Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்” - ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஜோ பைடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்” - ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஜோ பைடன்

முழுமையான படை பலத்துடன் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்கப்படும் என்பதுடன் உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

President Joe Biden said during his first State of the Union on Tuesday evening that President Vladimir Putin is 'more isolated than ever' and told Russian oligarchs 'we're coming for you' as Moscow continues its attack on Kyiv. Pictured behind the president are Vice President Kamala Harris and Speaker of the House Nancy Pelosi

அத்துடன் ரஷ்யாவின் அனைத்து விமானங்களும் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடைவிதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று செனட் சபையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய நட்பு நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைப்பலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.

அமெரிக்க நீதித்துறை, ரஷ்ய தன்னலக்குழுக்களின் குற்றங்களை கண்காணிக்க ஒரு பிரத்தியேக பணிக்குழுவைக் கூட்டி வருகிறது.

நாங்கள், அமெரிக்கா, உக்ரேனிய மக்களுடன் துணை நிற்கிறோம், உக்ரேனியர்கள் தூய்மையான தைரியத்துடன் போராடுகிறார்கள். 

uk-s.gif

புடின் போர்க்களத்தில் ஆதாயங்களை பெறலாம் ஆனால் நீண்ட காலத்திற்கு அவர் தொடர்ந்து அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

அமெரிக்க நீதித்துறை, ரஷ்ய தன்னலக்குழுக்களின் குற்றங்களை கண்காணிக்க ஒரு பிரத்யேக பணிக்குழுவைக் கூட்டி வருகிறது. 

உங்களின் படகுகள், உங்கள் சொகுசு குடியிருப்புகள், உங்கள் தனியார் ஜெட் விமானங்களைக் கண்டுபிடித்து கைப்பற்ற எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் நாங்கள் இணைகிறோம்.

அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் அமெரிக்க வான்வெளியை மூடுவதில் நாங்கள் எங்கள் கூட்டு நாடுகளுடன் இணைவோம். நமது பொருளாதாரம் கடந்த ஆண்டு அமெரிக்காவில் 6.5 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்கியது. முன்பை விட ஒரு வருடத்தில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புடின் உக்ரைன் தலைநகர் கீவ்வை இராணுவ டாங்கிகளுடன் சுற்றி வரலாம் ஆனால் உக்ரேனிய மக்களின் இதயங்களை அவர் ஒருபோதும் பெறமாட்டார். 

A convoy of Russian tanks, artillery pieces, fighting vehicles and support trucks now stretches all the way from Hostomel, on the outskirts of Kyiv, to the village of Prybirs'k some 40 miles away (part of the convoy is seen, right)

சுதந்திர உலகின் உறுதியை அவர் ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது.

ஒரு ரஷ்ய சர்வாதிகாரி, ஒரு வெளிநாட்டை ஆக்கிரமித்ததால், உலகம் முழுவதுக்கும் செலவுகள் அதிகரித்துள்ளது. 

ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போரில், ஜனநாயகம் தற்போது உயர்ந்து வருகிறது” என்று அவர் கூறினார்.

உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புடின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது’’ என்றார்.

முன்னதாக,  சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காதபோது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம்.

The image was released before Russia was slammed for bombing the Babyn Yar Holocaust memorial in Kyiv on the site of one of the biggest single massacres of Jews during the Holocaust. Explosions erupted around the capital's 1,300-ft TV tower this afternoon, built by the ravine where nearly 34,000 Jews were killed by SS troops in two days in 1941 during Adolf Hitler's campaign against the Soviet Union.

அவர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர். புடினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. 

இராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புடின் நிராகரித்துவிட்டார்.

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புடின் நினைத்துவிட்டார். புடின் தவறாக நினைத்துவிட்டார்’’ எனத் தெரிவித்திருந்தார்.
 

https://www.virakesari.lk/article/123382

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.