Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு

(எம்.எப்.எம்.பஸீர்)

கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில்  அத்து மீறிதாக்குதல் நடத்தப் பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகளில் ஆளும்கட்சியை சேர்ந்த, அக்கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என 56  பேரின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பலரின் வீடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன. இதனைவிட,  சுமார் 20 இற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீடுகளும்  அலுவலகங்களும் சொத்துக்களுக்கும் சேதப்படுத்தப்பட்டு  தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில், வன்முறைகளால் வீடுகளை இழந்து, தற்போது இருப்பிடம் இல்லாமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு தலவத்துகொடையில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் தற்காலிகமாக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவ்வதிகார சபையின் அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போது, அவர்கள் ஜனாதிபதியிடம்  தமது வீடுகள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை  தொடர்பில் ஆழ்ந்த கவலையுடன் விடயங்களை முன் வைத்துள்ளனர். இதனையடுத்தே ஜனாதிபதி இது தொடர்பிலான  ஆலோசனைகளை உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

மே 9 ஆம் திகதி நாட்டில் பரவிய வன்முறைகளால் சுமார் 56 முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சொத்துக்கள்  சேதமாக்கப்பட்ட நிலையில், அதில்  அதிக பாதிப்பு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கே ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின்  5 வீடுகள், 4 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 19 சொத்துக்கள் இதன்போது சேதமாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  தகவல்கள் வெளிப்படுத்தின.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு சொந்தமானது என கூறப்படும் குருணாகல் - ரத்கரவ்வ பகுதி வீடு, குருணாகல் குளத்து சுற்று வட்ட வீடு,  பத்தரமுல்லை - விக்ரமசிங்க புர வீடு,   குருணாகல் - வில்கொட அரசியல் அலுவலகம் , வீடு,  லக்கல பன்னை வீடு ஆகியன தீ வைக்கப்பட்ட வீடுகளாகும். 

இதனைவிட  குருனாகல், மாவத்தகம,  நிக்கவரட்டிய,  மொரட்டுவை பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான மதுபான விற்பனை நிலையங்கள் குருணாகல் - மல்கடுவாவ பகுதியில் அமைந்துள்ள மதுபான உற்பத்தி நிலையம்  ஆகியனவும் சேதப்படுத்தப்பட்டுதீ வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் சொத்துக்களில் உள்ளடங்குகின்றன.

இதனைவிட, முன்னாள் அமைச்சர்களான  சமல் ராஜபக்ஷவின்  திஸ்ஸ மஹராம - மாகம பகுதி வீடு,  ரோஹித்த அபேகுணவர்தனவின்  பேருவளை - பயாகல வீடு,  ரமேஷ் பத்திரணவின் காலி - கித்தும்பிட்டிய வீடு,  அலி சப்றி,  பந்துல குணவர்தனவின் வீடுகளும் சேதமாக்கப்பட்ட பட்டியலில் உள்ளடங்குகின்றன.

இதற்கு மேலதிகமாக  அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின்  கம்பஹா - உடுகம்பொல வீடு, அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வீடு,  அமைச்சர் காஞ்சன  விஜேசேகரவின் மாத்தறை வீடு ஆகியனவும் தீ  வைக்கப்பட்ட வீடுகளில் உள்ளடங்குகின்றன. அத்துடன்,  முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்லவின்  கண்டி - பிரிம் ரோஸ் பூங்கா வீடு,  காமினி லொக்குகேயின்  பிலியந்தல - ஹோகந்தர வீடு,  விமலின், பிலியந்தலை - ஹோகந்தர வீடு,  பசில் ராஜபக்ஷவினுடையது என கூறப்படும் மள்வானை வீடு,  பவித்ரா வன்னி ஆரச்சியின்  பெல்மதுளை - ரில்ஹேன வீடு,  செஹான் சேமசிங்கவின் அனுராதபுரம் வீடு ஆகியனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் விதுர விக்ரமநாயக்க,  நாலக கொட ஹேவா,  ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பிரமிதி பண்டார தென்னகோனின் தம்புள்ளை - யாபாகம வீடு,  அருந்திக பெர்ணான்டோவின் வீடு  ஆகியனவும் வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளடங்குகின்றன.

இதனைவிட  முன்னாள் அமைச்சர்களான எஸ். எம். சந்ரசேனவின்  அனுராதபுரம் கரந்தன்குளம் வீடு,  சன்ன ஜயசுமனவின் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அருகே உள்ள அலுவலகத்துடன் கூடிய வீடு,  மொஹான் பி.டி. சில்வாவின் காலி வீடு,  கனக ஹேரத்தின் கேகாலை வீடு,  முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின்  வீடு ஆகியனவும்  சேதப்படுத்தப்பட்ட வீடுகளில் அடங்கும்.

இதனைவிட  முன்னாள் அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷவின்  செவனகல - கிரி இப்பன்வல வீடு,  சனத் நிஷாந்தவின்  சிலாபம் வீடு,  சாந்த பண்டாரவின் அலவ்வ பகுதி வீடு,  குணபால ரத்னசேகரவின் வீடு,  சிறிபால கம்பலத், ரி.பி. ஹேரத்தின் வீடுகள்,  நிமல் லான்சாவின் நீர்கொழும்பு வீடு,  மஹிந்தானந்த அலுத்கமகேவின் நாவலபிட்டிய வீடும் மன்றமும், விஜேபால ஹெட்டி ஆராச்சியின் வீடு ஆகியனவும் தாக்குதலுக்கு உள்ளான  முன்னாள் அமைச்சர்களின்  வீடுகள் பட்டியலில்  அடங்கும்.

