Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலையில் உங்கள் குழந்தையை எழுப்புவது எப்படி?

Featured Replies

உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள்.

குழந்தைகள் இரவு முழுக்க நன்றாகத் தூங்கிய பின் நல்ல மூடில் இருப்பார்கள். 2 முதல் 5 வயதான குழந்தைகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் தடங்கல் இல்லாத தூக்கம் தேவை. சில குழந்தைகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்குவார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை எழுப்ப வேண்டியிருக்கும்.

தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறுவது என்பது யாருக்குமே குழப்பமான ஒரு தருணம்தான். குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. இந்தத் தருணம் குழந்தைகளுக்கு நாளெல்லாம் மனதில் நிற்கும் வகையில் பெற்றோர்கள் அவர்களிடம் மிகவும் பாசத்தோடு, இரக்கத்தோடு, பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.

எப்படி எழுப்பலாம்...

குழந்தையை எப்போதும் ஒருவரே எழுப்பாதீர்கள். ஒரு நாள் அம்மா எழுப்பட்டும், அடுத்த நாள் அப்பா எழுப்பலாம். இப்படி மாற்றவில்லை என்றால் குழந்தை ஒரு ஆளுக்குப் பழகிவிடுவாள்.

குழந்தை தூங்கிவிட்டுக் கண்ணைத் திறந்ததும் அவளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.

உங்கள் குழந்தைக்கு ஒரு தனி இடம் உண்டு என்பதையும் அவள் இடத்தை உலகில் வேறு எதுவுமே நிரப்ப முடியாதது என்பதையும் அவளிடம் காட்டுங்கள். "நீதான் எங்கள் பொக்கிஷம், உன்னைப் பெற்றதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம், இந்த சமூகத்தில் எங்களுக்குப் பெற்றோர் என்ற அந்தஸ்து கிடைக்கச் செய்தது நீதான்" என்று அவளிடம் சொல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

குழந்தை நாள் முழுதும் என்னென்ன நல்ல விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள். உதாரணமாக, "இன்றைக்கு உன் டீச்சர் உன்னைப் பார்ப்பதற்காகக் காத்திருப்பார் (உன்னை என்பதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் பெயரைச் சொல்லுங்கள்). நீ நல்ல தோழியாக இருப்பதால் உன் தோழி உன்னோடு கைகோர்த்துக்கொள்வாள். உனக்குப் புதிய தோழர்கள், தோழிகள் கிடைப்பார்கள், நீ ஜாலியாக வீட்டுக்கு வருவாய்" என்று சொல்லலாம். உணர்ச்சிபூர்வமான விஷயங்களைச் சொல்லுங்கள்; பொம்மை, சாக்லேட், பிஸ்கட் என்று பரிசுப் பொருட்களை எதிர்பார்க்க வைக்க வேண்டாம்.

முடிந்தால் உங்கள் குழந்தையின் பெயரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து ஒரு கதை சொல்லுங்கள். இந்தக் கதையில் பள்ளிக்கூடத்தை ஒரு அன்பான இடமான விவரிக்கலாம்.

தாமதிக்காமல் குழந்தையைக் குளிப்பாட்ட பாத்ரூமுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

குழந்தை தன் குடும்பத்தைத் தவிர வேறு சூழலில் இருப்பதை விரும்ப வேண்டும். இந்த வளர்ச்சி 2-5 வயதுக் காலத்தில் ஏற்பட வேண்டும்.

எப்படி எழுப்பக் கூடாது...

குழந்தையை எழுப்ப சமையலறையிலிருந்து அவள் பெயரைச் சொல்லிக் கத்தாதீர்கள்.

காலையிலேயே அவளை நாயே பேயே முண்டம் என்றெல்லாம் திட்டாதீர்கள். அதற்குப் பிறகும்தான் குழந்தையை அடித்து எழுப்பாதீர்கள்.

தினமும் காலையில் குழந்தைகள்தான் பெரிய ரோதனை என்றெல்லாம வசனம் பேசாதீர்கள்.

