Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாடும் அரச அதிகாரிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாடும் அரச அதிகாரிகளும்

கிழக்கு மாகாண சபையின் ஆளுநரான றியல் அட்மிறல் றொகான் விஜயவிக்கிரமவுக்கு அடுத்த அதிகாரம் கொண்ட சக்தி மிக்க பதவியை வகித்தவர் மட்டுமன்றி, நுவரெலியா மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் அரச அதிபராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.

அம்பாறை அரச அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அங்கு சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலும் தீவிரமாக உழைத்தவர்.

தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய நிலங்களை சிங்களவர்கள் பலவந்தமாக ஆக்கிரமிப்பதற்குத் துணை நின்றவர். சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்த தமிழ், முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்தவர்களை சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்களில் குடியேற்றுவதன் மூலம், அவர்களைக் கிராமிய அளவில் கூட சிறுபான்மையாக்கி அவர்களை வலுவிழக்க வைக்கும் கைங்கரியத்தை மிகவும் நேர்த்தியாகக் கையாண்டவர்.

அம்பாறையின் தீகவாபி பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக்கி அங்கு வாழும் முஸ்லிம் மக்களை வெளியேற்ற ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தோல்வியடைந்த முயற்சிகளை சுனாமிமீள் குடியேற்றம், வீடமைப்புத் திட்டம் என்பனவற்றின் மூலம் புதுப்பிப்பதற்குத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டவர்.

ஒட்டு மொத்தத்தில் அம்பாறை மாவட்டத்தை முழுமையாகச் சிங்கள மயப்படுத்தும் சிறீலங்கா அரசுகளின் கபடநோக்கத்தை ஆணித்தரமாவும் ஆர்ப்பாட்டமின்றியும் வெகு சிறப்பாக மேற்கொண்டு வந்தவர்.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே சிறீலங்கா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தை குறிப்பாக திருமலை, அம்பாறை மாவட்டங்களைச் சிங்களமயப்படுத்தும் நோக்கத்திலேயே இப்பிரிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது சகலருமறிந்த விடயமாகும்.

இப்படியான ஒரு சிங்கள மயமாக்கல் முயற்சிக்கு ஏற்கனவே அனுபவமும் ஆற்றலும் உள்ள ஒருவர் சிறீலங்கா அரசுக்குத் தேவைப்பட்டது. எனவே பேரினவாத சிந்தனை கொண்ட ஹேரத் அபயவீர அவர்கள் தெரிவு செய்யப்பட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

மாகாண சபையை பொறுத்தவரை ஆளுநரே அதி உயர் அதிகாரம் படைத்தவராவார். எனவே இவரிடமிருந்து சிறீலங்கா அரசும், பேரினவாத சக்திகளும் நிறைந்த எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்தன.

திருமலை மாவட்டத்தில் சம்பூர், ஈச்சிலம்பற்று உட்பட மூதூர் கிழக்கு பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டு தமிழ் மக்கள் மீளக்குடியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.

அதை உயர் நீதிமன்றமும் தனது தீர்ப்பின் மூலம் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில் சேருவில போன்ற பகுதிகளில் மீள் குடியேற்றங்களும் அபிவிருத்தித் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.

சேருவில, கந்தளாய் பகுதிகளில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், செய்திகள் வந்துள்ளன.

இத்திட்டங்களில் மேலும் சிங்களவர்கள் குடியேற்றப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மக்களின் தலைநகரமான திருமலை நகரின் துறைமுகப்பகுதியை வர்த்தக மயமாக்கும் திட்டமும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதுவும் கூட திருமலை நகரை மேலும் சிங்களவர்களால் நிறைக்கும் நோக்கம் கொண்டதே. இதற்கு மிகவும் பொருத்தமானவர் எனத் தெரிவு செய்யப்பட்ட ஹேரத் அபயவீர கொல்லப்பட்டமை சிறீலங்காவின் பேரின

வாத சக்திகளுக்கு ஒரு பேரிழப்பு என்பது உண்மைதான்.

ஒரு அரச அதிகாரி வெளியேற்றப்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ இன்னெருவர் அந்த இடத்திற்கு வருவது வழமை. அப்படியான நிலையில் தனிநபர்களின் இழப்பு எப்படி பேரிழப்பாக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் சிலர் தனிநபர்களாக இருப்பதில்லை. ஒரு குழுவினரதோ அல்லது நோக்கத்ததை நிறைவேற்றும் அமைப்பினதோ பிரதிநிதியாகவோ அல்லது தலைமை சக்திகளாகவோ செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வகையில் நிறுவப்பட்ட பேரினவாத அரச அதிபர்களின் தலைமை சக்திகளில் ஒருவராகவே இவர் விளங்கி வந்தார். சிறீலங்கா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இப்படியான அரச அதிகாரிகளே திருமலை மாவட்டத்தில் காணி அதிகாரிகளாகவும் அரச அதிபர்களாகவும் நியமிக்கப்பட்டு வந்தனர்.

தற்சமயம் ஒரு முன்னாள் கடற்படை அதிகாரி ஆளுநராகவும் இப்படியான ஒரு அரச அதிகாரி செயலாளராகவும் கிழக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டனர். கிழக்கு மாகாணம் முழுமையாக சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இவ்வேளையில், மீள் குடியேற்றங்கள் இடம் பெறவுள்ளன.

