Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகல காட்டுப் பகுதிக்குள்

ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு!

கொழும்பு, ஜூலை 30

தொப்பிகல பகுதியிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றினுள் விடுதலைப் புலிகளுக்குச்சொந்தமான ஆயுதக் கிடங்கு ஒன்றினை நேற்றுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர் என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கிடங்கிலிருந்து 120 மில்லிமீற்றர் ரக மோட்டார் துப்பாக்கி01, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 12, 82 மில்லிமீற்றர் ரக மோட்டார் துப்பாக்கி01, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள்125, 82 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியைக் கட்டுப்படுத்தும் கருவிகள் 103, 60 மில்லிமீற்றர் மோட்டார் ரக துப்பாக்கி 01, 40 மில்லிமீற்றர் ரக கைக்குண்டு 01, எம்.பி.எம்.ஜி 01, எல்.எம்.ஜி 01, சினைப்பர் துப்பாக்கி 01, ரி56 ரகத் துப்பாக்கி 24, ரி56 ரகத் துப்பாக்கி மகசின் 60, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 6500, கிளைமோர் வெடிகள் 10, கண்ணிவெடிகள் 144, மிதிவெடி 325, அதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் 76 மற்றும் ரெட்டனேற்றர் கருவிகள் 197 போன்ற ஆயுதக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன என்று படைத்தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை, வெருகல் பகுதியில்நேற்று முற்பகல் 10.45 மணியளவில் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கண்ணிவெடிகளை இயக்கும் கருவிகள் 1240, 41து60 மில்லிமீற்றர் அளவுடைய மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் 106 போன்ற வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று படைத்தரப்பால் கூறப்பட்டது. (க3)

http://www.sudaroli.com/pages/news/today/18.htm

கோத்தபாய அண்மையில் போய் சொன்னாராம் புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் பத்தாது. இன்னும் இன்னும் எடுங்கள் என்று.

அதுதான் படையினர் வெளுத்து வாங்குகின்றனர்.

According to the defence sources in the East, 26 claymore mines, 61 anti personnel mines, 3 anti tank mines, 250 detonators and 25 Kg of C4 explosives have been unearthed from the dump that was found in thicket.

இது பாதுகாப்பு அமைச்சின் தளத்தில் இருந்து எடுக்கபட்டது.சுடரொளிக்கு எவ்வாறு மிஞ்சிய ஆயுத விபரம் தெரிந்தது என தெரியவில்லையே

பாவம் இராணுவத்தில் யாரோ பதுக்கிவைத்திருந்திருக்கின

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல படம் வாகரையைக் கைப்பற்றிய போதும் காட்டினவ.. இப்ப தொப்பிக்கலைலும் காட்டினம்.

ஆனால் சம்பூரில மூதூரில..மாவிலாற்றில காட்டல்ல. ஏன்...!

கருணா - புலிகள் மோதலில் கருணா பெருமளவு ஆயுதங்களைக் கையாண்டவர். அவர் பல வகை ஆயுதங்களைப் புதைச்சும் வைச்சவர். இப்ப இராணுவம் புலிகள் கருணாவிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளைப் பிடிச்சிருப்பதால கருணா புதைச்சவை பிரச்சார தேவைகளுக்காக வெளி வருகின்றன.

சம்பூர் கருணாவின் கட்டுப்பாட்டுக்க இருக்கல்ல. அதால அங்க இராணுவத்தால ஒரு கதையை உண்மை போலக் காட்டிக்க சோடிக்க சந்தர்ப்பம் குறைவா இருந்திச்சு. ஆனா.. மட்டக்களப்பில.. அந்த நிலையில்ல...!

எது எப்படி என்றாலும் எல்லா ஆயுதங்களும் புலிகளினதுதான்.. என்ற வகையில் இவை பின்னடைவுகள் தான்..! அதுவும் சர்வதேச தடைகளின் மத்தியில்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னே சுடரொளியில நிறய செய்தியள் வருதண்னே, விற்பனையாகிட்டுதோ தெரியேல்லை, நிதர்சனத்த விசாரிக்க சொல்லுங்கோ. B)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்னே சுடரொளியில நிறய செய்தியள் வருதண்னே, விற்பனையாகிட்டுதோ தெரியேல்லை, நிதர்சனத்த விசாரிக்க சொல்லுங்கோ. B)

அது யாருங்க?

