Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது.

Featured Replies

லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது.

லண்டனில் ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி இன்று சனிக்கிழமை முற்பகல் தொடங்கியுள்ளது.

பிரித்தானியாவின் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டுள்ளனர்.

தமிழர் வாழ்வில் ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள அவலங்களை நினைவு கூரும் வகையில் பேரணியில் பங்கேற்றோர் கறுப்பு உடை தரித்து பங்கேற்றுள்ளனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பிரித்தானியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ள தயா இடைக்காடர், திருமதி சசிகலா சுரேஸ் கிருஸ்ணா உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

-Puthinam-

நிகழ்வுகள் சிறப்பாக நடந்து முடிந்தது...காலை 10மணியளவில் குண்டு புரளி ஒண்று கிழப்ப பட்டு எல்லோரும் அகற்றப்பட்டு பின்னன் ஆரம்பமானது எண்று கேள்விப்பட்டேன்... நான் தாமதமாக 11.45 அளவில் போக முடிந்தது.. நிகள்வுகள் முடிய 3 மணி ஆகிவிட்டது...!

நிகழ்வுகள் 3மணிக்கே முடிந்தாலும்..காலி தண்ணீர்போத்தல்களை பொறுக்கிமுடியவில்லையாம்..விட

..தல கூட தலையைக் காட்டியதில் மிகுந்த சந்தோசமே.... :)

இதை யாழ் கள மாபெரும் ஒண்று கூடல் எண்டு பிரச்சாரப்படுத்தி விடுவமோ...?? ;) ;) ;) ;)

அன்புள்ள அனைத்துலகத்தழிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான

வணக்கங்கள்

தழிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் ஒரு தார்மீக

கடைமை இருக்கிறது.

இன்று இலங்கையில் என்ன தான் நடக்கிறது என்று

யாருக்குமே தெரியாத நிலையில் அங்குள்ள அனைத்து தழிழ் மக்களும்

தம் உயிருக்காக போராடி போராடி இறந்து கொண்டு இருக்கிறார்கள்

அவர்களைப்பற்றி அதாவது எம் சொந்த இரத்தங்களைப்பற்றி தான் நாம்

என்னேரமும் நினைத்துக்கொண்டு இருந்தாலும் எம்மையறியாமல் நாம்

செய்யும் சில சிறிய தவறுகள் மிகவும் பெரிய அளவில் எம் இரத்த உறவுகளை

பாதிக்கின்;றதை நாம் சிறிதும் நினைத்துப்பார்ப்பதில்லை.

இன்று இலங்கைப் பொருளாதாரம் எவராலும் காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தாலும்

அப்பாவியான வெளிநாட்டு தழிழ் மக்களை இலக்கு வைத்து

தம் பொருளாதாரத்தை வளம்படுத்தும்

நோக்கிலும் ஈழத் தமிழ் மக்களை அழிக்கும் நோக்கிலும் இலங்கை அரசின் கபட நாடகம்

அரங்கேறி இன்று

காலங்காலமாக ஈழத் தமிழர்களை ஏமாற்றி ஏமாற்றி சலித்துப்போய் உலகத்தமிழர்

பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளது.

அதாவது இலங்கை பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்தி அதில் வெளிநாட்டுத் தழிழரை

நுகரவைத்து

அதில் கிடைக்கும் கொள்ளை இலாபத்தில் தமக்குத்தேவையான அனைத்து இராணுவத்

தளபாடங்களையும்

இறக்குமதி செய்து நாம் கொடுக்கும் பனத்தை வைத்தே நம் சொந்த இனத்தை அழிக்கிறது.

இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு தழிழராகிய நாமே எம்மை அறியாமல் எம் இன அழிவுப்பாதைக்கு

மூலகாரணமாகிவிட்டோம்.

இனியாவது எம் உறவுகளைப் பாதுகாக்க சிறிது நேரம் சிந்திப்போம் .

இலங்கைப் பொருட்கனை எம் வாழ்விலிருந்து ஒதுக்குவோம்

எந்த இலங்கை பொருட்களையும் எம் நுகர்வுக்கு பயன்படுத்த மாட்டோம்.

குறிப்பாக இலங்கை விமான சேவையை முற்றாக புறக்கணிப்போம் .

