Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-1.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 26/01/2010

 

களங்கள் - 1. ஓயாத அலைகள் மூன்று

 

 

  • குறிப்பு: இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.

 

எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.

‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.

‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.

‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.

இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, படையினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கியழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த படை முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.

முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிக மனநிறைவாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும் ‘பராக்கிரமபுர’ என்ற படை முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் படையினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா படையினரைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஊறு ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் படையினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய படைத்தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான காப்புச்சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை படையினர் அமைத்திருந்தனர்.

பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக் கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த படைவலுச் சமநிலை பற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னகர்ந்து நின்றிருந்தான்.

நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் படையினரின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள்.

இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிக எளிதாகப் போய்வந்துகொண்டிருந்தன. ‘பராக்கிரமபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

பராக்கிரமபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். படைக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். இம்முகாம் மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். அண்மைக் காலமாக போர்க்களம் மந்தமடைந்திருந்தது. படைவலுச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த இத்தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் பராக்கிரமபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 198
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • நன்னிச் சோழன்

    199

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள்     இதில், வன்னியில் 1997 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கை தொடங்கப்படும்வரை சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதன் மூலம் தம

நன்னிச் சோழன்

இறுவட்டுகள்   இதனுள் இந்நடவடிக்கையின் வெற்றியை எடுத்தியம்பி கொலுவிருத்தும்படியாக வெளிவந்த அனைத்துப் போர்க்கால இலக்கியப்பாடல் இறுவட்டுகளும் இடம்பெற்றுள்ளன.   ஆனையிறவு:

நன்னிச் சோழன்

காலக்கோடு     01-11-1999: வரலாற்று முதன்மை வாய்ந்த கற்சிலைமடுவில் விடுதலைப் புலிகள் உச்சமட்ட மாநாடு ஒன்றை நடத்தினர். கற்சிலைமடு தனது 2ஆவது வரலாற்று நிகழ்வை அன்று சந்தித்தது. இந்த இடத

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-2.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 01/02/2010

 

 

களங்கள் - 2. ஓயாத அலைகள் மூன்று

 

இது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது 'தரைக் கரும்புலிகள்' அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளை ‘கடற்கரும்புலிகள்’ என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை கோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியை ‘மறைமுகக் கரும்புலிகள்’ என்றும், மற்றவர்களை ‘கரும்புலிகள்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையணியின் நிர்வாகத்தின் கீழ் ஓரணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

கரும்புலி அணியில் இணைய விரும்பும் போராளிகள் தேசியத் தலைவருக்குத் தமது விருப்பைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவார்கள். பலர் விடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். அக்கடிதத்துக்கான பதில் தலைவரிடமிருந்து அனுப்பப்படும். அதில் பெரும்பாலும் ‘உரிய நேரம் வரும்போது நீங்கள் கரும்புலி அணியில் இணைத்துக்கொள்ளப்படுவீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலருக்கு அவர் கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்ற பதிலும் அதற்குரிய விளக்கத்தோடு அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஏற்கனவே சகோதரர் யாராவது கரும்புலியாக இருந்தால், கரும்புலியாகச் செயற்படுவதற்குரிய உடற்றகமை இல்லாதிருந்தால் போன்ற காரணங்களுக்கான அந்த வாய்ப்பு மறுக்கப்படும். கரும்புலியாக விருப்புக் கடிதமெழுதி அச்சந்தர்ப்பம் கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கரும்புலி அணியொன்று உருவாக்கப்படும்போது எற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தவர்களுள் குறிப்பிட்டளவானோர் மட்டும் தெரிவு செய்யப்படுவார்கள். வரிசையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரில் நாற்பது அல்லது ஐம்பது பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் இப்போதும் கரும்புலி அணியில் இணையும் அவாவோடு உள்ளனரா என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். வெவ்வேறு படையணிகள், துறைகள், பிரிவுகளிலிருந்து கரும்புலிகளாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் முதலில் தேர்வுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சிறப்புப் பயிற்சியெடுப்பதற்கான அடிப்படைத் தகமைகளுக்கான தேர்வில் தேறுபவர்கள் அதன்பின்னர் கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வுப் பயிற்சியில் தேறாதவர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சிநெறியை நிறைவுசெய்த பின்னரே நடவடிக்கைக்கு அனுப்பப்படுவார்கள். கரும்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் களத்தில் வீழும்வரை பயிற்சியோடுதான் நாட்கள் கழியும். நடவடிக்கை… பயிற்சி... மீண்டும் நடவடிக்கை… மீண்டும் பயிற்சி என்று இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.

மீண்டும் கள்ளப்பாட்டுக் கடற்கரைக்கு வருவோம். இப்போது கரும்புலிகள் அணியின் மூன்றாவது தொகுதி சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. சிறப்புப் பயிற்சியின் இறுதிக்கட்டமாக கடற்பயிற்சிக்காக கள்ளப்பாட்டுக்கு வந்திருந்தது அவ்வணி. கரும்புலிகள் அணிக்குரிய கடற்பயிற்சிக்கான பொறுப்பை பின்னாளில் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கோகுலன் (கடற்சிறுத்தைகள் அணியில் இருந்தவர்) ஏற்று வழங்கிக்கொண்டிருந்தார். அவரோடு சின்னக்கண்ணன், புவனா என்று கடற்புலிப் போராளிகள் இருவரும் இணைந்து கடற்பயிற்சி வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து 30 வரையானவர்கள் இக்கடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதிக்கும் மூன்றாவது தொகுதிக்கும் பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றிய அருளன் இந்தத் தொகுதிக்கான கடற்பயிற்சி முடிந்ததும் அவரின் நீண்டகால விருப்புக்கிணங்க கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்படுவாரென்றும் அவர் இரண்டாம் தொகுதியோடு இணைந்து செயற்படலாமென்றும் தலைவரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடற்பயிற்சியை விரைவாகவும் சரியாகவும் முடித்துவிட வேண்டுமென்ற அவாவோடு அருளன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

அருளனைப் பற்றி சிறிதாவது சொல்லியாக வேண்டும். இம்ரான்-பாண்டியன் படையணியின் கெனடி-1 தொடக்கப்பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்தபின் தொடர்ந்தும் இம்ரான்-பாண்டியன் படையணியில் செயற்பட்டவர். மேஜர் மாதவன் (2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் -3 இன் யாழ்ப்பாணம் மீதான புலிகளின் படையெடுப்புக் காலத்தில் தனங்கிளப்பில் வீரச்சாவடைந்தவர். சிறந்த பாடகன், கவிஞன், எழுத்தாளன் என்று பன்முகத் திறமைவாய்ந்த போராளி) கரும்புலிகள் அணிக்கான பொறுப்பாளனாயும் பயிற்சியாளனாயும் இருந்த காலத்தில் அருளனும் கரும்புலிகள் அணிக்கான பயிற்சியாளருள் ஒருவராய் இணைந்து கொண்டார்.

இந்தக் காலப்பகுதியில் கரும்புலிகளின் பயிற்சிப் பாசறை சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்காகியது. அதில் அருளன் மிகக்கடுமையான காயத்துக்குள்ளானார். வயிற்றுப்பகுதியில் மிகநீளமான காயம். மிகக்கடுமையான நிலையிலிருந்து ஒருவாறு காயம் மாறி மீண்டும் பயிற்சியாசிரியனாக தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் அந்தக் காயத்தின் தாக்கத்திலிருந்து இறுதிவரை அவரால் மீளமுடியவில்லை. தனது வேதனை, இயலாமை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு – குறிப்பாக பொறுப்பாளர்களுக்கும் பயிற்சியெடுக்கும் போராளிகளுக்கும் – அவை தெரியாமல் மறைத்தபடி தனது கடமையைத் தொடர்ந்தார். அவரது எண்ணம் முழுவதும் இந்த மூன்றாம் தொகுதிக்கான பயிற்சியை சிறப்பாக முடித்துவிட்டு கரும்புலியாக இணைந்து செயற்பட வேண்டுமென்பதிலேயே இருந்தது.

இந்தக் கடற்பயிற்சியிலும் அருளனால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதுவும் நீச்சல் என்பது வயிற்றுத் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் ஒரு பயிற்சி. ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மிதக்கவோ நீந்தவோ வேண்டிய பயிற்சியும் இதில் உள்ளடக்கியிருந்தது. அருளனால் எவ்விதத்திலும் அதற்கு ஈடுகொடுக்க முடியாது. ஆனாலும் தனது எல்லையையும் தாண்டி அருளன் அப்பயிற்சியில் ஈடுபட்டார். ஒருவித வெறியோடுதான் அந்தக் கடற்பயிற்சியில் அருளன் ஈடுபட்டிருந்தார். அனால் அருளனை அதிகம் சோதிக்க வேண்டிய தேவையில்லாமல் உடனடியாகவே அருளனுக்கான பணி வந்து சேர்ந்தது. ‘பராக்கிரமபுர’ ஆட்லறித்தளம் மீதான தாக்குதல் முழுவதற்கும் தலைமைதாங்கிச் செல்லும் பொறுப்பு அருளனுக்கு வழங்கப்பட்டு அவர் கடற்பயிற்சியிலிருந்து நிறுத்தப்பட்டு கரைச்சிக்குடியிருப்பில் தங்கியிருந்த மற்றக் கரும்புலி அணியோடு இணைக்கப்பட்டார்.

நீச்சற் பயிற்சிக்கு வருவோம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியில் இருந்தவர்களுள் சிலர் ஏற்கனவே மிக நன்றாக நீந்தக் கூடியவர்கள்; சிலருக்கு அறவே நீச்சல் தெரியாது. மகளிர் அணியில் சசி, சுதாஜினி போன்றவர்கள் (கரும்புலி மேஜர் சசி நெடுங்கேணியிலும், கரும்புலி மேஜர் சுதாஜனி பளை ஆட்லறித் தகர்ப்பிலும் வீரச்சாவடைந்தனர்) மிக நன்றாக நீந்துவார்கள். அவர்கள் இருவரும் மாலதி படையணியின் 'சிறப்பு அதிரடிப்படை' அணியொன்று உருவாக்கப்பட்டபோது அதில் பயிற்சியெடுத்திருந்தவர்கள். சசி நீந்துவதைப் பார்க்க வியப்பாக இருக்கும். தாங்கள் ஊரிலேயே பெரிய நீச்சற்காரர்கள் என்று கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் பலர் வாய்பொத்தியிருக்க வேண்டிய நிலை வந்தது சசியால்தான். குறுந்தூர வேக நீச்சலென்றாலும் சரிதான், ஐந்து கடல்மைல் தூரநீச்சல் என்றாலும் சரிதான், ஆண்களின் முன்னணிக் குழுவோடு நீந்தக் கூடியராக சசி இருந்தார்.

காலை, மாலை என்று ஒருநாளில் இருதடவைகள் கடற்பயிற்சி நடைபெறும். நீச்சலில் அடிப்படையே தெரியாதவர்களை கோகுலன் மாஸ்டர் பொறுப்பெடுத்துப் பழக்கினார். மிக அழகாக நீச்சற்கலையைச் சொல்லித் தருவார். இயக்கத்தில் நீச்சற் பயிற்சிக்குரிய ஆசிரியர்கள் என்றுவந்தால் போராளிகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது இவராகத்தான் இருக்கும். 2002 இல் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தகையோடு பிரிகேடியர் பால்றாஜ் தலைமையில் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியொன்று நாயாற்றில் தொடங்கப்பட்டது. நூற்றுக்குமதிகமான போராளிகள் பங்குகொண்ட அந்தப் பயிற்சிப் பாசறையில் கடற்பயிற்சியும் இணைக்கப்பட்டிருந்தது. அங்கும் அப்பயிற்சியைப் பொறுப்பெடுத்துத் திறம்பட முடித்தவர் இதே கோகுலன் மாஸ்டர்தான்.

கரும்புலிகள் அணிக்கான கடற்பயிற்சி அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். கரைக்கு வர ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் கூட ஆகலாம். பிறகு மீளவும் மாலையில் பயிற்சி தொடங்கும். இடைப்பட்ட நேரம் பெரும்பாலும் நித்திரையோடுதான் போகும். கடற்பயிற்சிக் களைப்பும், கடற்காற்றும் சேர்ந்து சொர்க்கத்துக்குக் கொண்டு போகும்.

கடற்பயிற்சிக் காலத்தில் அங்கு நடந்த சுவாரசியங்களுள் ஒன்று உணவு வழங்கல். சிலாவத்தையிலிருக்கும் ஒரு தோட்டத்தில்தான் நிர்வாகம் இயங்கிவந்தது. அங்கிருந்துதான் கரைச்சிக் குடியிருப்பிலிருக்கும் அணிக்கும், கள்ளப்பாட்டிலிருக்கும் அணிக்கும் உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஓர் ஒற்றை மாட்டுவண்டிலில் உணவு வந்து போகும். கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அணிக்கான உணவு வழங்கலில்தான் சிக்கல் வந்து சேர்ந்தது.

மகளிர் பக்கத்தில் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் ஆண் போராளிகள் பக்கத்தில் அவித்துக் கொட்டக் கொட்ட அது காணாமற் போய்க்கொண்டேயிருந்தது. கடற்பயிற்சி முடித்துக் கரைதொடும்போது புகையத் தொடங்கும் வயிறு எளிதில் அடங்கிவிடாது. போராளிகளுக்குத் தீனிபோட்டு நிர்வாகத்தால் கட்டுப்படியாகவில்லை. அப்போது ஒரு போராளிக்கான ஒருநேர உணவுக்காக வழங்கற் பகுதியால் ஒதுக்கப்பட்டிருந்த மாவின் நிறை 250 கிராம். ஆனால் இப்போது 500 கிராம் மா கூடப் போதுமானதாக இருக்கவில்லை. அவ்வளவுக்குப் போராளிகள் விழுங்கித் தள்ளினார்கள். தமக்கான மேலதிக உணவுத் தேவைபற்றி வழங்கற்பிரிவிடம் பேசியபோது, அவர்கள் நம்பாமல் தாம் நேரில் வந்து சோதிக்க வேண்டுமென்று சொல்லி ஒருநாட்காலை நேரிலே வந்து போராளிகள் உண்பதைப் பார்த்துப் போனார்கள்.

‘குமரன், அதுசரி, இன்னும் எவ்வளவு காலம் உந்தக் கடற்பயிற்சி இருக்கு?’

‘எல்லாரும் அஞ்சு கடல்மைல் முடிக்க வேணும். பிறகு வெயிற்றோட நீந்தப் பழக்க வேணும். பலன்சில நிண்டு சுடப்பழக்க வேணும், சுழியோடப் பழக்கோணும்…. எப்படியும் ஒரு மாசமாகுமெண்டு நினைக்கிறன்’

‘என்ன பகிடியே விடுறியள்? உவங்களுக்கு ஒருமாசம் சாப்பாடு போட நாங்கள் ஏதேனும் கப்பலெல்லோ கடத்த வேணும்?’ – பகிடியாகவே சொல்லிவிட்டுப் போனார் வழங்கற்பகுதியிலிருந்து வந்த பொறுப்பாளர்.

கள்ளப்பாடு மிகமிகச் சிறிய கிராமம். மிகமிக அன்பான மக்கள். நாங்கள் இருந்த இடத்தில் பொதுமக்களின் வாடி ஒன்றிருந்தது. மாலையில் கரைசேரும் படகிலிருந்து எமக்கு ஒரு திருக்கை மீன் அன்றாடம் தந்துகொண்டிருந்தார்கள் அம்மக்கள். றீகஜீவன் (கரும்புலி மேஜர் றீகஜீவன் ஓயாத அலைகள் – 3 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு நடவடிக்கையின் போது வீரச்சாவு) செய்யும் திருக்கைப் புட்டுக்காக நாங்கள் காத்திருப்போம். பசி அடங்காவிட்டால் தென்னம்பாளையோடு கடற்கரைக்குக் கிளம்பிவிடுவான் றீகஜீவன், அவனோடு நாங்களும். கரையிலோடும் நண்டுகளை அடித்து சுட்டுச் சாப்பிடுவோம். என்னதான் கமுக்கமாக, நடுச்சாமத்தில் இதைச் செய்தாலும் மறுநாட்காலை மகளிர் அணி தொடக்கம் கிராமம் முழுவதும் கேட்கும் ‘என்ன.. ராத்திரி பீ-நண்டு சுட்டுச் சாப்பிட்டனியள் போலகிடக்கு?…’ ஒருகட்டத்தில், நடுச்சாமத்தில் நண்டுசுடும் மணத்திலிருந்து தப்ப நினைத்தோ என்னவோ இரண்டு திருக்கைகளைத் தரத் தொடங்கினார்கள் அம்மக்கள்.

இடையில் ஒருநாள் கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை வேலைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக் கட்டடத்தை அண்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். வடலியோலைகள், உடைந்த ஓடுகள், தகரங்கள், பனங்குற்றிகளைக் கொண்டு ஓர் படை முகாமின் மாதிரி அமைக்கும் வேலை அது. அந்நடவடிக்கைக்கான அணியினரில் சிலர் வேவு நடவடிக்கையிலும் ஏனையோர் பயிற்சிக்கான அயத்தப்பணியிலும் நின்ற காரணத்தால் மற்ற அணியைக் கொண்டே மாதிரி அமைக்கப்பட்டது. கரைச்சிக் குடியிருப்பும் கள்ளப்பாடும் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் இருந்தும்கூட இரு அணிகளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒருவரையொருவர் சந்திக்கவோ கதைக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மாதிரி படைத்தளத்தை வைத்துக்கொண்டு ஏதோவோர் ஆட்லறித் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சி நடக்கப் போகிறதென்ற அளவில் கடற்பயிற்சி அணி ஊகித்திருந்தது.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 11/02/2010

 

 

களங்கள் - 3. ஓயாத அலைகள் மூன்று

 

மாதிரி படைமுகாமை அமைத்துவிட்டு அவர்கள் மீளவும் கடற்பயிற்சியைத் தொடரவென கள்ளப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். கரைச்சிக் குடியிருப்பில் தங்கியிருந்த கரும்புலி அணி பராக்கிரமபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. இப்பயிற்சி பற்றி இத்தொடரின் முதலாவது அங்கத்தில் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம்.

இந்தத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தது கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதி. இதில் கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப்.கேணல் நரேஷ், கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் சிறிவாணி, கரும்புலி மேஜர் ஆந்திரா ஆகியோர் உட்பட வேறும் சிலர் இருந்தனர். இந்த நடவடிக்கைக்காக அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்றாவது தொகுதியிலிருந்தும் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக அச்சண்டைக்கென தெரிவு செய்யப்பட்டிருந்த இரண்டு பி.கே. எல்.எம்.ஜி இயக்குநர்களான கரும்புலி மேஜர் ஆதித்தன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் நித்தி ஆகியோர் மூன்றாம் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

மூன்று அணிகளாக உட்புகுந்து நடத்தும் இத்தாக்குதலை அருளன் நேரடியாகக் களத்தில் நின்று வழிநடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அம்முகாமிலிருந்து ஆறு ஆட்லறிகளும் தகர்க்கப்பட வேண்டுமென்பது தான் இலக்கு. இலக்கு நிறைவடைந்தால் மீதமுள்ளோர் பாதுகாப்பாகத் தளம் திரும்ப வேண்டுமென்பதும் திட்டமாக இருந்தது. வேவுத் தரவுகளின்படி முகாம் மாதிரி அமைக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதேவேளை கரும்புலிகள் அணியினரும் வேவு அணியினரும் இணைந்து தொடர்ந்தும் வேவுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்தனர்.

இந்நிலையில் அந்தப் பயிற்சித்திட்டத்தில் இணையும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளப்பாட்டில் கடற்பயிற்சியில் இருந்த அணிகளிடமிருந்து விடைபெற்று கரைச்சிக் குடியிருப்புக்கு நகர்ந்தேன். அங்கிருந்தபடியே சசிக்குமார் மாஸ்டரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். இரவு முழுவதும் பயிற்சி; அதிகாலையில் வீடுவந்து சேர்வோம்.

 

நீர்சிந்து நடவடிக்கைகள்:

அது 1999 ஆம் ஆண்டின் ஐப்பசி மாதம். அந்த நேரத்தில் போர்க்களம் சற்று அமைதியாக இருந்தது. வன்னியின் நீண்ட முன்னரங்கில் பலமுனைகளிலும் முயன்று இடங்களைக் கைப்பற்ற முடியாமல் சிறிலங்கா படையினர் முடங்கியிருந்தது. சிலமாதங்கள் அமைதிக்குப் பின்னர் எதிரி ‘நீர்சிந்து’ (Water-shed) என்ற பெயரில் அடுத்தடுத்து இரண்டு முன்னகர்வு நடவடிக்கைகளைச் செய்தான். இப்போது எதிரி தனது மூல உத்தியை மாற்றியிருந்தான். அதாவது வழமையான முறைகளில் சண்டைபிடிக்காமல் கடுமையான தாக்குதலை நடத்தி புலிகளுக்கு இயன்றவரை உயிரிழப்பை ஏற்படுத்துவதும் பின்னர், பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் செல்வதும் என்பதே இந்தப் புதிய திட்டமாக இருந்தது. ‘வசந்த பெரேரா’ என்ற படைத் தளபதியின் நேரடி வழிநடத்தலில் இந்த ‘நீர்சிந்து-1, 2’ ஆகிய இரு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன.

எதிரி நினைத்தது போல் பெரிய வெற்றியாகவே இவை இரண்டும் அமைந்திருந்தன. மிகக்குறுகிய அகலத்தில் (அண்ணளவாக இரு கிலோமீற்றர்கள்) புலிகளின் காவலரண் வரிசைமீதும் பின்தளங்கள் மீதும் சரமாரியான ஆட்லறித் தாக்குதலை நடத்திவிட்டு முன்னகர்ந்து சென்று சடலங்களைக் கைப்பற்றிக் கொண்டு பின்வாங்கிச் செல்வதே இந்தத் திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரம். அதுவரை எதிரி பயன்படுத்தியிராத அளவுக்கு ஆட்லறி எறிகணைகள் இந்நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான எறிகணைகள் இடைவெளியின்றி மிகக்குறுகிய இடத்தின் மீது ஏவப்பட்டன. ஒருமணி நேரம் நடத்தப்படும் இத்தாக்குதலின் பின்னர் எதிரியணிகள் முன்னகர்ந்து சென்று காவலரண்களைக் கைப்பற்றும். வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களையும் ஆயுத தளபாடங்களையும் தூக்கிக் கொண்டு, காவலரண்களையும் அழித்துவிட்டு எதிரியணிகள் தாமாகவே தளம் திரும்பிவிடும்.

இந்த இரு நடவடிக்கைகளிலும் மாலதி படையணியே தாக்குதலுக்கு உள்ளானது. இயக்கம் இதுவரை எதிர்கொள்ளாத அளவுக்கு ஆட்லறி மழை பொழியப்பட்டது. இரண்டு நடவடிக்கைகளிலும் ஐம்பது வரையான போராளிகளின் உடல்கள் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டுச் செல்லப்பட்டன. வழமையாகவே போராளிகளின் உடல்கள் எதிரியால் கைப்பற்றப்படுவது ஈழப்போராட்டத்தில் சகிக்க முடியாத தோல்வியாகக் கருதப்பட்டு வந்தது. இந்தப் புது நடவடிக்கையால் போராளிகள் உண்மையில் குழம்பித்தான் போனார்கள். மீட்பு நடவடிக்கைக்கோ தாக்குதலுக்கோ மேலதிக அணிகள் நகர முடியாதளவுக்கு எறிகணை வீச்சு மட்டுமல்லாமல், மிக விரைவாகவே எதிரி தமது தளத்துக்குப் பின்வாங்கிச் செல்வதும் குழப்பமாக இருந்தது.

‘நீர்சிந்து-1’ நடவடிக்கை 14/10/1999 அன்று நடத்தப்பட்டது. இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர்; 32 வித்துடல்கள் எதிரியால் கைப்பற்றப்பட்டு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த முதலாவது நடவடிக்கையில் இயக்கத்தின் ஆட்லறி நிலையும் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் ஆட்லறிக்குச் சேதமில்லை எனினும் எறிகணைக் களஞ்சியம் தீப்பற்றியதுடன் இரு போராளிகள் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ‘நீர்சிந்து-2’ நடவடிக்கையிலும் நாற்பது வரையான பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர். 28/10/1999 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 28 வித்துடல்கள் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு அனைத்துலக செஞ்சிலுசைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன.

இரண்டு கிழமைகளுக்குள் அடுத்தடுத்து அம்பகாமம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த இரு நடவடிக்கையாலும் ஒருவித அதிர்ச்சி பரவியிருந்தது. இதேபோன்று தொடர்ந்தும் பல தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்படப்போகின்றன என்பதும் தெளிவாகத் தெரிந்திருந்தது. எதிரி உச்சக்கட்ட உளவியற் போரைத் தொடுத்திருந்தான். வன்னியில் பெரும்பாலான மக்களும் – குறிப்பாக எதிரியின் முன்னணி நிலைகளுக்குக் கிட்டவாக வாழ்ந்த மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இரண்டொரு நாட்களில் தமது இடங்களை படையினர் கைப்பற்றிவிடுமென்று அவர்கள் நம்பினார்கள். களமுனையிலிருந்த போராளிகளுக்கும் குழப்பமாகவே இருந்தது. இந்தப் புது முயற்சியை எப்படி எதிர்கொள்வதென்பது பெரிய புதிராகவே இருந்தது. இன்னும் ஒரு கிழமைக்குள் அடுத்தகட்ட நடவடிக்கையையும் எதிரி முன்னெடுப்பான் என்பதை அனைவரும் விளங்கிவைத்திருந்தனர்.

 

கரும்புலிகளின் புதிய திட்டம்:

இந்நிலையில், நீர்சிந்து-1 நடவடிக்கையின் பின்னர் பராக்கிரமபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சித் திட்டம் சூடு பிடித்தது. இந்தத் தாக்குதலுக்கான தேவை இப்போது அவசரமாகவும் தேவையாகவுமிருந்தது. ஆகக் கடைசிக்கட்ட வேவுக்காக இளம்புலி அண்ணனோடு கரும்புலிப் போராளிகள் சிலர் பராக்கிரமபுர போயிருந்த நிலையில் மிகுதிப்பேரோடு இறுதிக்கட்டப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது.

இதேவேளை முல்லைத்தீவுச் சந்தியிலிருந்து கடற்கரை செல்லும் பாதையில் விடுதலைப் புலிகளின் இன்னோர் அணியும் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. லெப்.கேணல் தூயவன் (யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நீரில் மூழ்கிச் சாவடைந்தார்) தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில்  ஈடுபடும் அரசியற்றுறையைச் சேர்ந்த அணியே அது. வசந்தன் மாஸ்டர் தலைமையில் (எல்லாளன் படத்தில் பயிற்சி ஆசிரியராக வருபவர்; வன்னியில் நிகழ்ந்த இறுதிநேரப் போரில் முக்கிய பங்காற்றி வீரச்சாவடைந்தார்; இவரைப் பற்றித் தனியே எழுதப்பட வேண்டும்) அங்கே பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அந்தப் பயற்சித் திட்டத்திலும் இடையிடையே கலந்துகொள்ள வேண்டிய நிலை எனக்கிருந்தது.

இந்நிலையில் 27/10/1999 அன்று காலை எட்டு மணியிருக்கும். அன்று அதிகாலை முடித்த பயிற்சியின் அசதியில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அன்றைய இரவுதான் இறுதியான மாதிரிச் சண்டைப்பயிற்சி என்பதால் அதற்கான ஆயத்தங்களில் நானும் சசிக்குமார் மாஸ்டரும் ஈடுபட்டிருந்தோம். திடீரென்று பார்த்தால் கள்ளப்பாட்டிலிருந்த அணிகளெல்லாம் இங்கே வந்துகொண்டிருந்தார்கள். இங்கு வருவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லையென்பதால் ஓடிச்சென்று மறித்து விசாரித்தால் அவர்களுக்கு அப்படித்தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது சைக்கிளில் எழில் வந்துகொண்டிருந்தார். எழில், இம்ரான்-பாண்டியன் படையணியில் வழிகாட்டிப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக இருந்தார்.

"மாஸ்டர், கடாபி அண்ணையும் வந்துகொண்டிருக்கிறார். இவையளைப் பாத்து எங்கயாவது இருக்கவிடுவம். அவர் வந்து கதைப்பார்" - இது எழில்.

கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளை முன்வீட்டில் இருத்தினோம். சற்று நேரத்தில் கடாபி அண்ணை வந்துவிட்டார். எழிலோடும் சசிக்குமார் மாஸ்டரோடும் தனியே கதைத்தபின் கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளோடு கதைத்தார்.

‘இன்றோடு உங்களுக்குரிய கரும்புலிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகள் முடிவடைந்து விட்டன. இப்போது நீங்கள் அனைவரும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மிக அவசரமாக நாங்கள் ஒரு தாக்குதலை சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராகச் செய்தாக வேண்டும். நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. போராட்டப் பாதையில் தடைக்கற்களை உடைக்கும் கடமை கரும்புலிகளுடையது. அவ்வகையில் இப்போது உங்களுக்கான நேரம். உங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும். இரண்டொரு நாட்களுள் நாங்கள் தாக்குதலுக்காகச் செல்ல வேண்டும். ஓய்வுக்கான நேரமின்றி பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்தையும் தாக்குப்பிடித்துத் தேறுங்கள், வெல்லுங்கள்’ என்பதே அவரின் சுருக்கப் பேச்சாக இருந்தது.

