Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்கு நீரிணையில் மீன்பிடிக்க ஒரு தீர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கு நீரிணையில் மீன்பிடிக்க ஒரு தீர்வு

00000000
இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாக்கு க்  குடாவில் இந்தியா தடை செய்ய வேண்டும்.
000000000
வி. சூர்யநாராயணன்
suriyanarayan.jpg
 
நரேந்திர மோடி முதல் தடவை  பிரதமராக இருந்தபோது,பாக்கு நீரிணைப்  பகுதியில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் துயரங்களுக்கு தீர்வு காணுமாறு தமிழகத்தைச் சேர்ந்த தனது சகாவான   பொன் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க தமிழக மீனவர்கள் அடங்கிய பெரும் குழுவொன்றை  புதுடி ல்லிக்கு அழைத்தார். இந்த விட யத்தில் எனது பணியை நன்கு அறிந்த ராதாகிருஷ்ணன், சிக்கலான பணியில் அவருக்கு உதவுமாறு என்னிடம் கேட்டார். கச்சதீவை விட்டுக்கொடுப்பது,அந்த த்  தீவு மற்றும் அதைச் சூழவுள்ள  பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை வழங்குவது, இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்களை சுட்டுக்கொல்லப்படுகின்றமை  போன்ற பிரச்சனைகள் குறித்துபாஜக தலைமையகத்தின் அரங்கில்  19 பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம்   நடைபெற்றது.  தலையிடுமாறு என்னிடம் கேட்கப்பட்டது . மீனவர்களின் நிகழ்வுகளை விவரித்ததற்காக நான் அவர்களைப் பாராட்டினேன். பின்னர் : “இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனையைப் பற்றி நீங்கள் யாரும் பேசவில்லை. இலங்கை த் தமிழ்  மீனவர்கள் தங்கள்சொந்தக்  கடலில் மீன்பிடிக்கும் உரிமை யை பெற்றுள்ளார்களா ? என்று நான் கேட்டேன் பின்சிறிது  மௌனம் நிலவியது. மீனவர்கள், அன்றும் இன்றும், இந்தக் கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. கூட்டம் தோல்வியில் முடிந்தது.
palk-straits-fishing-300x170.jpg
 
இன்று தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான டாக்டர் லோகநாதன் முருகன் மத்திய அரசில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சராக உள்ளார். அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டங்களில் நிபுணரான முருகன், பிரச்சினைகளை  நன்கு அறிந்தவர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று விடுகின்றனர். அவர்கள்மடிவலையை  பயன்படுத்துகின்றனர், இது கடல் சூழலியலுக்கு கணக்கிட முடியாத தீங்கை விளைவிக்கிறது; மேலும் இது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் மூன்று நாட்களில், அந்த நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க வெளியே வருவதில்லை, ஏனெனில் அவர்களின் வலைகள் இந்திய மீனவர்களால் அழிக்கப்படும். கடலில் சேறும் சகதியுமாக இருப்பதால் மறுநாள் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க சிரமப்படுகின்றனர்.
fishing-1-300x162.jpg
தென் சீனக் கடலில் சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் செய்தது போல், இலங்கை அரசு சர்வதேச நீதிமன்றத்தை அணுகினால், நாடுகளிடையே இந்தியாவின் பிம்பம் சடுதியாக பறிபோய்விடும்
முருகன் உறுதியான முடிவுகளையும், வலுவான செயல்களையும் முருகன் எடுப்பது காலத்தின் தேவை. இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாக்கு நீரிணையில்  இந்தியா தடை செய்ய வேண்டும். கடல் சூழலியலுக்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் மீன்பிடி முறைகளை கைவிட வேண்டும். தமிழக அரசின் ஆதரவைத் திரட்டுவதும், மாநில மீனவர்களுக்கு நிலைமை கடினமானதாக அமையப்போகின்றதென்பதை புரிய  வைப்பதும் முருகனின் முதன்மைப் பணியாகும் . இனம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றின் பிணைப்புகள் பல நூற்றாண்டுகளாக மீனவர்கள் இணக்கமான சகவாழ்வை வாழ உதவியது. மேலும், இலங்கையில் வடக்கு மாகாண மக்களுக்கு மீன்பிடித்தல் மிக முக்கியமான வருமான ஆதாரமாகும். கல்விமான்  அகி லன் கதிர்காமரின் கூற்றுப்படி, வட மாகாணம் இலங்கைக்கு  மீன் பிடியில்  மூன்றில் ஒரு பங்குபங்களிப்பைவழங்குகிறது  . நீடித்த இனக்கலவரத்தின் போது மீன் பிடித்தல் வெகுவாகக் குறைவடைந்திருந்தது . பாக் கு நீரிணையின்  இலங்கைப் பகுதியில் மீன்பிடிக்கத் தடை, இலங்கை மீனவர்கள் அகதிகளாக இந்தியாவுக்குச் சென்றமை , இந்திய இழுவை ப்படகு உரிமையாளர்களுடன் அவர்கள் வேலை செய்தல், புலிகளுடன் தொடர்பு பட்டிருப்பதான குற்றச் சாட்டுடன்  இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுதல்என்பன   இருதரப்பு உறவுகளில் கணிசமான அழுத்தங்களைக் கொண்டுவந்திருந்தது.
Fishing-Boat2-300x198.jpg
 
