Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்-பா.உதயன் 

அதிகாரம், அடக்குமுறை, நாடுகளுக்கு இடையிலான அதிகார ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார சுயநலன்களுக்கு இடையிலான போட்டிகள் இவை தவிர இயற்கை அழிவுகளாலும் நோய் நொடிகளாலும் இந்த உலகு பல அழிவுகளை சந்தித்து வருகின்றது. பல கோடி மக்கள் இதனால் இறந்திருக்கிறார்கள் இன்னும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். மனிதத் தவறுகளினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் இந்த உலகு மிகக் கொடிய மனித அவலங்களை சந்தித்து வருகின்றது.

 தர்மமும் நீதியும் சார்ந்து இந்த உலகம் சுழலுவதில்லை. மனித அவலம் மனிதக் கொடுமைகள் நடந்த பொழுதெல்லாம் பலர் கண்ணை மூடி இறந்தவர்கள் போல் தங்கள் சுய நலன் கருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள் பல ஜனநாயகத்தின் காவலர்கள். எங்கு தான் என்ன மனித அழிவுகளும் மானிடத் துயரம் நடந்தாலும் மானிடம் கொண்ட மக்கள் இரங்காமல் இருக்க முடியாது. இன்று உலகையும் அதன் மனித வாழ்வையும் பெரும் அழிவையும் அவலத்தையும் மனித இறப்புக்களையும் உண்டாக்கி வரும் கொரோனா என்ற பெரும் தொற்றால் மனிதனின் அவலக் குரல் எங்கும் கேக்கிறது. 

இந்த அடிப்படையிலே ஸ்ரீ லங்காவையும் இந்த கொடிய கோவிட் வாட்டி வதைக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கிறது தேசம். இந்த நோய் மாத்திரம் இன்றி அந்த நாட்டின் அரசியல் ஸ்திரத்தின்மை பொருளாதார நிலைமை என்பன மேலும் பல சுமையை இந்த மக்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். வறுமைக்கும்,சமூகச் சீர் கேடுகளுக்கும், இன ஐக்கியமின்மைக்கும், பெண்கள் சமத்துவமின்மை, மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும், ஊழலும் லஞ்சமும் ஆனதொரு ஆட்சி உருவாகுவதற்கும், வன்முறையும் வன்மவும் மிக்கதொரு நீதி நியாயம் இல்லாத சமுதாயம் உருவாக முழுக்க முழுக்க  காரணமானவர்கள் யார்? சிறி லங்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் யார் How did Sri Lanka become bankrupt? 

இராஜதந்திரங்களில் வல்லவர்கள் என்று பலர் புகழும் பொழுது ஏன் இந்தத் தேசத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள். இந்த சிறிய தீவை எப்படி பொருளாதாரா சுரண்டல் காரர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு இராஜதந்திரமும் அறிவும் ஆற்றலும் கொண்ட சிங்கள தலைவர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து மாற்றங்களோடு கூடிய எல்லா மக்களும் சுதந்திரத்தோடும் கௌரவத்தோடும் கூடிய பொருளாதார வளச்சி கொண்ட தேசமாக ஏன் இந்த சிறிய தேசத்தை மாற்றாமல் இன்றும் பேரினவாதம் அளித்துக்கொண்ட இருக்கிறதே இந்த சிறிய தீவை. இன்னும் ஆழமாக சிந்திக்கும் அறிவை இச் சிறிய தீவில் எம் தலைவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லையா? எத்தனை துயர வரலாறுகளை இந்த தீவு கடந்தும் கடக்காமல் செல்கிறது. பல இனங்களும் வாழக் கூடிய தேசமாக இன்னும் ஏன் ஒருவரின் மனங்களை ஒருவர் வெல்ல முடியாமல் இருக்கிறது. படித்த குழாம்(educated elites) என்று இருந்த தலைவர்கள் பிரிவினையையும் வெறுப்புகளையும் ஏன் சம்பாதித்தார்கள்? எங்கிருந்து இந்த இராஜதந்திரங்களை கற்றுக்கொண்டார்கள்.

இந்த நாட்டை ஆட்சி செய்த தலைமைகளும் அந்த நாட்டின் புத்த மதத்தை பிழையான பாதையில் கொண்டு சென்று இனங்களுக்கு இடையில் பகைமையை உண்டாக்கி  இந்த மக்களை சிந்திக்க விடாமல் தவறான பாதையில் கொண்டு போய் இனவாதம் என்றதொரு பெரும் பூதத்தை வளர்த்து விட்ட பெளத்த துறவிகளுமே காரணம். நீதி, நிர்வாகம், சட்டம் இவை அனைத்து துறைகளும் இன்று சுயமாக இயங்கவில்லை. separation of power என்று சொல்லக் கூடிய அதிகாரப் பிரிவுகள் இங்கு சுயமாக இயங்கவில்லை. எல்லாவற்றிலும் அரசியலும் அதிகார ஆதிக்கமுமே தலையீடு செய்கின்றன. ஜனாதிபதியின் அதி கூடிய அதிகாரத்தின் மூலம் அவரே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்.

