Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 5ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

'எங்களைப் போக விடுங்கள்' என்கின்றனர் யாழ்ப்பாண ஏதிலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4914
செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 1:25
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 1
/09/2022

அரச உயரதிகாரிகள் இன்று காலை உலர் உணவுப் பொருட்களை வழங்கச் சென்ற போது, "எங்கள் சவப்பெட்டிகளை வாங்க 2000 ரூபாய் கொடுக்க உத்தேசித்துள்ளீர்களா?", “எங்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போகிறீர்களா?”, என யாழ்ப்பாணத்தின் தெற்கு வட்டக்கூறிலுள்ள போர் வலயங்களிலிருந்து வரும் கோபமடைந்த ஏதிலிகள் வினவினர். போரிலிருந்து தப்பியோடிய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் கிளாலியில் சிறிலங்கா தரைப்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நாள் தங்களின் அவலநிலை குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துகளையடுத்து, யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் தானைவைப்பிற்கு அருகிலுள்ள போர் வலயத்திலிருந்து இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடருதவியாக 2000 ரூபாய் (28 அமெரிக்க டொலர்) வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு ஆத்திரமடைந்த ஏதிலிகள் எதிர்வினை புரிந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையிலான சண்டையிலிருந்து தப்பியோடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் யாழ் கச்சேரியில் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ்.மகாலிங்கம், துணை திரு. ஆர்.நல்லையா மற்றும் மேலதிக பணிப்பாளர் (திட்டமிடல்) திரு. எஸ். சத்தியசீலன் ஆகியோர் இன்று ஏதிலிகளை பார்க்கச் சென்ற போது அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். ஏதிலிகளுக்கு வழங்க இரண்டு பாரவூர்தி உலர் உணவுப் பொருட்களையும் அலுவலர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவர்களிடமிருந்து உணவுப் பொருட்களைப் பெற மறுத்துவிட்டனர். கூட்டத்தில் இருந்த சிலர், "எங்களிடம் பணமோ, உணவோ இல்லாததால் அல்ல, உயிரைக் காப்பாற்றுவதற்காக இங்கு வந்தோம். எனவே நீங்கள் எங்களை ஓம்பலிற்காகச் செல்ல அனுமதிக்க வேண்டும்." என்று கூறினார்.

இடம்பெயர்ந்தவர்களை உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல வற்புறுத்த முடியாமல் போனதால், திட்டமிடல் பணிப்பாளர் (யாழ்ப்பாணம்) பாரவூர்திகளை கிளாலி சிறிலங்கா தரைப்படை முகாமிற்கு அருகில் பறிக்குமாறு பணித்தார்.

கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையிலும், ஒரே வளாகத்தில் உள்ள தேவாலயத்திலும் 1114 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடுருவல்காரர்களை அடையாளம் காண, முதலில் அவர்களைத் திரையிடாமல் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல அனுமதிப்பதில் தமக்கு நியாயமான பாதுகாப்புக் கவலை இருப்பதாக சிறிலங்கா தரைப்படை கூறுகிறது.

புலிகள் ஊடுருவுவதற்கு அவர்களிடையே கலக்க வேண்டிய கட்டாயத்தேவையில்லை, ஆனால் ஓயாத அலைகள் மூன்று வலிதாக்குதலாலும் ஒரு வாரத்தில் பல படைமுகாம்களை மூடுவதன் மூலமும் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட சிறிலங்கா தரைப்படையின் உள்ளக வலுவெதிர்ப்பிலுள்ள மிகப் பெரிய இடைவெளிகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலையிலேயே இப்போது அவர்கள் உள்ளனர் என ஏதிலிகள் இதைப் பற்றி ஏளனம் செய்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஏதிலிகளை கிளாலிக்கு அப்பால் செல்ல தரைப்படை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது கட்டிய கைவிடப்பட்ட வீட்டுத் திட்டமான "பண்டிதர் குடியிருப்பு"க்குள் குடியேறியுள்ளனர். ஏனையோர் பளை, விடத்தல் பளை, புலோப்பளை ஆகிய இடங்களுக்குச் சென்று போர் வலயத்தில் தங்கியிருக்கத் தெரிந்துள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் தெற்கு வட்டக்கூறில் போர் வலயத்திலிருந்து தப்பியோடிய மக்கள் சார்பாக அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்திடம் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படைக்கும் இடையேயான கடும் சமர்களிலும் இடைவிடாத சேணேவித் துவந்துவங்களிலும் சிக்கித் தவிக்கும் இந்தப் பொதுமக்களுக்கு ஆற்றுவது தொடர்பான வினாக்களுக்கு தீர்வு காண்பதற்கு மிகக் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது என கத்தோலிக்கத் திருச்சபை வட்டாரம் ஒன்று இன்று தெரிவித்துள்ளது.

 

 


 

 

ஏதிலிகளை விடுதலை செய் என்கிறது தமிழ் குழு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4915
செய்தி வெளியீட்டு நேரம்: காலை 8:55
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2/09/2022

யாழ்ப்பாணத்தில் உள்ள கிளாலியில் சிறீலங்கா தரைப்படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகளை வட குடாநாட்டின் பிற பகுதிகளிலுள்ள ஓம்பலான பரப்புகளுக்குச் செல்ல அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வற்புறுத்துமாறு கொழும்பில் உள்ள தமிழ்க்குழு ஒன்று அனைத்துலகச் சமூகத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் (ரெலோ) இன்று காலை ஊடகங்களுக்குக் கூற்றுரை ஒன்றை வெளியிட்டார். வெளியீட்டின் முழு உரை பின்வருமாறு.

"சிறிலங்காவின் வடக்கில் சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் படைய முட்டலின் நடுவணில் கடந்த பல நாட்களாக பளை மற்றும் கிளாலி பரப்புகளில் சிறுவர்கள் உட்பட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்."

"இந்த அப்பாவி பொதுமக்கள் ஆயுதப்படைகளால் போர் அரங்கை விட்டு வெளியேறுவதற்கு அவர்களின் வெறித்தனமான ஆர்வமான வேண்டுகோள்களுக்குப் பிறகும் இன்னும் தடுக்கப்படுகிறார்கள்."

"இந்தப் பொதுமக்கள் மனித கேடயம் வழங்குவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இதனால் உயிரிழக்கும் அ காயமடையும் உடனடி ஊறை எதிர்கொள்கின்றனர்."

"எனவே, இந்த வலுவெதிர்ப்பற்ற குடிமக்கள் அனைவரையும் அவர்களின் ஓம்பலையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக போர் அரங்கை விட்டு வெளியேறுவதற்கு உடனடியாக அனுமதிப்பதற்கான அரசியலமைப்பு மற்றும் தார்மீகக் கடமையை சிறிலங்கா அரசாங்கத்தின் மீது பதியுமாறு அனைத்துலகச் சமூகத்தை நாங்கள் அக்கறையோடும் கட்டாயத்தேவையாகவும் கேட்டுக்கொள்கிறோம்."

 

 


 

 

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கடும் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4916
செய்தி வெளியீட்டு நேரம்: காலை 11:05
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2/09/2022

யாழ்ப்பாணத்தின் தெற்கு வட்டக்கூறில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் இன்று காலை கடும் சண்டை மூண்டது. சாவகச்சேரிக்குத் தென்கிழக்கே ஏ9 நெடுஞ்சாலையில் உள்ள மிருசுவில் என்ற ஊரில் உள்ள மக்கள் கூறுகையில், காலை முதல் இரு தரப்பினரும் வலுத்த கணையெக்கி மற்றும் சேணேவி எறிகணை வீச்சால் எதிர்த்தரப்பினரது படைநிலைகளைத் தாக்குகின்றனர்.

ஆனையிறவு தளத்திற்கான முதன்மை வழங்கல் பாதையின் நான்கு கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவை மீளப்பெறும் சிறிலங்கா தரைப்படையின் 'வெலிகதர' என குறியீட்டுப் பெயரிடப்பட்ட நடவடிக்கையானது புலிகள் கனமாக அரணப்படுத்தியுள்ள நிலைகளைக் கட்டியுள்ள முகமாலை நோக்கி ஒரு புதிய முன்னகரும் முயற்சியை நேற்று மேற்கொண்ட போது கடும் எதிர்ப்பைச் சந்தித்தது.

நேற்று வெலிகதர நடவடிக்கையின் (சிங்களத்தில் 'பாலைவனம்' ) முன்னகர்ந்து வரும் படை வரிசைகளுக்கு எதிராக புலிகள் நடத்திய கடுமையான எதிர் தாக்குதலில் முகமாலைக்கு முன்னால் மேலதிகமாக ஒரு கிலோமீட்டர் நிலப்பரப்பை சிறிலங்கா தரைப்படை இழந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் இதனை மறுத்து, நடவடிக்கை நடந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் புலிகளின் பல்லத்தால் வேகம் மிகவும் மெள்ளமாக இருந்ததாகவும் கூறினர்.

இதேவேளை, நேற்று வெலிகதர நடவடிக்கையின் மீதான எதிர் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா தரைப்படை வீரர்களின் மேலும் பத்து சடலங்களை விடுதலைப் புலிகளின் படையினர் மீட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை முதல் முகமாலை சமர்க்களத்தில் சேகரிக்கப்பட்ட படைவீரர்களின் மொத்த எண்ணிக்கை அறுபதாக உயர்ந்துள்ளது என்றும் புலிகளின் குரல் தனது காலை செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. 

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் படையினர் யாழ் குடாநாட்டிற்குள் மேலும் முன்னகர்ந்து வருவதாகவும் விடுதலைப் புலிகளின் சிறப்பு எல்லைப்படையும் எல்லைப்படையும் தாக்குதலில் முக்கிய பங்காற்றுவதாகவும் வானொலி தெரிவித்துள்ளது.

சிறப்பு எல்லைப்படையும் எல்லைப்படையும் கடந்த ஆண்டு புலிகளால் அதிக எண்ணிக்கையில் வளர்த்தெடுக்கப்பட்ட சிறப்புப் பயிற்சி பெற்ற மக்கள்படைப் போராளிகள் ஆவர். இரண்டு பிரிவுகளும் முக்கியமாக ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் படையேற்பாட்டுப் பணிகளில் மிண்டி வருவதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


 

 

பொதுமக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4917
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:19
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2/09/2022

சிறிலங்கா தரைப்படையானது வடக்கு சமர் வலயங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று விடுத்துள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர். நிகராளிகள் பொதுமக்களை காக்கும் கடமையிலிருந்து தவறி வருவதாக புலிகள் தெரிவித்தனர்.

கூற்றுரையின் முழு உரை பின்வருமாறு:

"யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கு வட்டக்கூறில் உள்ள சமர் வலயங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் ஏதிலிகளை மனிதக் கேடயங்களாகத் தடுத்து நிறுத்தும் சிறிலங்கா தரைப்படையின் மனிதநேயமற்ற மற்றும் கோழைத்தனமான உத்திகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிக்கிறோம்.

"ஏறக்குறைய ஐயாயிரம் தமிழ் பொதுமக்கள் தரைப்படையினரால் வல்வளைக்கப்பட்ட வலயங்களில் சிக்கியுள்ளதோடு ஓம்பமான மற்றும் பாதுகாப்பான பரப்புகளுக்குச் செல்வதை சிறிலங்கா தரைப்படை தடுத்துள்ளது. பளை மற்றும் பச்சிலைப்பள்ளியில் மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏதிலிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் கிளாலியில் தடுக்கப்பட்டு தரைப்படையின் வலுவெதிர்ப்பு நிலைகளுக்கு அருகிலுள்ள பாடசாலையிலும் தேவாலயத்திலும் வாழ கட்டாயப்பட்டுள்ளனர். பொதுமக்களை ஓம்பலான பரப்புகளுக்கு நகர்த்துவதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பல மணித்தியாலங்களுக்கு நடவடிக்கைகளை இடைநிறுத்திய விடுதலைப் புலிகள் கிளாலி ஊடாக பாதுகாப்பான பாதையை சுட்டிக்காட்டினர். படையினர் குவிக்கப்பட்ட சுற்றாடலிற்கு அருகாமையில் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியை பொதுமக்கள் பாதுகாப்புக் கவசமாக வைத்திருக்கும் போது படைத்துறை பெரும் பொதுமக்கள் வெளியேற்றத்தை தடுத்து திருப்பி அனுப்பியது.

"சிறிலங்கா வான்படை, கடற்படை மற்றும் தரைப்படையினரால் யாழ்ப்பாணத்தின் தெற்கில் பொதுமக்கள் குடியிருப்புகளில் கண்மூடித்தனமான வான்வழி குண்டுவீச்சு, கடல்சார் எறிகணைவீச்சு மற்றும் சேணேவிப் பல்லங்கள் மூலம் அப்பாவி பொதுமக்களிற்கு மரணத்தையும் காயங்களையும் ஏற்படுத்தியமைக்கு புலிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகின்றனர். இத்தகைய இரக்கமற்ற மற்றும் பொறுப்பற்ற செயல்களின் மூலம் சிறிலங்கா படைத்துறை தாவனமானது பொதுமக்களின் ஓம்பம் தொடர்பான ஜெனீவா உடன்படிக்கையின் அடிப்படை விதிமுறைகளை மீறியுள்ளது.

"யாழ் குடாநாட்டில் பொதுமக்கள் ஏதிலிகளின் நலன்களை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உரிமைக்கட்டளை பெற்று செயற்படும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர். நல்லெண்ணக்குழுக்கள் போர் அழிவுகளிலிருந்து படையினரின் கட்டாய பிடிப்பில் உயிருக்கு ஊறில் இருக்கும் ஏதிலிகளின் ஓம்பத்தை பாதுகாக்கத் தவறிவிட்டன என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். மேலும், இந்த விடயத்தை அனைத்துலகச் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த அமைப்புகள் தயக்கம் காட்டுகின்றன."

 

 


 

 

எறிகணை வீச்சில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4918
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:22
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2/09/2022

வடமராட்சிக் கிழக்குக் கோட்டத்திற்குட்பட்ட செம்பியன்பற்று ஊரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த ஏதிலிகள் மீது, நாகர்கோவிலை தளமாகக் கொண்ட சிறிலங்கா தரைப்படையினர் இன்று சரமாரியாக எறிகணை வீச்சு நடத்தியதில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக லண்டனில் உள்ள தவிபு வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 10.45 மணியளவில் தொடங்கிய எறிகணை வீச்சு நண்பகல் 12.30 மணி வரை தொடர்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

வட்டாரங்களின்படி, எறிகணை வீச்சில் பின்வரும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்:

சிறிலலிதா,70
சி.கணபதிப்பிள்ளை,75
மு.வள்ளிப்பிள்ளை,70
எஸ்.டோமில் ரில்டா,46.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 198
  • Views 50.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 6ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்கா தரைப்படை முதன்மை வழங்கல் பாதையில் அங்குலத்திற்குச் சமராடுகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4920
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 10:07
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 4
/09/2022

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கே எழுதுமட்டுவாள் மற்றும் பளைக்கு இடைப்பட்ட ஏ9 நெடுஞ்சாலையில் விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தாக்குவதற்கு சிறிலங்கா தரைப்படை நேற்று மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் எதிர்த்தாக்குதலுக்குள்ளாகி முறியடிக்கப்பட்டன என்று புலிகளின் குரல் தனது இன்றைய காலை ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், யாழ்பாணத்திலுள்ள சிறிலங்கா தரைப்படையானது, வெலிகதர நடவடிக்கை அதன் போக்கில் இருப்பதாகவும், ஆனால் வலுத்த எதிர்ப்பு மற்றும் புலிகளின் அதிகளவு சேணேவி மற்றும் கணையெக்கிச் சூடு காரணமாக முன்னகர்வு மிகவும் மெள்ளமாக இருந்ததாக கோரியது. நேற்று இடம்பெற்ற மோதலில் சிறிலங்கா தரைப்படையின் ஒரு முதன்மை சமர் தகரியை புலிப் படையினர் சேதப்படுத்தியதாக புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 7 மணியளவில் முதன்மை வழங்கல் பாதையிலுள்ள புலிகளின் நிலைகளின் மேற்குக் கையிலிருந்து ஆனையிறவுத் தளம் வரை சேணேவிப் பல்லம் மற்றும் வான் தாக்குதல் காப்புடனான சூட்டாதரவுடன் சிறிலங்கா தரைப்படை கவச மடுத்தலைத் தொடங்கியதாக வானொலி தெரிவித்துள்ளது.

