Jump to content

நீண்ட கடற்சண்டையில் அனுபவமுள்ள உத்வேகமான போராளி லெப்.கேணல் சீராளன்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கடற்சண்டையில் அனுபவமுள்ள உத்வேகமான போராளி லெப்.கேணல் சீராளன்...

spacer.png

லெப்.கேணல் சீராளன்

தேவதாஸ் சூரியவதணன் - 12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு:-13.11.1980

வீரச்சாவு: - 24.09.2006

நிகழ்வு: -திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவு


 

1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன் அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான். இவனது செயற்பாடுகளைக் கவனித்த அப்போது கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளரான மாவீரரான லெப் கேணல். நரேஸ் அவர்கள்  ராடர் நிலையத்திற்க்கு செல்லும் போது இவனையும் அழைத்துச் சென்று அங்கே ராடரில் எப்படி  இலக்குகளை இணங்கானுவது போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் அதன் நுணுக்கங்களையும்  அவனுக்கு விளங்கக்கூடிய வகையில் சொல்லிக் கொடுத்து அவனை ஒரு சிறந்த தொலைத்தொடர்பாளனாக வளர்த்துக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் நிலஆக்கிரமிப்பு நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கைக்கெதிரான விடுதலைப்புலிகளின் புலிப்பாய்ச்சலுக்கான  கடற்சமரில் லெப்.கேணல் நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய சீராளனோ தனித்துவிட்டவனாக உணர்ந்தபோதும் தலைவர் அவர்களையும் மாவீரர்களையும் மனதில்  நினைத்து   தனது வழமையான செயற்பாடுகளில் புதிய உத்வேகத்துடன் ஈடுபட்டான்.தொடர்ந்து லெப் கேணல் நரேஸ் அவர்களின் நினைவாக கடற்தாக்குதல் படையணி உருவாக்கப்பட்டபோது இவனும் அங்கே சென்றான். மேலதிக பயிற்சிகளை முடித்தவன்.கடல் விநியோகப் பாதுகாப்புச்  மற்றும் கடற்சமர்களிலும் பங்குபற்றியவன்.

 

0SffbP422h1Cwljy0RIa.jpg

 

தொடர்ந்து மாவீரரான லெப் கேணல் மங்களேஸ் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தென் தமிழீழத்திற்கான விநியோக நடவடிக்கையிலும் செவ்வனவே பங்குபற்றினான்.அதனைத்தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்களின் வரவினையடுத்து  அக்கனரக ஆயுதப் பயிற்சிக்கென உள்வாங்கப்பட்டவர்களுள் ஒருவனாக  வந்த சீராளன் அப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.சிறந்த சூட்டாளனாக பயிற்சியை முடித்து வெளியேறியவன் கடற்புலிகளின் சாள்ஸ் படையணியில் இணைக்கப்பட்டு அக்கனரக ஆயுதத்துடன் கடற்சண்டைகளில் ஈடுபட்டான் .தொடர்ந்து தனது தனிப்பட்ட முயற்சியால் சண்டைப் படகின் தொலைத்தொடர்பாளனாக இரண்டாம் நிலைக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான்.
 

சமாதன காலப்பகுதியில் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக  கடற்புலிகளின்  கடற்படைக்கான கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சிக் கல்லூரியான லெப் கேணல்  நிரோஐன் கடற்படைக் கல்லூரிப் பொறுப்பாளனாக சிறப்புத்தளபதி அவர்களாள் நியமிக்கப்படுகிறான்.அப்பணியிலும் சிறந்து விளங்கி பல போராளிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதுடன்  தனது களஅனுபவங்களையும்  சகபோராளிகளுக்கு படிப்பித்தான்.

சண்டை தொடங்கியவுடன் சண்டைப்படகின் கட்டளை அதிகாரயாகவும் .தொடர்ந்து சண்டைப் படகுகளின்  தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான்.கடற்சண்டைகளில் மிகவும் திறம்பட படகுகளை ஒருங்கினைத்து  செவ்வனவே வழிநடாத்தினான்.இப்படியாக படிப்படியாக வளர்ந்த ஒரு போராளி ,

நீண்ட கடற்சண்டை அனுபவமுள்ள ஒரு சண்டைக்காரன்,தனக்குத் தெரிந்தவைகளை சகபோராளிகளுக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசான்,

எந்த வேலையாகிலும் அதை சரியான முறையில் திருப்தியுடன் செய்த வீரன்.

சக போராளிகளை மதிக்கிற பன்பு. ஒரு சிறந்த நிர்வாகி . இப்படியாக சீராளனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படிப்பட்ட ஒரு வீரனை 24.09.2006 அன்று தென்தமிழீழ விநியோகப் பாதுகாப்பு  சமரின் போது  புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலின்போது நாம் இழந்துவிட்டோம்.