எம் தாய் தந்தை சகோதரங்களின் கண்களில் வடியும் இரத்தத்தை துடைப்போம்

எம் சொந்த நலனுக்காக எம் இனஅழிப்புக்கு எப்பொதும் துணை நிற்க மாட்டோம் .

இதை அனைவரும் தம் மனதில் வைத்து இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்.

இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்

www.safetamils.com

safetamils@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏற்கனவே பிரான்சில் நடைமுறையில் உள்ளது

எல்லாப்பொருட்களையும் ஒரேயடியாக மறந்துவிட முடியாவிட்டால்

முடிந்த பொருட்களை முதலில் புறக்கணியுங்கள்

முக்கியமாக குடிபானங்களை உடன் நிறுத்தமுடியும்

மிளகாய்த்தூள் மற்றும் சில மருந்துப்பொருட்களை

மாற்றுவழி

அல்லது வேறு தயாரிப்புக்கள்

அல்லது வேறுநாட்டுத்தயாரிப்புக்கள்

கிடைத்தபின் நிறுத்தலாம்

மனம்தான் முக்கியம் பொருளல்ல...

ஒன்றை மட்டும் மறந்துவிடவேண்டாம் எனது உறவுகளே

கிழக்கில் கொட்டிய குண்டுமழைக்கு நீங்களும் உஙகளை அறியாமல் பணம் கொடுத்துள்ளீர்கள்.......

மறுப்பீரா???............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசின் மனிதஉரிமை மீறலைக் கண்டித்து லண்டனில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

perani05mg4.jpg

பிரித்தானிய நகராட்சிமன்றக் குழுவும், அதன் உறுப்பினர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கண்டன ஒன்றுகூடல், இன்று முற்பகல் ஸ்கொயர் (Trafalgar Square) என்ற சதுக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .

சிறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் லண்டன் ஸ்கொயார் சதுக்கத்தில் ஜயாயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்களும் பிரித்தானிய மக்களும் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்திய வண்ணம் பேரணியில் உள்ளனர்.

பல தேசங்களிலிருந்தும் பெருந்தொகையான தமிழ் மக்கள் பேரணியில் கலந்த வண்ணம் உள்ளனர். இதில் பிரித்தானியாவின் முக்கிய அரசியல் வாதிகள் பலரும் கலந்து சிறப்புரையாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் முக்கியமான காலகட்டத்தில் இந்த ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், பிரித்தானியாவிலுள்ள அனைத்து மக்களும் உணர்வெழுச்சியுடன் காணப்படுகிறார்கள்.

கலாநிதி விக்கிரமபாகு தலைமையிலான இடதுசாரி முன்னனி சார்பாக சசி பீரிஸ், வெண்புறா அமைப்பின் ஐரோப்பிய பொறுப்பாளர் மருத்துவர் மூர்த்தி ஆகியோர் சுரேஸ் கிருஸ்னா உரையாற்றியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நகரசசபை உறுப்பினர் மைக் சில்வா, கரோ நகரசபை உறுப்பினரின் தலைவர் சா ஆகியோரைத் தொடர்ந்து தற்பொழுது பிரித்தானியாவின் மூன்றாவது பெருங் கட்சியான தாராண்மை வாதக் கட்சியின் (லிபரல் டெமோகிறட்) சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்து உரையாற்றியிருக்கின்றார் .

இவர்களைத்தொடர்ந்து நகரசபை உறுப்பினர்களான எலிசாமான், தயா இடைக்காடர், யோகன் யோகராஜா, தாயகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.

இலண்டனில் அண்மைக்கால வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இக் கண்டன ஒன்றுகூடலில் கலந்து கொண்டதுடன் பிரித்தானிய அரசிற்கும் ஏனைய அரசுகளிற்கும் சிறீலங்கா அரசின் மனிதஉரிமை மீறல்களை எடுத்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த பொதுமக்கள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதன் மூலம், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அனைத்துலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியும் என்றும், தமிழ் மக்களின் வேணவாவை ஒருமித்த குரலில் உலகிற்கு வெளிப்படுத்த முடியும் எனவும் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

* சங்கதி

நிறைய பெயரை சந்தித்ததில் சந்தோசம். களைப்பாய் இருந்ததில வந்து சிறிது நேரம் உறங்கிவிட்டேன்.

