன்றே இருந்தாலும் பொறிகள் ( 3 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட கலம்) அடிப்படையில் வேறுபடுகிறது. இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது.

1)

main-qimg-ffa324762213a0967810271dc830dea7.jpg

 

  • கூர் அணியம் கொண்ட சண்டைப்படகு

இது கூர் அணியம் கொண்ட கலமாகும். இவ்விதக் கடற்கலங்கள் புறங்குவிந்த ஆழ் V-வடிவ கலக்கூட்டினை உடையவை ஆகும். இவற்றில் ஒரு தெறுவேயம்[cannon (முதன்மை)] உட்பட மொத்தம் 5/6 சுடுகலன்கள் இருந்தன. இவற்றில் 1 விதம் உண்டு. உட்குழிந்தவற்றை விட நீளம் குறைந்தவையாகும்.

  1. அகலம் = ??

  2. கலவர் = 12/13

  3. வெளியிணைப்பு மின்னோடி = 3/4 x 250/200 HP

  4. வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்)

  5. தொலைத்தொடர்பு = EMCON, VHF

  6. கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம்

  7. புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது.

  8. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.

  9. ஆய்தம் =

    • முதன்மை: 1x {ZPU-2/ 20mm GIMAT/ 2M-3 25மி.மீ (ஒற்றைக்குழல்)/ 25mm ஓர்லிகோன்}

    • பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ M2/W85/ T-85], 2/3 x 7.62 Pk/FN MAG

    • கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle)

large.waveriderclassIndumathiboatofseati

large.Dy-OqlIV4AAtwD0.jpg.c79b4bcee10105

 

  • கரண்டி அணிய வகை சண்டைப்படகு

இவ்வடிவ கலக்கூடுகள் மிகவும் புதியவகையாக இருந்தன. இவை கரண்டி வடிவ அணியத்தினையும் கலப்பின கலக்கூடுகளை(Hybrid hull) உடையவை.

  • நீளம் = தெரியவில்லை

    1. அகலம் = 18' 

    2. கலவர் = 14/15

    3. வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP

    4. வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்)

    5. தொலைத்தொடர்பு = EMCON, VHF

    6. கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம்

    7. புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது.

    8. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.

    9. ஆய்தம் =

      • முதன்மை: 1x {ZPU-2/ 20mm GIMAT/ 2M-3 25மி.மீ (ஒற்றைக்குழல்)/ 25mm ஓர்லிகோன்}

      • பக்கவாடு: 2/3 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ M2/W85/ T-85], 1xதானியங்கி கைக்குண்டு செலுத்தி, 2/3 x 7.62 Pk/FN MAG

      • கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle)

விதம்-1:

இவை கல்லப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 6 சுடுகலத் தண்டுகள் இருந்தன. அதற்கு அதிக உருமறைப்பு செய்யும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் தளத்திற்கும் காப்பு அடுக்கு போடப்பட்டிருக்கிறது.

இவற்றில் ஒன்றே ஒன்றினைத் தவிர ஏனை அனைத்துக் கலங்களிற்கும் மீகாமன் அறை ஒரே மாதிரி இருந்தது.

1)

SeaTigersMirajorThalrajtypeGunBoatsinTamilEelamSea.jpg

விதம்-2:

இவை கல்லப்பட்டவில்லை. ஆனால் இவற்றின் தளத்திற்கு காப்பு போடப்படவேயில்லை. மாறாக பக்கவோரங்கள் 0.8 அடிக்கு தகரம் கொண்டு அடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உருமறைப்பு செய்யும் வகையில் வரி வண்ணமும் லேபெர்மஸ்டெர் வண்ணும் பூசப்பட்டுள்ளது . இது, விதம் ஒன்றில் இருந்து சாடையாக நீளம் குறைவானது ஆகும். 4 ஆம் ஈழப்போரில் தான் இது கட்டப்பட்டிருக்கிறது. இவை வெளியிணைப்பு மின்னோடி கொண்டவையாகும்.

இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன.

main-qimg-ca919681d6f9b5acf1a941d265351320.png

 

விதம்-3:

இது, விதம் 2 போன்றே தோற்றத்தில் இருந்தாலும் மின்னோடி அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் நீளம் அதே தான். இவை கல்லப்பட்டவில்லை. இவற்றில் ஒரு தெறுவேயம்(முதன்மை) உட்பட மொத்தம் 7 சுடுகலங்கள் இருந்தன. இது போன்ற கலத்தினை புலிகளின் எந்தவொரு பாடல் நிகழ்படங்களிலும் காண முடியவில்லை. இப்படகின் பெயர் வெண்ணிலா என்பதாகும். இதே போன்ற மற்றொரு கலத்தின் பெயர் பிரசாந் என்பதாகும்.