எப்படிங்க நிதர்சனத்த விசாரிக்கிறது?

எது எப்படி என்றாலும் எல்லா ஆயுதங்களும் புலிகளினதுதான்.. என்ற வகையில் இவை பின்னடைவுகள் தான்..! அதுவும் சர்வதேச தடைகளின் மத்தியில்..!

வாகரை ஆக்கிரமிப்பின்போது படையினர் கைப்பற்றியதாக தெரிவித்த ஆட்டிலறிகளும் புலிகளுடையவையா? குடும்பிமலை ஆக்கிரமிப்பின் நிலத்தில் இருந்து ஆயுதங்களை தோண்டி எடுப்பது போன்று எடுத்ததாகவா வாகரை ஆக்கிரமிப்பின்போது படையினர் தெரிவித்தனர்?

கருணா புதைத்து வைத்த ஆயுதங்கள் சில படையினரால் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் படையினர் மீட்ட ஆயுதங்கள் அனைத்தும் புலிகளுடையதுதான் என்று எப்படி உங்களால் முடிவு செய்ய முடிந்தது?

.

According to the defence sources in the East, 26 claymore mines, 61 anti personnel mines, 3 anti tank mines, 250 detonators and 25 Kg of C4 explosives have been unearthed from the dump that was found in thicket.

இது பாதுகாப்பு அமைச்சின் தளத்தில் இருந்து எடுக்கபட்டது.சுடரொளிக்கு எவ்வாறு மிஞ்சிய ஆயுத விபரம் தெரிந்தது என தெரியவில்லையே

ஈழவன்

படையினர் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு 29ம் திகதியும், 30ம் திகதியும் வெளியிட்ட இருவேறு செய்திகளை ஒன்றாக்கி சுடரொளி வெளியிட்டுள்ளது.

குறித்த இரு செய்திகளும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இருக்கிது.

Edited by மின்னல்

விமான எதிர்பு ஏவுகணை ஓன்று கைபற்ற பட்டதாக செய்தி வெளிடபட்டிருகின்றது உண்மைத்தன்மை யாதோ

20070731_03.jpg

20070731_04.jpg

20070731_06.jpg

விமான எதிர்பு ஏவுகணை ஓன்று கைபற்ற பட்டதாக செய்தி வெளிடபட்டிருகின்றது உண்மைத்தன்மை யாதோ

அதுதான் தெள்ள தெளிவா படத்தீலேயே தெரியுதே...

ஆயுதத்தை வைத்து இருப்பவர் அந்த ஆயுதத்தை கையாள பயிற்ச்சி பெற்றவர் போல அழகாக சிலிங்கில் போட்டு சரியான போசிசனில் பிடிச்சு இருக்கிறார்...! புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்த அண்மையில் சிறீலங்கா SA14 வகை ஏவுகணைகளை வாங்கியதாகவும் இரவு நேரத்தில் சரியாக குறிபார்த்து ஏவ்வ முடிய வில்லை எண்டும் செய்தி வெளியிட்டார்கள்... அதிலை ஒண்டு தான் இது...

கையிலை வச்சிருக்க கூடிய AK எல்லாவற்றையும் கொண்டு போன புலிகள் இதை மட்டும் விட்டு போனார்கள் எண்டால் நம்புற மாதிரியா இருக்கு...??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமான எதிர்ப்பு ஏவுகணையும் துப்பாக்கியும்

