Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவின் முக்கிய நகரமாகும் தகுதி இருந்தும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் முக்கிய நகரமாகும் தகுதி இருந்தும்

சீரழிந்து இருண்டு போய்க் கிடக்கும் வுனியா

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விசேட அறிவும் அனுபவமும் கொண்டுள்ள சுற்றுச்சூழல் விஞ்ஞானத்துறை நிபுணர் கலாநிதி திருமதி அஜந்தா பெரேரா, வவுனியா மாவட்டத்தில் தாம் ஒழுங்குசெய்து நடாத்திய "வேலைப்பட்டறைகள்' மற்றும் "சுற்றுச்சூழல் பேணும் நடவடிக்கை' தொடர்பாகத் தமக்கு நேர்ந்த அனுபவங்களை இப்பத்தியூடாக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். கடந்த முதலாம் திகதி "ராவய' பத்திரிகையில் வெளியான அப்பத்தியின் தமிழ்வடிவம் கீழே தரப்படுகிறது.

ஒருநாள் எனக்கு அரிதான விதத்திலான தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. அது வவுனியாவுக்கு என்னை வருமாறு அழைப்பு விடுக்குமொரு தொலைபேசி அழைப்பாக அமைந்தது. வவுனியா நகரில் பெருமளவில் குவியும் குப்பைகூளங்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புக்குத் தீர்வு காண்பதற்காக எனது ஒத்தாசையைக் கோரும் வகையில் அந்தத் தொலைபேசி அழைப்பு அமைந்திருந்தது. அந்த அழைப்புக்குச் சாதகமான பதிலை அளிப்பதற்கு அந்த வேளையில் என்னால் இயலாதிருந்தது. இரண்டு சிறு குழந்தைகளின் தாய் என்ற வகையில், நாட்டில் சுற்றுச்சூழலைத் துப்புரவாகப் பேணுவதற்கான எனது செயற்பாடுகளில் நான் எதிரிகளால் சிரமங்களை அனுபவிக்கும் அனுபவங்களைப் பெற்றிருந்த சமயம் அதுவாகும். அத்தகைய பின்னணியில் யுத்தசூழல் நிலவும் வவுனியா பிரதேசத்துக்குச் செல்வதற்கு எனக்குள் என்னையறியாமலேயே ஒருவித தயக்கம் ஏற்பட்டதென்னமோ உண்மைதான். என்னால் அது குறித்து எவ்வித தீர்மானமும் மேற்கொள்ள இயலவில்லை. எனவே, எனது அச்சிரமத்தை எடுத்துக்கூறி, அவ்விடயம் தொடர்பாக எனது கணவருடன் வந்து கலந்தாலோசிக்குமாறு அந்த அழைப்பை விடுத்தவர்களைக் கேட்டுக்கொண்டேன். எனது அந்த வேண்டுகோளுக்கு அமைய எனது கணவரான "அருண'வுடன் அவ்விட யம் தொடர்பாகக் கலந்துரையாடவென வவுனியா மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளரும், வவுனியா மாவட்டத்தில் இயங்கும் ஜீ.ரீ.இசற் நிறுவனத்தின் தலைவரும் நேரில் வந்திருந்தனர். அவர்களது கடும் வற்புறுத்தல் காரணமாக நான் ஒரு தடவையாவது அவர்களது வேண்டுகோளை ஏற்று வவுனியாவுக்குச் செல்லவேண்டுமெனத் தீர்மானித்தேன்.