ஏற்கனவே பராக்கிரமபுர மீதான தாக்குதலுக்கெனப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த இரண்டாம் தொகுதிக் கரும்புலி அணியும் தற்போது கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த மூன்றாம் தொகுதி கரும்புலிகள் அணியும் எதிரெதிர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த போதும் இவர்கள் யாரும் மற்ற அணியினருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கடாபி அண்ணன் வந்த கணத்திலிருந்து அனைத்தும் துரித கதியில் நடக்கத் தொடங்கின. அவர் நவீனவகை புவிநிலைகாண் முறைமை (ஜி.பி.எஸ்) கருவிகளைக் கொண்டுவந்திருந்தார். இயக்கத்தில் தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் இப்போது உலகில் சந்தைக்கு வந்திருக்கும் ஆகப்பிந்திய விருத்தையே கடாபி அண்ணன் கொண்டு வந்திருந்தார். ‘XL 2000’ என்ற பெயரில் வந்த அவ்விருத்து அதுவரை இயக்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த வடிவங்களை விட மிகமிகத் துல்லியமானது; மேம்பட்ட பல வசதிகளைக் கொண்டிருந்தது.

அந்த புவிநிலைகாண் முறைமை கருவி தொடர்பான விளக்கத்தையும் பயற்சியையும் வழங்குவதற்கு எழில் வந்திருந்தார். கரும்புலி அணியிலிருந்து ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு புவிநிலைகாண் முறைமை பயிற்சி வழங்கப்பட்டது. ஏனைய அனைவருக்கும் ஆட்லறிப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆம்! அன்று அதிகாலையே நாங்கள் தங்கியிருந்த வீட்டின் பின்பக்கம் 85 மிமீ ஆட்லறி (புளுக்குணாவ முகாமில் கைப்பற்றப்பட்டது) கொண்டுவரப்பட்டிருந்தது. யாருக்கும் முழுமையான திட்டம் சொல்லப்பட்டிருக்கவில்லை.

அன்று 27 ஆம் திகதி பகல் முழுவதும் ஆட்லறிப் பயிற்சியும் புவிநிலைகாண் முறைமை பயிற்சியுமே நடந்து கொண்டிருந்தன. நீர்சிந்து-1 நடவடிக்கையில் எமது ஆட்லறி நிலை தாக்கப்பட்டது பற்றியும் ஆட்லறிப் பயிற்சி வழங்க வந்திருந்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். மறுவளத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐவருக்கும் புவிநிலைகாண் முறைமை பயிற்சியை எழில் கொடுத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு நடக்க இருந்த பராக்கிரமபுர மாதிரி முகாம் பயற்சியை நிறுத்தும்படியும், இதுவரையான பயிற்சியோடேயே முகாமைத் தாக்கலாமென்றும் காடபி அண்ணன் சொல்லியிருந்தார். ஆனால் தாக்குதலணியினர் அதை நம்பவில்லை. ஏற்கனவே சிலதடவைகள் இப்படி இடைநிறுத்தப்பட்டது போல்தான் இந்தமுறையில் இடைநிறுத்தப்படுகிறது என்று ஊகித்திருந்தனர். அத்தோடு மூன்றாம் தொகுதியினர் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு ஓய்வின்றி பயிற்சிகள் வழங்கப்படுவதிலிருந்து ஏதோ வித்தியாசமாக நடக்கிறதென்று அவர்கள் கருதியிருந்தனர்.

இயக்கத்தின் ஆட்லறியை எதிரி தாக்கியதற்குப் பழிவாங்கும் முகமாக எதிரியின் ஆட்லறிகள் சிலவற்றை உடனடியாகத் தாக்கியழிக்க இயக்கம் முடிவெடுத்துள்ளது என்ற கதை மூன்றாம் தொகுதியினரிடம் பரவியிருந்தது. ஏற்கனவே, ஆட்லறிகளைத் தகர்க்கத்தான் இரண்டாம் தொகுதியினர் மாதக்கணக்கில் முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் அவர்களுக்குத் தெரியாது. இரண்டு அணியினரின் பயிற்சிகளையும் தெரிந்த எமக்கோ இன்னும் குழப்பம் தான். ஒரே நேரத்தில் பல ஆட்லறித் தளங்களை இயக்கம் தாக்கப் போகிறதா? இல்லாவிட்டால் இப்படிப் பெருந்தொகையானோர் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவையில்லையே? இப்படி அதிகம் யோசித்துக் கொண்டிருக்க உண்மையில் எமக்கு நேரமிருக்கவில்லை. அவ்வளவுக்கு வேலை தலைக்குமேல் நிறைந்திருந்தது.

27 ஆம் திகதி முழுமையாகவும் பயிற்சியோடே கழிந்த நிலையில் 28 ஆம் திகதி விடிந்தது. அன்று நகர்வுப் பயற்சியும், ஆட்லறிச் சூட்டுப் பயிற்சியும் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மிக அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் இருந்தது. மறுபக்கத்தில் அம்பகாமத்தில் நீர்சிந்து-2 நடந்ததும் அன்றுதான். அன்றைய நடவடிக்கை வன்னியில் பெரிய கிலேசத்தை உண்டுபண்ணியது.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-4.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 21/02/2010

 

 

களங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று

 

 

அன்று (28/10/99) அதிகாலை மூன்று மணியளவில் கரும்புலிகளின் ஐந்து அணிகள் பயிற்சி நகர்வைத் தொடங்கின. அவர்களுக்கான ஆள்கூறுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இலக்கு நோக்கிய நகர்வை மக்களின் கண்களில் தட்டுப்படாமல் முடிக்க வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

காலை ஆறு மணியளவில் எனக்கொரு பணி தரப்பட்டு குமுழமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே ராஜு அண்ணையோடு ஈழவனும் இன்னும் சிலரும் வந்துசேர்ந்தார்கள். பின் அங்கிருந்து ஆண்டாங்குளம் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று ஊர்திகளை விட்டுவிட்டுக் காட்டுக்குள் இறங்கினோம். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு வெட்டைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். அது வயற்பகுதியோடு சேர்ந்த ஒரு வெட்டை. சற்று இடைவெளிகள் விட்டு ஐந்து நிலையங்கள் எனக்குக் குறித்துத் தரப்பட்டன.

குறித்த அந்த ஐந்து இடங்களிலும் அடையாளத்துக்கு வெவ்வேறு நிறத் துணிகள் கட்டப்பட வேண்டுமென்பதுதான் எனக்குத் தரப்பட்ட பணி. தூரத்திலிருந்து பார்க்கக் கூடியதாக அவை உயர்த்திக் கட்டப்பட வேண்டும். இடங்களைக் குறித்துத் தந்த பின்னர் ராஜு அண்ணன் மற்றவர்களோடு புறப்பட்டுவிட்டார். எனக்கு உதவியாக மூன்று பேர் தரப்பட்டிருந்தார்கள். மாலை மூன்று மணிக்குள் ஐந்து இலக்குகளின் வேலையும் முடிய வேண்டும். அத்தோடு பக்கத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மக்களையும் அப்புறப்படுத்தி அப்பகுதியில் யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நேரம் மட்டுமட்டாக இருந்தது. இருந்தது ஒரு கத்தி மட்டும்தான். தனியாக நின்ற ஒரு பனையில் அரைவாசியில் ஒரு நிறத்துணியைக் கட்டியும், இன்னோரிடத்தில் பட்டுப்போய் நின்ற முதிரையில் ஏறி ஒரு நிறத்துணியைக் கட்டியும் இரண்டு இலக்குகளை நிறுவினோம். ஏனைய மூன்றும் எப்படியோ வெட்டையில்தான் வருகின்றன. உயரத் தடிகள் ஏதாவது நட்டுத்தான் துணி கட்ட வேண்டும்.

சற்றுத் தள்ளி நீர் தேங்கியிருந்த பகுதியில் மெல்லிய நெடிய மரங்கள் சில நின்றன. தேவையான அளவு உயரமாகவும் மெல்லியதாகவும் இருந்ததால் அவற்றை வெட்டிப் பயன்படுத்தலாமென முடிவெடுத்தோம். தடியை நடுவதற்குரிய கிடங்கைக் கிண்ட எம்மிடம் அலவாங்கு இருக்கவில்லை. பக்கத்திலே மக்கள் குடியிருப்புக்களும் இல்லை. சற்றுத்தள்ளி வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரித்து அலவாங்கு வாங்கிவரும்படி மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் கத்தியோடு மரங்களை நோக்கிப் போனேன். அவை என்னவகை மரங்களென்று அன்றுவரை நான் அறிந்திருக்கவில்லை. மூன்று முழுமையான வருடங்களை காட்டில்தான் கழித்திருந்தாலும் இந்தவகை மரத்தை நான் பார்த்ததில்லை. ஒரு மரத்தை வெட்டி இழுத்து வந்தேன். இலகுவாக வெட்டுப்பட்டது எமக்குச் சுலபமாகப் போய்விட்டது.

அலவாங்கு கிடைக்காமல் மற்றவர்கள் திரும்பியிருந்தார்கள். மூன்று மரங்களை முக்காலியாகக் கட்டியென்றாலும் உயர்த்த முடிவெடுத்தோம். நான் மரங்களை வெட்ட மற்றவர்கள் இழுத்துவந்து கட்டி நிமித்த வேண்டும். மளமளவென்று மரங்களை வெட்டினேன். அப்போது ஒரு வேறுபாட்டை என்னால் உணர முடிந்தது. மூக்கு எரிந்தது. பிறகு கண்களும் எரியத் தொடங்கின. மதிய நேரத்து வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் சுவாசிக்கக் கடினமாயிருந்தது. வெட்டப்படும் மரத்திலிருந்து வந்த பால் பட்டதால் தோல் கடிப்பது போலிருந்தது. தேவையானளவு மரங்களை வெட்டியாயிற்று.

மரங்களை உயர்த்திக் கட்ட முற்பட்டபோது என்னால் எதுவும் முடியவில்லை. கண் இமைகளைத் திறக்க முடியாதளவுக்கு எரிவு அதிகரித்திருந்தது. ஏதோ பெரிய சிக்கல் என்பது மட்டும் தெளிவாகியது. சற்றுத்தள்ளி எல்லைப்படையினர் காவலுக்கிருந்த கொட்டிலுக்கு செளமியன் என்னை அழைத்துச் சென்றான். எனது கண்கள் குருடாகிவிட்டன என்று நான் நினைக்குமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. அங்கே போனதும்தான் எனக்கு இட்டிடைஞ்சல் விளங்கியது.

‘தம்பி, விசயம் தெரியாமல் தில்லை மரத்தைப் போய் வெட்டியிருக்கிறியள்’.

அப்போதுதான் தில்லை மரத்தைப் பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் விளங்கிக் கொண்டேன்.

‘முந்தி இந்தியன் ஆமியும் உதுக்குள்ள வந்து விசயம் தெரியாமல் தில்லை மரங்களை வெட்டி ஏழெட்டுப்பேர் மயக்கம் போட்டே விழுந்திட்டாங்கள். பொல்லாத சாமான் தம்பி உது’.

ஆனால் கண்கள் குருடாகும் வாய்ப்பு அறவேயில்லை என்பதை அவர் அடித்துச் சொன்னதால் கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது. அன்று இரவுவரை என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. பக்கத்தில் ஓடிய அருவிக்கரையிலேயே இருந்துகொண்டு அடிக்கடி கண்களைக் கழுவிக்கொண்டிருந்தேன்.

செளமியன் மற்ற மூன்று நிலையங்களிலும் தில்லைத்தடிகள் கொண்ட நிறத் துணிகளைக் கட்டியிருந்தான். எனது வேலை முடிந்துவிட்டதை எழிலுக்கு தொலைத்தொடர்புக் கருவி மூலம் தெரியப்படுத்தினேன். எனக்கு நடந்ததைக் கேள்விப்பட்டு, ராஜு அண்ணையோடு நின்ற எழில் என்னைப் பார்க்க வந்தான். அப்போதுதான் நடக்கப்போகும் திட்டத்தை அறிந்தேன்.

‘அதுசரி என்ன செய்யப் போறியள்? ஓ.பி பயிற்சிதானே?’

‘ஓமோம். ஆனா இந்தமுறை உண்மையாவே செல்லடிச்சு’.

எழிலின் ஓ.பி பயிற்சியில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். 50 கிராம் வெடிமருந்துக் கட்டிகளை வெடிக்க வைத்துத்தான் பயிற்சிகள் வழங்கப்படும். ஓ.பி பயிற்சியென்பது எறிகணை வீச்சில் திருத்தங்களைச் சொல்லி இலக்கைத் தாக்குவதற்காக வழங்கப்படுவது. தாக்கப்படும் இலக்கை நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இந்த ஓ.பி அணி அல்லது தனியொருவர் நிலையெடுத்திருப்பார். பின்தளத்திலிருந்து அந்த இலக்கை நோக்கி எறிகணைகள் ஏவப்படும். அப்படி ஏவப்படும் எறிகணைகள் சரியாக இலக்கில் விழும் என்று சொல்ல முடியாது. அவை விலத்தி விழும்போது அவற்றின் விலத்தல்களை – இவ்வளவு தூரம் இந்தக் கோணத்தில் விலத்தி அடிக்க வேண்டும் – என்ற வகையில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அறிவிக்கும் பணியைத்தான் இந்த ஓ.பி அணிகள் செய்யும். அவர்கள் சொல்லும் திருத்தத்துக்கு ஏற்ப ஏவப்படும் அடுத்த எறிகணையிலிருக்கும் திருத்தத்தை மீளவும் சொல்வார்கள்.

‘என்னது? செல்லடிச்சுச் செய்யப் போறியளோ? 60 mm  மோட்டரோ அடிக்கப் போறியள்?’

‘இல்லை, ஆட்லறியேதான் அடிக்கப் போறம்.’

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மட்டுமில்லை, இதைக் கேட்கும் யாருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். பின்னாட்களில் இது சாதாரணமாக இருந்திருக்கும். ஆனால் அந்த நேரத்தில் ஆட்லறி எறிகணைகளை ஏவியே ஓ.பி. பயிற்சி கொடுப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்தது.

‘அஞ்சு ரீமுக்கும் செல்லடிச்சுத்தான் குடுக்கப் போறியளோ?’

‘ஓம். ஒவ்வொரு ரீமுக்கும் ஐவஞ்சு செல் ஒதுக்கியிருக்கு. அஞ்சாவதை இலக்கில விழுத்தினாக் காணும்’.

ஏற்கனவே அப்பகுதிக்குக் கிட்டவாக வந்து நிலையெடுத்திருந்த ஐந்து அணிகளுக்கும் தனித்தனி இலக்குகளின் ஆள்கூறுகளும் அவர்களின் இலக்குக்குரிய நிறமும் தெரிவிக்கப்பட்டு மிகுதி நகர்வுகளுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாலை மூன்று மணியளவில் தாக்குதல் தொடங்குவது என்று திட்டமிடப்பட்டிருந்தாலும் ஐந்து மணியளவில்தான் முதலாவது அணி இலக்கைக் கண்டடைந்தது. மளமளவென்று வேலைகள் நடந்தன.

அன்றே ஐந்து அணிகளுக்குமான பயிற்சி முடிக்கப்பட வேண்டும். நான்கு அணிகளின் பெறுபேறுகள் மனநிறைவுவாக இருந்தன. அந்த நான்கு அணிகளும் தமக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து எறிகணைகளுக்குள் முழுமையான திருத்தத்தைச் செய்து முடித்திருந்தார்கள். செழியனின் அணிக்குரிய பெறுபேறு மட்டும் மனநிறைவாக இல்லை. நேரம் போய்விட்டதால் நாளை அதிகாலை செழியனின் அணிக்கான எறிகணைகளை மீளவும் அடித்துப் பயிற்சியை முடிப்போமென ராஜு அண்ணன் சொன்னார்.

அங்கிருந்து குமுழமுனைப் பாடசாலைக்குத் திரும்பி அங்கே இரவு தங்கினோம். அன்று இரவோடு எனது கண் சிக்கல் சரியாகிவிட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்த ‘தில்லை’ சிக்கலைக் கேள்விப்பட்ட கடாபி அண்ணன், ‘இது எமக்கு ஒரு பாடம்தான். இனிமேல் எமது பயிற்சித் திட்டத்தில் இந்த தில்லை மரம் தொடர்பிலும் நாம் கற்பிக்க வேண்டும்’ என்றார்.

குமுழமுனைப் பாடசாலையில் இரவு தங்கியிருந்த போதுதான் அந்தச் செய்தி வந்து சேர்ந்தது. ஏற்கனவே ‘பராக்கிரம புர’ படை முகாமிலுள்ள ஆட்லறிகளைத் தகர்ப்பதற்கான ஆயத்தப்பணிகளில் கரும்புலிகளின் ஒரு தொகுதி ஈடுபட்டிருந்த நிலையில், அம்முகாம் மீதான இறுதி வேவுக்கெனச் சென்றிருந்த அணி தளம் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரச்சாவு: மேலும் ஒருவர் காயம் என்ற தகவலே அது. இன்னமும் அந்த அணி பாதுகாப்பாக வந்து சேரவில்லை. இன்றிரவுதான் அவர்கள் எல்லை கடப்பார்கள். காயப்பட்ட கிரியையும் தூக்கிக் கொண்டு அவர்கள் வந்து சேர்வார்களா மாட்டார்களா எனத் தெரியாத நிலை. அன்றைய இரவு உணர்ச்சிமயமாகவே கழிந்தது. அத்தோடு அன்று காலை அம்பகாமம் பகுதியில் ‘நீர்சிந்து – 2’ நடவடிக்கை நடந்து அதில் நிறையப் பெண் போராளிகள் வீரச்சாவடைந்த சம்பவமும் நிகழ்ந்திருந்தது.

 

29/10/99

மறுநாட்காலை செழியனின் அணிக்கான பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்தன. அனைவரும் தளம் திரும்பினோம். கரும்புலிகளுக்கு அன்று முழுவதும் ஓய்வு என அறிவிக்கப்பட்டது. முதல்நாளின் நகர்வில் நிறையப் பேருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களுக்கான சிகிச்சையும் ஓய்வும் வழங்கப்பட்டது. நானும் எழிலும் சசிக்குமார் மாஸ்டரோடு சேர்ந்து சில வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம்.

அன்றுகாலையே இளம்புலி அண்ணனும் மற்றவர்களும் தளத்துக்கு வந்துவிட்டனர். பராக்கிரம புர முகாமுக்கான வேவுக்கு அவர்தான் பொறுப்பாகப் போய் வந்தார். முதல்நாள் நடந்த மோதலில் செங்கதிர்வாணன் அண்ணன் வீரச்சாவென்பதை அவர் உறுதிப்படுத்தினார். காயப்பட்ட நிலையில் ‘நான் குண்டை வெடிக்க வைக்கிறன்’ என்று கத்திச் சொல்லிக் கொண்டு தனது எம்-4 குண்டை வெடிக்க வைத்து தன்னை மாய்த்துக் கொண்டதைச் சொன்னார். காயப்பட்ட கிரியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ‘இவ்வளவு நாளும் போய்வரேக்க ஒரு பிரச்சினையுமில்லை. இப்ப என்னெண்டு இது நடந்தது? அவனுக்குத் தெரிஞ்சு போச்சோ? இனி நடவடிக்கை சரிவராதோ?’ என்று எல்லோரிடமும் கேள்விகளிருந்தன.

ஆனால், “இது தற்செயலானதுதான், பயிற்சி நடவடிக்கைக்காக காட்டுக்குள் இறக்கப்பட்டிருந்த படையினரோடுதான் மோதல் நடந்தது; எமது திட்டம் தொடர்பாக எதுவும் எதிரி அறிந்திருக்க வாய்ப்பி்லை” என்ற விளக்கத்தை இளம்புலி அண்ணன் சொன்னார்.

அன்று மாலை மூன்றுமணியளவில் திடீரென கடாபி அண்ணன் வந்தார். நடவடிக்கைக்கென பிரிக்கப்பட்டிருந்த ஐந்து அணியைச் சேர்ந்தவர்களை சந்திப்புக்காகப் புறப்படும்படி அறிவுறுத்தப்பட்டது. அது தலைவருடனான சந்திப்பு என்பது அனைவரும் விளங்கிவிட்டது. அந்த ஐந்து அணியைச் சேர்ந்த இருபது கரும்புலிகளும் அன்று இரவு தலைவருடனான தமது சந்திப்புக்காகச் சென்றனர்.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-5.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 02/03/2010

 

 

களங்கள் - 5. ஓயாத அலைகள் மூன்று

 

 

29/10/1999 இரவு:

நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது மனநிறைவைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண்டாமென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். திருத்தங்கள் சொல்லும் ஓ.பி காரர்கள் தமது முகாமுக்குள் நிற்கிறார்கள் என்பதை ஒருகட்டத்தில் உணரும் எதிரி உங்களைத் தேடியழிக்க முனைவான், அதிலிருந்து தப்பும், நழுவும் வழிகளை முற்கூட்டியே ஆயத்தப்படுத்தி வைத்துக்கொண்டுதான் தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இயன்றவரை மோதலைத் தவிர்க்கச் சொன்னார்.

இறுதியில், “எதிரியின் ஆட்லறி நிலைகள்தான் இப்போது எமது இலக்கு; ஒவ்வோர் அணிக்கும் தரப்படும் இலக்குகளை எமது ஆட்லறிகளைக் கொண்டு தாக்கியழிக்கும் நடவடிக்கையில் திருத்தங்கள் சொல்பவர்களாக உங்களை அனுப்புகிறேன்” என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் தலைவர்.

ஒவ்வோர் அணியும் தலைவருடன் நின்று படமெடுத்துக் கொண்டார்கள். சுவையான இரவுணவோடு அன்றைய சந்திப்பு முடிந்து கரும்புலிகளும் ஏனைய போராளிகளும் தளம் திரும்பினார்கள்.

மறுபுறத்தில் வேலைகள் மும்முரமாக நகர்ந்துகொண்டிருந்தன. வரைபடங்கள் ஒழுங்குபடுத்துவது, உலர் உணவுப்பொதிகள் ஆயத்தப்படுத்துவது, தொலைத் தொடர்புக் கருவிகள், மின்கலங்கள், கரும்புலிகளுக்கான வெடிபொருட்கள், ஏனைய துணைப்பொருட்கள் என்பனவற்றைத் தயார்படுத்துவது என்று அன்றைய மாலையும் இரவும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. தளத்தில் நின்ற நிர்வாகப் போராளிகளும் பயிற்சியாசிரியர்களும் பொறுப்பாளர்களும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.

இரவு பத்து மணியிருக்கும். பெரும்பாலான வேலைகள் முழுமை பெற்றிருந்தன. தலைவருடனான சந்திப்பு முடிந்து வந்திருந்த கரும்புலிகளை நல்ல ஓய்வெடுக்கும்படியும் நாளைக்கு மதியமே நகரவேண்டி வருமென்றும் சொல்லியிருந்ததால் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். நானும் என்னோடு வேலை செய்துகொண்டிருந்த மற்றவர்களும் தேனீர் குடித்துக் கொண்டிருந்தோம். அன்றிரவு அருளனும் எங்களோடு நின்று வேலை செய்துகொண்டிருந்தார். பராக்கிரமபுர முகாம் மீதான தாக்குதலுக்காகப் பயிற்சியிலீடுபட்டிருந்த கரும்புலிகளில் அருளனைத் தவிர மற்ற எவருமே இந்த வேலைத்திட்டத்திலோ மற்றத் தொகுதி கரும்புலிகளுடனோ தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

இன்னமும் எனக்குத் தாக்குதல் திட்டம் பற்றி முழுமையான விரிப்புகள் தெரியாது. அவை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை; சொல்லப்படவும் மாட்டாது. நடைபெற்ற பயிற்சிகள், நகர்வுகளைக் கொண்டு, எதிரியின் ஆட்லறித் தளங்கள் மீதும் முக்கிய தளங்கள் மீதும் எமது இயக்கம் ஆட்லறித் தாக்குதல் நடத்தப்போகின்றது; அதுவும் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப் போகின்றது என்று ஊகித்திருந்தேன். சில ஆட்லறிகளின் வரவால் எமது இயக்கத்தின் ஆட்லறிவலு அதிகரித்திருக்கிறது என்பதையும் அதற்கு முன் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு அனுமானித்திருந்தேன். இப்போது ஒழுங்குபடுத்திய வரைபடங்களைக் கொண்டு பார்க்கும்போது ஜெயசிக்குறு மூலம் எதிரி கைப்பற்றிய வன்னிப் பகுதிகளிலுள்ள தளங்களே தாக்குதலுக்கு இலக்காகப் போகின்றன என்பதை அறிய முடிந்திருந்தது.

காவற்கடமைக்கான ஒழுங்குகளைக் கவனித்துவிட்டுப் படுக்க ஆயத்தமாகும்போது கடாபி அண்ணனின் ஊர்தி வந்து சேர்ந்தது. அவரோடு எழிலும் வந்து சேர்ந்தான். நாளைக்கு கரும்புலிகளின் நகர்வுக்கான ஆயத்த வேலைகளுக்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதன்பின்னர் நடந்தவை வேறுமாதிரியாக இருந்தன.

நிர்வாகப் போராளிகள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். கரும்புலி அணியின் நிர்வாகத்தின் கீழிருந்த வேறு முகாம்களில் கடமையிலிருந்த நிர்வாகப் போராளிகளும் அவசர அவசரமாக அழைக்கப்பட்டனர். இரவிரவாக பெற்றோமக்ஸ் வெளிச்சத்தில் வேலைகள் மும்முரமாக நடந்தன.

இது நடப்பதற்குச் சில நாட்களின் முன்னர்தான் இயக்கத்தில் படையணிக் கட்டமைப்பில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. இயக்கத்தில் தொடக்கத்திலே மாவட்டப் படையணிகளே இருந்தன. பின்னர் ஒவ்வொரு பெயர்களில் படையணிகள் ஒருவாக்கப்பட்ட போதும் சில மாவட்டப்படையணிகளும் தொடர்ந்தும் இயங்கிவந்தன. அவற்றுள் ஒன்று மணலாறு மாவட்டப் படையணி. ‘’ என்ற எழுத்தில் தகட்டிலக்கத்தைத் தொடங்கி இப்படையணி இயங்கி வந்தது.

நீர்சிந்து – 1 நடவடிக்கை நடந்து சிலநாட்களின் பின்னர் என்று நினைக்கிறேன், சில தேவைகள் கருதி இந்த மணலாறு மாவட்டப்படையணி கலைக்கப்பட்டு அக்கட்டமைப்பிலிருந்த போராளிகள் ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் பிரித்து விடப்பட்டனர். அப்போது நவம் அண்ணை தலைமையில் லெப்.கேணல் சித்திராங்கன் உட்பட குறிப்பிட்ட போராளிகள் சிலர் கரும்புலி அணிக்குரிய வேவுப் போராளிகளாக உள்வாங்கப்பட்டனர். ஏற்கனவே மணலாற்றுப் படையணியிலிருந்து கரும்புலிகளுக்கான வேவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த லெப்.கேணல் இளம்புலி அண்ணையும் இந்த மாற்றத்தின் மூலம் கரும்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இப்போது இரவிரவாக அவசரமாகத் தொடங்கப்பட்ட பணிகள் நாளைக்கு நகரப் போகும் கரும்புலி அணிகளுக்குரியவையாகத் தென்படவில்லை. ஒருபுறத்திலே சசிக்குமார் மாஸ்டரின் மேற்பார்வையில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. நவம் அண்ணை தலைமையில் ஓரணியை உருவாக்கும் பணியும் அவர்களுக்கான ஆயுதங்கள் வெடிபொருட்களுட்பட இன்னபிற தேவையானவற்றை ஒழுங்கு செய்யும் பணி அது. அந்தப்பக்கம் போகமுடியாதவாறு எனக்கொரு பணி தரப்பட்டது. அப்போதுதான் வந்திருந்த கன்ரர் ஊர்தியிலிருந்து பொருட்களைச் சரிபார்த்து இறக்குவதும் அறிவுறுத்தப்பட்டபடி அவற்றைப் பிரித்துப் பொதிசெய்வதும் எனது பணி. வந்திருந்தவை அரிசி, பருப்பு, சோயாமீற், வெங்காயம், கருவாடு, மீன்ரின்கள் போன்ற முதன்மை உணவுப் பொருட்களும் சீனி, தேயிலை, பால்மாப் பக்கெட் போன்றவையும்.

சொன்னபடி அரசி, பருப்பு உட்பட உணவுப் பொருட்களை சொல்லப்பட்ட அளவுகளில் பிரித்து பொலித்தீன் பைகளில் பொதிசெய்து வேலை முடித்தபோது சமையற் பாத்திரங்கள் இன்னொரு ஊர்தியில் வந்து சேர்ந்தன. அவற்றையும் பொறுப்பெடுத்து இறக்கி வைத்தாயிற்று. வந்திருந்த சமையற் பாத்திரங்கள் என்பன சாதாரணமாக நாம் நடுத்தர முகாம்களில் பயன்படுத்தும் பெரிய கிடாரம், தாச்சி, அகப்பைகள் போன்றன. அதாவது ஏறத்தாள முப்பது நாப்பது பேருக்கு ஒன்றாகச் சமைக்கக் கூடியளவான பாத்திரங்கள். ஏன், எதற்கு என்ற குழப்பங்களோடு தரப்பட்ட வேலைகளை முடித்து சற்றுத்தள்ளி அணிகளை ஒழுங்கமைக்கும் இடத்துக்குச் சென்றேன். அங்கே கடாபி அண்ணை போராளிகளோடு பேசிக்கொண்டிருந்தார்.

“நீங்கள் நீண்டதூரம் நடக்க வேண்டிவரும், நிறையப் பாரம் சுமக்க வேண்டிவரும், மழைக்காலமாகையால் அருவிகள் பெரிய தொல்லையாக இருக்கும். இவற்றைத் தாண்டி விரைவாகவும் சரியாகவும் நீங்கள் செய்யும் பணிதான் எமது மற்ற அணிகளின் வெற்றிக்குப் பக்கபலமாக அமையும்” என்பதாக அவரது பேச்சு இருந்தது.