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில், இலங்கைத் தமிழ் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிப்பதை  ஆரம்பிக்க  விரும்பினர், ஆனால் இந்திய மீனவர்களின் கண்மூடித்தனமான ஊடுருவல்  மற்றும் அவர்களின் ஆபத்தான நடைமுறைகள் தொடர்ந்து முக்கிய தடைகளாக உள்ளன. இழுவை படகுகள் “நீரின்  அடிப்பகுதியின் குளம்புகள்” மற்றும் ” மீன் மற்றும் நீரின் அடிப்பகுதியில்  உள்ள  ஏனைய  இனங்களை கொல்லும் புல்டோசர்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன. அவை அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளுக்குள், பாக்கு  நீரிணையின்  இந்தியப் பகுதியில்  மீன்கள் இல்லாமல் இருந்தது; மேலும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய ஆரம்பித்தனர். தீவின் வடகிழக்கு பகுதியில் கூட இந்திய இழுவை படகுகளை காண முடியும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒஸ்கார் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் மிக முக்கியமான தடையாக இருப்பது நம்பிக்கை பற்றாக்குறையாகும்.. இலங்கை தரப்பில் சம்மந்தப்பட்ட  அமைப்புகள் – அரசு, கடற்படை மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழக மீனவர்கள் நேர்மையானவர்கள் அல்ல என்று மீனவர்கள் கருதுகின்றனர். நோர்வே ஆதரவு டன் போர்நிறுத்தம் அமுலிலிருந்த  காலத்தில், டாக்டர் விவேகானந்தன் தலைமையில்  அப்பாவி மீனவர்களை விடுவிப்பதற்கான கூட்டணி (ARIF), இரு நாட்டு மீனவர்களிடையே ஒரு பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது. முதன்முறையாக, 2004ல்,   இழுவை படகு மீன்பிடி நிறுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை இந்தியத் தரப்பு ஏற்றுக்கொண்டது. பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன,மடிவலை  மீன்பிடி இன்னும் தொடர்கிறது. 2005 ஆம் ஆண்டு கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தில், இலங்கை தனது கடற்பரப்பில் அனுமதி  பெற்ற மீன்பிடித்தலுக்கான முன்மொழிவுகளை பரிசீலிக்க முதன்முறையாக ஒப்புக்கொண்டபோது, இரண்டாவது சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தமிழக அரசு அதை வரவேற்று விரிவான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். இரு திராவிடக் கட்சிகளும் தீர்வு காண்பதை விட ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் அதிக ஆர்வம் காட்டின.
tamil-nadu-fishermen.jpg
 
