Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

இதுவொரு பழைய செய்தி... ஆனால் இதனுள் விடுதலைப் புலிகளிடம் 9கே11 மல்யுக்தா என்ற கம்பி வழிகாட்டிய தகரி எதிர்ப்பு ஏவுகணை பற்றிய செய்தி உள்ளதால் மீள் வெளியீடு செய்கிறேன்.

 

Malyutka.JPG

 

http://www.tamilnaatham.com/articles/2006/...ct/arush/28.htm

 

 

--------------------------------------

சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு?

-அருஸ் (வேல்ஸ்)-

 

 

கடந்த 11.10.06 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நிகழ்ந்த சமர் மகிந்தவின் ஆறு மாதகால இராணுவ மேலாதிக்க கனவையும் அதன் அறுவடையாக அடையவிருந்த அரசியல் நலன்களையும் சுக்குநு}றாக்கியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

திங்கள் காலையில் போரிடும் வாளின் கூர்முனை என வர்ணிக்கப்படும் சிங்களப்படையின் 53 ஆவது படைப்பிரிவும், 55 ஆவது படைப்பிரிவும் மேஜர் ஜெனரல் சந்திரகிரியின் வழிநடத்தலில் களமிறக்கப்பட்டது.

 

இப்படை நடவடிக்கையை 53 ஆவது படைப்பிரிவு கட்டளைத்தளபதி பிரிகேடியர் சமந்த சூரியபண்டாரா ஒருங்கிணைக்க 53 ஆவது படையணியின் வான்வளி தாக்குதல் படைப்பிரிவின் (யுசை ஆழடிடைந டீசபையனந) களமுனைத்தளபதி லெப். கேணல் சவீந்திரா 53 ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார். முகமாலையுடாக நேர்வாட்டிலும், கிளாலியுடாக பக்க வாட்டிலுமூடாக முன்னேறி பளையை கைப்பற்றுவது தான் ஆரம்பத்திட்டம். நாகர்கோவில் முன்னேற்றம் புலிகளை ஏமாற்றும் தந்திரம்.

 

மகிந்தரின் பொதுத்தேர்தல் வியுூகங்களுக்காக ஆனையிறவை சிங்களப்படையினர் கைப்பற்றுவார்கள் என்பது புலிகளுக்கு தெரியும். தேசியத்தலைவரின் வழிநடத்தலில் புலிகளின் வடமுனை கட்டளைத்தளபதி கேணல் தீபன் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை ஓருங்கிணைத்தார். எதிர்த்தாக்குதல் உத்தி மிக நுட்பமானது.

 

அதாவது படையினர் புலிகளின் முன்னனி அரண்களையும் தாண்டி குறிப்பட்ட தூரம் உள்ளே வந்ததும். 'ட" வடிவில் முற்றுகையிடப்பட்டனர். திறந்த இரு பகுதிகளிலும் ஒருபகுதி கண்ணிவெடி வயலால் மறைமுகமாக சூழப்பட்டடும் பின்பகுதி செறிவான எறிகணைகளால் மூடப்பட்டும் ஒரு பெட்டி வடிவில் படையினர் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டார்கள்.

 

அகோரத் தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாத படையினர் கண்ணிவெடி வயலினு}டாக தலைதெறிக்க ஓடியுள்ளனர். நிலையெடுக்க படுத்த படையினர் எழும்ப முடியாதபடி எறிகணைகள் வீழ்ந்ததுடன், படுத்தபடியே சமாதியுமானார்கள்.

 

படையினருக்கு உதவியாக வந்த ஒவ்வொன்றும் 15 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 04 வு-55 ரக களமுன்னனி டாங்கிகள் (ஆயin டீயவவடந வுயமௌ -ஆடீவுள) சொற்ப நேரத்தில் அழிந்து போனதுடன், 02 டாங்கிகள் சேதமடைந்தன. மேலும் உக்கிரைன் நாட்டு தயாரிப்பான 02 தாக்குதல் கவச வாகனங்களையும் (ஆ2 டீசயனடநல-யுசஅழரசநன குiபாவiபெ ஏநாiஉடநள-யுகுஏள), 02 சோவியத் தயாரிப்பு துருப்புக்காவிகளையும் (யுசஅழரசநன Pநசளழnநெட ஊயசசநைச) படையினர் இழந்தனர்.