சீரழிந்த நிலையில் இருண்டுபோன நகரம்

இணங்கிக்கொண்டதற்கமைய, நாம் மூவரும் வவுனியா நகரை நோக்கி எமது பயணத்தை ஆரம்பித்தோம். நாட்டின் நகர்ப்புறங்களைப் பின்தள்ளி எமது பயணம் தொடர்ந்தபோது உண்மையில் இலங்கையை விட்டுத் தூர விலகிச் செல்வதாகவே நான் உணரத் தலைப்பட்டேன். ஆபத்து நிறைந்த, அழிவடைந்த, கடும் வறுமையில் வாடும் பொதுமக்கள் வாழ்க்கை நடத்தும் பிரதேசமாக அப்பகுதிகள் எனது கண்களுக்குத் தோன்றின. அத்தகைய சகல ஆபத்து உணர்வின் மத்தியில் எனது மனது மெதுமெதுவாக அந்தப் பிரதேசத்தின் மீது லயிக்கத் தொடங்கியது. நாட்டின் ஏனைய மற்றப்பகுதிகளைவிட அந்தப் பிரதேசத்தின் மீது என்னையறியாமலே எனது மனதில் ஈடுபாடு அதிகரித்தது. பெரும்பான்மையினரால் மறக்கப்பட்டுவிட்ட ஆனால் இலங்கையர்களே வாழ்ந்து வரும் அப்பிரதேசம் ஏனைய பிரதேசங்களைவிட அதிகமாக என்னிடமிருந்து எதனையோ எதிர்பார்ப்பதாக நான் உணரத் தலைப்பட்டேன். வவுனியா நகர்ப்பகுதிகூட சீரழிந்த நிலையிலேயே காணப்பட்டது. நகரமே இருண்டு போயுள்ளதாக என்னுள் ஓர் உணர்வு தலைதூக்கியிருந்தது. கூடவே இந்தத் தோற்றத்தை இந்த நிலையை எப்படியாவது மாற்றியமைத்தே ஆகவேண்டுமென்ற ஓர் உணர்வு என் மனதில் தலைதூக்கியது. இதன் காரணமாக, வவுனியாவுக்குச் சென்ற முதல் நாளன்றே நான் வவுனியாவுடன் என்னைப் பிணைத்துக்கொள்ளச் செய்வதில் எனது தலைவிதி வெற்றிகண்டுவிட்டது.

வவுனியாவில் தங்கியிருந்த வேளையில் ஒருநாள் நான் வவுனியாவிலிருந்த அகதிமுகாமொன்றுக்குக்குச் செல்ல நேர்ந்தது. நான் அங்கு காண நேர்ந்த மோசமான காட்சியை நான் எனது வாழ்நாளில் முன்னொருபோதும் கண்டதேயில்லை. வெளிநாட்டு வாழ்க்கை நினைவுகள் யாவற்றையும் பிள்தள்ளி, நான் அங்கு காணநேர்ந்த காட்சி எனது மனதை ரணகளமாக்கிவிட்டது. ஓர் அறையினுள் பல குடும்பங்கள் தத்தமது பாவனைப் பொருள்களைத் தமக்கு முன்னால் பரப்பிவைத்தவாறே, அந்த அறையில் தாம் உட்கார்ந்திருக்கும் அச்சிறு நிலத்துண்டே தமது சொந்தமெனக் கருதி வாழவேண்டிய நிலையில் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்ததை நான் காணநேர்ந்தது. அக்காட்சியைக் காண நேர்ந்த எனக்கு மனதில் உருவான பரிதாப உணர்வு காரணமாக கவலையால் கண்களில் துளிர்த்த கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொள்ள இயலாமல் நான் அந்த அகதி முகாமைவிட்டு விரைவாக வெளியேறிவிட்டேன். இந்த மக்களது வாழ்க்கை நிலை இவ்விதம் சீரழிய நேர்ந்ததேன்? யுத்தம் காரணமாக தத்தமது தொழில், வாழ்விடம், பொருள் பண்டங்கள் என்பவற்றையெல்லாம் கைவிட்டு அகதிகளாக வெளியேறி இவ்விதம் அகதி முகாம்களில் தஞ்சமடைந்து, புடைவைத் துணித் துண்டுகளால் பிரிக்கப்பட்ட சிறிய அறையொன்றில் ஒருபுறத்தில் தமது பொருள்கள், உடுதுணிகள் அடங்கிய சூட்கேஸை வைத்து, தமது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒன்றாக வாழ்க்கையை ஓட்டநேர்ந்திருப்பது எந்த அளவுக்கு நியாயமற்ற நிலைப்பாடு தலைவிதி என்பதையும் நான் கஷ்டத்துடன் ஜீரணிக்க வேண்டியிருந்தது. அத்தகைய அபலைகளது நிலை குறித்து கொழும்பில் வாழும் பொதுமக்கள் ஏதாவது ஒரு சிறிதளவாவது தெரிந்துகொண்டுள்ளார்களா? நான் அவர்களுக்குக் கொடுப்பதற்கென எடுத்துச் சென்றிருந்த "பிஸ்கெட்'டுகளை விநியோகிக்க ஆரம்பித்த வேளை, ஒரு "பிஸ்கெட்'டை என்னிடமிருந்து வாங்கிக்கொள்வதற்கு முண்டியடித்து ஒருவரையொருவர் நெருங்கித் தள்ளிப் போட்டிபோட்டவர்கள் சிறு பராயத்தினர் என்றல்லாது வயது முதிர்ந்தவர்களும்கூடத்தான். அவர்கள் மனரீதியில் எந்த அளவுக்கு விரக்திக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அந்தச் சம்பவத்தின் மூலம் என்னால் எடைபோட முடிந்தது.