தொப்பிகலவில் படையினர் கைப்பற்றினராம்

கொழும்பு, ஓகஸ்ட் 01

படையினர் புதிதாகக் கைப்பற்றியுள்ள தொப்பிகலவில் உள்ள திகிலவெட்டை, அலியஓடை, மொட்டகல, நரகமுல்ல ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது தரையிலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணை, விமான எதிர்ப்புத் துப்பாக்கி ஆகியவை உட்படப் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று தேசிய பாதுகாப்பு ஊடகநிலையம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தேடுதலின் போது விமான எதிர்ப்பு ஏவுகணை 01, 12.7 எம். எம். கலிபர் அளவுடைய விமான எதிர்ப்பு துப்பாக்கி 01, 200 கிலோகிராம் எடைகொண்ட ரி. என். ரி. வெடிப்பொருட்கள், 61 கிலோகிராம் எடை கொண்ட சி 4 ரக வெடிப்பொருட்கள், 82 எம். எம். அளவுடைய மோட்டார் குண்டுகள் 02, 81 எம். எம். அளவுடைய மோட்டார் குண்டுகள் 07, அதிபார இயந்திரத் துப்பாக்கிகள் 27, ஆர்.பி.ஜிகள் 20, ரி 56 ரகத் துப்பாக்கிகள் 172, 40. எம். எம். கிரனேட் செலுத்திகள் 02, கிளைமோர் குண்டுகள் 59 மற்றும் 60 எம்.எம். , 81 எம். எம்., 82 எம். எம். அளவுகளுடைய மோட்டார் குண்டுகள் 1,150, அமுக்க வெடிகள் 09, ஆட்களுக்கு எதிரான நிலக்கண்ணி வெடிகள் 64, பெங்களூர் மிதி வெடிகள் 85, டெற்றனேற்றர் இழை 50 மீற்றர், பாதுகாப்பு இழை 50 மீற்றர், ஜி. பி. எஸ். துப்பாக்கிகள் 3 மற்றும் ரி 56 ரகத் துப்பாக்கி ரவைகள் 2,000 போன்ற ஆயுதப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தொப்பிகலப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றினுள் படையினர் ஆயுதக் கிடங்கு ஒன்றைக் கண்டு பிடித்தனர் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். (உ 3)

சுடர் ஒளி

வாகரையில ஒரு கிடங்கு.. தொப்பிக்கலைல ஒரு கிடங்கு.. புலிகள் கிடங்குக்க பதுக்கி வைச்சிட்டு.. காட்டியும் கொடுத்திட்டுப் போனவையோ..!

172 ரி 56 துப்பாக்கிகள் இருந்த இடத்தில 2000 ரவைகள் மட்டும் தான் பதுக்கினது...??????!

இராணுவம் சில வகை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அண்மையில் கொள்வனவு செய்துள்ளது. அதன் பிரதிபலிப்புக்கள்.. படங்களில்...! :huh:

-----------------

AN AIRCRAFT MISSILE , A LARGE STOCK OF T 56 WEAPONS,

One Multi Purpose Machine Gun (MPMG), one shot Gun, fourteen T-56 weapons and three Anti Personnel Mines (AP), six-hundred and forty seven 60 mm mortar bombs, seven 120mm mortar bombs, one 120mm mortar bipod, nineteen 120mm mortar aimers, four hundred and ninety-seven 82mm mortar bombs, one 40mm Grenade launcher, twenty seven claymore mines, one MPMG Bipod, 36 kgs of C-4 explosives, 200 Kgs of TNT explosives, two pressure mines, 85 Banglore torpedoes, four MPMG ammunition boxes, and nineteen ammunition boxes were thus recovered from MOTAGALA and MEYANKOLLA areas in THOPPIGALA by separate groups of clearing troops during the course of Monday (30).

In this latest recovery at MOTAGALA troops unearthed a significant stock of armament that contained an Aircraft missile which could have been used by Tiger terrorists to challenge air superiority of the Sri Lanka Air Force.