புலிப் படையினர் மடுத்தலை எதிர்கொண்டதோடு, கடுமையான சமரைத் தொடர்ந்து, சிறிலங்கா தரைப்படையை மேலும் மேற்கு நோக்கித் தள்ளினர். பின்னர், பிற்பகல் 3 மணியளவில், சிறிலங்கா தரைப்படை கிழக்குக் கையிலிருந்து மற்றொரு வலிதாக்குதலை ஏவினர். வானொலியின்படி மற்றொரு சுற்றுச் சண்டைக்குப் பிறகு இதுவும் முறியடிக்கப்பட்டது. அந்தச் சமரில் இருபத்தைந்து சிறிலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டனர் என்று மேலதிகமாகத் தெரிவித்தது.

பளை நகரின் நுழைவாயிலுக்கு அண்மித்த ஊரான முகமாலைக்கும் அரசகேணிக்கும் இடைப்பட்ட 4 கிலோமீற்றர் ஏ9 நெடுஞ்சாலையையும் அதன் சுற்றாடலையும் விடுதலைப் புலிகள் கைக்கொண்டுள்ளதாக நேற்று சாவகச்சேரியில் வைத்திய உதவி பெறுவதற்காக சமர் வலயத்தினூடாக வந்த குடும்பம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த வலயத்தினுள் புலிகள் அதிக படையினரையும் படைக்கலன்களையும் குவித்து வருவதாக அவர்கள் கூறினர்.

தரைப்படை தனது சொந்த பயன்பாட்டிற்காக முன்னர் கட்டியெழுப்பிய நன்கு அரணப்படுத்தப்பட்ட வலுவெதிர்ப்பில் அவர்கள் திண்ணிறுவியுள்ளதால் ஏ9 இல் இருந்து புலிகளை வெளியேற்றுவது மெள்ளமாகவும் கடினமாகவும் உள்ளது என்று யாழ்ப்பாணத்தில் உள்ளவொரு மூத்த படைத்துறை வட்டாரம் கூறினார்.

கடந்த வாரம் குடாநாட்டில் புலிகள் கைப்பற்றிய பரப்புகளில் பெருமளவிலான கணையெக்கிச் சூட்டுநிலைகள் நிறுவப்பட்டிருப்பது பகைவரின் அரணிருக்கைகள் மீதான தனது படையினரின் ஒருங்குவிக்கப்பட்ட முன்னகர்வுகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக தரைப்படை தலைமை மேஜர் ஜெனரல் லயனல் பலகல்லேவுடன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்குமாறு தரைப்படை, வான்படை மற்றும் கடற்படைக் கட்டளையாளர்களுக்கு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தினார். இரண்டு சிறப்பு மூத்த பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்பாளர்களும் கடந்த வாரம் அனுப்பப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்கா பாதுகாப்புப் படைக் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சூலா செனிவரத்னே ஆவார், அவர் அமெரிக்காவில் சிறப்புப் பயிற்சி பெற்ற சிறிலங்கா தரைப்படையின் உயர்மட்டக் கட்டளையாளர்களில் ஒருவராவார். அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு படையப் புலனாய்வுப் பணிப்பாளராகவும் இருந்தார்.

 

 


 

 

'அவர்களைப் போக விடுங்கள்' என்கின்றனர் யாழ் போராட்டக்காரர்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4921
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:44
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22
/12/2022

குடாநாட்டின் தெற்கு வட்டக்கூறில் சமர் வலயங்களில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் ஓம்பத்திற்கு உத்தரவாதம் அளித்து அவர்களை ஓம்பலான வலயங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தையும் அனைத்துலக சமூகத்தையும் வலியுறுத்தி எண்ணூறுக்கும் மேற்பட்டோர் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அமைதி மற்றும் நல்லெண்ணத்திற்கான மக்கள் இணையம் (பிசிபிஜி) இந்த உள்ளிருப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் போராட்டத்தில் கலந்து கொண்டன. இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக அரசாங்க அதிபர் மற்றும் கச்சேரி அதிகாரிகள் செயலக வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை.

யாழ்ப்பாணம் நகர படைத்துறைக் கட்டளையாளர் கேணல் ஜெயதிலக சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். கச்சேரியை திறக்க அதிகாரிகள் வழிவகை செய்யும்படி கேட்டுக் கொண்டார். இருப்பினும், போராட்டக்காரர்கள் அவரை கடமையில் ஈடுபட மறுத்துவிட்டனர்.

காலை 11 மணியளவில் உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் போராட்டக்காரர்கள் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணைய அலுவலகங்களுக்கு ஊர்வலமாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் விண்ணப்பக் கடிதங்களைக் கையளித்தனர்.

இதையடுத்து கச்சேரிக்கு திரும்பிய போராட்டக்காரர்கள், தலைமைச் செயலகம் முன்பாக கூட்டம் நடத்தினர். பேச்சாளர்களில் ஒருவரான யாழ்.பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் த.பிரபாகரன், யாழ்ப்பாணத்தின் போர் வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபரை வலியுறுத்துமாறு அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். இது ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானது என்றார்.

மாசார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏழு ஊர்களில் 3500க்கும் மேற்பட்டோர் உள்ளடங்கிய 900 குடும்பங்கள் சிக்கியுள்ளதாகவும், இன்றியமையா பொருட்களின்றி அவர்கள் தவித்து வருவதாகவும் பி.சி.பி.ஜி.யால் அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்ட விண்ணப்பக் கடிதம் கூறுகிறது. 1100 பேரை உள்ளடக்கிய 249 குடும்பங்கள் கிளாலியில் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (ஆனையிறவு தானைவைப்பிற்கு அருகில் மாசார் உள்ளது.)

யாழ். பாதுகாப்புப்படைக் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சூலா செனவிரத்ன இந்தப் பொதுமக்களுக்கு கிளாலிக்கு அப்பால் குடாநாட்டில் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கியிருந்த போதிலும், போர் வலயங்களிலுள்ள படையதிகாரிகள் அவர்களை செல்ல அனுமதிக்க மறுத்ததாக விண்ணப்பக் கடிதமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


 

 

யாழ்ப்பாண ஏதிலிகள் தடையைக் கடக்கிறார்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4922
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:52
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22
/12/2022

மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளுக்கு நடுவணில் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2, முதல் பாதுகாப்புப் படையினரால் குடாநாட்டின் ஓம்பலான பரப்புகளுக்குச் செல்லத் தடுத்து நிறுத்தப்பட்ட 1643 பொதுமக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள கிளாலியை விட்டு வெளியேற சிறிலங்கா தரைப்படை அனுமதித்தது. விடுவிக்கப்பட்ட ஏதிலிகள் இன்று காலை 11 மணியளவில் கிளாலி பாடிவீட்டை விட்டு கார்கால மழையோய்ந்த போது வெளியேறத் தொடங்கினர்.

இன்று அவ்வழியாக வர அனுமதிக்கப்பட்டவர்கள், மார்ச் 2 ஆம் திகதி போர் வலயத்திலிருந்து வெளியேற முற்பட்ட ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்களை படையினர் அனுமதிக்க மறுத்ததையடுத்து கிளாலியில் தங்கியிருந்த மற்றும் புலோப்பளையில், பெரும்பாலும் அவ்வூரின் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் தங்கியிருந்தனர், தங்குமிடம் தேடத் தெரிவு செய்த ஏதிலிகளே ஆவர். 

இன்னும் சிலர் போர் வலயத்திற்கு அருகிலுள்ள ஊர்களில் கிளாலி வழியாக செல்ல சிறிலங்கா தரைப்படையின் அனுமதி கிடைக்கும் வரை தற்காலிக தங்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் தெற்கு வட்டக்கூறை குடாநாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாதை கிளாலி வழியாகும். முதன்மை நெடுஞ்சாலையான ஏ9 ஆனது ஆனையிறவு தானைவைப்பின் முதன்மை வழங்கல் பாதையை மறுப்பதற்காக விடுதலைப்புலிகளால் துண்டிக்கப்பட்டது.

மார்ச் 27 முதல் சிறிலங்கா தரைப்படையும் விடுதலைப் புலிகளும் வெய்யச் சமர்களாலும் நாட்டோறும் சேணேவி துவந்துவங்களாலும் பூட்டப்பட்ட யாழ் குடாநாட்டின் பூசந்தியிலுள்ள ஆனையிறவு தானைவைப்பிற்கு அருகிலுள்ள தங்கள் ஊர்களை விட்டு பொதுமக்கள் தப்பியோடினர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

இரண்டு டோறாப் படகுகள் மூழ்கடிப்பு - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4927
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 10:30
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 24
/12/2022

தீவின் வடக்கில் வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் இன்று மாலை சிறிலங்காக் கடற் கலத்தொகுதி ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு டோறா விரைவுத் தாக்குதல் கடற்கலன்கள் அழிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் ஊடக வெளியீட்டில் தெரிவிக்கின்றனர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை பின்வருமாறு:

"வடமராச்சி கிழக்குக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக்குச் சொந்தமான இசுரேலில் உருவாக்கப்பட்ட இரண்டு டோறா சுடுகலப் படகுகள் கடற்புலிகளால் இன்று அழிக்கப்பட்டுள்ளன. மாலை 6.30 மணியளவில் நாகர்கோவில் அருகே இந்தச் சம்பவம் நடந்தது.

"வடமராச்சி கிழக்குக் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டோறாப் படகுத் தொடரணி இன்று மாலை கடற்புலிகளுடன் முட்டி மோதின. கடற்புலிகளின் சுடுகலப் படகுகள் சிறிலங்காக் கடற்கலன்களுடன் மிண்டிய அதேவேளை, கடலோர சேணேவிப் பிரிவுகளும் டோறாப் படகுகளைக் குறிவைத்தன.

"இரண்டு டோறாப் படகுகள் சேணேவி எறிகணைவீச்சினால் நேரடியாக தாக்கப்பட்டு, தீப்பிடித்து மூழ்கின. இந்த சம்பவத்தில் சிறிலங்காக் கடற்படை ஆளணியினர் பலர் கொல்லப்பட்டனர்.

"இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கடற்சமரானது உக்கிரமாகி பல மணி நேரம் நீடித்தது."

 

 


 

 

நாகர்கோவில் உள்வீதியில் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4929
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 3:08
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22
/12/2022

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு வட்டக்கூறில் எழுதுமட்டுவாழ் மற்றும் நாகர்கோவிலுக்கு இடைப்பட்ட வீதியில் நேற்றிரவு 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படையினருக்கும் இடையில் கடுஞ்சண்டை வெடித்தது. புலிகள் தமது எழுதுமட்டுவாழ் படைநிலைகளிலிருந்து நாகர்கோவிலை நோக்கி உள்வீதியில் முன்னகர முயன்றபோது, சண்டை வெடித்ததாக வடமராட்சிக் கிழக்கிலுள்ள சிறிலங்கா படையதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த முட்டலைத் தொடர்ந்து எழுதுமட்டுவாழ்- நாகர்கோவில் வீதியிலுள்ள கண்டல்களில் படையினரால் கடும் சேணேவித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

எழுதுமட்டுவாழுக்கும் பளைக்கும் இடையில் ஏ9 நெடுஞ்சாலையில் தமது படைநிலைகளை திடமாக்கிக் கொண்டிருக்கும் புலிகள், கேந்திர வகையாக அமைந்துள்ள நாகர்கோவில் சிறீலங்கா தரைப்படை முகாம் மீது படைய அழுத்தத்தை மூட்டும் நோக்கத்திற்காக நேற்றிரவு கூடுதலாக உள்வாங்கப்பட்ட படையினருடன் நடவடிக்கையை ஆரம்பித்ததாகத் தெரிகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கான விடுதலைப் புலிகளின் தற்போதைய வலிதாக்குதலை முறியடிப்பதற்கு அரசாங்கம் புதிய உத்தியை வகுத்துள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு துணை அமைச்சர் நாயகம் அனுருத்த ரத்வத்தை இன்று அமைச்சரவையில் தெரிவித்தார்.

சிறிலங்கா தரைப்படையின் அதிசிறப்பு 53 ஆவது படைப்பிரிவின் சிறப்புப்படைக் கட்டளையாளர் பிரிகேடியர் காமினி கெட்டியாராச்சியின் திடீர் இடமாற்றத்தை அடுத்து இன்றைய செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. அந்த அதிகாரி திருகோணமலையிலுள்ள 22 வது படைத்தொகுதிக்கு மாற்றப்பட்டு இந்தப் படைத்தொகுதியின் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சிசிர விஜேசூரிய யாழ்ப்பாணத்தில் சிறப்புப்படைக்குத் தலைமை தாங்குவதற்காக அழைத்து வரப்பட்டார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்புப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பிரிகேடியர் கெட்டியாராச்சியின் திடீர் இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக யாழ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், வடக்கில் உள்ள ஒரு சிறிலங்கா தரைப்படை அதிகாரி இதை மறுத்தார், யாழ்ப்பாணத்தில் புலிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான சிறிலங்கா தரைப்படையின் புதிய கேந்திரத்திற்காகவே இந்த இடமாற்றம் செய்யப்பட்டது என்று கூறினார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 8ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

டோறாவில் உயிர் பிழைத்தவர் கரைசேர்ந்தார், உலங்குவானூர்தி தாக்கப்பட்டது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4930
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 10:50
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 24
/12/2022

விடுதலைப்புலிகளால் நேற்றிரவு மூழ்கடிக்கப்பட்ட இசுரேலில் உண்டாக்கப்பட்ட டோறா விரைவுத் தாக்குதல் கடற்கலன் ஒன்றிலிருந்து தப்பிய காயமடைந்த கடற்கலவர் ஒருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கிலுள்ள அம்பன் கடற்கரைக்கு நீந்திச் சென்றார். மிகிந்தலையைச் சேர்ந்த 21 வயதான கடற்கலவர் ஆர்.எம்.எஸ்.செனவிரத்ன, ஊரிற்கு வந்தவுடன் அம்பனில் தன்னுடன் பேசிய தமிழ்நெட்டின் வடமராட்சி செய்தியாளரிடம், நேற்றிரவு புலிகள் விரைவுத் தாக்குதல் கடற்கலன் மீது தாக்கியதில் தானும் இன்னொருவரும் மட்டுமே உயிர்பிழைத்ததாகத் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கில் நேற்றிரவு புலிகளின் கரையோர வானூர்தி எதிர்ப்புச் சுடுகலன் நிலைகளின் சூட்டால் தாக்குதல் உலங்குவானூர்தியொன்று தாக்கப்பட்டு சேதமடைந்ததாக யாழ்ப்பாணத்திலுள்ள படைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு டோறாக்களில் 22 சிறிலங்காக் கடற்படை வீரர்கள் இருந்தனர், அவர்களில் 11 பேர் உயிர் பிழைத்ததாக கோரப்பட்டுள்ளது.

இன்று காலை கரைக்கு நீந்தி வந்த கடற்கலவர், விடுதலைப்புலிகளின் தாக்குதலிலிருந்து தப்பிய தனது கூட்டாளியும் கரைக்கு வந்தாரா என்பது குறித்து தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார்.

செனவிரத்னவின் கூற்றுப்படி, புலிகள் கடற்கரையிலுள்ள சேணேவி நிலைகளிலிருந்து விரைவுத் தாக்குதல் கடற்கலன்கள் மீது சுட்டுள்ளனர். வடமராட்சி கிழக்குக் கரையோரத்தில் விடுதலைப் புலிகளின் வலுவெதிர்ப்பில் குண்டுவீசியதாக அவர் கோரிய இரண்டு டோறாக்களுடனும் கடற்புலிகள் மிண்டியிருந்தனர். கடற்கலவரின் கழுத்தில் சிதறுதுண்டால் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் இன்று அதிகாலை அம்பனுக்கு கிழக்கே 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொட்டோடை கடற்கரைக்கு நீந்திவந்து, நெடுநேர நீச்சலால் களைத்து, ஊரிற்கு நடந்து சென்றார்.

அவர் அம்பனுக்குள் நுழையும் போது பார்த்த சில ஊர் மக்களிடம் தண்ணீர் கேட்டார், அவருக்கு குடிக்க இளநீர் கொடுக்கப்பட்டது. காலை 7.30 மணியளவில் சிறிலங்கா தரைப்படை வல்லிபுரத்திலுள்ள தளத்திலிருந்துவந்து அவரை பலாலி படைய மருத்துவமனைக்குப் பண்டுவத்திற்காக அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், வடமராட்சி கிழக்கு வட்டாரங்கள் கூறியதாவது, நேற்றிரவு இரண்டு டோறாக்கள் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகர்கோவிலுக்கு தெற்கேயுள்ள சோழன் குடியிருப்பு மற்றும் குடாரப்பு ஆகிய கரையோர சிற்றூர்களை நேற்றிரவு இரண்டு உலங்குவானூர்திகள் தொடர்சுட்டன. கரையோரத்தில் களமிறக்கப்பட்டிருந்த புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் பிரிவினர் திருப்பிச் சுட்டனர் என்றன வட்டாரங்கள்.