இவை 3 உள்ளிணைப்பு மின்னோடி கொண்டவையாகும். இதன் பொறிக்கு(engine) கடைக்காலில் தனியாக ஓர் பெட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதனினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் கரையோரத்திற்கும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. ஆனால் பெட்டி தளத்தில் இருந்து சிறிது உயரமாக இருப்பதால் கம்பிவேலியின் உயரம் குறைவாக உள்ளது. மேலும் அந்த கம்பிவேலியின் உயரம் ஏற்கனவே கடைக்காலிற்கு முன்னால் போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில் இருந்து காலடியாவது குறைவாக இருக்கிறது.

  • உள்ளிணைப்பு மின்னோடி = 3 x 250 HP

main-qimg-2819cc7b910e0a2a9571294be9dc2210.jpg

main-qimg-e066cf304176dd68e08574b0ddf568d9.png

main-qimg-a02d2af3db1f1d998a0012271e87723c.jpg

'உள்ளிணைப்பு மின்னோடி'

 

  • கரண்டி அணிய உட்குழிந்த ஆழ் V-வடிவ கலக்கூடு வகை சண்டைப்படகு

இவை கரண்டி வடிவ அணியத்தினையும் உட்குழிந்த ஆழ் V-வடிவ கலக்கூடுகளை உடையவை.

  • நீளம் = தெரியவில்லை

    1. அகலம் = 18' 

    2. கலவர் = 12/13

    3. வெளியிணைப்பு மின்னோடி = 4/5 x 250 HP

    4. வேகம் : 35-40 kts(உச்ச வேகத்தில்)

    5. தொலைத்தொடர்பு = EMCON, VHF

    6. கதுவீ = நீள சதுர வடிவம், வட்டு வடிவம்

    7. புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது.

    8. இவை EOD அமைப்புகளையும் கொண்டிருந்தன.

    9. ஆய்தம் =

      • முதன்மை: 1x {2M-3 25மி.மீ  இரட்டைக்குழல் / 25mm ஓர்லிகோன்}

      • கடையார்: 1x ZPU-2

      • பக்கவாடு: 1/2 x 12.7mm [DSHK(பெரும்பாலும் வகை-54)/ M2] 2/3 x 7.62 Pk/FN MAG

      • கையடக்கம் (portable) - 01 x RPG, துமுக்கிகள்(rifle)

 அணியத்தின் ஆக முன்பகுதியில் (கீழ்க்கண்ட படத்தில் கம்பிவேலி குத்தென்று விழுமிடத்திற்கு முன்னால்) இதைக் கட்டி வைப்பதற்கான கட்டை உள்ளது.

main-qimg-1316e957cbb29f30bb31fc5200b9d4cc.png

'அணிய கலக்கூடு'

large.1121930168_KumuthanclassboatofSeaT

'அணியம்'

மேலும் இதன் மீகாமன் அறையின் முகப்புத் தோற்றமும் சால்டாக்கைப் (Shaldaq - 2) போன்று உள்ளது (அதாவது சாளரங்களில் நடுவில் ஒன்று நேராகவும், அதன் இரு பக்கங்களிலும் இரு சாளரங்கள் சற்று சத்தாராகவும், மூலையும் பக்காவடும் தொடங்கும் இடத்தில் முக்கோண வடிவில் இரு பக்கத்திற்கும் ஒவ்வொன்றென இரண்டும் போடப்பட்டுள்ளது). மீகாமன் அறை முற்றிலும் வேறுபாடாக உள்ளது. சிறு மறைப்போடு பெரும்பகுதி திறந்த வெளியாகவே உள்ளது . மீகாமன் அறைக்கு மேலே வட்டுவடிவ கதுவீ பொருத்தப்பட்டுள்ளது.

large.1117883537_DvoraTypekumudhanclassb

'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்'

Kumuthan class boat of Sea Tigers, Tamileelam 3.jpg

'மீகாமன் அறையும் சுற்றுப்புறமும்'

Kumuthan class boat of Sea Tigers.jpg

'அணியச் சுடுகலத் தொகுதி'

Kumuthan class boat of Sea Tigers, Tamileelam 2.jpg

'அணியச் சுடுகலன்கள்'

உள்ளிணைப்பு மின்னோடிப் பெட்டியுனுள் கடையாரிலிருந்து ஏறுவதற்கு பின்பக்கமாக நிரந்தர ஏணி பொருத்தப்பட்டிருக்கிறது.