வவுனிய நகரசபையினரின்

இத்தகைய பின்னணி நிலவிய சூழலிலும், வவுனியா நகரசபை அதிகாரிகள் தமது நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேரும் குப்பைகூளங்கள் ஒழுங்கற்ற விதத்தில் வீசப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புக்குத் தீர்வொன்றைக் காண்பதற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டு செயற்படுவதற்குக் கடும் ஆர்வம் காட்டியமையை என்னால் அவதானிக்கமுடிந்தது. அவ்விடயம் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முடிவில் வவுனியா வேப்பங்குளம் பிரதேசத்தில் இயற்கைக் கூட்டெரு உற்பத்தி நிலையமொன்றை நிறுவுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தேவையான உபகரணங்களையும் இடத்தையும் ஒழுங்குசெய்து கொடுக்க ஜீ.ரி.இசற் நிறுவனம் முன்வந்திருந்தது. அந்த விடயத்தில் வேலைத்திட்டத்துக்கான ஆலோசகராகர் மற்றும் அத்திட்டத்தால் ஈட்டிக்கொள்ளத்தக்க நன்மைகள் குறித்து அப்பிரதேச பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறி விளக்கி, அப்பகுதிப் பொதுமக்களுக்கு அத்தகைய செயற்பாடுகளில் ஆர்வத்தைத் தூண்டிவிடுவது என்பனவற்றுக்கான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் ஒன்றுசேர்த்துச் சேகரிக்கப்படும் குப்பைகூளங்களை ஒரு சீரில் நறுக்கி சிறு துண்டங்களாக ஆக்குவதற்கான இயந்திரம் பெற்றுக்கொள்ளல், அத்தகைய குப்பை கூழங்களைக் குறிப்பிட்ட இயற்கைக் கூட்டெரு தயாரிக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்வது தொடர்பான அவசிய அளவுப் பிரமாணங்களைத் தீர்மானித்தல், கூட்டெரு தயாரிப்புக்காக உக்கிப்போவதற்காகப் பாடம் பண்ணிவைக்கப்படும் குப்பை கூளங்களிலிருந்து வெளியேறும் நீர்ச்சாற்றைச் சேகரிக்கும் நடைமுறையை உருவாக்கல் மற்றும் உக்கிய குப்பை கூளங்களிலிருந்து வெளியேறும் "மீதேன்' வாயுவை வெளியேற்றும் நடைமுறையை உருவாக்கல் என்பவை தொடர்பாக பல கோணங்களிலும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் முடிவில் அவசியமான தீர்மானங்களும் எம்மால் மேற்கொள்ளப்பட்டன.

ஒருபோதும் மறக்க இயலாத சம்பவம்

அதுமட்டுமல்லாது, முக்கியமாக மேற்குறிப்பிட்ட இயற்கைக் கூட்டெரு தயாரிப்புக்காக எமது அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் ஒன்றுதிரட்டப்படும் குப்பைகூளங்களை எந்தவிதத்தில் வேறுபடுத்திச் சேர்க்கவேண்டும் என்பது குறித்து அப்பகுதிப் பொதுமக்களுக்கு அறியத்தரும் நடவடிக்கைகளைத் தெருத்தெருவாகப் பிரசார நடவடிக்கையாக மேற்கொண்டோம். சிங்களக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலமைந்த உடைகளை அணிந்த சிங்கள மொழியில் உரையாடும் என்மீது, தமிழ்மொழிபேசும் வவுனியா நகர்ப்புற மக்கள் ஆச்சரியப்படத்தக்க விதத்திலான ஒத்துழைப்பு வழங்கியதை அன்பு காட்டி சிநேகித பாவத்துடன் பழகியதை என்னால் ஒருபோதும் மறந்துவிட இயலாது. யுத்த சூழல் அந்த வவுனியாப் பிரதேசத்தில் நிலவுகிறது என்ற யதார்த்தத்தை அந்த வேளையில் நாம் அனைவரும் மறந்திருந்தோம். நாம் ஓரோர் சமயம் சிரித்துப் பேசிப் பழகிக் குதூகலித்தோம். பிரச்சினைகள் குறித்துப் பேசிக்கொள்ள நேர்ந்த வேளையில் மனது இறுகி மௌனித்தோம். மகிழ்ச்சி, துக்கம் ஆகிய மாறுபட்ட உணர்வுகளுக்கு மாறிமாறி உள்ளானோம். ஆனால் இவையாவற்றுக்கும் மேலாக எமக்கு அச்சுறுத்தலாக அமைந்த வவுனியா நகர்ப்புறச் சூழல் மாசடையும் பிரச்சினைக்கு எவ்விதத்திலாவது தீர்வுகண்டுவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பே எமது மனங்கள் மத்தியில் விரவிக்காணப்பட்டது. நான் சிங்கள மொழியில் தெரிவிக்கும் கருத்துகளை உடனுக்குடன் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து அந்தச் சுற்றாடலில் வாழும் தமிழ் மக்களுக்கு எமது குழுவைச் சேர்ந்த தமிழரான உத்தியோகத்தரொருவர் சிறந்த முறையில் விளக்கமளித்து வந்தார். பொதுமக்கள் சுதந்திரமாக வெளியிட்ட கருத்துகளையும் உற்சாகமூட்டி வரவேற்று, அவை குறித்து கலந்துரையாடி, உரிய வகையில் கருத்தில் எடுத்துக்கொண்டோம். அந்தவகையில் யுத்த சூழல் நிலவும் ஒரு பின்னணியில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகக் குப்பைகூளங்கள் குறித்த பிரச்சினைக்கான தீர்வு குறித்து அப்பிரதேச பொதுமக்களை உணரவைப்பது நான் எதிர்நோக்கிய பாரிய சவாலாக அமைந்தது.