‘பந்து ‘இந்தியாவின் பக்கத்தில்  உள்ளது. இந்திய அரசு முன்முயற்சி எடுத்து, 2022ம் ஆண்டு முதல் மடிவலை இழுவை படகுகள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படும் என உடனடியாக அறிவிக்க வேண்டும்.இந்த அறிவிப்பை தொடர்ந்து இரண்டு படிகள் எடுத்தால் இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்ய முடியும். முதலாவதாக, நீர் மிகவும் ஆழமான ஒடிசா கடற்கரையில் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தலாம். இழுவை படகுகளை வாங்குவதற்கு ஒடிசா அரசை அணுகலாம். இரண்டாவதாக, ஆழ்கடல் மீன்பிடியை மேம்படுத்த புது டி ல்லி மிகவும் ஆர்வமாக உள்ளது. எனவே, விசைப்படகுகள், சில மாற்றங்களுடன், தாய்க்கப்பலுக்குஉதவும்  சிறிய மீன்பிடிக் கப்பல்களாகப் பயன்படுத்தப்படலாம். புலம்பெயர்ந்த்துச்செல்லும் மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்களை  ஆழ்கடலுக்கு  மீன்பிடிக்கச் செல்லுமாறு வற்புறுத்தலாம். ஒரு நெருக்கடியை வாய்ப்பாக மாற்றுவதே இ ராஜதந்திரத்தின் வெற்றி. புதுடி ல்லி உறுதியாக இருந்தால், பாக்கு நீரிணையில்வெற்றியான  நிலையை உருவாக்க முடியும். இழுவை படகுகள் நிறுத்தப்பட்டால், ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியும். இந்தியா பாக் குநீரிணையை  ஒரு போட்டியான பகுதியிலிருந்துபொதுவான பாரம்பரியபிராந்தியமாக  மாற்ற முடியும்.  இரண்டு அரசாங்கங்கள்  மற்றும் மாகாண அரசாங்கங்கள், கடற்படைகள் மற்றும் கடலோரக் காவல்படைகள், மீன்பிடித்திணைக்களங்கள்   மற்றும் எல்லா வற்றிற்கும் மேலாக, இரு நாடுகளின் மீனவ சமூகங்கள் என சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினர்  இருப்பதை அங்கீகரிப்பது முதல் படியாகும். அடுத்த கட்டமாக கடல் சூழலியலாளர்கள், மீன்வள நிபுணர்கள், மூலோபாய நிபுணர்கள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் அடங்கியபாக்குநீரிணை  அதிகாரசபையை   (PBA) உருவாக்க வேண்டும். பாக்கு நீரிணை  அதிகாரசபையானது   சிறந்த நிலையான மீன்பிடி, பயன்படுத்தக்கூடிய மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் மீன்பிடி தினங்களின்  எண்ணிக்கை ஆகியவற்றை தீர்மானிக்க முடியும். கடல் வளத்தைசெழுமை படுத்துதல், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
சிறந்த அயலுறவு  கொள்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தற்போதுள்ள எல்லைகளை மாற்ற முடியாது என்றாலும், எல்லைகளை பொருத்தமற்றதாக மாற்ற அவரால் முயற்சி செய்யமுடியும்  என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டியிருந்தார் . இந்த அரிய தருணம் தவறவிட முடியாத அளவுக்கு மதிப்புமிக்கது.
நியூ இந்தி  யன் எக்ஸ்பிரஸ்
link- newindian express
Netting a solution for fishing in Palk Bay
The fishing equipment that is prohibited in Sri Lanka must be banned by India in the Palk Bay.
V Suryanarayan

https://thinakkural.lk/article/153095

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

யதார்த்தத்தை சொல்லும் கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்னதான் சொன்னாலும் திருடர்கள் திருந்த மாட்டார்கள். அது பிறவிக் குணம்

17 minutes ago, வாலி said:

யார் என்னதான் சொன்னாலும் திருடர்கள் திருந்த மாட்டார்கள். அது பிறவிக் குணம்

திருடனாய் பார்த்து திருந்தும் வரையும் திருட்டை ஒழிக்க முடியாது.🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.