 

அதாவது இரண்டரை மணிநேரச்சமரில் சிங்கள அரசின் தரைப்படையின் முன்னனிப் படைப்பிரிவும், அதன் முதுகெலும்பாக உள்ள கவசவாகன படைப்பிரிவும் சந்தித்த இழப்புக்கள். சிங்கள இராணுவத்தையோ அன்றி அரசையோ அல்லாமல் உலக இராணுவ வல்லுனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

அமெரிக்காவின் கிhPன் பரட் (புசநநn டீநசசநவ) விசேட படையின் பயிற்சி பெற்ற 53 ஆவது படைப்பிரிவும் 55 ஆவது படைப்பிரிவும் மூன்றில் இரண்டு பிரிகேட் படையினரையும் 10 கவச வாகனங்களையும் இழந்தது எப்படி?

 

செக்கொஸ்லாவாக்கிய நாட்டு வு-55 டாங்கி சாதாரண சுPபு தாக்குதலுக்கோ, கண்ணிவெடிகளுக்கோ தாக்குபிடிக்கும் விதத்தில் தாயாரிக்கப்பட்டது. 300-400 மி.மீ உருக்குத் தகட்டால் ஆன தோலையும், 100 மி.மீ பீரங்கியையும் உடைய இந்த களமுன்னணி தாங்கிகள் பெரும் எண்ணிக்கையில் அழிந்தது எப்படி? இவை தான் சிங்கள இராணுவ வல்லுனர்களையும், ஆசிய நாட்டு ஆய்வாளர்களையும் குடையும் கேள்வி. அதாவது இரண்டரை மணிநேரத்தில் 10 கவச வாகனங்களை சிங்களப்படை இதற்கு முன்னைய சமர்களில் இழந்தது கிடையாது.

 

ஒரு டாங்கி புலிகளின் பதுங்குகுழிக்குள் வீழ்ந்து போனதால் புலிகளின் பிடியில் சிக்கிப்போனது. மற்றும் ஒரு டாங்கி, டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடியின் மீது ஏறியதால் சின்னாபின்னமாகியது. மிகுதி 04 டாங்கிகளையும் 04 கவசவாகனங்களையும் புலிகள் எவ்வாறு தாக்கினார்களா? என்பது தான் மில்லியன் டொலர் கேள்வி?

 

சிங்கள அரச தரப்பும் இராணுவ நிபுணர்களும் பின்வரும் ஊகங்களை முன்வைத்துள்ளனர்.

 

புலிகள் வசமுள்ள வு-55 ரக டாங்கிகளை கொண்டு படையினரின் டாங்கிகளை தாக்கியழித்திருக்காலம்.

 

புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட டாங்கி எதிர்ப்பு துப்பாக்கிகளை (85-அஅ னு-44 பரnஇ 100-அஅ ஆவு-12 பரn) புலிகள் பயன்படுத்தி இருக்காலம்.

 

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை (யுவெi வுயமெ புரனைநன ஆளைளடைந-யுவுபுஆ) பயன்படுத்தி இருக்கலாம்.

டாங்கிகள் தான் போரில் முன்னேறும் தரைப்படைக்கான இரும்புக்கவசம், முதலாம் உலகப்போரில் அறிமுகமான டாங்கிகள் இன்று மிக நவீன தோற்றம் பெற்றவையாக உள்ளன.

 

சிங்கள அரசின் முதுகெலும்பாக விளங்குவதும் கவசப்படை தான். இந்தப் படை செயலிழந்து போனால் சிங்கள தரப்படை செயலிழந்ததற்கு சமன். அதாவது வெறும் காவற்படையாகவே சிங்கள இராணுவம் தொழிற்பட முடியும்.