இதற்கிடையில் பராக்கிரமபுர மீதான தாக்குதலுக்கு ஆயத்தப்படுத்தியிருந்த கரும்புலியணியையும் எழுப்பித்தான் வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. கிடாரங்களையும் ஏனைய பொருட்களையும் காவுவதற்கு நல்ல வலிமையான காவுதடிகள் வெட்டப்பட்டன. எல்லாப் பொருட்களையும் சிறுசிறு பொதியாக்கி ஒவ்வொருவரும் தனித்தனியாக் காவுவதைவிட பெரிய பொதியாகவே காவுவதுதான் சிறந்தது என்ற கருத்து நவம் அண்ணையால் முன்வைக்கப்பட்டு அதுவே பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி அரிசி, பருப்பு, சீனி, சோயாமீற் என்பவற்றை 25 லீற்றர் லொக்ரியூப்களில் காவுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதைவிட கிடாரங்கள், தாச்சிகள் உட்பட சமையற் பாத்திரங்களும் இரண்டு கூடாரங்கள், ஒரு லீனியர் குறோஸ் (நீண்டதூரத் தொலைத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்படுவது. கூடுதலாக கட்டளைத் தளங்களில் பயன்படுத்தப்படும்) என்று பெருவாரியான பொருட்கள் ஆயத்தமாகியிருந்தன. கிட்டத்தட்ட ஒரு முகாம் அமைக்கும் பாங்கில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

நேரம் அதிகாலையாகிக் கொண்டிருந்தது. வேலைகள் ஓரளவு முடியும் தறுவாயில் எனக்கு இப்படித்தான் விளங்கியிருந்தது. அதாவது நவம் அண்ணை தலைமையில் நிர்வாகப் போராளிகளையும் வேவுப்பணிக்காக வந்திருந்த போராளிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட அணியானது இந்தப் பொருட்களைக் கொண்டு ஒரு தற்காலிக கட்டளை மையமொன்றை அமைக்கப்போகிறது. அங்கிருந்தபடி கரும்புலிகளின் நடவடிக்கைகள் வழிநடத்தப்படப் போகின்றன.

உண்மையில் உள்நடவடிக்கைகளை வழிநடத்துவதென்றால் களமுனையில் கட்டளைமையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியொரு கட்டளை மையத்தை எமது முன்னணிக் காப்பரண் வரிசையை அண்டி அமைக்கும் நடவடிக்கையில்தான் இவ்வணி ஈடுபடுகின்றது என்பதை ஊகித்துக் கொண்டேன். வழங்கல் சாப்பாட்டை விட்டுவிட்டு சொந்தமாகவே சமைத்துச் சாப்பிடும் திட்டத்தோடு இருக்கிறார்கள் என்பதாகவும் கருதிக்கொண்டேன். ஆனாலும் இவற்றை நீண்டதூரம் காவவேண்டி வருமென்ற கதைதான் விளங்கவில்லை. அப்போதிருந்த நிலையில் முன்னணிக் காப்பரண் வரிசைக்கு அண்மைவரை ஊர்திகளில் போகும் நிலைமை இருந்தது.

ஏற்கனவே நன்றாகக் களைப்படைந்திருந்ததாலும், வேலைகள் அதிகமிருந்ததாலும் அதிகம் யோசிக்கும் நிலையிருக்கவில்லை. அப்போது நவம் அண்ணையின் அணியிலிருந்த வழிகாட்டிப் போராளிக்குரிய சாதனங்கள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. நவம் அண்ணையின் அணி முகாமிட வேண்டிய இடத்தின் ஆள்கூறு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்செயலாக அந்த ஆள்கூற்று எண்களை வரைபடத்தில் பொருத்திப் பார்த்தபோது திகைத்துப் போனேன். எழிலை அழைத்து நவம் அண்ணைக்கு வழங்கப்பட்ட ஆள்கூறு சரியானதுதானா அல்லது ஏதாவது இலக்கங்கள் மாறுபட்டுள்ளதா எனக் கேட்டேன். எழிலுக்கு எனது நிலை புரிந்தது.

“அது சரிதான். அங்கதான் நவம் அண்ணையின்ர ரீம் காம்ப் அடிச்சுத் தங்கியிருக்க வேணும்.”

எனது ஆச்சரியத்துக்குக் காரணமிருந்தது. கிடாரங்கள், தாச்சிகள் என்று பாத்திரங்களையும் அரிசி, சீனி உட்பட உணவு மூட்டைகளையும், இரண்டு கூடாரங்களையும், உயரிய மரத்தின் உச்சியில் கட்டி நீண்டதூரத் தொலைத் தொடர்பைப் பேணும் தொலைத்தொடர்புக் கருவியையும், குறைந்தது பத்துநாட்கள் தாக்குப்பிடிக்கக்கூடியளவுக்கு மின்கலங்களையும் சுமந்துசென்று முகாம் அமைத்து, சமைத்துச் சாப்பிட்டுத் தங்கப்போகும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கவில்லை; எதிரியின் காப்பரண் வரிசையையும் தாண்டி பலமைல்கள் உள்ளேயிருக்கும் எதிரியின் இதயப்பகுதிக்குள் ஓரிடம்.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: hhttps://www.eelanesan.com/2021/12/kalankal-6_0826763492.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 11/03/2010

 

களங்கள் - 6. ஓயாத அலைகள் மூன்று

 

 

நவம் அண்ணையின் அணி ஊடுருவி நிலையெடுக்க வேண்டிய இடத்தை அறிந்ததும் திகைப்பாக இருந்தது. இவ்வளவு தூரம் ஊடுருவிப் போய் முகாம் அமைத்து, கிடாரங்களில் சமைத்துச் சாப்பிட்டு பலநாட்கள் தங்கியிருந்து என்னதான் செய்யப் போகிறார்கள்? கிட்டத்தட்ட இந்திய படைக் காலப்பகுதி போன்று உணவுப் பொருட்களைப் பொதிசெய்து மரங்களில் ஏற்றிப் பதுக்கிவைத்து நடவடிக்கையைத் தொடரப் போகிறார்கள்.

மரங்களில் ஏறுவதற்கும் உணவுப் பொருட்களை மரங்களில் மறைப்பதற்குமெனவே அந்நேரத்தில் கரும்புலிகள் அணி நிர்வாகத்தின் பொறுப்பாளராயிருந்தவரின் பராமரிப்பாளன் வர்மன் (பின்னர் ஆனையிறவுப் பகுதி மோதலில் கப்டன் வர்மனாக வீரச்சாவு) அவ்வணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவன் இருநாட்களின் முன்னர்தான் பராக்கிரமபுர முகாம் மீதான வேவுக்குச் சென்று திரும்பியிருந்தான்.

எனது இயக்க வாழ்க்கையில் பல ஊடுருவல் அணிகளின் செயற்பாடுகளை அறிந்திருக்கிறேன். அவர்கள் சிலநாட்களுக்குத் தேவையான உலர் உணவுகளை எடுத்துச் செல்வார்கள். நடவடிக்கை முடிந்ததும் திரும்பி வருவார்கள். ஆனால் இப்போது நவம் அண்ணரின் அணி போகப்போவது நீண்டநாட்கள் தங்கியிருக்கும் ஒரு திட்டத்தோடு. அதைவிட எதிரியின் பகுதிக்குள் இவ்வாறு கூடாரம் அமைத்து, குறோஸ் உயர்த்திக் கட்டி, கிடாரங்களில் சமைத்துச் சாப்பிட்டு வாழும் வாய்ப்பு இருக்குமா என்பதும் ஆச்சரியமாக இருந்தது.

 

31/10/1999

பொழுது விடியத் தொடங்கியது. நவம் அண்ணையின் அணி ஒழுங்கமைக்கப்பட்டு அவர்களுக்கான அனைத்துப் பொருட்களும் ஒருங்கிணைக்கப்பட்டு முடிக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் நகர்வு அணியினரை நித்திரை கொண்டு நன்கு ஓய்வெடுக்கச் சொல்லப்பட்டது. கடாபி அண்ணையும் எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டுக் கிளம்பிவிட்டார். கடந்த இருநாட்களில் மேற்கொண்ட கடுமையான வேலையால் உடல் மிகுந்த அசதிக்குள்ளாகியிருந்தது. நானும் சசிக்குமார் மாஸ்டரும் கிடைத்த இடைவெளியில் படுக்கையில் சரிந்தோம்.

யாரோ அழைத்து கண்விழித்தபோது காலை பத்து மணியிருக்கும். அணிகள் தயாராக இருந்தன. கரும்புலிகள் அணியை ஏற்றிச் செல்லவென ஒரு ஊர்தியும் நவம் அண்ணையையும் அவர்களது பொருட்களையும் ஏற்றிச் செல்ல இன்னொரு ஊர்தியும் வந்திருந்தன. கரும்புலிகளுக்கான வெடிபொருட்களைச் சரிபண்ணிக் கொடுக்கும் வேலை வந்து சேர்ந்தது. கரும்புலிகள் நடவடிக்கைக்குப் புறப்படும் இறுதி நேரத்திலேயே அவர்களுக்கான தற்கொலை வெடிபொருள் தொகுதி கையளிக்கப்படும். ஒவ்வொருவருக்கான சார்ஜரையும் சரிபார்த்து வழங்கி முடியவே கடாபி அண்ணையும் வந்துவிட்டார். கரும்புலிகள் அணியினரோடு சுருக்கமாகக் கதைத்துவிட்டு அவர்களை ஊர்தியேற்றி அனுப்பிவைத்தார்.

பிறகு நவம் அண்ணையின் அணியினரோடும் கதைத்தார். உணவுப் பொருட்களை எவ்வாறு மரங்களில் ஏற்றி உருமறைத்து வைக்கவேண்டும், மழைக்காலமாகையால் மிகுந்த கவனம் தேவை, தாம் இந்திய இராணுவக் காலப்பகுதியில் எவ்வாறு நடந்துகொண்டோம் போன்றவற்றை விளக்கினார். முகாம் அமைத்திருக்கும் இடத்தின் பாதுகாப்பில் கவனமெடுக்க வேண்டியவற்றை அறிவுறுத்தினார். பிறகு அவர்களையும் வழியனுப்பி வைத்தார்.

கரும்புலிகளின் இரண்டாவது தொகுதியினரும், நவம் அண்ணையின் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட அணியினரும் நடவடிக்கைக்காகப் புறப்பட்டுவிட்ட நிலையில் எமது முகாம் வெறிச்சோடிப் போனது. ஏற்கனவே பராக்கிரமபுர மீதான தாக்குதலுக்குப் பயிற்சியெடுத்திருந்த கரும்புலிகளின் இரண்டாவது தொகுதியும் எம்மைப் போல் சிலரும் எஞ்சியிருந்தோம். யாருக்குமே முழுமையான திட்டம் தெரிந்திருக்கவில்லை. எல்லோர் மனதிலும் ஓர் ஆர்வம். இத்தனை கரும்புலிகளை இயக்கம் இறக்குகிறது. அதுவும் தாக்குதல் நடவடிக்கையில்லை, வெறும் சூட்டுத் திருத்தம் சொல்லும் வேலைதான். இதைக் கரும்புலிகளைக் கொண்டு செய்ய வேண்டிய தேவையென்ன என்று ஒருவருக்கும் புரியவில்லை. அதேநேரம் நவம் அண்ணையோடு போகும் அணியின் செயற்பாடும் விளங்கவில்லை. இயல்பாகவே எல்லோருக்கும் எழும் ஆர்வம் எமக்குள்ளிருந்தது. மாறிமாறி எமக்குள் எமது கற்பனைகளைப் பரிமாறியபடியே இருந்தோம்.

நேற்று (30/10/1999) முழுவதும் இளம்புலி அண்ணை எம்மோடு நிற்கவில்லை. பராக்கிரமபுரத்தால் திரும்பி வரும்போது இடையில் ஏற்பட்ட சண்டையில் வீரச்சாவடைந்த கரும்புலி செங்கதிர்வாணன் வீரச்சாவடைந்த சம்பவம் பற்றி ஏற்கனவே இங்குச் சொல்லப்பட்டது. அந்த வேவு அணியைத் தலைமைதாங்கிச் சென்ற இளம்புலி அண்ணை, காயப்பட்ட கிரியையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்திருந்தார். ஆனால் அவர் எமது தளத்தில் நிற்கவில்லை. அவர் 29, 30 ஆம் திகதிகளில் என்ன செய்தார் என்பதைப் பின்பு அறிந்தபோது ஆச்சரியப்பட்டுப் போனோம். ஒரு மனிதன் எந்த நிலைக்கெல்லாம் சென்று உழைத்தான் என்பதற்கு, பின்னாளில் களத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இளம்புலி அண்ணன் ஓர் எடுத்துக்காட்டு.

முப்பத்தோராம் நாள் இரவு. மணலாற்றுக் காட்டுக்குள்ளால் ஊடறுத்துச் செல்லும் எமது முன்னணிக் காப்பரண் வரிசையில் ஓரிடத்தின் வழியால் எமது அணிகள் எதிரியின் பகுதியை நோக்கி நகர்கின்றன. கரும்புலிகள் அணியை இளம்புலி அண்ணையும், தனது அணியை நவம் அண்ணனும் வழிநடத்திச் செல்கின்றனர். இளம்புலி அண்ணனுக்கு மணலாற்றுப் பகுதியிலிருக்கும் எதிரியின் காப்பரண் வரிசை தண்ணிபட்டபாடு. ஏற்கனவே ஏராளமான முறை சென்றுவந்த புகுந்தவீடு. எந்தவிதச் சிக்கலுமில்லாமல் அணிகள் எதிரியின் பகுதிக்குள் ஊடுருவி விட்டன. ஒரு கட்டம் வரைக்கும் வழிநடத்திச் சென்ற இளம்புலி அண்ணன் மீளவும் எமது பகுதிக்குத் திரும்புகிறார். ஏற்கனவே பிரிக்கப்பட்டபடி கரும்புலி அணிகள் தமக்குக் குறிக்கப்பட்ட ஆள்கூறுகளை நோக்கி நகரத் தொடங்குகிறார்கள். மொத்தமாக ஐந்து அணிகள்.

 

01/11/1999

இன்றைய நாள் மிகவும் வெறிச்சோடியிருந்தது. எவருக்கும் எந்த வழிகாட்டலும் வழங்கப்பட்டிருக்கவில்லை. நேற்றைய இரவு மணலாற்றுக்குச் சென்று அணிகளை வழியனுப்பிவிட்டு சசிக்குமார் மாஸ்டர் இன்று அதிகாலைதான் திரும்பியிருந்தார். கூடவே இளம்புலி அண்ணையையும் அழைத்து வந்திருந்தார். வந்தவுடனேயே, நித்திரையிலிருந்த என்னை எழுப்பி, எல்லோரும் எந்தச் சிக்கலுமின்றி போய்விட்டார்கள் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு மாஸ்டரும் இளம்புலி அண்ணனும் படுக்கப் போய்விட்டார்கள். அதன்பின் எனக்கு நித்திரை வரவில்லை.

முகாமில் நிற்க அலுப்பாக இருந்தது. மாஸ்டரும் இளம்புலி அண்ணையும் நல்ல தூக்கத்திலிருந்தனர். கரும்புலி அணியைச் சேர்ந்த மற்றவர்களும் ஆளாளுக்கு ஏதேதோ வேலை செய்துகொண்டிருந்தனர். காலை பத்துமணியளவில் இன்னொருவரையும் அழைத்துக் கொண்டு முல்லைத்தீவுக் கடற்கரைக்குப் புறப்பட்டேன். அங்கே பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த யாழ் மாவட்டத்துக்கான தாக்குதல் அணியினரிடம் சென்று அளவளாவிவிட்டுத் திரும்பினேன். அன்று காலை வசந்தன் மாஸ்டர் வருவதாகச் சொல்லியிருந்தார் எனவும், அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் போராளிகள் சொன்னார்கள். மதியம் வரைக்கும் நானும் வசந்தன் மாஸ்டருக்காகக் காத்திருந்தேன். பிறகு யாரோ சமைத்துக் கொண்டு வந்திருந்த ஆணத்தைக் குடித்துவிட்டு கரைச்சிக் குடியிருப்புத் தளத்துக்குத் திரும்பினோம்.

அந்த நேரத்தில் முல்லைத்தீவுச் சந்தியிலிருந்து கரைச்சிக் குடியிருப்பு வழியாக சிலாவத்தை – முள்ளியவளை வீதியில் வந்து ஏறும் பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. கரும்புலிகளின் பயிற்சிகளுட்பட வேறும் பல செயற்பாடுகள் அப்பகுதியில் நடைபெற்றதால் இந்தப் பகுதி மற்றவர்களின் பயன்பாட்டுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட போராளிகள் மட்டுமே அந்தப் பாதையைப் பயன்படுத்தலாம்.

நாங்கள் தளத்துக்கு வந்தபோது இளம்புலி அண்ணன் முற்றத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார். அப்போது தான் எனக்கு உறைத்தது. பலநாட்களாக இரவு பகலென்று பாராமல் காடளந்து திரிந்த ஒரு வேவுப்புலி அந்த அசதியோடும் முகாமைத் தூய்மை செய்ய எவ்வளவு கரிசனையாக இருக்கிறது? ஆனால் நான் விடிந்ததும் ஊர் சுற்றிவிட்டு வருகிறேன். அவரோடு சேர்ந்து வளவெல்லாம் துப்பரவு செய்தோம். இரண்டு நாட்களாக குப்பைகள் குவிந்திருந்தன.

வேலையின்போதே இளம்புலி  அண்ணனிடம் நைசாகக் கதைவிட்டுப் பார்த்தேன். எதுவுமே சொல்லவில்லை. அவருக்கும் யாரும் முழுமையான திட்டத்தை விளங்கப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால் அவரே செய்துமுடித்த பணிகளைத் தொகுத்துப் பார்த்து ஒரு கணிப்பை நிச்சயம் அவரால் செய்திருக்க முடியும். சசிக்குமார் மாஸ்டரிடம் கதைவிட்டளவில் எதுவுமே சிக்கவில்லை. ஆனால் மாஸ்டருக்கு நிச்சயம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை, எதிரியின் முன்னகர்வைத் தடுக்க அவசரமாக எதிரியின் ஆட்லறி நிலைகள் மீது இயக்கம் எறிகணைத் தாக்குதலைச் செய்யப் போகிறது என்பதைத் தவிர.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-7.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 13/04/2010

 

களங்கள் - 7. ஓயாத அலைகள் மூன்று

 

 

ஏற்கனவே குறிப்பிட்டது போல் அன்றையநாள் அலுப்பாகவே இருந்தது. மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு மாமர நிழலிலிருந்து நானும் செல்வனும் கதைத்துக் கொண்டிருந்தோம். கரும்புலிகளின் வரலாற்றை ஆவணமாக்கும் கடமை வழங்கப்பட்டு செல்வன் அங்கு வந்திருந்தான். அன்று செல்வனும் ஓய்வாக இருந்ததால் அதிகம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. போராட்டத்துக்கு வெளியேயும் பல்வேறு விடயங்கள் பற்றி நாம் பேசிக்கொள்வது வழமை. அன்று இருவருமே ஓய்வாக இருந்த காரணத்தால் புலிகளின் குரல் நிறுவனத்தின் செயலகத்துக்குச் சென்று வர முடிவெடுத்தோம். செல்வனின் படைப்பொன்றை நேரிலே கொடுப்பதற்காக அன்று மாலை இருவரும் சென்றோம்.

நாம் தங்கியிருந்த கரைச்சிக் குடியிருப்பிலிருந்து சற்றுத் தூரத்தில் தான் முள்ளியவளையில் புலிகளின் குரல் செயலகம் அமைந்திருந்தது. மாலை நான்கு மணியளவில் நாம் அங்குச் சென்றிருந்தோம். அப்போது மக்களோடு கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மக்கள் நிரம்பவே குழம்பிப் போயிருந்தார்கள். முள்ளியவளை எந்நேரமும் படையினரின் வசம் வீழ்ந்துவிடுமென்ற நிலையே மக்களிடம் காணப்பட்டது. ஒட்டுசுட்டானிலிருந்தோ நெடுங்கேணியிலிருந்தோ அல்லது இரு இடங்களிலிருந்தும் சமநேரத்திலோ படையினர் முன்னகர்ந்தால் முள்ளியவளை வீழ்வதைத் தடுக்க முடியாது என்பது பொதுவாக எல்லோரினதும் கருத்தாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் பொதுமக்களும் சுழற்சி அடிப்படையில் எல்லைப்படையினராக முன்னணிக் காவலரண் வரிசையில் கடமையாற்றி வந்ததால், புலிகளின் காப்பரண் வரிசையின் வலு, வலுவீனம் என்பன மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தன.

மேலும்,  நீர்சிந்து என்ற பெயரில் இரண்டு தொடர் நடவடிக்கைகளை எதிரி அடுத்தடுத்து நடத்தி புலிகளின் படையணிகளுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தியிருந்தான் என்பதோடு எமது படையணிகளதும் மக்களினதும் மனவுறுதியை அசைத்திருந்தான் என்பதும் உண்மை. மிகவிரைவில் எதிரி புதுக்குடியிருப்பை அல்லது முள்ளியவளையை நோக்கிய படையெடுப்பைச் செய்வான் என்றும், அதை முறியடிக்கும் நிலையில் புலிகள் இல்லை என்றும் கருத்துப் பரவியிருந்தது. அன்றைய மாலைச் சந்திப்பில் மக்கள் ஒருவித கிலேசத்தின் மத்தியில் இருக்கிறார்கள் என்பதை எம்மால் விளங்கக் கூடியதாக இருந்தது.

ஆனால் முள்ளியவளையில் எமது இயக்கத்தின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமுமில்லை என்றளவில் மக்களுக்குக் கொஞ்சம் தெம்பாக இருந்தது. முள்ளியவளையை மையமாக வைத்தியங்கிய புலிகளின் குரல் நிறுவனமோ, நிதர்சனம் நிறுவனமோ, வேறு கலையகங்களோ, எமது மருத்துவமனைகளோ அங்கிருந்து அகற்றப்படும் எந்தத் தடயமும் இருக்கவில்லை. எல்லாமே இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அந்த ஒரு விடயம் மட்டுமே மக்களுக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் நானும் செல்வனும் எம்மோடு கதைத்தவர்களைத் தேற்றினோம். அதேநேரம் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டிய நிலையுமிருந்தது. ஏற்கனவே எமது கரும்புலியணிகள் நடவடிக்கைக்காகக் களமிறங்கிவிட்ட நிலையில் அவைபற்றிய சிறிய தகவலும் எமது வாயிலிருந்து வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். தமிழன்பன் (ஜவான்) அண்ணன் கரும்புலி அணியின் நிர்வாகத்தோடு நெருக்கமான தொடர்பிலிருந்ததால்  அவர் சில விடயங்களை ஊகித்து நம்பிக்கையோடு இருந்தார். ‘தலைவர் கைவிடமாட்டார். முள்ளியவளையையும் புதுக்குடியிருப்பையும் கைவிட்டுவிட்டு இயக்கம் எங்கு போவது? ஆகவே அதெல்லாம் நடக்காது. நம்பிக்கையாக இருங்கள்.’ என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார்.

அன்று பொழுதுபட நானும் செல்வனும் தளம் திரும்பும்போது மக்களின் மனநிலை பற்றியே எமது பேச்சு இருந்தது. ஒட்டுசுட்டான் பகுதியில் நிலைகொண்டிருந்த எமது இம்ரான்-பாண்டியன் படையணிப் போராளிகளோடு ஏற்கனவே கதைத்தளவில் அவர்களிடமும் ‘என்ன செய்யப் போகிறோம்?’ என்ற குழப்பமிருந்ததை அவதானித்திருந்தோம். இதை மாற்ற வேண்டுமானால் களத்தில் ஏதாவது பெரிதாக நடக்க வேண்டும். இப்போது களமிறங்கியிருக்கும் கரும்புலியணிகள் செய்யப்போவது முழுவெற்றியாக அமைய வேண்டுமென்று தான் அன்றிரவு முழுவதும் எமது கதையிருந்தது.

அன்றிரவு மணலாற்றிலிருந்து மற்றவர்களும் திரும்பியிருந்தார்கள். கரும்புலி அணிகளும் நவம் அண்ணனின் தலைமையிலான அணியும் வெற்றிகரமாக உள்நுழைந்து நகரத் தொடங்கவிட்டன. மறுநாள் காலை, இரண்டுபேர் மல்லாவிக்குச் செல்ல வேண்டுமென்று இரவு கதைக்கப்பட்டது. 29 ஆம் நாள் வீரச்சாவடைந்திருந்த கரும்புலி மேஜர் செங்கதிர்வாணனின் வித்துடலை இராணுவம் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமூடாக ஒப்படைத்திருந்தது. நீர்சிந்து – 2 நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மகளிர் படையணியினரின் வித்துடல்களோடு சேர்த்து செங்கதிர்வாணனின் வித்துடலையும் படையினர் ஒப்படைத்திருந்தனர். மறுநாட்காலை அவ்வித்துடலைப் பொறுப்பேற்று வருவதற்காகவே மல்லாவிக்கு இருவரை அனுப்பும் திட்டம் கதைக்கப்பட்டதோடு, செங்கதிர்வாணனின் வீரச்சாவு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் வேலையும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே முள்ளியவளையிலிருந்த செங்கதிர்வாணனின் வீட்டுக்காரருக்குச் செய்தி சொல்லப்பட்டுவிட்டதாயினும் அவ்வீரச்சாவு அதிகாரபூர்வமாக புலிகளின் குரலில் அறிவிக்கப்படவில்லை. மணலாற்றில் வீரச்சாவடைந்தது ஒரு கரும்புலி என்ற தகவல் வெளியிடப்பட்டால் எதிரி உசாரடைந்துவிடுவான் என்பதால் அந்த அறிவித்தலை உடனடியாக வெளியிடவில்லை.

பொதுவாக கரும்புலியின் வித்துடலை வைத்து வீரச்சாவு நிகழ்வு செய்யும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. செங்கதிர்வாணனின் வீரச்சாவு நிகழ்வு அவரது வித்துடலை வைத்துத்தான் நிகழப்போகிறது. கைக்குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டாலும்கூட உடல் பெருமளவு சிதையாமல் முழுமையாகவே இருந்தது.

அன்று (01.11.1999) இரவு வேளைக்கே உணவை உட்கொண்டுவிட்டு நானும் சசிக்குமார் மாஸ்டரும் செல்வனும் மாமரத்தடியிலிருந்து கதைத்தோம். மக்களின், சண்டைக் களமுனையில் நிற்கும் போராளிகளின் மனநிலைகள் பற்றியே எமது கதையிருந்தது. எந்தெந்த அணிகள் எந்தெந்த பகுதிகளைக் கவனித்து வருகின்றன, யார்யார் எப்பகுதிகளுக்குப் பொறுப்பாக நிற்கிறார்கள், எந்தப் பகுதியில் எதிரியின் முன்னகர்வை இயக்கம் எதிர்பார்க்கிறது போன்ற விடயங்களைக் கதைத்துக் கொண்டிருந்தோம். அடுத்தநாள் நிறையப் பணிகள் இருந்ததால் அன்றிரவு வேளைக்கே படுத்துவிட்டோம். அன்றிரவு ஏதாவது நடக்குமென்ற எதிர்பார்ப்பு எமக்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மை. இயக்கம் வலிந்த தாக்குதலொன்றை பெருமெடுப்பில் நடத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எமக்கு இருக்கவில்லை. வவுனியா ஜோசப் முகாம் மீதோ மன்னார் தள்ளாடி முகாம் மீதோ முன்பு இயக்கத்தால் நடத்தப்பட்ட ஆட்லறித் தாக்குதல்கள் போல் இப்போதும் ஓரிரு தளங்கள் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தப்படப்போகிறது என்றளவில் மட்டுமே எமது கணிப்பிருந்தது. அதைவிடவும் பெரிதாக ஏதும் நடக்காதா என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-8.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 19/04/2010

 

களங்கள் - 8. ஓயாத அலைகள் மூன்று

 

 

02/11/1999

அதிகாலை மூன்று மணியிருக்கும். செல்வன் வந்து எழுப்பினான். மிகத் தூரத்தே மெலிதாக வெடியோசைகள் கேட்டுக் கொண்டிருந்தன. அப்போதுகூட படையினர் முன்னகர முயற்சித்துத்தான் சண்டை நடப்பதாக நினைத்துக்கொண்டேன். அங்கிருந்த பலரும் அப்படித்தான் நினைத்தார்கள் ஓரிருவரைத் தவிர.

என்ன நடக்கிறது? எப்பகுதியை நோக்கி முன்னகர்கிறான்? களநிலைமை என்ன? போன்ற கேள்விகள் மனதைக் குடைந்தன. இப்படியான நேரங்களில் வோக்கியை (தொலைத் தொடர்புக் கருவி) ஓடவிட்டுப் பார்த்து விடயங்களை ஓரளவு ஊகித்துக் கொள்வோம். நேற்றுத்தான் கட்டியிருந்த ‘குறோசை’ கழற்றி வைத்திருந்தோம். அந்த அதிகாலையில் நரேஸ் அண்ணா முற்றத்திலிருந்த அசோகா மரத்தில் ஏறி குறோசை உயர்த்திக் கட்டினார். எம்மால் வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்கக் கூடியதாக இருந்தது.

பிடிபட்ட அதிர்வெண்கள் மோட்டர் அணிகளுக்குரியனவாகவே இருந்தன. சண்டையணிகளின் தொடர்புகள் கிடைக்கவில்லை. கட்டளைப்பீடங்களின் தொடர்புகளும் கிடைக்கவில்லை. மோட்டர் அணிகளின் உரையாடல்களின்படி ஏராளமான எறிகணைகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை ஊகிக்க முடிந்தது. எறிகணைகளுக்கான திருத்தங்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன. அதேவேளை மோட்டர்களை இடம்மாற்றும் கட்டளைகளும், விரைவாக நகரும்படியான கட்டளைகளும் அதிகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. மோட்டர்கள் நிலைகள் நகவர்வதைக் கொண்டு, களமுனை மாற்றமடைகிறது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. ஆனாலும் படையினர் முன்னகர்கின்றனரா இயக்கம் முன்னகர்கிறதா என்பதை ஊகிக்க முடியவில்லை. சண்டை தொடங்கிய நேரத்தைப் பார்க்கும்போது படையினர் நடவடிக்கை தொடங்கியருக்கச் சந்தர்ப்பமில்லை என்றே கருதமுடிந்தது. எனினும் இயக்கம் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யும் நிலையில் இருக்கவில்லையென்றே எமது மனதில் ஆழமாகப் படிந்திருந்ததால் அதை நம்பவும் முடியவில்லை. அன்றைய அதிகாலை வோக்கியை ஒட்டுக்கேட்பதிலேயே கழிந்தது.