Stearn of the Kumuthan class boat of Sea Tigers, Tamileelam 2.jpg

'புலிகளின் டோறாவின் கடையால்'

இதற்கு வெளியிணைப்பு மின்னோடி(OBM) இல்லை. பெட்டியின் பின்புறத்தின் அடியில் 6 சிறு துவாரங்கள் உள்ளன. இதன் கடையாலின் அடிப்புறத்தை உத்துப் பார்க்கும் போது இதற்கு 3/4 உள்ளிணைப்பு மின்னோடி(IBM) பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது .

2) புலிகளிடம் இருந்த இரண்டாவது கடற்கலன்:

இது இவ்வகுப்பைச் சேர்ந்த இரண்டாவது படகா அல்லது ஒரே படகின் அணியச் சுடுகலன் மட்டும் மாற்றப்பட்டதாலான படகா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. இதில் முதன்மைச் சுடுகலனாக வகை - 61 ஐச் சேர்ந்த 25 மி.மீ சுடுகலன் பொருத்தப்பட்டுள்ளது. இச்சுடுகலனானது ஓ.அ- 3 இன் மூன்றாங் கட்டமான ஆனையிறவுச் சமர்க்களத்தில் கைப்பற்றப்பட்டதாகும். இதன் கடையாலில் சிபியு 2 பூட்டப்பட்டுள்ளது. கனவகைச் சுடுகலனுக்குப் பின்னால், பக்கவாட்டில், மேலும் இரு சுடுகலன்கள் பூட்டப்பட்டுள்ளன.

இக்கடற்கலத்தில் வேறேதும் சுடுகலன் பூட்டப் பட்டிருக்கிறதா என்பதை என்னால் அறியமுடியவில்லை!

main-qimg-42a3f7ec126e49a5951f9c04a406c055.jpg

 


  • வேவ் ரைடர் வகுப்புக் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்:

வேவ் ரைடர்கள் மொத்தம் மூன்று வரை மீகாமன் அறை வடிவத்தினைக் கொண்டிருந்தன. 

  • அனைத்து கூர் அணிய வடிவங்களும் ஒரே மாதிரியான அறையினைக் கொண்டிருந்தன (இவற்றின் முகப்பில் இரு சாளரங்கள் இருந்தன). இதனை நீங்கள் மேலே காணலாம், கூர் அணிய வடிவில்.

  • கரண்டி அணிய வடிவங்களானவை கூர் அணிய வடிவங்களின் அறையோடு இன்னும் இரு (ஒன்றினது முகப்புச் சாளரம் பிரிபடாமல் ஒரே சாளராமகவும் வேறு இரண்டில் இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவமும் காணப்பட்டன) வடிவங்களையும் கொண்டிருந்தன.

main-qimg-cbae27b7c71ceb0c25379306fea4ff38.png

'வேவ் ரைடர் கலனின் மீகாமன் அறைத் தோற்றம்'

main-qimg-0f02afc408e748d071187895a77169d9.png

'மீகாமன் அறையினுள் இரு பெண் மீகாமர் கலத்தினை செலுத்தும் காட்சி'

large.helmsmanroomofwaveriderclassboat.p

'மீகாமன் அறையினுள் ஒரு மீகாமனும் படகு கட்டளை அதிகாரியும் (வோக்கியுடன்) நிற்கின்றனர்'

மேற்கண்ட படத்தில் மீகாமன் அறையின் சாளரத்தை நோக்குக. இம்மீகாமன் அறையின் கூரையில் ஒரு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இது பிடித்துக்கொண்டு நிற்பதற்காகும். முகப்புச் சாளரத்தின் மேலே முச்சக்கரவண்டிகளுக்கு இருப்பது போன்று நீர் உள்ளே வராமல் தடுப்பதற்கான திரை (தரப்பாள் போன்ற பொருண்மத்தால் ஆனது) மடித்துக் கட்டப்பட்டுள்ளது.