இராணுவ இணையத்தளம்.. வழங்கியுள்ள தகவலில்.. கைப்பெற்றப்பட்டது விமான ஏவுகணை என்றுதான் உள்ளது. விமான எதிர்ப்பு என்று கூட இல்லை.. :lol:<_<

ரி 56 துப்பாக்கிகள் 14 என்றுள்ளது.. சுடரொளில.. 172 என்று ஆக்கிட்டாங்க... உந்தச் சுடரொளி.. மக்களின் மனோவலிமையை பாதிக்க அரசு செய்யும் பிரச்சாரத்துக்கு உதவுதோ..??! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாகரை ஆக்கிரமிப்பின்போது படையினர் கைப்பற்றியதாக தெரிவித்த ஆட்டிலறிகளும் புலிகளுடையவையா? குடும்பிமலை ஆக்கிரமிப்பின் நிலத்தில் இருந்து ஆயுதங்களை தோண்டி எடுப்பது போன்று எடுத்ததாகவா வாகரை ஆக்கிரமிப்பின்போது படையினர் தெரிவித்தனர்?

கருணா புதைத்து வைத்த ஆயுதங்கள் சில படையினரால் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் படையினர் மீட்ட ஆயுதங்கள் அனைத்தும் புலிகளுடையதுதான் என்று எப்படி உங்களால் முடிவு செய்ய முடிந்தது?

வாகரை கதிரவெளியில் தோண்டி எடுத்த ஆயுதங்களோடு இங்கு செய்திகள் போட்டது மறந்திட்டாங்க..! யாழிலேயே தேடிப்பாருங்க.

அரசுக்கு ரணிலின் குற்றச்சாட்டை (அரசின் ஆதரவோடு புலிகள் ஆயுதங்களோடு தப்பினர்) பொய் என்று காட்ட ஆயுதக் கைப்பற்றல்கள் அவசியமாகிறது. அது மட்டுமன்றி கிழக்கில் மக்கள் மத்தியில் புலிகளின் பலம் அழிக்கப்பட்டு விட்டது என்பதைக் காட்ட வேண்டிய நிலையும் உண்டு. அப்போதுதான் கருணா போன்றோரை அம்மக்களின் அரசியல் பிரதிநிதியாக்கிக் காட்ட அரசுக்கு உதவும் தேர்தல்களில் மக்கள் நாட்டத்தை ஏற்படுத்தலாம்..!

அரசின் இந்த ஆயுதக் கைப்பற்றல் பிரச்சாரத்தில் உண்மைகளும் இல்லாமல் இல்லை.. ஆனால் சில மிகைப்படுத்தல்களை அரசு செய்கிறது என்பதையும் உணரக் கூடியதாக உள்ளது..!

கிழக்கில் புலிகளுக்கு இழப்புகளும் பின்னடைவுகளும் என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும் அதை மூடிமறைக்க முடியாது..! :huh:

இல்லை நெடுக்ஸ் 158 ரைபிள் ஒரு பட்டியலிலும் 14 ரைபிளை அடுத்த பட்டியலிலும் சேர்த்திருகீனம்

இந்த இணைப்பில் பாருங்கள்

http://www.defence.lk/new.asp?fname=20070731_01

உண்மைதான் எதிர்கட்சிகள் எப்படி புலிகளை ஆயுதங்களுடன் தப்பவிட்டார்கள் என பிரச்சாரப்படுத்துவதன் காரணமாக தமது ஆயுதங்களே வெளிவருகின்றன.அதே போல புலிகள் எவ்வளவோ கஸ்டப்பட்டு கொண்டுவந்த விமான எதிர்பு பீரங்கிகளை விட்டு செல்ல மடையர் அல்ல ஆட்லெறி பீரங்கிகளை கொண்டு சென்ற அல்லது நகர்த்திய புலிகளுக்கு இந்த ஏவுகனையை கொண்டு செல்லவோ அல்லது நகர்த்தவோ கஸ்டம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு, ஓகஸ்ட் 01