விடிந்ததும் கடற்கரையிலிருந்த ‘யாழ் செல்லும் படையணி’ப் போராளிகளைச் சந்திக்கச் சென்றேன். அவர்களும் எம்மைப் போலவே வோக்கியை ஓடவிட்டுக் கொண்டிருந்தனர். கடற்கரையில் அவர்களுக்கு அதிகம் தெளிவாக இருந்தது. அவர்களுக்கும் என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை. ஆனால் முதல்நாள் அங்கு வந்திருந்த வசந்தன் மாஸ்டர், எல்லோருக்கும் பதுங்குகுழி வெட்டும்படி பணித்துவிட்டுப் போயிருந்தார். முதல்நாள் பகல் முழுவதும் பதுங்குகுழி வெட்டி முடித்திருந்தார்கள். ஆகவே இதுவொரு திட்டமிட்ட வலிந்த தாக்குதலாகவே இருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டோம். மீண்டும் எமது முகாமுக்குத் திரும்பினேன். அன்று செங்கதிர்வாணன் அண்ணாவின் வித்துடலைப் பொறுப்பேற்கச் செல்ல வேண்டியவர்கள் சென்றுவிட்டார்கள்.

சசிக்குமார் மாஸ்டரும் இளம்புலி அண்ணாவும் கிணற்றடியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். என்னையும் செல்வனையும் சேர்த்துக் கொண்டார்கள். அப்போதுதான் நிறைய விடயங்கள் அறியக்கூடியதாக இருந்தன. 29/10/1999 அன்று பராக்கிரமபுர முகாமுக்கான வேவுப்பணியை முடித்துக் கொண்டு திரும்பிவரும்போது நடந்த எதிர்பாராத மோதலில் கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரச்சாவடைய காயப்பட்ட கிரியையும் தூக்கிக்கொண்டு அன்றிரவுக்குள்ளேயே படையினரின் காப்பரணைக் கடந்துவந்து சேர்ந்தவர் இளம்புலி அண்ணா. முப்பதாம் திகதி பகலும் இரவும் அவர் எம்முடன் இருக்கவில்லை. 31 ஆம் நாள் கரும்புலிகள் அணியையும் நவம் அண்ணாவின் அணியையும் மணலாற்றுப் பகுதியிலுள்ள படையினரின் காப்பரண் வரிசைக்குள்ளால் பாதுகாப்பாக அழைத்துச்சென்று வழியனுப்பிவைத்துவிட்டு வந்திருந்தார். இடைப்பட்ட அந்த 30 ஆம் நாள் அவர் என்ன செய்தார் என்பது இப்போதுதான் தெரிந்தது.

அன்றிரவு இளம்புலி அண்ணா இன்னோர் அணியை மணலாற்று படையினரின் காப்பரண் வரிசைக்குள்ளால் நகர்த்தி உள்ளே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருந்தார். அது சிறுத்தைப் படையைச் சேர்ந்தவர்களில் நாற்பது பேரைக் கொண்ட பெரிய அணி. மேஜர் ஆஷா தலைமையிலான அவ்வணியை அழைத்துச் சென்று படையினரின் காப்பரண்களை ஊடுருவி பாதுகாப்பான இடம்வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்திருந்தார். தொடர்ச்சியான அலைச்சல்களுக்குள்ளும் இடைவிடாத இரவு நகர்வுகளுக்குள்ளும் அந்த வேவுப்புலி செய்த பணிகள் வியப்பூட்டுபவை.

கரும்புலிகளின் அணிகளுக்கு முன்பே ஆஷா அண்ணாவின் அணி உள்நுழைந்த செய்தியானது, இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது திட்டமிடப்பட்ட ஒரு வலிந்த தாக்குதல் என்பதைத் தெளிவாக உணர்த்தியது. பின்னர் அறிந்து கொண்டதன்படி, ஒட்டுசுட்டான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது ஏற்கனவே ஊடுருவியிருந்த ஆஷா அண்ணாவின் அணி பின்பக்கத்தால் தாக்குதல் நடத்தி அம்முகாமின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

காலை 11.00 மணியளவிலேயே செய்திகள் வந்துவிட்டன. ஒட்டுசுட்டான் முகாம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு நெடுங்கேணியில் சண்டை நடந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. அப்போதும் இதுவோர் தொடர் சண்டை என்று நாம் நினைக்கவில்லை. வழமைபோலவே ஒரு முகாம் கைப்பற்றல் என்றே கருதியிருந்தோம். அதுவரையான எமது போராட்ட வரலாற்றில் அப்படியான தொடர் நிலப்பரப்பு மீட்டல் என்பது நடைபெறவில்லை என்பதும் முக்கிய காரணம்.

காலையில்தான் -  ஒட்டுசுட்டான் படைத்தளம் முழுமையாகக் கைப்பற்றபின்னரே - அந்த முகாமிலிருந்து படையினரை முன்னகரவிடாமல் மறித்திருந்த போராளிகளுக்கு அம்முகாம் மீதான தாக்குதல் செய்தியும் அது கைப்பற்றப்பட்டுவிட்டது என்ற வெற்றிச் செய்தியும் தெரியவந்தது. அந்தளவுக்கு மிக கமுக்கமாகத் திட்டமிடப்பட்டு மிகக்குறைந்தளவு அணியினரைக்கொண்டு அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. வரலாற்றுப் பெருமைமிகு ஓயாத அலைகள் மூன்று தொடர்த் தாக்குதல் இப்படியாகவே தொடங்கியது. முதுநிலைத் தளபதிகளில்கூட மிகச்சிலருக்கு மட்டுமே இத்திட்டம் தெரிந்திருந்தது.

அன்று மதியமே, செங்கதிர்வாணன் அண்ணாவின் வித்துடல் எடுத்துவரப்பட்டிருந்தது.  முள்ளியவளையில் அவரது வீட்டில் அன்று மாலைவரை வைக்கப்பட்டு இரவு ஏழு மணியளவில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்படுமென்று திட்டமிடப்பட்டிருந்தது. அன்று மதியத்திலிருந்தே புலிகளின் குரல் வானொலி சிறப்பு ஒலிபரப்புக்களைத் தொடங்கிவிட்டது. இடங்கள் கைப்பற்றப்படும் செய்திகள் வரத்தொடங்கின. அன்று மாலையிலிருந்தே மக்கள் பேரெழுச்சியோடு செயற்படத் தொடங்கினார்கள். களமுனைப் போராளிகளுக்கான உணவுகளைச் சேகரித்தல், கைப்பற்றப்பட்ட இடங்களில் பொருட்கள், ஆயுத தளபாடங்கள் சேகரித்தல், படையினரின் உடல்களைச் சேகரித்தல் போன்ற பணிகளுக்கென மக்கள் மும்முரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். அதேவேளை எல்லைப்படையாகவும் மக்கள் களமுனைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அன்று இரவு முள்ளியவளை துயிலுமில்லத்தில் கரும்புலி மேஜர் செங்கதிர்வாணனின் வித்துடல் விதைக்கப்பட்டது. ஒட்டுசுட்டான் களமுனையில் நின்றிருந்த இம்ரான்-பாண்டியன் படையணியிலிருந்த போராளிகள் சிலர் அன்று முள்ளியவளை மருத்துவமனைக்கு வந்திருந்தனர். செய்தி கேள்விப்பட்டு துயிலுமில்லத்துக்கு வந்தனர். வித்துடல் விதைப்பு முடிந்ததும் அவர்களோடு கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று அதிகாலை களமுனையில் நடந்த கூத்தை சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள்.

ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்புப் பாதையையும் அதிலிருந்து அம்பகாமம் பக்கமாக கணிசமான நீளத்துக்கு இம்ரான்-பாண்டியன் படையணியே காப்பரண்கள் அமைத்து களமுனையைப் பாதுகாத்து வந்தது. 02/11/1999 அன்று அதிகாலை ஒட்டுசுட்டானுக்கும் அம்பகாமத்துக்கும் இடைப்பட்ட துண்டில்தான் லெப்.கேணல் ராகவன் தலைமையிலான அணியொன்றும் வேறு ஓர் அணியும் இருவேறு இடங்களில் ஊடறுப்புத் தாக்குதலைத் தொடங்கியிருந்தன. ராகவன் அண்ணா சண்டை தொடங்கும்போதே வீரச்சாவடைய, தொடர்ந்தும் அவ்வணி கடுமையாகப் போரிட்டு படையினரின் காப்பரணைக் கைப்பற்றியது. ஓர்அணி ஒட்டுசுட்டான் பக்கமாக படையினரின் காப்பரண்களைக் கைப்பற்றி முன்னகர மறுஅணி கரிப்பட்ட முறிப்பு முகாம் பக்கமாக காப்பரண்களைக் கைப்பற்றி முன்னகர்ந்தது.

இந்தச் சண்டைபற்றி எந்தவிதத் தகவலும் – சிறு சந்தேகம் வரக்கூடியளவுக்கான சமிக்கைகள்கூட அப்பகுதிக் களமுனையைக் கவனித்துக் கொண்டிருந்த அணிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நள்ளிரவில் சண்டை தொடங்கியதும் களமுனையில் நின்றவர்கள் உசாரானார்கள். வழமையாக நடக்கும் பதுங்கித் தாக்குதல் என்று நினைத்தவர்களுக்கு போகப்போக குழப்பமாகவே இருந்தது. ஓசைகள் கேட்பது எதிரியின் காப்பரண் வரிசையில். அத்தோடு, களமுனைப் பொறுப்பாளர் எல்லாக் காப்பரண்களோடும் வோக்கியில் தொடர்பு கொண்டளவில் ஒரு காப்பரணுக்குமே அடிவிழவில்லை என்பது உறுதியானது. அப்படியானால் என்னதான் நடக்கிறது? களமுனையில் நின்ற ஒருவருக்குமே ஒன்றும் விளங்கவில்லை. உள்நுழைந்த அணிகள் வேவு அணிகள் ஏதாவது திரும்பிவரும்போது முட்டுப்பட்டு விட்டார்களா? அப்படியானால் இப்படியான கடும்சண்டை நடக்க வாய்ப்பில்லையே? எமது பக்கமிருந்து எந்த அணிகளும் எம்மைத் தாண்டிப் போகவில்லையே? எதிரி தங்களுக்குள் சண்டை பிடிக்கிறானா? மிகவும் விசித்திரமான ஓர் உணர்வுதான் போராளிகளுக்கு இருந்தது.

கட்டளைப் பீடங்களிலிருந்த களமுனைப் பொறுப்பாளர்கள் வோக்கியை ஓடவிட்டுப் பிடித்ததில் ஓரளவு ஊகித்துக் கொண்டனர். ஆனால் காப்பரண்களில் நின்ற போராளிகளுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அன்றிரவு முழுவதும் ஆமி வருவான், ஆமி வருவான் என்று அதிதீவிர விழிப்புடன் இருந்தனர். 

ஓயாத அலைகள் மூன்றின் முதற்கட்டத்தில் ஏற்கனவே உள்நுழைந்திருந்த கரும்புலி அணிகளின் பங்கென்ன? தாக்குதல் தொடங்கியபோது அவர்களின் நிலையென்ன? என்னென்ன நடந்தன? போன்றவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-9.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 26/04/2010

 

களங்கள் - 9. ஓயாத அலைகள் மூன்று

 

 

02/11/1999

வன்னியெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். ஒட்டுசுட்டானும் நெடுங்கேணியும் வீழ்ந்தது மட்டும்தான் எமக்கும் மக்களும் தெரிந்திருந்தது. இதுவொரு தொடர் நடவடிக்கையென்பது தெரிந்திருக்கவில்லை. கைப்பற்றப்பட்ட இடங்களைப் பார்வையிடவென மக்கள் பெருமளவில் படையெடுத்தனர். இன்னமும் கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் அகற்றப்படாத நிலையில், மக்களைப் பார்வையிட தடைவிதிக்கப்பட்டது. இருந்தபோதும் தமக்குத் தெரிந்த காட்டுப்பாதைகளால் மக்கள் வந்து போய்கொண்டிருந்தனர்.

ஓயாத அலைகள் தொடங்கியபோது ஏற்கனவே உள்நுழைந்திருந்த கரும்புலியணிகள் என்ன செய்தன, இச்சண்டையின் அவர்களின் பங்கென்ன போன்ற விடயங்களை இத்தொடரில் பார்ப்பதாக சென்ற தொடரில் கூறப்பட்டது. நவம்பர் ஐந்தாம் நாள் எழிலையும் ஏழாம் நாள் பாதுகாப்பாகத் திரும்பிய கரும்புலி அணிகளையும் கண்டுகதைத்ததை வைத்து நடந்தவற்றை அறிந்துகொண்டேன். சண்டை தொடங்கியதிலிருந்து எழில் கரும்புலிகளையும் ஆட்லறிகளையும் ஒருங்கிணைக்கும் கட்டளைப்பீடத்தில் பணியாற்றியிருந்தான்.

எதிரியின் ஆட்லறித் தளங்களும் கட்டளைப் பீடங்களுமே கரும்புலி அணிகளுக்கான இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கரும்புலிகளில் நான்குபேர் கொண்ட ஐந்து அணிகளும் நவம் அண்ணன் தலைமையில் உணவுப்பொருட்களோடும் தளமொன்றை அமைக்கும் ஏற்பாட்டோடும் ஓரணியும் ஊடுருவியிருந்தன என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். இவற்றில் நான்கு அணிகளுக்கு இலக்குகள் வழங்கப்பட்டு அவர்கள் அதை நோக்கி நகரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஐந்தாவது கரும்புலியணி மற்ற நான்கு அணிகளுக்குமான வழங்கலை மேற்கொள்வதாகத் திட்டம். நைனாமடுக் காட்டுப்பகுதியில் நவம் அண்ணனின் அணி தளம் அமைத்துக்கொள்ளும். அங்கிருந்து மற்ற அணிகளுக்கான வழங்கல் நடைபெறும். மற்ற அணிகள் அத்தளத்துக்கு வந்து ஓரிருநாட்கள் ஓய்வெடுத்துச் செல்லலாம். கிட்டத்தட்ட ஒரு மாதமளவுக்கு இந்த அணிகள் அங்கே தங்கியிருந்து செயற்பட வேண்டுமென்ற வகையிலேயே திட்டமிடப்பட்டு அதற்குத் தேவையான பொருட்களுடன் அவர்கள் களமிறக்கப்பட்டார்கள். காயக்காரரைப் பராமரிக்கும் ஏற்பாடுகள் கூட செய்யப்பட்டிருந்தன.

மணலாற்றுக் காப்பரண்களால் ஊடுருவிய அணிகள் அங்கிருந்துதே தனித்தனியாகப் பிரிந்து தமது இலக்குகள் நோக்கி நகரத் தொடங்கினர். முதலாம் திகதி பகல் முழுவதும் நகர்ந்திருந்த கரும்புலியணிகள் அன்றிரவு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. இலக்குகளுக்கு விரைவாகப் போய்ச்சேரும்படி சொல்லப்பட்டதேயொழிய நாளோ நேரமோ குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. மணலாற்றில் ஊடுருவிய இடத்திலிருந்து போகவேண்டிய இலக்குகள் நீண்ட தூரமாகையாலும் எதிரியின் கண்களில் படாமல் நகரவேண்டிய காரணத்தாலும், காட்டு நகர்வாகையாலும் அணிகள் நகர்வதற்கு நீண்ட நேரமெடுத்தது. எந்த அணிகளும் குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை. மறுநாட்காலையில் மிகுதித் தூரத்தைக் கடந்து இலக்கை அண்மித்துவிட்டு, இரவு இலக்கை அடைவது என்பது அவர்களின் திட்டமாகவிருந்தது. அன்றிரவு அணிகள் படுத்திருந்தவேளைதான் ஓயாத அலைகள் மூன்று படைநடவடிக்கை தொடங்கப்பட்டது.

02/11/1999 அன்று அதிகாலை ஒட்டுசுட்டானுக்கும் அம்பகாமத்துக்குமிடையில் புலியணிகள் ஊடறுப்புத்தாக்குதலை மேற்கொண்டு சண்டையைத் தொடங்கின. உடைத்த அரண்வழியாக நகர்ந்து ஒட்டுசுட்டான் படைத்தளத்தையும் தாக்கிக் கைப்பற்றின. சண்டை தொடங்கியபோது உள்நுழைந்திருந்த கரும்புலி அணிகளுக்கு எதுவும் விளங்கவில்லை. தொடக்கத்தில் ஏதாவது சிறிய முட்டுப்பாடு என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு சிறிது நேரத்திலேயே நிலைமை வேறு என்பது புலப்பட்டது. கரும்புலி மேஜர் மறைச்செல்வனின் தலைமையில் நகர்ந்துகொண்டிருந்த அணி கனகராயன்குளம் படைத்தளத்தை அடைய வேண்டும். ஆனால் அவ்வணி நகரவேண்டிய தூரம் இன்னும் அதிகமிருந்தது.

சண்டை தொடங்கி சிறிதுநேரத்திலேயே எமது கட்டளை மையத்திலிருந்து மறைச்செல்வனுக்குத் தொடர்பு எடுக்கப்பட்டது. “அண்ணை, என்ன நடக்குதெண்டு தெரியேல. அவன் பயங்கரமா முழங்கத் தொடங்கீட்டான். எங்கட மற்றக் கோஷ்டியள் முட்டுப்பட்டாங்களோ தெரியேல. இப்ப என்ன செய்யிறது?” என்று தனது குழப்பத்தைத் தெரிவித்தான். இயக்கம் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யப் போகிறதென்ற அனுமானம் உள்நுழைந்திருந்த கரும்புலிகளுக்கும் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. “அப்பிடியொண்டுமில்லை. நாங்கள்தான் சமா தொடங்கியிருக்கிறம். இனி உங்கட கையிலதான் எல்லாம் இருக்கு. உடன ராக்கெற்றுக்கு ஓடு. இண்டைக்கு விடியமுதலே உன்ர பக்கத்தைக் கிளியர் பண்ணித் தந்தால் நல்லது” என்று கட்டளைத் தளபதி சுருக்கமாக நிலைமையைக் கூறினார். ஆனால் மறைச்செல்வனால் அன்று விடியமுன்னமே இலக்கை அடைய முடியாது என்பது அவருக்குத் தெரியும். சண்டையும் தொடங்கிவிட்டதால் இனி சற்று அவதானமாகவே நகரவும் வேண்டும். ஆனாலும் அவ்வணியை உற்சாகப்படுத்தும் பொருட்டு அவ்வாறு சொன்னார். மறைச்செல்வன் தனது அணியை இழுத்துக்கொண்டு இருட்டிலேயே இலக்குநோக்கி விரைந்தான்.

மற்ற மூன்று அணிகளும்கூட தமக்கான இலக்கை அடையவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் மறைச்செல்வனின் இலக்கைவிட அவர்களுக்குரிய நகர்வுத்தூரம் குறைவுதான். கரும்புலி மேஜர் தனுசனின் அணியையும் கரும்புலி மேஜர் செழியனின் அணியையும் அன்று விடியுமுன்பே இலக்கை அடையும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஏனைய அணிகளும் இருட்டிலேயே தமது நகர்வை மேற்கொண்டார்கள். ஆனாலும் விடியுமுன்பு இலக்கை அடைய முடியவில்லை. பகல் வெளிச்சம் வந்தபின்னர் இலக்கை நெருங்கி நிலையெடுக்கும் நிலையிருக்கவில்லை. எறிகணைகளுக்கான திருத்தங்களைச் சொல்ல வேண்டுமானால் முன்னூறு மீற்றர்கள் வரையாவது கிட்ட நெருங்க வேண்டும். பகலில் அவ்வளவு தூரம் நெருங்கி நிலையெடுப்பது அப்போது சாத்தியமற்றிருந்தது. மேலும் தாக்குதல் தொடங்கிவிட்டமையால் எதிரி கண்டபாட்டுக்கு ஓடித்திரிந்துகொண்டிருந்தான். எனவே அன்றிரவு நகர்ந்து இலக்கை அடையும்படி அறிவுறுத்தப்பட்டது.

03/11/1999 அன்று அதிகாலை வேளையில் தனுசனின் அணி தனது இலக்கை அடைந்து நிலையெடுத்துக்கொண்டதுடன் ஆட்லறித்தளத்தின் ஆள்கூறுகளைத் தந்தது. அத்தளம் மீது எமது ஆட்லறிகள் தொடக்கச் சூடுகளை வழங்கின. தனுசன் எறிகணைகளின் விலத்தல்களைக் குறிப்பிட்டுத் திருத்தங்களை வழங்க, அவை சரிசெய்யப்பட்டு அத்தளம் மீது சரமாரியான எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவ்விலக்கின் முக்கியத்துவத்தையும் தாண்டி மேலதிகமாகவே எறிகணைகள் வீசப்பட்டன. அன்றைய அதிகாலை வேளைத்தாக்குதலில் அப்பின்னணித் தளம் ஓரளவு முடக்கப்பட்டது. எதிரிக்குக் கணிசமான உயிரிழப்பும் ஏற்பட்டது. எதிரியானவன் தாக்கப்பட்ட தளத்தைச் சூழ தேடுதல் நடத்தத் தொடங்கியபோது தனுசனின் அணியைப் பாதுகாப்பாகப் பின்னகர்ந்து நிலையெடுக்கும்படி பணிக்கப்பட்டது. 03/11/1999 அன்று மாலையளவில் செழினுக்கு வழங்கப்பட்ட இலக்கும் தாக்குதலுக்கு உள்ளானது. எதிரிக்குப் பாரிய சேதங்கள் ஏற்படாதபோதும் எமது அணிகள் மீது எதிரியின் ஆட்லறிகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த முடிந்தது. இயக்கத்தின் திட்டமும் அதுதான். ஓயாத அலைகள் மூன்றின் போது வன்னிக்களமுனையில் நடைபெற்ற சமரில் நம்பமுடியாதளவுக்கு மிகமிகக் குறைந்த உயிரிழப்பு ஏற்பட்டதற்கு இதுவே முக்கிய காரணம். எதிரியின் பின்னணி ஆட்லறித்தளங்கள் பெரும்பாலானவை செயற்படமுடியாதபடி கரும்புலிகளினதும் எமது ஆட்லறிப் படைப்பிரிவினதும் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் முடக்கப்பட்டன. ஆயினும் எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்தியதும், மிகப்பெரும் வல்வளைப்புப் பகுதி கைப்பற்றப்படவும் காரணமாக அமைந்த ஆட்லறித் தாக்குதல் மறுநாள் அதிகாலை நிகழ்ந்தது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி மறைச்செல்வனின் அணி கனகராயன்குளத் தளத்தை நோக்கி நகர்ந்தது. ஆனாலும் 03/11/1999 அன்று காலையில்தான் இலக்கை அண்மிக்க முடிந்தது. எனவே அன்றிரவு இலக்கினுள் ஊடுருவி நிலையெடுப்பது என்றும் நள்ளிரவுக்குப் பின்னர் அத்தளம் மீது தாக்குதலை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. உண்மையில் அத்தளம் மீதான தாக்குதலுக்கு அவசரப்பட வேண்டிய தேவையும் இருக்கவில்லை. காரணம் சண்டைகள் சற்று ஓய்ந்திருந்தன. ஒட்டுசுட்டானையும் நெடுங்கேணியையும் அதைச் சூழ்ந்த இடங்களையும் கைப்பற்றிய கையோடு இயக்கம் தனது தொடர் முன்னகர்வைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது. கரிப்பட்ட முறிப்பு நோக்கி நகர்ந்த அணிகள் அத்தளத்தை அண்மித்து நிலையெடுத்துக் கொண்டன. 03/11/99 அன்று பகல் கடுமையான சண்டைகளெதுவும் நடைபெறவில்லை. தாக்குதலுக்குத் தயார்படுத்தப்பட்டு சண்டையைச் செய்தது சிறியளவிலான அணியே. இப்போது கைப்பற்றப்பட்ட இடங்களைப் பாதுகாத்து நின்ற அணிகளையும் ஒருங்கிணைத்து தொடர் தாக்குதலுக்கான அணிகள் ஒழுங்கமைக்கப்பட்டன. அத்தோடு மோட்டர் நிலைகள் மாற்றப்பட்டு எறிகணை வழங்கல்கள் நடைபெற்று அடுத்தகட்டத் தாக்குதலுக்கு இயக்கம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது.

அதேநேரம் கரிப்பட்டமுறிப்பில் அமைக்கப்பட்டிருந்த படைத்தளம் மிகமிக வலு வாய்ந்ததாக அமைந்திருந்தது. வன்னியில் நின்ற படையினரின் 55 ஆவது படைப்பிரிவின் தலைமைப் படைத்தளமாகவும் இது இருந்தது. அம்முகாம் மீதான தாக்குதல் மிகக்கடுமையாகவும் நன்றாகத் திட்டமிட்டும் நடத்தப்படவேண்டுமென்பது இயக்கத்துக்கு விளங்கியிருந்தது. அதற்கான தயார்ப்படுத்தலுக்கு அந்த ஒருநாளை இயக்கம் எடுத்துக்கொண்டது. கரிப்பட்டமுறிப்பு மீது தாக்குதலைத் தொடுத்து, தமது தொடர் தாக்குதலின் அடுத்தகட்டத்தைத் தொடக்கும்போதே கனகராயன்குளம் மீதான தாக்குதலும் நடைபெறுவது பொருத்தமாக இருக்குமென்பதால் இயக்கம் அவசரப்படவில்லை. அன்றிரவு (03/11/99) கரிப்பட்டமுறிப்புத் தளம் மீது கடுமையான சமர் தொடுக்கப்பட்டது. அத்தளம் வீழுமானால் வன்னியின் ஏனைய படைத்தளங்கள் அதிகம் தாக்குப்பிடிக்க மாட்டா என்பத அனைவரினதும் ஊகமாகவிருந்தது. எதிரியின் தலைமைப்பீடமும் அதை நன்கு உணர்ந்திருந்ததால் அத்தளத்தைப் பாதுகாக்க என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருந்தது. அந்த ஒருநாளில் மேலதிகப் படைவளங்களைக் கொண்டுவந்து குவித்து அத்தளத்தைப் வலுப்படுத்தியிருந்தது.

எதிர்பார்த்தது போலவே அன்றிரவு மறைச்செல்வன் தனது அணியுடன் கனராயன்குளப் படைத்தளத்தை ஊடுருவி நிலையெடுத்துக் கொண்டான். அப்படைத்தளம் பெரும் எண்ணிக்கையில் – கிட்டத்தட்ட 13 ஆட்லறிகளைக் கொண்டிருந்த ஆட்லறித்தளத்தையும் பெரிய மருத்துவமனையையும் கொண்டிருந்ததோடு வன்னிப் படைநடவடிக்கையின் முக்கிய கட்டளையதிகாரியின் கட்டளைபீடமாகவும் தொழிற்பட்டது. உலங்குவானூர்தி இறங்கியேறும் வசதிகள் படைத்த பெரிய படைத்தளமாக பெரிய பரப்பளவில் கனகராயன்குள முகாம் அமைந்திருந்தது. இந்தத் தளம் மீதான தாக்குதல் மிகப்பெரியளவில் எதிரிக்கு உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தவேண்டுமென இயக்கம் திட்டமிட்டிருந்தது. அதுதான் அனைத்து நடவடிக்கைக்குமான கட்டளை மையமாக இருந்ததால் இத்தளத்தின் தோல்வி மிகப்பெரும் வீழ்ச்சியாக படைத்தரப்புக்கு அமையுமெனவும் இயக்கம் கணித்திருந்தது.

இயக்கம் எதிர்பார்த்ததைப்போலவே அத்தளம் மீதான தாக்குதல் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. எதிர்பார்த்ததை விடவும் அதிகப்படியான சேதத்தை அத்தாக்குதல் எதிரிக்கு ஏற்படுத்தியது. அந்தப் படைத்தளத்தளமே நாசம் செய்யப்பட்டது என்றளவுக்கு மிகக் கடுமையான அழிவை அத்தளம் சந்தித்தது. மிக அருமையாக அந்தத் தாக்குதலை நெறிப்படுத்தினான் கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.

இதுபற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-10.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 04/05/2010

 

களங்கள் - 10. ஓயாத அலைகள் மூன்று

 

 

03 ஆம் நாள் நள்ளிரவு தாண்டி 04 ஆம் நாள் அதிகாலையில் இயக்கத்தின் கவனம் கனகராயன் குளம் தளம் மீது திரும்பியது. ஜெயசிக்குறு மூலம் முன்னகர்ந்து நிலைகொண்டிருந்த படைத்தளங்களுக்குரிய முதன்மைக் கட்டளையகமாகவும் வழங்கல் தளமாகவும் இத்தளமே விளங்கியது.

பாரிய மருத்துவமனை, வெடிபொருட் களஞ்சியம், உணவுக் களஞ்சியம், பல நீண்டதூர வீச்சுக்கொண்ட ஆட்லறிகளைக் கொண்ட ஆட்லறித்தளம் என்பன இக்கூட்டுப்படைத்தளத்துள் அடக்கம். மூன்றுமுறிப்பு, மாங்குளம், ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு, மேளிவனம், ஒட்டுசுட்டான் போன்ற தளங்களின் பின்னணிக் கட்டளை மையமாகவும் வழங்கல் மையமாகவும் இது விளங்கியது. இந்தத் தளத்திலிருந்து கிடைக்கும் உதவிகளே தற்போது சண்டை நடந்துகொண்டிருக்கும் கரிப்பட்டமுறிப்பிலிருக்கும் படையினருக்குரிய வலுவாக இருந்தது.

