Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி இது ரகசியம் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்று வெள்ளிக்கிழமை (22/10/21), தனது “காலைக்கதிர்” மின்-ஏட்டில், நண்பர் வித்யாதரன், “இனி இது ரகசியம் அல்ல”, என்ற வழமையான அங்கத்தில் கொஞ்சம் நீட்டி நீளமாக ஒரு சம்பவத்தை எழுதியுள்ளார்.
அதை என் கவனத்துக்கு நியுசிலாந்து நண்பர் “வரதா” கொண்டு வந்துள்ளார். (செய்தி யாழ்ப்பாணத்திலிருந்து, நியுசிலாந்து ஓக்லன்ட் சென்று கொழும்புக்கு வந்துள்ளது.!)
எனது கட்சி/கூட்டணியில் இன்று இல்லாத, “திரு. பிரபா கணேசனை சந்தித்து நான் அரசியல் பேசியுள்ளேன்” என்பதே செய்தி சுருக்கம்.
1970 களிலிருந்து கொழும்பில் வாழும், யாழ் நல்லூரை சேர்ந்த எமது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்தாவின் தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் தொடர்பாக, பிரபாவை நீண்ட காலத்தின் பின், நண்பர் ஸ்ரீகாந்தின் அழைப்பின் பேரில் சந்தித்தேன்.
பின்னர் எமது சகோதரி கெளரியின் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் வைபவம் ஒன்றிற்கு போன போது அங்கு பிரபாவும் வந்திருந்தார்.
“கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயற்பட இருவரும் இணங்கி இருக்கின்றார்கள்” என்ற காலைக்கதிர் செய்தி, ஒரு அரசியல் செய்தி.
இதில் உண்மையில்லை. இந்த செய்தி தவறு. அரசியல் தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை. சிந்திக்கவும் இல்லை.
எங்கள் நண்பர் ஸ்ரீகாந்தாவின் விவகாரம் தொடர்பாக இருவரும் பேசினோம். எங்களது நேரடி ஆலோசனைகளை, நண்பர் ஸ்ரீகாந்தா பெற்றுக்கொண்டார். அதுவே அந்த சந்திப்பின் நோக்கம்.
தனிப்பட்ட அவ்விவகாரம் பற்றி பகிரங்கமாக இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை.
எனது பாதை கரடுமுரணானது. ஆனால், நேரானது.
2005 முதல் 2020 வரை என் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சிகள் உட்பட, உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் ஏற்பட்ட எல்லா சவால்களையும் வெற்றிக்கரமாக எதிர்கொண்டு, இன்று தென்னிலங்கையில், தேசிய மட்டத்தில், தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வீச்சு பெற்று, வளர்ச்சியடைந்த ஒரு கூட்டணியின், தலைமை பொறுப்பில் நான் இருக்கிறேன்.
ஆகவே சும்மா, எடுத்தேன், கவிழ்த்தேன், என்று நான் முடிவுகளை எடுப்பதில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளே இருக்கும் தமிழரசு கட்சியுடனும், அதற்குள்ளே முடிவுகளை எடுப்பவர்களுடனும் நெருக்கமான உறவு கொண்டவரும், என்னுடனும் தனிப்பட்ட நெருக்கமுள்ள நண்பர் வித்யாதரன் காலைக்கதிரின் பிரதம ஆசிரியர் என எண்ணுகிறேன்.
சந்திப்பதும், பேசுவதும், சிரிப்பதும், மரியாதை நிமித்தம் கைலாகு கொடுப்பதும் எல்லாமே சமூக- அரசியல் வாழ்க்கைதான். நண்பர் வித்திக்கு தெரியாததா?
தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்புதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதில் விடுதலை புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள்.
2009ம் வருட இறுதிப்போர் வரை மகிந்த அரசுடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள்.
ஆயுதப்போர் என்பது அழிவுப்போர் என்று சொல்பவர்களும் உள்ளார்கள்.
இவையெல்லாம் ஒன்று சேர்ந்தது காலத்தின் கட்டாயங்கள். “எது சரி, எது பிழை” என இன்று நாம் தீர்ப்பு சொல்ல முடியாது. வரலாறுதான் தீர்ப்பு வழங்கும்.
அதுபோல், ஜனநாயக மக்கள் முன்னணிக்குள், தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் புதுவரவு, புதுபித்தல் வரவு மாற்றங்கள் வருமாயின், காலத்தின் கட்டாயங்கள் ஏற்படுமாயின், நான் பகிரங்கமாக சொல்வேன்.
என்னிடம் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது. நண்பர் வித்திக்குதான் முதலில் சொல்வேன். ஹஹா..!
ஆனால், இந்த செய்தியில் சொல்லப்பட்டதன்படி, எமது கட்சி/கூட்டணியில் எதுவும் நடக்கவில்லை. அரசியல் சந்திப்பு எதுவும் நிகழவில்லை.
தனது மூல செய்திக்கு தந்த அதே முக்கியத்துவத்துடன் இந்த விளக்க செய்தியையும் நண்பர் வித்தி, காலையும், மாலையும் பிரசுரிப்பார் என நம்புகிறேன்.

 

247422875_10215887471698849_682935457962

246417980_10215887472618872_252924679040

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.