படையினர் புதிதாகக் கைப்பற்றியுள்ள தொப்பிகலவில் உள்ள திகிலவெட்டை, அலியஓடை, மொட்டகல, நரகமுல்ல ஆகிய பகுதிகளில் நேற்றுமுன்தினம் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது தரையிலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணை, விமான எதிர்ப்புத் துப்பாக்கி ஆகியவை உட்படப் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று தேசிய பாதுகாப்பு ஊடகநிலையம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தேடுதலின் போது விமான எதிர்ப்பு ஏவுகணை 01, 12.7 எம். எம். கலிபர் அளவுடைய விமான எதிர்ப்பு துப்பாக்கி 01, 200 கிலோகிராம் எடைகொண்ட ரி. என். ரி. வெடிப்பொருட்கள், 61 கிலோகிராம் எடை கொண்ட சி 4 ரக வெடிப்பொருட்கள், 82 எம். எம். அளவுடைய மோட்டார் குண்டுகள் 02, 81 எம். எம். அளவுடைய மோட்டார் குண்டுகள் 07, அதிபார இயந்திரத் துப்பாக்கிகள் 27, ஆர்.பி.ஜிகள் 20, ரி 56 ரகத் துப்பாக்கிகள் 172,

இப்படித்தான் எழுதி இருக்காங்க சுடரொளில. இராணுவ இணையத்தளம் தனது பிரச்சாரத்தை சரியாத்தான் செய்திருக்கு..! நம்மாக்கள் அதை தமிழில குழப்பம் விளைவிக்கிற வகைல விடுறாங்க..! பாருங்க செய்தியை...!

படத்தில் உள்ளது விமான எதிர்ப்பு ஏவுகணை செலுத்தியாக தெரியுது. :huh:

http://www.fas.org/man/dod-101/sys/missile/row/sa-7.htm

Edited by nedukkalapoovan

புலிகளி ஆயுதங்களை புதைத்து வைத்தால் அதற்கான சகல பாதுகாப்புகளுடன் தான் மறைத்தோ புதை;ததோ வைப்பது வழக்கம். ஆனால் சக்தி டிவியில் இவர்கள் எடுத்த ஆயுதங்களைப் காட்டும் போது அவைகள் செயலிழந்த ஆயுதங்களோ பாவனைக்கு உதவாத ஆயுதங்களாகவோ இருக்க வேண்டும். துருப்பிடித்து பாவிப்புக்குதவாத ஆயுதங்களைத்தான் ஆக்கிரமிப்பு இராணுவம் அதுவும் ஒரு இரண்டு மூன்றடிக்குள் இருந்து எடுப்பதை காட்டியுள்ளார்கள். சிங்களவன் முட்டாள். இதை நப்பலாம். யாரை முட்டாளாக்க இந்தக் கதை.

ஈழத்திலிருந்து

;ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகலப் பகுதியில் பெருமளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலை பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விடுதலைப் புலிகளின் ஆயுதக் களஞ்சியமொன்றிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகனை மற்றும் துப்பாக்கி ஆகியன கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவதரப்பில் பேசவல்ல அதிகாரி பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

"ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை எஸ்.ஏ.14 ரகத்தைச்சேர்ந்தது. இது சுமார் 4500 மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. 2002க்கு முன்பு இலங்கை ராணுவத்தினர் விமான எதிர்ப்பு ஏவுகணையை கைப்பற்றியிருக்கிறார்கள். அதற்குப்பிறகு, எஸ்.ஏ.14 ரக விமான எதிர்ப்பு ஏவுகணையை கைப்பற்றுவது இது தான் முதல் தடவை".

என்றார் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க.

ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தொப்பிகலை பிரதேசம் தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்பு தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று திகிலிவெட்டை, அலியார் ஓடை மற்றும் நாரக்கமுல்லை ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இந்த ஆயுதக் களஞ்சியங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ்.

--------------------

இச்செய்தியின் படி சிறீலங்கா இராணுவம் 2002 க்கு முன்னரும் விமான எதிர்ப்பு ஏவுகணையைக் கைப்பற்றியதாமே..???! <_<:huh:

இப்ப புலிகளின் "தேமோபரிக்" (Thermobaric) எனும் பொஸ்பரஸ் குண்டு((கள்.?)) கண்டு பிடித்து விட்டதாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்....

http://www.colombopage.com/archive_07/August1131724JV.html

http://www.dailymirror.lk/2007/08/02/front/4.asp

மூண்றாம் கட்ட போரில் இராணுவம் பிரித்தானியாவிடம் இருந்து கொள்வனவு செய்ததை சிங்கள ஆய்வாளர்கள் பெரிய பொக்கிசம் கிடைத்ததாக கொண்டாடி சொன்னவை புலிகளின் பெயரால் வெளி வருகின்றன....

