Jump to content

ஆக்டிவிசன் பிளிசார்ட் கேமிங்: மைக்ரோசாஃப்ட் சத்ய நாதெல்ல ரூ. 5 லட்சம் கோடிக்கு 'கேண்டி கிரஷ்' நிறுவனத்தை வாங்குவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
  • ஸ்டெஃபன் பவல்
  • கேமிங் செய்தியாளர்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வீடியோ கேம்கள்

பட மூலாதாரம்,MICROSOFT

 

படக்குறிப்பு,

வீடியோ கேம்கள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஆக்டிவிசன் பிளிசார்ட் (Activision Blizzard) என்கிற கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை சுமார் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) கொடுத்து வாங்க உள்ளதாகக் கூறியுள்ளது.

இது மைக்ரோசாஃப்ட் நிறுவன வரலாற்றிலேயே மிகப் பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகின் பிரபல வீடியோ கேம்களான கால் ஆஃப் டியூட்டி, வார்கிராஃப்ட், ஓவர்வாட்ச் போன்ற கேம்களின் உரிமைகள் கிடைத்துவிடும்.

மொபைல், கணினி, கன்சோல்கள் என பல தளங்களில் தங்களின் கேமிங் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள இந்த நடவடிக்கை உதவும் என மைக்ரோசாஃப்ட் கூறுகிறது. மேலும் மெடாவெர்ஸ் தளத்தில் நுழையவும் படிப்படியாக இது உதவும் என்றும் கூறியுள்ளது.

சமீபத்தில் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'பெதெட்சா' என்கிற கேமிங் நிறுவனத்தை 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியது நினைவுகூரத்தக்கது.

"நாங்கள் புதிய கேமிங் சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் விதத்தில், விளையாடுபவர்கள், கேமிங் வடிவமைப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், கேமிங்கை பாதுகாப்பானதாக மாற்றவும் உலகத் தரத்திலான உள்ளடக்கங்கள், கேமிங் சமூகம், கிளவுட் சேவைகளில் முதலீடு செய்கிறோம்." என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா கூறினார்.

ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10,000 ஊழியர்கள் மற்றும் பல ஸ்டூடியோக்கள் உள்ளன.

மிக மோசமான பணிக் கலாச்சாரம் இருப்பதாகவும், சமீபத்திய மாதங்களில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் புகார்களையும் எதிர்கொண்டு வருகிறது அந்நிறுவனம்.

கால் ஆஃப் டியூட்டி முதல் கேண்டி கிரஷ் வரை உலகம் முழுக்க பல பிரபல கேம்களை ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள 190 நாடுகளில், அந்நிறுவனத்துக்கு மாதம் 40 கோடி (400 மில்லியன்) ஆக்டிவ் பயனர்கள் உள்ளனர்.

தங்களின் கேம் பாஸ் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்துக்கு, ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனத்தின் கேம்களைக் கொண்டு வர பணியாற்றிக் கொண்டிருப்பதகவும் மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஒட்டுமொத்த கேமிங் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்துள்ள காலகட்டத்தில், உள்ளடக்கங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

மைக்ரோசாஃப்டின் சமீபத்திய தலைமுறையைச் சேர்ந்த கன்சோல்களை விடவும், பிளே ஸ்டேஷன் 5-ன் விற்பனை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் சோனியின் எந்திரங்கள் மிகவும் கவர்ச்சிகரமான பிரத்யேக கேம்க்ளைக் கொண்டிருக்கின்றன. அந்த கேம்களை பல்வேறு சாதனங்களில் விளையாட முடியாது என சிலர் வாதிடுகின்றனர்.

கேம்களை விளையாடும் நபர்களை தங்கள் தளங்களுக்கு ஈர்க்கும் போரில், இந்த பிரத்யேக கேம்கள் மற்றும் அந்த கேமிங் அனுபவம் மிகவும் அவசியமாகிறது.

தற்போது மைக்ரோசாப்ட் மற்றும் சோனி கன்சோல்களில் விளையாடக்கூடியதாக இருக்கும் ஆக்டிவிசன் பிளிசார்ட் கேம்கள் எக்ஸ்பாக்ஸில் மட்டும் பிரத்தியேகமாக விளையாடக் கூடியதாக மாறுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

வீடியோ கேம் காட்சி

பட மூலாதாரம்,BETHESDA

 

படக்குறிப்பு,

வீடியோ கேம் காட்சி

நெட்ஃபிளிக்ஸ் பாணியில் கேம்களை விளையாட சந்தா வசூலிக்கும் முறை, எதிர்கால வியாபார உத்தியாகலாம் என எக்ஸ் பாக்ஸ் கருதுகிறது. இருப்பினும், இது போன்ற பிரத்யேக கேம்கள் தொடர்பான சேவைகளை கூடுதலாக தங்கள் சேவையில் வழங்குவது ஒரு கூடுதல் சிறப்பாக இருக்கும் என எக்ஸ் பாக்ஸ் கருதுகிறது.

தங்களின் கேம் பாஸ் சேவைக்கான கையகப்படுத்தல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, மைக்ரோசாஃப்ட் தரப்பு உற்சாகமாக உள்ளது. தங்களால் முடிந்த வரை எத்தனை ஆக்டிவிசன் பிளிசார்ட்டின் கேம்களை, எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் மற்றும் பிசி கேம் பாஸில் கொடுக்க முடியுமோ, அத்தனை கேம்களைக் கொடுபோம் என கூறினார் ஸ்பென்சர்.

2021ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் கேம்ஸ் ஸ்டுடியோவான பெதெட்சாவை வாங்கியபோது, ஃபால் அவுட் மற்றும் ஸ்கைரிம் போன்ற பிரான்சைஸிகள் மற்ற தளங்களுக்கு தொடர்ந்து கேம்களை உருவாக்குவார்கள் என்று கருதப்பட்டது.

ஆனால், தற்போது வெளிவரவிருக்கும் 'ஸ்டார்ஃபீல்ட்' மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரத்தியேகமாக வெளியீடாக இருக்கப் போகிறது.

ஒப்பந்தம் நிறைவடையும் வரை, ஆக்டிவிஷன் பிளிசார்ட் மற்றும் மைக்ரோசாஃப்ட் கேமிங் ஆகியவை தனித்தனியாக தொடர்ந்து செயல்படும் என்று ஃபில் ஸ்பென்சர் ஒரு நீண்ட வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பாபி கோடிக் என்பவர் ஆக்டிவிஷனின் தலைமைச் செயல் அதிகாரியாக தொடர்வார். மைக்ரோசாட் மற்றும் ஆக்டிவிசன் பிளிசார்ட் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் நிறைவடைந்த பின், ஆக்டிவிசன், வியாபார ரீதியில் மைக்ரோசாஃப்டின் கீழ் செயல்படும்.

https://www.bbc.com/tamil/global-60058739

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.