 

ஆரம்ப காலத்தில் புலிகள் சுPபு-7இ டுயுறுஇ பசூக்கா (டீயணழழமய) போன்ற இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையே பயன்படுத்தி வந்துள்ளார்கள். இந்த ஆயுதங்களில் இருந்து தமது துருப்புக்களை பாதுகாப்பதற்காக சிங்களப்படை இரண்டாவது ஈழப்போர்காலத்தில் வு-55இ வு-55யுஆ2இ வுலிந 69 போன்ற நவீன டாங்கிகளை கொள்வனவு செய்திருந்தது. இந்த டாங்கிகள் தான் சூரியக்கதிர், ஜெயசுக்குறு நடவடிக்கைகளின் கதாநாயகர்கள். இவை சாதாரண சுPபு-7இ டுயுறு போன்றவற்றிற்கு தாக்குபிடிக்கக்கூடியவை. எனினும் இத்தகைய ஆயுதங்களால் டாங்கியின் இயந்திரப்பகுதி, எரிபொருள் சேமிப்பு கொள்கலன், எறிகணை சேமிப்பு பகுதி போன்றவை குறிவைத்து தாக்கப்படின் டாங்கி தப்பமுடியாது.

 

செச்சினிய போராளிகள் சோவியத்தின் வு-72இ வு-80 ரக களமுன்னனி டாங்கிகளை அவ்வாறே தாக்கி அழித்திருந்தனர். சோவியத் படையினர் ஒரு மாதகால போரில் 61 களமுன்னனி டாங்கிகளை இழந்திருந்தனர். செச்சினியப் போராளிகளை பொறுத்த வரையில் 3-4 பேர் கொண்ட குழுக்களை டாங்கி வேட்டைக்கு அமைத்திருந்தனர் (ர்ரவெநச-முடைடநச வுநயஅள) இக்குழுவில் சுPபு செலுத்துபவர், உதவியாளர், இயந்திரத் துப்பாக்கி பாதுகாவலர், சினைப்பர் தாக்குதலாளி ஆகியோர் அடங்குவர்.

 

இயந்திர துப்பாக்கியாளரும், சினைப்பர் தாக்குதலாளியும் டாங்கி எதிர்ப்பு ஆயுததாரி டாங்கிக்கு குறிவைப்பதற்கு தடையாக இருக்கும். எதிரிகளை அகற்றி விடுவார்கள். மேலும் சினைப்பர் தாக்குதலாளி டாங்கியின் துப்பாக்கி வீரரையும் (பொதுவாக 0.50 கலிபர் ரக துப்பாக்கிகள்) வீழ்த்திவிடுவார்.

 

எனினும் நவீன டாங்கிகளை வீழ்த்துவதற்கு சாதாரண சுPபு இனால் 5 தொடக்கம் 6 உந்துகணைகள் செலுத்தப்பட வேண்டும். ஆனால் சுPபு மூலம் 5-6 உந்துகணைகளை செலுத்துவதற்கு அதிக நேரம் செலவாகும். செச்சினியப் போராளிகள் இப்படியான சந்தர்ப்பங்களில் 5-6 சுPபு களை களத்தில் ஒருங்கிணைத்து சமநேரத்தில் தாக்குதல்களை மேற்கொள்வதுண்டு.

 

எனினும் நவீன டாங்கிகளை அழிப்பதற்கு சாதாரண சுPபு களை விட அதிகளவு வெடிமருந்தும், அதிக ஊடுருவும் திறனும் கொண்ட எறிகணைகளை உடைய ஆயுதங்கள் அவசியம்.

 

புலிகளை பொறுத்தவரை இந்திய இராணுவத்துடனான போர் தான் முதல் முதலாக நவீன டாங்கிகளுடன் நேரடியாக மோதிய களம். தமது தயாரிப்பான கண்ணிவெடிகளை அதிகளவு வெடிமருந்தை பாவித்து டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடியாக மாற்றியிருந்தார்கள். (இதை பண்டிச்சக்கை என செல்லமாக அழைப்பதுண்டு). இந்த கண்ணிவெடிகளில் சிக்கி இந்தியப்படையின் அன்றைய களமுன்னனி டாங்கியாக விளங்கிய வு-72 ரக டாங்கிகள் பல அழிந்துபோயின. வலிகாமம் மேற்கு சங்கானை சந்திக்கு அண்மையில் 1987 இல் நடைபெற்ற தாக்குதலில் வு-72 ரக டாங்கி 10 அடி து}ரத்திற்கு கூட து}க்கி வீசப்பட்டு இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

 

மூன்றாம் ஈழப்போரின் போது போராட்டத்தின் பரிணாமமாகவும், சிங்கள அரசின் இராணுவ உத்திகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவும் தேசியத்தலைவரால் விக்டர் கவச எதிர்ப்பு படையணி உருவாக்கப்பட்டது.

