Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கைப் பிரிப்பது ஒரு அரசியல் சதி இதனை சவாலாக கூட்டமைப்பு சந்திக்கும்

Featured Replies

கிழக்கைப் பிரிப்பது ஒரு அரசியல் சதி இதனை சவாலாக கூட்டமைப்பு சந்திக்கும்

[29 - July - 2007] [Font Size - A - A - A]

* கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா

-பி.ரவிவர்மன்-

உயிருக்கு அஞ்சினால் இன்றைய அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது. படுகொலைக் கலாசாரம் ஜனநாயக அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் அரச சார்பற்ற சக்திகளும் அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை குறிவைத்துக் கொண்டேயிருக்கும். ஆனால், ஒன்று படுகொலைகளாலோ அல்லது விசாரணை என்ற போர்வையினாலோ அச்சுறுத்தல்களாலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையோ அடிபணிய வைக்க முடியும் என்று அரசு கருதுமானால் அதுவொரு வெறும் பகற்கனவாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் என்பன தொடர்பாக ஞாயிறு தினக்குரலுக்கு ஸ்ரீகாந்தா எம்.பி.வழங்கிய விசேட பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கே: கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசு தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றது. அதற்காக உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தையும் கொண்டு வந்துள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கையாளப் போகின்றது?

ப: கிழக்கு மாகாணத்தில் - திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வருடம் சித்திரை மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தமிழர் பெரும்பான்மையாக உள்ள அத்தனை உள்ளூராட்சி சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பாரிய வெற்றியுடன் கைப்பற்றியது. ஏனைய சபைகளிலும் தமிழருக்கு உரிய பிரதிநிதித்துவம் கூட்டமைப்புக்கே கிடைத்தது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டிருந்தது. காரணம் அங்கிருந்த கள நிலைமை. இப்போது நிலைமை மிக மிக மோசமடைந்துள்ளது.

நடந்து முடிந்த மோதல்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீளக் குடியேற்றப்பட்டோரும் அச்சத்துடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். கொலைகள் ஆட் கடத்தல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடத்தக் கூடிய நிலைமை அங்கில்லை. இதனைப் புதிய சட்டமூலமே ஏற்றுக்கொள்கின்றது. அதனால்தான் தனக்குரிய வாக்கெடுப்பு நிலையத்தில் சுதந்திரமாக தனது வாக்கை அளிக்க முடியாதுள்ளதென நியாயமாக அச்சமடைகின்ற எந்தவொரு வாக்காளரும் வேறொரு வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்க சட்டமூலம் இடமளிக்கின்றது.

இது முன் எப்பொழுதும் இருந்திராத நிலைமை . நானறிந்த வரையில் சட்டத்தில் முன் ஒரு போதும் இப்படியான ஏற்பாடு இருந்ததில்லை.

கே: நிலைமை இப்படி இருக்கையில் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏன் அவசரப்படுகின்றது? ஒரு வருடத்திற்கு முன் தாக்கல் செய்யப்பட்டிருந்த நியமனப் பத்திரங்களை ரத்து செய்து புதிய நியமனப் பத்திரங்களைக் கோரி இந்தப் புதிய சட்டத்தை அவசரம் அவசரமாக ஏன் கொண்டு வந்திருக்கின்றது?

ப: காரணம் அனைவருக்கும் தெரியும். கிழக்கில் அராஜக அட்டகாசங்களை இரவும் பகலும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் ஆயுதக் குழுக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட வைத்து ஓர் மோசடியான தேர்தல் ஊடாக தமிழர் பெரும்பான்மையாக உள்ள மட்டக்களப்பு மாநகரையும் மற்றும் எட்டுப் பிரதேச சபைகளையும் அக் குழுக்களிடம் ஒப்படைத்து அவற்றுக்கு பிரதிநிதித்துவ அந்தஸ்து என்ற மகுடத்தையும் சூட்டி ஓர் மாற்றுத் தலைமையை - போட்டித் தலைமையை கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கி உலவ விடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தமிழ்த் தேசிய எழுச்சியின் அடிப்படையிலான தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் திட்டத்தின் முதற்படியாக எமது தாயகத்தை வடக்கு என்றும் கிழக்கு என்றும் கூறு போடுவதற்கு முனைந்துள்ள அரசாங்கம் கிழக்கில் உள்ள துரோகக் கும்பல்களை பிரதிநிதித்துவ லேபலுடன் ஜனநாயக அரங்கிற்குக் கொண்டு வரத் துடிக்கின்றது.