பள்ளிக்குச் செல்லத் தாமதம் ஆனால் தண்டனை காத்திருக்கிறது என்று குழந்தையிடம் சொல்லாதீர்கள். பிறகு குழந்தை பள்ளிக்கூடத்தை பூதங்கள் நடமாடும் இடம் போலப் பார்க்க ஆரம்பித்துவிடுவாள்.

குழந்தைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை என்றால் அவளை வலுக்கட்டாயமாக அனுப்பாதீர்கள். அவளுடன் கொஞ்சம் பேசி அவள் எதனால் பள்ளிக்குப் போக விரும்பவில்லை என்று கண்டுபிடியுங்கள்.

குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாதபோது ஸ்கூலுக்கு அனுப்பாதீர்கள். உடல் குணமாக அவளுக்கு ஓய்வு தேவை. அதே சமயம் அவளால் மற்ற குழந்தைகளின் உடல்நலம் பாதிப்படைய நாம் அனுமதிக்க முடியாது.

காலையில் குழந்தையை எழுப்புவது ஒரு கலை. பயிற்சியால் அதை நமக்குக் கைவந்த கலையாக்கிக்கொள்ளலாம். அதிகாலையில் நம் அன்புக் குழந்தை நம்மை ஒரு புன்னகையுடன் கட்டிக்கொள்வது மிகவும் சந்தோஷமான ஒரு அனுபவம். நாம் நாள் முழுதும் உற்சாகமாக இருப்பதற்குக் காலை நேரத்தில் நம் குழந்தைகளுக்குச் சிறிது நேரத்தை ஒதுக்கினால் போதும்.

தோழி.கொம்

அட குழந்தைகளை பற்றி என்றா ஜம்முவை பற்றி சொல்லி இருக்குதோ..........சரி சரி ஜம்முன்ட மம்மி இதை வடிவா வாசியுங்கோ..........அது சரி தூய்ஸ் இருந்தா போல இப்படி எல்லாம் போட வெளிகிட்டீங்க............என்னாவது கெட்டிமேள மாட்டாரோ தங்களுக்கு.............. :P :unsure: :P

இங்கு எத்தன வயசு குழந்தைகளை பற்றி கூறப்படுகின்றது...

நான் அறிந்தவரை குழந்தைகளை பெற்றோர் எழுப்புவதில்லை. அதுகள் தாமாக கண்ட, கண்ட நேரங்களில் நித்திரையால் எழும்பி குய்யோ, மாயோ என்று அழுதி குளறி ஊரை கூப்பிடுங்கள்.

இதில் பகிடி என்னவென்றால் முதலில் நித்திரையால் எழும்பி விட்டு நைசாக திரும்பி பார்ப்பார்கள். அருகில் யாராவது தென்படுகின்றார்களா என. இதன்பிறகுதான் அழுகின்ற படலம் ஆரம்பமாகும். அதுவும் அவர்கள் அழுவதை பெற்றோர்கள் கண்டுவிட்டால் வொலியூம் டபிள் ஆகிவிடும்.

எனவே, பிள்ளைகளை பெற்றோர் தந்திரமான முறையில் கையாள வேண்டும். சும்மா ரியூப் லைட் மாதிரி "ராசா, செல்லம், தொய்யாவால எழும்பீட்டீங்களே குஞ்சு? ஹைய்!" இப்படியெல்லாம் செய்தால் குழந்தை உருப்படாது. ஆனால் இன்னும், இன்னும் பிடிவாதம் செய்ய பார்க்கும்.

குழந்தைகளை எப்படி தந்திரமாக கையாள்வது என்பதை நாங்கள் கறுப்பிகளிடம் (நான் சொல்வது எங்கள் யாழ் கள கறுப்பி அல்ல...) பழகவேண்டும். இதற்கு ஒரு சம்பவதை நினைவுபடுத்துறன்.