04/11/1999 அதிகாலையில் கனகராயன்குளப் படைத்தளம் எமது ஆட்லறிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. ஏற்கனவே தளத்தினுள் ஊடுருவியிருந்த கரும்புலி மறைச்செல்வனின் தொடர்போடு இத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரவு நேரத்தில் எதிரியின் ஆட்லறி நிலைகளை இலகுவாக இனங்காண வேண்டுமானால் அந்த ஆட்லறிகளைக் கொண்டு எதிரி தாக்குதல் நடத்த வேண்டும். இப்போது கரிப்பட்ட முறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, அம்பகாமம் போன்ற முகாம்கள் மீதும் முன்னணிக் காவலரண்கள் மீதும் நடக்கும் தாக்குதலை முறியடிக்க கனகராயன்குளத்திலிருந்த அனைத்து ஆட்லறிகளும் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருந்தன. இதைப் பயன்படுத்தி மறைச்செல்வன் நிலைகளின் ஆள்கூறுகளைக் கொடுக்க, அதன்படி ஏவப்பட்ட எறிகணைகளுக்கான திருத்தங்களையும் மறைச்செல்வன் கொடுக்க, வெற்றிகரமாக எமது ஆட்லறிகள் எதிரியின் ஆட்லறி நிலைகளைப் பதம் பார்த்தன. பத்து நிமிடங்களுக்குள் எதிரியின் ஆட்லறிகள் அனைத்தும் தமது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டன.

அடுத்தகட்டமாக ஆட்லறிகளின் அருகிலிருந்த இலக்குகளுக்கான தாக்குதலை மறைச்செல்வன் வழிநடத்தினான். வெடிபொருட்களஞ்சியம் மீதான தாக்குதல் மிக முக்கியமானது. எறிகணைகளுக்கான மிகத் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி வெடிபொருட்களஞ்சியக் கட்டடத்தினுள் எமது ஆட்லறி எறிகணைகளை வீழ்த்தி அவற்றைத் தகர்த்தழிக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்தான் மறைச்செல்வன். பல்லாயிரக்கணக்கான ஆட்லறி எறிகணைகள் (தனியே கனகராயன் குளத்திலுள்ள ஆட்லறிகளுக்கான வெடிபொருட்கள் மட்டுமன்றி ஏனைய படைத்தளங்களுக்குமுரிய வழங்கலும் இங்கிருந்துதான் என்றபடியால் மிக ஏராளமான வெடிபொருட்களைக் குவித்து வைத்திருந்தது இக்களஞ்சியம்.), மோட்டார் எறிகணைகள் கொண்ட இத்தளம் வெடித்துச் சிதறியது. அன்று அதிகாலை எரியத் தொடங்கிய அக்களஞ்சியம் பல மணித்தியாலங்கள் வெடித்து வெடித்து எரிந்துகொண்டிருந்தது. களஞ்சியம் வெடித்து எரியும் ஓசையை தொலைத்தொடர்பு கருவி வழியாக மற்றவர்கள் கேட்கும் வண்ணம் மறைச்செல்வன் நெருங்கிச் சென்று ஒலிபரப்பினான். எமது கட்டளை மையத்தில் மிகவும் உற்சாகம் பரவியது. ஏனென்றால் வெடிபொருட்களஞ்சியம் வெடித்துச் சிதறி எரியத் தொடங்கிவிட்டால் இனி அத்தளத்தை படையினர் முற்றாகக் கைவிட்டுவிடவே எத்தனிப்பர். அத்தளத்திலிருந்துகொண்டு தற்போதைக்கு எந்தச் செயற்பாடும் நடைபெற வாய்ப்பில்லை. இது ஏனைய படைத்தளங்களையும் பாதிக்கும். குறிப்பாக தற்போது சண்டை நடந்துகொண்டிருக்கும் படைத்தளங்களை நேரடியான பாதிப்புக்குள்ளாகும். ஆகவே சண்டை இலகுவாகவே முடியும் என்பதோடு ஏனைய பகுதிகளைக் கைப்பற்றுவதும் அதிக சிரமமாக இருக்கப் போவதில்லை.

உண்மையில் கனகராயன்குளத்திலிருந்த ஏனைய கட்டடங்களும் கடுமையான சேதங்களுக்கு உட்பட்டன. படையினரின் பின்னணி மருத்துவமனையாக இயங்கிவந்த கட்டடங்கள் முற்றாக எரிந்துபோயின. மருத்துவக் களஞ்சியம், உணவுக்களஞ்சியம் என்பனவும் எரிந்துபோயின. வெளிச்சம் வந்தபின்னரும் மறைச்செல்வனின் அணி அங்கேயிருந்து நிலைமைகளை அறிவித்துக் கொண்டிருந்தது. முகாமினுள்ளோ முகாமைச் சூழவோ தேடுதல் நடத்தும் நிலைமையில் அங்கு படையினர் இருக்கவில்லை. ஏராளமானோர் கொல்லப்பட்டிருந்தனர். காயப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு சில ஊர்திகள் வவுனியாவுக்குப் போயின. அதிகாலையில் வரவழைக்கப்பட்ட ஓர் உலங்குவானூர்தியில் முதன்மைக் கட்டளையதிகாரி ஓடித்தப்பினார். உலங்குவானூர்தி முகாமினுள் தரையிறங்கியபோது மறைச்செல்வன் நிலைமையைச் சொல்லி மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த முயற்சித்தான். இரு எறிகணைகள் ஏவப்பட்டு, அவைக்கான திருத்தங்கள் எடுக்கப்பட்டு அடுத்த எறிகணை ஏவப்பட முன்னமே அவ்வதிகாரி உலங்குவானூர்தியில் ஏறிப்பறந்து போனார்.

ஓயாத அலைகள் மூன்றை நடத்தவென உள்நுழைந்த கரும்புலியணிகள் சாதாரணமான ஆயுதங்களோடேதான் சென்றிருந்தனர். ‘லோ’ போன்ற ஆயுதங்களோ குறைந்தபட்சம்  40 மிமீ எறிகணை செலுத்திகளோகூட கொண்டு செல்லப்படவில்லை. இலக்குகளின் ஆள்கூறுகளையும் ஏவப்படும் எறிகணைகளுக்கான திருத்தங்களையும் சொல்வதுதான் நோக்கமாக இருந்தது. அத்தோடு நீண்டநாட்கள் நின்று செயற்பட வேண்டியதால் உலருணவுப் பொருட்கள், நீர்க்கொள்கலன்களின் நிறை என்பனவும் கவனிப்பட்டன. ஆகவே கனகராயன்குளத்தில் தரையிறங்கி ஏறிய உலங்குவானூர்தியை வெறும் நூறு மீற்றர் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு நிற்கவேண்டிய நிலைதான் மறைச்செல்வனின் அணிக்கு இருந்தது.

பின்னர் மறைச்செல்வனின் அணியைப் பின்னகர்த்தி வேறோர் இடத்துக்கு நகரும்படி கட்டளையிடப்பட்டது. நாலாம் திகதி காலையிலும் ஆயுதக் களஞ்சியம் வெடித்து வெடித்து எரிந்துகொண்டிருந்தது. கனகராயன்குளத்தில் தங்கியிருந்த கட்டளையதிகாரி தப்பிப் போனதோடு அந்தத் தளம் செயற்பாடிழந்தது. எஞ்சியிருந்த படைவீரர்கள் என்ன செய்வதென்று தெரியாது அங்குமிங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்தனர்.

 

04/11/1999 இரவு

திட்டமிட்டதைப்போல கரிப்பட்டமுறிப்பு முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. ஏற்கனவே வலுவாக இருந்த இந்தத் தளம், புலிகள் ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையைத் தொடங்கியபின் இன்னும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. இதற்குப் பக்கதுணையாக இருந்த மணவாளன்பட்டமுறிப்பு, அம்பகாமம் என்பன இயக்கத்தால் கைப்பற்றப்பட்டுவிட்டாலும் ஒலுமடு உட்பட பல சிறுமுகாம்கள் இன்னமும் பக்கவலுவாக இருந்தன. இப்பாரிய படைத்தளத்தின் ஒரு தொகுதியாக இருந்த ஆட்லறித் தளங்கள் மீது எமது ஆட்லறிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி அவற்றை அழிப்பது அல்லது செயற்பட விடாமல் தடுப்பது என்பது இயக்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகவிருந்தது. அதற்காக அங்கு அனுப்பப்பட்ட கரும்புலியணி மேஜர் செழியனின் தலைமையில் செயற்பட்டது. கரிப்பட்டமுறிப்பைச் சூழ நிகழ்ந்த கடுமையான சண்டையில் எதிரிக்குரிய பின்தளச் சூட்டாதரவுகள் பெருமளவு கிடைக்காவண்ணம் எமது கரும்புலிகளும் ஆட்லறிப் படையணியும் பார்த்துக் கொண்டதோடு பின்தளப் பகுதிகளில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஏற்கனவே கனகராயன்குளத்திலிருந்த தளம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதோடு கரிப்பட்டமுறிப்புத் தளத்தின் வலு குறைந்திருந்தது. ஓயாத அலைகள்- 3 இன் முதற்கட்டத்தில் இறுதியாக நிகழ்ந்த கடும் சண்டை கரிப்பட்டமுறிப்புச் சண்டையே ஆகும். அத்தளம் வீழ்ந்ததோடு எதிரி ஓட்டமெடுக்கத் தொடங்கியவன்தான். ஓமந்தைவரை கடுமையான சண்டைகளின்றி எம்மால் கைப்பற்ற முடிந்தது.

 

05/11/1999

அன்று பகற்பொழுதில் நிகழ்ந்த கடுமையான சண்டையைத் தொடர்ந்து கரிப்பட்டமுறிப்பும், பின்பு ஒலுமடுவும் எம்மால் கைப்பற்றப்பட்டது. இவற்றிலிருந்து தப்பியோடிய படையினர் கனகராயன்குளத்துக்கே சென்று சேர்ந்தனர். ஏற்கனவே சிதைந்திருந்த அத்தளத்தில் அவர்கள் ஒருங்கிணைந்து நின்று சண்டை செய்யச் சந்தர்ப்பமிருக்கவில்லை. ஆனாலும் அணிகள் கூடிக்கூடி நிலையெடுத்துக்கொண்டனர்.

கரிப்பட்டமுறிப்பு வீழ்ந்ததும் புலிகளின் ஓரணி அங்கிருந்து நேராக கனகரான்குளம் நோக்கி நகர்ந்தது. அதேநேரம் மாங்குளம் மீதும் புதிய களமுனை திறக்கப்பட்டது. ஆனால் எந்தக் களமுனையும் கடுமையாக சண்டையை எதிர்கொள்ளவில்லை. மிக விரைவாக தளங்கள் வீழத் தொடங்கின. மாங்குளமும் அன்றே எமது கைகளில் வீழ்ந்தது. அன்று மாலை நேரத்தில் கனகராயன்குளம் மீது எமது அணிகள் தாக்குதலைத் தொடங்கின.

அன்று மாலையில் புளியங்குளத்துக்கும் கனகராயன்குளத்துக்குமிடையில் ஏ- 9 பாதையைக் கடக்க முனைந்த செழியனின் தலைமையிலான கரும்புலியணியால் அது முடியவில்லை. ஏனென்றால் வவுனியாப் பக்கமாக படையினர் சாரைசாரையாக ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் ஏ- 9 வீதியாலும், பலர் தாம் தப்பியோடுவது தெரியக்கூடாதென்பதற்காக பாதையை விட்டு விலத்தி காட்டுக்கரையாலும் ஓடிக்கொண்டிருந்தனர். பாதையால் போய்க்கொண்டிருப்பவர்கள் வரும் ஊர்திகளைல் தொத்தியும் போய்க்கொண்டிருந்தனர். படையினர் பலர் ஆயுதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு வெறுங்கையுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.

‘செழியம்மான், ஒரு வாகனத்துக்குக் கிளைமர் வைச்சாலே நாப்பது அம்பது பேர் முடியும். இப்பிடியான நேரம் பாத்து ஒரு கோதாரியும் கொண்டரேல.’

சோபிதன் சலித்துக் கொண்டான்.

மயூரன் இன்னொரு திட்டத்தை முன்வைத்தான். எல்.எம்.ஜி., ஆர்பிஜி க்களோடு வரும் இரண்டொருவரைக் கொன்று ஆயுதங்களை எடுத்து பின்னர் கொத்துக் கொத்தாக அள்ளிப்போட்டுக் கொண்டு வரும் ஒரு ஊர்தி மீது ஒரு மின்னல் வேகப் பதுங்கித்தாக்குதலைச் செய்வதுதான் அது. உண்மையில் ஒரு சண்டைக்கான மனநிலையிலோ தகுந்த விழிப்புணர்வோடோ பாதுகாப்பு ஏற்பாட்டோடோ படையினர் அவ்வழியால் செல்லவில்லை. எனவே மயூரனின் இந்தத்திட்டம் மிக இலகுவாக நடைமுறைப்படுத்தப்படக் கூடியது மட்டுமன்றி மிகப் பெருமளவான படையினரைக் கொல்லவும் வழிசெய்யும்.

எதற்கும் ஒருமுறை அனுமதியைப் பெற்றுவிடுவோம் என்று செழியன் கட்டளைப்பீடத்தைத் தொடர்புகொண்டபோது அப்படியொரு தாக்குதலுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. “ஓடிப்போகும் படையினரை ஒன்றும் செய்ய வேண்டாம்; பேசாமல் விட்டுவிடுங்கள், நீங்களும் அவர்களோடு முட்டுப்பட வேண்டாம்” என்று கட்டளை வழங்கப்பட்டது.

ஓயாத அலைகள் மூன்றின் முதற்கட்டத்தில் கரும்புலியணிகள் தமக்குத் தரப்பட்ட பணிகளை மிகத்திறமையாக செய்து முடித்திருந்தன. செழியனின் அணி திருத்தங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது இலக்குக்குக் கிட்டவாக இருந்த காரணத்தால் எமது ஆட்லறி எறிகணையொன்றின் சிதறுதுண்டொன்று சோபிதனின் கையைப் பதம் பார்த்துச் சிறு காயத்தை ஏற்படுத்தியதைத் தவிர்த்துப் பார்த்தால் எந்தவிதச் சேதமும் எமது கரும்புலியணிகளுக்கு ஏற்படவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்குரிய தள, உணவு வசதிகளோடு எதிரியின் பகுதிக்குள்ளிருந்தே கட்டளை மையமாகவும் ஒன்றுகூடுமிடமாகவும் செயற்படும் திட்டத்தோடு பொருட்களைக் காவிச் சென்று தளம் அமைத்த நவம் அண்ணனின் தலைமையிலான அணியும் பெரிதாகச் செய்ய எதுவுமிருக்கவில்லை. அவர்கள் தளமிட்டிருந்த நைனாமடுக்காடு ஓயாத அலைகளின் வீச்சில் மூன்றாம் நாளே புலியணிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. ஐந்து நாட்களிலேயே புளியங்குளம் வரைக்கும் புலிகள் கைப்பற்றியும் விட்டனர். எனவே நவம் அண்ணனின் அணியும் ஏனைய ஐந்து கரும்புலி அணிகளும் புதிதாக முன்னகர்த்தப்பட்டிருந்த எமது கட்டளை மையத்துக்கு வரும்படி – அதாவது எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும்படி பணிக்கப்பட்டன.

 

===========================

 


இவ்வளவும் வெளிவந்த கரும்புலி வீரர்களிடமும் கட்டளை மையத்தில் நின்ற எழிலிடமும் கேட்டு அறியப்பட்டவை. ஓயாத அலைகள் மூன்று தொடங்கியபோது முல்லைத்தீவில் கரைச்சிக் குடியிருப்பில் நின்ற நாமும் ஏனைய கரும்புலி வீரர்களும் என்ன செய்தோம்? எங்கு நகர்ந்தோம்? என்பன தொடர்பில் அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-11.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 25/05/2010

 

களங்கள் - 11. ஓயாத அலைகள் மூன்று

 

 

03/11/1999

இப்போது நாம் கரைச்சிக் குடியிருப்பில்தான் இருந்தோம். அன்று பகல் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்குச் சென்று வந்திருந்தேன். மக்களெல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள். களமுனைப் போராளிகளுக்கு உணவுப்பொதிகள் திரட்டுவது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, எல்லைப்படையினராக, உதவியாளராக மக்கள் களமுனைப்பணிகளுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். எல்லாமே ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் நிகழ்ந்துகொண்டிருந்தன. அப்போது புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பு நேரத்தை அதிகரித்திருந்தது. களமுனைத் தகவல்களை இயன்றளவுக்கு உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டிருந்தது. இனிமேல் என்ன செய்வது, எல்லாமே முடிந்துவிடும் போலுள்ளதே என்று இரு நாட்களுக்கு முன்புவரை அங்கலாய்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இது எதிர்பாராத பெருமகிழ்ச்சி.

நாமும் களமுனையில் என்ன நடக்கிறதென்று அறிய பலவழிகளின் முயன்றோம். ஆனால் சரியான தொடர்புகள் தெரிந்த பொறுப்பாளர்கள், தளபதிகளைத் தொடர்பெடுத்தாலும் எவரும் எமது தொடர்புக்கு வரவில்லை. ஒட்டுசுட்டான் களமுனையிலிருந்த இம்ரான்-பாண்டியன் படையணியினரையும் சமரில் ஈடுபடுத்தியதால் அவர்களின் தொடர்புமில்லை. வோக்கியில் ஓடவிட்டு ஒட்டுக் கேட்கும் தூரவீச்சையும் தாண்டி களமுனை நகர்ந்துவிட்டதால் அதுவும் சாத்தியப்படவில்லை. நாமும் மக்களைப் போலவே புலிகளின்குரல் வழியாக மட்டுமே களநிலைமைகளை அறியக்கூடியதாகவிருந்தது.

அன்றிரவு எமக்கு அறிவித்தல் வந்து சேர்ந்தது. ஏற்கனவே பராக்கிரமபுர படைத்தளத்திலிருந்த ஆட்லறிகளைத் தகர்க்கவென தயாராகியிருந்த கரும்புலிகள் அணியைக் கொண்டு அதே தளத்தின்மீது தாக்குதல் நடத்துவதாக அத்திட்டம் இருந்தது. அருளன் தலைமையிலான அந்த அணி அடுத்தநாள் புறப்படுவதாகத் திட்டம். மீளவும் திட்டம் நினைவுபடுத்தப்பட்டு அன்றிரவு சிறிய பயிற்சியொன்றும் நடைபெற்றது. இப்போது அந்த அணியில் மேலதிகமாகவும் ஆட்கள் இணைக்கப்பட்டனர். மூன்றாம் தொகுதியைச் சேர்ந்த பெண் கரும்புலிகள் சிலர் இந்த அணியோடு இணைக்கப்பட்டு தாக்குதலணி சற்றுப் பெருப்பிக்கப்பட்டது. ஏற்கனவே சண்டை தொடங்கிவிட்டதால், கைவிடப்பட்ட இடங்களிலிருந்து ஓடிய படையினர் பராக்கிரமபுர படைத்தளத்தை அடைந்திருப்பர். ஆகவே அதிக ஆள்வலுவோடு அம்முகாம் இருக்கும். அதைவிட ஓயாத அலைகள் மூன்று தொடர்வதால் எதிரி எச்சரிக்கையாகவே இருப்பான். அதைவிட நகர்வுப்பாதையிலேயே எதிரியோடு மோதவேண்டிய சூழலும் தற்போது உருவாகியுள்ளது. எனவேதான் அதிகவலுவோடு அணியை அனுப்ப வேண்டிய தேவையிருந்தது.

 

04/11/1999

அன்று பகல் முழுவதும் அணிகள் நகர்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தன. புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கான திட்ட விளக்கம் கொடுக்கப்பட்டு அவர்கள் தயார்ப்படுத்தப்பட்டார்கள். கரும்புலிகளின் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்த சசி புவிநிலைகாண் தொகுதி கருவியோடு வழிகாட்டியாக இணைக்கப்பட்டார். ஏற்கனவே வேவு பார்க்கப்பட்ட வழியாக இம்முறை நகர்வு இருக்கப்போவதில்லை. களநிலைமைகளும், களமுனைகளும் மாறிவிட்டன. இம்முறை நைனாமடுவழியாக நகர்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கைப்பற்றப்பட்ட நெடுங்கேணி வரை ஊர்தியிலேயே சென்று அதன்பின்னர் காட்டுக்குள்ளால் நகர்வதாகத் திட்டம் சொல்லப்பட்டது.

தாக்குதலுக்கான கரும்புலி அணியைத் தவிர மற்றவர்களும் சேர்ந்து புறப்படுவதாகத் திட்டம். கரும்புலி அணிகள் எல்லாமே களத்தில் இறங்குவதால் நிர்வாகத் தளத்தை முன்னகர்த்த வேண்டிய தேவையிருந்தது. எனவே நெடுங்கேணிப்பகுதியில் நிர்வாகத் தளத்தை தற்காலிகமாக நிறுவுவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தளத்திலிருந்த அனைவருமே தேவையான பொருட்களுடன் நகர்வதுதான் திட்டம்.

அன்று மாலையே எல்லோரும் தயாராகிவிட்டனர். ஆனாலும் இருட்டும்வரை இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டோம். ஓர் உழவு இயந்திரத்திலும் ஒரு பிக்கப் ஊர்தியிலும் எமது பயணம் தொடங்கியது. முள்ளியவளை வந்து பின்னர் ஒட்டுசுட்டான் வழியாக நெடுங்கேணி போவதே திட்டம். முள்ளியவளை – நெடுங்கேணி பாதையைப் பயன்படுத்தலாமென திட்டம் முன்வைக்கப்பட்டாலும். அது பாதுகாப்பில்லையென்ற காரணத்தால் கைவிடப்பட்டது. முள்ளியவளை – ஒட்டுசுட்டான் பாதையில் குறிப்பிட்ட தூரத்துக்கப்பால் எல்லாமே வெறிச்சோடியிருந்தது. இருட்டிலே எமது உழவியந்திரமும் பிக்கப் ஊர்தியும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்றிடத்தில் நின்று நின்றே பயணித்தோம். நாம் சென்ற பாதையில் படையினரின் காப்பரண் இருந்த இடத்தையடைந்தபோது விடியத் தொடங்கியிருந்தது. எதிரியின் ஊர்திக் கண்ணிவெடியில் சிக்கிய பாரவூர்தியொன்று பாதைக்கரையில் சிதைந்திருந்ததைத் தூரத்திலேயே பார்த்தோம். முதல்நாள் மதியம் அவ்வழியால் வழங்கலில் ஈடுபட்டிருந்த பாரவூர்தியே அது.

 

05/11/1999

நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாக எமக்குச் சொல்லப்பட்டிருந்தது. எனினும் எச்சரிக்கையாக அனைவரும் இறங்கி நடந்தே அவ்விடத்தைக் கடந்தோம். ஓட்டுநர்கள் மட்டுமே ஊர்தியை செலுத்தி அவ்விடத்தைக் கடந்தார்கள். பிறகு மீளவும் ஏறி நெடுங்கேணி நோக்கி எமது பயணம் தொடர்ந்தது.

இடையில் ஒட்டுசுட்டான் சிவன் கோவிலடியில் நின்றோம். அவ்விடத்திலே பொதுமக்கள் சிலர் போய்வரும் போராளிகளுக்கு தேனீர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலைக் குளிரில் சுடச்சுட அவர்கள் தந்த தேனீர் அருமையாக இருந்தது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள். களநிலைவரம் பற்றி எங்களிடம் விடுத்து விடுத்துக் கேட்டார்கள். ‘எங்களுக்கென்ன தெரியும்? நாங்களும் உங்களைப் போலத்தான். புலிகளின் குரலைக் கேட்டு அறியிறம்’ என்று சொன்னால் அவர்கள் நம்பத் தயாரில்லை. எமது வீரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் – குறிப்பாக 'லோ' (கவச எதிர்ப்பு ஆயுதம்) போன்றவை, நாம் சிறப்பு அணியென்பதை அவர்களுக்கு உணர்த்தியது.

பதினொரு மாதங்களின்பின்னர் ஒட்டுசுட்டான் எங்கள்வசம் வந்திருந்தது. புதிதாகக் கைப்பற்றப்பட்ட அந்த மண் பெரியளவில் மாறியிருக்கவில்லை. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் விடுப்புப் பார்க்கப் புறப்பட்டவர்களை கலைத்துக் கலைத்து ஊர்தியடிக்கு இழுத்து வந்தார் சசிக்குமார் மாஸ்டர். சண்டை நடந்த இடங்களைப் பார்ப்பதும், நாம் வெற்றிவாகை சூடிய சமர்க்களத்தில் உலாவுவதும் எல்லோருக்கும் விருப்பமானதுதான். ஆனால் நாம் புறப்பட வேண்டியிருந்தது.

மக்களிடமிருந்து விடைபெற்று நெடுங்கேணி நோக்கி எமது பயணம் தொடர்ந்தது. ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிப் பாதையில் இடையிடையே அமைக்கப்பட்டிருந்த சிறுமுகாம்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது அவற்றிலிருந்து பொருட்களும் ஆயுதங்களும் அள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. இறந்த படைவீரர்களின் உடல்களைப் பொறுக்கி ஊர்தியில் ஏற்றிச் செல்லும் பணியிலும், ஆயுத தளபாடங்களை ஏற்றிச் செல்லும் பணியிலும் போராளிகளுக்கு பொதுமக்கள் உதவிக் கொண்டிருந்தனர். ஒட்டுசுட்டானைத் தாண்டியபின் வந்த சிறுமுகாம்களில் பெரிய சண்டைகள் நடந்த அடையாளங்கள் காணப்படவில்லை.

நெடுங்கேணியை அடைந்துவிட்டோம். அங்கே ஏற்கனவே பெரிய கட்டளைமையமொன்று செயற்பட்டுக் கொண்டிருந்தது. தளபதி சொர்ணம், தளபதி ஜெயம் உட்பட வேறு தளபதிகளும் பொறுப்பாளர்களும் அங்கே இருந்தனர். அவர்களுக்குச் சற்று எட்டவாக நாம் நின்றோம். அங்கிருந்து கரும்புலி அணிகள் தமது நகர்வைத் தொடங்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடி பராக்கிரமபுர படைத்தளத்தின் மீது இவ்வணி தாக்குதலை நடத்தவேண்டும். சிலவேளை எமது ஆட்லறிகளால் அத்தளம் தாக்கப்படுவதும் அதற்குரிய முன்னணி நோக்குநர்களாக கரும்புலி அணியினர் இலக்கின் அருகிலிருந்து செயற்பட வேண்டி வரலமென்பதும் ஓர் துணைத்திட்டமாக இருந்தது. பராக்கிரபுர படைத்தளத்தை எமது ஆட்லறி எறிகணைகள் எட்டும் தூரத்துள் எமது ஆட்லறிகள் நகர்த்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டால் இரண்டாவது திட்டமே நடைமுறைப்படுத்தப்படும். எதைச் செய்யவேண்டுமென்று அணிகளுக்கு இறுதிநேரத்தில் சொல்லப்படும். ஆனால் ஏற்கனவே திட்டமிட்டதுபோல் ஒரு முழு அளவிலான அதிரடித் தாக்குலுக்கு ஏற்றாற்போலவே அணிகள் நகரத் தொடங்கின.

அன்று மதியம்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எமது இரு கரும்புலிவீரர்களை நாம் இழந்ததோடு அந்தத் தாக்குதல் திட்டமும் முற்றாகக் கைவிடப்பட்டது. எதிரியின் தாக்குதலில் கரும்புலி மேஜர் அருளனும் கரும்புலி மேஜர் சசியும் வீரச்சாவடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அணிகள் பின்னோக்கி நகர்த்தப்பட்டன. நெடுங்கேணியிலிருந்தும் பின்வாங்கி கற்சிலைமடுவிலே தற்காலிகமாக அன்று முழுவதும் தங்கினோம். அருளனதும் சசியினதும் இழப்பு எல்லோரையும் பாதித்திருந்தது. இருவருமே மிகமுக்கியமான ஆளுமைகள். அதைவிட குறிப்பிட்ட தாக்குதல் திட்டமும் கைவிடப்பட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தாக்குதல் திட்டம் முழுவதும் அருளனது தலைமையிலேயே நடப்பதாக இருந்தது.

கற்சிலைமடுவில் அன்று மாலையும் இரவும் கழிந்தது. அப்போது மீண்டும் வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்கத் தொடங்கினோம். அதுவரை களநிலைவரம் பற்றி எமக்குப் பெரிதாக எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஒட்டுசுட்டானும் நெடுங்கேணியும் கைப்பற்றப்பட்டதோடு நிற்பதாகவே கருதியிருந்தோம். ஆனால் வோக்கியை ஓடவிட்டுக் கேட்டதில் நிலைமை தலைகீழாக இருந்தது. கடும் சண்டை நடப்பதற்கான ஓசைகளும் கேட்டுக் கொண்டிருந்தன. இடங்களும் படைத்தளங்களும் எங்கள் வசம் வீழ்ந்துகொண்டிருப்பதாகவும் எதிரி ஓடிக்கொண்டிருப்பதாகவும் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதைவிட இடங்களின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லியே கதைக்கப்பட்டது. அம்பகாமம் விழுந்தது, மணவாளன்பட்டமுறிப்பு, கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு விழுந்தது. இன்னும் பல இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவைகள் விழுந்துவிட்டதாக வோக்கியில் கதைக்கப்பட்டது. எங்களில் யாருமே நம்பவில்லை. அன்று பொழுதுபட மாங்குளம் சந்தியும் விழுந்ததாகக் கதைத்தார்கள். அப்போது நாங்கள் பகிடி விடத் தொடங்கினோம்.

‘டேய் பைரவன், உது உங்க முத்தையன்கட்டு பாவலன் வெட்டைக்க ரீம் ட்ரெய்னிங் எடுக்குது. நீ அதைப்போய் சண்டைக்காரரின்ர ஸ்டேசன் எண்டு வேலை மினக்கெட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய்’  - இது நரேஸ் அண்ணா.