இந்தக் கும்பல்களைப் பயன்படுத்தி `தனியான கிழக்கு' என்ற கோஷத்தைக் கோடரியாக அவற்றின் கைகளில் கொடுத்து தமிழினத்தின் தேசிய ஒற்றுமையை வெட்டிப் பிளந்து விடுதலை எழுச்சியை தோற்கடிக்க முடியும் என்றும் ஜனாதிபதியும் அவரின் அரசாங்கக் கூட்டாளிகளும் மனப்பூர்வமாக நம்புகின்றனர்.

இது ஒரு அரசியற் சதி! இதனை ஓர் சவாலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும். உரிய நேரத்தில் தகுந்த முடிவுகளை எடுத்துக் கூட்டமைப்பு செயற்படும்.

கே: மூதூர் கிழக்கு அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக....?

ப: திருகோணமலை மாவட்டத்தில் பழந்தமிழ்க் கிராமங்களைக் கொண்ட மூதூர் கிழக்குப் பிரதேசத்தை தமிழரிடமிருந்து பறித்துப் படிப்படியாக சிங்கள மயமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதில் அது வெற்றி காணுமானால் திருகோணமலை மாவட்டத்தை முற்று முழுதாக தமிழினம் இழந்து விடும் ஆபத்து தமிழர்களுக்கு மாத்திரமல்ல எமது முஸ்லிம் சகோதரர்களுக்கும் ஏற்படும். ஏற்கனவே கந்தளாய்ப் பிரதேசத்தை இழந்து விட்டோம்.

திருகோணமலை நகரின் நுழைவாயில் வரையில் பல்வேறு ஊடறுப்புகள், அழகிய பெயர்களைக் கொண்டிருந்த பல கிராமங்கள் முற்றிலும் உருமாறி பெயர் மாறியுள்ளன. நிலம் போய் விட்டால் இனம் வாழ முடியாது.

எந்த விலை கொடுத்தேனும் மூதூரை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும்.

கே: கிழக்கில் அரச படையினர் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் புனித பூமித் திட்டம் என்ற போர்வையில் தொல்பொருள் ஆய்வுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை பற்றி....?

ப: கிழக்கு மாகாணத்தை கபளீகரம் செய்யும் பாரிய திட்டத்தின் இன்னுமோர் அங்கம் இது!

தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. கிழக்கு தமிழ் மாகாணம். யாழ்ப்பாணத் தமிழ் அரசுக்கு காவல் அரணாக தன் தெற்கெல்லையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த வன்னிமைகள் என்றழைக்கப்பட்ட குறுநில ராஜ்ஜியங்கள் மேற்கே புத்தளம் தாண்டி சிலாபம் வரையிலும், கிழக்கே கொக்கிளாய் முதல் உகந்தை வரையிலும் பரவிக் கிடந்தன. சில காலங்களில் கிழக்கு வன்னிமைகள் கண்டி அரசின் மேலாதிக்கத்தின் கீழ் வந்த போதிலும் அவற்றின் தலைவர்களும் தமிழர்களாகவே தொடர்ந்திருந்தனர். இது வரலாறு. தொல்பொருள் அகழ்வுகளும் , ஆய்வுகளும் இதையே உறுதிப்படுத்தும்.

சோழர் படைகளும் பாண்டியப் படைகளும் வெற்றி நடை போட்ட கிழக்குத் தமிழ் மண்ணில் விகாரைகளையும் தொடர்ந்து சிங்களக் குடியேற்றங்களையும் மேலும் கொண்டு வர எம் இனம் அனுமதிக்கக் கூடாது.

கே: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல கூட்டமைப்பு எம்.பி.கள் அச்சுறுத்தப்பட்டதுடன் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்பாக எவ்வாறான முயற்சிகளை கூட்டமைப்பு எடுத்துள்ளது?

