Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரொப்றவுக்சல் தமிழாலயம் 

கல்வி, கலை, விளையாட்டு Castrop-Rauxel Thamilalayam 

Bildung, Kultur und Sport 

DueS 

Schulleitung Subramaniam Chundralingam 

Liebigstr. 57 44579 Castrop-Rauxel 

Tel: 02305 963367 

07.11.2021 

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு

தமிழாலய நிர்வாகியாகிய என்னால் கஸ்ரொப் றவுக்சல் நகரத்தின் தமிழ்ச்சிறார்களின் நலன்கருதி நகரமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்டதுவே இத்தமிழாலயம் ஆகும். தமிழ்க் கல்விக் கழகத்தினரோ அன்றி வேறெந்த அமைப்புகளுமோ என்னை நியமனம் செய்யவில்லை.தமிழ்க் கல்விக் கழகத்தின் ஒருங்கமைப்பின் கீழ் தமிழாலயம் இதுவரை காலமும் இயங்கி வந்தமை மற்றும் தமிழாலயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழாலயத்திற்குரிய இடங்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஒழுங்குகளும் என்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்தமையே

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் பற்றியும் அது தொடர்பாக எம்மால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் யேர்மனியத் தமிழ்க் கல்விக் கழகம் பதிலளிக்கத் தவறிய நிலையில், ஏலவே கற்பித்து வந்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் (பிரான்சு) பாடநூல்களையே நாம் தொடர்ந்து கற்பிப்பதென முடிவுசெய்தமை நீங்கள் அறிந்ததே

எமது தமிழாலயப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்போடு தற்போது கற்பித்தல் நேர்த்தியாக நடைபெற்று வருகின்ற அதேவேளை, தமிழ்க் கல்விக் கழகத்திடம் தனிப்பட்ட நிர்வாகச் செயற்பாடுகளுக்காக எம்மால் கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் முகமறியா நபர்களிடம் கொடுக்கப்பட்டு பல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, முயற்சிகள் பயனளிக்கவில்லை என்பதனையும் நாம் அறிகிறோம். அதுமட்டுமின்றி, தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பிலிருப்பவர்களின் ஏவுதலின் நிமிர்த்தம் முன்னறிவித்தல் ஏதுமின்றி செயற்பாட்டாளர்கள் சிலர் எமது தமிழாலயத்தில் கற்பித்துவரும் ஆசிரியர்களது வீடுகளுக்குச் சென்று குழப்பமுண்டாக்கும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. இவையனைத்தையும் எமது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் எதிர்கொண்டு, ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகிறார்கள்

திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்கள் மீளப்பெறப்படாத வரையில், தமிழ்க் கல்விக் கழகத்துடன் இணைந்து இயங்கவியலாத இக்கட்டான சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடநூல்களில் திரிபுகள் இருப்பதை காலங்கடந்தநிலையில் அதை வெளியிட்டவர்களே ஏற்றுக்கொண்டுள்ள போதும் தமிழ்க் கல்விக் கழகம் அதே பாடநூலைத் தொடர்ச்சியாகக் கற்பிக்க வலியுறுத்துவது முறையற்றதொன்றாகும்

அவ்வாறானநிலையில், 04.11.2021 திகதியிடப்பட்டு தமிழ்க் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையானது, எமது நகரத்தின் ஒற்றுமையைக் குலைத்து புதிதாக தமிழாலயம் ஒன்றை ஆரம்பிக்கும் வகையில் எழுதப்பட்டிருப்பதோடு, திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் மீளப்பெறப்படாத காரணத்தினாலேயே நாம் தனித்து நின்று செயற்படுகிறோம் என்பதுவோ அன்றி எம்மோடு தொடர்பு கொண்டு தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர்கள் உரையாடியவேளையில் நாம் வலியுறுத்திய திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் தொடர்பான விடயங்களையோ குறிப்பிடாமல் தவிர்த்து, உண்மைக்குப் புறமான விடயங்களைக் குறிப்பிட்டு எழுதப்பட்டிருப்பதானது மிகவும் 

அநாகரிகமான செயலாகும்

தமிழினம், தமிழ்மொழி என்ற அடிப்படையில் ஒற்றுமையாக இருக்கும் பல நகரங்களுக்குள் இவ்வாறானவர்கள் சென்று அந்நகர மக்களின் ஒற்றுமையைச் சிதைத்துள்ளார்கள்.அந்தவரிசையில் தற்போது வேறு நகரங்களிலிருந்து வந்து, சிறிய நகரமான எமது நகரத்தினையும் கூறுபோடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதனை நாம் அனுமதிக்க இயலாது

கடந்த முப்பது வருடகாலமாக தேசியத்தைக் கட்டியெழுப்பும் வகையில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே.எனினும், 2009 காலப்பகுதியின் பிற்பாடு தமிழ்க் கல்விக் கழகத்தின் பல நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றமையைத் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டி வருகின்ற அதேவேளை, உருவெடுத்துள்ள பாடநூல் விவகாரம் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேசியச்சிந்தனையில் வலுவான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. திரிபுபடுத்தப்பட்ட பாடநூல் மீளப்பெறப்படாத நிலையில் எமது தமிழாலயம் தொடர்ந்தும் தனித்தே இயங்கும்.இவ்வாறான குழப்பமான நிலையிலிருந்து விலகி, நாம் நேர்த்தியுடன் தேசியத்தின் பாதையில் தமிழ்ச்சிறார்களுக்கு சரியான பாடநூலைக் கற்பித்து வரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவதோடு, தேர்வு, சான்றிதழ் மற்றும் மதிப்பளிப்பு, பட்டமளிப்பு ஆகிய விடயங்களும் வழமைபோலவே இடம்பெறும் என்பதனை உறுதியுடன் கூறிக்கொள்கின்றேன்

வாழ்க தமிழ்

நன்றி

சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் நிர்வாகி, கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் 

கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக்கட்டமைப்பை தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத்தூண்களைத் தகர்த்துவிட எதிரி முனைகிறான். இனத்தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம்

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.