Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
பேரினவாதத்தின் பிரலாபம்
சித்தி கருணானந்தராஜா
 
லகமே எங்கள் உறுபசியைப் போக்காயோ
பேரினவாதப் பெரும்பூதத்தால் வயிற்றில்
பற்றியெரியும் பசித்தீயைத் தீர்ப்பதற்காய்
நக்குவாரப் பெயர்பெற்று
நாடெல்லாம் அலைகின்றோம்
சர்வதேச நாணயஸ்தர் தருவாரா ஏதாச்சும்?
 
பெரிய இடமென்று பிச்சைக்குப் போயுள்ளோம்
கரியை வழித்துக் கையில் தருவது போல்
ஆனைப் பசியில் அலறுகிற எங்களுக்கு
சோளப் பொரிதூவிச் சோர்வகற்றச் சொல்வாரோ?
 
என்ன செய்வதென்றறியோம் எம் ஆமத்துறுமார்கள்
சொன்னதே வேதமென்றோம் துயர்வந்து சேர்ந்ததுவே!
படங்கொண்ட பாந்தள்வாயில் பற்றிய தேரைபோலும்
கடன்பட்டுத் தவிக்கின்றோம் காப்பதற்கு யார்வருவார்?
 
சீனத்தலைமைகளும் சிந்துவெளி நாட்டினரும்
ஏனித்துரோகமிழைத்தார்கள் எங்களுக்கு?
எங்கள் சகோதரர்கள் இருப்பதற்கொன்றோரிடத்தை
அன்போடு நாங்கள் அளித்திருக்கலாமன்றோ!
முன்னின்று எங்கள் மூத்த சகோதராரை
நாட்டைவிட்டு ஓட்ட நயவஞ்சகம் புரிந்தார்.
பட்டதுயருமினப் படுகொலையும் தாங்காமல்
ஓடியொழிந்தவர்கள் உதவிக்கு வருவாரா?
 
தேசிய கீதம்பாடத் திறனிழந்து போனவர்க்கு
தேசத்தின்மீதன்பு திரும்ப வந்து சோ்ந்திடுமா?
ஒன்றும் புரியாமல் உருக்குலைந்து வாடுகிறோம்
காலமென்ன காட்டுமென்று கண்கலங்கி நிற்கின்றோம்
 
புத்தனுரைத்த புனிதவிதி கருமம்
இத்தரையில் என்றும் எமக்கும் திரும்புமென்ற
தத்துவமே இன்றெம் தலைவிதியை மாற்றியது.
நடக்கட்டும் ஓர்நாள் நம் பாவமும் அழியும்
தடுக்கட்டும் துன்பததைத் தர்மம்
 
மாநக்கவாரம் - நிக்கோபார் தீவுகள், நக்குவாரம் - இலங்கைத்தீவு.
May be an image of text
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேரினவாதத்தின் பிரலாபங்கள் ..........மனசைக் கரைக்குது......!

நன்றி karu ......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சுவி அதனை யாழ்  முகப்பில் கவிதைப் பிரிவில் போடவில்லையே காரணமென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, karu said:

நன்றி சுவி அதனை யாழ்  முகப்பில் கவிதைப் பிரிவில் போடவில்லையே காரணமென்ன?

அது கவிதைக் களத்தில் பதியும் சுய ஆக்கக் கவிதைகள்தான் அங்கு தானியங்கியாக பதிவாகும் என நினைக்கிறேன்......!

இது யாழ் அகவை 24 ஆகும்.....இங்கு பதிபவை பலராலும் வாசிக்கப் படும்...... பலருக்கு கருத்து எழுத நேரமிருக்காது, ஆனாலும் தாமதமாக என்றாலும் வந்து எழுதுவார்கள்.......(தற்போது இந்த புட்டின்,ஸெலென்ஸ்கி, கோத்தா,பைடன், ஜான்சன் போன்றவர்களுடன் உறவுகள் தொடர்பில் இருப்பதால் எல்லாம் தாமதமாகின்றது).  இதுவும் இந்த மாதம் 30ம் திகதி வரை மட்டுமே......இதில் உங்களின் பங்களிப்பு இருப்பது சிறப்பாகும்......இதைப்பார்க்கும் நிர்வாகம் வந்து மேலும் விளக்கம் தரும்........யோசிக்க வேண்டாம்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, suvy said:

உடன் பதிலுக்கு நன்நி சுவி.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.