Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காபூலில் நடந்த இரு தாக்குதல்களில் 10க்கும் அதிகமானோர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காபூல் தாக்குதல்: மருத்துவமனைகளுக்கு விரைவுபடுத்தப்படும் காயம் அடைந்தவர்கள்

 

இன்று காபூல் விமான நிலையத்திற்கு அருகே நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு குவிந்துள்ளதால் தாக்குதல் நடைபெறும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தெரிவித்திருந்தன.

தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னர், அங்கு `மிக கொடிய` பயங்கரவாத தாக்குதல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரிட்டன் எச்சரிக்கை விடுத்திருந்தது.

முன்னதாக காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தாக்குதல் நடைபெறும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள், விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

விமான நிலையத்திற்கு வெளியே உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து செல்ல வேண்டும் என ஆஸ்திரேலியாவும் தெரிவித்திருந்தது.

இருப்பினும் ஆப்கானிஸ்தானை விட்டு எப்படியாவது தப்பிச் செல்ல வேண்டும் என எண்ணிய ஆப்கன் மக்கள் பல்வேறு எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.கு அழைத்துச் செல்லும் தன்னார்வலர்கள், மருத்துவ ஊழியர்கள்Image caption: காபூல் தாக்குதல்களில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்

காபூலில் நடந்த இரு தாக்குதல்களில் 10க்கும் அதிகமானோர் பலி - சங்கடம் தரும் படங்கள் - தமிழில் செய்திகள் (bbc.com)தன்னார்வலர்கள், மருத்துவ ஊழியர்கள்


 
  •  
  •  

காபூல் தாக்குதல்: இதுவரை நமக்கு தெரிந்த தகவல்கள்

  • காபூல் நகரில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் ஒன்று அப்பி வாயில் பகுதியிலும் மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் இருக்கும் பேரன் விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகள்தான் மேற்கு நாடுகளுக்கு பயணம் செல்லும் அகதிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் காத்திருக்க ஒதுக்கப்பட்ட இடமாகும்.
  • இன்றைய தாக்குதலில் சில அமெரிக்க வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியானதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிந்தைய படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
  • தாக்குதல் நடந்த பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • காபூல் விமான நிலைய பகுதியில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு தமது குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்த நாளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
  • காபூல் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விவரித்துள்ளனர். அவசரகால மீட்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தமது நாட்டின் அவசரகால நடவடிக்கைகளை விவாதிக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

காபூல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 13: தாலிபன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் இறந்திருக்கலாம் என்று தாலிபனை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டிருக்கிறது.

அங்கு தாக்குதல் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காணொளி ஒன்றை ஆப்கன் உள்ளூர் தொலைக்காட்சியான டோலோநியூஸ் அதன் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

 

"இஸ்லாமியவாதிகள் ஆளுகைக்கு வந்தால் பயங்கரவாதம் தொடரும்"

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாதிகள் கையில் அதிகாரம் வந்தால் அங்கு பயங்கரவாதமும் தொடரும் என்று கூறியிருக்கிறார் பிரிட்டன் கன்சர்வேட்டிவ் எம்.பியும் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான டாம் துகென்தாட்.

தாலிபன் ஆளுகையின் விளைவால் ஏற்பட்ட குழப்பத்தின் அடையாளமே இந்த தாக்குதல்கள் என்று அவர் கூறி்யிருக்கிறார்.

காபூல் தாக்குதலில் சில அமெரிக்கர்கள் மற்றும் பொதுமக்கள் பலி: பென்டகன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலைய வளாகத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்த தாக்குதலில் சில அமெரிக்கர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்திருக்கலாம் என அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.

அப்பி வாயில் பகுதியில் ஒரு தாக்குதலும், அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள பேரன் விடுதி அருகே மற்றொரு தாக்குதலும் நடந்துள்ளதாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி வாஷிங்டனில் தற்போது நடத்தி வரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

காபூலில் நடந்த இரு தாக்குதல்களில் 10க்கும் அதிகமானோர் பலி - சங்கடம் தரும் படங்கள் - தமிழில் செய்திகள் (bbc.com)

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

12 அமெரிக்க படையினர் உட்பட குறைந்தது 60 பேர் காபூல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 140 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 

Afghan Health Ministry: At least 60 dead, 140 wounded in attacks

The Afghan health ministry has confirmed earlier reports to the effect that 60 Afghan civilians have been killed in the blasts. 

12 US service members have been confirmed dead with at least 15 injured

Two suicide bombers detonated explosives outside the Abbey Gate of the Kabul international airport. The blasts were followed by gunfire from persons believed to be members of Islamic extremist organisation ISKP

The Guardian UK

  • கருத்துக்கள உறவுகள்

காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறு தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா- பிரித்தானியா வலியுறுத்தல்!

காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறு தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா- பிரித்தானியா வலியுறுத்தல்!

காபூல் விமான நிலையத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்தை விட்டுத் தள்ளிச் செல்லுமாறும், பயணம் செய்ய வேண்டாம் எனவும் மேற்குறித்த நாடுகள் கேட்டுக்கொண்டள்ளன.

அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாகச் சென்றுவிடுமாறு பிரித்தானியா கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை இன்னும் நிச்சயமற்றதாகவே இருப்பதாக பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் அதன் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் எந்தவகையான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது பற்றி அமெரிக்காவோ, பிரித்தானியாவே எந்தவிதமான கூடுதல் தகவலையும் கொடுக்கவில்லை.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆற்றிய உரையின்போது, ‘ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து கூடிய விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

நேற்று (புதன்கிழமை) மட்டும் சுமார் 1,200பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய குடிமக்கள் மற்றும் தகுதியான ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு தங்களது அரசாங்கம் கடைசித் தருணம் வரை பயன்படுத்தும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்தார்.

தலிபான்கள் காபூல் நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5,800 வீரர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த ஆயிரம் வீரர்களும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காபூல் நகரம் தலிபான்களின் வசமான பிறகு 10 நாட்;களில் சுமார் 82 ஆயிரம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2021/1236230

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.