புலிகளின் நிலைகளிலிருந்து சுடப்பட்டதில் தாக்கப்பட்ட தாக்குதல் உலங்குவானூர்தியானது சேதமடைந்த போதிலும் பலாலி வான்படைத்தளத்திற்கு மீண்டும் பறக்க முடிந்தது என்று சிறிலங்கா தரைப்படை கோரியது.

இன்று காலை அப்பரப்பில் பறந்த இசுரேலில் கட்டப்பட்ட கிபிர் தாரை குண்டுவீச்சு வானூர்தியின் மீதும் புலிகளின் வானூர்தி எதிர்ப்புச் சூட்டாளர்கள் சுட்டுள்ளனர். இந்தத் தாரை பறந்து வெளியேற முன்னர் சோழன் குடியிருப்பு-குடாரப்பு வட்டக்கூறு மீது ஒருமுறை வான்குண்டுகளை வீசியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் டோறாவிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களைப் பட்டியலிட்டுள்ளார்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4933
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:42
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 24
/12/2022

ஏப்ரல் 7 வெள்ளியன்று தாங்கள் மூழ்கடித்த டோறா விரைவுத் தாக்குதல் கடற்கலனிலிருந்து புலிகள் ஒரு 23 மிமீ தெறுவேயம் மற்றும் இரண்டு 20 மிமீ தெறுவேயங்கள் மற்றும் ஐந்து .50 பிரௌனிங் கன இயந்திரச் சுடுகலன்கள் உட்பட பெருந்தொகை ஆயுதங்களை கைப்பற்றியதாக புலிகளின் குரல் ஒலிபரப்பின் வணிகச் சேவையான தமிழீழ வானொலி இன்று மாலை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

இரண்டு டோறாக்கள் மீதான தாக்குதலை அவர்களின் சிறப்புப்படைப் பிரிவினர் நடத்தியதாக வானொலி கூறியது.

வானொலியின் படி, மூழ்கிய டோறாக்களிலிருந்து புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஏந்தனங்களின் பட்டியல் பின்வருமாறு-

  • 23 மிமீ தெறுவேயம் - 1
  • 20 மிமீ தெறுவேயங்கள் - 2
  • .50 பிரௌனிங் கன இயந்திரச் சுடுகலன்கள் - 5
  • பிகே இலகு இயந்திரச் சுடுகலன்கள் - 7
  • பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் - 1
  • ஏகே இலகு இயந்திரச் சுடுகலன்கள் - 2
  • தானியங்கி கைக்குண்டு செலுத்தி - 3
  • T- 56 தாக்குதல் துமுக்கிகள் - 3
  • பெல்ஜியம் (இயந்திரச் சுடுகலன்) சுடுகுழல்கள் - 2
  • பிகே இலகு இயந்திரச் சுடுகலன் (உதிரி) சுடுகுழல்கள் - 4
  • பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் (உதிரி) சுடுகுழல் - 1
  • நடைபேசி - 1
  • 25 குதிரைவலு வெளியிணைப்பு இயந்திரம் - 1
  • 23 மிமீ கணைகள் (தொடுக்கப்பட்டது) - 424 சுற்றுகள்
  • 20 மிமீ கணைகள் (தொடுக்கப்பட்டது) - 910 சுற்றுகள்
  • 40 மிமீ எறிகணைகள் (தொடுக்கப்பட்டது) - 422 (தானியங்கி கைக்குண்டு செலுத்தி)
  • பெல்ஜியம் (?) சுற்றுகள் (தொடுக்கப்பட்டது) - 1195
  • பிகே இ.இ.சு கணைகள் (தொடுக்கப்பட்டது) - 4760
  • பொ.இ.சு. கணைகள் - 766
     

 


 

 

தானைவைப்பிற்கு அருகே உள்ள ஊர்மக்கள் இன்னும் சிக்கியுள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4934
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:31
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 24
/12/2022

 ஆனையிறவு தானைவைப்பிற்கு அண்மித்த ஊர்களை விட்டு வெளியேற 2704 பொதுமக்கள் அனுமதியை எதிர்பார்த்துள்ளதாக யாழ்.பச்சிலைப்பள்ளி கோட்டத்தின் கோட்டச் செயலாளர் திரு.வி. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். குடாநாட்டில் ஓம்பலான பரப்புகளுக்குச் செல்ல சிறிலங்கா தரைப்படை அனுமதி வழங்கியவுடன் அவர்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

மார்ச் 26 முதல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா தரைப்படைக்குமிடையில் இடம்பெற்ற கடும் சண்டையில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் நிலைமையை அறிய கோட்டச் செயலாளர்  நேற்று யாழ்ப்பாணத்தின் தெற்கு வட்டக்கூறிலுள்ள போர் வலயத்தில் தனது நிருவாகத்தின் கீழியங்கும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கு வருகைபுரிந்தார். 

பச்சிலைப்பள்ளி புலத்திலுள்ள ஏழு ஊர்ப் பிரிவுகளும் சிறிலங்கா தரைப்படையின் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம், இயக்கச்சித் தளம் மற்றும் அவற்றின் முன்னரங்க வலுவெதிர்ப்பு சுற்றுப்புறத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

எழுதுமட்டுவாழ் தெற்கு, கிளாலி, புலோப்பளை வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு உட்பட பச்சிலைப்பள்ளி நிர்வாகப் புலத்தின் இருபது ஊர்ப் பிரிவுகளும் பளைக்கு வடக்கேயுள்ளன. முகமாலை வடக்கு மற்றும் தெற்கு, இந்திரபுரம் போன்ற சில ஊர்ப் பிரிவுகள் இப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

போர் வலயத்திலுள்ள ஏழு ஊர்பிரிவுகளில் 23 குடும்பங்கள் வெளியேற மறுத்துள்ளதாக பச்சிலைப்பள்ளி கோட்டச் சபை தெரிவித்துள்ளது. அவர்கள் மறுப்பதற்கான காரணங்கள் முதுமையிலிருந்து சொத்து நலன்கள் வரை மாறுபடும். இதற்கிடையில், பெரும்பாலான பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறியவுடன், இந்த ஏழு ஊர் பிரிவுகளிலும் குட்டித் திருடர்கள் செயலுறக்கூடும் என்று மற்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 10ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஏ9 - சிறிலங்கா தரைப்படை மீண்டும் முயற்சிக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4938
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:36
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 24
/12/2022

சிறிலங்கா தரைப்படை ஏ9 வீதியின் ஆனையிறவு தானைவைப்பிற்கான 6 கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவை மீளக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது, இந்த நெடுஞ்சாலையில், எழுதுமட்டுவாழிற்கும் முகமாலைக்கும் இடையில் இன்று அதிகாலைமுதல் தரைப்படையிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை வெடித்தது.

சாவகச்சேரியில் இன்று அதிகாலையிலிருந்து கொடிகாமத்தில் சிறிலங்கா படையினர் ஏ9 நெடுஞ்சாலையில் எழுதுமட்டுவாழிற்கு தெற்கே நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள விடுதலைப்புலிகளின் படைநிலைகள் மீது கனமாக எறிகணைகளை வீசிவருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.

தொண்டமானாறு களப்பின் கண்டல்களிற்கு அருகாமையில் இன்று காலையும் சண்டை இடம்பெற்றதாக வரணி வட்டக்கூறின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, யாழ்ப்பாண நகருக்கு அருகில் படையினரின் வலுவெதிர்ப்புப் பரப்புகளை நோக்கி விடுதலைப் புலிகளின் சேணேவிப் பிரிவினரால் இன்று காலை வீசப்பட்ட எறிகணைகள் பாசையூர் மற்றும் கொழும்புத்துறை கடற்கரைகளில் வீழ்ந்ததாக வடக்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

 


 

 

பளை வெளியேற்றத்திற்கு உதவுவோம் - கட்டளையாளர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4939
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:46
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

யாழ்ப்பாணப் பாதுகாப்புப்படைக் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சூல சேனவிரத்ன, யாழ்பாணத்தின் தெற்கு வட்டக்கூறில் ஆனையிறவு தானைவைப்பிற்கு அருகிலுள்ள போர் வலயத்திலிருந்து தங்கள் ஊர்களை விட்டு வெளியேறத் தயாராக இருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் போக்குவரத்தை ஏற்பாடு செய்துள்ளார் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயற்பாட்டுத் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண சிறப்புப்புபடைக் கட்டளையாளர் செஞ்சிலுவைச் சங்கம்(ICRC), அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம்(UNHCR), குழந்தைகளை ஓம்பவும்(Save the Children) மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள்(MSF) ஆகிய அமைப்புகளுக்கு இன்று காலை நிலைமை குறித்து விளக்கமளித்ததாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வருபவை பாதுகாப்பு அமைச்சு அறிக்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை -

"அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்தின் யாழ்ப்பாண அலுவலகத் தலைவர் திரு. ஜே.எஃவ் திக்சன், 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி யாழ்ப்பாணப் பாதுகாப்புப்படைக் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சூல சேனவிரத்னவுக்கு எழுதிய கடிதத்தில், தானும் தனது பணியாளர்களும் கிளாலியில் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்த பரப்புகளுக்குச் சென்றதாகக் கூறி, இடம்பெயர்ந்தவர்களைச் சந்தித்ததாகவும் அவர்கள் திரையிடப்பட்டும் முறைவழியைத் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதாகவும் கூறினார். மேலும், இடம்பெயர்ந்தவர்கள் உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும், அவர்கள் எவ்வகையிலும் அச்சமூட்டப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கிளாலி படைமுகாமிற்கு அருகாமையில் சுமார் 120 குடும்பங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

"யாழ். பாதுகாப்புப்படைக் கட்டளையாளர் மாவட்ட செயலாளரின் (அரசு முகவர்) ஆற்றுகையுடன் பலாலி கோட்டச் செயலாளர் மற்றும் மாசார், சோரன்பற்று, தம்பகாமம், வண்ணாங்கேணி, தர்மக்கேணி, அரசகேணி மற்றும் முள்ளியடி கிராம சேவகர்களை குடும்பங்களைச் சென்று பார்வையிட்டு அவர்கள் வெளியே வர விரும்புகிறார்களா அல்லது அங்கேயே தங்க விரும்புகிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்துள்ளார். 624 குடும்பங்கள் இப்பரப்பை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டுள்ளதோடு 173 குடும்பங்கள் அங்கேயே தங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்."

பொதுமக்கள் அவர்களது தனிப்பட்ட உடமைகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தால் நிறுவப்பட்ட நலன்புரி நிலையங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


 

 

யாழ். கச்சேரியை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4940
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 6:48
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

யாழ்ப்பாணத்தின் தெற்கு வட்டக்கூறில் போர் வலயத்திலுள்ள பொதுமக்களை சிறிலங்கா தரைப்படை தமது ஊர்களை விட்டு வெளியேறி குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள ஓம்பலான பரப்புகளுக்கு உடனடியாக செல்ல அனுமதிக்குமாறு கோரி இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான மக்கள் யாழ்.கச்சேரி நுழைவாயிலை முற்றுகையிட்டனர். பொது மக்களின் விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அங்குள்ள அதிகாரிகளை வலியுறுத்தி, முற்றுகையைத் தொடர்ந்து, யாழ்ப்பாண அரசாங்க அதிபரால், கொடிகாமத்திலுள்ள சிறிலங்கா தரைப்படையின் 52-2 படைத்தொகுதிக்கு அவசரக் குறிப்பு அனுப்பப்பட்டது. அவரது குறிப்புக்கு இன்று மாலை 5 மணி வரை மறுமொழி வரவில்லை என்று கச்சேரி அலுவலர்கள் தெரிவித்தனர். யாழ்.மாவட்ட செயலக முற்றுகைப் போராட்டம் தொடர்கிறது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் நாற்பது அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பினால் இன்று யாழ்.கச்சேரி முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பளை மற்றும் ஆனையிறவு தானைவைப்பிற்கும் இடைப்பட்ட ஊர்களில் கடும் சண்டைக்கு நடுவணில் கடந்த மார்ச் 27ஆம் திகதி முதல் சிக்கியுள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என கச்சேரி முற்றுகைப் போராட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

சிறீலங்கா தரைப்படையின் குடிமை ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் திலகரத்ன அவர்கள் பகலில் பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசி, தடையை கைவிடுமாறு அவர்களை வற்புறுத்தினார். அவரது முறையீடு எற்ற்கமறுத்தனர்.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து யாழ்ப்பாணப் பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவகங்களின் மாணவர்களையும் நாளை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

 

 


 

 

முதன்மை வழங்கல் பாதையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக சிறிலங்கா தரைப்படை கோருகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4941
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:44
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் மூத்த கட்டளையாளர் ஒருவர், மார்ச் 27 முதல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முதன்மை வழங்கல் பாதையின் துண்டை தனது படையினர் மீளக் கைப்பற்றியுள்ளதாக இன்று மாலை கோரினார். எனினும், ஏ9இல் கடுமையான சண்டை உக்கிரமடைவதாக மிருசுவில் குடியிருப்பாளர்கள் இன்று மாலை தெரிவித்தனர். முகமாலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற கடுமையான மோதல்களில் சுமார் 200 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதுடன் மூன்று தாகரிகள் சேதமடைந்துள்ளதாக கொடிகாமத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 7.30 மணியளவில் பளை மற்றும் எழுதுமட்டுவாழுக்கு இடையில் ஏ9 நெடுஞ்சாலையில் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா தரைப்படை இரு முனை வலிதாக்குதலை ஆரம்பித்ததாக சிறிலங்கா தரைப்படை மூத்த கட்டளையாளர் கூறினார். பதினொரு சிறிலங்கா தரைப்படை ஆளணியினர் கொல்லப்பட்டதோடு 137 பேர் காயமடைந்தனர் என்று கட்டளையாளர் கூறினார். நாற்பத்தேழு வீரர்கள் படுகாயமடைந்தனர் என்றும் கூறினர்.

பளை மற்றும் எழுதுமட்டுவாழிலிருந்து புலிகள் வைத்திருந்த ஏ9 பாதையில் சிறிலங்கா தரைப்படை இரண்டு முனை மடுத்தலை ஆரம்பித்தது. மூத்த அதிகாரியின் கூற்றுப்படி வலுத்த எதிர்ப்பையும் மீறி இரண்டு சிறிலங்கா தரைப்படை குழுக்களும் பகலில் ஏ9 இல் இணைந்திருந்தன.

ஆயினும்கூட, வீதியின் கிழக்குக் கையினை புலிகள் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருவதை அவர் ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், இன்று மாலை முகமாலைக்கு தெற்கே கடும் சண்டை உக்கிரமடைவதாக மிருசுவில் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகத்தின் ஊடக வெளியீட்டில், ஆனையிறவுத் தளம் வரையிலான மூன்று கிலோமீற்றர் தொலைவுவரை இன்று மாலை 6 மணியளவில் சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் உந்துகணைச் சூட்டில் இரண்டு வகை-63 கவச ஆளணி காவிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன என்றும் சண்டையின் போது 190 வீரர்கள் காயமடைந்தனர் என்றும் அது கூறியது.

10 ஏப்ரல் 2000 அன்று 20:15 மணி நேரத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த பாதுகாப்பு அமைச்சின் ஊடக வெளியீட்டின் முழு உரை பின்வருமாறு -

"யாழ் குடாநாடு

முகமாலைக்கும் பளைக்கும் இடைப்பட்ட முதன்மை வழங்கல் பாதையில் 03 கிலோமீற்றர் தொலைவை மீளக் கைப்பற்ற பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். படையினர் இன்று காலை 07:30 மணிக்கு (அப்படியே) நடவடிக்கையை ஆரம்பித்து 18:00 மணித்தியாலத்திற்குள் நிறைவு செய்தனர். தரைப்படையினருக்கு வான்படை மற்றும் சேணேவியால் சூட்டாதரவு வழங்கப்பட்டதோடு கடற்படையினர் கரையோரப் போர்முனையை உள்ளடக்கியிருந்தனர். தவிபு இயந்திரச் சுடுகலன்கள், உந்துகணை செலுத்திகள், கணையெக்கி மற்றும் சேணேவிகளைப் பயன்படுத்தி கடும் எதிர்ப்பை வழங்கினர். படையினரால் எதிர்ப்பை மீறமுடிந்து முதன்மை வழங்கல் பாதையையும் கைப்பற்ற முடிந்தது.