இதனைவிட  கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் வீடும்  சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான  மிலான் ஜயதிலக,  கோகிலா குணவர்தன,  உத்திக பிரேமரத்ன,  அலி சப்றி ரஹீம்,  சம்பத் அத்துகோரல,  சஹன் பிரதீப்,  அகில எல்லாவல,  டப்ளியூ. டி. வீரசிங்க, சமன் பிரிய ஹேரத்,  அனுப பெஸ்குவல்,  ரஜித்த விக்ரமசிங்க,  ஜகத் குமார, திஸ்ஸ குட்டி ஆரச்சி,  சந்திம வீரக்கொடி,  நிப்புன ரணவக்க,  உபுல் மஹேந்ர ராஜபக்ஷ,  சஞ்ஜீவ எதிரிமான்ன , சுமித் உடுகும்புர ஆகியோரின் வீடுகளும்  சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் பலரின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இதனைவிட, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்  குருணாகல் இல்லமும் , மெதமுலனையில் உள்ள ராஜபக்ஷக்களின் பரம்பரை வீடும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மெதமுலனையில் அமைக்கப்பட்ட (பொது மக்கள் நிதியில் அமைக்கப்ப்ட்டதாக சர்ச்சைக்குரிய)   டி.ஏ. ராஜபக்ஷ சமாதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  அத்துடன்  யோஷித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட  சிங்கராஜ எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டலும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க பல்  உள்ளூராட்சி மன்ற   தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகலும் வன்முறைகளால் சேதமடைந்துள்ளன. குறிப்பாக   காலி , மதுவ பிரதேச சபை தலைவர் வன்முறைகளில் கொல்லப்பட்ட நிலையில், அவரது வீடும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் தம்புள்ளை நகர சபை தலைவர்  ஜாலிய ஓபாத, காலி நகர சபையின்  பிரியந்த சஹ பந்து,  குருணாகல் மேயர், மொரட்டுவை மேயர்  சமன் லால் பெர்ணான்டோ  ஆகியோரின் வீடுகள் அலுவலகங்கள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளன.

அத்துடன் போப்பே - போத்தல பிரதேச சபையின்  தலைவர் கருணாசேன பொன்னப்பெரும,  கரந்தெனிய பிரதேச சபையின்  காமினி அமரசிங்க,  அம்பலாந்தோட்டை நகர சபையின் தலைவர்  அருண பிரதீப்,  ஹபராதுவ பிரதேச சபையின்  உப தலைவர்  பந்துபால  அபேகோன்,  கண்டி நகர சபை உறுப்பினர்  சங்கீத் சில்வா,  அனுராதபுரம் நகராதிபதி  எச்.பி. சேமதாச,  வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்தின்  அலுவலக வீடு,  அனுராதபுர சகர சபை உறுப்பினர்  குமுதினி குணசேகரவின் அனுராதபுரம் பழைய பஸ் நிலையத்தை அண்டிய வீடு உள்ளிட்டவையும் வன்முறையாளர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலவற்றுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளன.

இதனைவிட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான ஜோதிடராக பலராலும் அறியப்படும், அனுராதபுரம் ஞானாவதி எனப்படும் ஞானா அக்காவின் வீடு, அவருக்கு சொந்தமான ஹோட்டலும் வன்முறையாளர்களால் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில்  மே 9 ஆம் திகதியும் அதன் பின்னரும் பரவிய வன்முறைகளால் சேதப்படுத்தப்பட்ட  மற்றும் தீ வைக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 140 இற்கும் அதிகம் என பொலிஸ் தகவல்கல் கூறுகின்றன.  எனினும் அவ்வெண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என அந்த தகவல்கள் தெரிவித்தன.

 

அத்துடன் இக்காலப்பகுதியில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களுங்களின் மொத்த எண்னிக்கை  130 இற்கும் அதிகமாகும். அதில் 40 பஸ் வண்டிகளும் உள்ளடங்குகின்றன. 
 

 

https://www.virakesari.lk/article/127505

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின்  5 வீடுகள், 4 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 19 சொத்துக்கள் இதன்போது சேதமாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  தகவல்கள் வெளிப்படுத்தின.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ விடுதலை

முழுச்  சேதங்களையும்.... வலு ஆறுதலாக இருந்து, வரிக்கு வரி ரசித்து வாசிக்க வேண்டும். ❤️
அதிகமாக சவுண்டு கொடுத்த, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தான், நல்லாக வாங்கி கட்டியுள்ளார். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வன்முறைகளால் வீடுகளை இழந்து, தற்போது இருப்பிடம் இல்லாமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு தலவத்துகொடையில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் தற்காலிகமாக வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அவ்வதிகார சபையின் அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச பயங்கரவாதத்தால் வீடுகளை இழந்த தமிழ் மக்களை முள்வேலியில் அடைத்தீர்கள், இவர்களுக்கோ தொடர்மாடி வீடுகள். இருந்தாலும் அவர்கள் அதில் நிறைவு பெறப்போவதில்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.