அனைத்து வர்த்தகர்களும்

அழைப்பை ஏற்றுப்பங்கு கொண்டனர்

பிறிதொருநாள், வவுனியா நகரத்தில் இயங்கும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு இப்பிரச்சினை குறித்து எடுத்து விளக்குவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தோம். யுத்தசூழ்நிலை காரணமாகப் பெரும்பாலான வேளைகளில் பூட்டப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை இந்த விடயம் தொடர்பாக ஒன்றுதிரட்டிக் கலந்துரையாடுவது எமக்கு இலோசனதொன்றாக அமையவில்லை. இவ்விடயம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு நாம் ஏற்கனவே அறிவுறுத்தல் மற்றும் வேண்டுகோள் என்ற வகையில் விவரங்களைத் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனாலும் எமது குறிக்கோள் வெற்றிகரமாக அமையவேண்டுமானால், வவுனியா நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களையும் நான் தனிப்பட்ட முறையில் நேரிடையாகச் சந்தித்துக் கலந்துரையாடவேண்டியது மிக முக்கியமானதென நான் நம்பினேன். பலரது விரும்பமின்மைக்கு மத்தியிலும் ஆனால் அந்த வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி நான் வவுனியா நகரின் சகல வர்த்தக நிலையங்களுக்கும் நேரில் சென்று, அந்நிலையங்களின் உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட எமது வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தேன். எனது அத்தகைய அழைப்பை ஏற்று வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பெருந்திரளாக அவர்கள் கலந்துகொண்டனர். சிங்கள மொழி பேசுவோரும், தமிழ்பேசுவோரும் நாட்டின் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும், நாட்டின் எதிர்காலத்துக்கான எமது பொறுப்பை நிறைவேற்றுவதே எமது ஒரே குறிக்கோளாக அமைந்தது.

உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கிய செயல்

வவுனியா நகருள் நுழையும் இடத்திலுள்ள பாடசாலையொன்றின் ஒருநாள் எமது வேலைப்பட்டறையொன்றை ஒழுங்குசெய்து நடத்தினோம். தமது பாடசாலை மதிற்சுவர்களில் தமது அழகான ஓவியங்கள் மூலம் சமூகத்துக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்து உணர்த்தும் செயற்பாடுகளை முன்னர் அப்பாடசாலை மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர். நாம் அங்கு சென்ற வேளையில் அவற்றில் பல சித்திரங்கள் அழிந்து சிதைந்து காணப்பட்டன. ஆனால், எமது அன்றைய வேலைப்பட்டறை நிகழ்வின் பின்னர், அப்பாடசாலையில் கற்று வெளியேறிய மாணவர்கள்கூட, ஏனைய மாணவர்களுடன் இணைந்து அத்கைய சித்திரங்களை மீண்டும் புதுப்பித்து வரைவதில் உற்சாகத்துடன் ஈடுபட்டமையை எம்மால் அவதானிக்கமுடிந்தது. அதேபோன்று வவுனியா நகர்ப்புறத்திலுள்ள மற்றொரு பாடசாலையில் உலக சுற்றாடல் தினத்தன்று அது தொடர்பாக அக்கறை காட்டும் பொதுமக்கள் முன்னிலையில் அப்பாடசாலை மாணவர்கள் சுற்றாடல் பாதுகாப்பின் அவசியம் குறித்து உரையாற்றியமை, நாம் மேற்கொண்ட தூண்டுதல்களின் விளைவேயாகும். அதுமட்டுமன்றி கழிவுக் கடதாசியைப் பயன்படுத்தி புதிய கடதாசியை உருவாக்கி, அதில் எனக்கு வாழத்துமடல் அனுப்பும் அளவுக்கு எமது அந்த வேலைப்பட்டறை நிகழ்வு அவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்று அகதி முகாமொன்றுக்கு அருகிலுள்ள பாடசாலையொன்றில் கற்கும் மாணவர்கள் கழிவுக்கடதாசியைப் பயன்படுத்தி கைவினைப் பொருள்கள் உருவாக்கி எனக்குப் பரிசளித்தும் மகிழ்ந்தனர்.