"11 பாதுகாப்புப்படை ஆளணியினர் கொல்லப்பட்டதோடு 47 பேர் காயமடைந்தனர். மேலும் 143 பாதுகாப்புப்படை வீரர்கள் சிறு காயங்களுக்குள்ளாகி (அப்படியே) பலாலி படைய மருத்துவமனையில் பண்டுவம் பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகளின் உயிர்ச்சேதங்கள் தெரியவில்லை, ஆனால் மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

"முட்டலின் போது வகை-63 - 2 கவசவூர்தி (அப்படியே) பயங்கரவாத உந்துகணைச் சூடு காரணமாக. புலிகளுக்குச் (அப்படியே) சொந்தமான (அப்படியே) 122 மிமீ சேணேவிச் சுடுகலன் மற்றும் ஒரு பல்குழல் உந்துகணை செலுத்தியின் இருப்பிடங்காணப்பட்டு சேணேவி மற்றும் வான்படையால் மிண்டப்பட்டது"

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 13ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஏ9 முதன்மை வழங்கல் பாதை ஊடறுக்கப்பட்டதாகவே உள்ளது - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4947
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:27
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சிக் கோட்டத்தின் ஏ9 நெடுஞ்சாலையை சிறிலங்கா தரைப்படை மீளக் கைப்பற்றுவதற்கு உறுதியான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வீதியின் முதன்மைப் பகுதியை விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன என்று புலிகளின் குரல் வானொலி தனது இரவு ஒலிபரப்பில் புதன்கிழமை கூறியது. கடந்த இரண்டு நாட்களில் நடந்த கடும் சண்டையில் சிறிலங்கா தரைப்படையின் நான்கு தகரிகள் அழிக்கப்பட்டதோடு ஐந்து சேதமடைந்ததாக வானொலி கூறியது.

பல தகரிகள், கவசவூர்திகள் மற்றும் வான் தாக்குதலின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் ஆனையிறவுத் தளம் வரை விடுதலைப் புலிகளால் வைத்திருக்கப்பட்டுள்ள முதன்மை வழங்கல் பாதையின் துண்டை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான ஆறாவது முயற்சியை திங்கட்கிழமை காலை மேற்கொண்டதாக வானொலி தெரிவித்துள்ளது.

பல முனைகளில் முன்னகர்ந்த சிறிலங்கா தரைப்படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பிரிவுகள் முரட்டுத்தனமாக சண்டையிட்டு வலுத்த சேதங்களை ஏற்படுத்தியதாக வானொலி கூறியது.

 

(தேவையற்ற செய்திகள் தவிர்க்கப்பட்டுள்ளன)

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 16ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

முகமாலையில் துப்பாக்கிச் சண்டை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4956
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 12:47
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

முகமாலையில் நேற்றிரவு 10 மணியளவில் சிறிலங்கா தரைப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எழுந்த சூட்டுச் சண்டையானது இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்ததாக யாழ்ப்பாணத்திற்கு தென்கிழக்கே கேந்திர ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எழுதுமட்டுவாழ் என்ற ஊரில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் இதனை மறுத்துள்ளதுடன், ஏப்ரல் 10ஆம் திகதிக்கு பின்னர் ஏ9 வீதியில் எந்தவிதமான முட்டல்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கடற்கரையிலுள்ள செம்பியன்பற்று வட்டக்கூறு மீது இன்று பகல் இடைவேளையில் சிறிலங்கா வான்படை வானூர்திகள் வான்குண்டுகளை வீசியதாகவும் எழுதுமட்டுவாழ் மக்கள் தெரிவித்தனர்.

செம்பியன்பற்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ளது.

மார்ச் 28 அன்று முகமாலை மற்றும் முகமாலைக்கும் பளைக்கும் இடையிலான ஏ9 நெடுஞ்சாலையின் நான்கு கிலோமீட்டர் தொலைவின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்தனர். ஏப்ரல் 10 ஆம் திகதி தமது படையினர் வீதியை மீளக் கைப்பற்றியதாக சிறிலங்கா தரைப்படை கூறியது. எனினும், புலிகளின் குரல் வானொலி, தென்மராட்சிக் கோட்டத்தில் ஏ9 நெடுஞ்சாலையின் முதமைத் துண்டை சிறிலங்கா தரைப்படை மீண்டும் கைப்பற்றுவதற்கு உறுதியான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறியது 

ஆனையிறவு தானைவைப்பிற்கான மாற்றுப் பாதையிலேயே சிறிலங்கா தரைப்படை தொடர்ந்து தங்கியுள்ளது. தானைவைப்பின் முதன்மை வழங்கல் பாதையாகத் தொழிற்படுமளவிற்கு ஏ9 இன்னும் ஓம்பலாக இல்லை என்பதை தரைப்படை ஒப்புக்கொண்டது.

ஏ9 நெடுஞ்சாலையானது புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஏ9 க்கு கிழக்கேயுள்ள பின்னிலத்திலுள்ள புலிகளின் சேணேவி, கணையெக்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்தி அலகுகளின் வீச்செல்லைக்குள் உள்ளதென்று சிறிலங்கா தரைப்படை தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

யாழ்ப்பாணத்தில் புலிகள் புதிய வலிதாக்குதலை ஏவல்செய்துள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4961
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 11:06
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

இன்று பிற்பகல் முதல் பளைக்கும் இயக்கச்சிக்கும் இடைப்பட்ட படையக் கட்டுப்பாட்டுப் பரப்புக்குள் விடுதலைப் புலிகள் புதிய பாரிய வலிதாக்குதல் மடுத்தலை ஆரம்பித்துள்ளதாக விடுதலைப் புலிகள் இன்று மாலை வெளியிட்ட கூற்றுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சதுர மைல் ஆட்புலத்தைக் கைப்பற்றிய பின்னர் அதன் படைகள் அப்பரப்பில் ஆழமாக முன்னகர்ந்து வருவதாக அந்த அமைப்பு கூறியது.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை பின்வருமாறு:

"யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சி வட்டக்கூறில் இன்று பிற்பகல் வெடித்து கடுஞ்சினத்துடன் இன்னும் தொடர்கிற கடுஞ் சண்டையில் சிறிலங்கா தரைப்படை பல சதுர மைல் ஆட்புலத்தை விடுதலைப் புலிகளிடம் இழந்ததோடு பலத்த உயிர்ச்சேதங்களைச் சந்தித்ததுள்ளது. பளை மற்றும் இயக்கச்சிக்கு இடைப்பட்ட மாசார் மற்றும் சோரன்பற்று ஆட்புலங்களின் பரந்த நிலப்பரப்புகள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

"இன்று பிற்பகல் 1 மணியளவில் பளை மற்றும் இயக்கச்சிக்கு இடையிலான படையக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் பாரிய வலிதாக்குதல் மடுத்தலை ஏவல்செய்துள்ளன. மாசார் மற்றும் சோரன்பற்றுப் பரப்புகளில் சிறிலங்காப் படையினரின் பல கிலோமீற்றர் முன்னரங்க வலுவெதிர்ப்பு வேலிகளைத் துடைத்தெறிந்த புலிப்படைகள் அப்பகுதிக்குள் ஆழமாக முன்னகர்ந்து வருகின்றன.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிதாக்குதல் நடவடிக்கை வெற்றியடைந்துள்ளதாகவும், அப்பரப்பில் இன்னும் கனதியான சண்டை தொடர்வதாகவும் புலிகளின் களக் கட்டளையாளர்களின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. ஒரு உன்னிப்பாக திட்டமிடப்பட்ட தாக்குதலில், புலிகள் அதன் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளை மருதங்கேணி, தாளையடி மற்றும் முகாவில் ஆகிய திடமாக்கப்பட்ட இடங்களிலிருந்து தெற்கு பளைக்கு நீர்வழி வழியாக நகர்த்தியுள்ளனர்.

"களத்தில் இருந்து வரும் அண்மைய தகவல்களின்படி, பெருமளவிலான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான படைக்கலnகள் மற்றும் கணைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வட்டக்கூறின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பிடமான புதுக்காட்டுச் சந்தி, பளை மற்றும் இயக்கச்சிக்கு இடையிலான ஏ9 நெடுஞ்சாலைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து புலிகளின் வசமானது. அப்பரப்பில் இன்னும் கனமான சண்டை உக்கிரமடைந்து வருகிறது."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

இரண்டாவது முதன்மை வழங்கல் பாதை உடைப்பு இயக்கச்சியை தனிமைப்படுத்துகிறது - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4964
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 12:37
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சி வட்டக்கூறில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய தமது அண்மைய வலிதாக்குதலில் பல சிறிலங்கா தரைப்படை முகாம்களை பரம்பியதாகவும், இயக்கச்சியிலுள்ள சிறிலங்கா தரைப்படையின் கூட்டுப்படைத்தளத்தை ஏ9 நெடுஞ்சாலையில் 6 கிமீ கைப்பற்றியதால் முற்றாகத் துண்டித்ததாகவும் விடுதலைப்புலிகள் புதன்கிழமை தெரிவித்தனர். சிறிலங்கா தரைப்படையினரின் ஒரு பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு "நெருக்கடியில்" இருப்பதாக விடுதலைப் புலிகள் தம் இலண்டன் அலுவலகங்களில் இருந்து ஒரு கூற்றுரையில் தெரிவித்தனர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை பின்வருமாறு:

"யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று பளை மற்றும் இயக்கச்சிக்கு இடைப்பட்ட மாசார் மற்றும் சோரன்பற்றுப் பரப்புகளிலுள்ள சிறீலங்காப் படையினரின் பல முகாம்கள் மற்றும் படைத்தளங்களைப் பரம்பி, ஆட்புலங்களின் பரந்த நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டை எடுத்ததன் மூலம் விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் தற்போதைய வலிதாக்குதல் படையெழுச்சியில் பெரும் படைய வெற்றியைப் பெற்றன. பளை மற்றும் இயக்கச்சிக்கு இடையிலான ஏ9 நெடுஞ்சாலையின் பல கிலோமீற்றர் தொலைவு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இயக்கச்சி படைத்தளம் புலிகளின் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

"24 மணி நேரத்திற்கும் மேலாக கடும் சண்டை உக்கிரமடைந்த போது, பல அதிரடிப்படைப் பிரிவுகளைக் கொண்ட விடுதலைப் புலிகளின் அஞ்சத்தக்கப் படை கனவகைச் சேணேவி மற்றும் கணையெக்கிகளின் சூட்டாதரவுடன் நேற்று பிற்பகல் பாரிய வலிதாக்குதல் மடுத்தலை ஆரம்பித்து மாசார் மற்றும் சோரன்பற்றுப் புலங்களை முழுமையாகக் கைப்பற்றி இன்று மாலை வரை தங்கள் முன்னகர்வைத் தொடர்ந்தனர். இயக்கச்சி-ஆனையிறவு பரப்புக் கூட்டுப்படைத்தளத்தின் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிய பல நன்கு திண்ணிறுப்பான படைத்தளங்கள் நேற்றிரவு மற்றும் இன்று நடந்த முனைப்பான சண்டையின் போது இடிந்து விழுந்தன.

"சண்டைக்களத்திலிருந்து வரும் அறிக்கைகள், சிறிலங்காப் படையினர் பல இறந்த வீரர்களையும், ஏராளமான நவீன படைக்கலன்களையும் விட்டுவிட்டு, முற்றிலும் சீர்குலைந்து தப்பியோடியதை உறுதிப்படுத்தின. புலிப் போராளிகள் பல தகரிகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை அழித்துள்ளனர். பளைக்கும் இயக்கச்சிக்கும் இடையிலான ஏ9 நெடுஞ்சாலையின் ஆறு கிலோமீற்றர் தொலைவு எமது போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

"அதன் அருகாமையில் பல நன்கு அரணத்தப்பட்ட படைத்தளங்கள் வீழ்ச்சியுற்றதாலும், இரண்டு கேந்திர இடங்களில் ஏ9 நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டதாலும், இயக்கச்சி-ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. ஆட்புல வகையில் தனிமைப்படுத்தப்பட்டு, வழங்கல் பாதைகள் துண்டிக்கப்பட்டு, அனைத்துப் பக்கங்களிலும் புலிகளின் வலுவாய்ந்த அடிபாட்டு உருவாக்கங்களால் சூழப்பட்ட நிலையில், கூட்டுப்படைத்தளத்தினுளுள்ள சிறிலங்காப் படைகளின் ஒரு படைப்பிரிவு கடுமையான நெருக்கடியில் உள்ளது."

 

 


 

 

இயக்கச்சியின் வீழ்ச்சி "நிகழப்போகிறது" - விடுதலைப் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4966
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:50
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

இயக்கச்சியிலுள்ள சிறிலங்காப் படைத்தளம், விடுதலைப் புலிகளின் பன்முனைத் தாக்குதலால் பல புறப்பரப்பு முகாம்கள் பரம்பப்பட்டதைத் தொடர்ந்து, "சரிவின் விளிம்பிலுள்ளது" என்று விடுதலைப் புலிகள் தம் இலண்டன் அலுவலகத்திலிருந்து வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

கூற்றுரையின் முழு உரை பின்வருமாறு:

"இயக்கச்சி கூட்டுப்படைத்தளம் இடிந்து விழுகிறது: சிறிலங்கா தரைப்படை கடும் பின்னடைவைச் சந்திக்கிறது.

"ஆனையிறவு முகாமைக் காக்கும் கடைசிக் கொத்தளமான இயக்கச்சிப் படைத்தளமானது, விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் மூட்டிய பாரிய பல்முனைத் தாக்குதல்களால் இந்த மாபெரும் கூட்டுப்படைத்தளத்தின் புறப்பரப்பில்லுள்ள பல சிறு-முகாம்கள் மற்றும் வலுவெதிர்ப்பு நிலைகள் பரம்பப்பட்டதால், வீழ்ச்சியின் விளிம்பிலுள்ளது. 

"நாள் முழுவதும் இயக்கச்சிச் சமர் முரட்டுத்தனமாகத் தொடர்ந்ததில் பெருமளவிலான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் படைநிலைகளிலிருந்து கனவகை சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைகளால் தாக்கப்பட்ட பாரிய வெடிமருந்துக் கிடங்குகள் வெடித்ததால், கூட்டுப்படைதளத்திற்கு மேலே கருமேகங்கள் வானத்தைச் சூழ்ந்திருந்தன.

"விடுதலைப் புலிகளின் படைகள் நேற்று மாசார் மற்றும் சோரன்பற்று பரப்புகளைப் பரம்பி தொடர்வண்டிப் பாதைகள் மற்றும் சரளைப் பாதைகள் உட்பட குடாநாட்டுடனான முக்கிய வழங்கல் இணைப்புகளை துண்டித்தபோது இயக்கச்சி கூட்டுப்படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டது. சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைகளால் கூட்டுப்படைத்தளத்தைப் பல மணிநேரம் தாக்கிய பின்னர், இன்று மாலை புலிகளின் அதிரடிப்படைப் பிரிவுகள் புறப்பரப்பு முகாம்களுக்குள் புயலெனப்புகுந்தன. அப்பரப்பில் கனமான சண்டை இன்னும் உக்கிரமடைந்து வருகிறது.