பயிற்சிகளின்போது இவ்வாறு இடங்களின் பெயர்களை வைத்துப் பயிற்சி செய்வதுண்டு. உண்மையில் அவ்வாறு நினைக்கும்படியாகத்தான் நிலைமைகள் இருந்தன. இவ்வளவு இடங்களும் ஏதோ பேருந்து நடத்துனர் கூவி ஆட்களைக் கூப்பிடுவதைப் போல வீழ்ச்சியடைந்தது என்பது எவராலும் நம்ப முடியவில்லை. ஆனால் கேட்ட சில குரல்கள் ஏற்கனவே அறிமுகமான தளபதிகள் சிலரின் குரல்கள் என்பதிலும் ஐயமில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கம் புதிராகவே இருந்தது.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-12.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 01/06/2010

 

களங்கள் - 12. ஓயாத அலைகள் மூன்று

 

 

வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்டதில் வன்னியில் சிறிலங்காப் படையினரால் வல்வளைக்கப்பட்டிருந்த பலவிடங்கள் மீட்கப்பட்டதாக அறிந்தோம். ஆனால் அதை உண்மையென்று நம்புமளவுக்கு நாம் இருக்கவில்லை. இவ்வளவு விரைவாக இந்த இடங்கள் அடுக்கடுக்காக வீழ்ந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனாலும் நாம் கேட்டுக் கொண்டிருந்த குரலுக்குரியவர்கள் களமுனையில் நிற்கும் தளபதிகள் என்பதையும் மறுக்க முடியவில்லை.

அப்போது நாம் இருந்தது கற்சிலைமடு – ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து சற்று உள்ளே ஒரு மாந்தோப்பில். ஏறக்குறை 25 பேர் வரையில் இருந்தோம். அன்று பகல் அருளனையும் சசியையும் இழந்த தாக்கத்திலிருந்து நாங்கள் முற்றாக மீண்டிருக்கவில்லை. இருந்தபோதும் இந்தக் களமுனைத் தகவல்கள் ஒருவித பரபரப்பை எம்மிடையே விதைத்திருந்தது. என்ன நடக்கிறதென்று அறியும் ஆவலை அடக்க முடியவில்லை.

இனியும் பொறுத்திருக்க முடியாதென்று நானும் செல்வனும் வீதிக்கரைக்குச் சென்றோம். அவ்வழியால் செல்லும் தெரிந்தவர்களோடு கதைத்தால் ஓரளவு விடயங்கள் தெரியவருமென்பது எம் எண்ணம். அவ்வப்போது இயக்க ஊர்திகள் போய்வந்தனவேயன்றி யாரும் நின்று கதைப்பதாகத் தெரியவில்லை. அப்போது தோழில் வானொலிப்பெட்டியைக் கொழுவியபடி ஒருவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வானொலியில் புலிகளின்குரல் ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. வன்னியில் வானொலிப்பெட்டியைத் தோளில் கொழுவியபடி சைக்கிளால் செல்லும் அனேகமானவர்களைக் காணலாம். அதை றேடியோ என்றுகூடச் சொல்வதில்லை, ''பாட்டுப்பெட்டி'' என்றுதான் சொல்வதுண்டு.

பாட்டுப்பெட்டியுடன் போய்க்கொண்டிருந்த ஐயாவை மறித்தோம். ஐயாவுக்கு எம்மைவிட ஓரளவு விடயங்கள் அதிகமாகத் தெரிந்திருந்தது. அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்ட முறிப்பு ஆகியவிடங்களில் நடந்த சண்டைகளில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களை மேளிவனத்தில் (ஒட்டுசுட்டான் – மாங்குள வீதியிலிருக்கும் ஒரு கிராமம்) கொண்டு வந்து சேர்ப்பதாக ஐயா சொன்னார். அதைவிட கரிப்பட்ட முறிப்பு முகாம் கைப்பற்றப்பட்டுவிட்டதெனவும் ஐயா சொன்னார்.

‘கரிப்பட்ட முறிப்பு விழுந்தது எப்பிடி உங்களுக்குத் தெரியும்?’

‘புலிகளின் குரலில சொன்னது தம்பி. அதுமட்டுமில்லை கென்ற்பாம், டொலர்பாம், சிலோன்தியேட்டருகளும் விழுந்திட்டுதாம்.’

‘சிலோன்தியேட்டர் எங்க கிடக்கு, கரிப்பட்ட முறிப்பு எங்க கிடக்கு? நீங்கள் ஏதோ மாறிச் சொல்லிறியள் போல கிடக்கு…’

‘தம்பி எனக்குத் தெரியும் உந்த இடம் வலமெல்லாம். ஒதியமலைதான் என்ர சொந்த இடம். அங்காலப்பக்கமும் சண்டை நடக்குது, இஞ்சாலப் பக்கமும் சண்டை நடக்குது. அனேகமா நாளைக்கு விடியவே கனகராயன்குளமெல்லாம் விழுந்திடும்.’

நாங்கள் வோக்கியில் கேட்டதைப்போல்தான் ஐயாவின் கதையிருந்தது. கென்ற்பாம், டொலர்பாம், சிலோன் தியேட்டர் பகுதிகள் விழுந்ததாக ஐயா சொல்வது எமக்கு இன்னும் ஐயத்தை ஏற்படுத்தியது. அப்பகுதிகள் கிட்டத்தட்ட சிங்களமக்களின் நிலப்பகுதி என்று எமது மனதில் பதியும்வண்ணம் நீண்டகாலத்தின் முன்பே பறிக்கப்பட்டுவிட்ட பகுதிகள். முன்னகர்ந்து நின்ற படையினரைத் தாக்குவதாக நாம் கருதிக்கொண்டிருந்த வேளையில், மிக நீண்டகாலத்தின்முன்பே, எமது இயக்கம் ஒரு கரந்தடிக் குழுவாக இருந்த காலத்திலேயே பறிக்கப்பட்ட நிலப்பகுதிகள் சில எம்மால் மீட்கப்பட்டதாக ஐயா சொல்வதை உடனடியாக நம்ப முடியவில்லை.

ஐயாவை சைக்கிளை விட்டு கீழே இறக்கினோம். நான் வானொலியை வாங்கிக் கொண்டேன். புலிகளின் குரலின் சிறப்பு ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. எப்படியும் அடிக்கடி சிறப்புச் செய்திகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். செய்தியைக் கேட்டுவிட்டு ஐயாவை அனுப்புவோம் என்று முடிவெடுத்தோம். ஐயாவும் சம்மதித்தார். தான் சொன்ன செய்தியை நாங்கள் நம்பவில்லை என்பதை ஐயா அறிந்திருந்தார்.

பத்து நிமிடத்திலேயே புலிகளின் குரலின் சிறப்புச் செய்தி வந்தது. ஆம்! நாம் கேள்விப்பட்டதெல்லாம் செய்தியாகச் சொல்லப்பட்டது. சுருக்கமாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே போகும் அந்தச் செய்தியில் இதுவரை கைப்பற்றப்பட்ட இடங்கள் சொல்லப்பட்டன. தொடர்ந்தும் சண்டை நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. இறுதியில் இதுவரை இச்சமரில் நூறு வரையான மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று சொல்லி அச்செய்தி முடிவடைந்தது.

‘தம்பி, உவ்வளவு இடங்களும் பிடிபட்டதை நம்பிறம். ஆனால் வீரச்சாவு எண்ணிக்கைதான் நம்பேலாமல் கிடக்கு. உதுகளை ஏன்தம்பி மறைக்க வேணும். இயக்கம் ஒருக்காலும் இப்பிடிச் செய்யிறேல.’

சொல்லிவிட்டு ஐயா புறப்பட்டார். நாம் மீண்டும் ஆவலாக மாந்தோப்புக்கு ஓடிவந்தோம் செய்தியை மற்றவர்களிடம் சொல்ல. புலிகளின் குரலில் இவ்வளவு இடங்களும் சொன்னார்கள் என்று நாம் சொன்னபோதுதான் மற்றவர்களும் முழுமையாக நம்பினார்கள்.

ஐயா குறைபட்டதுபோல் வீரச்சாவு எண்ணிக்கையென்பது நம்ப முடியாததாகவே இருந்தது. படையினர் ஆயிரத்தையும் தாண்டிய எண்ணிக்கையில் மாண்டிருக்க, பல்லாயிரம் படையினரைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட பெரும் படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டிருக்க, எமது தரப்பில் நூறுபேர் தான் வீரச்சாவென்று அறிவிப்பது நம்பமுடியாமலேயே இருக்கும். ஆனால் உண்மை அதுதான். நம்பவே முடியாத அளவில் எமது தரப்பில் இழப்புக்கள் மிகமிக அரிதாகவே நிகழ்ந்தன. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

என்றுமில்லாத வகையில் இயக்கம் கனவகை ஆயுதங்களையும் எறிகணைகளையும் பயன்படுத்தியது. சண்டையணிகள் சிறுவகை ஆயுதங்களால் நேரடியாகச் சண்டைசெய்த சந்தர்ப்பங்களும் நேரங்களும் குறைவாகவே இருந்தன. எதிர்ப்பு கடுமையாக வருகிறதென்றால் உடனேயே அணிகளைப் பாதுகாப்பாக நிலையெடுக்கவிட்டுவிட்டு எதிரிமீது சரமாரியான எறிகணைத் தாக்குதலைச் செய்வது, விழும் எறிகணைகளுக்கான திருத்தங்களை களமுனையிலிருக்கும் அணித்தலைவர்களைக் கொண்டு பெற்றுக் கொண்டு துல்லியமான தாக்குதலைச் செய்வது. பின்னர் அணிகள் முன்னகர்ந்து தாக்கி இடங்களைக் கைப்பற்றும். அந்தச் சமரில் சண்டையணிகள் முன்னணி நோக்குநரின் பணிகளையே அதிகம் செய்தன என்றால் மிகையில்லை. அதேநேரம் மிகக்கடுமையான சமர்கள் ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்புத் தளங்களைக் கைப்பற்ற நடந்தன என்பதும் உண்மை.

ஓயாத அலைகள் மூன்று சமரில் இயக்கம் புதியதொரு தந்திரத்தையும் கையாண்டது. சிறப்புப் பயிற்சி பெற்ற பதுங்கிச் சுடும் அணிகளை முன்னணிச் சண்டையணிகளோடு களமிறக்கியது. லெப். மயூரன் பதுங்கிச் சுடும் அணி என்று ஒரு சிறப்பு அணி உருவாக்கப்பட்டிருந்தது. இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமான இந்த அணியின் முதலாவது தொகுதி தமக்கான சிறப்புப் பயிற்சியை நிறைவு செய்த சிலநாட்களுள் ஓயாத அலைகள் மூன்று சமர் தொடங்கிவிட்டது. அவ்வணி அப்படியே இரு தொகுதிகளாக களத்தில் இறக்கப்பட்டது. ஓயாத அலைகள் மூன்று சமரென்பது பரவலாக இறங்கித் தாக்குதல் நடத்தாமல் ஓரிடத்தில் எதிரியின் காப்பரண் வரிசையை உடைத்து, பின்னர் ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றியபடி செல்வதாகவே இருந்தது. அவ்வாறு ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றிச் செல்லும் நகர்வில் பதுங்கிச் சுடும் அணியின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதோடு சண்டையை இழப்புக்களின்றி நடத்தவும் உதவியது.

இவற்றைவிட, பின்தளங்களில், குறிப்பாக வழங்கல் தளங்களிலும் ஆட்லறித் தளங்களிலும் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிப்படையணியின் துணையோடு நடத்திய தாக்குதல்கள் பெருவெற்றியை ஈட்டித்தந்தன. கிட்டத்தட்ட எதிரியின் முக்கிய ஆட்லறி நிலைகள் அனைத்துமே செயற்படமுடியாத நிலைக்குள் கரும்புலிகளாலும் எமது ஆட்லறிப்படையணியாலும் முடக்கப்பட்டிருந்தன. எமது தரப்பு இழப்புக்கள் குறைவாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்.


05/11/1999

இருட்டிவிட்டது. இதுவரை எமது அடுத்தகட்டம் என்ன என்பது சொல்லப்படவில்லை. இரவு சாப்பாடு வந்ததும் பகிர்ந்து உண்டுவிட்டு காவற்கடமைக்கு ஆட்களை ஒழுங்கமைத்துவிட்டு எல்லோரையும் படுத்து ஓய்வெடுக்கச் சொன்னோம். பைரவன் ஒருபக்கத்தில் இன்னமும் வோக்கியை ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தார். எம்மால் ஒட்டுக்கேட்க முடியாத தூரத்துக்குக் களமுனை நகர்ந்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. பின்தள, வழங்கல் கட்டளைபீடங்களின் உரையாடல்களே எமக்குக் கேட்டன.


06/11/1999

விடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-13.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 08/06/2010

 

களங்கள் - 13. ஓயாத அலைகள் மூன்று

 

 

06/11/1999

விடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.

கரும்புலி அணியினர் அமர்ந்திருக்க நாமெல்லாம் சுற்றி நின்றுகொண்டோம். சொர்ணம் அண்ணன்தான் முதலில் கதைத்தார். ஓயாத அலைகள் மூன்று வெற்றிகரமாக நடந்துகொண்டிருப்பதையும், இது தொடர்ந்தும் நடைபெறப்போகும் ஓர் படை நடவடிக்கையென்பதையும் தெளிவுபடுத்தினார். இதுவரை கிடைத்த வெற்றிக்கு ஏற்கனவே ஊடுருவியிருந்த கரும்புலியணிகள் எவ்வளவு முக்கிய பங்காற்றினர் என்பதையும் மேலோட்டமாகத் தெரிவித்தார். உண்மையில் இவ்வளவு வேகமாக நிலங்கள் மீட்கப்படுமென்ற எதிர்வுகூறல் இயக்கத்திடம் இருக்கவில்லை என்பதை சொர்ணம் அண்ணையின் பேச்சில் அறிய முடிந்தது. எதிரிக்குத் திகைப்பாகவும் எமக்கு வியப்பாகவும் அமைந்திருந்தது அந்த வெற்றி.

தொடர்ந்து நடக்கப்போகும் சமர்பற்றியும் கரும்புலியணிகளின் பங்கு என்னவென்றும் மேலோட்டமாக ஒரு திட்டத்தை விளங்கப்படுத்தினார் சொர்ணம் அண்ணன். கண்டிவீதியிலே ஓமந்தை வரை கைப்பற்றப்பட்ட பின்பு எமது முன்னணிக் காப்பரண் வரிசை நேர்கோடாக இருக்கப்போவதில்லை. மன்னார்க்கரைப் பக்கமாகவும் மணலாற்றுக் கரைப்பக்கமாகவும் படையினர் மேவி நிற்க, நாம் இடையிலே ஊடுருவி நிற்பதுபோன்றே களநிலைவரம் அமையப் போகிறது. எனவே மணலாற்றுப்பக்கத்தில் படையினரை ஒதுக்கிப் பின்தள்ளி ஒரு நேர்கோடாக எமது காப்பரண் வரிசையை அமைத்துக் கொள்வது முதற்கட்டம். அதன் தொடர்ச்சியாக, எதிரியை இன்னும் பின்னுக்குத் தள்ளி கொக்குத்தொடுவாய் நீரேரியின் மறுபக்கத்துக்குத் துரத்திவிடுவது அடுத்த கட்டம். அப்படி நடக்கும் பட்சத்தில் நீரேரியைக் கடந்து எதிரி முன்னகர முயற்சி செய்யும் சாத்தியக்கூறுகள் குறைவு என்பதோடு, எமது பகுதிகளைக் காப்பதும் இலகுவாக அமையும்.

இந்த மணலாற்று மண்ணை மீட்கும் அடுத்தகட்ட நகர்வுக்கு எஞ்சியிருக்கும் கரும்புலியணிகள் முழுமையாக இறக்கப்படப் போகின்றன, அதேநேரம் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் அணிகளும் வெளியேற்றப்பட்டு தேவைக்கேற்ப புதிய களமுனைக்கு அனுப்பப்படும் எனவும் சொர்ணம் அண்ணன் திட்டத்தை விளக்கினார். இத்திட்டத்தின்படி மணலாற்றுக் காட்டில் இருக்கும் எதிரியின் முக்கிய தளங்களான கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, பராக்கிரமபுர போன்ற தளங்களுள் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிகளின் உதவியோடு அத்தளங்களைத் தாக்கியழிக்க வேண்டுமென்பது அடிப்படைத் திட்டமாக அமைந்திருந்தது.

ஊடுருவலும் நகர்வுகளும் முன்பைப் போல் இலகுவாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் ஏற்கனவே சண்டை தொடங்கிவிட்டபடியாலும் படையினர் காடுகள் வழியே சிதறுண்டு அலைவதாலும் எமது அணிகள் எதிரியிடம் முட்டுப்படாமல் நகர்வதென்பது சிரமமானதே. அத்தோடு, சிலோன் தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் என்பன கைப்பற்றப்பட்டதால் மணலாற்றுப்பகுதி முன்னணிக் காப்பரண்களும் முதன்மைத் தளங்களும் முழுமையான எச்சரிக்கையோடு இருந்தன. எனவே நகர்வுகள் கவனமாக அமையவேண்டுமென சொர்ணம் அண்ணன் குறிப்பிட்டார். விளக்கமான திட்டமும் அறிவுறுத்தல்களும் கடாபி அண்ணை தருவார் என்றுகூறி அவர் தனது விளக்கத்தை முடித்துக் கொண்டார்.

கடாபி அண்ணன் கதைத்தபோது விளக்கமாக எதையும் குறிப்பிடவில்லை. தொடர்ந்து நடக்கப்போகும் எமது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, எதிரியின் ஆட்லறித் தளங்களைச் செயலிழக்கச் செய்யும் பணியை கரும்புலிகள் செய்ய வேண்டுமெனக் குறிப்பிட்டு மிகுதி விளங்கங்கள் பிறகு அளிக்கப்படுமெனச் சொல்லி முடித்துக் கொண்டார்.

இதற்கிடையில், கரும்புலியணியில் இருந்த பெண்போராளியான மாதவி அக்காவின் அண்ணன், முதல்நாள் நடந்த மோதலில் வீரச்சாவடைந்திருந்தார். இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றி அவர் வீரச்சாவடைந்திருந்தார். எனவே மாதவி அக்காவை அந்த நடவடிக்கையிலிருந்து நிறுத்தி வைக்கும்படி அறிவித்தல் வந்திருந்தது. ஆனாலும் தான் நிற்கப்போவதில்லை, இந்தச் சமர் முடியும்வரை நான் வீட்டுக்குப் போகப்போவதில்லை என்று மாதவி அக்கா பிடிவாதமாக நின்றிருந்தா. அன்று கடாபி அண்ணன் மாதவி அக்காவோடு நீண்டநேரம் கதைத்து அவவை அந்நடவடிக்கையிலிருந்து நிறுத்திவைத்தார்.

அன்று மதியமே நாங்கள் வேறிடம் சென்றோம். அது எவ்விடம் எனச் சரியாகத் தெரியாவிட்டாலும் ஓயாத அலைகள் மூன்றில் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதியே அது. கடாபி அண்ணனின் கட்டளைப் பணியகமும் எமது ஆட்லறி நிலைகளும் அவ்விடத்திலேயே இருந்தன. அன்று பிற்பகல் நடவடிக்கையில் ஈடுபட்ட கரும்புலியணிகள் அங்கே வந்து சேர்ந்தனர். எல்லோரையும் மகிழ்ச்சியோடு கட்டித் தழுவிக் கொண்டோம். எவருமே எதிர்பாராத பெரியதொரு திகைப்பை எதிரிக்குக் கொடுத்து பெருவெற்றிபெற உறுதுணையாய்ச் செயற்பட்ட அந்த வெற்றிவீரர்கள் மிகவும் களைத்திருந்தார்கள். கடந்த ஒரு கிழமையாக சரியான தூக்கமின்றி ஓட்டமும் நடையுமாகவே அவர்கள் காலம் கழிந்திருந்தது. சோபிதனுடைய முழங்கையில் (பின்னர் கரும்புலி மேஜர் சோபிதனாக யாழ்ப்பாணத்தில் வீரச்சாவு) எறிகணைச் சிதறுதுண்டொன்று கீறிச் சென்றதைத் தவிர வேறு எந்தச் சேதமுமில்லை. மயூரன் (கடற்கரும்புலி மேஜர் மயூரனாக வீரச்சாவு) மிகவும் சோர்ந்து போயிருந்தான். கால்கள் இரண்டும் பெரிதாக வீங்கியிருந்தன. முகம் அதைத்திருந்தது. அவனால் ஒழுங்காக நடக்கமுடியவில்லை.

எல்லோரோடும் கடாபி அண்ணை கதைத்துவிட்டு அன்றிரவே முல்லைத்தீவுக்குப் புறப்படும்படி சொன்னார். எல்லோரையும் அருளன், சசி ஆகியோரின் வீடுகளில் நடக்கும் வீரச்சாவு நிகழ்வுகளுக்குச் செல்லும்படியும் அறிவுறுத்தினார். எமக்குத் திகைப்பாக இருந்தது. ஏனென்றால், அன்று காலையில்தான் மணலாற்றுப்பகுதி முழுவதையும் மீட்கப்போவதாகவும், ஒருநிமிடமும் ஓய்வின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்றும்  சொர்ணம் அண்ணன் கதைத்திருந்தார். ஆனால் இப்போது கரும்புலி அணி முழுவதையுமே வீரச்சாவு நிகழ்வுகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

எதையும் கேட்காமல் ஏறிக்கிளம்பினோம். இரவு கரைச்சிக் குடியிருப்பு வந்துசேர்ந்து மறுநாள் அதிகாலையே ஒரு கன்ரர் ஊர்தியிலும் ஒரு றோசா பேருந்திலும் எல்லோரும் புறப்பட்டோம்.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-14.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 15/06/2010

 

களங்கள் - 14. ஓயாத அலைகள் மூன்று

 

 

07/11/1999

அதிகாலை வேளையில் மல்லாவிக்கு நாம் விரைந்தோம். அங்குத்தான் கரும்புலி மேஜர் அருளனின் குடும்பத்தினர் இருந்தனர். ஓர் ஓலைக்குடிசையில் தங்கியிருந்த அக்குடும்பத்தில் அருளனின் தாயும் தங்கையும் மட்டுமே இருந்தனர். வழமைபோலன்றி இம்முறை கரும்புலிகளின் வித்துடல்களைக் கொண்டுவந்து வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மழைக் காலமாகையால் அந்த வளவு சேறாகியிருந்தது. முற்றத்தில் பந்தல்போட்டு அருளனின் வித்துடல் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான போராளிகளும் பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

அருளன் பற்றி ஏற்கனவே இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்டளவில் எனக்கு மிகமிக நெருங்கிய ஒருவராயிருந்தார். சிலமாதங்களே பழகியிருந்தாலும் நாம் மிகநெருக்கமாக ஒன்றித்திருந்தோம். கலை, இலக்கியம் தொடர்பாகவும் போராட்டத்துக்கு வெளியேயான பொதுவிடயங்கள் குறித்தும் கதைக்க என்னிடமும் அவரிடமும் பொதுவான விடயங்கள் பலவிருந்தன. நிறைய வாசிப்பும், எதையும் ஆவலோடு அறிந்துகொள்ளும் துடிப்பும் அவரிடமிருந்தன.  இவரது மிகைதிறன் காரணமாக இம்ரான்-பாண்டியன் படையணியில் மாதந்தோறும் நடத்தப்படும் பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றாமலிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார் என்பது இவரது பரந்த அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு. (தொடர்ச்சியாகப் பரிசு வென்ற காரணத்தால் வேறும் சிலர் இவ்வாறு போட்டியில் பங்குபற்றாமலிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்).

கரும்புலி மேஜர் சசி, மாலதி படையணியிலிருந்து கரும்புலியணிக்கு வந்து சேர்திருந்தா. சிறிய உருவம், ஆனால் மிகுந்த செயல்திறன் அவவிடமிருந்தது. ஏற்கனவே மாலதி படையணியின் சிறப்பு அதிரடிப்படைப் பயிற்சியைப் பெற்றிருந்த காரணத்தால் நீச்சல் பயிற்சியுட்பட கூடுதலாக சிறப்புப் பயிற்சிகளை மிக இலகுவாகவே செய்து முடித்தா. அதிலும் நீச்சலில் மிகத்திறமையாகச் செயற்பட்டா. போர்நிறுத்த காலத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் தயாரித்த ஓர் ஆவணப்படத்தில் கரும்புலி மேஜர் சசியின் தாயார் செவ்வி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருளனும் சசியும் கரும்புலியாகப் போய் நடத்தவிருந்த முதல் தாக்குதல் நடக்கவேயில்லை. இடையிலேயே எதிரியின் தாக்குதலில் அவர்கள் வீரச்சாவடைந்துவிட்டனர். ஆனாலும் அவர்கள் தாக்குதல் நடத்தவென இருந்த இலக்கு பின்னர் வேறொரு நாளில் கரும்புலிகள் அணியின் துணையோடு தாக்கி நிர்மூலமாக்கப்பட்டது.

கரும்புலி மேஜர் அருளின் குடும்பத்தினர் இருந்த இடத்திற்கு அருகில்தான் கிளி ஃபாதர் என அழைக்கப்படும் அருட்தந்தை கருணாரத்தினம் அடிகளார் இருந்தார். (பின்னர் சிறிலங்காப் படையினரின் ஆழஊடுருவும் அணியினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.) ஏற்கனவே அவரோடு எமக்குப் பரிச்சயமிருந்தது. குறிப்பாக அவரை எனக்கு யாழ்ப்பாணத்திலேயே பழக்கமிருந்தது. நானும் செல்வனும் கிளி ஃபாதரைப் போய்ப் பார்த்தோம். மிகுந்த உற்சாகத்தோடு ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தார். களத்திலே எமது வெற்றிகள் அவருக்கு அளவிலா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.

போராளிகளின் நலன் பற்றி அக்கறையோடு விசாரித்தார். களமுனைப் போராளிகளுக்கான உலருணவுச் சேகரிப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். காயக்காரரைப் பராமரிக்கும் ஒழுங்கு, இரத்ததானம் வழங்க ஆட்களை ஏற்பாடு செய்தல் என்று எல்லாவற்றிலும் அவரின் ஈடுபாடும் உழைப்புமிருந்தது. நாங்கள் ஏதோ களமுனையிலிருந்து வந்ததுபோல் நினைத்துக்கொண்டு எம்மிடம் பலவிடயங்கள் விசாரித்தார். ஆனால் உண்மையில் கிளி ஃபாதர் போய்ப்பார்த்த களமுனைகளைக்கூட நாம் எட்டியும் பார்க்கவில்லை. ஒட்டுசுட்டான் வீழ்ந்த மறுநாட்காலையே குடிமையுடையில் சென்று ஒட்டுசுட்டான் முகாமைப் பார்வையிட்டு வந்தவர், பின்னரும் கரிபட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, ஒலமடு, மாங்குளம், கனகராயன்குளம் என அனைத்து முகாம்களையும் போய்ப் பார்வையிட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறார். அதுவும் கனகராயன்குள வெடிபொருட்களஞ்சியம் எரிந்து முடியுமுன்பேயே போய்ப்பார்த்தவர்களுள் இவரும் ஒருவர். நாங்கள் இன்னும் அந்தப்பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை. இருந்தாலும் சில கதைகளைச் சொல்லிச் சமாளித்தோம்.

அன்று காலையிலிருந்துதான் புலிகளின் குரலில் வவுனியாப் பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படி அறிவுறுத்தல் விடுக்கப்படத் தொடங்கியது. நாங்கள் கிளி ஃபாதரோடு கதைத்துக் கொண்டிருந்தபோதும் அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்களனைவரும் இயக்கம் வவுனியாவை அடித்துப் பிடிக்கப் போவதாகவே கதைத்துக் கொண்டிருந்தார்கள். எங்களோடு சொர்ணம் அண்ணன் கதைத்ததன்படி மணலாற்றுப்பகுதியைத்தான் நாம் அடுத்ததாக மீட்கப்போகிறோமென நினைத்திருந்தோம். அன்றைய நாளில் எதுவுமே சாத்தியமானது என்றே எல்லோரும் நம்பினர். ஏனென்றால் மிகமிக வலுவான தளங்களெல்லாம் மிகச்சில நாட்களுள் வீழ்ந்ததுடன், மிகப்பெரும் நிலப்பரப்பும் எம்மால் மீட்கப்பட்டிருந்தது.

அறிவித்தலைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபாதர் சொன்னார், "உது ஆமியைக் குழப்பிறதுக்காகத்தான் இருக்கும். நாங்கள் பிடிக்க வேண்டிய இடங்கள் வேற".

“ஓம் ஃபாதர். ஆனா இண்டையில் நிலையில எதையும் சொல்ல ஏலாது.”

“இல்லைத்தம்பி, அவன் வவுனிக்குள எதிர்க்கரை வரைக்கும் வந்து நிக்கிறான். இப்படியே விட்டிட்டு கண்டிறோட்டாலை நாங்கள்  ஆழமாகப் போனால் எங்களுக்குத்தான் ஆபத்து. முதலில மேற்கு வன்னியையும் மீட்டு பக்கவாட்டு ஆபத்துக்களைக் களைஞ்சு கொண்டுதான் நாங்கள் மேற்கொண்டு போகவேணும்.”

எமக்கு மேற்குவன்னி பற்றி தோன்றவேயில்லை. எங்கள் எண்ணமெல்லாம் மணலாறு மீதுதான் இருந்தது. ஆனால் ஃபாதர் சொல்வதும் சரியாகத்தான் இருந்தது. இப்போது கண்டிவீதிக்கு ஒருபக்கமாக எதிரி எமக்குப் பக்கவாட்டாகத்தான் நிற்கிறான். அதுவும் முழுமையான படைவலுவோடுதான் நிற்கிறான். இருந்தும் நாங்கள் மேற்கொண்டு இதுதொடர்பாக எதுவுமே கதைக்கவில்லை. எமக்கும் நேரமாகிவிட்டமையால் ஃபாதரிடம் விடைபெற்றுக்கொண்டுக் கிளம்பினோம். அருளனின் வீட்டுக்கு வந்து எல்லோருடனும் சேர்ந்து புறப்பட்டோம்.