 

எழுத்துருவாக்கம்..சு.குணா.
 

https://www.thaarakam.com/news/8524e8fa-8c8d-46cf-aaad-bdfc17027183

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் care ஐ அல்லது don’t care ஐ வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை. கஸ்தூரி பற்றிய திரியில் சம்பந்தமே இல்லாமல் சாதிய வசை சொல்லை பாவித்து, தெரிந்து கொண்டே பாவித்து, அதில் என்னையும் இழுத்து, எனக்கும் கருணாநிதிக்கும் ஒரு சாதிய பாசமோ? என்ற தொனிப்பட நீங்கள் எழுதியதற்கான எதிர்வினையே இதுவரை நடந்தது. அதில் இனதூய்மைவாத, சாதிய வாத, பிரதேசவாத பழைய உதாரணங்களை எடுத்து காட்டும் படி ஆகிற்று.
    • நாம் கதைத்து கொண்டிருப்பது பிள்ளையானுக்கு வீழ்ந்த, விடும் வாக்குகள் பற்றி. பிள்ளையானின் அரசியல், அதை நீங்கள் இன்றும்(?) ஆதரிப்பது பற்றியது. இதில் ஏன் கருணாவுக்கு வீழ்ந்த வாக்குகள் எண்ணப்படுகிறன. அப்படியே ஆயினும், முஸ்லிம் ஆதிக்கம், கல்முனை தரமுயர்த்தல் இரெண்டும் கருணா, பிள்ளையானால் தீர்க்கப்பட்டு விட்டதா? ஆகவே உங்கள் ஹீரோக்களும் சீரோக்கள்தான்.  மற்றையவர் தேசிக்காய்கள் என்றால் உங்கள் ஹீரோக்கள் சுண்டங்காய்கள்🤣. அவர்கள் எலக்சனுக்காக பேசுவதை அப்பாவி பாமர மக்கள் நம்பினால் கூட பரவாயில்லை. ஆனால் படித்தவர்கள் கூட? அப்படியே ஆயினும், மகிந்த இனவாதிதான், இனப்படுகொலையாளந்தான் ஆனால் முஸ்லீம்களின் வாலை வெட்டினார், வீதிகளை புனரமைத்தார் எனவே அவருக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன் எனும் சிங்கள வாக்காளருக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடுமில்லை. அவர் இனவாதி. நீங்கள் …. இது அந்த சமயம் நீங்கள் யாழில் எழுதியமைக்கு மாற்றாக உள்ளது.  அந்த தேர்தலில் பிள்ளையான் மட்டிலும், கருணா அம்பாறையிலும் கேட்டார்கள். நீங்கள் தெளிவாக சொல்லி இருந்தீர்கள்…இந்த முறை உங்கள் வாக்கும், உங்களை சூழ உள்ளோர் வாக்கும் இவர்களில்ளுக்கே என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என. ஆதாரம் கேட்டு திரியை நீளடிப்பதாயின் அது உங்கள் விருப்பம். எனக்கு இந்த ஆதாரம் காட்டும் விடயத்தில் முன்பு போல் ஆர்வம் இல்லை, அதே போல் யாழில் இப்போ தேடுவதும் கடினமாக உள்ளது - இது மாத்தி மாத்தி எழுதுவோருக்கு வசதியாயும் போய்விட்டது.
    • இதுதான் பிரச்சினையே  கருணாவிற்கு அன்று வாக்கு விழுந்தது கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தல் , முஸ்லிம்களிடமிருந்து வரும் அரசியல் நெருக்குவாரங்களில் இருந்து பாதுகாப்பு இந்த இரண்டையும் பட்டவர்த்தனமாக சொல்லி வேறு எந்த தமிழரும் போட்டியிடவில்லை. கரெக்ட்டு ஆனால் டிக்கடித்தது செல்வம் அடைக்கலநாதனும் கூத்தமைப்பு மத்திய சபையும். அதனால் தான் பிள்ளையான் பிரதேசவாதத்தால் வெல்லவில்லை என்று சொல்கிறேன். திருமலையில் வத்சா, மட்டுநகரில் தனுசிகா இரண்டும் பிள்ளையான் குழுவின் கைங்கர்யம் தான்,  பிள்ளையான் மீது எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் பிள்ளையான் செய்த அபிவிருத்திகள் அப்படி அதனை மறுக்கமுடியாது.  ஆனால் நிட்சயமாக பிள்ளையானுக்கு வாக்கு போட்டிருக்கமாட்டேன். மட்டுநகருக்கு என்னுடைய வாக்குரிமை மாற்றப்பட்ட பின் இரண்டு முறை வாக்களித்திருக்கிறேன் இரண்டும் பிள்ளையானுக்கு இல்லை. கல்முனையில் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலுக்காக கருணாவிற்கு ஒரு முறை. ஒன்று கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக யார் வந்து நின்றாலும் வாக்குப்போடுவேன் ஏனென்றால் அது என் ஆன்மா. நான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே இந்த ஒன்றை பிடுங்க முடியாமல் உலகில் எங்கு போய் எதை பிடுங்கினாலும் அது எனக்கு ஹைகோர்ட் மட்டுமே இந்த லட்சியம் உங்களுக்கு மேலே சொல்வது போல் தெரிந்தால் I don't care.
    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.