 

சுPபு-7இ சுPபு-18இ டுயுறுஇ சுஊடுஇ பசூக்கா போன்றவை இந்தப்படையணியின் பிரதான டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், இந்த படையணியின் பங்கு ஜெயசுக்குறு சமரில் அளப்பரியது. இந்த சமரில் சிங்களப்படை அதிக கவச வாகனங்களை இழந்த சமராக புளியங்குளச் சமரை கொள்ளலாம். இதில் 02 தாங்கிகள் தகர்க்கப்பட்டும், 04 டாங்கிகள் சேதமாக்கப்பட்டதுடன், ஒரு துருப்புக்காவி வாகனம் 73 மி.மீ பீரங்கியுடன் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

 

அதன் பின்னர் நடைபெற்ற சமர்களில் ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட டாங்கிகளை சிங்களப்படை இழந்திருந்தது. எனினும் 1999 இல் ஆனையிறவு படைத்தளத்தின் துணைத்தளமான பரந்தன் தளத்தில் பயிற்சி நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டாங்கியும், துருப்புக்காவியும் திடீரென வெடித்துசிதறி அழிந்துபோனது. இது தான் கவச எதிர்ப்பு போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலால் அதிர்ந்து போன சிங்களப்படை அவற்றை தாக்கிய வெடிபொருளை சேகரித்து இங்கிலாந்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியது. ஆனால் அங்கிருந்து வந்த பதிலில் ஆச்சரியம் காந்திருந்தது.

 

ஆயடலரவமய (9 மு11) ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை (யுவெi-வயமெ பரனைநன அளைளடைந ளலளவநஅ) தான் சிங்களப்படைகளின் டாங்கியையும், துருப்புக்காவியையும் அழித்திருந்தது. சோவியத்து தயாரிப்பான இந்த டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் பிரதி வடிவங்களை யுகோஸ்லாவாக்கியா, பல்கேரியா, ரூமேனியா, நேட்டோ கூட்டமைப்பு போன்ற நாடுகளும் தயாரிப்பதுண்டு.

 

இது தவிர பகொட் (குயபழவ-9மு111), கொன்கேர்ஸ் (முழமெரசள-9மு113) போன்ற டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் வீரர்களால் காவிச்செல்ல முடிவதுடன் (ஆயn-pழசவயடிடந) தோளில் வைத்தும் இயக்கக்கூடியது. ஏவுதளத்தில் இருந்து வயர் மூலம் வழிநடாத்தப்படும் (றுசைந-பரனைநன ஆஊடுழுளு) தொழில்நுட்பமுடைய இந்த ஏவுகணை 2.5 முப- 3.5 முப வரையான அதியுயர் வெடிமருந்தை (ர்நுயுவு-ர்iபா நுஒpடழளiஎந யுவெi-வுயமெ) கொண்டது. 1000-5000 மீ து}ரவீச்சு கொண்டதுடன் அவற்றின் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப 400-800 மி.மீ வரையான டாங்கியின் உருக்குத் தகட்டை ஊடுரூவிச்சென்று வெடிக்கக்கூடியவை.

 

1973 இல் நடந்த லுழஅ முipரச போரில் ஒரு சில நாட்களில் எகிப்தும் சிரியாவும் சோவியத்தின் 9ஆ14 ஆயடலரவமய ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை மூலம் 800 இஸ்ரேலிய டாங்கிகளை செயலிழக்க செய்திருந்தன. அதாவது டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் சிறப்பம்சம் என்னவெனில் எதிரியின் பிரதேசத்திற்குள் வைத்து அவர்களின் கவசப்படையை அழித்துவிடலாம்.

 

டாங்கியினால் அல்லது டாங்கி எதிர்ப்பு துப்பாக்கியினால் நேரடியான சூடுகளையே வழங்கமுடியும். எனினும் டாங்கிகளின் அதிக து}ரவீச்சும், கனரக எறிகணையும் அனுகூலமானது. புலிகளிடம் உள்ள வு-55 டாங்கி 4000 மீ து}ரவீச்சுக்கொண்ட 100 மி.மீ பீரங்கியை உடையது (100-அஅ சகைடநன பரn). இந்த பீரங்கிக்கு பயன்படுத்தும் குண்டுகளின் தரத்தை பொறுத்து டாங்கியின் உலோக தகட்டை ஊடுரூவும் தன்மையை அதிகரிக்காலம்.