நான் ஒரு முறை Walk in, Doctors office க்கு போயிருந்தன். சரியான சனம். கியூவில ஒன்றன் பின் ஒன்றாக வைத்தியர்கள் வந்தவர்களை கவனித்து கொண்டு இருந்தார்கள். அப்ப அங்க ஒரு கறுப்பியும், அதன் குழந்தையும் வந்திருந்தார்கள். அவர் ஒரு சின்ன பெடிப்பயல், ஒரு இரண்டு தொடக்கம் முன்று வயசுக்க இருக்கும். ஆளுக்கு அந்தமாதிரி வெளிக்கிடுத்தி கையில விளையாட்டு சாமான் ஒன்றையும் கொடுக்கப்பட்டு இருந்திச்சு. அவர் ஆள் சுத்தி, சுத்தி புதினம் பார்த்துக்கொண்டு, வாயில ஏதோ முணுமுணுத்துக்கொண்டு தன்பாட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். திடீரென்று தனது விளையாட்டு சாமான தானே தூக்கி எறிஞ்சு போட்டு, தாய பார்த்து ஒரு முழுசு முழுசினார். பிறகு எடுத்து தரச்சொல்லி தாய கேட்டு வெருட்டினார்.

தாய் "நீர் உத எறிஞ்சனீர், நீர் தான் பொறுக்கவேணும்!" எண்டு சொல்லிபோட்டு பேசாமால் இருந்துவிட்டாள். அவர் அடியடா, பிடியடா எண்டு பயங்கர சத்தமா ஓ என்று அழத் தொடங்கினார். எல்லா சனமும் இவர்களை பார்த்துக்கொண்டு இருக்கிது. அந்த சத்தத்தை கேட்ட எனக்கு பெடிப்பயலுக்கு பிடரியப் பொத்தி ரெண்டு சாத்து சாத்த வேணும் போல இருந்திச்சு. அவ்வளவு எரிச்சலா இருந்திச்சு.

ஆனா, தாய்க்காரி என்ன செய்தால் என்றால், ஒன்றுக்கும் பயப்படவில்லை. மற்றவர்கள் எல்லாரும் தன்னை ஒரு மாதிரியாக பார்க்கின்றார்கள் என்ற வெட்கமோ அல்லது பயமோ அவளிடம் இல்லை. வலு அமைதியாக பெடியனிடம் "becasue you threw it, you have to pick it up. i won't help you. mommy is going to sit there. please pick your stuff and come there. ok darling? understand?" சொல்லிவிட்டு சற்று தொலைவில் இருந்த ஓர் ஆசனத்தில் போய் அமர்ந்து ஏதோ புத்தகம் வாசிக்க தொடங்கினாள்.

இவர் மச்சான், அழூறார், அழூறார்... அழுகை முடியிற பாடா காணேல.. சனம் எல்லாம் குழம்பி போச்சு. சத்தம் தாங்கமுடியவில்லை. வந்த சில வெள்ளைகள் தாயையும், பிள்ளையையும் காட்டி தங்களுக்குள் ஏதோ நக்கலாக சிரித்து பேசிக்கொண்டார்கள். ஆனால், கறுப்பி பெடியனை அசட்டை செய்தபடி, தன்பாட்டுக்கு புத்தகம் வாசிப்பதில் அக்கறையாய் இருந்தாள். பையனை, பையன் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அங்க நாங்கள் இருந்த இடம் அழுகை சத்தத்தால அதிர்ந்து கொண்டு இருந்திச்சு...

கடைசியில என்ன நடந்திச்சு என்றால், பெடிப்பிள்ளை கொஞ்ச நேரத்தில் தானாகவே வொலியூம குறைச்சார். தன்பாட்டில் தான் எறிஞ்ச விளையாட்டு சாமான போய் பொறுக்கினார். பிறகு தன்னை யாராவது பார்க்கிறீனமோ என்று சுற்றும், முற்றும் பார்த்தார். பிறகு "mommy" என்று சத்தம் போட்டபடி தாயிடம் ஓடினார். ஓடிப்போய் தாயை கட்டிப்பிடிச்சு கொஞ்சினார். அவளும் "my sweety darling" எண்டு கொண்டு அவரை கட்டிப்பிடிச்சு கொஞ்சினாள். கடைசில தாயின்ர மடியில இருந்து பால் குடிச்சுக்கொண்டு போகும்மட்டும் அமைதியாக இருந்தார்.