Sea Tigers' indigenously build Water Jet class boat - copy of UK's Water Jet class boat

'இங்கிலாந்தின் வோட்டர் ஜெட்டின் மீகாமன் அறையை ஒத்த அறை வடிவம்'

 


  • சுடுகலத் தண்டு:

வேவ் ரைடர் வகுப்புக் கலங்களில் இருக்கும் இச்சுடுகலத் தண்டுகள் யாவும் வளி மூலம் இயங்குபவை ஆகும். இவற்றை எத்திசையிலும் எப்படியும் சுழற்ற இயலும். ஆனால் கீழ்நோக்கி குறிவைக்க முடியாது. இவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

  • முதன்மைத் தண்டு - முதன்மைச் சுடுகலன்கள்/ தெறுவேயங்களிற்கு(cannon) மட்டும்

  • நடுத்தரத் தண்டு - 12.7 மிமீ சுடுகலன்களிற்கும் கைக்குண்டு செலுத்திகளிற்கும்

  • மெல்லிய தண்டு - 7.62 மி.மீ சுடுகலன்களிற்கு மட்டும்

main-qimg-d04e5a5494914b42ef0c44c747a702e0.png

' குடைக்கப்படாத கூர் அணியக் கலனின் உட்புறத் தோற்றம்'

main-qimg-8ec940d276fb7245c425500f3d5af4de.png

'வேவ் ரைடர் வகைப் படகுகளில் பூட்டப்பட்டிருக்கும் தானியங்கி கைக்குண்டு செலுத்தி (GL)'

இவற்றுள் முதன்மைச் சுடுகலனானது(ஒருசிலவற்றிற்கு - ZPU-23 ) அதன் தண்டில் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மிண்டு கொடுக்கப்பட்டிருக்கும். மிண்டானது அதன் தண்டோடு கீழ்கண்டவாறாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்தான் சுடுகலன் வைக்கப்பட்டிருக்கும்.

main-qimg-353707bc6aee41d1727d1755169faec3.jpg

இந்தச் சுடுகலங்களை இயக்கும் விற்பனர்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு குறுகிய உயரம் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏறி நின்றபடியே எதிரிமீது இவர்கள் சுடுவார்கள். அது ஒரு அரையடி/ முக்கால் அடி உயரம் உடையதாகும்.

main-qimg-6549ba4a829f1517a64f77a240c2dc9f.jpg

 

  • பின்னுதைப்பற்ற சுடுகலன்(Recoilles gun):-

இவ்வகைகலங்களில் (வேவ் ரைடர்) பின்னுதைப்பற்ற சுடுகலனும்(106 mm) பொருத்தப்பட்டிருக்கிறது.

main-qimg-36fbe0580b38c913f705eba62fbb3912.jpg

'பொருத்தப்பட்டிருப்பதை நோக்கவும். படம் அவ்வளவாக தெளிவாக இல்லையாதலால் இதன் வகைப்பெயர் என்னவென்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை'

மற்றுமொன்று குறிப்பிடப்பட வேண்டியது யாதெனில், கடற்புலிகளின் முதன்மைச் சுடுகலன்களிற்கு மேலேயும் வட்டு வடிவ தொலைத் தொடர்புக் கருவி & சுடுகலனின் வலது / இடது பக்கத்தில் கதுவீ திரையும்(RADAR display) பொருத்தப்பட்டிருக்கும்.

main-qimg-20dc2d975417eda55f2732123a85a859.png

'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே தொலைத் தொடர்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக| இப்படகு கட்டப்பட்ட ஆண்டு : 1999 இன் பிற்பகுதி.'

main-qimg-fb24dbbb0ce5d725fabd45b7f32d2fb4.jpg

'முதன்மைச் சுடுகலனிற்கு மேலே கதுவீ திரை பொருத்தப்பட்டுள்ளதை நோக்குக'

 


  • நங்கூரம் -

இவ்வகைப் படகுகளின் அணியத்தில் தான் இவற்றின் நங்கூரம் இருக்கும். (அணியத்தின் மேற்புறத்தில் உள்ள கட்டை). இதன் மூலம் இது கடல்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும்

main-qimg-e0121c33c5309bfd0c87533f4b6b99de.jpg

'மாதவி என்னும் கலப்பெயர் கொண்ட வகுப்புக் கலம். இதன் நங்கூரத்திற்கு அருகில் தெரியும் அந்த சுவர் போன்ற கட்டமைப்புத்தான், சன்னத் தடுப்பு கட்டமைப்பாகும்'