முக்கியமாக இந்த விடுமுறை நாளிற்கான இடத்தெரிவை பாராட்ட வேண்டும்.... பல்நாட்டவரும் சுற்றுலாவரும் இடமான Trafalgar Square ல் பெரிய பிரித்தானியாவின் பல்நாடுகளுக்கான படை எடுப்பின் வெற்றியையும் தளபதிகளின் பெருமையையும் தாங்கி நிக்கும் சதுக்கமானது விடுமுறை தினங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு பயனிகள் வந்து குவியும் நாள் ஒன்றி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இருந்ததையும்... அவர்களில் பலர் ஒலி பெருக்கி மூலம் ஆங்கிலத்தில் செய்யப்பட்ட உரைகளை கவனித்தவாறு நிண்றதனையும் காணக்கூடியதாக இருந்தது...!

இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி இலண்டனில் கண்டனக் கூட்டம்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி அதனைக் கண்டித்து இங்கே லண்டனில் டிராவால்கர் சதுக்கம் பகுதியில் இலங்கை தமிழ் அமைப்புக்களால் ஒரு பெரும் எதிர்ப்பு நிகழ்வு இன்று அனுட்டிக்கப்பட்டது.

இங்குள்ள தமிழ் நகராட்சி மன்ற உறுப்பினர்களின் அமைப்புடன் பல தமிழ் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் குறித்து அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான, ஹரோ கவுன்ஸிலின் உறுப்பினர் தயா இடைக்காடர் அவர்கள் விளக்குகையில், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அனைவரும் அவற்றைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகவே தாம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்.

இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக தானும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டதாகக் கூறினார் அங்கு சமூகமளித்திருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம்.

அதேவேளை இங்கு பிரிட்டனிலும் தமிழர்களின் சில உரிமைகள் போலி காரணங்களைக் காட்டி மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் வெண்புறா அமைப்பைச் சேர்ந்த டாக்டர் மூர்த்தி.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழர்கள் மாத்திரமல்லாமல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சில பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

BBC Tamil

இதை நான் நம்புறதுக்கு நிறைய நேரம் ஆச்சுது... பிபிசி தமிழா இப்பிடி...??? :):D:)

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக இந்த விடுமுறை நாளிற்கான இடத்தெரிவை பாராட்ட வேண்டும்.... பல்நாட்டவரும் சுற்றுலாவரும் இடமான Trafalgar Square ல் பெரிய பிரித்தானியாவின் பல்நாடுகளுக்கான படை எடுப்பின் வெற்றியையும் தளபதிகளின் பெருமையையும் தாங்கி நிக்கும் சதுக்கமானது விடுமுறை தினங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு பயனிகள் வந்து குவியும் நாள் ஒன்றி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இருந்ததையும்... அவர்களில் பலர் ஒலி பெருக்கி மூலம் ஆங்கிலத்தில் செய்யப்பட்ட உரைகளை கவனித்தவாறு நிண்றதனையும் காணக்கூடியதாக இருந்தது...!

ம். அதை விட தமிழீழத்தைப் பிரிதிபலிக்கின்ற எவ்வித அடையாளங்குமில்லையே என்று முதலில் கவலைப்பட்டேன். ஆனால் பிறகு தான் திட்டமிட்டவர்களின் எண்ணங்கள் புரிந்தது. ஒரு மனித உரிமை பற்றிய நிகழ்வு என்றில் தமிழீழம் பற்றிய விடயங்கள் கதைக்கப் போனால், மனித உரிமைகள் என்பதை விட, தமிழீழமே முக்கியமாகப் போய், மகிந்தவின் கொலைத்தாண்டவம் மறைக்கப்பட்டு விடும் என்று.

இதை நடத்த விடக்கூடாது என்று பல தடவைகளில் முயற்சித்த சிங்களக் காடைக்கும்பலுக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் பலத்த ஏமாற்றத்தை இது கொடுத்திருக்கும். 5,10 பேரைக் கூடத் திரட்ட முடியாத இவர்கள், தங்களினால் முடியுமான அளவு முயற்சித்தார்கள். தலயின் கருத்தைப் பார்க்க சில மணித்தியாலத்துக்கு முன், குண்டுபு் புரளியைக் கூடக் கிளப்பி விட்டார்கள் என்று புரிகின்றது.

எல்லாவற்றையும் மீறி பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டது திருப்தியை அளிக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.