மாலையில் புறப்பட்ட நாம் புதுக்குடியிருப்புக்கு வந்துசேர இருட்டிவிட்டது. கரும்புலி மேஜர் சசியின் குடும்பத்தினர் புதுக்குடியிருப்பில்தான் இருந்தனர். இதுவும் ஓர் ஓலைக்குடிசைதான். சசிக்கு தங்கைகள் மூவரும் தம்பி ஒருவனும் இருந்தனர். எல்லோரும் அன்போடு எம்மை வரவேற்றனர். நீண்டநேரம் அவர்களோடு இருந்து கதைத்துவிட்டு இரவு கரைச்சிக் குடியிருப்புத் தளத்துக்குத் திரும்பினோம்.

அன்றிரவே, கரும்புலி அணியைச் சேர்ந்த ஆண் போராளிகள் அனைவரையும் புறப்படும்படி அறிவுறுத்தல் வந்தது. இரவிரவாகவே அனைவரும் புறப்பட்டனர். ஆனால் இம்முறை ஊடுருவல் நடவடிக்கையில்லை. வேறொரு பணி காத்திருந்தது அவர்களுக்கு.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-15.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 22/06/2010

 

களங்கள் - 15. ஓயாத அலைகள் மூன்று

 

 

கரும்புலிகள் அணியைச் சேர்ந்த ஆண் போராளிகள் அனைவரையும் புறப்படும்படி அறிவுறுத்தல் வந்திருந்தது. இரவோடு இரவாக அணிகள் ஒழுங்கமைக்கப்பட்டன. ஊடுருவல் நடவடிக்கையிருந்து திரும்பி சரியான முறையில் ஓய்வில்லாமலேயே அவர்கள் மீண்டும் புறப்பட்டார்கள். புலியணிகள் ஓமந்தைவரை முன்னகர்ந்திருந்த நிலையில் சண்டை தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. அடுத்த கட்டம் உடனடியாகவே தொடங்கும்போல இருந்தது. ஏற்கனவே மணலாற்றின் மிகுதிப் பகுதிகளைக் கைப்பற்றும் திட்டம் பற்றி சொர்ணம் அண்ணன் விளங்கப்படுத்திய திட்டம் மனத்தில் நின்றது. தற்போது வவுனியா நகர்ப்பகுதியில் வாழும் மக்களைப் பாதுகாப்பாக இடங்களுக்கு நகரச் சொல்லி இயக்கம் அறிவித்துக் கொண்டிருப்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை வவுனியாப் பகுதியை மீட்பதாக அமையுமெனவும் ஊகமிருந்தது. எதுவென்றாலும் எதிரிக்கு நேர அமையம் கொடுக்காமல் தாக்கி முன்னகர வேண்டுமென்பது முக்கியமாக அனைவராலும் உணரப்பட்டது.

உள்நடவடிக்கையிலிருந்து வெளியேறிய அணியில் மயூரனின் நிலை சற்றுச் சிக்கலாக இருந்தது. முகமெல்லாம் அதைத்து, கை கால்கள் வீங்கியிருந்தன. முழு உடற்பலத்துடன் மயூரன் இருக்கவில்லை. நகர்வின்போது முட்கள் கீறி பாதங்கள் கிழிந்திருந்தன. ஆனாலும் முகம் அதைத்துள்ளதற்கான சரியான காரணம் தெரியவில்லை. முகாமில் நின்ற மருத்துவப் போராளியிடம் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு சமாளித்தான் மயூரன். அது சாதாரண சிக்கல்தான் என்பதைப் போல் நடந்துகொண்டான். முள்ளியவளை மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டபோதும், தான்  அணியோடு சேர்ந்து போகிறேன், நிலைமை மோசமானால் மருத்துவமனை செல்கிறேன் என்று அடம்பிடித்து அணியினரோடு புறப்பட்டான். இப்போது கரும்புலிகள் போவது நேரடியான சண்டைக்களத்திற்கு அல்ல என்பதாலும், முகம் அதைத்திருந்ததைத் தவிர வேறு அறிகுறிகள் இல்லாத காரணத்தால் சிறிய சிக்கலாகத் தோன்றியதாலும் மயூரன் அணியினரோடு போக அனுமதிக்கப்பட்டான்.

உண்மையில் மயூரனின் உடல் கடுமையான சோதனையை ஏற்கனவே எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தது. அவனது சிறுநீரகங்கள் சரியாக இயங்காமல் பழுதடையத் தொடங்கியதற்கான அறிகுறியே அன்று தொடங்கியிருந்து. இரண்டு கிழமைகளின் பின்னர்தான் முழுமையான மருத்துவச் சோதனைக்கு மயூரன் உட்படுத்தப்பட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவனோ அந்த நாட்களில் தனது உபாதைகளை மற்றவர்களுக்கு வெளிக்காட்டாமல் ஓர்மத்தோடு உழைத்தான். சிறுநீரகப் பழுது கண்டுபிடிக்கப்பட்டநிலையில் கடற்கரும்புலிகள் அணிக்கு மாற்றலாகி திருகோணமலையில் கடற்படைக்கலம் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் மயூரனாக வீரச்சாவடைந்தான்.

இப்போது கரும்புலிகள் அணியின் ஆண் போராளிகள் சென்றது விடுதலைப் புலிகளின் ஆட்லறிப் படையணிக்கு. ஓயாத அலைகள் மூன்றின் அடுத்த கட்டம் நாம் எதிர்பார்த்ததைப் போல் மணலாற்றுப் பகுதியைக் கைப்பற்றவோ வவுனியாப் பகுதியைக் கைப்பற்றவோ நடக்கவில்லை. மாறாக ரணகோச மூலம் படையினர் கைப்பற்றியிருந்த பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையாக அமைந்திருந்தது. பள்ளமடு, பெரியமடு, தட்சனாமருதமடு, மடு, பண்டிவிரிச்சான் உட்பட பெருமளவு மன்னார் மாவட்ட நிலப்பகுதி மீட்கப்பட்டது. இந்தச் சண்டையின்போது கரும்புலிகள் எமது ஆட்லறிப் படையணியினரோடு இணைந்து பணியாற்றினார்கள்.

ஓயாத அலைகள் மூன்று தொடங்கியபோதே இயக்கத்தின் ஆட்லறிப் படையணியின் விரிவாக்கம் போராளிகளால் உணரப்பட்டது. அதுவரை இயக்கம் எதிரியிரிடமிருந்து கைப்பற்றிய ஆட்லறிகள் மூன்று மட்டுமே. அவற்றின் தூரவீச்சு ஏறக்குறைய 17 கிலோ மீற்றர்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் மூன்றின்போது கரும்புலிகள் திருத்தம் சொல்லிக் கொடுக்க நடத்தப்பட்ட தாக்குதலின்போதே இயக்கம் ஆட்லறிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தது உணரப்பட்டது. அத்தோடு தூரவீச்சுக் கூடிய ஆட்லறிகளும் பயன்பாட்டிலுள்ளன என்பதையும் உணர முடிந்தது. இப்போது மன்னார்ப்பகுதிச் சண்டையின்போது கரும்புலியணிகளும் சில ஆட்லறிகளைப் பொறுப்பெடுத்துத் தாக்குதல் நடத்தியமை, இயக்கத்தின் ஆட்லறிப் பெருக்கத்தை எமக்குக் கோடிட்டுக் காட்டியது. வன்னியின் தென்பகுதிச் சண்டைகள் முடிந்து வடபகுதி நோக்கி ஓயாத அலைகள் வீசத் தொடங்கியபோது ஆட்லறிப் படையணி பெருமளவு போராளிகளைக் கொண்டு பாரிய கட்டமைப்பாக வளர்ந்திருந்தது.

மன்னார்ப்பகுதிச் சண்டைகள் ஓய்வுக்கு வந்து கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகள் வலுப்படுத்தப்பட்டன. அணிகள் பழையபடி தளத்துக்குத் திரும்பியிருந்தன. வன்னியெங்கும் வெற்றி விழாக்கோலமாகவே இருந்தது. மன்னார்ப்பகுதி மீட்பின்போது மடுத் தேவாலயக் குண்டுவீச்சில் நாற்பத்திரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்ட சோகம் நடந்தேறியது. இந்தப் பகுதிகளில் நடந்த சண்டைகளிலும் எதிரி விரைவாகவே ஓட்டமெடுக்கத் தொடங்கியதால் மிகவிரைவாகவும் இலகுவாகவும் வெற்றிகள் கிடைத்தன. நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் தள்ளாடி படை முகாமைச் சூழவுள்ள பகுதிகளில் நடந்த மோதல்களோடு சண்டை ஓய்வுக்கு வந்திருந்தது.

அடுத்தகட்டம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. எமது எதிர்பார்ப்பு மணலாற்றுப்பகுதியை மீட்பதாகவே அமையுமென்று இருந்தது. அதற்கேற்றாற்போல் மணலாற்றுப்பகுதியில் வேவுப்பணிகளும் நடந்துகொண்டிருந்தன. கரும்புலிகள் தொடர்ந்தும் பயிற்சியிலீடுபட்டார்கள். கடற்பயிற்சியை முடிக்காதவர்கள் மீளவும் கள்ளப்பாட்டில் கடற்பயிற்சியை முடித்தார்கள். வெளியே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமல் கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். மணலாற்றிலே தொடர்ந்தும் வேவு நடந்துகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம். மணலாற்றை மீட்பது பற்றியே எமது பேச்சும் சிந்தனையுமிருந்தது.

அவ்வாண்டுக்கான மாவீரர் நாளுக்கு முள்ளியவளை துயிலுமில்லம் சென்றோம். அம்மாவீரர்நாள் வழமையைவிட சிறப்பாக இருந்தது. ஏனென்றால் வன்னிப்பகுதியின் முழு மாவீரர் துயிலுமில்லங்களும் எம்மால் விடுவிக்கப்பட்டிருந்தன. மிகப்பெரும் வெற்றியின் மேல்நின்று அந்த மாவீரர்நாள் நினைவுகூரப்பட்டது.  துயிலுமில்லம் வந்த ஏனைய படையணிப் போராளிகளோடு கலந்துரையாடி விடைபெற்றோம். எங்குமே பயிற்சிகள்தாம் நடந்துகொண்டிருந்தன. லெப். மயூரன் பதுங்கிச் சுடும் அணியின் இரண்டாவது தொகுதிக்கான பயிற்சிகள் தொடங்கியிருந்தன. கவசப் படையணி, சிறப்பு ஆயுதப் படையணிகள் புத்துருவாக்கம் பெற்று மீளமைக்கப்பட்டன.

இயக்கத்தின் அடுத்தகட்டம் யாழ்ப்பாணமாகவே இருந்தது. சுண்டிக்குளம் கடற்கரை வழியாக வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு போன்ற தளங்கள் மீது தாக்குதலை நடத்தி வடபகுதி மீதான ஓயாத அலைகள் அடிக்கத் தொடங்கியது. சண்டை தொடங்கிய நாளிலிருந்தே கரும்புலிகளின் அணிகள் தொடர்ச்சியாக சண்டையில் பங்குபற்றியிருந்தன. மூன்று, நான்கு பேர் கொண்ட அணிகளாக ஊடுருவி எதிரியின் பின்தளங்களுக்கான ஆள்கூறுகளையும் ஆட்லறி எறிகணைகளுக்கான திருத்தங்களையும் சொல்லி அவற்றை நிர்மூலமாக்குவதே கரும்புலிகளின் பணியாகவிருந்தது. வன்னிப் பகுதியில் நடந்த சண்டைகள் போலன்றி இந்த நடவடிக்கையில் கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர்.

கட்டைக்காடு, வெற்றிக்லைக்கேணி, பரந்தன் போன்ற தளங்கள் வீழ்ச்சியடைந்தபின்னர் சண்டை சற்றுத் தேங்கியிருந்தது. ஆனையிறவின் பின்பக்கமாக ஊடுருவி ஆனையிறவுத் தளத்தைத் தனிமையாக்கும் இரு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் சிலகாலம் சண்டைக்களம் இருதரப்பினதும் தற்காப்பான சமர்க்களமாக மாறியிருந்தது.

இந்நிலையில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கம் திட்டமிடப்பட்டது. அதேவேளையில் பளையிலிருந்த எதிரியின் ஆட்லறித்தளத்தைத் தாக்கியழிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆட்லறித் தளத்தைத் தாக்கியழிக்கும் பணி கரும்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

தொடரும்...

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

களமுனை பட்டறிவுப் பகிர்வுகள்

 

 

மூலம்: https://www.eelanesan.com/2021/12/kalankal-16.html
மூல எழுத்தாளர்: இளந்தீரன்
வெளியீடு: www.eelanesan.com, 29/06/2010

 

களங்கள் - 16. ஓயாத அலைகள் மூன்று

 

 

 ஓயாத அலைகள் மூன்று யாழ் குடாநாட்டை நோக்கியத் திரும்பியபின்னர் சண்டைக்களங்கள் உக்கிரமடைந்தன. வன்னியில் நடைபெற்ற சண்டைகளில் சிலவிடங்களில் மட்டுமே எதிரி கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருந்தான். ஆனால் வடபகுதிச் சண்டைக்களத்தில் ஒவ்வோர் அங்குலத்தையும் கடும் சண்டையிட்டே கைப்பற்ற வேண்டியிருந்தது. எதிரி மிகச் செறிவாக இருந்தது மட்டுமன்றி, மிகப்பாதுகாப்பான முறையில் தளங்களைக் கட்டமைத்திருந்தான். வன்னியில் எதிரியின் காப்பரண் வரிசையை உடைத்துப் பலவழிகளில் ஊடுருவித்தாக்கியதால் தளங்களைக் கைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனால் வடபோர் முனையில் அவ்வாறு பலவழிகளால் ஊடுருவித் தாக்குதல் நடத்துமளவுக்கு நிலைமை இருக்கவில்லை.

இந்நிலையில் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு படைத்தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலோடு வடபோர்முனைக் களம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பரந்தன் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அத்தளம் கைப்பற்றப்பட்டது. பரந்தன் தளம் மீதான தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எதிரிக்கு முன்னரே அறிவித்தல் கொடுத்து, பட்டப்பகலில் வலிந்த தாக்குதலை நடத்தி அத்தளம் கைப்பற்றப்பட்டது. தளபதி தீபன் அவர்களின் நெறிப்படுத்தலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்நேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் கனவகைப் போராயுதக் கையாள்கையில் திறம்படத் தன்னை வளர்த்திருந்தது. ஆட்லறிகளைக் கொண்டு நேரடிச் சூடுகளை வழங்குதல், பின்னுதைப்பற்ற எறிகணை செலுத்திகளைக் கையாளல், கவசப் படையணியைக் கொண்டு தாக்குதல் நடத்தல், வானூர்தி எதிர்ப்புக்குரிய கனவகை ஆயுதங்களைப் பயன்படுத்தி நேரடிச் சூடுகளை வழங்குதல் என பலவழிகளிலும் நேரடிச்சூட்டுத் திறனை வளர்த்திருந்தது. அந்தத் திறனைப் பரந்தன் தளம் மீதான தாக்குதலுக்கு உச்ச அளவில் பயன்படுத்தி இயக்கம் வெற்றிகண்டது.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் போன்ற முதன்மைத் தளங்களும் அவற்றைச் சூழவிருந்த சிறுதளங்கள் சிலவும் கைப்பற்றப்பட்ட நிலையில் சண்டைக்களம் சற்று மந்தமடைந்திருந்தது. ஆனையிறவைக் காப்பாற்ற என்னவிலையும் கொடுக்கும் நிலையில் அப்போது சிறிலங்கா படைத்தரப்பு இருந்தது. ஆனையிறவுக்குப் பின்புறமாக ஊடுருவி யாழ்ப்பாணத்துக்கும் ஆனையிறவுக்குமான வழங்கல் தொடர்பைத் துண்டிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இரு நடவடிக்கைகள் பல்வேறு காரணங்களால் வெற்றியளிக்கவில்லை. இயக்கச்சியை அண்டிய பகுதியில் இந்த ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சிலகாலம் எந்தவித முன்னகர முயற்சியுமின்றி சண்டைக்களம் மந்தமடைந்திருந்தது. இருதரப்பும் எறிகணைத் தாக்குதல்களிலும் குறிசூட்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில் தலைமையின் எண்ணத்துக்கிணங்க வேறு முனைகளில் வேவுப்பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. கடற்புலிகளின் பக்கத்தாலும் கரும்புலிகளின் பக்கத்தாலும் வெவ்வேறு வேவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கரும்புலிகளுக்குரிய வேவுஅணி பளை ஆட்லறித்தளத்தை வேவுபார்த்துக்கொண்டிருந்தது. அவ்வணியில் கரும்புலி வீரர்கள் சிலரும் சென்று வந்தனர். பளை என்ற பட்டினம் ஆனையிறவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் இருக்கும் ஓரிடம். இதிலே கண்டி வீதிக்கு அண்மையில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லறித் தளமொன்று அமைந்திருந்தது. ஆனையிறவுக்குப் பின்புறமாகப் பார்த்தால் அதிகளவில் ஆட்லறிகளைக் கொண்ட தளம் இதுவேதான். இத்தளத்தை ஊடுருவித் தாக்கியழிக்கும் நோக்கத்தோடே வேவு பார்க்கப்பட்டது. ஓயாத அலைகள் மூன்றின் முதற்கட்டத்தில் நடந்தது போன்று எமது ஆட்லறி எறிகணைகளைக் கொண்டு எதிரியின் ஆட்லறிகளைத் தாக்குவதும் அதற்கு கரும்புலிகள் எறிகணைத் திருத்தங்களைச் சொல்வதும் என்பதன்றி, கரும்புலிகள் நேரடியாகச் சண்டைபிடித்துத் தளத்தைக் கைப்பற்றி அங்கிருக்கும் ஆட்லறிகளை குண்டு வைத்துத் தகர்க்க வேண்டும்.

மறுபுறத்திலே பாரிய தரையிறக்கத்துக்கான வேவுகளும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. சண்டையணிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் தரையிறக்கம் பற்றிய விடயங்கள் எவையும் கரும்புலியணிக்குத் தெரிந்திருக்கவில்லை; அதுபோல் தரையிறக்கத்தோடு தொடர்புடையவர்களுக்கு பளை ஆட்லறித் தகர்ப்புப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

வேவுத் தரவுகளின்படி மாதிரி முகாம்கள் அமைத்துப் பயிற்சிகள் தொடங்கப்பட்டன. வேவுக்குச் சென்று வந்தவர்களின் தகவல்களின்படி ஆட்லறி முகாமை நெருங்குவது கடினமாக இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகியது. முகாமினுள் நுழைந்து ஆட்லறிகளின் எண்ணிக்கை தொடர்பாக துல்லியமான வேவுகள் பார்க்கப்படவில்லை என்றபோதும் அத்தளத்தின் மீதான தாக்குதலைத் தொடங்குவது வரை எதிரியின் கண்ணிற்படாமல் நகர்ந்துவிட முடியுமென்று புலப்பட்டது. ஆட்லறிகளைத் தகர்ப்பதற்கான வெடிபொருட்கள் சரிபார்க்கப்பட்டு அவற்றைக் கொண்டு பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பதினொரு பேர்கொண்ட கரும்புலியணியும் மேலதிகமாக வேவுப்புலிகள் இருவரும் கொண்ட அணியே இத்தாக்குதலுக்கென தயார்ப்படுத்தப்பட்டது. பின்னாளில் வேறொரு சண்டையில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மன் தான் அத்தாக்குதலுக்கான அணிக்குத் தலைமை தாங்கினார்.

இந்தத் திட்டத்தில் எதிரியின் ஆட்லறிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதும் சோதிக்கப்பட்டது. முதலில் தளத்தைத் தாக்கிக் கைப்பற்றுவது, பின்னர் நிலைமையைப் பொறுத்து ஆட்லறிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதா அல்லது அவற்றைத் தகர்த்துவிட்டு வெளியேறுவதா என்பதை முடிவெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே கரும்புலிகள் அனைவரும் ஆட்லறிப் பயிற்சியைப் பெற்றிருந்ததோடு சண்டைக்களத்தில் ஆட்லறியைப் பயன்படுத்தியிமிருந்தார்கள்.

கரும்புலிகளின் பயிற்சிகள் முடிக்கப்பட்டு நடவடிக்கைக்காக அவர்கள் முல்லைத்தீவிலிருந்து வெற்றிலைக்கேணிக்குப் புறப்பட்டார்கள். வெற்றிலைக்கேணியை அடையும்வரை யாருக்குமே தரையிறக்கம் பற்றிய விரிப்பு தெரிந்திருக்கவில்லை. தரையிறக்கம் நடப்பதற்கு இருநாட்களின் முன்பேயே கரும்புலியணி நகரத் தொடங்கிவிட்டது. அதுவொரு கமுக்க நகர்வு. கடற்புலிகளின் உதவியோடு மாமுனைக் கடற்பரப்பில் 25/03/2000 அன்று கரும்புலியணி இறக்கிவிடப்படுகிறது. நீந்திக் கரைசேர்ந்தவர்கள் பளை ஆட்லறித் தளத்தை நோக்கி நகர்கிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட இடத்தையடைந்து பற்றைக்குள் மறுநாட் பகலைக் கழிக்கிறார்கள். மீண்டும் அன்றிரவு நகர்வைத் தொடங்குகிறார்கள். அன்றிரவே கடல்வழியாக எமது படையணிகள் தரையிறக்கத்தை மேற்கொள்கின்றன.


26/03/2000

எதிர்பார்த்தபடியே எந்தவிதச் சிக்கலுமின்றி கரும்புலிகள் ஆட்லறித் தளத்தை அண்மித்து நிலையெடுக்கின்றன. எதிரியின் முன்னணிக் காப்பரணிலிருந்து 50 மீற்றர் வரை மிகக்கிட்டவாக நகர்ந்து நிலையெடுத்த நிலையில் சண்டையைத் தொடங்க ஆயத்தமாகியபோது காவலரணிலிருந்த படையினன் அசைவைக் கண்டுவிட்டான். எதிரியின் சுடுகலனே முதலில் சண்டையைத் தொடக்கியது. ஆனாலும் கரும்புலியணி சுதாரித்துக் கொண்டு ஆவேசமாகத் தாக்குதலை நடத்தி அக்காப்பரண் வரிசையைக் கைப்பற்றியது. எதிரியின் தாக்குதல் தொடங்கியவுடன் கரும்புலி மேஜர் சுதாஜினியின் ஒரு ‘லோ’ ஆயுதம் காப்பரணைத் தாக்கியது. ஆனால் எதிரியின் தாக்குதலில் அவள் அந்த இடத்திலேயே வீரச்சாவடைந்தாள்.

ஏனையவர்களின் தாக்குதலில் எதிரி சிதறியோடினான். அச்சண்டைக்கு கரும்புலி மேஜர் நித்தி ஒரு பிகே ஆயுதத்துடன் சென்றிருந்தான். நித்தியின் பேகே அச்சண்டையில் கதறியது. எதிரி தாக்குதல் நடத்தி சில கணங்களுக்குள் கரும்புலிகள் முகாமுக்குள் பாய்ந்திருந்தனர். என்ன நடக்கிறதென்று எதிரி சுதாரிப்பதற்குள்ளேயே சில காப்பரண்கள் கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. ஏனைய படையினர் சண்டையை எதிர்கொள்ளாமலேயே ஓடிவிட்டார்கள். கரும்புலிகளுக்கான எதிர்ப்புக்கள் வலுவாக இருக்கவில்லை. உடனடியாகவே பாதுகாப்புக்குச் சிலரை விட்டுவிட்டு, ஏனையோர் சில ஆட்லறிகளைக்கொண்டு சில எறிகணைகளை ஆனையிறவு, இயக்கச்சிப் பகுதிநோக்கி ஏவினர்.

பதினொரு பேர்கொண்ட அணியில் சுதாஜினி ஏற்கனவே வீரச்சாவு என்றநிலையில் அணியை வழிநடத்திக்கொண்டிருந்த வர்மன் கையில் காயமடைந்தார். எனவே அதிகளவில் ஆட்லறிகளைப் பயன்படுத்தவோ அதிகளவில் எறிகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தவோ முடியவில்லை. அத்தளத்திலிருந்த பதினொரு ஆட்லறிகள் முழுமையாகவே கரும்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தன. இரண்டு ஆட்லறிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்திக்கொண்டு மிகுதியை ஒவ்வொன்றாகத் தகர்க்கும் முடிவை எடுக்கிறார்கள். அப்போது கட்டளைப்பீடத்தோடு முழுமையான தொடர்பிலேயே இருந்ததால் எல்லாமே நிதானமாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டன. கொண்டுபோன வெடிபொருட்களைப் பொருத்தி ஆட்லறிகளை ஒவ்வொன்றாகத் தகர்க்கத் தொடங்கினார்கள் கரும்புலிகள். அதேவேளை ஆட்லறி எறிகணைச் சேமித்து வைத்திருந்த சிறு களஞ்சியங்களையும் வெடிக்கவைத்தார்கள். ஓர் ஆட்லறியை வெடிக்கவைத்து அழிக்கும்போது கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான்.

கரும்புலிகள் ஆட்லறிகளைத் தகர்த்துக் கொண்டிருந்த வேளையில் மறுபுறத்தில் எமது படையணிகள் குடாரப்பில் தரையிறங்கி இத்தாவில் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. ஒருகட்டத்தில் அனைத்து ஆட்லறிகளையும் தகர்த்துவிட்டு அணியைப் பாதுகாப்பாக வெளியேறிவரும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படியே காயப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு கரும்புலிகள் அணி வெற்றிகரமாக வெளியேறியது. வெளியேறி வரும்வழியில் அதிகாலையில் இடையிலே படையினரோடும் எதிர்பாராத சண்டையும் நடந்தது. அதையும் முறியடித்து கரும்புலியணியைச் சேர்ந்த எஞ்சியவர்கள் வெற்றிகரமாக வெளியேறி வெற்றிலைக்கேணியில் எமது கட்டளைப்பணியகம் வந்து சேர்ந்தார்கள். வெற்றிகரமாக நடத்தப்பட்ட அந்த ஆட்லறித்தளத் தகர்ப்பில் கரும்புலிகள் இருவர் வீரச்சாவடைந்திருந்தனர். மிகக் குறைந்த இழப்போடு வெற்றிகரமான ஒரு தாக்குதலை நடத்தி பதினொரு ஆட்லறிகளைத் தகர்த்து முடித்துத் திரும்பியிருந்தனர் கரும்புலிகள்.


**************************************************************

ஓயாத அலைகள் மூன்றில் வடமுனையில் நடைபெற்ற சமர்களில் கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவிற்குள்ளும், இயக்கச்சியை பகுதிகளுக்குள்ளும், பலாலி, சாவகச்சேரி, வரணி போன்ற பகுதிகளுள்ளும் ஊடுருவி எமது ஆட்லறிகளுக்கான நோக்குநர்களாகச் செயற்பட்டு கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர். அவர்கள் ஊடுருவுவதற்கான வழிகள் இலகுவாக இருக்கவில்லை. ஊடுருவும் வழிகளிலேயே சிலர் வீரச்சாவடைந்தனர். கடல்வழி ஊடுருவல்களும் வெளியேறல்களும் எப்போதுமே கடினமானவையாகவே இருந்தன. இருந்தாலும் தொடர்ந்தும் அவர்கள் முயற்சித்தார்கள். தொடர்ந்தும் ஊடுருவித் தாக்குதல் நடத்தினார்கள். எதிரியின் பின்னணித் தளங்களை முடக்கியதில் கரும்புலிகளின் பங்கு மிக முக்கியமானது.

ஓயாத அலைகள் நான்கின்போது கரும்புலி லெப்.கேணல் பூட்டோ தனியொருவனாக செய்த சாதனைகள் கற்பனைக்கும் எட்டாதவை. தனியொரு மனிதாக எதிரியின் நெஞ்சுக்கூட்டுக்குள் கலக்கிக்கொண்டிருந்தவன். உள்நுழைந்த பூட்டோவைக் கொல்வதற்கென்றே தனியொரு அணி களமிறக்கிவிடப்பட்டது என்பதே அவனின் செயற்றினைச் சொல்லப் போதுமானது. எதிரி பல்குழற் உந்துகணை செலுத்திகளைக் கொண்டு நெருப்புமழை பொழிந்துகொண்டிருந்த நேரத்தில் அச்செலுத்தி வண்டியொன்றை தனது துல்லியமான திருத்தங்கள்மூலம் தாக்கியழித்து எதிரிக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்திருந்தான்.

இவ்வாறாக ஓயாத அலைகள் மூன்று படை நடவடிக்கையில் கரும்புலிகளின் பங்கு மிகப் பெருமளவுக்கு விரவியிருக்கிறது. அது தொடர்பான அனுபவப் பகிர்வை வழங்கிக் கொண்டிருந்த இத்தொடர் இத்தோடு நிறைவுபெறுகிறது. இதிலே நிறைய விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவற்றோடு தொடர்புடையவர்களின் இன்றையநிலையைக் கருத்திற்கொண்டே அவை தவிர்க்கப்பட்டுள்ளன.

இத்தொடரோடு தொடர்ந்துவந்த அனைவருக்கு நன்றி.

 

- முற்றும்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 கரும்புலிப் பாய்ச்சல்கள் 

தனியாள் செயற்பாடு விரிப்புகள்

 

 

  • உசாத்துணை:
    • உயிராயுதம் - பாகம் 8 (நிகழ்படம்)
    • உயிராயுதம் - பாகம் 9 (நிகழ்படம்)
    • ஓயாத அலைகள் - 3 பாகம் 1 (நிகழ்படம்)
    • ஓயாத அலைகள் - 3 பாகம் 2 (நிகழ்படம்)
    • களங்கள் - 3. ஓயாத அலைகள் மூன்று
    • களங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று
  • எழுத்து & வெளியீடு: நன்னிச் சோழன்

 

 

"வேங்கைகள் பதுங்கும் வேளையில் வெற்றியில் முழங்கினாய்!
அலையோங்கியே அடித்த முனைகளில் 'ஓ'எனக் கலங்கினாய்!
ஆனையிறவினில் கரும்புலி ஆற்றிய பெருவீரம்,

சிங்க ஈனப்பகைவனே பாரடா உனக்கது தொடுவானம்!"