 


புறங்குவிந்த மாற்றியமைக்கப்பட்ட V-கலக்கூடு:

  • கலப் பெயர்: வர்மன்

  • உயரம்: 6' - 6.3'

இது தான் கடற்புலிகளால் நான்காம் ஈழப்போரில் புதிதாக வடிவமைக்கப்பட்ட வேவ்ரைடர் ஆகும். முன்னையவற்றைக்காட்டிலும் வேகமாக ஓடக்கூடியது. இதன் கலக்கூட்டின் வெளிப்புறத்திலும் திவலைத்திட்டு (spray-rail) அமையப்பெற்றிருந்தது.

main-qimg-a0127611a645f7cabbde37ad74bc3e0d.png

main-qimg-c7f43b9fbab75a888604ffbfb93f6985.png

'கலக்கூடு(hull)'

main-qimg-79c86019a347cfd4f37713041c3c7101.png

'அணியம்'

main-qimg-2fd3fbc52bac4a9505c69651553427ee.png

' அணியத்தின் தளம் கல்லப்பட்டுள்ளதைக் காண்க'

இதற்கு அணியத் தளத்தின் உட்பகுதியானது இரண்டு அடிக்கு தோண்டப்பட்டுள்ளது. ஆனால் மீகாமன் அறையின் முன்பகுதித் தொடக்கத்தோடு இக்கட்டமைப்பு முற்றுப்பெறுகிறது. கடையார் அனைத்தும் தட்டையாக உள்ளது. அதற்கு தகரம் கூட அடிக்கப்படவில்லை. அணியத்தில் இருந்து கடைக்காலினை நோக்கும்போது கிட்டத்தட்ட ஒரு படி போல இருக்கிறது, இதன் தளம். அதாவது அணியப் பகுதியிலிருந்து ஏறி கடையாரிற்குச் செல்வது போல!

main-qimg-6b023df727b43828569fbd66fa9fe04b.png

' 'Battle field' என்று எழுதப்பட்டுள்ளதிற்கு இடது புறத்திலே அந்த படி அமைப்பு முற்றுப்பெறுகிறதைக் காண்க'

main-qimg-e51780d10e4a31c185e30a0d6a1ef0b1.png

'பக்கவாட்டுத் தளம் கல்லப்படாததைக் காண்க'

இதன் பின்பகுதியில் ஐந்து வெளியிணைப்புப் பொறிகள்(OBM) பொருத்துவதற்கு ஏற்ப இட வசதி உண்டு. ஆனால் எத்தனை பொருத்தினார்களோ நானறியேன். மேலும் கலத்தினைச் சுற்றிவர வேவ் ரைடருக்கு போடுவது போல பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. கடையாரில் இருந்து மீகாமன் அறை வரையிலான இரும்புக் கம்பிவேலியின் உயரம் 3.4 அடி ஆகும்.

மேலும் எங்குமே சுடுகலன் பூட்டுவதற்கான தண்டுகளைக் காண முடியவில்லை. பின்வாங்கும்போது கழற்றிச் சென்றிருப்பார்களோ என்னவோ. ஆனால் கழற்றிச் சென்றிருந்தாலும் அதற்கான தடையம் இருந்திருக்கும், இதில் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை! அணியம் மொட்டையாக இருந்தது. கடையாரில் சரக்கறைகள் இருந்தன(எண்ணிக்கைக்கு - என்னால் சரியாக எண்ண முடியவில்லை!).

main-qimg-50dfcedc61fd9d4392c1e3c1436ce974.png

'இதுதான் மீகாமன் அறை'

main-qimg-1de761b68fa130ae99be2ce66ea9eec3.png

'கடையாரும் வெளியிணைப்புப் பொறிக்கான(4/5) இட வசதியும் இங்கு காட்டப்பட்டுள்ளது | கடையாரில் சரக்கறைகள் தெரிகிறதைக் காணவும் '

இந்தச் செய்தியாளரை வைத்து அதன் நீள அகலத்தை எடை போட்டுக்கொள்ளவும்!

 


நான் குறிப்பிட்டிருப்பவை பிழையாக இருக்கும் பக்கத்தில் சரியானவற்றை எழுதிட எனக்கு உதவிடுங்கள். பெயர் மட்டுமே எனக்கு வேண்டும். வேறெதுவும் வேண்டும். வரலாற்றில் தமிழரிடமிருந்த கடற்கலங்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டன. இந்தத்தடவையாவது நாம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. 


