Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளிர்காலத்தில் வீட்டுக்கு வெப்பம் வழங்குதல்..

Featured Replies

டென்மார்க்கில் சில பகுதிகளில் குளிர்காலத்தில் வீட்டை சூடாக வைத்து இருப்பதற்கு பெரிய தோட்டங்களை செய்யும் விவசாயிகள் வைக்கோலை பாவிக்கின்றார்கள். இதுபற்றிய படங்களுடனான விளக்கத்தை கீழே காணலாம். நாம் வாழும் நாடுகளில் குளிர்காலத்தில் வெப்பத்தை பெறுவதற்கு அதிகளவு பணம் மாதாந்தம் செலவு செய்யவேண்டி உள்ளது. ஆனால் இங்கு இவர்கள் தமக்கு தேவையான வெப்பத்தை தேவையான நேரத்தில் தாமே உருவாக்கிக்கொள்கின்றார்கள். இவர்களின் இந்த முறையை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எனவே, தெரியாதவர்கள் அறிந்துகொள்வதற்காக இங்கு இதை இணைக்கின்றேன்.

விளக்கம்:

இவ்வாறு வெப்பத்தை உருவாக்கும் இடம் ஒரு பெரிய களஞ்சியசாலை - Store - போன்றபகுதியினுள் இருக்கின்றது.

முதலில் பெரிய வைக்கோல் கட்டுக்கள் டிரக்டரின் உதவியுடன் நகரக்கூடிய வகையிலான ஒரு நீண்ட மேசை மீது கிடத்தப்படும். இந்தமேசையில் செயின் காணப்படும் இது வைக்கோல் கட்டை நகர்த்த உதவும். செயின் மூலம் நகர்த்தப்பட்டு இயந்திர அறையின் உள்ளே போகும் வைக்கோல்கட்டு இயந்திரத்தின் உதவியுடன் சிறுதுண்டுகளாக வெட்டப்படும்.

இந்த சிறுதுண்டுகள் பைப் லைனின் ஊடாக இன்னொரு அறையினுள் உள்ள போறணை போன்ற பகுதிக்கு அனுப்பப்படும்.

இந்த போறணையில் உள்ள கதவு திறக்கப்பட்டு வைக்கோல் மீது தீ மூட்டப்பட்டபின் மூடப்படும். வைக்கோல் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும். இங்கு வைக்கோலை எரிப்பதன்மூலம் பெறப்படும் வெப்பம் மூலம் நீர் சூடாக்கப்பட்டு வீடுகளுக்கு வெப்பம் வழங்கப்படும் (இங்கு உண்மையில் அரண்மனை ஒன்றிற்கும், அதன் சுற்றாடலுக்கும் வெப்பம் வழங்கப்படுகின்றது).

வெப்பம் உருவாக்கப்படும் களஞ்சிய அறை வெளித்தோற்றம். இது டென்மார்க் நாட்டில் முன்பு இருந்த அரசபரம்பரை ஒன்றின் ஒரு சொத்து.

dsc01659mb6.jpg

வைக்கோல் வெட்டப்படுதல்..

dsc01644pp6.jpg

dsc01649aw4.jpg

dsc01650jw1.jpg

dsc01638sh3.jpg

dsc01637xy9.jpg

dsc01647vc7.jpg

dsc01646dt9.jpg

வைக்கோல் வெட்டப்படும் இயந்திர அறையினுள் வைக்கோல் சலவை இயந்திரத்தில் வைத்து சுழற்றப்படுவது போல் சுழற்றப்பட்டு வெட்டப்படும். இங்கு கதவு திறக்கப்பட்டு இயந்திரப்பகுதி காட்டப்பட்டுள்ளது...

dsc01642hz7.jpg

dsc01643no2.jpg

படங்கள் தொடர்கின்றன...

  • தொடங்கியவர்

வைக்கோல் வெட்டப்படும் பகுதியின் தொடர்ச்சி..

dsc01639xv6.jpg

dsc01658xx2.jpg

கீழே போறணைப்பகுதி அறையையும், அங்குள்ள உபரணங்களையும் காணலாம்.

dsc01632aa6.jpg

dsc01636ds5.jpg

dsc01633ow4.jpg

dsc01640us9.jpg

dsc01641zn8.jpg

dsc01634sn0.jpg

dsc01635ij2.jpg

வெளிப்பகுதியில் காணப்படும் எச்சரிக்கை கருவி..

dsc01660mg8.jpg

குருவே இதை பற்றி இப்ப தான் கேள்விபடுகிறேன்.............டென்மார

  • 9 months later...

ஒன்றை மட்டுமே சொல்லமுடிஞ்சிது. அடுத்தமுறை டென்மார்க்குக்கு போட்டுவந்து மிச்சம்சொல்லிறன். சிறீ லங்காவிலயும் இப்பிடி செய்யலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் பனிகொட்டினால் இந்த வைக்கோல் முறையை பாவிப்பதில் தப்பே இல்லை.

ஆனால் அங்கிருக்கின்ற எங்கடை மாடுகளுக்கு தான் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விடும்.

பிறகு வைக்கோலுக்கு அயல் நாடுகளிடம் கையேந்த வேண்டி வந்திடும்.

  • 1 year later...

சுற்றுப்புறசூழல் மாசுபடாமலுமிருக்கும் அத்தோடு பணமும் மிச்சம்,ஆனால் இது எத்தனை நாடுகளுக்கு சாத்தியப்படுமென்பதுதான் பிரச்சனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.