--> தேசத்தின் புயல்கள் - 3 இறுவெட்டிலிருந்து

இதனுள் ஓயாத அலைகள் மூன்று தொடர் நடவடிக்கையின் போது நடைபெற்ற அதிரடித் தாக்குதல்களில் வீரச்சாவடைந்த கரும்புலிகளின் பெயர்க் குறிப்புகள், அவர்கள் ஓயாத அலைகள் மூன்றில் ஆடிய களங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவர்களுக்கென எழுதப்பட்ட பாடல்வரிகள் ஆகியன விரிக்கப்பட்டுள்ளன. சில தரைக்கரும்புலிகளுக்கு அவர்களுக்கென தனிப்பாடல்கள் எதுவும் விடுதலைப்புலிகளால் வெளியிடப்படாமையால் அவற்றிற்கான இடங்கள் வெறுமனே விடப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.  

 

 

 

 

"செங்கதிர்வாணனே எம் செயல் வீரனே!
மகிழ்வோடு ஏகினாய் மணலாற்றில் வீசினாய்!"

--> தேசத்தின் புயல்கள் - 3 இறுவெட்டில் இருந்து

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கைக்கான ஆயத்தப்பணிகளின் ஒரு கட்டமாக பராக்கிரமபுர படைத்தளத்திலுள்ள சேணேவிகளைத் தகர்ப்பதற்குத் வேண்டிய தாக்குதலை மேற்கொள்வதற்குத் தேவையான இறுதி வேவுக்கெனச் சென்றிருந்த வேவு அணி தளம் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது காட்டுக்குள் பயிற்சிக்கென இறக்கப்பட்டிருந்த படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் (குட்டான் மாமா எ நொடி மாஸ்ரர்) காயமடைந்தார். தான் காயப்பட்ட நிலையில் ‘நான் குண்டை வெடிக்க வைக்கிறன்’ என்று உரத்துச் சொல்லிக் கொண்டு தனது எம்- 4 குண்டை வெடிக்க வைத்து தன்னை மாய்த்து வீரச்சாவடைந்தார். மேலும் கரும்புலி கிரி அவர்கள் காயமடைந்தார். அவரை இவ்வணிக்கு தலைமை தாங்கிச் சென்றிருந்த இளம்புலி அவர்கள் தூக்கிக்கொண்டு வந்தார். பின்னர் வன்னி கொண்டுவரப்பட்டு படைய மருத்துவமனையொன்றில் பண்டுவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

Major Sengkathirvaanan - KIA in a recce mission on the Parakkiramapura Artillery Base (Few days before the opening of the historic Unceasing Waves 3 operation)

 

 

 

 

===============================

 

 

 

 

"நெஞ்சை நிமிர்த்தி நடந்த வீரர் கதையை சொல்லவா!
நெடுங்கேணி மண்ணே இவர்கள் உந்தன் மடியல்லவா!
பஞ்சாய்ப் பகையை பறக்கவைத்த புலிகள் இவர்களே! - எங்கள் 
தலைவன் சொன்ன திசையில் வெடித்த தேசப்புயல்களே!

தங்கை சசி அருளனே!
வாழும் உங்கள் ஈகமே! 
வெடியுடனே போயினீர்!  
நெடுங்கேணியில் வீசினீர்!"

--> தேசத்தின் புயல்கள் - 3 இறுவெட்டில் இருந்து

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் வெற்றிக்காக மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்கான பாரிய தாக்குதல் திட்டம் நீண்ட காலத் தயார்ப்படுத்தலில் நிகழவிருந்தது. அதன் ஒரு பகுதியாக அங்கிருந்த சேணேவிகளையும் ஆயுதக் களஞ்சியங்களையும் அழிக்கும் நோக்கோடு 04.11.1999 நள்ளிரவு நேரம் சசி உள்ளடங்கிய அருளன் தலைமையிலான கரும்புலிகள் அணி புறப்பட்டது. இக்கரும்புலி அணியின் பயணம் அதிகாலை வெள்ளணைதான் முடிவிற்கு வந்தது. எனவே, இவர்கள் படைத்தளத்தினுள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்து தமது கடைசித் தரிப்பிடத்தில், நெடுங்கேணிப் பகுதியில், காத்திருந்த வேளை எதிர்பாராத விதமாக பகைவரின் பதிதாக்குதல் அணியோடு காலை 10:48 மணியளவில் ஏற்பட்ட நேரடிச் சமரில் அணித்தலைவன் அருளனோடு சசியும் அவ்விடத்திலேயே தமிழீழ விடுதலைக் காற்றோடு கலந்தனர்.

photo164.jpgarulan.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

"ஈழநாதம் பேப்பரில பார்த்தேனே உந்தன் படம்
ஈழம் காணும் தாகத்தோடு உந்தன் முகம் - செழியன்

ஈழம் காணும் தாகத்தோடு உந்தன் முகம்  - உன்னை 
இழந்த துயரம் நெஞ்சை அழுத்துது தோழா - உந்தன்
கனவைச் சுமந்து போகிறேன் தோழா
"

--> தேசத்தின் புயல்கள் - 3 இறுவெட்டில் இருந்து

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது கரும்புலிகள் பல்வேறு இடங்களில் ஊடுருவித் தாக்குதல்கள் நிகழ்த்தி தொடர் நடவடிக்கையின் வெற்றிக்கு வழிகோலினர். கரிப்பட்டமுறிப்பு முகாமைச் சுற்றிவர போடப்பட்டிருந்த முன்னணிப் பாதுகாப்பு வலு என்பது அங்கு இனியில்லையென்ற உச்சத்தில் இருந்தது. அந்த இறுக்கத்தையும் பொருட்படுத்தாமல் உள்நுழைந்து அங்கிருந்த சேணேவித்தளத்தை எரித்து அங்கிருந்த படையினரை ஓடப்பண்ணியது என்று சொன்னால் அது கரும்புலி மேஜர் செழியனுடைய மனவுறுதியால்தான் என்பது மறுப்பதற்கில்லை.

கட்டம் ஒன்றின்போது எல்லா இடத்திலும் விழும் அடியால் கடைசியில் சிங்களப்படைகள் பின்வாங்கி வந்துசேரும் இடம் கனகராயன்குளமாகத்தான் இருக்கும் என்று புலிகள் ஏற்கனவே கணித்திருந்தனர். ஏனெனில் வவுனியாவிலிருந்து வரும் நேரடி கண்டி வீதியில்தான் இத்தளம் அமைந்திருந்தது. எனவே அங்கிருந்து வழங்கல் இங்கு நேரடியாக வந்துசேரும் என்பதால் இங்குதான் பகைவன் தளமமைத்திருந்தான். அத்துடன் பகைவரது களஞ்சியமே - உணவு, வெடிபொருள், எறிகணைகள், கவசவூர்திகள் என அனைத்தும் குவித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியம் - இங்கிருப்பதும் புலிகள் அறிந்த விடையம். எனவே அங்குதான் தமது இறுதி வலுவினைப் பயன்படுத்த வேண்டுமென புலிகள் முடிவெடுத்தனர். ஆகவே வவுனியாவிலிருந்து உள்வரும் வழங்கல் பாதைக்கு அண்மையில்நின்று புலி அணிகள் மறிப்புத்தாக்குதலில் ஈடுபட கனகாராயன்குளம் தளத்தினுள் பாய்ந்த கரும்புலிகள் அங்கிருந்த களஞ்சியத்தை தகர்த்தனர். இத்தாக்குதலிற்கு தரைக்கரும்புலி மேஜர் மறைச்செல்வனே தலைமையேற்றுச் சென்றிருந்தார். இவ்வணியில் கரும்புலி செழியனும் இடம்பிடித்து சிறப்பாகச் செயலாற்றியிருந்தார்.

கட்டம் 3இல் ஆனையிறவுக் கோட்டத்தை நோக்கி புலிகள் நகர்வதற்கு இயக்கச்சித் தளத்தினுள் இருந்த சேணேவிகள் எதுவும் இயங்கக்கூடாது. அதை இயங்க விடாமல் செய்வதற்கான தாக்குதல் திட்டத்தை கரும்புலிகளிடம் ஒப்படைத்தார் தலைவர். 1999.12.10 அன்று ஆனையிறவை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த வேளை இயக்கச்சித் தளம் மீது செழியனின் கரும்புலி அணியினரால் தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நடவடிக்கையினூடாக அங்கு அவர் முழுமையாக ஒரு பகல் ஒரு இரவு சூழ நின்று அங்கு பல தாக்குதலைகளை பல வடிவங்களில்செய்து பகைவரின் இயக்கச்சி சேணேவித் தளத்தை முடக்கி வைத்திருந்தார்.

அந்த இயக்கச்சி முகாமினுள் நடைபெற்ற தாக்குதலினால் அங்கிருந்த ஆயுதகளஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டன. சில தெறோச்சிகளும் வெடித்துச் சிதறின. இத்தாக்குதலினூடாக ஆனையிறவுக் கோட்டத்தில் சில இடங்களை கைப்பற்றக்கூடியதாக இருந்தது. இந்நடவடிக்கையின் போது இவர் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு ஆனையிறவில் விழிமூடினார்.

 

இக்கரும்புலி வீரன் எழுதிய மடல்:

மூலம்: http://sankathi24.com/news/karaumapaulai-maejara-caelaiyana-utapata-enaaiya-maavaiirarakalaina-vaiiravanakaka-naala

தமிழீழம்.

என் இனிய மக்களே….

எமது மூதாதையர்களான பண்டாரவன்னியன், சங்கிலியன், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராடியும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில் தன்னும் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும். அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இவ்வண்ணம்,
போராளி,
செழியன்

large.photo169.jpg.4b4b280bd6f326e8ffb59610be2432c8.jpg

 

 

 

 

==============================

 

 

 

 

"ஆதித்தன் கரும்புலி வீணை - அவன்
நரம்பெல்லாம் தலைவனின் ஆணை
தேசத்தின் புயலென்னும் வீரன்

இசைத்திட்டான் விடுதலைக் கானம்
முகாவிலில் கேட்ட வெடிச்சத்தம் - மண்ணில்
ஆதித்தன் இட்ட கடைசி முத்தம்"

--> தேசத்தின் புயல்கள் - 3 இறுவெட்டில் இருந்து

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் கட்டம் ஒன்றின் போது மணலாற்றில் நடந்த சிறப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய இக்கரும்புலி மறவன், கட்டம் -03இன் போது சாவகச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளிலும் பங்கேற்றார். அப்போது கொடிகாமம் பகுதியில் இருந்த படைத்தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அதற்கு பக்கவலுவாக அதனருகில் இருந்த மற்றொரு தளம் மீதான தாக்குதலுக்காக கரும்புலி அணிகள் நகர்ந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதாமக சிறீலங்கா தரைப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் தாய்மண்ணை முத்தமிட்டான், தரைக்கரும்புலி ஆதித்தன்.

photo171.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

"பகைவர் குகையின் உள்ளேயும் உம் பாதத்தடம் நாம் கண்டோம்!
நீர் சென்று வென்ற பின் எங்கள் ஊர் பிடிக்க நாம் சென்றோம்!

வென்ற மகிழ்வோடு வந்தோம் உம்மைக் காணவில்லையே!
வெற்றிதர வெடிசுமந்த வேங்கை நீங்கள் இல்லையே!"

--> தேசத்தின் புயல்கள் - 3 இறுவெட்டில் இருந்து

ஆனையிறவில் இருந்த பகைவரின் கட்டளைமையங்களை தகர்த்தழிக்கும் பணியில் வெற்றிகரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு நேரடி மோதலில் ஏற்படுகிறது. அபோது அந்த சுற்றிவளைப்பை வெற்றிகரமாக முறியடித்து நடந்த வெளியேற்றத்தில் தொடர்ந்து நின்று ஆடிய மீனா தலைமையில் சென்ற அணியில் தரைக்கரும்புலிகளான அணித்தலைவி மீனாவும் உடன்சென்றவர்களில் நாகராணியும் ஆனையிறவுக் காற்றில் கலந்து போயினர்.

photo173.jpgphoto172.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

"இந்த மகன் ஈழத்தாய்க்குச் சொந்த மகன் - இன்னும்
கந்தகமும் சொந்தமென்று சென்றயிவன்

வந்த பகை வீடழிக்க கடற்புலியானான் - மேஜர்
நந்தனிவன் கடற்புலியின் கரும்புலியானான்"

-->கடற்கரும்புலிகள் பாகம்-05 இறுவெட்டிலிருந்து

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் ஆனையிறவை வெற்றிகொள்ளும் நோக்கோடு மூன்று கடற்கரும்புலிகளை தானே ஏகி அழைத்துக்கொண்டு, அவர்களை வழிநடத்தியபடி, கடற்சிறுத்தை கடற்கரும்புலி நந்தன் அவர்கள் ஆனையிறவுத் தளத்திற்கு அண்மையிலுள்ள முதன்மைப் பாலத்தை தகர்க்கும் நோக்கோடு படகினில் புறப்பட்டார். 

ஆனால் அங்கு சென்றபோது நீர் இன்மை காரணமாக இலக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. அதேநேரம் அவர்களுக்கான உணவும் தீர்ந்து போகிறது. இதனால் தனது வேவுத்திறமையால் ஆனையிறவு படைத்தளத்தினுள் சென்று தன்னோடு வந்த மூன்று கடற்கரும்புலிகளுக்கும் உணவு எடுத்து வந்து கொடுத்து, அவர்களை நான்கு நாட்கள் பத்திரமாக பராமரித்து, கூட்டிச் சென்ற கடற்கரும்புலிகளை மீளவும் அழைத்துக்கொண்டு தளம் மீண்டார். 

பின்னர் மீளவும் ஆனையிறவு நோக்கிச்சென்று அங்கு ஏற்கனவே தரித்துநின்ற தரைக்கரும்புலிகளோடு இணைந்து ஆனையிறவின் மீட்பிற்காக செயலாற்றி, அங்கு நடந்த ஒரு தாக்குதல் முறியடிப்பில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.

photo170.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

"விசைப்படகை சிதறடித்து
அதன்கதை நீ முடித்தாய்
கிளாலி ஏரியிலே 

கரும்புலியாய் வெடித்தாய்
பாதையில் என் பாதங்கள் நடைபோடுறேன் - உன்
பாதையில் என் பாதங்கள் நடைபோடுறேன்"

--> கடற்கரும்புலிகள் பாகம்-04 இறுவெட்டிலிருந்து

ஓயாத அலைகள் 03 வடபோர்முனையில் மூசிக்கொண்டிருந்த நாட்கள். அப்போது 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி சிங்களக் கடற்படையின் 3 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள், 4 கூகர் வகுப்புப் படகுகள் மற்றும் 8 கட்டைப்படகுகள் (Dinghy) என்பன வழங்கல் நடவடிக்கைக்காக நகர்ந்து கொண்டிருப்பது கொக்குப்பிட்டியில் இருந்த தமிழ் வீரர்களால் நோக்கப்படுகிறது.

பகைவரின் இந்த நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய வகைப் படகுகள் இரண்டு கொண்ட ஓர் கல அணியும் கரும்புலி படகும் அணியமாகி கொக்குப்பிட்டியில் இருந்து நகர்ந்து கொண்டிருந்தன. இந்நிலையில் கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், அது அவ்விடத்திலேயே தரித்து நின்றுவிட்டது; இக்கட்டான சூழலும் உருவாகியது. அதே நேரம் தொடரணி மீது சிறிய வகை தாக்குதல் படகு தாக்குதலை தொடங்கியது.

இக்கடற்சமரை கிளாலிக் கரையில், மற்றொரு கிபிர் வகுப்புக் கரும்புலிப்படகோடு நின்று கவனித்துக்கொண்டிருந்த அறிவரசன் இதனைப் புரிந்து கொண்டார். எனவே எந்தவிதக் கட்டளையுமின்றி தானே கரும்புலியாய் முட்டிட முடிவெடுத்தார்.

ஏற்கனவே வயிற்றில் ஏவுண்ணியதால் விழுப்புண் அடைந்து படுமோசமான உடல்நிலையோடு நின்றிருந்த அவர், தானே தன்னந்தனியாக வற்றுக்கடலில் நின்ற தனது கரும்புலிப் படகை தள்ளி கடலுக்குள் இறக்கி, நேராக கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளையாளர் லெப். கேணல் பகலவனிடம் விரைந்து சென்று, "நான் இடிக்கவோ" என அனுமதிகேட்டு, இடிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொண்டார். 

எந்த வித தொலைத்தொடர்புக் கருவியுமோ கதுவீயுமோ இன்றி, கட்டளையாளர் கையால் சுட்டிக்காட்டிய இலக்கு நோக்கி விரைவாகச் சென்று, சிங்களக் கடற்படையின் வோட்டர் ஜெட் விதப் படகு மீது மோதியிடித்து, அதை மூழ்கடித்து, கிளாலிக் கடலிலே சிங்களத்திற்கான வழங்கலை நிறுத்தி ஆனையிறவின் வெற்றிக்கு வித்திட்டார், அறிவரசன்.

photo174.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

"தலைவன் முன்பூத்த கந்தகப் பூக்கள் - உயிர்
தடை தாண்டியே பளையினில் சிரித்தார்

சந்தன மேனியால் பீரங்கி தழுவி
இருவரும் அந்நேரம் மகிழ்வுடன் வெடித்தார்"

--> தேசத்தின் புயல்கள் - 4 இறுவெட்டிலிருந்து

ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் ஒன்றின் போது பகைவரின் முக்கிய படைத்தளங்களினுள் உள்நுழைந்து அவர்தம் மனவுறுதியை தமது தீரமிகு தாக்குதல்களால் சிதைத்து அவர்களை வென்னிட வைத்தமை கரும்புலிகளையே சாரும். அதுபோன்றவொரு நடவடிக்கையே சிறீலங்கா தரைப்படையின் முன்னணி சேணேவித்தளமாக நிலைப்படுத்தப்பட்டிருந்தது குளவிசுட்டான் சேணேவித்தளம் மீது கரும்புலிகள் நடாத்தியமை ஆகும். இச் சேணேவித்தள அழிப்பினை பொறுப்பெடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றியவர்கள் தரைக்கரும்புலி மேஜர் தனுசனும் அவர் தலைமையிலான கரும்புலிகளுமே ஆவர். படைத்துறை முகாமில் முட்டும் போதும் விலத்தும் போதும் பதட்டமில்லாமலும் பொறுமை தடுமாறாமாலும் உறுதியான ஒரு நகர்வை மேற்கொண்டு படையினரின் மனவுறுதியை உடனடியாக சிதைத்தது என்றால் அது கரும்புலி தனுசனின் விடாமுற்சியே ஆகும்.

கரும்புலி சிற்றையர் தனுசன் தலைமையிலான கரும்புலிகளின் பளை சேணேவித்தள அழிப்பு நடவடிக்கை:

 தனுசன் கட்டம் ஒன்றில் ஆற்றிய பணிகள் குறித்து வாசிக்க கீழேயுள்ள மறுமொழிப் பெட்டியைச் சொடுக்கவும்:

photo176.jpgphoto180.jpg

 

 

 

 

 

===============================

 

 

 

 

photo182.jpgphoto181.jpgphoto183.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

ஓயாத அலைகள் மூன்றின் கட்டங்கள் 4 மற்றும் 5இன் வெற்றிக்காக வடபோர்முனையில் இருந்த பகைவரின் சேணேவித்தளங்களை அழிக்கும் நோக்கோடு 24/03/2000 ஆம் ஆண்டு தரைக்கரும்புலி மறைச்செல்வன் தலைமையிலான 15இற்கும் மேற்பட்ட கரும்புலிகளைக் கொண்ட அணி கடல்வழியாக குடாரப்பில் தரையிறக்கப்பட்டது. இவர்களால் பளை மற்றும் இயக்கச்சி ஆகிய பகுதிகளில் இருந்த எதிரியின் சேணேவித்தளங்கள் நொறுக்கப்பட்டன. இத்தாக்குதல்களில் கரும்புலி அணியினரை திறம்பட வழிநடத்தி பாரிய வெற்றிகளை தன் தாய்நாட்டிற்கு பெற்றுக்கொடுத்தார், மறைச்செல்வன்.

பின்னர் மீண்டும் நாகர்கோவிலில் தரையிறங்கி எழுதுமட்டுவாளில் இருந்த சேணேவித்தளம் நோக்கி அணியினரை வழிநடத்திக்கொண்டு செல்கையில் நாகர்கோவிலில் பகைவனின் பதிதாக்குதல் அணியொன்று இவர்கள்மீது பதுங்கித் தாக்குதலில் ஈடுபட்டது. அந்த தாக்குதலை முறியடிப்பதற்காக தொடர்ந்து முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டு, அன்று அவருடன் சென்றிருந்த மற்றைய கரும்புலிப் போராளிகளை காக்கும் வகையில் ஒரு திடீர் தாக்குதலை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்த தாக்குதல் முயற்சியில் அவர் முன்னின்று நடத்தியபடியால் அவர் வீரகாவியமாக நேரிட்டது. அவரது இந்த ஈகத்தால் ஏனைய கரும்புலிகள் ஓம்பமாக(safety) காக்கப்பட்டதோடு அவர்களால் மேற்கொண்டு நடவடிக்கைகளில் திறம்பட செயற்படவும் முடிந்தது.

photo186.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

இவர் ஓயாத அலைகள்-03இல் புதுக்காடு, பளை, இயக்கச்சி மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் எதிரியின் படைத்தளங்களினுள் கரும்புலிகள் புகுந்து ஆடினர். கட்டம்- 5 இன் போது யாழ்ப்பாணத்தின் சரசாலை, நீர்வேலி, புத்தூர், வல்வைவெளி மற்றும் வாகரைவத்தை ஆகியவற்றுள் இருந்த சிங்களப் பகைவரின் சேணேவித்தளம், ஆயுதக் களஞ்சியங்கள் உட்பட்ட படைத்தளங்களை தாக்கியழிப்பதும் அதில் உள்ள வழங்கல் வீதிகளை பதுங்கித் தாக்குதல்கள் மூலம் தடுத்து நிறுத்தி தாக்குதல் செய்வதுமே இக்கரும்புலி அணியினரின் நோக்கமாக இருந்தது. இந்நடவடிக்கையானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்றது. இந்நடவடிக்கை வெற்றிகரமாக அமையும்பக்கத்தில் கொடிகாமமூடாக ஊடுருவி சாவகச்சேரியை முற்றாக கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது. அவ்வாறு புகுந்து களமாடிய கரும்புலிகள் அணியில் ஒருவனாகச் சென்று எதிரிகளின் தளங்களை அழிப்பதில் பெரும்பங்காற்றி இம்மண்ணில் காவியம் ஆனார், றீகஜீவன்.

photo187.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

ஓயாத அலைகள்-03இல் பளை சேணேவித்தளத்தினுள் புகுந்து ஆடிய கரும்புலிகளில் இவரும் ஒருவர். தொடந்தும் எதிரிகளின் படைத்தளங்களினுள் புகுந்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கரும்புலி அணியில் குமலவனும் பணியாற்றினான். கட்டம்-5 இன் போது யாழ்ப்பாணத்தின் சரசாலை, நீர்வேலி, புத்தூர், வல்வைவெளி மற்றும் வாகரைவத்தை ஆகியவற்றுள் இருந்த சிங்களப் பகைவரின் சேணேவித்தளம், ஆயுதக் களஞ்சியங்கள் உட்பட்ட படைத்தளங்களை தாக்கியழிப்பதும் அதில் உள்ள வழங்கல் வீதிகளை பதுங்கித் தாக்குதல்கள் மூலம் தடுத்து நிறுத்தி தாக்குதல் செய்வதுமே இக்கரும்புலி அணியினரின் நோக்கமாக இருந்தது. இந்நடவடிக்கையானது தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்றது. இந்நடவடிக்கை வெற்றிகரமாக அமையும்பக்கத்தில் கொடிகாமமூடாக ஊடுருவி சாவகச்சேரியை முற்றாக கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது. அவ்வாறு புகுந்து களமாடிய கரும்புலிகள் அணியில் ஒருவனாகச் சென்று எதிரிகளின் தளங்களை அழிப்பதில் பெரும்பங்காற்றி கோப்பாய் மண்ணில் காவியம் ஆனார், குமலவன்.

photo188.jpg

 

 

 

 

===============================

 

 

 

 

இக்கரும்புலி மறத்தி ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் ஆற்றிய பணிகள் விடுதலைப்புலிகளால் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டது.

photo189.jpg

 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 கரும்புலிப் பாய்ச்சல்கள் 

கரும்புலிகளின் படிமங்கள்

 

 

ஓயாத அலைகள்- 3 தொடங்க முன்னர் அதற்காக வீரச்சாவடைந்தோர்

 

 

மேஜர் செங்கதிர்வாணன்

 

Major Sengkathirvaanan - KIA in a recce mission on the Parakkiramapura Artillery Base (Few days before the opening of the historic Unceasing Waves 3 operation)

 

 

 

 

============X============

 

 

 

கட்டம் ஒன்றில் வீரச்சாவடைந்தோர்

 

 

மேஜர் சசி

 

Major Sasi.webp

'வீட்டில் மாட்டியிருந்த சட்டம்போட்ட தரைக்கரும்புலி சசி அவர்கள் தேசியத்தலைவருடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை அல் ஜெசிரா ஊடகவியலாளருக்குக் காட்டுகிறார் அன்னாரின் தாயார்.'

 

 

கெடுவேளையாக இதுவரையிலும் எவருடைய படிமங்களும் கிடைக்கப்பெறவில்லை. பெற்றிட முயன்று வருகிறேன்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 கரும்புலிப் பாய்ச்சல்கள் 

கரும்புலிகளின் படிமங்கள்

கட்டம் இரண்டில் வீரச்சாவடைந்தோர்

 

 

கட்டம் இரண்டில் கரும்புலிகள் எவரும் வீரச்சாவடையவில்லை.

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கரும்புலிப் பாய்ச்சல்கள் 

கரும்புலிகளின் படிமங்கள்

கட்டம் மூன்றில் வீரச்சாவடைந்தோர்

 

 

 

மேஜர் செழியன்

 

Major Chezhiyan.jpg

 

 

 

 

============X============

 

 

 

மேஜர் ஆதித்தன்

 

BT-Maj-Aathiththan.jpg

 

Land Black Tiger Major Aathiththan.jpg

'அன்னார் இலகு தகரி எதிர்ப்பு ஆய்தத்தால், "லோ", குறிவைக்கிறார்'

 

LBT Major Aathiththan.jpg

'அன்னார் பீ.கே. இலகு இயந்திரச் சுடுகலனோடு நடந்து செல்கிறார்'

 

CASR2.png

'பச்சை வரிப்புலிச் சீருடையில் பயிற்சியின் போது அன்னார்'

 

 

 

============X============

 

 

 

மேஜர் மீனா

 

BT-Maj-Meena.jpg

 

 

 

 

============X============

 

 

 

கப்டன் நாகராணி

 

BT-Cap-Nagaraani.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கரும்புலிப் பாய்ச்சல்கள் 

கரும்புலிகளின் படிமங்கள்

கட்டம் நான்கில் வீரச்சாவடைந்தோர்

 

 

 

மேஜர் தனுசன் எ மாருதியன்‌

 

maj. Thanusan.jpg

 

major_thanushan2.webp

 

 

 

 

============X============

 

 

 

மேஜர் மலர்விழி 

 

Maama with Maj. Malarvizhi akkaa.jpg

''இறுதியாய், தலைவரோடு நிழற்படம் எடுப்பதற்காய் பொதிக்கிறார்''

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (6).jpg

Major Malarvizhi.jpg

LBT Major Malarvizhi.jpg

Land Black Tiger Major Malarvizhi (Team Captain).jpg

 

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (69).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (7).jpg

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (5).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (3).jpg

 

Major Malarvizhi (2).jpg

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (2).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi.jpg

'அன்னார் இலகு தகரி எதிர்ப்பு ஆய்தத்தால் குறிவைக்கிறார்'

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (4).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (10).jpg

'அன்னார் உருசிய கவச சண்டை ஊர்தி-1 (BMP-1) இனுள் அமர்ந்திருந்து நேர்காணல் வழங்குகிறார்'

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (11).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (9).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (8).jpg

 

Major Malarvizhi.jpg

Major Malarvizhi n.jpg

'அன்னார் பயிற்சியில் ஈடுபடுகிறார்'

 

 

 

 

============X============

 

 

 

 

 

மேஜர் நாயகம் எ ஆந்திரா 

 

Unceasing Waves 3 Land Black Tiger Major Aanthira alias Nayakam

LBT Major Andhira  4.jpg

LBT Major Andhira  5.jpg

LBT Major Andhira  (1).jpg

Land Black Tiger Major Andhira alias Nayakam .jpg

 

Major Andhara.jpg

LBT Major Andhara.jpg

 

LBT Major Andhira 3.jpg

LBT Major Andhira  (2).jpg

 

Major Andhra.jpg

 

LBT Major Andhira.jpg

 

 

 

 

============X============

 

 

 

கப்டன் சசி எ சத்தியா 

 

Land Black Tiger Captain Saththiya alias Sasi,one of the 3 fallen LBTs while returning to their base after successfully destroying the Sinhalese Iyakkachchi artillery base along with its 4 howitzers.jpg

''இறுதியாய், தலைவரோடு நிழற்படம் எடுப்பதற்காய் பொதிக்கிறார்''

 

Captain Saththiya.jpg

'அன்னார் குறிசாடுநர் பயிற்சியில் ஈடுபடுகிறார்'

 

 

 

============X============

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.