 

2003 இல் நிகழ்ந்த ஈராக் சமரின் போது ஒரு தாக்குதலில் மட்டும்; 50-க்கும் மேற்பட்ட ஈராக்கின் டாங்கிகளை பிரிட்டனின் டாங்கிகள் அழித்திருந்தன. 1995 இல் முல்லைத்தீவு கடற்கரையில் மணலுக்குள் இறக்கப்பட்ட வு-55 ரக டாங்கி; (புூநகரியில் கைப்பற்றப்பட்டது) கரைக்கு அண்மையாக வந்த சிங்கள கடற்படையின் இரண்டு டோராக்களை துவசம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்காலம்.

 

அதாவது ஒரு ஆயுதத்தை அதன் வரையறுத்த தேவைகளைவிட பல நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும். இந்த போர்க்கலையில் புலிகள் கைதேர்ந்தவர்கள். உதாரணமாக ஆட்டிலறிகளால் மேல்நோக்கிய கோணத்தை தவிர நிலத்திற்கு அல்லது கடலுக்கு சமாந்தரமாக வைத்தும் சூடுகளை வழங்க முடியும்.

 

2000 ஆம் ஆண்டு நாகர்கோவில் கடற்பரப்பில் 130 மி.மீ ஆட்டிலறி தாக்குதல் மூலமே இரு டோராக்கள் தகர்க்கப்பட்டிருந்தன. சோவியத்தின் டாங்கி எதிர்ப்பு பீரங்கியான 85-அஅ னு-44 பரn துப்பாக்கி டாங்கி எதிர்ப்பு பீரங்கியாகவும், சாதாரண களமுனை பீரங்கியாகவும் பயன்படுத்த கூடியது.

 

முகமாலையில் அழிக்கப்பட்ட கவச வாகனங்களில் அரைப்பங்கு எதிரியின் பிரதேசத்திற்குள்ளேயே அழிந்து போயுள்ளன. இது தான் இன்று சிங்களப்படையை கிலிகொள்ள வைத்த நிகழ்வு. டாங்கிப்படை இல்லை எனில் சிங்களப்படைகளால் போரை நினைத்துப்பார்க்கக்கூட முடியாது. மேலும் டாங்கிகளின் இழப்பை உடனடியாக மீள நிரப்புவதும் மிகக்கடினம்.

 

கடற்புலிகளின் சவால்களுக்கு மத்தியில் இலகுவாக கனரக ஆயுதங்களை அடிக்கடி மாற்ற சிங்களப்படையால் முடியாது. மேலும் புலிகளின் கைகளில் வீழ்ச்சியடையும் கனரக ஆயுதங்களின் எதிர்த்தாக்கமும் மிகப்பாரியவை. சிங்களப்படைக்கும் அதன் ஆலோசகர்களுக்கும் ஐப்பசி 11 ஆம் நாளுக்கு பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் மிகப்பெரும் அதிர்ச்சியை அழித்திருக்கும்.

 

தமிழ் மக்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடி, பொருளாதார தடைகளை விதித்து புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்த அரசுமீது தற்போது தனது படைகளை பாதுகாப்பது எப்படி என்ற பெரும் அழுத்தம் வீழ்ந்துள்ளது.

 

பேச்சும் போரும் என்று சிங்களப்படை ஆரம்பித்த தந்திரம் தற்போது அவர்களுக்கு சுருக்கு கயிறாகி உள்ளது. பலம் பலவீனம் இதனை பொறுத்து தான் சர்வதேசத்தின் கருத்துக்கள் அமைகின்றன. அந்த கருத்து மாற்றத்தை தமிழ் மக்கள் பக்கம் திருப்பவேண்டிய படையாக புலிகள் மிளிரப்போவதை தான் அண்மைய சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன. இந்த மாற்றத்திற்கு வலுச்சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மக்களினதும் இன்றியமையாத கடமை.

Edited by நன்னிச் சோழன்
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

மல்யுக்தாவிற்கான ஆதாரம் 5/10/1999 உதயன் நாளேட்டில் உள்ளது.

  • நன்னிச் சோழன் changed the title to சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு | பழைய செய்தி ஆவணக்காப்பிற்காய்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.