"தென்மராட்சி வட்டக்கூறில் இம்மாதம் 18ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமான சண்டை இன்று மூன்றாவது நாளாகவும் நீடித்தது. ஆனையிறவுக்கும் பளைக்கும் இடைப்பட்ட ஆட்புலங்களின் பரந்த நிலப்பரப்புகள் ஏற்கனவே தமிழ்ப் புலிகளிடம் வீழ்ந்துவிட்டது. நிகழப்போவதாகத் தெரியும் இயக்கச்சிக் கூட்டுப்படைத்தளத்தின் வீழ்ச்சியானது யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலைத் திறந்து ஆனையிறவின் தலைவிதியை அடைக்கும்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 22ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவு பரம்பப்பட்டது - தவிபு

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4968
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:22
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலுள்ள சிறிலங்கா தரைப்படைக் கூட்டுப்படைத்தளம் இரண்டு நாட்கள் கடும் சண்டையைத் தொடர்ந்து சனிக்கிழமை விடுதலைப் புலிகளால் பரம்பப்பட்டதாக விடுதலைப் புலிகள் தம் இலண்டன் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட கூற்றுரையில் தெரிவித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா தரைப்படையினர் முரட்டுத்தனமான சமரில் கொல்லப்பட்டதோடு 54 வது பிரிவின் எஞ்சிய படையினர் முற்றிலும் சீர்குலைந்து தப்பியோடியதாக அந்த கூற்றுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலுள்ள இந்த முக்கியமான தளம் வீழ்ச்சியடைவது, யாழ்ப்பாணத்தை விடுவிப்பதற்கான அவர்களின் கேந்திர இலக்கைப் பெறுவதற்கு விடுதலைப்புலிகளுக்கு உதவும்" என்று அந்த அமைப்புக் கூறியது.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை பிவருமாறு:

"யாழ்பாண நுழைவாயிலில் சிறிலங்கா தரைப்படையின் மாபெரும் கூட்டுப்படைத்தளத்தை உருவாக்கும் இயக்கச்சி-ஆனையிறவுத் தளங்கள் 48 மணிநேர கடுமையான அரத்தக்களரியான சண்டையைத் தொடர்ந்து இன்று பிற்பகல் விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்களிடம் வீழ்ந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு எஞ்சியவர்கள் முற்றிலும் சீர்குலைந்து தப்பியோடினர்.

"விடுதலைப் புலிகளின் சிறப்புப்படைகள் மற்றும் அதிரடிப்படைப் பிரிவுகள் அதிகாலையில் இயக்கச்சி படைத்தளத்திற்குள் பலமுனைத் தாக்குதலில் புயலெனப்புகுந்த பல மணிநேர உக்கிரமான சண்டையின் பின்னர் நன்கு அரணப்படுத்தப்பட்ட முகாமைப் பரம்பினர். நடுத்தளத்திற்குள் ஊடுருவிய புலிகளின் அதிரடிப்படைகள் பல சேணேவிகள், தகரிகள், கவசவூர்திகள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகளை அழித்துள்ளனர்.

"கடந்த இரண்டு நாட்களாக தளவாடங்கள் மற்றும் வலுவூட்டல்கள் இன்றி கையறுநிலையில் தளத்தை வைத்திருந்த சிறிலங்காப் படையினர் புலிகளின் தாக்குதலின் சீற்றத்தில் கறங்கி தோற்கடிப்பட்டு மிகுந்த குழப்பத்துடன் தப்பியோடினர்.

"இயக்கச்சியின் வீழ்ச்சியுடனும் அதன் வலுவெதிர்ப்புப் படைகளின் கட்டளைக் கட்டமைப்பின் இடிந்துவீழ்தலுடனும், விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகள் வேகமாக நகர்ந்து வெவ்வேறு திசைகளிலிருந்து ஆனையிறவுக்குள் நுழைந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமுனைத் தாக்குதலைத் தாங்க முடியாமல் சிறிலங்காப் படையினர் பெருங்குழப்பத்தில் கட்டுக்கடங்காமல் ஓடினர்.

"விடுதலைப் புலிகளின் கனமான சூட்டுக்கு நடுவணில், 54 ஆவது படைப்பிரிவின் பெரும்பாலான படையினர் கிளாலிக் களப்பு வழியாக வலுத்த உயிர்ச்சேதங்களுக்குள்ளாகி  தப்பிச் சென்றனர்.

"இயக்கச்சி - ஆனையிறவு வட்டக்கூறின் முழுக் கட்டுப்பாட்டில் தற்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். மேலும் பெருமளவிலான கனவகை படைக்கலன்கள், கணைகள் மற்றும் படைய ஊர்திகளைக் குவித்துள்ளனர்.

"ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தைக் கைப்பற்றியமை, வடக்கில் மிகப் பெரியதும் நன்கு திண்ணிறுப்புமான படைத்தளம், யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான தற்போதைய படையெழுகையில் புலிகளுக்கு ஒரு பெரிய படைய வெற்றியைக் குறிக்கிறது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் உள்ள இந்த முக்கியமான தளத்தின் வீழ்ச்சி, யாழ்ப்பாணத்தை விடுவிக்கும் தனது கேந்திர இலக்கைப் பெறுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு உதவும்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 23ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவின் மேலே புலிக்கொடி ஏற்றப்பட்டது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4969
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:43
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

விடுதலைப் புலிகளின் மூத்த படைக் கட்டளையாளர்களில் ஒருவரான கேணல் பானு இன்று காலை 9.30 மணியளவில் ஆனையிறவில் புலிக் கொடியை ஏற்றியதாக இலண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தமிழ்நெட்டிற்குத் தெரிவித்தன.

ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றிய தவிபு-இன் சேணேவிப் பிரிவின் கட்டளையாளர் கேணல் பானு என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

"விடுதலைப் புலிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புலத்தைக் கைப்பற்றியதன் அடையாளமாக நடைபெற்ற கொடியேற்று விழாவில் புலிப் போராளிகளுடன் பெருமளவிலான பொதுமக்களும் பங்குபற்றினர்." என்று புலிகளின் அதிகாரி ஒருவர் தமிழ்நெட்டிற்கு தெரிவித்தார்.

இதேவேளை, இயக்கச்சி - ஆனையிறவின் பரந்த பரப்புகளை துடைக்கும் பணியில் விடுதலைப் புலிகள் பொதுமக்களின் உதவியுடன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2003ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 23ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022

 

ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத படைத்துறைப் படையாகப் புலிகளை நிறுவியுள்ளது.

Elephant-Pass-LTTE-flag.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் தரைப்படையணி உருவாக்கங்களும் வீறல் அதிரடிப்படைப் பிரிவுகளும் ஏப்ரல் 21 அன்று யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலில் அகலக்கால்பரப்பி பரந்து விரிந்திருந்த சிறிலங்கா கூட்டுப்படைத்தளத்தைப் பரம்பின.

eps_map.jpg

புலிகளின் படைத்துறை உருவாக்கங்களை எதிர்கொள்ளும் அதன் தென்முகப்பில், ஆனையிறவுக் களப்பு, அதன் உவர்க்கம் மற்றும் கரையோர நிலப்பகுதிகளில் மூன்று முக்கிய வலுவெதிர்ப்புக் கோடுகளால் தானைவைப்பு வலுவாக அரணப்படுத்தப்பட்டது. இவை மைல்களுக்கு கற்காரை மற்றும் எஃகுக் கட்டமைப்புகள், கண்ணிவயல்கள், முட்கம்பி அடுக்குகள், கண்ணிவயல்கள் மற்றும் கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் ஆகியவற்றால் வலுவூட்டப்பட்டன.

சிறிலங்கா தரைப்படையானது பூநகரி (நவம்பர் 93), முல்லைத்தீவு (ஜூலை 96), கிளிநொச்சி (செப்டம்பர் 98) ஆகிய தானைவைப்புகளைப் புலிகள் பரம்புவதற்காகக் கறந்த இவற்றின் வலுவெதிர்ப்பிலுள்ள ஓட்டைகள் மற்றும் வலுவீனங்களை கவனமாக கற்றறிந்தது; மற்றும் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைத்துறையின் ஆலோசனை உள்ளீடுகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கான கேந்திர நுழைவாயிலை வைத்திருப்பதற்கு ஒரு அஞ்சத்தக்க அரண முறைமையைத் திட்டமிட்டுக் கட்டமைத்தன.

LTTE leader with his senior commanders.jpg

'ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கைக்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் புலிகளின் தலைமையும் கட்டளையாளர்களும்.'

இந்த வலுவெதிர்ப்புகள் ஆனையிறவுக்கு நேராக வன்னி பெருநிலப்பரப்பில் ஒரு அரண் போல கட்டமைக்கப்பட்ட பரந்தனிலுள்ள ஒரு பெரிய சிறிலங்கா படைமுகாமால் காக்கப்பட்டன.

வடக்கில் அதன் பாரிய படைமுகாம்களின் வலுவெதிர்ப்பை ஒழுங்கமைப்பதில் "நிலையான அணுகுமுறையை" எடுத்துக்கொண்டதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் சிறிலங்கா தரைப்படையானது நீண்டகாலமாகத் திறனாயப்பட்டது.

அவர்கள் சிறிலங்கா படையத் தலைமையை வல்லோச்சான சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுமாறும், இளக்கமான, பெயர்ச்சியான வலுவெதிர்ப்புக் கோடுகளுக்கு முன்னால் ஒரு பெரிய பரப்பில் பதிதாக்கல் வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

ஆனையிறவின் அரணங்கள் மீளொழுங்குபடுத்தப்பட்டு வலுவூட்டப்பட்ட போது அவர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படவில்லை.

ஆனையிறவின் வலுவெதிர்ப்பென்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகளின் எவ்வுருவத்திலுமான 'அதிர்ச்சி மற்றும் மதிப்பச்சம்' என்ற கேந்திரத்திற்குத் தடுப்பாற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.

சிறிலங்காவின் நவீன படைத்துறை வரலாற்றில் ஆனையிறவின் வலுவெதிர்ப்பின் ஆழம் முன்னிகழ்வற்றதாகும்.

அதன் பிற்பகுதியான யாழ் குடாநாடானது சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த போதிலும் அங்கு விடுதலைப்புலிகளின் தவிர்க்கவியலா கமுக்க நடவடிக்கைகளானவை படைத்துறை வகையாகப் புறக்கணிக்க முடியாததாகக் கருதப்பட்டது. 51, 52 மற்றும் 53 ஆகிய மூன்று படைப்பிரிவுகள், புலிகளால் அச்சுறுத்தப்பட்ட குடாநாட்டின் எந்தப் பகுதியிலும் படைகளைக் ஒருங்குவிக்கும் வகையில் சிறப்பாக அமர்த்தப்பட்டிருந்தன.

தானைவைப்பானது குடாநாட்டின் முக்கிய நகரத்திலிருந்து ஒரு கல்வீதிப்பாவாலான முதன்மை வழங்கல் பாதையையும் யாழ்ப்பாணக் களப்பின் தென்கிழக்குக் கடற்கரையில் ஒரு நிச்சயமற்ற முதன்மை வழங்கல் பாதையையும் கொண்டதால் 'முற்றிலும்' ஓம்பலானதாகக் கருதப்பட்டது.

பரந்தனின் நன்னீர் கிணறுகளிலிருந்து ஆனையிறவிற்கான நீர் வழங்கலிற்கான மாற்றீடு பின்புறத்தில், இயக்கச்சியில், தளத்திற்கு மைல்களிற்குப் பின்னால், பாதுகாப்பாகயிருந்தது.

இவற்றைத் தவிர, அதை அழிப்பதற்காக வலுவெதிர்ப்பு வேலிகளுக்குப் பின்னால் ஊடுருவும் புலிகளின் முயற்சியை முறியடிக்க, பலாலியில் ஒரு டசின் சேணேவிச் சுடுகலன்கள் அடங்கிய ஒரு சூட்டுத்தளம், ஆனையிறவு தானைவைப்பிற்குப் பிற்பகுதியில் ஒப்பீட்டளவில் ‘ஆழமாக’, அமைக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், தானைவைப்பின் வலுவெதிர்ப்பிற்குக் கொடுக்கப்பட்ட 'ஆழத்தின்' வலுவான கூறு, கட்டைக்காடு-வெற்றிலைக்கேணி கடற்கரையிலுள்ள சிறீலங்கா தரைப்படை, கடற்படைத் தளம் ஆகும். இது நிலம் மற்றும் வானின் தொடர்பு துண்டிக்கப்படும் போது, ஒடுவில் முயற்சியான வழங்கல் பாதையாக தொழிற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எனவே, சிறிலங்காப் படைத்துறைத் தலைமையானது, அவர்களின் மேற்கத்திய பாடநூலின் 'வலுவெதிர்ப்பு ஆழம்' பற்றிய அறிவுக்கு இணங்க, புலிகள் ஆனையிறவின் 'வலுவெதிர்ப்பின் ஆழத்திற்கு' எதிராக, பாரிய கடல் கடப்புகள் மற்றும் படைத்துறை உருவாக்கங்களை போதுமான வேகத்துடன் நகர்த்துதல் என்பவற்றை உள்ளடக்கிய தடூகத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று மிகவும் சரியாகவே கருதினர். 

சிறிலங்கா படைய உசாவல் நீதிமன்றங்களின் அறிக்கைகள் இருந்தபோதிலும், சிறிலங்கா தரைப்படை அதிகாரப் படிநிலை மற்றும் அதன் பிரித்தானிய/அமெரிக்க 'வலுவெதிர்ப்பு ஆலோசகர்கள்', முன்னோக்கிய படைநிலைகள் மீது தீவிரமான பல்லங்களை ஏவுவதன் மூலமும், முன்னோக்கிய தாக்குதல்களில் தற்கொலைப் படையினரின் அலைகளை வீசுவதால் ஊடறுத்து கட்டளை மற்றும் தகவல் தொடர்பு மையங்களை ஒரேயடியில் வீழ்த்துவதன் மூலமும், கடந்த காலத்தில், விடுதலைப்புலிகள் சிறிலங்கா தரைப்படை முகாம்களில் பேரளவிலான வெற்றியை பெற்றனர் என்ற பொதுவான பார்வையைக் கொள்ள முனைந்தனர்.

கொழும்பிலும் வெளிநாடுகளிலுமுள்ள மேற்கத்திய படைத்துறை மற்றும் புலனாய்வு ஆளணியினருடன் நெருக்கமாகப் பணியாற்றும் அல்லது ஆலோசனை செய்யும் சிங்கள வலுவெதிர்ப்பு ஆய்வாளர்கள் மற்றும் செய்தியாளர்களால் இந்தக் கருத்து முக்கியமாக வளர்த்தெடுக்கப்பட்டது.

சிறிலங்கா தரைப்படை மற்றும் அதன் அமெரிக்க மற்றும் பிரித்தானிய நண்பர்கள், ஆனையிறவு போன்ற பெரிய தானைவைப்பை கடுமையாக அச்சுறுத்துவதற்குத் தேவையான அளவிலான தடூகப் போர்முறைக் கேந்திரத்தை ஒருங்கிணைக்கும் திறனை தவிபு பெற்றிருக்கும் என்று வெளிப்படையாக எதிர்பார்த்திருக்கவில்லை.

20ஆம் நூற்றாண்டில், எந்தவொரு தேச எதிர்ப்பு ஆய்தக் குழுவும் அவ்வாறு செய்து வெற்றிபெறவில்லை - வியட் கொங் கூட.

('தியம் பியன் பூ'க்கான சமரானது அடிப்படையில் 200 சேணேவித் துண்டுகள் மற்றும் 20,000 வழக்கமான வழங்கல்துறை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆதரவுடன் 15,000 க்கும் மேற்பட்ட படையினரால் முற்றுகையிடப்பட்டதோடு வியட்நாமியருக்கு தனிப்பட்ட முறையில் சாதகமான நிலப்பரப்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது ஆகும்.)

1997ஆம் ஆண்டுமுதல் போர் பற்றிய மெய்யுண்மைகளின் அடிப்படையில் அவர்களின் பார்வை ஏரணமானதாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

மே 1997 முதல் நவம்பர் 1999 வரை சிறீலங்கா படைத்துறையின் 'ஜெய சிக்குறுய் நடவடிக்கை'க்கு எதிரான அவர்களின் வலுவெதிர்ப்புச் சமர்களில் புலிகள் வன்னியிலுள்ள முக்கிய மக்கள்தொகை மையங்களையும் (புளியங்குளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், மாங்குளம்), 3000க்கும் மேற்பட்ட படையினரையும் (காயமடைந்தவர்கள் மற்றும் வீரச்சாவடைந்தவர்கள்), மதிப்புமிக்க படையப் பொருட்களையும் இழந்தனர்.

SLA Soldiers in Jeyasikurui military operation.jpg

மென்மேலும், விடுதலைப் புலிகள் 1995-96 இல், தீவின் வடகிழக்கில் இயக்கத்தின் மிகப்பெரிய வருவாய்த் தளமான யாழ்ப்பாணத்தையும் இழந்தனர்.

எனவே, கடுமையாக வலுவெதிர்க்கப்பட்ட தெற்கு யாழ்ப்பாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான சிக்கலான தடூகப் போரைத் தொடங்குவதற்கும், பொருண்மத்தின் அடிப்படையில் நிலைநிறுத்துவதற்கும் விடுதலைப்புலிகள் திறனற்றவர்கள் என்ற முடிவுக்கு சிறிலங்கா தரைப்படை மிகவும் ஏரணமாக வந்தது.