இந்த கூத்துக்களை பார்த்துக்கொண்டு இருந்த எல்லாரும் ஒரே சிரிப்பு... நானும் இத வீட்ட போய் சொன்னன். எங்கட அக்காட பிள்ளையும் இப்படி பிடிவாதம் பிடிச்சு நிறைய விளையாட்டுக்கள், சித்து வித்தைகள் காட்டும். நான் அக்காவிற்கு சொல்வது இந்த கதையை அடிக்கடி சொல்லுவன்.

"முதலில பிள்ளை அழும், அது ஆட்களுக்கு முன்னால அட்டகாசம் செய்து மானத்த கப்பலில ஏத்தும்.." என்று நாங்கள் பயப்படகூடாது. ஆட்களுக்கு முன்னால பிள்ளை அழ தொடங்கினா அக்கா டென்சன் ஆகீடுவா. நான் சொல்லிறது "அவள நல்லா அழ விடு!" என்று. பிள்ளை ஏதாவது காரணத்தோட அழுதால் நாங்கள் "அப்பன், ராசா, செல்லம்" எண்டு ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லி பிள்ளையின் அழுகையை குறைக்க முயற்சிக்கலாம். ஆனால், பிடிவாதத்தில அழுகிற பிள்ளைகள "நல்லா அழு!" என்று அப்படியே விட்டுவிட வேண்டும்.

சும்மா நாங்கள் பிள்ளைகளிற்கு தேவையில்லாமல் செல்லம் கொடுத்தால் கடைசியில அதுகள் எங்கட தலையில ஏறி உட்கார்ந்து விடுங்கள். பிள்ளையில் நாங்கள் அன்பு காட்டவேணும். அதுக்காக, எடுத்ததுக்கெல்லாம் அதை வெளிப்படையாக அதுகளுக்கு காட்ட கூடாது. இல்லாவிடால் அதுகள் சரியான பிடிவாதகாரரா மாறீடுங்கள். எல்லாத்தையும் அளவோட வச்சு இருக்கிறது நல்லது..

Edited by கலைஞன்

அந்த சத்தத்தை கேட்ட எனக்கு பெடிப்பயலுக்கு பிடரியப் பொத்தி ரெண்டு சாத்து சாத்த வேணும் போல இருந்திச்சு

பிள்ளை ஏதாவது காரணத்தோட அழுதால் நாங்கள் "அப்பன், ராசா, செல்லம்" எண்டு ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லி பிள்ளையின் அழுகையை குறைக்க முயற்சிக்கலாம். ஆனால், பிடிவாதத்தில அழுகிற பிள்ளைகள "நல்லா அழு!" என்று அப்படியே விட்டுவிட வேண்டும்.

:P :P கலைஞன் அண்ணா நல்லாக அனுபவங்களை சொல்லுறீங்க. சிரிப்பாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள்
.

கட்டுரையில் பெண் குழந்தையை எப்படி எழுப்பவேண்டும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றது போலுள்ளது.. ஆண் குழந்தைகளை எழுப்பத்தேவையில்லை, அதுகள் தானாகவே எழும்பித் தங்கள் வேலைகளைப் பார்க்கும் போலுள்ளது. B)

  • தொடங்கியவர்

2 முதல் 5 வயதான குழந்தைகளுக்கு :)

:P :P கலைஞன் அண்ணா நல்லாக அனுபவங்களை சொல்லுறீங்க. சிரிப்பாக இருக்கு.

நிலா அக்கா அப்ப என்ட குருவுக்கு கல்யாணம் நடந்து முடிந்துட்டோ சொல்லவே இல்லை அவர் எனக்கு...... :angry:

நிலா அக்கா அப்ப என்ட குருவுக்கு கல்யாணம் நடந்து முடிந்துட்டோ சொல்லவே இல்லை அவர் எனக்கு...... :angry:

ஜோ ஜம்மு

நான் சொன்னது கலைஞன் அண்னா பார்த்து ரசிச்ச அனுபவங்களை.