இன்று ஈழத் தமிழர் நிலைமை என்றும் இல்லாத அளவுக்கு பின் நோக்கி போய்க்கொண்டிருகிறது ஒரு காலம் ஒற்றுமையோடு பயணித்த இனம் இன்று ஒற்றுமை குலைந்து ஒரு வித இலக்கும் இன்றி நிலத்திலும் புலத்திலும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சண்டை போட்டு எதிரிக்கு சாதகமான நிலையை உண்டு பண்ணி பட்டு வேட்டி கட்டும் கனவோடு இருந்து இன்று நாம் கட்டிய கோவணம் களவாடப் பட்ட நிலையில் உள்ளோம். எதிர் காலம் இனி சரியான தலைமையின் கீழ் ஒன்று பட்டு பயணிக்காவிடில் மீண்டும் இருள் சூழ்ந்த காலமாகவே ஈழத் தமிழர் காலம் அமையலாம். புலம் பெயர்ந்த  தமிழர் போல் ஏதிலிகளாக அகதி வாழ்வாக எந்தத் தேசமும் இல்லாதவனாக இன்னும் இந்த இனம் அலையுமோ.

இன்று கொரோனாவின் திரிபுபடுத்தப்பட்ட (Mutation ) அலை நாடு முழுவதும் பரவி இதை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாளாந்தம் பெருமளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். சுகாதார வசதி இன்மை பொருளாதாரப் பிரச்சினை கொரோனா தடுப்பூசிக்காக இன்னும் ஒரு நாட்டை நம்பி இருத்தல் இப்படி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படியே நிலைமை தொடர்ந்தால் நாடு பெரும் பொருளாதர பிரச்சினையை எதிர் நோக்க வேண்டிய நிலைமை வரும். இன்று அன்றன்றாடு கூலி வேலை செய்து பிழைக்கும் மக்கள் ஒரு வேளை உணவுக்கே கஸ்ரப்படும் நிலைமையை பார்க்கிறோம்.

 ஒரு காலம் தன்னிறைவுப் பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்து வந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர காரணமானவர்கள் இவர்கள் தான். ஸ்ரீ லங்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இன்று பல லட்ஷம் கடனோடே பிறக்கின்றனர். வளர்ச்சி அடைந்து வரும் சில வறிய நாடுகள் கூட கொரோனாவின் தாக்கம் இருந்தும் ஓரளவுக்கு பொருளாதாரத்தில் தாக்குப் பிடிக்கின்றனர். ஆனால் இலங்கையில் கொரோனா மட்டும் இப்போ இருக்கும் நிலைக்கு காரணம் என கூற முடியாது சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து இது பெரும் பொருளாதார முடக்கத்தை உண்டு பண்ணி இருந்தாலும் இவர்களது பிழையான பொருளாதார கொள்கைகள் மேலும் நாட்டை ஒரு பெரும் பொருளாதார அவசரகாலா (Economic emergency ) நிலைமைக்கு தள்ள வைத்திருக்கிறது.

இனங்களுக்கிடையிலானா ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தும் இன்னும் கூட பொருளாதார அபிவிருத்தியோ இனப்பிரச்சினைக்கான தீர்வோ இன்னும் ஏற்படவில்லை. இது தீர்க்கப்பட்டிருந்தால் இன்று புலம் பெயர் தமிழ் மக்கள் கூட முதலீடு அபிவிருத்தி என்று செய்ய முன் வந்திருப்பார்கள். அமைதி சமாதானம் எதுகும் இன்றி கடன் சுமைகளை காவிக் கொண்டு இன்றும் வெளி நாட்டுக் கடனுக்காக எப்போதும் கை ஏந்தும் நிலையில் உள்ளது. போலியான வாக்குறுதிகளை சர்வதேசத்துக்கும் தம் மக்களுக்கும் வழங்காமல் இனியும் இந்த சிங்கள ஆட்சியாளர்களும் இந்த மக்களும் தம் நாடு பற்றி சிந்திப்பார்களா. இனங்களுக்கிடையே சமாதானத்தை உண்டு பண்ணி ஐக்கியத்தை வளர்ப்பார்களா ஒரு மாற்றங்களோடு வளர்ச்சிப் பாதையில் செல்வார்களா. இல்லை  இந்த மக்களின் கட்டி இருக்கும் கோவணமும் களவாடப்படுமா.

பா.உதயன் ✍️
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.