இவை எவ்வாறு இடம் பெறும் என்பதற்கு இவர்களின் நியமனமே ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். திருமலை மாவட்டத்தை சிங்கள மயப்படுத்துவதில் அரச அதிகாரிகளே பெரும் பங்குவகித்தனர் என்பது ஒரு முக்கியமான விடயமாகும்.

திருமலையின் சேருவில பகுதி, திருமலையிலிருந்து ஹபரணை செல்லும் பிரதான வீதியில் உள்ள பல சிங்கள ஊர்கள் என்பன குடியேற்றத்திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டவையல்ல.

பாரம்பரியமான தமிழ் மக்கள் குடியிருந்த தமிழ்க் கிராமங்களுக்கு அண்மையிலுள்ள காடுகள் சிங்களவர்களால் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அங்கு அவர்கள் குடியேறினர். இப்படியான சந்தர்ப்பங்களின் வன பரிபாலத்துறையினரோ, காணி அதிகாரிகளோ, அரச அதிபர்களோ அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

காலப் போக்கில் காணிக் கச்சேரிகளை வைத்து அரச அதிகாரிகளே அவர்களுக்கு காணிகளுக்கான உரிமைப்பத்திரங்களை வழங்கி வைத்தனர்.

இதன் பின்னணியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டனர். திருமலை நகரத்தில் கூட மீன் வியாபார நோக்கமாக வந்த சிங்களவர்கள் அங்கு படிப்படியாக சிறு சிறு வியாபார நிலையங்களை நிறுவி, பின் மெல்ல மெல்ல அங்கேயே குடியேறி இன்று திருமலை சந்தை, பேருந்து நிலையம் என்பன சிங்களவரின் அதிக்கத்தில் இருக்குமளவுக்கு வலுப் பெற்று நிற்கின்றனர்.

இப்படியான ஆக்கிரமிப்புக்கள் மூலம் திருமலை மாவட்டத்தில் 1827இல் 1.3 வீதமாக இருந்த சிங்களவரின் சனத்

தொகை 1987ல் 33.6 வீதமாக உயர்ந்தது. அதேவேளையில் 81.8 விதமாக இருந்த தமிழ் மக்களின் விகிதாசாரம் 36.4 வீதமாகக் குறைவடைந்தது. ஆனால், இங்கு ஒரு விடயம் அவதானிக்கப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றபின் இப்படியான குடியேற்றங்கள் பெருமளவு தடுத்து நிறுத்தப்பட்டன. அதாவது 1987ல் 33.6 ஆக இருந்த சிங்களவரின் வீதம் 29 வீதமாக குறைவடைந்தது. அதேவேளை இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெற்ற தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள் காரணமாக தமிழ் மக்கள் தொகையும் 36.4 வீதத்திலிருந்து 32 வீதமாக வீழ்ச்சி

யடைந்தது.

இதிலிருந்து தொப்பிகல கைப்பற்றப்பட்டு விட்டதாக கிழக்கின் உதயம் என்ற பெயரில் ஒரு பெரும் வெற்றிவிழா கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கொண்டாடும் படியும் சிறீலங்கா சனாதிபதியால் அறைகூவலும் விடுக்கப்பட்டது.

இராணுவ வெற்றிகள் எப்போதும் நிரந்தரமானவை அல்ல என்பது வரலாறு. தொப்பிகல மூன்றாவது தடைவையாக சிறீலங்காப் படைகளால் கைப்பற்றப்பட்டது என்பது கூட இதற்கு நல்ல உதாரணமாகும்.

இன்று சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்பிலிருக்கும் கிழக்கு மாகாணம் முழுமையாக நாளை தமிழ் மக்களால் விடுவிக்கப்படலாம். ஆனால், குடியேற்றங்கள் அப்படியல்ல.

ஒருவர் வந்த ஒரு பகுதியில் குடியேறிவிட்டால் சில காலத்தில் அங்கு குடும்பமாக நிலை கொண்டு விடுகின்றனர். நிலம், தொழில், உறவுகள் என்பனவற்றுடன் பிணைக்கப்பட்டு அந்த மண்ணும் அவரும் பிரிக்கப்பட முடியாதவைகளாகிவிடுகின்றன என்ற உணர்வில் ஆட்கொள்ளப்படுகின்றார்.

ஆட்சியதிகாரம் மீறினாலும் அவர்கள் அந்த மண்ணை விட்டு வெளியேற விரும்பப் போவதில்லை. எனவே தான் குடியேற்றங்

கள் என்பன படை முகாம்களை விடப்பலம் வாய்ந்தனவாக கருதப்படுகிறது.

எமது தாயகம் விடுவிக்கப்படும் போதும் இத்தகைய சிங்களக் குடியேற்றங்கள் பெரும் பிரச்சினையாக அமையும் என்பதிலும் எவ்வித சந்தேகமில்லை. என்றுமே படையினரை விடவும் இந்தக் குடியேற்றங்களை நிகழ்த்தும் அரச அதிகாரிகள் ஆபத்து மிக்கவர்

களாகவே கருதக்கூடியவர்கள் ஆவர்.

-நா.யோகேந்திரநாதன்

- ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.