பார்த்தியளா இபப்டி காலை வாரி விடுறியளே.

ஜம்மு நான் வரல்லை போங்க :angry:

ஜோ ஜம்மு

நான் சொன்னது கலைஞன் அண்னா பார்த்து ரசிச்ச அனுபவங்களை.

பார்த்தியளா இபப்டி காலை வாரி விடுறியளே.

ஜம்மு நான் வரல்லை போங்க :angry:

ஓ பார்த்து ரசித்ததோ அதை தானே அவர் ஜம்மு பேபி செய்யும் போதும் ரசிகிறார் பிறகு என்ன...........நான் கலை எல்லாம் வாற மாட்டேன் பயப்பிட வேண்டாம்......... :P ;)

''நான் அறிந்தவரை குழந்தைகளை பெற்றோர் எழுப்புவதில்லை. அதுகள் தாமாக கண்டஇ கண்ட நேரங்களில் நித்திரையால் எழும்பி குய்யோஇ மாயோ என்று அழுதி குளறி ஊரை கூப்பிடுங்கள்.

இதில் பகிடி என்னவென்றால் முதலில் நித்திரையால் எழும்பி விட்டு நைசாக திரும்பி பார்ப்பார்கள். அருகில் யாராவது தென்படுகின்றார்களா என. இதன்பிறகுதான் அழுகின்ற படலம் ஆரம்பமாகும். அதுவும் அவர்கள் அழுவதை பெற்றோர்கள் கண்டுவிட்டால் வொலியூம் டபிள் ஆகிவிடும்.""

கலைஞன் நீங்கள் எல்லாவற்ரையும் டீப்பாக கவனிக்கினன்றீர்கள் என்பது புரிகிறது

அது உங்கள் எழுதும் திறமையிலும் பளிச்சிடுகிறது

  • 2 weeks later...

ம் என்னை யாரும் எழுப்புறாங்களே இல்லையப்பா

கலைஞன் நல்லதொரு விடயம் சொன்னீர்கள். இதைப்போல எனக்கும் ஓரு அனுபவம்.

ஒரு சமயம் கடைக்குச்சென்றிருந்தேன். அங்கு நோர்வேஜியன் பெண்மணி தனது 2 வயது இருக்கும ;என நினைக்கின்றேன் மகனுடன் வந்திருந்தார். வெள்ளிக்கிழமை அவர் எல்லா வகையான உணவுவகைகளையும் வாங்கியிருந்ததார். அத்துடன் அந்த குழந்தைக்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பிடுவதற்கு இனிப்புக்களும் வாங்கியிருந்தார்.(இங்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் நோர்வேஜியன் குழந்தைகள் இனிப்பு வகைகள் பெற்றோர் வாங்கிக்கொடுப்பார்கள் என்று பிறகுதான் அறிந்தேன்) அந்த குழந்தை அந்த இனிப்பில் ஒன்றை வாயில் போட்டுவிட்டது. ஜய்யகோ அந்த தாய் அந்த குழந்தையின் வாயில் கையை விட்டு அந்த இனிப்பை வெளியே எடுதது வீசி விட்டு குழந்தையிடம் இன்று வெள்ளிக்கிழமை உனக்கு சாப்பிட அனுமதி இல்லை. நாளைதான் சாப்பிடலாம் என்று சொல்ல குழந்தையும் மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா என்று தாயை கொஞ்சிவிட்டு செல்கின்றது.