Edited by தயா

படையினர் கண்டு பிடித்ததாகத் தெரிவித்தது தேர்மோ பெரிக் ஆயுதுமல்ல, பி.எஃப்.89 ரக உந்துகணை(சீனா தயாரித்த ஆர்.பி.ஜியின் நவீன வடிவம்).

இது எந்த ஆயுதம் எண்டு தெரியாமல் தேர்மோ பெரிக் எண்டு பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் செய்தி வெளியிட்டது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வகை அறியப்படாத ஆர்.பி.ஜி எண்டுதான் போட்டிருந்தார்கள். இருந்தாலும் இன்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் கைப்பற்றப்பட்டது தேர்மோ பெரிக் அல்ல பி.எப் -89 எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தென்மராட்சியில் நடைபெற்ற சமரின்போது இந்த வகை ஆயுதங்கள் இரண்டை கைப்ற்றியதாக படையினர் தெரிவித்திருந்தனர். இது அவற்றில் ஒன்றாகக் கூட இருக்கலாம்.

அப்ப தேமோபரிக் கப்ஸ்சாவா...??

தென்மராட்ச்சியில் படையினர் PF- 89 வகை ஆயுதம் எதனையும் கைப்பற்றவில்லை..... ஆனால் தமிழ் செல்வன் அண்ணா PF-89 வைத்திருந்த படத்தை பார்த்து கப்சா விட்டவை.... அப்படி இராணுவம் கைப்பற்றிய ஆயுதங்கள் படங்களில் PF-89 படம் இருக்கவே இல்லை.....

PF-89 யுடன் தமிழ் செல்வன் அண்ணா...

08.jpg

http://www.sankathi.com/gallery/categories.php?cat_id=32

Edited by தயா

கடந்த ஆண்டு முகமாலை மற்றும் கிளாலிப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முன்னேற்ற நகர்வின் பின்னர் சில காலம் கழித்து சரத் பொன்சேகா பலாலி சென்றபோது விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவித்து ஆயுதங்கள் காட்டப்பட்டபோது அவற்றில் பி.எப்.89 ஆயுதங்கள் இரண்டும் இருந்தன.

சு.ப.தமிழ்ச்செல்வன் கையில் இருந்தது தமது கைக்கு வந்திட்டுது எண்டு படம் காட்ட சீனாவிடம் வாங்கிவிட்டு அங்கு வைத்திருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இராணுவம் தாங்களே தாட்டு எடுத்து விளையாடுகிறது.. ஆயுதங்களைப் புலிகள் இழக்கவேயில்லை என்பது உண்மையா? எனது சிற்றறிவுக்கு இது சரியாகப் படவில்லை.

அப்ப இராணுவம் தாங்களே தாட்டு எடுத்து விளையாடுகிறது.. ஆயுதங்களைப் புலிகள் இழக்கவேயில்லை என்பது உண்மையா? எனது சிற்றறிவுக்கு இது சரியாகப் படவில்லை.

அப்ப முதலாம் ஈழப்போருக்கு புலிகள் வைத்து இருந்த ஆயுத்ங்களின் அளவுக்கு இராணுவம் குடும்பிமலையில் கைப்பற்றியது எண்டு சொல்ல படுவது மெய்யா..?????

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முதலாம் ஈழப்போருக்கு புலிகள் வைத்து இருந்த ஆயுத்ங்களின் அளவுக்கு இராணுவம் குடும்பிமலையில் கைப்பற்றியது எண்டு சொல்ல படுவது மெய்யா..?????

ஒன்றுமே போகவில்லை என்று எழுதுவது சரியல்ல. அதற்காக இராணுவம் காட்டுவது எல்லாம் உண்மையுமல்ல B)

Edited by kirubans

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.