பின்னோக்கிப் பார்த்தால், ஆனையிறவுத் தானைவைப்பின் 'அசைக்க முடியாத பாடநூல்' மீதான சிறிலங்கா தரைப்படையின் நம்பிக்கையானது, அதைப் பார்வையிட்ட பிரித்தானியா மற்றும் அமெரிக்க படைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசதந்திரிகளின் பாராட்டுகளால் சிறியளவில் மீளுறுதிப்படுத்தப்பட்டதோடு, தெற்காசியாவின் நவீன படைத்துறை வரலாற்றில் மோசமான தோல்விகளில் ஒன்றுக்கு பங்களித்தது என்று ஒருவர் திறவினையாகக் கூறலாம். 

இது 1999 திசம்பரில் கட்டைக்காடு-வெற்றிலைக்கேணியில் உள்ள சிறிலங்கா தரைப்படை-கடற்படைக் கூட்டுத்தளத்தைப் புலிகள் கறங்கி நொறுக்கியபோது கல்மேல் எழுதப்பட்ட எழுத்துப் போலானது.

ஆனையிறவுத் தானைவைப்பின் முக்கிய உவர்க்கத்தலை இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்ந்து, சிறிலங்கா தரைப்படையானது, அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட அதிசிறப்பு 53 வது படைப்பிரிவினரைக் கொண்டு, கட்டைக்காட்டிற்கு வடக்கேயுள்ள தாளையடி முகாமை விரைவாக வலுவூட்டியதோடு வத்திராயன் பெட்டியையும் கட்டியது.

புலிகள் முன்னோக்கிய தாக்குதல்களுக்கு மட்டுமே திறன் கொண்டவர்கள், ஆனால் ஈரூடகத் தடூகத்திலில்லை என்ற கற்பிதத்தின் அடிப்படையிலேயே இந்த நகர்வு இருந்தது.

(வத்திராயன் பெட்டியின் கருத்தாக்கம், தாளையடியிலிருந்து ஏ9 வீதியில் புதுக்காட்டுச் சந்தி வரையிலான கனமாக அரணப்படுத்தப்பட்ட செவ்வகக் கொத்தளம், இந்தத் தற்கோளின் அடிப்படையிலேயே அமைந்தது)

சிறிலங்கா மற்றும் செந்தரப்படுத்தப்பட்ட மேற்கத்திய படைய ஞானத்தின்படி, எந்தவொரு விடுதலைப்புலிகளின் ஊடுருவல் குழுவும் தப்பிப்பிழைப்பதும் ஆனையிறவின் வலுவெதிர்ப்பிற்கு முக்கியமான பிற்பகுதியிலுள்ள முகாமையான சிறிலங்கா தரைப்படையின் படைநிலைகளுக்கு ஒரு சிறும நிலைத்தன்மையற்ற அச்சுறுத்தலைக் கூடப் பொதிப்பதும் சாத்தியமற்றது என்று கருதப்பட்டது.

தொடர்ந்து வந்த மூன்று வாரங்களில், புலிகள், வான்வழி ஆதரவவில்லாமல் பகையின் நன்கு வலுவூட்டப்பட்ட பிற்பகுதியில் நிலைப்படுத்தப்பட்ட சமரில் சண்டையிட்டு வெற்றிபெற முடியும் என்பதை நவீன படைத்துறை ஞானத்திற்கு மெய்ப்பித்துக் காட்டியதன் மூலம் இன்னும் தெரிவித்து பல கற்பிதங்களை சிதறடித்தனர்.

kudaarapppu4.png

26 மார்ச் 2000 அன்று, புலிகளின் மூத்த படையக் கட்டளையாளர் கேணல் பால்ராஜ், கடற்புலிகள் 1200 படையினரையும் அவர்களது படைய வழங்கல்களையும், உரகடலில் சிறிலங்கா கடற்படையின் ஒரு பெரிய கலத்தொகுதி மூலம் அமைக்கப்பட்ட கடற்றடுப்பூடாக தங்கள் வழிக்குச் சண்டையிட்டு, சிறிலங்கா தரைப்படையின் பிற்பகுதியிலுள்ள, இரும்பு போர்த்திய வத்திராயன் பெட்டிக்கு அப்பால், குடாரப்பு-மாமுனையில் தரையிறக்கிய போது, ஒரு அரசின் மரபுவழி தரைப்படையின் எந்த ஆழமான பிற்பகுதி வலுவெதிர்ப்பையும் கேந்திர வான்வலு கொண்ட ஒரு ஆயுதப்படையைத் தவிர வேறு யாராலும் கடுமையாக அச்சுறுத்த முடியாது என்ற கருத்தாக்கத்தைப் பொய்ப்பித்தார்.

எவ்வாறாயினும், 21 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட போர்களை நடத்துவதில் ஒரு முன்னுதாரண பெயர்ச்சியை இது சைகை செய்வதை சிலர் கவனித்துள்ளனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 24ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் புலிகள் பட்டியலிட்டுள்ளனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4970
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 2:38
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

இயக்கச்சி - ஆனையிறவில் உள்ள சிறிலங்காத் தரைப்படைத் தளத்திலிருந்து சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பற்றிய விரிப்புகளை விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்ட கூற்றுரையின்படி, கைப்பற்றப்பட்ட ஏந்தனங்களில் மூன்று 152 மி.மீ ண்ட தொலைவுச் சேணேவித் துண்டுகள் மற்றும் வெளிப்படுத்தப்படாத எண்ணிக்கையிலான தகரிகளும் அடங்கும். 

கூற்றுரையின் முழு உரை பின்வருமாறு:

“ஆனையிறவுச் சமரில் படைய வெற்றியுடன் பல பில்லியன் ரூபா பெறுமதியான பெரும் வரிசையிலான போர்த் தளவாடங்கள் விடுதலைப் புலிகளின் கைகளில் வீழ்ந்துள்ளன.

"மாபெரும் கூட்டுப்படைத்தளத்தை காவல்செய்த சிறிலங்கா தரைப்படையின் 54 வது படைப்பிரிவு, சேணேவித் துண்டுகள் உட்பட அனைத்து வகையான கனவகை ஆயுதங்களையும் அப்படியே விட்டுவிட்டு, தளத்திலிருந்து முற்றிலும் சீர்குலைந்து அவசரத்துடன் தப்பியோடிவிட்டனர்.

"உயர் தொழில்நுட்பத் தொலைத்தொடர்பு முறைமைகளுடன் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதன் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள் பல மடங்குகள் நிரப்பப்பட்டு அதன் சூட்டுவலுவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

"மூன்று நீண்ட தொலைவு 152 மிமீ சேணேவித் துண்டுகள் குறிப்பிடத்தக்க சூறையாடற் பொருட்களாகும். இரண்டு 122 மிமீ சேணேவித் துண்டுகள் மற்றும் பன்னிரண்டு 120 மிமீ கனவகை கணையெக்கிகள், ஒரு 25 மிமீ தெறுவேயம், பல .50 கலிபர் சுடுகலன்கள், நூற்றுக்கணக்கான உந்துகணைகள், ஆயிரக்கணக்கான தானியங்கித் துமுக்கிகள், மற்றும் சேணேவி மற்றும் கணையெக்கி எறிகணைகள் உட்பட்ட ஏராளமான கணைகள் புலிகளால் தமதாக்கப்பட்டன.

"தமிழ்ப்புலிகள் பல கவசவூர்திகள், தகரிகள், படையப் பாரவூர்திகள், இடிவாருவகம் (Bulldozer) மற்றும் உயர் தொழில்நுட்பத் தொலைத்தொடர்பு முறைமைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

"இது முன்னிகழ்ந்திராத பெருந்தொகை" என்று புலிகளின் களக் கட்டளையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

"இயக்கச்சி மற்றும் ஆனையிறவுச் சமரில் 35 புலிகள் கொல்லப்பட்டனர்."

 

 


 

 

சடலங்கள் ஒப்படைப்பு பற்றி செஞ்சிலுவைச் சங்கம் விவாதிக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4971
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:56
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 25
/12/2022

இயக்கச்சி-ஆனையிறவில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா தரைப் படையினரின் சடலங்களை ஒப்படைப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை அணுகியுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் தமிழ்நெட் திங்கட்கிழமை தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தை விடுதலைப் புலிகள் அணுகியதாக அவர் கூறினார்.

இந்தச் சிக்கல் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கமானது சிறிலங்கா தரைப்படையை அணுகியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

நடவடிக்கையில் கொல்லப்பட்ட வீரர்களின் சடலங்களை இடமாற்றம் செய்து ஒப்படைக்க செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்கா தரைப்படையின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இயக்கச்சி - ஆனையிறவில் உள்ள சிறிலங்கா கூட்டுப்படைத்தளத்தை புலிகள் கைப்பற்றியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 25ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

இயக்கச்சியின் இழப்பை சிறிலங்கா தரைப்படை ஒப்புக்கொள்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4972
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:17
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

கேந்திரமான ஆனையிறவுத் தளம் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளர் லெப். ஜெனரல்
சிறிலால் வீரசூரிய, ஏப்ரல் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் தானைவைப்பிலிருந்து இயக்கச்சிக்கு வடமேற்கே உள்ளவொரு பரப்பிற்கு தமது படையினர் வெளியேறியதாகவும் இது யாழ்ப்பாணத்தைப் ஓம்பிக்காவல்(safeguard) செய்வதற்காக செய்யப்பட்டது என தெரிவித்தார்.

ada.png

'கொழும்பில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளர் லெப். ஜெனரல் சிறிலால் வீரசூரிய பேசுகிறார்.'

மேஜர் ஜெனரல் லயோனல் பலகல்லே, பணியாளரின் படை முதல்வர், சிறிலங்கா தரைப்படைச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பாலித பெர்னாண்டோ மற்றும் யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்கா கடற்படை மற்றும் வான்படை ஒருங்கிணைப்பாளர்களும் கொழும்பு நகரத்திலுள்ள சிறிலங்கா தரைப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நுழைவுவாயில் தானைவைப்புப் பற்றி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு மறுமொழியளித்த மேஜர் ஜெனரல் பலகல்ல, யாழ்ப்பாணத்தை வைத்திருப்பதற்கு ஆனையிறவு முக்கியமானது என்றார். மேலும், அந்தத் தளத்தை தரைப்படை மீண்டும் கைப்பற்றும் என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளர் தனது பணியாளரின் படை முதல்வரின் கூற்றுக்கு கருத்து தெரிவிக்காமல் மற்றொரு விடயத்திற்குச் செல்ல தேர்வு செய்தார். படையக் காரணங்களுக்காகவே பின்வாங்கச் சொல்லப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

படையினருக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதாகவும், ஆயுத முறைமைகளை நவீனப்படுத்த வேண்டியுள்ளதாகவும் நாயகம் சிறிலால் வீரசூரிய தெரிவித்துள்ளார். ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை ஒன்றும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 21 வரை மற்றொன்று என்று ஆனையிறவுச் சமரை இரண்டு கட்டங்களாகப் பிரித்தார்.

சிறிலங்கா தரைப்படைக் கட்டளையாளரின் கூற்றுப்படி, முதல் கட்டத்தின் போது 1166 வீரர்கள் மற்றும் 66 அதிகாரிகள் காயமடைந்ததோடு 8 அதிகாரிகள் மற்றும் 148 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 22 அன்று, 8 அதிகாரிகள் மற்றும் 80 வீரர்கள் கொல்லப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அன்றைய நாள் 17 அதிகாரிகள் மற்றும் 438 படையினர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

afwq.png

'கொழும்பில் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி திங்கட்கிழமையன்று யாழ்ப்பாண குடாநாட்டுத் தரைப்படையின் 54 ஆவது படைப்பிரிவின் துணைக் கட்டளையாளர் பிரிகேடியர் பெர்சி பெர்னாண்டோவின் மனைவி அன்னாரது சவப்பெட்டியில் துக்கப்படுகிறார். இயக்கச்சி - ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதில் பெர்னாண்டோ கொல்லப்பட்டார்.'

இயக்கச்சி - ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய போது, பல அதிகாரிகள் மற்றும் படையினர் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததை கட்டளையாளர் ஒப்புக்கொண்டார். 54-1 படைத்தொகுதியின் கட்டளை அதிகாரியான கேணல் பாத்திய ஜயதிலக்க இறக்கும் போது நீர்ச்சத்து குறைவாக இருந்ததாக இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பான கேள்விக்கு மறுமொழியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 


 

 

புலிகள் சிறிலங்கா தரைப்படையின் சடலங்களை ஒப்படைக்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4973
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 12:23
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

ஆனையிறவில் கொல்லப்பட்ட 126 படையினரின் சடலங்களை இன்று பிற்பகல் 1230 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுதலைப் புலிகள் ஒப்படைத்தனர். சடலங்கள் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும், இன்று மாலையில் தொடரணியானது பாதையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்தார்.

சடலங்கள் வவுனியா படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சடலங்கள் ஒப்படைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டதற்கு, இந்தச் சம்பவம் குறித்து இதுவரை தனக்கு எந்த தகவலும் இல்லை என்றார்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 26ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் சிறிலங்கா தரைப்படையின் இறந்தோரை தகனம் செய்கிறார்கள் - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4976
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:23
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

ஆனையிறவு, இயக்கச்சி மற்றும் குறிஞ்சாத்தீவு ஆகிய பகுதிகளில் சிதைந்திருந்த பெருமளவிலான சிறிலங்கா தரைப்படை வீரர்களின் சடலங்கள் அங்கு உரிய படைய மரியாதையுடன் புலிகளால் தகனம் செய்யப்பட்டதாக புலிகளின் குரலின் வணிக ஒலிபரப்பான தமிழீழ வானொலி இன்று மாலை செய்தித்தொகுப்பில் தெரிவித்துள்ளது.

ஆனையிறவு - இயக்கச்சி கூட்டுப்படைத்தளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பரப்புகளில் நூற்றுக்கணக்கான அழுகிய சடலங்கள் சிதறிக் கிடப்பதாக வானொலி கூறியது.

இதேவேளை, நேற்று மாலை செஞ்சிலுவைச் சங்கத்தினால் வன்னியிலிருந்து கொண்டு வரப்பட்ட 126 சடலங்களில் 28 சடலங்கள் சிறிலங்கா தரைப்படையால் அடையாளம் காணப்பட்டதாக வவுனியா வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏனைய சடலங்கள் முழுப் படைய மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டதாக சிறிலங்கா தரைப்படைப் பேச்சாளர் பிரிகேடியர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

 


 

 

பளை மையத்தை நோக்கிய முன்னகர்வைத் தொடங்கினர் புலிகள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4979
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 11:01
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

பளையை மையமாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்ககள் முன்னகர்ந்து வருவதாக புலிகளின் குரல் இன்றிரவு செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. பளைக்கும் கொடிகாமத்துக்கும் இடைப்பட்ட ஊர்களில் வசிக்கும் பொதுமக்களை தமது ஓம்பத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஓம்பலான பரப்புகளுக்கு செல்லுமாறு புலிகள் கேட்டுக்கொண்டுள்ளதாக வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோரன்பற்று, இயக்கச்சி மற்றும் ஆனையிறவு ஆகிய இடங்களில் புலிகள் தமது திடப்படுத்தப்பட்ட நிலைகளிலிருந்து நகர்வதாக புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

புலிகள், புலிகளின் குரலின்படி, கிளாலி, எழுதுமட்டுவாழ் மற்றும் மிருசுவில் பொதுப் பரப்புகளில் உள்ள பொதுமக்களை வடக்கே கொடிகாமத்திற்கு அப்பால் ஓம்பலான பரப்புகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், சிறிலங்காப் படைமுகாம்கள் மற்றும் சேணேவி நிலைகளிலிருந்து விலகி இருக்குமாறும் இந்த வட்டக்கூறிலுள்ள பொதுமக்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று வானொலி தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 27ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் சிறிலங்கா தரைப்படையின் இறந்தோரை தகனம் செய்கிறார்கள் - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4982
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 10:48
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

ஆனையிறவு தளத்திற்கான சமரின் போது புலிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் உயர்மட்ட படையதிகாரி காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சி.ஐ.டி) உசாவலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கொழும்பிலிருந்து வெளியாகும் தெய்லி மிரர் என்ற ஆங்கில நாளிதழில் கோரப்பட்ட தலைப்புச் செய்தியை சிறிலங்கா தரைப்படை இன்று மறுத்துள்ளது. 