அகதி முகாம்களில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதலின் அவசியம் குறித்து அடிக்கடி உரையாற்ற எனக்குச் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அந்த அகதி முகாம்களில் எமது குழுவினர் சிரமதான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மிகச் சிரமமான நிலையில் அந்த அகதி முகாம்களில் வாழ்ந்தபோதிலும், அங்குள்ள மக்கள் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளவும், சுயதொழில்களில் ஈடுபடவும் அக்கறை காட்டினர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய வேலைப்பட்டறைகளில் என்னுடன் இணைந்து செயற்பட்டபெண்கள் பலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எமது வாழ்க்கையை உரியமுறையில் மேற்கொள்வதற்கு அத்தியாவசியமானதொன்று என்பதை உணர்ந்து தற்போதுகூட அத்தகைய வேலைப்பட்டறைகளில் ஒன்றிணைந்து உற்சாகத்துடன் செயற்பட்டு வருவதைக் காணநேர்ந்தபோது எனக்குப் பெரும் மனத்திருப்தி ஏற்பட்டது.

கொடூரமான தலைவிதிக்கு

முழு நாடும் உட்பட நேர்ந்துள்ளது

எனது அந்தப் பயணத்தின்போது பல இரவுகளை நான் வவுனியாவில் கழிக்கநேர்ந்தது. சில நாள்களில் மாலை வேளைகளில் வீட்டிற்கு வெளியில் திறந்தவெளியில் உட்கார்த்திருந்த வேளைகளில் தூரத்தில் வெடிச்சத்தங்களைக் கேட்க நேர்ந்தது. துப்பாக்கிவேட்டுச் சத்தம் காதில் கேட்ட வேளைகளிலெல்லாம், இந்த நாட்டில் பிறந்து, வளர்ந்த எவரோ ஒரு சகோதரனினதோ சகோதரியினதோ உயிர் பறிக்கப்படுகிறது என்ற உணர்வே தலைதூக்கும். இரவு வேளைகளில் வெடிச்சத்தங்கள் காதில் கேட்கும் சந்தர்ப்பங்களிளெல்லாம் இலங்கையின் ஒரு பகுதியில் வாழும் பொதுமக்கள் அமைதியாகத் தூங்கும் அதேசமயம், மற்றொரு பகுதியில் வாழும் பொதுமக்கள் தூக்கமின்றி, அச்சத்துடன் அந்த இரவைக் கழிக்க ÷ந்ந்துள்ளதே என எனது மனது பச்சாதாபப்படும். அப்பகுதிகளில் வாழும் பெரும்பாலான பள்ளிச் சிறார்களுக்குத் துப்பாக்கி வேட்டுச் சத்தம், குண்டு வெடிப்புச் சத்தம் என்பவை பழக்கமானதொன்றாக ஆகிவிட்டுள்ளது. இன்று அத்தகைய யுத்த சூழல் கொழும்பையும் பற்றிக் கொண்டுள்ளது. அந்தவகையில் இன்று அத்தகைய கொடூரமான தலைவிதிக்கு முழு நாடுமே உட்பட நேர்ந்துள்ளது. இத்தகைய நிலை உருவாகக் காரணமென்ன என நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. இத்தகைய தவறுகளுக்கு எவர் காரணமாக அமைந்தபோதிலும், அத்தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு நாம் எம்மால் ஆனதைச் செய்தாக வேண்டும் என நான் எண்ணத் தலைப்பட்டுள்ளேன். தொடர்ந்தும் அகதி முகாம்களில் இந்நாட்டின் பொதுமக்களில் ஒரு தரப்பினர் அகதிகளாக வாழ்க்கை நடத்துவதை வெறுமனே பார்த்துக்கொண்டு நாம் மௌனம் சாதித்தலாகாது. அவர்கள்கூட இந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுத்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.