Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போறாளே பொன்னுத்தாயி.... பொலபொலவென்று கண்ணீர் விட்டு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போறாளே பொன்னுத்தாயி.... பொலபொலவென்று கண்ணீர் விட்டு....

இது வைரமுத்தர் பாட்டு.... ஆனால் நான் சொல்ல வரும் விசயம்... வேறு...

பிரித்தானியாவின் அரச குடும்ப இளவரசர், ஹரியை.... சாதாரண குடும்ப பெண்.... மேகன்.... அதுவும், அரை வெள்ளை, அரை கறுப்பு இன கலப்பு பெண் தள்ளிக் கொண்டு போன கதை நமக்கு தெரியும்...

அதே போல ஒரு கதைதான் ஜப்பானிய அரச குடும்பத்தில் நடந்துள்ளது....

ஜப்பானின், 'ஹரி - மேகன்' கதை என்று இது சொல்லப்படுகின்றது.

ஜப்பானிய அரச குடும்பத்தில், முடிக்குரிய இளவரசர் மகள், இளவரசி மக்கோ. இவர் பிரிட்டனின் லெஸ்டேர் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் எடுத்தவர்.

Princess Mako: Who is Japanese royal giving up her title to marry former  classmate? | The Independent

அவரது காதல் கணவர் கெய் கொமுரோ ஜப்பானிய சமூகத்தில் ஒரு சாதாரண குடிமகன். அதாவது இளவரசர் ஹரியை மணந்து கொண்ட மேகன் போன்ற ஒருவர்.

Mako and her husband Kei Komuro leave a press conference after announcing their wedding

இவர் பணத்துக்காகவே இளவரிசையை மடக்கி கொண்டார் என்று ஜப்பானில் ஊடகங்கள் சொல்ல ஆரம்பித்தன.

இது தம்மை பெரிதும் காயப் படுத்தியதாக சொல்லி, அரச திருமண வைபவத்தினையும் நிராகரித்து, அரச குடும்பத்தினை விட்டு நீங்க முடிவு செய்து, அதன் காரணமாக சம்பிரதாயமாக கிடைக்க கூடிய 140 மில்லியன் யென் பணத்தினையும் வேண்டாம் என்று சொல்லி அரண்மனையை விட்டு வெளியேறினார்.

தந்தையையும், தாயையும், சிரம் தாழ்த்தி வணங்கி, தங்கையினை ஆரத்தழுவி, இளவரசி அரண்மனையை, அரச குடும்பத்தினை விட்டு நீங்கி, வெளியேறினார்.

FOCUS: Princess Mako's marriage "warning sign" for Japan's imperial system

Japan's Princess Mako finally marries commoner boyfriend Kei Komuro - BBC  News

அந்தக்கணத்தில், நம் கவியரசர், வைரமுத்தரின், போறாளே பொன்னுத்தாயி.... பொலபொல வென்று கண்ணீர் விட்டு... பாடல் மிக சிறப்பாக பொருந்தியது.

தம்பதிகள், ஜப்பானை விட்டு வெளியேறி, அமேரிக்காவின், நியூயார்க் நகரில் வாழ திட்டமிட்டு உள்ளனர். முன்னாள் இளவரசியின், கணவர், அங்கு ஒரு சட்ட அலுவலகத்தில் வேலை செய்யப்போகின்றார்.

Japanese Princess Mako's long wait to marry ends at last | Reuters+

நாம் வாழ்வது ஒருமுறை. அதனை மனதுக்கு பிடித்தவருடன் சந்தோசமாக வாழ விரும்புகிறேன் என்று சொல்லி.... ஜப்பானில் இருந்து விடை பெறுகிறார், அந்த நாட்டின் புகழ் மிக்க ஒரு இளவரசியார்.

அதுசரி... இந்த அரண்மனையை, அரச வாழ்வினை விட்டு வெளியேறுபவர்களுக்கு, அமெரிக்கா தான் தஞ்சம் கொடுக்கிறது போலும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

விசேஷமானவை அனைத்தும் அமெரிக்காவை நாடும் அல்லது அமெரிக்கா என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடும்.......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.