"கேந்திர படைமுகாமிலுள்ள கழிவறைக்குள் மறைந்திருந்த போது" புலிகளுக்கு தகவல்களை அனுப்புவதன் மூலம் அந்த அதிகாரி புலிகளுக்கு "அரச படையினர் மீது சூடு நடத்த" உதவியதாக செய்தித்தாள் கோரியுள்ளது.

அக்கதையானது குறித்த அதிகாரி தற்போது வடக்கில் சேவையாற்றும் சிறிலங்கா தரைப்படையின் பிரிகேடியர் என்ற ஊகத்திற்கு இன்று இட்டுச் சென்றுள்ளது.

அந்த அதிகாரி தன்னை ஒரு சிங்கள பௌத்தராகக் கருதுகிறார், ஆனால் அவரது தாத்தா தமிழர் என்பதால் தமிழ்ப் பெயரைக் கொண்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு முகாமை புலிகள் முற்றுகையிட்ட போது அதனுடன் சென்றுசேர்ந்த 6 ஆவது சிறிலங்கா இலகு காலாட்படை சமரணிக்குத் தலைமை தாங்கிய அதிகாரி அவராவர்.

சிறிலங்கா தரைப்படை இன்று மாலை ஒரு சிறிய ஊடக வெளியீட்டில் கதையை தவறெனச் சுட்டியுள்ளது.

“ஆனையிறவு படைமுகாமின் இடமாற்றத்திற்கு காரணமான தகவல் வழங்கியமை தொடர்பில் சி.ஐ.டி.யால் மூத்த படை அதிகாரியிடம் உசாவல் நடத்தப்படுவதாக ஆங்கில நாளிதழின் தலைப்புச் செய்தியில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் பிழையானது. எந்த அதிகாரியும் காவலில் எடுக்கப்படவோ உசாவலுக்காக சிஐடியிடம் ஒப்படைக்கப்படவோவில்லை. படையினருக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதற்காக புலிகள் அமைப்பில் இருந்து இந்த வதந்தி தோன்றியதாகத் தெரிகிறது." என்று சிறிலங்காத் தரைப்படையின் ஊடக வெளியீடு தெரிவித்தது.

எவ்வாறாயினும், அந்த அதிகாரி விடுதலைப் புலிகளுடன் சில காலமாக தொடர்புகளை கொண்டிருந்ததாக படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பணிக்கடப்படையினர்(எஸ்.ரி.எஃவ்.) அந்த அதிகாரியை காவலில் எடுத்து சிஐடி தலைமையகத்தில் ஒப்படைத்ததாக அந்த செய்தித்தாள் கூறியது.

முல்லைத்தீவு படைமுகாமிலுள்ள தமிழ் சேணேவி அதிகாரி ஒருவர் 1996 இல் அந்தத் தானைவைப்பின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த முக்கிய தகவல்களை புலிகளுக்கு வழங்கியதாக கொழும்பிலுள்ள ஆங்கில நாளிதழின் ஒரு பிரிவினரால் குற்றம் சாட்டப்பட்டதாக கொழும்பிலுள்ள சிறிலங்கா தரைப்படை தலைமையக அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். 

முல்லைத்தீவு படைத்தளத்தின் வீழ்ச்சி குறித்து உசாவல் நடத்திய படைய உசாவல் நீதிமன்றம் அந்த அதிகாரியை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. சிறிலங்கா தரைப்படையில் மிகக் குறைவான தமிழர்களே உள்ளனர்.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

புலிகள் பளையை நோக்கி முன்னகர்கின்றனர் - வானொலி

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4984
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 1:29
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 26
/12/2022

ஓயாத அலைகள் 3 இல் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் புதுக்காடு சந்தியிலிருந்து பளை நோக்கி ஒன்றரை கிலோமீற்றர் முன்னகர்ந்துள்ளதாக புலிகளின் குரல் வானொலி வெள்ளிக்கிழமை நண்பகல் செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது.

பளை ஏ9 நெடுஞ்சாலையில் புதுக்காடு சந்திப்பில் இருந்து வடக்கே சுமார் 3-கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வியாழக்கிழமை இரவு 7 மணி வரை கடுமையான சண்டை தொடர்ந்ததாகவும் பல சிறிலங்கா தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் வானொலி கூறியது.  

சண்டையில் கொல்லப்பட்ட மூன்று புலி உறுப்பினர்களின் பெயர்களையும் வானொலி வழங்கியது.

அவை:

அருச்சுனன் (மன்னாரைச் சேர்ந்த கனகரத்தினம் ரவிக்குமார்)
அகிலரசி (முள்ளியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் பிரியதர்சினி)
சின்னவன் (கண்டியைச் சேர்ந்த ஆறுமுகம் ராஜேந்திரன் - எல்லைப்படை உறுப்பினர்)

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

பளை சிறிலங்கா தரைப்படை முகாமை புலிகள் பரம்பினர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4991
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 8:10
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27
/12/2022

விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் பளையில் உள்ள பாரிய படைத்தளத்தைப் பரம்பி நகரத்தையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களின் கட்டுப்பாட்டையும் எடுத்ததாக அந்த அமைப்பு தனது இலண்டன் அலுவலகத்திலிருந்ததான ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது. பளை நகரத்தின் வீழ்ச்சியுடன், குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவில் விடுதலைப் புலிகள் வலுவாக திண்ணிறுக்கப்பட்டு யாழ்ப்பாணத்தின் தலைநகரை நோக்கி முன்னகர்வதற்கு வசதியாக இருப்பதாக புலிகள் தெரிவித்தனர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை பின்வருமாறு:

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் ஆனையிறவுக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பளையிலுள்ள பாரிய படைத் தளத்தைப் பரம்பி இன்று நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களின் கட்டுப்பாட்டையும் எடுத்தது.

"12 மணித்தியாலக் கடுமையான சண்டைக்குப் பின்னர் இன்று மாலை 6 மணியளவில் நன்கு அரணப்படுத்தப்பட்ட மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தனைவைப்பு நகரம் புலிகளின் போராளிகளிடம் வீழ்ந்தது. தவிபுவின் விசேட அதிரடிப்படைப் பிரிவினர் கனவகை சேணேவி மற்றும் கணையெக்கி சூட்டாதரவுடன் பளையில் உள்ள நடுப் படைத்தளத்தின் மீது அதிகாலையில் பல்முனை தாக்குதலை நடத்தினர். பல மணி நேரம் நீடித்த கடுமையான சண்டைக்குப் பிறகு, தமிழ்ப் புலி அதிரடிப்படைகள் படைத்தளத்திற்குள் புயலெனப்புகுந்து சிறிலங்காப் படையினருக்கு கனமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தினர். விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவுகள் பல சிறுமுகாம்கள் மற்றும் கனமாக காவல்செய்யப்பட்டிருந்த சேணேவித் தளத்தையும் அழித்துள்ளன.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தாக்குதலின் முரட்டுத்தனத்தில் கறங்கிய சிறிலங்காப் படையினர் பெரும் எண்ணிக்கையிலான இறந்த படையினரைப் போர்க்களத்தில் விட்டுவிட்டு ஒழுங்கீனமாக தப்பியோடினர். படையினர் கிளாலி பாதையோரமாக நகர்ந்தபோது, புலிப் போராளிகள் மேலும் வடக்கே முன்னகர்ந்து, முகமாலையில் ஏ9 நெடுஞ்சாலையில் நிலைகொண்டிருந்த புலிப் போராளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, தென்மராட்சி ஆட்புலத்தின் பெரும் நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

"சமர்க்களத்திலிருந்து வரும் அறிக்கைகளின்படி புலிகள் பளை படைமுகாமிலிருந்து பெருமளவிலான படைக்கலன்களையும் கணைகளையும் அள்ளியுள்ளனர். பளை நகரத்தின் வீழ்ச்சியுடன், குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவில் யாழ்ப்பாணத்தின் தலைநகரை நோக்கி முன்னகர்வதற்கு வசதியாக விடுதலைப் புலிகள் வலுவாக திண்ணிறுக்கப்பட்டு காலூன்றியுள்ளனர்."

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்காப் படையினரின் சடலங்களைப் புலிகள் ஒப்படைக்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4993
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 4:55
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 1
/1/2023

அண்மையில் கைப்பற்றப்பட்ட பளை நகரிலிருந்து பல சிறிலங்கா தரைப்படை வீரர்களின் சடலங்களை விடுதலைப் புலிகள் மீட்டுள்ளதுடன், நல்ல நிலையிலுள்ள 50 சடலங்களை சிறிலங்கா தரைப்படையிடம் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக இலண்டனிலுள்ள புலிகளின் வட்டாரங்கள் திங்கட்கிழமை தெரிவித்தன.

விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூற்றுரையில், 12 மணி நேர கடும் சண்டைக்குப் பிறகு சிறிலங்கா தரைப்படை தானைவைப்பு நகரமான பளை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை அது தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பரப்புகளில் புலிகள் திடப்படுத்தப்பட்டு வருவதாக இலண்டனிலுள்ள புலிகள் வட்டாரங்கள் தமிழ்நெட் திங்கட்கிழமை தெரிவித்தன.

"நல்ல நிலையில்" மீட்கப்பட்ட ஐம்பது சிறிலங்கா தரைப்படை வீரர்களின் சடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வழியாக சிறிலங்கா தரைப்படைக்குத் திருப்பித் தரப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடையாளம் காணமுடியாத அளவுக்கு வலுத்த சேதத்திற்குள்ளான சிறிலங்கா தரைப்படையினரின் சடலங்கள் முழுப் படைய மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பளையில் கைப்பற்றப்பட்ட சிறிலங்காத் தரைப்படைத் தளத்திலிருந்து பெருமளவிலான படைக்கலன்களும் கணைகளும் மீட்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன, ஆனால் அது குறித்த விரிப்புகளை வழங்கவில்லை.

 

 


 

 

புலிகள் முன்னகர்வதால் சிறிலங்கா தரைப்படை அரண்களை உருவாக்குகிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4994
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 5:54
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 1
/1/2023

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வெளியிட்ட ஊடக வெளியீட்டில், பளை, புலோப்பளை மற்றும் இத்தாவிலிலிருந்து சிறிலங்கா தரைப்படை விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. சிறிலங்கா தரைப்படை , வெளியீட்டின் படி, பெரும் உயிரிழப்புகளுடன் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில், முன்னகர்ந்து வரும் புலிகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா தரைப்படை பாரிய அரண் ஒன்றைக் கட்டியெழுப்பி வருவதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு அமைச்சின் வெளியீடு கூறியது, "30 ஏப்ரல் 2000 அன்று ஆனையிறவுக்கு வடக்கே பளையில், ஆனையிறவு முகாம் காலிசெய்யப்பட்ட பிறகு இப்போது கட்டப்பட்டு வரும் முதன்மை வலுவெதிர்ப்புக் கோட்டிற்கு முன்னால், பகல் நேரத்தில் கடுமையான சண்டை வெடித்தது. களமிறக்கப்பட்டிருந்த தாமதிக்கும் நிலைகள் ஒரே நேரத்தில் பயங்கரவாதிகளால் அதிகளவு சேணேவி மற்றும் கணையெக்கி வேட்டால் மிண்டப்பட்டன."

"ஒரே நேரத்தில் வடக்கு மற்றும் தெற்கிலிருந்து வந்த பயங்கரவாதிகளால் பளைக்கு வடகிழக்கில் இத்தாவில் நிலைகளில் ஆளிட்டுக்கொண்டிருந்த படையினர் மிண்டப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுடன் வேம்படுகேணியை நோக்கி அவர்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோன்று, புலோப்பளை மற்றும் பளை ஆகிய இடங்களில் களமிறக்கப்பட்டிருந்த படையினரும் பகையுடனான தொடர்பில் பலத்த உயிர்ச்சேதத்தைப் பெற்றபிறகு பின்வாங்கினர்."

"படையினர் இப்போது முதன்மை வலுவெதிர்ப்புக் கோட்டிற்கு முன்னால் பளைக்கு வடக்கேயுள்ள பரப்புகளில் தாமதப்படுத்தும் நிலைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்."

"இந்தப் பின்வாங்குகையின் போது 01 அதிகாரி மற்றும் 13 வீரர்கள் செயலில் கொல்லப்பட்டனர். 14 அதிகாரிகள் மற்றும் 222 வீரர்கள் செயலில் காயமடைந்தனர்."

வேம்படுகேணி என்பது எழுதுமட்டுவாழுக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூராகும்.

தென்மராட்சிக் கோட்டத்தின் வடக்குப் பகுதிகளில் வெட்டப்படும் மணல், மண் மற்றும் ஆயிரக்கணக்கான தென்னை, பனை மரங்களைக் கொண்டு பாரிய அரணொன்றை அமைக்கும் பணியில் சிறிலங்கா தரைப்படை தற்போது துரிதமாக மிண்டி வருவதாக மன்னாரிலுள்ள சிறிலங்கா ரெலிகொம் கோபுரத்தினூடாக இணைக்கப்பட்டுள்ள குடாநாட்டில் இயங்கும் சில தொலைபேசி இணைப்புகள் மூலம் இன்று கொழும்புடன் சுருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திய யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனையிறவு மற்றும் இயக்கச்சியிலிருந்து பின்வாங்கப்பட்ட படையினர் தென்மராட்சிக் கோட்டத்தை தென்மேற்கிலிருந்து வடகிழக்காகக் குறுக்காக வெட்டும் கோட்டில், கிளாலியிலிருந்து நாகர்கோவில் வரை, அரணிற்கு பின்னாலுள்ள உசன், வரணி, நாகர்கோவில் மற்றும் மணற்காடு ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் படைவீடு அமைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் முன்னகர்ந்து வரும் சண்டை உருவாகங்களைத் தாமதப்படுத்தி இந்த வலுவெதிர்ப்புக் கோட்டின் கட்டுமானப் பணிகளை முடிக்க போதுமான நேரத்தை பெறும் முயற்சியில் நூற்றுக்கணக்கான படையினரை அரணிற்கு முன்னால் சிறிலங்கா தரைப்படை அனுப்பியுள்ளது.

நேற்று பளையைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்களாலும் முகமாலையில் ஏற்கனவே நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளாலும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துரிதக் கிண்ணி நகர்வில் எழுதுமட்டுவாழுக்கு அருகில் ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள இத்தாவிலில் கனமாக வலுவெதிர்க்கப்பட்டிருந்த நிலைகளில் ஆளிட்டிருந்த சிறிலங்கா அரசாங்கப் படையினர் சிக்கியதில் வலுத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

முகமாலை ஏ9 இல் இத்தாவிலுக்கு வடமேற்கே ஒரு கிலோமீட்டரில் உள்ளது.

சிறிலங்கா வான்படையின் கிபிர் தாரை வானூர்திகள் மற்றும் தாக்குதல் உலங்குவானூர்திகள் இன்று எழுதுமட்டுவாழுக்கும் பளைக்கும் இடைப்பட்ட பொதுப் பரப்பில் வான்குண்டுகளை வீசித் தாக்கியதாக யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்.குடாநாட்டின் வலிகாமம் பிரிவில் சங்கானை, சுழிபுரம், நவாலி, வட்டுக்கோட்டை, கந்தரோடை மற்றும் மாசியப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள சிறிலங்கா தரைப்படையினர் தமது முகாம்களைக் காலி செய்துள்ளதாக யாழ். வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பரப்புகளிலுள்ள பொதுமக்கள் இந்தச் சிறிலங்கா தரைப்படை முகாம்களையும் காவலரண்களையும் சூறையாடியதோடு சுழிபுரத்திலுள்ள சிறிலங்கா தரைப்படைச் சோதனைச் சாவடி அடையாளம் தெரியாத ஆட்களால் எரிக்கப்பட்டதாகக் கூறினர்.

 

 


 

 

சிறிலங்கா தரைப்படையின் சடலங்கள் நாளை இடமாற்றம் - செஞ்சிலுவைச் சங்கம்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4995
செய்தி வெளியீட்டு நேரம்: மாலை 9:31
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/1/2023

பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற சண்டையில் உயிரிழந்த சிறிலங்கா தரைப்படை வீரர்களின் சடலங்களை கையளிப்பது தொடர்பில் விடுதலைப்புலிகள் குழு இன்று மாலை வன்னியிலுள்ள தமது நிகராளிகளுடன் தொடர்புகொண்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. 

நாளை காலை அக்கராயனிலுள்ள 45-50 சிறீலங்கா படையினரின் சடலங்களை புலிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்தார்.

