Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருதிவழியும் உக்ரைன் மண்ணில்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருதிவழியும் உக்ரைன் மண்ணில்...
அடிக்கடி ஜியோபாலிடிக்ஸ் குறித்து எழுதும் உங்களிடமிருந்து ஏன் ஒன்றுமே காணோமெனக் கேட்டுவிட்டனர். எழுதக்கூடாதென்பதில்லை; தமிழ்ச்சூழலில் காணப்படும் ஃபேக்நியூஸ்களும், ஒருதலைப்பட்சமான அமெரிக்க எதிர்ப்பு மனநிலையும்தான் காரணம், எழுதாமல் இருப்பதற்கு.

கடைசியாக இது குறித்து நாம் எழுதியதில் குறிப்பிடப்பட்டது, உக்ரைன் நாட்டு மக்களிடையே இருக்கும் நேசனலிசம்தான் சாய்வுத்தன்மைக்கு வித்திட்டுவிட்டது; அதுவே போர்வரையிலும் இழுத்து வந்துவிட்டதெனக் குறிப்பிட்டு இருந்தோம். அது இன்றளவும் அப்படியே இருக்கின்றது. கூடவே, சர்வாதிகாரி புடினின் மனக்குலைவு என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. புடீனுக்கு வயது 69. வயோதிகத்தின் பொருட்டு, தன் செங்கோலாட்சி முடிவுக்கு வந்து கொண்டிருப்பதை உணர்ந்து, அதற்குள் இன்னின்னது செய்து கோலோச்ச வேண்டுமென நினைத்திருப்பார் போலிருக்கின்றது. சொந்த செலவில் சூன்யம். ஏழாவது நாளுக்குள் போர்க்களம். குறிப்பிடத்தக்க வெற்றி ஏதுமில்லை.

உக்ரைன் தரப்புச் செய்திகளை எங்கும் காணலாம். ஆனால் இரஷ்யத் தரப்புச் செய்திகளைப் பார்க்கவே முடியாது. என்ன காரணம்? இரஷ்யாவில் அடிப்படை மனிதவுரிமைகள் இல்லாததுதான் காரணம். அரசுதரப்பு ஊடகங்கள் மட்டுமே இயங்கலாம். அத்தகைய அரசுதரப்பு ஊடகங்கள், புடினின் ஊதுகுழலாக இருப்பதால், அவற்றுக்கு ஊடகவெளிச்சம் இல்லை. மாறாக, தனியார் ஊடகங்கள் அல்லது தனிமனிதர்களின் கருத்துப் பகிர்வுகள் இருக்குமேயானால், அவை வெளியுலகத்தின் பார்வைக்குக் கிடைத்திருக்கும். https://www.themoscowtimes.com/, https://www.rt.com/ முதலான இரஷ்யாவைச் சார்ந்த பக்கங்கள் இருப்பினும், அவையும் வெளியுலகச் செய்திகளைத்தான் அறியத் தருகின்றனவேவொழிய, போர் குறித்த தன் தரப்புத் தகவல்களைக் கொடுக்கமாட்டேனென்கின்றது. ஆக, மொத்தத்தில் 22 ஆண்டுகளாக இருண்டவுலகில் இரஷ்யா.

 ஒரு காலத்தில் இரஷ்யாவின் ரூபில்  37 அமெரிக்க செண்ட்கள்; இன்று ஒரு ரூபிலுக்கு 9 அமெரிக்க செண்ட்கள். கிட்டத்தட்ட வெளியுலகப் பணப்பரிவர்த்தனை, வணிகம் என்பதினின்று ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுவிட்டது இரஷ்யா. நல்லகாலத்திலேயே, சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் 50%, சாப்பாட்டுக்கே போய்விடும். இனி எப்படி இருக்கப் போகின்றதோ தெரியாது. மக்களின் சேமிப்பு காற்றில் கரைந்து விட்டது. வங்கியில் பணம் போட்டால், 10% வட்டியாக இருந்ததை 20% என்பதாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டு நிறுவனங்கள் மூடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு வான்வெளியில் பலநாடுகள் தடை. இப்படி, உலகினின்று சமூகவிலக்கம் செய்யப்பட்டநிலை.