ம் இந்த இடத்தில் எமது பிள்ளைகளாக இருக்கவேண்டும். கதை கந்தல்தான் நிலத்தில் விழுந்து உருண்டு பிரணடு ஒரு சுனாமியே உருவாக்கி இருக்குங்கள். நானும் அப்படித்தான் கேட்டது கிடைக்காவிட்டால் சிறு வயதில் அழுது அடம்பிடிதது வாங்கி விடுவேனாம். ஓரு தடவை மாமா வந்து இருந்தவராம் எனக்க 1 வயது இருக்குமாம் நான் ஓரே அழுகையாம் மாமா சொல்லி பார்த்தாராம் அழுகை நிற்கிற மாதிரி இல்லை. என்னை அப்படியே தூக்கி கட்டிலில் போட்டு விட்டடாராம் பயத்தில் அழுகை இருந்த இடமே இல்லையாம்இ. அன்றிலிருந்து இன்றுவரை மாமா என்றால் பயங்கர பயம். முகம்பார்த்து கதைக்கமாட்டேன்.

ஆஹா மாமாவுக்கு இப்பவும் பயமா பரனீ அண்ணா.

அதுசரி ஏன் நோர்வேஜின் அப்படி சனி ஞாயிறில் மட்டும் தான் இனிப்பு சாப்பிடுவார்கள்?

ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?

மாமாவின்ட முகம் கூட பார்த்து கதைக்க மாட்டாராம் பரணி அண்ணா நாமளோ மற்ற மாதிரி............ :P

மற்றைய நாட்களில் பாடசாலை இருக்கும். சனி ஞாயிறு தினங்கள்தானே விடுமுறை. அதனால் அவர்கள் அதனை பிள்ளைகளிற்கு கட்டாயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். சில நல்ல விடயங்களை இந்த வெளிநாட்டுக்காரனிட்டதான் படிக்கவேண்டி இருக்கும்

ம்

மாமா என்றால் அப்படி பயம். இன்னொரு மாமா இருக்கிறார். அவரும் நானும் சேர்ந்து நல்லா . . . விடுவம்

மற்றைய நாட்களில் பாடசாலை இருக்கும். சனி ஞாயிறு தினங்கள்தானே விடுமுறை. அதனால் அவர்கள் அதனை பிள்ளைகளிற்கு கட்டாயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். சில நல்ல விடயங்களை இந்த வெளிநாட்டுக்காரனிட்டதான் படிக்கவேண்டி இருக்கும்

ம்

மாமா என்றால் அப்படி பயம். இன்னொரு மாமா இருக்கிறார். அவரும் நானும் சேர்ந்து நல்லா . . . விடுவம்

நல்ல விசயம் தான்.

பரணி அண்ணா என்ன விடுவியள்? மாமாவோடு சேர்ந்து பட்டம் விடுவியளா நல்லா :o

பரணி அண்ணா என்ன விடுவியள்? மாமாவோடு சேர்ந்து பட்டம் விடுவியளா நல்லா :o

இல்லை நிலா அக்கா ரொக்கட் விடுவாரே.............. :P

யாழ்களத்தில் முந்தைய உறுப்பினர்களது சில குழந்தையின் குறும்புக்கவிதைகளை இங்கு உங்கள் பார்வைக்காக...............

குழந்தையின் குறும்புகள்.....

அன்னையை கண்டவுடன்

அழகான ஒரு அழுகை.

அப்புறமாய்.. அன்னை

ஒரு முத்தமிட

அப்பாவியாய் ஒரு சிரிப்பு.

இது பாசத்துக்காகவாம்......

கொஞ்சம் செல்ல.. திரும்பவும்

ஓர் அழுகை.. கொஞ்சம் கடுமையாக.

இது பாசத்துக்காக அல்ல,

பசியாலாம்.....!

பாசமான அன்னை

புட்டியில் பால் எடுத்து வந்திட

மிளிர்கிறது, ஒரு புன் சிரிப்பு

குழந்தையின் முகத்தில்.

பால் குடித்து முடிந்தவுடன்

பாரதியாய் மாறி அக்குழந்தை

பாடல் ஒன்று பாடியது

தனக்கு தெரிந்த மழலை மொழியில்.

அது எனக்கு புரியவில்லை.....

ஆனாலும்,

கேட்பதற்கு இனிமையாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில்

கொஞ்சிப் பேசிய அக் குழந்தை

குட்டி தூக்கம் போட்டு

குறண்டிப் படுத்தது.