சடலங்களை நாளை வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா தரைப்படை சம்மதம் தெரிவித்துள்ளதாக திரு. கர்ச குணவர்தன தமிழ்நெட்டிடம் தெரிவித்தார்.

சடலங்கள் நாளை மாலைக்குள் வவுனியாவுக்கு அருகிலுள்ள பாதைகளுக்கு மாற்றப்படும் என வவுனியாவிலுள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, வவுனியாவிற்கு வடமேற்கே உள்ள பூவரசன்குளத்திற்கும் இரணையிலுப்பைக்குளத்திற்கும் இடையிலுள்ள உள்வீதியில் படையப் பாரவூர்தியொன்றின் மீது அமுக்கவெடி வெடித்ததில் சிறிலங்கா தரைப்படையினர் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்த படையினர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

கிளாலியை புலிகள் தாக்குகின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4996
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 10:48
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/1/2023

யாழ்ப்பாணக் களப்பின் தென்கிழக்குக் கரையோரத்திலுள்ள சிறிலங்கா தரைப்படையின் கிளாலித் தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதாக புலிகளின் குரல் வானொலி இன்றிரவு செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது.

கிளாலி சிறிலங்கா தரைப்படைத் தளமானது 52-3 படைத்தொகுதியின் தலைமையகம் என்று வானொலி கூறியது. சிறிலங்காக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தின் ஒரு பிரிவும், சிறிலங்கா தரைப்படையின் 53 ஆவது படைப்பிரிவின் அதிரடிப்படையின் ஒரு பிரிவும், ஆனையிறவுத் தளத்திலிருந்து வெளியேறிய 54 ஆவது படைப்பிரிவின் ஒரு பகுதியும் கிளாலி தானைவைப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக வானொலி தெரிவித்துள்ளது. (சிறப்பு படகுச் சதளமானது(எஸ்.பி.எஸ்) அமெரிக்கக் கடற்படையின் 'நேவி சீல்'களால் பயிற்சியளிக்கப்படுகிறது).

நேற்றைய நாள் பளைக்கான சண்டையில் விடுதலைப் புலிகளின் 10 போராளிகள் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

சிறிலங்கா தரைப்படையின் 42 சடலங்களை புலிகள் ஒப்படைத்தனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4997
செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 12:59
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/1/2023

பளையில் கொல்லப்பட்ட 42 படையினரின் சடலங்களை இன்று முற்பகல் 11.15 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுதலைப் புலிகள் கையளித்தனர்.

சடலங்கள் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்துள்ளார்.

சடலங்கள் இன்று மாலை பம்பைமடுவில் உள்ள வவுனியா படையதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

 

 

*******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

களப்புக் கடற்கரை சாலை எடுக்கப்பட்டது - புலிகளின் குரல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5000
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 1:51
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/1/2023

ஆனையிறவுக்கும் கிளாலிக்கும் இடைப்பட்ட யாழ்ப்பாணக் களப்பின் கரையோரமான 12 கிலோமீற்றர் வீதியை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இன்று புலிகளின் குரல் தனது இரவுச் செய்தியில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்குள் ஓயாத அலைகள் வலிதாக்குதலுடன் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனையிறவிலிருந்து முகமாலை வரையான ஏ9 நெடுஞ்சாலையின் (கண்டி வீதி) 21 கிலோமீற்றர்களும் இப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருப்பதாக வானொலி கூறியது.

புலிகள் புலோப்பளையிலிருந்து கிளாலி வரை கடற்கரைப் பாதையில் முன்னகர்ந்து ஆனையிறவு-கிளாலி வீதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனையிறவிலிருந்து கிளாலி வரையிலான கரையோரப் பாதையானது, விடுதலைப் புலிகளால் ஏ9 நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்ட போது, மார்ச் 27 க்கும் ஏப்ரல் 20 க்கும் இடையில் முற்றுகையிடப்பட்ட நுழைவாயில் தானைவைப்பை வலுவெதிர்த்துக்கொண்டிருந்த சிறிலங்காத் தரைப்படையினருக்கு மாற்று வழங்கல் பாதையாக பயன்படுத்தப்பட்டது.

thenmaradchi.jpg

 

 


 

 

14 சடலங்களைப் புலிகள் ஒப்படைக்கின்றனர்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4999
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:15
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/1/2023

பளையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்ட சிறிலங்கா தரைப்படையின் மேலும் 14 சடலங்களை கையளிப்பது தொடர்பாக வன்னியிலுள்ள அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிகராளிகளை விடுதலைப் புலிகள் இன்று தொடர்பு கொண்டுள்ளதாக அந்த அமைப்பின் பேச்சாளர் கர்ச குணவர்தன தெரிவித்தார். 

சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் நாளை வன்னியில் பெற்றுக்கொள்ளும் என்றார்.

சிறிலங்காத் தரைப்படையைத் தொடர்புகொண்டு நாளை வன்னியிலிருந்து சடலங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ளதாக திரு.குணவர்தன தெரிவித்தார்.

பளையில் கொல்லப்பட்ட 42 தரைப்படையினரின் சடலங்களை புலிகள் இன்று கையளித்துள்ளனர்.

 

 

*******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

ஓம்பலான பின்வாங்குகைக்கு விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தை விருப்பறிவிக்கிறார்கள்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5014
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:05
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 2
/1/2023

வடக்கிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா தரைப்படையின் படையினர் ஓம்பலாக பின்வாங்குவதற்குத் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவிக்க ஆயத்தம் என விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர். இலண்டன் அலுவலகங்களிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியிட்ட ஒரு கூற்றுரையில், மேலும் அரத்தம் சிந்துவதைத் தடுப்பதற்கும், "சாதகமற்ற போர் அரங்கத்திலிருந்து கண்ணியத்துடனும் மேன்மையுடனும் பின்வாங்குவதற்கு" சிறிலங்கா தரைப்படைக்கு "ஒரு இணக்கமான சூழலை ஆக்குவதற்கான" ஒரு "நல்லெண்ணத்தின் சைகையே" தம் விருப்பறிவிப்பு என்று கூறினர்.

அந்த ஊடக வெளியீட்டின் முழு உரை பின்வருமாறு:

"யாழ் குடாநாட்டிலிருந்து முற்றுகையிடப்பட்ட அரசாங்கப் படையினர் ஓம்பலாக வெளியேற்றப்படுவதற்கு வசதியாக, சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு எதிரான அனைத்து ஆயுதம்பூண்ட வைரகத்தையும் இடைநிறுத்தி தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவிக்க ஆயத்தமாக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் (தவிபு) தெரிவிக்க விரும்புகின்றனர்.

"சிறிலங்கா அரசாங்கமானது, தாமதமின்றி, எங்களின் முன்மொழியப்பட்ட வைரகத்தின் அறவுளியைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பதாக எங்களிடம் தெரிவித்தவுடன் அது நடைமுறைக்கு வரும். படையினரை ஒழுங்காக வெளியேற்றுவதை மேற்பார்வையிடவும் ஆற்றவும் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தை நாங்கள் அழைக்கிறோம்.

"வன்முறை மற்றும் இரத்தக்களரி மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும், சாதகமற்ற போர் அரங்கத்திலிருந்து கண்ணியத்துடனும் மேன்மையுடனும் பின்வாங்குவதற்கு இணக்கமான சூழலை சிறிலங்காப் படையினருக்கு ஏற்படுத்துவதற்கான நல்லெண்ணத்தின் அடையாளமாக விடுதலைப் புலிகளின் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது.

"எங்களின் முன்மொழிவை தீவிரமாகப் பரிசீலித்து, தாமதமின்றி சாதகமாக மறுமொழியளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒரு நேர்மறையான மறுமொழியானது நிரந்தரமான போர்நிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள் மற்றும் தமிழ்த் தேசியச் சிக்கலுக்கான பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கான சுமுகமான சூழ்நிலைகளையும் ஆக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

"மேலும், தீவிரத்தை குறைக்கும் எங்கள் முன்மொழிவைப் புறக்கணித்து, போர் முயற்சியைத் தொடர்ந்தால், கடுமையான படைய இழப்புகளின் பேரழிவான விளைவுகளுக்குச் சிறிலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்கும் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்."

 

 


 

 

போர்நிறுத்த ஒப்பந்தத்தை புறக்கணித்தது சிறிலங்கா தரைப்படை 

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5015
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 5:06
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 4
/1/2023

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா தரைப்படை இன்று முற்றாக புறக்கணித்துள்ளது. சிறிலங்கா தரைப்படை யாழ்ப்பாணத்தை வலுவெதிர்க்க இறுதியாள்வரைப் போராடும் என்று பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் இன்று பிற்பகல் தெரிவித்தார். அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த அலுவல்சார் வெளியீடு இன்று பிற்பகலுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

குடாநாட்டிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என அந்த அதிகாரி தெரிவித்தார். அதிகாரியின் கூற்றுப்படி விடுதலைப் புலிகளுக்கு எதிராக சண்டையிடுவதற்கு பல நாடுகள் படைய ஆற்றுகையை வழங்குவதாக உறுதியளித்துள்ள நிலையில், சிறிலங்கா தரைப்படை அங்கேயேயிருக்கும் தனது நிலைப்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளது.

தரைப்படை யாழ்ப்பாணத்திலிருந்து படையினரை பின்வாங்குவதற்கு விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் செய்வதை உளவியல் போர்முறை உத்தியெனப் புறக்கணித்தார்.

Tipnis_2_080500.jpg

இரண்டு மூத்த சிறிலங்கா வான்படை  அதிகாரிகள், இந்தியாவின் வான்படைக் கட்டளையாளர் அனில் யசுவந்த் டிப்னிசை கொழும்பிலுள்ள சிறிலங்கா வான்படை தலைமையகத்தில் திங்கள்கிழமை வரவேற்றனர், அங்கு வான் துணை-மானவர் ரிப்னிசு மரியாதைக் காவலரை பரிசோதித்தார். (நிழற்படம்: தமிழ்நெட்)

Tipnis_1_080500.jpg

 

 

*******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

செய்திகள்

 

இதற்குள் 2000ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்தில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.

 

 

விரைவில் போரில் வெற்றி பெறுவேன் என்கிறார் சந்திரிகா

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5016
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:10
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 4
/1/2023

“போரில் கூடிய விரைவில் வெற்றிபெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது” என சிறிலங்கா அதிபர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார். பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த வாரம் தனது அரசாங்கத்தால் சாற்றாணைப்படுத்தப்பட்ட கொடூரமான விதிமுறைகள் ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், தீவிர சூழ்நிலைகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கோரினார்.

சந்திரிக்கா மாமி

சில அரசியல் தலைவர்கள் கலங்கிய நீரில் மீன்பிடிப்பதாக குற்றம் சுமத்திய அதிபர், கடந்த காலங்களில் தமிழர் சிக்கலை மோசப்படுத்தியதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை சாடினார். தீவு தேசிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றார்.

தனது உரையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்திய அதேவேளை, மோதலுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், வெளிநாடுகளில் வாழும் ஏழு இலட்சம் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு அதிக டொலர்களை வழங்குவார்கள் எனக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசாங்கத்திற்கு தனது ஆதரவை வழங்கவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார்.

சிக்கலைத் தீர்ப்பதற்கான முன் கட்டுப்பாடாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் மிண்ட வேண்டும் என்றார். "1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நானும் எனது கணவரும் ஆதரித்தோம்" என்று திருமதி குமாரதுங்க சுட்டிக்காட்டினார். நடவடிக்கையில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் நிரந்தரமாக காயமடைபவர்களின் நலன்களை கவனித்து வருவதாகவும், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வீடுகள் வாங்குவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் உதவுவதாக அவர் கோரினார்.

 

 


 

 

யாழ்ப்பாணத்தை தக்கவைப்பதாக ரத்வத்தை சூளுரை

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5018
செய்தி வெளியீட்டு நேரம்: எற்பாடு 3:36
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 4
/1/2023

யாழ்ப்பாணத்தைப் வலுவெதிர்ப்பதற்காக தனது அரசாங்கத்திடமுள்ள 'அனைத்து வளங்களையும் மீள்குழுப்படுத்துவதாக' இன்று நாடாளுமன்றத்தில் சிறிலங்காவின் பாதுகாப்புத் துணை அமைச்சர் நாயகம் அனுருத்த ரத்வத்தை சூளுரைத்தார். வடக்கில் ஏற்பட்டுள்ள படைத்துறை நெருக்கடி தொடர்பில் இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை ஒத்திவைக்கப் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கம் விதித்துள்ள கொடூரமான விதிமுறைகள் பயன்படுத்தப்பட மாட்டாது எனக் கோரினார்.

ஆனையிறவுத் தளத்தையும் பளையையும் அதனை அண்டிய பகுதிகளிலுமுள்ள படைமுகாம்களை புலிகள் பரம்பியதில் 2240 படையினரும் 128 அதிகாரிகளும் காயமடைந்ததாகவும் அங்கு செயலில் 337 படையினரும் 21 அதிகாரிகளும் கொல்லப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். நாயகம் ரத்வத்தையின் கூற்றுப்படி, சண்டையில் 346 படையினரும் 03 அதிகாரிகளும் காணாமல் போயுள்ளனர்.

"ஆனையிறவிலிருந்து தற்காலிகமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்ற மெய்யுண்மையை நாங்கள் மறைக்க விரும்பவில்லை. தற்காலிகப் பின்னடைவுகள் போர்ச் சூழ்நிலையில் வரலாம். அதற்காகப் போரை முற்றிலுமாக இழந்துவிட்டோம் என்பதல்ல. நாம் தோற்கடிக்கப்பட மாட்டோம். இறுதியில் வெற்றியை அடைவதற்காக எமது அனைத்து வளங்களையும் மீளப்பெறத் தீர்மானித்துள்ளோம்” என்று அமைச்சர் கூறினார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட கொடூரமான விதிமுறைகள் குறித்துப் பேசிய நாயகம் ரத்வத்தை, "இந்த விதிமுறைகள் குறித்து யாரும் கிலிகொள்ள வேண்டாம். இந்த விதிமுறைகளின் நோக்கம் மக்கள் மீதான அடக்குமுறையல்ல." என்று கூறினார்.

"மக்களின் பங்களிப்பை பெறும் நோக்கில்தான் நாடளாவிய வகையில் மக்கள் வலுவெதிர்ப்புக் குழுக்களை நிறுவப் படிமுறைகளை எடுத்துள்ளோம். தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் இந்தப் புதிய விதிமுறை சாற்றாணைப்படுத்தப்பட்டதன்று. அரசியலமைப்பின் விதிகளின்படி தேர்தல் நடைபெறுவதை இந்தச் சபைக்கு நாங்கள் உறுதி செய்கிறோம்." என்று அவர் கூறினார்.

 

 


 

 

கிளாலியில் மீண்டும் சண்டை வெடிக்கிறது

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=13&artid=5020
செய்தி வெளியீட்டு நேரம்: சாமம் 10:37
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 4
/1/2023

கிளாலியிலுள்ள சிறிலங்கா தரைப்படைத் தளம் இன்று அதிகாலை 5.30 மணி முதல் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு வருவதாக புலிகளின் குரல் வானொலியை மேற்கோள்காட்டி ஐரோப்பாவிலுள்ள தமிழ் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தால் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மீளத்தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பளைக்கு வடக்கேயுள்ள படைநிலைகள் மீது இன்று காலை கனமான தாக்குதல் இடம்பெற்றதாக சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடக மையம் விடுத்துள்ள கூற்றுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளைக்கு வடக்கேயுள்ள சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது புலிகள் நடத்திய இரண்டு ஒருங்கிணைந்த தாக்குதல்கள் இன்று காலை படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கூற்றுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாலி என்பது யாழ்ப்பாணக் களப்பின் தென்கிழக்குக் கடற்கரையிலுள்ள ஒரு முக்கிய சிறிலங்காத் தரைப்படைத் தளமாகும்.

வன்னியிலுள்ள புலிகளின் குரல் வானொலியை மேற்கோள்காட்டி ஐரோப்பிய தமிழ் ஊடகங்கள் நான்கு திசைகளிலிருந்தும் புலிகள் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கின்றன.

சிறிலங்காக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளம் இங்கு கடல்சார் பிரிவுத்தளத்தைக் கொண்டுள்ளது. சிறிலங்கா தரைப்படையின் 52- 3 படைப்பிரிவு மற்றும் 53வது படைப்பிரிவின் ஒரு அங்கம் ஆகியன இங்கு தளமிட்டுள்ளன.

 

 

*******

 

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.