ப: இந்த இரண்டு படுகொலைகளும் அரசு- சார்பு சக்திகளாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வெளிப்படை. உயிருக்கு அஞ்சினால் இன்றைய அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது.

படுகொலைக் கலாசாரம் ஜனநாயக அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் அரசு- சார்பு சக்திகளும் அரசு- ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் குறி வைத்துக் கொண்டேயிருக்கும்.

ஆனால், ஒன்று...படுகொலைகளாலோ அல்லது விசாரணைகளாலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பணிய வைக்க முடியும் என்று கருதுவது பகற்கனவு!

கே: தமிழ் மக்களுக்கு எதிராக முன்னைய அரசாங்கங்களை விட இன்றைய அரசாங்கம் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது, இதனை வெளிக் கொண்டு வரவும் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றது?

ப: தொடர்ந்து கொண்டிருக்கும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுதுங் கூட கூட்டமைப்புப் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில் ஐந்து எம்.பி.க்கள் கொண்ட குழு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைநகரங்களுக்குச் சென்று எமது மக்களின் துன்ப துயரங்களை எடுத்துரைத்து வருகின்றது. இதை விட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று அங்கெல்லாம் இங்கு எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களை தெரிவித்திருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் அவையின் முன்பும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கே: ஈழத்தமிழர் பிரச்சினையில் நீண்ட கால தொடர்புடைய அயல் நாடான இந்தியா தற்போதைய நெருக்கடியான நிலை குறித்து மௌனமாயுள்ளதன் நோக்கம்? ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் தேவை?

ப: மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்று நான் நினைக்கவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் திட்டவட்டமாக தனது கொள்கையை இந்தியா இன்னமும் வகுக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. எமது மக்கள் தொடர்பில் இந்தியாவுக்கு தார்மீகப் பொறுப்புகள் உண்டு.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு இன்று என்ன நடந்துள்ளது?

1987 இல் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் வர்த்தமானிப் பிரகடனத்தின் மூலம் ஏற்படுத்திய வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு சட்ட ரீதியானது அல்ல என்றே உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.

இந்த இரு மாகாணங்களையும் இணைக்க விரும்பினால் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவாறு, சட்ட மூலம் ஒன்றின் ஊடாகவே அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால் இலங்கை அரசோ அதனைச் செய்யத் தயாராக இல்லை. தனியான கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு அது திட்டமிடுகின்றது. இந்த அடாவடித்தனத்தை இந்தியா தட்டிக் கேட்க வேண்டும்.

வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு விரைவில் சட்ட ரீதியாக சாத்தியமாவதை அது உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணத்தில் பூரண அதிகாரங்கள் கொண்ட ஓர் `சுயாட்சி அரசு' நிறுவப்படுவதன் மூலமே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியும் என்ற யதார்த்தத்தை இந்தியா இலங்கைக்கு உணர்த்த வேண்டும்.

இலங்கை அரசு வழிக்கு வரவில்லை என்றால் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க இந்தியா முன்வரவேண்டும்.

கே: தென்னிலங்கையில் தற்போது உருவாகியுள்ள ரணில் - மங்கள உடன்பாடு தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு உதவும்?

ப: பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையம் தோற்கடிப்பதை தனது குறிக்கோள்களில் ஒன்றாக இந்தப் புதிய கூட்டணி பிரகடனப்படுத்தியுள்ளது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைந்துள்ள தமிழ் இனத்தின் தேசிய எழுச்சியை `பயங்கரவாதம்' `பிரிவினைவாதம்' என்ற கலர்க் கண்ணாடிகளுக்கூடாக பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் எமது பிரச்சினை தொடர்பான நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

இலங்கைத் தீவில் ஓர் ஆட்சி மாற்றத்தை இந்தக் கூட்டணி கொண்டு வரக்கூடும்... அவ்வளவு தான்!

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீகாந் அய்யா, இன்னும் பிரிச்சு முடியேல்லையே?

எபபவே முடிசுதொன்ரு வாசிச்சன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.