உக்ரைன் பகுதியில் பலத்த உயிர்ச்சேதம். 600 பேருக்கு மேல் குண்டுவீச்சுக்கு பலியானதாக அரசு தரப்பு குறிப்பிடுகின்றது. இரஷ்யத் தரப்பில் 3000+ மேல் பலியானதாக, உக்ரைன் தரப்புச் சொல்கின்றது. ஆனால் அது நம்பகமானதா தெரியாது. மூன்றாம் தரப்பின்படி, 700க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. , இரஷ்யவீரர்களை அடையாளம் கண்டு கொண்டு இருப்பிடம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் என்பதாக ஒருவலைதளத்தைக் கட்டமைத்திருக்கின்றது உக்ரைன் தரப்பு. https://200rf.com/ அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் டெலிகிராம் சேனலுக்குச் சென்று பார்த்தால், ஏராளமான சிதைந்த தளவாடங்கள், வீரர்கள், உயிருடன் பலர் எனக் காண்பதற்கு ஒவ்வாத வகையில் வீடியோக்களும் படங்களும். இரஷ்யன் மொழியில் பேசுகின்றனர். வலுக்கட்டாயமாகப் போர்முனைக்கு அழைத்து விட்டனர் என்பதாகப் பேசுகின்றனர்.

அண்மையில் கிடைத்த செய்தியின்படி, ஆங்காங்கே இருந்த இரஷ்யப்படையினர் ஓரிடத்தில் கூடியிருப்பதாகவும், அவர்களுக்கு உரிய பெட்ரோல், உணவு இல்லாத நிலையில், மனம் தளர்ந்த நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. https://www.reuters.com/world/europe/russian-move-kyiv-stalled-now-may-be-rethinking-approach-us-official-2022-03-01/ வான்வெளியையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் இரஷ்யாவினால் கொண்டுவர முடியவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. The Russian military advance drew to within 15 miles of Kyiv’s center amid signs that troops are running out of gas and food, a senior U.S. Defense Department official said Tuesday. Russia has committed about 80% of the combat force President Vladimir Putin deployed to invade Ukraine, the official said. https://www.usatoday.com/story/news/politics/2022/03/01/ukraine-russia-invasion-live-updates/9327835002/

புடின் அவர்களோடு ஒரு மணி நேரத்துக்கும் சற்று கூடுதலாகப் பேசிய பிரான்சு அதிபர் அலுவலகச் செய்திகளின்படி, அவரின் மனநிலையில் என்றுமில்லாத தளர்வு இருப்பதாகவும், தனிமையில் நேரத்தைக் கழிப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சர்வாதிகாரியின் மனம் மிகவும் பொல்லாதது. கைகளில் அணு ஆயுதங்கள். அவரது ஈகோவுக்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டேவும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில்தான் மேற்குலகத்தின் வெற்றி இருக்கின்றதெனக் குறிப்பிடுகின்றார் ஜியோபாலிடிக் பத்திரிகையாளரொருவர். https://www.msnbc.com/opinion/msnbc-opinion/russia-s-ukraine-invasion-could-lead-putin-s-downfall-n1289955

-பழமைபேசி. 03/01/2022, 5.30pm EST.

பணிவுடன் பழமைபேசி

http://maniyinpakkam.blogspot.com/2022/03/blog-post.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

உக்ரைன் தரப்புச் செய்திகளை எங்கும் காணலாம். ஆனால் இரஷ்யத் தரப்புச் செய்திகளைப் பார்க்கவே முடியாது. என்ன காரணம்? இரஷ்யாவில் அடிப்படை மனிதவுரிமைகள் இல்லாததுதான் காரணம்.

ஓ.....பத்திரிக்கைகாரரே! நீங்கள் போற்றும் அமெரிக்காவிலும் மனித சுதந்திரம் ஒழுங்காக இல்லை.....

அங்கே கறுப்பின மக்களின் அவலங்கள் உங்களுக்கு தெரியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.