 

உசாத்துணை:

படிமப்புரவு

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் 'மிராஜ் (Wave Rider) மற்றும் தல்ராஜ்' வகைப் படகுகள் - ஆவணம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இங்கு நான் இணைத்துள்ள படத்தில் உள்ள கடற்கலனானது சுண்டிக்குளம் பேப்பாரைப்பிட்டியில் சிறீலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டதாகும்.

இது பார்ப்பதற்கு கூர் அணியம் கொண்ட வேவ் ரைடர் வகைக் கலன் போன்று உள்ளது. ஆனால் கலக்கூட்டு(hull) உயரமும் குறைவாக உள்ளதாகத் தென்படுகிறது. கலக்கூட்டில் அந்த V வடிவம் இல்லை. மேலும் கலக்கூட்டில் வெடிப்புத் தென்படுகிறது. அந்த வெடிப்பை நோக்கும் போது இது மரத்தால் செய்யப்பட்ட கலம் போன்று தெரிகிறது. கலத்தின் பக்கவோரத்தில்(gunwale) இரும்புக் கம்பி வேலியும் இல்லை. மீகாமன் அறையின் தோற்றமும் புலிகளின் சண்டைக் கலங்களினுடையதாக தோன்றவில்லை. மீகாமன் அறையும் பக்கவோரத்தோடு பொருந்து அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது. அதாவது கூகர் வகைப் படகுகளின் மீகாமன் அறை போன்று. மீகாமன் அறைக்கு மேலே வெளிப்புற வானலை வாங்கி(வெள்ளை நிற வட்டு வடிவம்) போன்று ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே வானலை வாங்கியா என்பது தெரியவில்லை.

முடிவாக எனது துணிபு என்னவெனில், இது சிலவேளை சிங்கள வண்டுகளை ஏமாற்ற போலியாக செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

main-qimg-8a816bd5f634a3d45d5a70cb39fd6854.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இப்படிமத்தில் கடற்புலிகளின் கலமொன்றின் மேற்றளத்தைக் காண்க

 

 

(ஆயுதவழிப் போர் முடிந்த பின் கைப்பற்றப்பட்ட எமது Wave Rider வகை சண்டைப்படகு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது)

 

 

Shutterstock_7838681a.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Wave Rider எவ்வளவு பெருமாண்டமானது என்பதை நோக்குக

 

 

போராளிகளையும் படகுகாவியின் மேலுள்ள படகினையும் ஒப்புநோக்குக.

 

piramaandam.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Wave Rider வகைப் படகு

 

 

இந்த Wave Rider வகைப் படகின் மீகாமன் அறையின் பக்கவாட்டு சன்னலுக்குக் கீழே, 'Wave Rider' என எழுதப்பட்டுள்ளதை நோக்குக. இந்த 'Wave Rider' என்ற பெயர் தான் கடற்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டு சிங்களவரால் உற்பத்தி செய்யப்படும் (2008< ) படகு வகுப்பான 'Wave Rider' என்பதற்கு சூட்டப்பட்ட பெயராகும்.

 

 

sea-tigers-gun.webp

'படிமப்புரவு: Aruchuna.com'

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் வேவ் ரைடர் (Wave Rider) மற்றும் வோட்டர் ஜெட் (Water Jet) வகுப்புப் படகுகள் - ஆவணம்
  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் வேவ் ரைடர்(Wave Rider) மற்றும் தல்ராஜ்' வகைப் படகுகள் - ஆவணம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரண்டி அணிய பிளானிங் கலக்கூட்டு வேவ் ரைடர்கள்

 

(இவ்விதச் சண்டைவண்டிகளின் கலப்பெயர் எதுவும் அறியில்லை)

 

 

large.2024577821_KumuthanclassboatofSeaT

 

Kumuthan class boat of Sea Tigers, Tamileelam 4.jpg

 

Kumuthan class boat of Sea Tigers, Tamileelam 1.jpg

 

Kumuthan class boat of Sea Tigers, Tamileelam.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் வேவ் ரைடர் (Wave Rider) வகுப்புப் படகுகள் - ஆவணம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புதிய படகுகளின் பெயர்கள் மற்றும் படங்களுடன் சில தவறான தகவலகள் நீக்கப்பட்டு ஆவணம் புதுப்பிக்கப்பட்டுள்ளது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.