தொடரும் :P

காதலியை கண்டவுடன்

அப்பாவியா ஒரு பார்வை

அப்புறமாய் அவளும் செல்லமாக

என்னடா என்றிட...........

ஒன்றுமில்லை என்றிட

அவளும் முத்தம் ஒன்றும் தந்திட.......

அப்பாவியாக ஒரு சிரிப்பு..........

இதுவும் பாசத்துக்கு தான் காதல் பாசம்............. :P :P :P

காதலியை கண்டவுடன்

அப்பாவியா ஒரு பார்வை

அப்புறமாய் அவளும் செல்லமாக

என்னடா என்றிட...........

ஒன்றுமில்லை என்றிட

அவளும் முத்தம் ஒன்றும் தந்திட.......

அப்பாவியாக ஒரு சிரிப்பு..........

இதுவும் பாசத்துக்கு தான் காதல் பாசம்............. :P :P :P

இந்த பேபி ஒரு புரியாத புதிர் .

நாம பேபியை பற்றி கதைச்சால் காதலைப் பற்றி கதைக்கும். நாங்க காதலைப் பற்றி கதைச்சால் அது பேபியை பற்றி கதைக்கும்.

:o இரண்டுமே கலந்த கலவையோ :lol:

இந்த பேபி ஒரு புரியாத புதிர் .

நாம பேபியை பற்றி கதைச்சால் காதலைப் பற்றி கதைக்கும். நாங்க காதலைப் பற்றி கதைச்சால் அது பேபியை பற்றி கதைக்கும்.

:o இரண்டுமே கலந்த கலவையோ :lol:

பின்னே பேபி என்றா மாறி தானே செய்யும்................... :P

குறண்டிக் குறட்டைவிட்டு

குட்டித்தூக்கம் கலைந்தபின்

குட்டி அடிப்பான்

பன்னீர் தீர்த்தம்...!

சீ என்று சினக்கும் அம்மா

சீக்கிரமாய் சினமடக்கி

மெல்ல அணைத்து

பம்பொஸ் மாத்தி

பம்மாத்துக் காட்டியபின்

மீண்டும் கிடத்துவாள்

தானும் கொஞ்சம் தூங்கி

இளைப்பாறா வேண்டாமோ....???!

பாவம் அவள்

குழந்தை வளர்ந்து

குமரனோ குமரியோயானபின்

சொல்வழி கேளாமல்

சொல்லாமல் கொள்ளாமல்

தெருவோடு ஓடுமென்று

அறிந்தா கொள்கிறாள் நிம்மதித் தூக்கம்

எல்லாம் காலத்தின் கோலம்...!

நாளை அவன் வளர்ந்து

தனைத் தாங்குவான்

என்றேல்லோ கொள்கிறாள்

அம்மாவும் குட்டித்தூக்கம்

மார்போடு தன் சிசுவை அணைத்தபடி....!

எத்தனை குழந்தைகள் உணர்கிறார்

தம் ஆயுள் வரை

தாய் தன் ஸ்பரிசம் தந்த பாசம்.....!

நிலா அக்கா இருந்தா போல குழந்தைக்கு எல்லாம் கவி எழுதுறா என்ன நடந்திட்டு........... :P

நிலா அக்கா இருந்தா போல குழந்தைக்கு எல்லாம் கவி எழுதுறா என்ன நடந்திட்டு........... :P

நான் எழுதினேன் னு சொன்னேனா?

:angry:

நான் எழுதினேன் னு சொன்னேனா?

:angry:

அப்ப நீங்க எழுதவில்லையா அப்ப யார் தான் எழுதினது........... :lol:

அப்ப நீங்க எழுதவில்லையா அப்ப யார் தான் எழுதினது........... :lol:

யாழ்களத்தில் முந்தைய உறுப்பினர்களது சில குழந்தையின் குறும்புக்கவிதைகளை இங்கு உங்கள் பார்வைக்காக...............

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.